Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2021 at 01:44, Justin said:

பொப்கோர்ன் எல்லாம் சாப்பிடுவதில்லை. கான்சர் வராது, ஆனால் நீரிழிவு எல்லா கோர்னிலும் வரும்!

என்னவோ சீமான் எதிர்ப்பாளர்களின் பொப் கார்னை வாயில்  போட கல்லு கடிபட்டது போல் இப்பவும் கூசுதாமே சீமானின் முன்றாவது கட்சி விடயம் .

  • Replies 78
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 22:14, கிருபன் said:

பிந்தியதற்கு மன்னியுங்கள் ரஞ்சித். இலகுவான கேள்விகள் என்பதால் மின்னம்பலத்தில் தேடிப் பார்த்தேன். பதில்கள் கிடைக்கவில்லை.☹️ சொந்தமாக எழுத மூளையைக் கசக்கவேண்டி வந்திட்டுது. யாழில் இப்பவெல்லாம் மூளையைக் கசக்கி எழுதும் நிலை இல்லைத்தானே!😉

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டபோது அனைத்துக்கட்சிகளும் குரல்கொடுத்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறு கட்சிகள் எல்லாவற்றினதும் ஆதரவைத் தக்கவைத்திருக்கவேண்டும். தமிழக அரசியலில் ஒரு கட்சிக்கு, உதாரணமாக நாம் தமிழர் கட்சிக்கு, சார்பானவர்கள் ஈழத்தமிழர் என்ற தோற்றப்பாட்டை தமிழக மக்களின் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இது பிற கட்சிகளில் உள்ள ஈழ உணர்வாளர்களை அந்நியப்படுத்தும். எந்த வகையிலும் ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற தமிழக கட்சிகளின் ஆதரவோடு இந்திய அரசுக்கோ, சர்வதேச நாடுகளுக்கோ அழுத்தம் கொடுக்கவும், லொபியிங் செய்யவும் உதவாது.

முகநூலில் கட்சிச் சண்டைகளில் ஈடுபடுவர்களை வைத்துக்கொண்டு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என முடிவுசெய்வது அபத்தம். ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள், புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துடனும், குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுடனும் நல்லுறவைப் பேணவேண்டும். தமிழக கட்சி அரசியலில் ஒரு சார்பு நிலை எடுக்கக்கூடாது. 

புலிகள் விடுதலை அமைப்பாகவே இயங்கினார்கள். அரசியல் கட்சி அமைப்பாக இயங்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார்கள். புலிகள் இல்லாத 2009க்குப் பின்னர், சீமான் தனது சொந்த கட்சி அரசியலுக்கே புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பயன்படுத்துகின்றார். இப்படியான அரசியல் செய்வதற்கு புலிகள் ஒருபோதும் அனுமதி அளித்திருக்கமாட்டார்கள். 

சீமானை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழரின் வாதம் புலிகளையும், பிரபாகரனையும் பட்டி தொட்டி எங்கும் சீமான் பரப்பினார் என்பது. 2009 க்கு முன்னர் புலிகள் என்றால் யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் இருந்தார்கள் என்று சொல்வதும் நகைப்புக்கிடமானது. போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் புலிகள் என்றே 1983 இலிருந்து தமிழக மக்கள் அறிந்திருந்தார்கள். 1991 ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர், மக்கள் ஆதரவு குறைந்தது. புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகளின் இலச்சினையோ, தலைவரின் படமோ அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றை சீமானின் நாம் தமிழர் கட்சி தத்தெடுத்து (கட்சியை தத்தெடுத்தது போன்று) தமது கட்சியை வளர்க்கவே பாவிக்கின்றார்கள். எனினும் அண்மைய தேர்தலில் தலைவரின் படத்தை நடுவில் வைத்தால் தொலைக்காட்சிகள் செய்திகளில் நாம் தமிழர் கட்சிக்கு நேரம் ஒதுக்காது என்பதை தெளிவாகப் புரிந்து வைக்காமலே விட்டார்கள். இது நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர சகல வழிகளையும் பயன்படுத்தும் என்பதைத்தான் காட்டுகின்றது.

