Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!
  • This document is solely made for an educational purpose only.

 


எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது ஈழப்போரின் போது தமிழரின் கரந்தடிப்படையால் 1990 வரை அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. வெளியுலகிற்குத் தெரிந்தது வரிச்சீருடை பற்றி மட்டுமே. ஆனால் வருவதற்கு முன்னால் அவர்கள் பலவிதமான சீருடைகளை அணிந்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாருங்கள் அதுபற்றிக் காண்போம்….

 


முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்:

 

 


சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம்.

இவர்களின் சீருடையானது பல்வேறு காலங்களில் பல்வேறு விதமான தோற்றங்களில் பல்வேறு விதமான உருமறைப்புடன் மற்றல்களிற்கு உள்ளாகி 2002 ஆமாண்டிற்குப் பின்னர் ஒரு செந்தரப்படுத்தப்பட்ட சீருடையாக மிளிரியது.

 

  • விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அலுவல்சாரில்லா(Unofficial) முதலாவது சீருடை (70களின் இறுதி)

இது ஒரு வேறான உருமறைப்புக் கொண்ட சீருடை ஆகும். இச்சீருடையில் மேற்சட்டைக்கு மட்டுமே உருமறைப்பு உண்டு. மேற்சட்டை அப்படியே அக்காலத்திய படைத்துறை மேற்சட்டை போன்று தோற்றமளிக்கிறது. அதன் வலது & இடது புயங்களில் பக்கு இருக்கிறது. மார்பி இரு பக்கத்திலும் மேலும் கீழுமாக இவ்விரு பக்குகள் இருக்கின்றன. தோளில் தோள்மணைக்கான(shoulder boards) துண்டம் இருக்கிறது.

நீளக் காற்சட்டைக்கு ஒன்றுமில்லாமல் வெறுமனே இருக்கிறது. அந்நீளக் காற்சட்டையானது ஒரு கடுஞ்சாம்பல் போன்ற நிறத்தில் உள்ளது. மேற்சட்டை நீளக்காற்சட்டையினுள் விடப்படவில்லை. அதை வெளியில் விட்டு இடையில் மெல்லிய கபில(brown) நிறத்திலான இடைவாரினை கட்டியிருக்கின்றனர். இவர்கள் கட்டியுள்ள இடைவாரில் சிறு சோளியல்(pouch) ஒன்று உள்ளது. அதனினுள் என்ன வைத்திருந்தனர் என்று தெரியவில்லை. பெரும்பாலும் கணைகள்(ammunition) இருந்திருக்கக் கூடும்.

காலின் சப்பாத்து ஆனது படைத்துறை சப்பாத்தாக(நெடுஞ்சப்பாத்து-Boots) இருக்கிறது. முன்காலிற்கு ஒரு துணிபோன்ற ஒன்றால் இறுக்கமாக இருக்குமாறு சுற்றியிருக்கின்றனர். இவர்களின் தொப்பியும் அந்தக் காலத்து(1980களின்) தொப்பியாக (வரைகவிக்கு(beret) குறு சுண்டு(bill) வைத்தது போன்று) உள்ளது.

large.1714818589_RiseoftheTigers(2).png.4fc2753bb6b90431f91bd15bdfbac6da.png

'அரையர்(லெப்.)செல்லக்கிளி அம்மான் மற்றும் தவிபு தலைவருடன், தவிபு இயக்க முற்கால போராளிகள் | படிமப்புரவு: LTTE'

large.335510240_RiseoftheTigers(1).jpg.b769f6588bfcf22e413912f8a1c2b419.jpg

' தவிபு தலைவருடன், தவிபு இயக்க முற்கால போராளிகள் | அப்போராளிகள் அணிந்துள்ள சீருடையினையும் அதன் நிறத்தினையும் நோக்குக'

இச்சீருடையினை புலிகள் அமைப்பின் தலைவரும் அந்தக் காலத்து புலிக் கட்டளையாளர்களும் மட்டுமே அணிந்திருந்தனர். அவர் தலைமையேற்று நடந்த கடைநிலை வீரர்கள் யாவரும் தோரணிகள் ஏதுமற்ற ஒரு சீருடையினை அணிந்திருந்தனர். இத்தகவல்கள் மேற்கண்ட படம் மூலம் உறுதியாகிறது.

