Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி

(எம்.மனோசித்ரா)
ஆளுங்கட்சியின்  கூட்டணிக்குள்  இருந்தாலும் பாரபட்சமான முறையிலேயே  பங்காளி கட்சிகள் வழிநடத்தப்படுகின்றனர். எவ்வித கலந்துரையாடல்களுக்கோ தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலோ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து வினவிய போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வீரகேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்தின் பிரச்சினையாகும். எரிபொருள் விலை அதிகரிப்பிற்காக  விடயத்திற்கு  பொறுப்பான  உதயகம்மன்பில  பதவி விலக வேண்டுமெனில் உரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று அதனுடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலக வேண்டும். அதே போன்று பேர்ள் கப்பல் விவகாரத்தில் துறைமுக அமைச்சரும், கொவிட் தொற்றால் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் என சகலரும் பதவி விலக வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது.

நாட்டில் இன்று பிரச்சினை அற்ற துறை எது? எனவே ஒவ்வொருவர் மீது பொறுப்பினை சுமத்தி நாட்டை நிர்வகிக்க முடியாது. அமைச்சரவை ஒத்துழைப்புகள் இங்கு முக்கியத்துவமுடையவையாகவுள்ளன. எரிபொருள் விலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள சாகர காரியவசம் ஏன் விவசாயிகளின் உரப்பிரச்சினை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை? எனவே அரசாங்கம் தற்போது பொதுவானதொரு தீர்மானத்திற்கு வர வேண்டும்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திலுள்ள கூட்டணியில் காணப்படுகின்ற பிரச்சினைகளே இன்று வெளிப்பட்டுள்ளன. காரணம் அரசாங்கத்தின் பங்காளி கட்சியொன்றின் தலைவர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்படுகிறது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் இந்த செயற்பாட்டை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எரிபொருள் கொள்வனவு செய்ய நிதியில்லை என்று கூறுபவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே பேச வேண்டும்.

மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இவ்வாறு செயற்படுவது பொறுத்தமற்றது. 5000 ரூபா கொடுப்பனவில் ஒரு மாதம் முழுவதுமான தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியுமா ? இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அரசியல் விளையாட்டொன்றிற்கு இவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் அரசியல் முரண்பாடுகளே தற்போது வெளிப்பட்டுள்ளன. பொருளாதார பிரச்சினைகளே அரசியல் முரண்பாடுகளாகியுள்ளன. இந்த அரசியல் முரண்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு தொடரும் என்று தெரியாது. கொவிட் தொற்றின் காரணமாக மாத்திரமே மக்கள் வீதிகளில் இறங்காமலுள்ளனர். எதிர்வரும் காலங்களில் எவ்வாறான நிலைமை ஏற்படும் கூறுவது கடினம்.

உதக கம்மன்பில கூறியதைப் போன்று அரசாங்கத்திற்குள்ளேயே அதனை சீரழிப்பதற்கான எதிரிகள் உள்ளனர் என்பது உண்மை. ஆனால் இதன்  ஊடாக அவர் சுதந்திர கட்சியை சாடவில்லை. காரணம் எமக்கும் அரசாங்கத்துடன் அதிருப்தியே காணப்படுகிறது. கூட்டணி ரீதியாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. சுதந்திர கட்சிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. நாம் கூறும் விடயங்களை  அவர்கள் கேட்பதும் இல்லை. எனவே தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் தீவிரமடையக் கூடும் என்றார்.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்க்கட்சி

எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பொருளாதார ரீதியில் மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை , அமைச்சரவை அனுமதியின்றி எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தை உள்ளிட்ட 10 காரணிகளை முன்வைத்து வலிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

IMG-20210616-WA0026.jpg

அதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளாவன,

அரசியலமைப்பின் 43(1) உறுப்புரைக்கமைய அமைச்சரவையானது பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற போதிலும் , அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் அமைச்சரவையின் அனுமதியின்றி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளமை,  

IMG-20210616-WA0029.jpg

அரசியலமைப்பின் 27(1) உறுப்புரைக்கமைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமையவான கோட்பாடுகளை மீறியுள்ளதோடு , அரசியலமைப்பின் 28 ஆவது உறுப்புரைக்கமைய பிரதான பொறுப்புக்களை புறந்தள்ளியுள்ளமை மற்றும் அரசியலமைப்பின் 53 ஆவது உறுப்புரைக்கமைய செய்து கொண்ட சத்தியப்பிரமாணத்தையும் மீறியுள்ளமை,

