Jump to content

முல்லைத்தீவில்(2009) கடற்கரும்புலித் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

செய்தி வெளியான திகதி: February 14, 2009

முல்லைத்தீவை சுற்றி வியூகம் அமைத்துள்ள படைத்தரப்பு கடலிலும் சுண்டிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவு வரையிலும் 25 மேற்பட்ட கடற்படை கப்பல்களையும், படகுகளையும் நிறுத்தியுள்ளது. இந்த படகு தொகுதியில் விரைவு டோராப்படகுகள், ஆழ்கடல் சுற்றுக்காவல் கப்பல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு படகு சதளம் (SPECIAL BOAT SQARDRON), துரித செயல் சதளம்(RAPID ACTION SQUARDON) ஆகியவையும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் டி கே பி திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் கடற்படை வரலாற்றில் இது மிகப்பெரும் சுற்றிவழைப்பாகும் எனவும் இதற்கு வடபிராந்திய மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படை வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.எனினும் கடற்படையினாரின் இந்த வியூகத்தின் மீது கடற்புலிகள் திங்கட்கிழமை (8.2.2009) மேற்கொண்ட தாக்குதலில் ஒரு டோரா படகு மூழ்கடிக்கப்பட்டதுடன், அதில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 நிமிடம் தொடக்கம் 6:00 மணி வரை சிறிலங்கா கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், கடற்படையினரின் சுப்பர் டோரா கடற்கரும்புலிகளின் தாக்குதலில் முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த 15 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரின் மற்றொரு சுப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இம்மோதலில் கடற்புலிகள் நால்வரும் கடற்கரும்புலிகள் இருவரும் வீரச்சாவடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் நான்கு தாக்குதல் படகுகளை தாம் எதிர்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து நடைபெற்ற மோதல்களில் தமது விரைவு தாக்குதல் படகு ஒன்று கடுமையாக சேதமடைந்ததாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் வெடிமருந்து நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் படகு டோரா படகிற்கு அருகில் வெடித்ததை படைத்தரப்பு ஒத்துக்கொண்டுள்ளது.

கிட்டிப்பு:-

http://tamilthesiyam.blogspot.com/2009/02/blog-post_9224.html

http://tamilthesiyam.blogspot.com/2009/02/15.html

---------------------------------------------------------------------------------------

 

வீரச்சாவடைந்த போராளிகளுக்கு எமது வீரவணக்கங்கள்...

  • நன்னிச் சோழன் changed the title to முல்லைத்தீவில்(2009) கடற்கரும்புலித் தாக்குதல்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.