main-qimg-3c1460ad6ab03fbb9b5dba283f58ac2f.png

'அதே சீருடையில் புலிவீரர்(G3 உடன்) & அவர்தம் தலைவர் | தவிபு தலைவரின் இடைவாரினை உற்றுநோக்கி அதன் வடிவத்தினை அறிந்து கொள்க | படிமப்புரவு:'

main-qimg-b60919acf602751a03eeabc3f9e0d887.jpg

'தவிபு தலைவரும் லெப். செல்லக்கிளி அம்மானும் மேற்குறிப்பிட்ட சீருடையில் உள்ளதை காண்க | படிமப்புரவு: eelamview'

 


  • சத்தார் வரிச் சீருடை (1980-1982/1983)

இதுதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதலாவது அலுவல்சார்(official) சீருடை ஆகும். இதை புலிகளின் மூத்த உறுப்பினர்கள் மட்டுமே அணிந்திருந்தனர்.

இதன் தோற்றமானது இரு வகையான மஞ்சள் நிறங்களின் பின்புலத்தில் கபில நிற வரிக்கோடுடனாக இருந்தது. அந்த வரிக்கோடு மிகவும் தடித்ததாக இருநததோடு ஒவ்வொன்றும் மிகவும் ஐதாக இருந்தது. தோளில் சிவப்பு நிற தோள்மணைகள்(Shoulder boards) குத்தியிருந்தனர். அதில் இடது கமக்கட்டைச் சுற்றி Maroon நிறக் கயிறும் இருந்தது. இருபுயங்களிலும் பக்கு(Pocket) இருந்தது. இச்சீருடையின் வரைகவியில்தான் முதன்முதலில் புலிகள் இயக்கத்தின் இலச்சினை குத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் கொண்ட வரைகவியினை அணிந்திருந்தவர் தவிபு தலைவரே!

இதன் நீளக்காற்சட்டை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. ஆனால் இது புலிகளின் முதலாவது சீருடை என்பதால் நீளக்காற்சட்டையும் இதே உருமறைப்புக்கொண்ட சீருடையாகவே இருந்திருக்க வேண்டும். இருந்தபடியால்தான் புலிகள் இதனை அவர்தம் முதற்சீருடையாக கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

main-qimg-1cf85a2f8f77b332962567af05d96be1.jpg

'இடமிருந்து வலமாக: முதலாவது தாக்குதல் கட்டளையாளர் லெப்.சீலன், தவிபு தலைவர், திருமலை மாவட்ட கட்டளையாளர் லெப்.கேணல் புலேந்திரன் | காலம்: <1983 | படிமப்புரவு: Eelamaravar '

இந்த சீருடையில்தான் முதற் தடவையாக கட்டளையாளர்களிற்கும் வீரர்களிற்கும் இடையில் வேறுபாடுகள் கட்டப்பட்டது. அதாவது தவிபு தலைவர்(கட்டளையாளராக கொள்க) தனது இடது கமக்கட்டைச் சுற்றி புரிகயிறு(cord) கட்டியிருந்தார். இவரது வீரர்கள் வலது கமக்கட்டைச் சுற்றி புரிகயிறு கட்டியிருந்தனர்.

main-qimg-2d76de88913e6ebdf83095670de86ed0.png

'முதலாவது தாக்குதல் கட்டளையாளர் லெப். சீலன் | இவரது வலது கமக்கட்டில் புரிகயிறு உள்ளதை நோக்குக'

 


  • 1983-1983/1984 வரையிலான சீருடை

இந்தக் கால கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரும் கட்டளையாளரும் இவ்வாறான உடை அணிந்திருந்தனர்:

main-qimg-4739508a447270ffb0eaa3b3f43e2868.jpg

'மட்டு. மாவட்டத்தின் முதலாவது கட்டளையாளர் லெப். பரமதேவா அவர்கள் தவிபு தலைவருடன்'

இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வரைகவியினையும்(beret) அவர் கட்டளையாளரும் ஒருவிதமான தொப்பியினையும் அணிந்திருந்தனர். கட்டளையாளர் அணிந்திருக்கின்ற தொப்பியின் வடிவத்தினை என்னால் முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை, படம் தெளிவாக இல்லாததால்!