மேலும், சீமான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர். இக்காரணங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் கருணாநிதி சொல்லித்தான் இந்தியா புலிகளை அழிக்க உதவியது என்பது உண்மையில்லை. புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுக்காமல் நடந்ததும், டோக்கியோ மாநாட்டை புறக்கணித்ததும், இணைத்தலைமை நாடுகள் புலிகளின் தலைமையை அழிக்க ஒப்புதல் கொடுக்க வைத்தன. இதன் மூலம் இலங்கையில் சமாதானம் ஏற்பட ஒரு பகுதி தமிழ் மக்களை ராஜபக்‌ஷ அரசு இனவழிப்பு செய்ய வழிவிட்டன. அதற்கு ஏதுவாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட, ஐ.நா. அமைப்புக்களை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து விலக்கிக்கொண்டன.  இவையெல்லாம் தெரிந்தும்,  இந்த முடிவுகளில் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாத தமிழக அரசை மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லமுடியுமா? 

சீமான் பொட்டம்மானை ஏக தொனியில் பேசியிருக்கமாட்டார் என்று சீமானை நம்புவர்கள் நம்புவார்கள். ஆனால் தலைவருடன் கூடவே இறுதிவரை போராடிய, தலைவரைப் போலவே தனது குடும்பத்தையே பலிகொடுத்த பொட்டம்மானை அவமரியாதை செய்பவர் எவரும் வெறும் மயிர்தான்..

நான் வலதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பதில்லை. சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடும் இடதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையே ஆதரிப்பேன். ஆனால் எந்தக் கட்சியினதும் தொண்டனாகவும் இருப்பதில்லை. ஏனெனில் கட்சிகளின் கொள்கைகள் சில ஒவ்வாமலும் இருக்கும்.

நீங்கள் திராவிட சித்தாந்தத்தையும் திமுக கட்சியையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கின்றீர்கள். திராவிட சித்தாந்தம் பார்ப்பனியத்திற்கு எதிராக் வந்தது. பார்ப்பனர்கள் அல்லாதோர் அரச வேலைகளில் சேரமுடியாத நிலை முன்னர் இருந்தது. இந்தி திணிப்பின் மூலம், ஆரிய இந்துத்துவத்தை பரப்பும் நோக்கம் கொண்ட வட இந்தியர்களுக்கு எதிராக திராவிட சித்தாந்தம் வந்தது. சீர்திருத்தக்கொள்கைகள், மதச்சார்பினமை போன்றவற்றை முன்னெடுத்தது. இக்கொள்கைகள் அடிமட்ட மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் எவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

ஆனால் கட்சி அரசியலுக்காக கொள்கை பிறழ்பவர்களையும், ஊழல்மூலம் சொத்து சேர்ப்பவர்களையும், குடும்ப அரசியல் செய்பவர்களயும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஸ்டாலின் போன்றவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நிலைக்கவும், தமது சொத்துக்களைப் பெருக்கவும் முனைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அதே நேரத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத அரசுகளை மக்கள் தமது வாக்குரிமை மூலம் தூக்கியெறிவார்கள் என்பதையும், மக்கள் புத்திசாலிகள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இப்படி கசக்கி பிழியக்கூடிய மூளையை வைத்துக்கொண்டு, இரவல் மூளைக்கு, மின்னம்பலம் பக்கம் போகாதீங்கோ எண்டு சொன்னது நல்லதா போட்டுதோ, இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் பெருமாள் 2009 இல் சவுக்கு  சங்கர் எழுதியதை கருணாநிதியை திட்டவும், மொட்டைவசைகளை எழுதவும் தூசு தட்டிக் கொண்டுவந்து ஒட்டினார்.

ஆனால் 2021 இல் அதே சவுக்கு சங்கர் கீழேயுள்ள கட்டுரையை எழுதியிருக்கின்றார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் முயற்சி செய்தால் முதிர்ச்சி வரும்😃

 

ஜனநாயகத்தை கொண்டாடுவோம்

Periyar.png?resize=1200%2C675&quality=85

தமிழகத்தை மதவாதம் என்கிற பெரும் ஆபத்து சூழ்கிறது என்பதை கடந்த இரண்டாண்டுகளாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.   இது எனது தூக்கத்தை கெடுத்தது.  எனது மண், மதவாத கைக்குள் போவதை என்னால் சகிக்க இயலவில்லை என்பது மட்டுமல்ல.  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அதை ஒற்றை ஆளாய்எப்படி தடுப்பது என்ற மலைப்பு இருந்தது..