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது 2020 ஆம் ஆண்டு பாரியளவில் வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்காமல் உயர் விலையை பேணி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கம் பெற்றுக் கொண்ட இலாபம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் மற்றும் மக்களுக்கும் தெரிவிக்காமை,

IMG-20210616-WA0028.jpg

அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கான பயனை மக்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பின் மூலம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

இவ்வாறு கிடைத்த இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இரு வருடங்களுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

IMG-20210616-WA0035.jpg

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போது கிடைக்கப் பெற்ற இலாபத்தை , மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படும் போது பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஸ்தாபிப்பதாக கூறப்பட்ட எரிபொருள் விலையை முறையாக பேணுவதற்கான நிதியத்திற்கு என்ன ஆயிற்று என்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தாமை ,

விலை குறைவின் போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட இலாபத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை மீள செலுத்துவதற்கு உபயோகிப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு , இதன் காரணமாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பொருளாதார ரீதியில் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளமை,

IMG-20210616-WA0024.jpg

உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதியுடன் தொடர்புடைய சகல பொருளாதாரத்தினையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளமை ,

அரசாங்கத்தை நியமித்த போது மக்கள் வழங்கிய நிகழ்ச்சி நிரல், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசியலமைப்பை மீறியுள்ளமை , மீண்டும் மீண்டும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளமை என்பவற்றின் காரணமாக அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்க முடியாது என்ற யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்க்கட்சி | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது: விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம்..!

இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின்  பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போயுள்ளது. பிரதமருக்கும், பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில்  நிறுத்தப்பட்டுள்ளது.  கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்தார்.

thisa.jpg

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 எரிபொருள் விலையேற்றம் குறித்து அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை  பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விமர்சனத்திற்குள்ளாக்கி தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தயுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திற்கு கூட்டணியின் பங்காளி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வேளையிலும் இவர் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில்  ஊடகங்களுக்கு மத்தியில் கருத்துரைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல்களில் கூட்டணியாக ஒன்றிணைந்து போட்டியிட்டோம். பொதுத்தேர்தலுக்கு பின்னர் கூட்டணியினை பலப்படுத்தும்  கொள்கை திட்டங்கள் வகுக்கப்படவில்லை. மாறாக கூட்டணியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான தொடர்பு அண்மை காலமாக முறையாக பேணப்படவில்லை. பிரதமர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்ற கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது..

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சிரேஷ்ட அரசியல் தலைவர்களை உள்ளிடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்ற கோரிக்கையை  ஒன்றினைந்து முன்வைத்துள்ளோம். கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகள் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார்

கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது: விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம்..! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் வினைத்திறனற்ற அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வெளிகிட்டிட்டானுகள் போல் தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்மன் பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஜே.வி.பி. யின் தீர்மானம் விரைவில்...

(எம்.மனோசித்ரா)
பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால்  எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னணியில் பசிலே காணப்படுகிறார். அவரின் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்றும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அமையக் கூடும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஜே.வி.பி. கட்சி மட்டத்தில் கலந்தாலோசித்து உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

download__4_.jpg

அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்புக்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே உதய கம்மன்பில, சாகர காரியவசம் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. பசில் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என்று கூறுகின்றனர். அவ்வாறெனில் அவர் ஜனாதிபதியையும் பிரதமரையும் விட அதிகாரம் மிக்கவரா?

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ,  சாகர காரியவசம் உதய கம்மன்பிலவிற்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணியில் பசில் ராஜபக்ஷவே இருக்கிறார். எனவே தற்போது ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலகுவானதாக அமையலாம்.

எனவே வாழக்கை செலவு குறித்த அமைச்சரவை உப குழுவில் இந்த தீர்மானத்தை எடுத்த சகலருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி இதுவரையில் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. கிடைத்ததன் பின்னர் அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து ஜே.வி.பி. தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.

கம்மன் பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஜே.வி.பி. யின் தீர்மானம் விரைவில்... | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் வரும் என்று தான் அடுத்த தேர்தலில் தனி மொட்டுகட்சியில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுக்கின்றனர் ராஜாபக்சா குடும்பம்

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் போட்ட தகிடு தத்தம் கனநாளைக்கு தாக்குபிடிக்காது என்பது அவர்கள் தெரிந்தே வைத்திருந்தார்கள். தங்கள் அலுவல் முடியுமட்டும் எல்லோரும் சமம் என்று ஏற்றியே வேலை வாங்குவார்கள். காரியம் முடிந்ததும் ஏற்றிவிட்டவர்களை உதைத்து தள்ளி விட்டு இவர்கள் ஏறி நின்று கோசம் போடுவார்கள். தெரிந்தும் அதே பிழையை தொடந்து செய்து கையை சுட்டுக்கொள்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரண்பாடுகளுக்கு ஆளும் கட்சி தீர்வைக் காணாவிடில் கூட்டணி பலவீனமடையும்  -  வாசு எச்சரிக்கை

