Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் – ஒரு தாயின் காத்திருப்பு – பாலநாதன் சதீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் – ஒரு தாயின் காத்திருப்பு – பாலநாதன் சதீஸ்

June 4, 2021
 

 

IMG_20210527_100830-696x472.jpg

தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காணாமல் போன தன் இரு பிள்ளைகளுக்கான நீதிக்காக போராடும் தாய், காணாமல் போன தன் தந்தையை தேடும் பிஞ்சு மகனின் ஏக்கங்களுக்கு  நீதி  கிடைக்குமா? அவர்களின்  எதிர்பார்ப்பு தீருமா?

IMG_20210527_100725-1024x768.jpg

வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்ட களத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வசிப்பவர்தான் அரியரத்தினம் அன்னலட்சுமி.

இவர் போராட்டக் களத்தில்  காணாமல் போன மகன்களின் புகைப்படத்தை  தன் கையில் வைத்திருந்தவாறு ஏக்கத்துடன் எப்போதும் அமர்ந்திருப்பார். சுருங்கிய நெற்றி அதில் ஒரு திருநீற்று பூச்சும் இருக்கும். முதுமையில் உடல் பலமிழந்தாலும், காணாமல்போன   தன் மகன்களை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடனும். யாரிடமாவது முறையிட்டால் தன் மகன்கள் வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இரவு பகலாக  மன வைராக்கியத்தோடு  அந்த போராட்ட  களத்தில் காத்திருக்கின்றார்.

இந்த தாய் தன்  பிள்ளைக்காகவும், காணாமல் போன மகனின் பிள்ளையின் எதிர்கால வாழ்வுக்காகவும் நேரகாலம் பார்க்காமல் தன் பேரபிள்ளையினை தனியாக வீட்டில் விட்டு, காணாமல் போன மகன்களை  எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நடாத்தப்படும் எல்லா  போராட்டங்களுக்கும்  இன்று வரை சென்று கொண்டு இருக்கிறார்.

IMG_20210527_100803-1024x768.jpg

போராட்டக் களங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க வரும் அதிகாரம் மிக்கவர்களிடமும், இவர்களை வைத்து அரசியல்  ஆதாயம் தேட வருபர்களிடமும்  தன் பிள்ளையை மீட்டு தரச்சொல்லி கெஞ்சுவார். அன்றில் இருந்து இன்றுவரை தன் தூக்கத்தை தொலைத்து தன் மகன்களுக்காக கலங்கிய விழிகளுடன் காத்திருக்கின்றார்.  இந்த தாயின் நிலையை யாருமே புரிந்து கொள்ளப்போவதில்லை.

“என்ர இரு பிள்ளைகளில் ஒருவர்  மூத்த மகன் ஜீவரட்ணம் 1990.09.02 ஆம் திகதி காட்டிற்கு தடிவெட்ட போன நிலையில் ஓமந்தையில் காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அந்த கவலை ஆற முன்பே என்ர இளைய மகன் கோபிநாத்  வேலைக்காக வெளியில்  போனவன் இரவு வேளை வீரபுரத்திலுள்ள அவனது வீட்டுக்கு சாப்பிட திரும்பிய வேளை 2008.06.25 அன்று  வெள்ளை வானில்  வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி வலுக் கட்டாயமாக தூக்கி சென்றுள்ளார்கள்.  இதனை அறிந்த நான் என் மகன் கடத்தி செல்லப்பட்ட அடுத்த நாள்  காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு (2008.06.26) UNHER ICRC CARE  நிறுவனம், ஈ.பி.டி.பி அலுவலகத்திடம் முறைப்பாடு செய்து விட்டு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அலுவலகத்தில் போய் மகனைக் காணவில்லை என்றும் கூறினேன்.

IMG_20210527_100841-1024x667.jpg

என் மகனை தேடி ஓவ்வொரு வருடமும்,  ஒவ்வொரு மாதமும் புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறையிடம் போய்க் கேட்பேன். என் மகனை விடச் சொல்லி. அவர்கள் வீட்டுக்கும் வருவார்கள் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் என் மகன்களை  கண்டுபிடித்து தருவதாக கூறி விளக்கமெடுக்க வருவார்கள். ஆனாலும் இதுவரை எனக்கான நீதி கிடைக்கவே இல்லை.

என் மகன் இல்லாமல்  என்னாலும் என் பேரப்பிள்ளையாலும் தனித்திருக்க முடியாது. எமக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்ர மகனின் பிள்ளைக்கு தற்போது தாயும் இல்லை. வசதிகள் இல்லாமல் என்ர பேரபிள்ளையால் பாடசாலை கல்வியை  கூட தொடரமுடியவில்லை. என் பேரபிள்ளையை படிக்க வைக்கும் அளவிற்கு பொருளாதாரம்  என்னிடம் இல்லை. ஏனெனில் என் கணவரும் தற்போது உயிருடன் இல்லை. 2017.06.26ஆம் திகதி காணாமல் போன பிள்ளைகளை தேடியதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு உடல் பலவீனமடைந்து  இறந்துவிட்டார்.

என் இரண்டு மகன்களையும் இந்த அரசு கடத்தி விட்டது. இரண்டு பிள்ளைகளில்  ஒருவரையாவது விடச்சொல்லி இந்த அரசிடம் கேட்டிருக்கின்றேன். ஒரு முறையாவது என் பிள்ளைகளை காண்பிக்குமாறும் கேட்டிருக்கின்றேன். என் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இனியாவது சிறையில் இருக்கும் என் பிள்ளைகளையும், ஏனையவர்களின் பிள்ளைகளையும்  நான் இறந்து போவதற்குள் விடுவிக்கவேண்டும்.

