Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில், மங்கள கூறிய ஆட்சிக்கவிழ்ப்பு எப்போது?

Featured Replies

ரணில், மங்கள கூறிய ஆட்சிக்கவிழ்ப்பு எப்போது?

சிறிலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசை கவிழ்தது விட்டு புதிய ஆட்சியை அமைப்போம் என ரணிலும் மங்களவும் தெரிவித்துள்ளனர். இது நடக்கக்கூடியதா?

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பிற்குப்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டபோது ஆட்சிக்கவிழ்ப்பின் நியாயத்தன்மையை குறிப்பிட்டனர். இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுத்துவது. நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்திசெய்வது. அதற்கான வழிமுறைகளைக்காண்பது தமது புதிய அணியின் குறிக்கோள் என மங்கள தெரிவித்தார். இவர்களது நோக்கம் ஆட்சியைக்கவிழ்ப்பது ஒன்றேதான்.இந்த நாட்டைக்கட்டியெழுப்ப அவர்களிடம் எந்தத்திட்மும் இல்லை.நீண்டகாலமாக நிலவி வரும் இன முறண்பாட்டிற்கு தீர்வுகாணக்கூடிய திட்டமோ இவர்களிடம் இல்லை.ஆனால் அவர்களுடைய திட்டம் ஆட்சியைக்கவிழ்ப்பதும் ஆட்சியில் அமருவதும்தான். சரி மகிந்தவின்; மிலேச்சத்தனமான ஆட்சியை அகற்ற முன்வருகிறார்கள் அது வரவேற்கக் கூடியது தானே எனவே ரணில்-மங்கள கூட்டை ஆதரிக்க வேண்டும் எனக் கூக்குறல் இடுவோரும் உண்டு. இவர்களிடம் அதற்கான பலமுள்ளதா?

இலங்கையில் ஏற்பட்டுவரும் பல்வேறுதரப்பட்ட பிரச்சனைகளினால் அப்பாவிப் பொதுமக்கள் சொல்லனாத் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு ஒரேவழி ஆட்சிமாற்றம்தான். இல்லாவிடில் நாடுதாங்காது என வாதிடும் சிங்களமக்களும் பலருண்டு.

சரி எப்படி ஆட்சிமாறும் ரணில் வசமுள்ள 44உறுப்பினரும் மங்களவிடமுள்ள மூன்று உறுப்பினரும் ஆட்சிமாற்றம் கொண்டுவர முடியாது?

மகிந்த அணியில் இருந்து ஒரு 20, 30 பேரையாவது மங்களவின் அணிக்குக் கொண்டுவந்தால் தான் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழும். அது சாத்தியமா? மகிந்தவின் கை சும்மா இருக்குமா?

மங்களவின் கூற்றை ஏற்று ஜே.வி.பி யினர் அவருடன் இணையத்தயாரில்லை.இதனால் மங்களவிற்கு புதிய தலையிடி ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பியை நம்பிய மங்களவின் பரிதாபம் அடுத்த நகர்வை செய்யமுயாது திணறுகிறார்.

சந்திரிகவை மிரட்டி ஜே.வி.பிக்கு ஆதரவாகச்செயல்பட்டு தேர்தலில் கூட்டுச்சேர வைத்த பெருமை மங்களவையே சாரும் . அதன் மூலம் 40 பாராளுமன்ற உறுப்பினர் வரை ஜே.வி.பியால் பெற முடிந்தது. இப்போது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இழக்க மங்களவால் முடியவில்லை.

அப்போது ஜே.வி.பிக்காக தூக்கியெறிந்த சந்திரிகாவை மங்கள அணைக்க முற்படுகிறார்.சந்திரிகாவின் வரவால் சுதந்திரக்கட்சி உடையுமா?மகிந்த அணியில் இருந்து மங்கள அணிக்கு பலர் வருவார்களா?என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

இப்போது ஜே.வி.பி எகிறிக்கொண்டு நிற்கிறது.ரணில்-மங்கள கூட்டையும் எதிர்க்கிறது. இந்தநிலையில் ஆட்சி கவிழுமா? ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச இரண்டு பெரியகட்சிகளும் நாட்டைச் சீரழித்துவிட்டன.இவர்களைத் தூக்கியெறியுங்கள்.எங்களது தலைமையில் புதிய அணியை அமைத்துள்ளோம்.எனவே நாங்களே ஆட்சி அமைக்கப்போகிறோம் எங்களுடன் வந்து சேருங்கள் என சோமவன்ச கூறியுள்ளார்.இவரது கருத்தை கொளும்பிலுள்ள ஊடகங்கள் நிராகரித்ததோடு கொச்சைப்படுத்தியும் உள்ளன.இது நடைமுறைச் சாத்தியமற்றது அப்படியானால் இப்போதைக்கு ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என எண்ணமுடியுமா?ஆகையால் ரணில்-மங்கள கூட்டு எதுவரை?

-Sankathi-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.