Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் தேவை

Featured Replies

"மாற்றம் தேவை"

--------------------------

இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை.

கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழகம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும்.

வாலறிவன் யார்? அவன் நற்றாள் தொழும் நெறி யாது? இவற்றைத் தெற்றென அறிந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நாட்டம் நம்பாலில்லை. ஆனால், கடவுள் பக்தியிலிருந்து நமது உளத்தை விலக்கி, இலெளகீக விஷயங்களில் அதனை அழுத்திக் கல்வியின் பயனை இழக்கச் செய்துவிட்டது இன்றைய நிலை. மொழிப் பாடங்களில் அளவுக்கு மீறிய காதற்பாக்கள், போர்க்களப்பாக்கள், அவற்றில் வரும் அணிகள் ஆகியவற்றுக்கே கல்விச்சாலைகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இறைவன்பால் அன்பு பெருக்கும் பாடல்கள் பாடத்திட்டத்தில் மிகக் குறைந்த இடமே பெற்றுள்ளன என்பதில் நமது சிந்தனையைச் செலுத்துதல் நமது கடனாம்.

விஞ்ஞான விஷயங்கள் அதிகம் கற்கக் கற்க இயற்கையின் ஒருமைப்பாடு உணர்ந்து பரம்பொருளிடம் பக்தி கொள்ள வேண்டிய நிலைக்கு மாறாக. நாஸ்திக மனப்பான்மை கொள்வோரின் எண்ணிக்கை அச்சந் தருவதாகப் பெருகியுள்ளது. வான வெளியில் கடவுளைக் காணவில்லையே என்று ஒருவான வெளி வீரர் கூறினாராம். அதனைக் கண்டித்த ஒரு மேதை. "God is not away in an orbit 300 miles above us. He is within us and within every particle in the space occupied by the stars and beyond" என்று நயம்படக் கூறினார். இலெளகீக விஷயங்களை வலியுறுத்தும் பொருளாதாரம், அரசியல், வரலாறு போன்ற பாடங்கள் அதிக முக்கியத்துவம் அடைந்து வருவதை இன்று காண்கிறோம். இங்ஙனம் சமய அறிவே ஏற்படாத வழியில் இப்போது கல்விக் கழகங்கள் செயல்படுகின்றன.

இனி, "ஒழுக்கம், அன்பு, கற்பு, பொறுமை இவை போன்ற அறங்கள் இருந்தாலே போதும். கடவுள் பக்தி என்ற ஒன்றிற்கு பள்ளிச்சாலையில் அவசியமே இல்லை" என்று கூறுவாருமுளர். "அவ்வொழுக்க முதலிய நன்மைகளையுடையனாய், அவற்றை மறுதலைத்த தீமைகளை நீக்கிய்யொழுகுவானொருவனுக்க

  • 5 months later...

எதை படிப்பது, பின்பற்றுவது என்பது அவரவர் சுதந்திரம். நீங்கள் விரும்பும் மேற்கண்ட மாற்றங்களை இல்லாதொழிக்க பலர் போராட்டங்கள் செய்கின்றனர். அதாவது மதங்களினால் கட்டுண்டுகிடப்பதில இருந்து சுதந்திரம் பெறுதல்...

கடவுள் எனும் சொல்லை விட.. மதம் எனும் சொல்லிலேயே உங்களிற்கு அதிக நாட்டம் இருப்பதுபோல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:

மதம் பிடிச்சா இப்பிடித்தான்.............. மதம் ஒழியட்டும்........ மனித மனங்களில் மனிதம் சிறக்கட்டும்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.