இராஜதுரை ஹஷான்

 

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு காணப்படுகிறது. முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். இல்லாவிடின்  கூட்டணி பலவீனமடையும் என  நீர் வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

 

 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

 

 எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானத்தை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தன்னிச்சையாக எடுக்கவில்லை அதற்கான அதிகாரமும் அவருக்கு கிடையாது.  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடன் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

 

vaasudeva.JPG

 

 எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை  வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என   பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்ட கருத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்  8 பிரதான பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறான நிலையில்  வலு சக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக   ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர உள்ளார்கள்.இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறாது என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிக்கும்,  பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு விரைவில் ஒரு தீர்வு பெற வேண்டும். இல்லாவிடின் கூட்டணி பலவீனமடையும் என்றார்.

முரண்பாடுகளுக்கு ஆளும் கட்சி தீர்வைக் காணாவிடில் கூட்டணி பலவீனமடையும்  -  வாசு எச்சரிக்கை | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமலிடமிருந்து முக்கிய அதிகாரங்கள் பறிப்பு

அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அமுலுக்கு வரும் வகையில், தொழிற்துறை அமைச்சு, விவசாய அமைச்சின் கீழிருந்த இயக்கங்கள், பொறுப்புகள், நிறுவகங்களைத் திருத்தும் புதிய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ளார்.

Tamilmirror Online || விமலிடமிருந்து முக்கிய அதிகாரங்கள் பறிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

நேற்று முன்தினம் அமுலுக்கு வரும் வகையில், தொழிற்துறை அமைச்சு, விவசாய அமைச்சின் கீழிருந்த இயக்கங்கள், பொறுப்புகள், நிறுவகங்களைத் திருத்தும் புதிய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ளார்

கோட்டாபய ராஜபக்‌ஷ தொடங்கிற்றார் ஆட்டத்தை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்சவின் அமைச்சில் மாற்றம் ; ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சிகள் மீதான மற்றொரு தாக்குதல் - அமைச்சர் வாசு

(எம்.மனோசித்ரா)

ஆளுந்தரப்பின் கூட்டணிக்குள் காணப்படும் பங்காளி கட்சிகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பிலவை அடுத்து, தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சுடன் தொடர்புடைய விடயதானங்களில் மாற்றங்களை செய்திருப்பது பங்காளிகட்சிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பிரிதொரு தாக்குதலாகும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

291.jpg

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாம் ஒன்றிணைந்து ஸ்தாபித்த இந்த அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இவ்வாறு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற போதிலும் , ஆளுந்தரப்பின் கூட்டணிக்குள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

அவற்றில் ஒன்று அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த லங்கா பாஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்த நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக அமைச்சர் விமல் வீரவன்சவே மாற்றியிருந்தார். இது மீண்டும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான எமக்கு ஏற்படுள்ள தாக்கமாகும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

வீரவன்சவின் அமைச்சில் மாற்றம் ; ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சிகள் மீதான மற்றொரு தாக்குதல் - அமைச்சர் வாசு | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்கிறார் பசில் ?

(லியோ நிரோஷ தர்ஷன்)

 

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். ஆளும் கட்சிக்குள் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில் இவரது வருகை குறித்து பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் அறுதல் அடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பெசில் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 

basil.JPG

 

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இவர் பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவித்த அவர் எரிப்பொருள் விலையை மீண்டும் குறைத்து  அரசாங்கம் தொடர்பில் சிறந்த பிம்பத்தை உருவாக்குவது இவரது தற்போதைய நோக்கமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எரிப்பொருள் விலையேற்றத்தின் நியாய தன்மையை ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதனை மீண்டும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதாக அமைவதுடன் நம்பக தன்மைக்கும் சவாலாகி விடும் எனவும் தெரிவித்தார்.

 

எனவே பசில் ராஜபக்ஷ  பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சராவது என்பது ஆளும் கட்சிக்குள் எரியும் தீயில் பெட்ரோலை ஊத்துவதாகவும் அமையலாம் அல்லது சிதறியுள்ள கட்சியை ஒன்றிணைப்பதாகவும் அமையலாம் என்பதே  பலரினதும் கணிப்பாகின்றது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்கிறார் பசில் ? | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.