Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழில் படைவீரர்களை, மறவர்களை குறித்து நிற்கும் சொற்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-ee68518f10030031aa71e58748460db4.jpg

'படிமப்புரவு: பிரசன்ன வீரக்கொடி | பட விளக்கம்: தமிழரின் பண்டைய வீரர்களைக் குறிக்கும் படங்கள் ஏதும் கடந்த வருடங்களாக உருவாக்கப்படாதலால் சிங்களவரின் பண்டைய வீரர்களை சித்தரிக்கும் படங்களை பயன்படுத்தலானேன். '

 


  • வீரன் - ஆண்பால்.
  • வீரி / வீராங்கனை - பெண்பால்

  • போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல்.
    • பெடியள் - ஈழத்தில் இவ்வாறு போராடியவர்களை இச்சொல் குறித்து நின்றது.

 

  1. படைவீரன்/ வீரன் = Soldier | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5
  2. படைவெறியர் - இது ஈழத்தில் மட்டுமே வழங்கப் பெறும் சொல். இது படைவீரர்களில் இனவெறி பிடித்து அரக்கர்கள் போல் ஆடுவோரை இச்சொல் குறித்தது. (பண்டாக்களைத்தான்!)
  3. படைஞன்/ படைநர்/ படையாளன் - ஆணையமற்ற(non-commissioned) அ ஆணையமுள்ள(commissioned) படையினுட் நேரடியாகச் சேர்க்கப்பட்ட வீரர்களைக்(துணைப்படையும்) குறிக்கும் சொல். மக்கள் படையைச் சேர்ந்தவர்கள் இதனுட் படார். ஏனெனில் அவர்கள் அவசர காலத்தில் மட்டுமே சேர்க்கப்படும் ஒருவிதமான துணைப்படை வீரர்.
    1. இந்த 'மக்கள் படை'யைச் சேர்ந்தோரை இச்சொற்கள் குறிக்க வேண்டுமாயின், இச்சொற்களுக்கு முன் 'மக்கள்' என்னுஞ்சொல் சேர்த்து வழங்குதல் வேண்டும். அப்பொழுதுதான் சொற்றுல்லியம் ஏற்படும்.
    2. படையினர் = Troops
  4. போர்வீரன்/ போரி- போர்க் களத்தில் ஆடும் அனைத்து வகையான படை வீரர்களையும் குறிக்கும் பொதுச் சொல். மக்கள் படையும் இதனுட் படுவர். ஏனெனில் அவர்களும் ஒருவிதமான துணைப்படையைச் சேர்ந்த போரிற்கான வீரர்களே!
    1. ஒத்த சொல்: செருநர், பொருநர்(பொருதும் அனைவரும் பொருநர் எனப்படுவர்), அமரியோன், அமரன்(சமர் ஆடுபவன்), கலியன், அடர்வான்
  5. களமன் - களத்திலே ஆடுவோர்/ இருப்போர். இவர்கள் களமருத்துவராகவும் இருப்பர்; வீரராகவும் இருப்பர்; மக்கள் படைவீராகவும் இருப்பர்.
  6. காலாள் - காலாட்படை வீரன்
  7. மைந்தன் - காலாட்படையில் மட்டும் இடம்பெற்று வாள் கொண்டு அணுக்கப்போர் செய்யும் வீரர். | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5
  8. மழவன் - இள வீரன் | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5
    1. "மழவுங் குழவும் இளமைப் பொருள்". (தொல். உரி 14)
  9. விடன் - விடம் போன்ற கெட்ட வீரன்.
  10. வீரியன் - வீரியம் நிறைந்த வீரன்
  11. படையாட்சி - சமரிலே வீரச்செயல் புரிந்த வீரன்
  12. இகலன் - தந்திரம் நிறைந்த வீரன்
  13. படர் - இழிந்த மக்களின் வீரர்கள்
  14. ஆண்டகை, அண்டீரன் - ஆண்மை நிறைந்த வீரன்
  15. அணந்த காளை- தாடியையுடைய வீரன்
  16. கண்டர் - அரசனை சூழ்ந்து நின்றும் காக்கும் வீரர் (கிட்டிப்பு(credit): போரியல் அன்றும் இன்றும், 166)