கீழே நீளக்காற்சட்டை அணிந்துள்ளார். அதில் மேற்சட்டையில் இருப்பது போன்ற உருமறைப்புத் தோற்றம் இல்லை. அது வெறுமனே ஒரு விதமான கடுங்கபில(Like Dark brown) நிறம் போன்ற நிறத்தில் உள்ளது. முழங்காலிற்கு அருகில் இரு பக்குகளும் இல்லை. அது படைத்துறை நீளக்காற்சட்டையும் இல்லை.

main-qimg-be20220b10176a7c80905a32e777a53b.png

'மேற்கூறியுள்ள சீருடையில் இருக்கும் த.வி.பு இயக்கத்தலைவர் | இவர் கையில் G- 3 ஏந்தியுள்ளார்'

ஆனால் இக்கால கட்டத்தில் புலிகள் அமைப்பின் வீரர்கள் யாவரும் கீழ்க்கண்டவாறான ஒரு நீல நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இந்த நீல நிறச் சீருடையும் படைத்துறைச் சீருடையாகவே இருக்கிறது. இவர்களின் இடையில் ஒரு மங்கிய இளநீல நிறத்திலான இடைவாரினை அணிந்திருக்கின்றனர். மேற்சட்டையினை உள்ளுடுத்தியுள்ளனர். தலையில் செண்டாட்டக் கவி(baseball cap) அணிந்திருக்கின்றனர்.

main-qimg-360f855e2125482d2a06ee46620e5972.jpg

'நான் மேற்கூறியவற்றை இப்படத்கில் காண்க | இபடத்தில் புலி இயக்கத்தலைவர் மேற்சட்டையினை உள்ளுடுத்தவில்லை |படிமப்புரவு: fb'

main-qimg-cea66de39fb25b590ed675ccac178e0b.png

'படிமப்புரவு: புலிகளின் ஒரு புத்தகம்'

 


  • 1984- 1987 ஆம் ஆண்டு வரையிலான சீருடை

இவை இந்தியப் பயிற்சிக் காலங்களின் போது அணியப்பட்டதாகும். இக்கால கட்டத்தில்தான் விடுதலைப் புலிகளில் இயக்கத்தில் முதற் தடவையாக,

  1. வீரர் சீருடை
    1. - சாம்பல் நிறம் போன்ற நிறத்திலான படைத்துறை மேற்சட்டையும், படைத்துறை நீளக் காற்சட்டையும் அதே நிறத்திலான அக்காலத்து சுற்றுக்காவல் தொப்பியும் அணிந்திருந்தனர். இடுப்பில் ஊத்தை வெள்ளை போன்ற நிறத்திலான இடைவார் கட்டியிருந்தனர். காலின் நெடுஞ்சப்பாத்து அணிந்திருந்தனர். முன்காலைச்சுற்றி அக்காலத்தில் முன்காலிற்கு அணிவது போன்ற ஒரு துணி சுற்றிக் கட்டியிருக்கின்றனர்(அது அக்காலத்து படைத்துறை வழக்கம்)
  2. உயரதிகாரி சீருடை
    1. - கடுஞ் சாம்பல் நிறம் போன்ற நிறத்திலான படைத்துறை மேற்சட்டையும், படைத்துறை நீளக் காற்சட்டையும் அதே நிறத்திலான அக்காலத்து சுற்றுக்காவல் தொப்பியும் அணிந்திருந்தனர். இவர்கள் சுற்றுக்காவல் தொப்பி அணியாமல் கறுப்பு நிற வரைகவி(Beret) அணிந்திருக்கிறார். இடுப்பில் ஊத்தை வெள்ளை போன்ற நிறத்திலான இடைவார் கட்டியிருந்தனர்.
  3. கட்டளையாளர் சீருடை
    1. இவர்கள் அணிந்திருந்த சீருடையினை(பச்சை & கபில(brown) குடும்ப நிறங்கள் கொண்ட சீருடை) கீழுள்ள படத்தில் கண்டுகொள்க. இச்சீருடையில் உருமறைப்பு உண்டு. இவர்கள் தலைக்கு சிவப்பு நிற வரைகவி அணிந்துள்ளனர். இடுப்பில் மெல்லிய சாம்பல் நிற இடைவார் கட்டியிருந்தனர். காலிற்கு அணிவதெல்லாம் வீரர்களைப் போன்றவையே!
    2. இவர்கள் இரு தரமாகப் பிரிக்கபட்டு உயர்ந்த தரமுடைய கட்டளையாளர் இடது தோளில் சிவப்பு நிற புரி கயிற்றினையும் அவரைவிடக் குறைந்த தரமுடைய கட்டளையாளர் வலது தோளில் சிவப்பு நிற புரி கயிற்றினைக் கட்டியுள்ளதை நோக்குக
  4. தலைவரின் மெய்க்காவலர் சீருடை
    1. இவர்கள் இந்திய தரைப்படையின் முதன்மை உருமறைப்பு சீருடையினை அணிந்திருந்தனர். இவர்கள் சுற்றுக்காவல் தொப்பி அணியாமல் கறுப்பு நிற வரைகவி(Beret) அணிந்திருக்கிறார். இடுப்பில் கறுப்பு நிற இடைவார் கட்டியிருந்தனர்.
  5. இயக்கத் தலைவர்
    1. இவர் இந்திய தரைப்படையின் முதன்மை உருமறைப்பு சீருடையினை அணிந்திருந்தார். தலையிலும் அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பி அணிந்திருந்தார். இடுப்பில் கறுப்பு நிற இடைவார் கட்டியிருந்தார்.