ஆனால் வாளாவிருப்பது ஒரு Option இல்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்.

கடந்த நான்கு மாதங்களாக, வெறும் 4 மணி நேரம் மட்டுமே உறங்கினேன். எனது உறக்கம், ஆட்டோவிலோ, காரிலோ பயணிக்கையில் மட்டுமே.

என்னைப் போலவே கவலை கொண்ட பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் உறங்கவில்லை.   இந்த நான்கு மாதங்களும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளோடு மட்டுமல்லாமல் காவலர் முதல் டிஜிபி வரை உள்ள பல்வேறு அதிகாரிகளோடு பேசினேன்.   பலரை நேரில் சென்று சந்தித்தேன்.  பல்வேறு ஊர்களுக்கு பயணித்தேன்.

இவை அனைத்தும் நான் பிறந்த மண், பாசிச சக்திகளின் பிடிக்குள் சிக்கி விடக் கூடாது என்பதற்காக மட்டுமே.  நான் ஒரு தனி நபராக, இதை செய்து விட முடியுமா என்று யோசித்தபோது, முயற்சி எடுக்கலாமே…

ஏன் முயற்சி எடுக்கக் கூடாது என்றே தோன்றியது.  களத்தில் இறங்கினேன்.  யு ட்யூப் சேனல்களில் என் மனதில் பட்டதை பேசினேன்.   சமூக வலைத்தளங்களை முழுமையாக பயன்படுத்தினேன்.  பேசினேன்.  எழுதினேன்.

இனி நான் செய்வதற்கு எதுவுமில்லை.  இதில் எனக்கு புதிதாக பல நண்பர்கள் கிடைத்தார்கள்.  பல புதிய நபர்களை சந்தித்தேன்.

இரு வாரங்களுக்கு முன்னால் ஒரு தேர்தல் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் ஒரு வேட்பாளர் என் அருகே அமர்ந்திருந்தார்.    வலதுசாரிகளை நான் எப்படி விமர்சிக்கிறேன் என்பது ஊருக்கே தெரியும்.   அதுவும் குறிப்பாக அர்ஜுன் சம்பத்தையெல்லாம் தாறுமாறாக விமர்சித்திருக்கிறேன்.

ஆனால் அந்த இந்து மக்கள் கட்சி வேட்பாளர், “சார் நீங்க சவுக்கு சங்கர்தானே.  உங்க பேட்டியை எல்லாம் பாக்குறேன்.  கரெக்டா பேசறீங்க சார்” என்று சொன்னபோது எனக்கு ஒரு உண்மை புரிந்தது.

மக்கள் மக்களே.  அதுவும் தமிழ் மக்கள் மாக்கள் அல்ல

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் என் மீது கோபம் கொள்ளாமல் வாஞ்சையோடு பேசுகிறார் என்றால், எனக்கு வேறு என்ன வேண்டும் ?

என்னால் முடிந்ததை செய்து விட்டேன்.

நான் காலையில் வாக்களிக்க சென்றபோது, மக்கள் மகிழ்ச்சியோடு வாக்களித்ததை பார்க்கையில் பார்க்க எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

மீண்டும் சொல்கிறேன்.

தமிழினம் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தறிவு பெற்ற ஒரு இனம்.

அது தன்னை தகவமைத்துக் கொள்ளும்.  இப்பேராசை பிடித்த அரசியல்வாதிகளுக்கு அது தகுந்த பாடத்தை புகட்டி, தன்னை தற்காத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

என் கடமை முடிந்ததாக உணர்கிறேன்.

எனக்கு ஒத்துழைப்பு அளித்து என்னோடு உழைத்த அத்துனை அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும் தமிழினம் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

குறள் 632:

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

இப்படி ஒரு அரசு அமையும் என நம்புகிறேன்.

அன்புடன்

சவுக்கு சங்கர்.

மீண்டும் சந்திப்போம்.

அதுவரை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த கட்டுரையில் சவுக்கு எழுதியதில் ஏதாவது  பிழை உள்ளதா ?

இல்லாத பொல்லாததை  எழுதினாரா ?

நடந்த துரோகத்தனம்களைத்தானே பட்டியல் இட்டார் .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.