  17. போரேறு - போரிலே ஏறுபோன்று ஆடியவன். வீரனையோ அல்லது அவனிற்கான கட்டளையாளரையோ(commander) குறித்து நிற்கிறது.
  18. ஏறாளன் - ஆண்மக்களில் ஏறு போன்றவன் .. நேரடியாக வீரனைக் குறிக்கவில்லை. ஒரு வீரனது செயல்களின் மூலமாக அனை விவரிக்க இச்சொல் பயன்படுகிறது.
    1. இப்பெயரில் தமிழரசன் ஒருவன் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது!
      1. (http://sishri.org/ery.pdf)
  19. ஏறுழவன் - ஏறு போன்ற வலிமை உடைய உழவன்(farmer). ஆனால் இவன் படைஞன் அல்லன்; மக்கள் படையைச் சேர்ந்த போர்வீரன் ஆவான்.
  20. தறுகணாளன் - இறப்பிற்கஞ்சாத வீரத்தை உடையவன்.(எ.கா: உயிராயுதம், சாவேறு போன்றோர்)
  21. மறவன் - வீரத்திலும் கூடியதான மறத்தை வெளிப்படுத்துவோர் (எ.கா: கருவேங்கைகள்) - warrior | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5
  22. மறவோன் - மறவனை விட வீரியம் மிக்கவன்
  23. மொய்ம்பன் - தோள்வலிமை மிக்க மறவன் | மொய்ம்பு - தோள் வலிமை
  24. எருமை மறவன்- ஒருநாட்டின் ஏனைய வீரர்கள் போரில் புறமுதிகிட்டு ஓடும்போது எதிரிகளைத் தனந்தனியாக எதிர்த்து நின்று போரிடும் வீரனைக் குறிக்கும் சொல் .
  25. பூட்கை மறவர் - போரில்(Meaning: Ancient times 'war') புறங்காட்டக் கூடாது என்றும் அரசனிற்காக உயிர் துறக்க வேண்டும் என்றும் வாழ்ந்த படைவீரர்
    1. ஆதாரம் : 'பாவாணர் தேவநேயம்' - pg 173
  26. சூரன் - இச்சொல் இன்றளவும் ஈழத்தில் சரியான பொருளுடன் வழங்குகிறது. செயல்கள் எல்லாவற்றிலும் சூரமான ஒருவனை சூரன் என்பர், ஈழத்தவர்.
  27. மள்ளர் - அஞ்சாது அடர்ந்து விரைந்து சமராடும் மறவர் | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5
  28. நாயகன்/ மண்டர் = Hero, Champion
  29. மாவீரன் - சமரிலே உயிர் துறந்தவன். இதற்கு நிகரான பொருள் உடைய மற்றொரு சொல் : வீரவான்
  30. உயிராயுதம்(எங்கட)/ சாவர்/ சாவீரன் - உயிரினையே ஆய்தமாகப் பயன்படுத்துவோர். இன்னும் சொல்லப்போனால் தற்கொடைப்படைஞர்
  31. வாளெடுப்பான் - அரசன் முன் வாளேந்திச் செல்வோன் (sword-bearer of a king)
  32. கூளியர் - அரசன் ஏவும் மறவர்களிற்கு உறுதுணையாக ஆநிரை கவர்தல், படைசெல்லப் பாதை அமைத்தல் முதாலான செயல்கள் செய்வோர். | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5
  33. புரவலன் - காத்துதவுவோன்
  34. உழிஞைக்காரன் - படையெடுத்து வந்து சமராடுவோன்
  35. நொச்சிக்காரன் - அவனை எதிர்த்து சமராடுவோன்
  36. ஏவுவார் - ஏதேனும் ஒன்றினை ஏவுபவர் [அது ஏவூர்தியாகவும் இருக்கலாம், ஏவுகணையாகவும் இருக்கலாம்(தோள்-மூட்டு ஏவுகணை- Shoulder mounted missile), கட்டளையாகவும் இருக்கலாம்]
  37. ஆலிகன் - கலப்பை போன்ற ஆயுதம் கொண்டு சமராடுபவன்.

 


மேலும் பல வீரர்களைப் பற்றி வாசிக்க:


 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • போரியல். அன்றும் இன்றும் - புத்தகம்

தொகுப்பு& வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.