என சீருடைகள் பதவிக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு இருந்தன. இயக்கத்தில் இவ்வாறு பதவிக்கு ஏற்ப சீருடைகள் பிரிக்கப்பட்டதும் இதுவே கடைசித் தடவையாகும்!

main-qimg-a103352c4b68f283bda1a729b6961377.jpg

'இந்திய பயிற்சிப் பாசறையில் படை மரியாதை ஏற்பின் போது தலைவரும் கட்டளையாளர்கள், உயரதிகாரிகள், மெய்க்காவலர், மற்றும் வீரர்கள்'

 

large.IMG-20210214-WA0000.jpg.a85b5dd7a3a9a01259b12b36e74c0311.jpg

இப்படத்தினை வைத்து நான் மேற்சொன்ன தகவல்களை நோக்கவும்

 

large.130781886_882396922577330_2780498767196776254_n.jpg.ee8626bcc4d2806e90516043e874882e.jpg

'உயரதிகாரியும் கட்டளையாளரும் | கட்டளையாளர் வலது கமக்கட்டில் புரிகயிறு கட்டியுள்ளதை நோக்குக'

main-qimg-54d25420845421bf23f5a94422bbb52d.jpg

'கட்டளையாளர்களுடன் தவிபு தலைவர் | படிமப்புரவு: புலிகளின் ஒரு புத்தகம்'

main-qimg-11e42e306ca41e489ba804fcf058af93.jpg

'யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப்.கேணல் ராதா (இ) ஆவ்ர்களும் மன்னார் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப்.கேணல் விக்டர் (வ) அவர்களும் நான் மேற்கூறிய கட்டளையாளர் சீருடை அணிந்துள்ளதை நோக்குக'

இதே நாட்களில் புலிகளின் தலைவரும் கட்டளையாளர் சீருடையினை அணிந்துள்ளார் (தலைவர்கள் பொதுவாக எல்லாச் சீருடையும் அணிவது இயல்பே)

main-qimg-927e2ee2684fc95378852bfb765c02ee.png

'கட்டளையாளர் சீருடையில் புலித் தலைவர்'

main-qimg-c48ffa195358fb64ee685e3a6be9181c.jpg

'மெய்க்காவலருடன் தவிபு தலைவர் இச்சீருடை அணிந்து அமர்ந்துள்ளதை நோக்குக. மேலும் அவரைச் சுற்றி நிற்கும் மெய்க்கவலரின் சீருடையினையும் நோக்குக. அவர்களும் இந்திய சீருடையே அணிந்துள்ளனர்.'

main-qimg-4fc63df4a41414691d918eeb1af6da05.jpg

'படிமம் 1: தவிபு தலைவர் இந்திய தரைப்படையின் முதன்மை உருமறைப்பு சீருடையில் | படிமம் 2: தவிபு தலைவர் இந்திய தரைப்படையின் முதன்மை உருமறைப்பு சீருடை அணிந்து அதன் மேல் இந்திய தாக்குதல் கஞ்சுகம் அணிந்துள்ளார்'

main-qimg-3b90c2a4ce1f6c32ab4059e4810a91df.jpg

'தவிபு தலைவர் & மெய்க்காவலர் லெப். மயூரன்(பபி) | இம்மெய்க்காவலரின் நினைவாகத்தான் இவருடைய இயற்பெயரான துவாரகன் என்பதன் பெண்பெயர்மொழி வடிவமான துவாரகா என்பதனை தேசியத்தலைவர் தன் மகளிற்கான பெயர்மொழியாக சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.'