IMG_20210527_101249-1024x683.jpg

எம் காணாமல் போன உறவுகளை மீட்பதற்கு கடவுளுடனும், இந்த அரசுடனும் நாம் போராடி கொண்டிருக்கின்றோம். எம் நிலையறிந்து வெளிநாட்டு அரசுகளே எமக்கு நீதியினை பெற்று தரவேண்டும். அவர்கள் எம் பிள்ளைகளை மீட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையிலையே இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.”

என தன்  இரு மகன்களை தொலைத்த அந்த தாயிடம் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும்  வலி நிறைந்ததாகவும்,   ஏக்கத்துடன் கலந்த ஒரு எதிர்பார்ப்பும் நிரம்பியிருந்தது.

இன்றைய ஆட்சியாளர்களே உங்கள் வீட்டில் இப்படி ஒரு இழப்பு வரும் வரை இதன் வலி உங்களுக்கு புரியப்போவதில்லை. நீங்கள் இனவாதம் பேசுவதற்கும், பணத்தாசை பிடித்து அலையவும்  எம் உறவுகளின் உணர்வுகளை  இரையாக்காதீர்கள்.  காணாமல் போன எம் உறவுகளுக்கு நீதியை பெற்று கொடுங்கள். இன்று தம் பிள்ளைகளை தொலைத்துவிட்டு துடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் கண்ணீரும்,    ஒருநாள் உங்களுக்கு கூரிய ஆயுதமாய் மாறும்.

தந்தை மரணம் : கந்தையா   அரியரத்தினம்

மரணம் : 2017.06.26

மூத்தமகன் : அரியரத்தினம்     ஜீவரத்தினம்

காணாமல் போன திகதி :   1990.09.02

இளையமகன் : அரியரத்தினம்   கோபிநாத்

காணாமல் போன திகதி :   2008.06.25
 

 

https://www.ilakku.org/?p=51431

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

90 களின் ஆரம்பத்தில் எங்கு பார்த்தாலும் விமான குண்டுவீச்சு, ஷெல் அடி, நேவி அடி ஹெலி அடி என்று போர் நெருக்கடி நிகழ்ந்த அந்த நாட்களில் இரவில் பள்ளி நண்பர்களுடன் ஒரு மூண்டு மணிநேரம் செலவிட்டுவிட்டு தாமதமாய் வீட்டுக்கு வந்தால் ரோட்டுக்கும் லைற் இருக்காது, வீட்டுக்கும் ஒரேயொரு  மண்ணெணெய் விளக்கைதவிர வேறு இருக்காது, வீட்டில் எல்லோரும் படுத்திருப்பினம் கேற்றை மெதுவாய் திறந்து சைக்கிளை உருட்டிகொண்டு போனால் இருட்டுக்க இருந்து திடீர் எண்டு  விம்மி அழும் சத்தம் கேட்கும் ..அம்மா.

மூண்டு மணிநேரம் காணவில்லையென்றாலே பதை பதைக்கும் தாய் மனசின் வலி அப்படியென்றால்,

30 வருஷத்திற்கு மேலாக பிள்ளைகளை எண்ணி வெறும் நடைபிணமாக வாழும் பெற்றோர்களின் வலி எவ்வளவு கொடியது, போர் முடிந்து புலத்திலும் தாய் நிலத்திலும்  அவரவர் படிப்படியாக அனைத்தையும் மறந்து தமது வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார்கள்  தமது பிள்ளைகளை இழந்து சாகும்வரை முடியாத போர் ஒன்றில் தினமும் சிக்கி தவித்து அவர்கள் ஒருநாள் வருவார்கள் வருவார்கள் என்று நினைச்சு அணுவணுவாய் சாகும் இவர்களின் வலிக்கும் கண்ணீருக்கும் விடைதான் என்ன?

இந்த கொடுமையில் சிக்கி கொள்ளாத அனைவருக்கும் அதற்கான விடை தெளிவாக தெரிந்திருக்கும் ஆனால் வெளியில் சொன்னால் பாதி உயிரில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஆத்மாக்கள் மீதி உயிரை அடுத்த கணமே விட்டுவிடும்.

ஒரு கொடிய பெரும்பான்மை இனத்தை கொண்ட ஒரு நாட்டில் பிறந்த நாங்கள்,மூன்று தசாப்தத்திற்கும்மேலாக காணாமல் போன தமிழர்களை பாதுகாத்து தன்னுடன் வைத்திருப்பான் என்பதை அறவே மறந்துவிடவேண்டும் என்பதே யதார்த்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஒரு கொடிய பெரும்பான்மை இனத்தை கொண்ட ஒரு நாட்டில் பிறந்த நாங்கள்,மூன்று தசாப்தத்திற்கும்மேலாக காணாமல் போன தமிழர்களை பாதுகாத்து தன்னுடன் வைத்திருப்பான் என்பதை அறவே மறந்துவிடவேண்டும் என்பதே யதார்த்தம்.

தாய்மார் ஒரு நூலிழை நம்பிக்கையுடன் தம் பிள்ளைகளை தேடிக்கொண்டே இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.