 

மகளிர் பிரிவு - முதலாவது அணி:-

இதே காலகட்டத்தில் இந்தியாவில் பயிற்சி முடித்து வெளியேறிய பெண்கள் பிரிவினரின் முதலாவது அணியின் படங்களைத்தான், நான் இங்கு ஆய்விற்கு எடுத்துள்ளேன்.

அதிலிருந்து கிடைத்த தகவல்களானது:

பெண்கள் பிரிவில் எல்லோருமே அக்காலத்திய இந்திய தரைப்படையின் முதன்மைச் சீருடையினையே அணிந்திருந்தனர். காலில் படைத்துறைக்கான நெடுஞ்சப்பாத்து அணிந்து முன்காலைச் சுற்றி துணி கட்டியிருக்கின்றனனர். இடையில் ஊத்தையா வெள்ளை போன்ற நிறத்திலான படைத்துறை இடைவார் அணிந்துள்ளனர். ஆனால் பதவி நிலைக்கேற்ப இவர்கள் வரைகவி & தொப்பி அணிந்திருந்தனர். அவை ஆவன:-

  1. சுற்றுக்காவல் தொப்பி:-
    1. இது வீரர்களின் தொப்பியாகும். இது இந்திய உருமறைப்பிலான நிறத்தினைக் கொண்டிருந்தது.
  2. சிவப்பு வரைகவி:-
    1. இதுதான் இவர்களின் கட்டளையாளர்களின் வரைகவியாகும்.
  3. பச்சை வரைகவி:-
    1. இது உயரதிகாரிகளின் வரைகவியாகும். இதை அணிந்தோர் இப்பெண்கள் பிரிவுக்குளே அணித் தலைவர்களாக இருந்தோரே.
  4. கறுப்பு வரைகவி:-
    1. இது படைத்தகையின்போது அணியும் வரைகவியாகும்

main-qimg-6d1885db94922340ed4ea342226f5d8d.jpg

'படைத்தகையின் போது கறுப்பு வரைகவி | படிமப்புரவு: aruchuna'

main-qimg-894bbce6f92fd7d810cfea7983b801f0.jpg

'சிவப்பு & கறுப்பு வரைகவி & சுற்றுக்காவல் வரைகவி அணிந்து நிற்கும் பெண்புலிகள் படிமப்புரவு: aruchuna'

main-qimg-e3607e43b880ab7576b87f8c25bd2a89.jpg

'மரக்கட்டையால் செய்யப்பட்ட போலிச் சுடுகலன்களுடன் பயிற்சி எடுக்கும் பெண்புலிகள் | இவர்கள் அணிந்துள்ள தொப்பிகளை நோக்குக | aruchuna'

 

மகளிர் பிரிவு- முதலணிக்குப் பின்வந்தோர்:-

முதலணிக்குப் பிறகு சேர்ந்து பயிற்சி எடுத்தோர் பற்றிய எந்தவொரு படங்களும் இல்லை. ஆனால் எனக்கு புலிகளின் மாதயிழ் ஒன்றின் முன்பக்கத்தில் இருந்து ஒரு படம் கிடைத்துள்ளது. கிடைத்த படத்தினை அடிப்படையாகக் கொண்டு பார்த்த போது பின்னால் சேர்ந்தோர் முதலணியைப் போன்றில்லாமல் ஆண்களைப் போன்றே சீருடை அணிந்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே முதலணிக்குப் பின்சேர்ந்த ஏனையோர் ஆண்களைப் போன்றே சாதாரணமாக நடத்தப்பட்டுள்ளனர். அவர்களிற்கு முதலணிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை ஏதும் வழங்கப்படவில்லை!

main-qimg-3407bb5d26ac7ced45bf2dc0b56ab923.png

 


  • 1987 இற்கு முன்னர் அ அந்த ஆண்டில் மட்டும் அணியப்பட்ட சீரான மேற்சட்டை

இந்த 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இந்தியப் படைகளுடனான மோதலிற்கு முன்னர் புலிவீரர்கள், சீருடை அல்லாத ஆனால் ஒரே மாதிரியான ஒரு மேற்சட்டை அணிந்திருந்தனர். அதன் உருமறைப்பு எப்படி ரிஉந்தது எனில் - மஞ்சள் நிற பின்புலத்தில் சிறுத்தையின் உடலில் இருக்கும் வளையங்கள் போன்ற அடர்ந்த கறுப்பு நிற வளையங்களுடன் இருந்தது. ஆனால் இதற்கு இதே நிறத்தில் நீளக் காற்சட்டை இருக்கவில்லை. மாறாக சறம் அல்லது காற்சட்டை அணிந்திருந்தனர்.

main-qimg-bf2d99da369125a73e8ce5992126924b.jpg

'படிமப்புரவு : Gettyimages'

main-qimg-604961771c3a5faf0cfb211dfe9b6784.jpg

main-qimg-546eac130ef2e75eaa7d2be2229a568a.jpg

main-qimg-d60df860d68b8e3758527eaf78025cc8.jpg

இதே தோரணியிலேயே சிலர் சறமும் அணிந்திருந்தனர்:

12373338_121613124875197_8202230441788297138_n.jpg

 


  • மணலாற்றுக் காட்டுக்கால புலிகள் சீருடை: 1987 இறுதி –1990

வகை 1:-

இக்கால கட்டத்தில் இந்திய சீருடையினை இவர்கள் அணிந்திருந்தனர்.

main-qimg-dd25d9a2d18f8355ce8bc1af64ea211b.jpg

 

வகை 2:-

இக்கால கட்டத்தில் இந்திய சீருடையினை அணிந்திருந்தாலும் அச்சீருடையின் தோரணி கொண்டதான ஆனால் கை மற்றும் முழங்காலிற்கு கீழ் இந்திய உருமறைப்பு இல்லாமல் வெறும் கறுப்பு நிறமாக இருக்கும்படியான ஒருசீருடையும் அணிந்திருந்தனர். இடுப்பில் கறுப்பு நிற இடைவாரினை அணிந்திருந்தனர்.

main-qimg-3e1fb9248bfd71b6470cf260bdbf6f50.png

main-qimg-741aa49ea133e14e5d1e943bc3ac79f3.jpg

 

வகை 3:-

இது, இதே காலகட்டத்தில் மட்டக்களப்பு புலி வீரர்களால் அணியப்பட்ட மற்றொரு வகைச் சீருடை. இது சிங்களப் படைகளின் சீருடையாகும். அச்சீருடையினை புலிகள் எடுத்து தாமும் அணிந்திருந்தனர். தலையில் அதே உருமறைப்பிலான மகுடக்கவி(Hat) அணிந்திருந்தனர்

main-qimg-17853fd4b0176ea07a357ba00397eeb3.jpg

'இப்படத்தில் புலிகளின் தலைவர் மட்டும் இந்திய சீருடையில் நிற்கிறார்'

main-qimg-6c65ba251dffcdf306e3605ee8aa8ffa.jpg

'இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் மட்டு-அம்பாறை மாவட்ட துணைக் கட்டளையாளர் லெப் கேணல் எழிலவன்/ஜீவன் அவர்கள் '

இச்சிங்கள சீருடையினை புலிகள் முதன்மை ஓட்டத்தில் இருந்து எடுத்துவிட்டலும் ஒரு படையணி மட்டும் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை தம் சீருடையாக அணிந்து வந்தனர். இதன் பின் இப்படையணி என்ன சீருடை அணிந்தது என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. அப்படையணி மட்டுவில் தரிபெற்றிருந்த படையணியாகும். இப்படையணியில் இருபாலரும் இருந்தனர்; இருபாலரும் அணிந்திருந்தனர். இவர்கள் தொப்பியாக பச்சை நிறத்திலான செண்டாட்டத் தொப்பியினை(baseball) அணிந்திருந்தனர்.

அப்படையணி பற்றிய ஒருசில படிமங்கள்(Images):-

main-qimg-2846362278c4ea45ed6461640d0386a9.png

'படிமப்புரவு: Getty images'

main-qimg-14363a0e1ee0ef7e769ebdf79b4a9cd1.png

'துரோகி கருணாவின் மெய்க்காவலன்'

main-qimg-5515df150a02222543d447180d72845c.png

'நான் அம்புக்குறி இட்டுள்ளோர் இச்சீருடை அணிந்து பச்சை நிறத் தொப்பி அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: tamilnet'

சிங்களத்தின் சீருடையினை த.விபு தலைவரும் இக்கால கட்டத்தில் அணிந்திருந்தார்.

main-qimg-293cf8cb2b316307ff32524e49cd1b34.png

 


உசாத்துணை:

  • கிடைத்த படங்களை வைத்து அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதியுள்ளேன்.

படிமப்புரவு:-

  • அனைத்துப் படங்களும் விடுதலைப்புலிகளால் ஈழத்தில் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டவையே

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.