Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மா மெக்கியோன்: ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்மா மெக்கியோன்: ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
எம்மா மெக்கியான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மனிதர் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதே பெரும் சாதனைதான். ஆனால் இந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஒரு வீராங்கனை மட்டும் ஏழு பதக்கங்களை வென்று மொத்த உலகை மலைக்க வைத்திருக்கிறார். அவர் பெயர் எம்மா மெக்கியோன்.

ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான இவர், டோக்யோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் ஏழு பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.

ஏழு பதக்கங்கள் வென்ற எம்மாவின் சாதனை பற்றிய ஏழு முக்கிய தகவல்கள் இதோ.

1. 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 4 * 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே என நான்கு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 100 மீட்டர் பட்டர்ஃப்ளை, 4 * 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, கலப்பு 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே ஆகிய போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ளார்.

 

2. ஒரு பெண் வீராங்கனை ஒரே ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை என்கிறது ஏ.எஃப்.பி செய்தி முகமை.

3. இதுவரையான ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதில் நான்கு தங்கத்தை எம்மா மெக்கியோன் மட்டும் வென்று கொடுத்திருக்கிறார்.

4. உலகிலேயே, ஒரே ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற நான்காவது பெண்மணி இவர்தான் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம்.

5. ஆஸ்திரேலியாவின் இயான் தார்ப் மற்றும் லீசல் ஜோன்ஸ் ஆகியோர் தலா 9 ஒலிம்பிக் பதக்கங்களைப் வென்ற சாதனையையும் முறியடித்திருக்கிறார் எம்மா மெக்கியோன்.

6. டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற நான்கு தங்கம் மற்றும் மூன்று வென்கலத்தோடு, கடந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை எம்மா மெக்கியோன் வென்றுள்ளார் என்கிறது இ.எஸ்.பி.என்.

7. பதக்கங்கள் போக, இரு ஒலிம்பிக் சாதனைகளை படைத்து இருக்கிறார். 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 23.81 நொடிகள் எனவும், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 51.96 நொடிகள் என இரு ஒலிம்பிக் சாதனைகளைப் எம்மா மெக்கியோன் படைத்திருக்கிறார் என்கிறது ஒலிம்பிக்ஸ் வலைதளம்.

https://www.bbc.com/tamil/sport-58046117

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பற்றி நானும் இன்று அறிந்தேன். 4*100 ஆண்கள், பெண்கள் கலப்பு நூறு மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் கடைசி பகுதியை சிறப்பாக நீந்தினார். 

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலமாகவே அவுஸ்ரேலிய நீச்சல் வீராங்கனைகள் நீச்சல் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள்.. இந்த ஒலிம்பிக் போட்டியிலும் அப்படித்தான் உள்ளது.. ஆனால் Ian Thorpe, Grant Hackett, Michael Klim இவர்களுக்கு பின் ஆண் நீச்சல் வீரர்கள் அதிகம் பிரகாசிக்கவில்லை.. 

அதே சமயம் அவுஸ்ரேலிய ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணி(Australian Boomers) ஆச்சரியதக்க விதமாக ஜேர்மனியை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது.. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.. இறுதியில் Australian Boomers வெற்றிபெற்றார்கள்.. இந்த ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இவர்கள் தோற்கவில்லை.. பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையடிப்பு பற்றிய நம்ம தமிழ் ஊடகத்தின் பார்வை .

பெண்களின் 100 மீற்றர் ஓட்டமும் ஜமைக்கா வீராங்கனைகளின் வெள்ளையடிப்பும்.

Tamo-100m.jpg
இலங்கையில் க.பொ.த சாதாரண  தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தில் “Value Of  Time”(நேரத்தின் அருமை) என்றொரு கவிதை உண்டு. அது, நேரத்தின் மதிப்பை மாணவர்களுக்கு உணர்த்தும் ஒரு கவிதை.
“ஒரு வருடத்தின் அருமையை உணர வேண்டுமானால் பரீட்சையில் கோட்டை விட்ட மாணவனை அல்லது மாணவியைக்  கேட்டுப் பாருங்கள்” என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை  நேர அடிப்படையில் அப்படியே குறைந்து கொண்டே வந்து இறுதியாக நூற்றிலொரு கணத்தின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட  வீரன் அல்லது வீராங்கனையைக் கேட்டுப் பாருங்கள் என்று முடியும். நேற்று, ஒலிம்பிக்கில்  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர்  ஓட்டப் போட்டியில் இல் 33 வருடங்களுக்கு முன்னர் 1988 சியோலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னரின் 10.62 என்ற சாதனை தாம்சன்-ஹேராவால் 10.61 என்று முறியடிக்கப்பட்டபோது அந்தக் கவிதை உடனே ஞாபகத்துக்கு வந்தது.
ஏனைய விளையாட்டுப் போட்டிகளை விட ஒலிம்பிக் போட்டிகளுக்கு உள்ள எதிர்பார்ப்பு அதிகம். இவ்வுலகின் உச்ச விளையாட்டுப் போட்டிகள் அவை என்பதால் அவற்றுக்கு உள்ள எதிர்பார்ப்பும் மரியாதையும் வேறெந்த விளையாட்டுப் போட்டிகளுக்கும் கிடைக்காது.  அந்த ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் ஒட்டப்போட்டிக்கு ஏனைய போட்டிகளை விட எதிர்பார்ப்பும் ,பார்வையாளர்களும் அதிகம். உலகில் அதிவேகமான ஆண் மற்றும் பெண் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் எல்லோருக்கும் இயல்பாகவே இருக்கும். அந்த ஆவல் தான் இந்தப் போட்டிகளை எதிர்பார்ப்பின் உச்சத்தில் வைத்திருக்கும். நேற்றும் அவ்வாறானதொரு  தருணத்தைத் தான் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.
துப்பாக்கிச்சத்தம் கேட்டவுடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக எல்லைக்கோட்டை அடைந்த மூன்று பேருமே  மஞ்சள் மேற்சட்டையும் பச்சைக்காற்சட்டையும் அணிந்தவர்கள் தான். ஆம், குறுந்தூர அதிவேகப் போட்டிகள் என்றாலே ஜமைக்காவும் அமெரிக்கவும் தான் ஞாபகத்துக்கு வரும் என்றாலும் கூட கடந்த ஒரு தசாப்தமாக ஜமைக்கா தான் முன்னணி வகிக்கிறது. ஆக தசாப்த காலமாக நிலவி வரும் நம்பிக்கை இந்த முறையும் பொய்த்துப் போகவில்லை. சொல்லப்போனால் இம்முறை அந்த நம்பிக்கை இன்னும் சற்று உறுதியாக நிலை நாட்டப்பட்டது  என்று கூறலாம்.  ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஒரே நாடு பெற்றுக் கொள்வதென்பது மிகவும் ஒரு அரிய நிகழ்வு.  2008 பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஒட்டப்போட்டியில்  மூன்று ஜமைக்கா விளையாட்டு வீராங்கனைகள் ஃப்ரேசர்-ப்ரைஸ், ஷெரோன் சிம்ப்சன் மற்றும் கெரான் ஸ்டீவர்ட்ஆகியோர்  முதலிடம் பிடித்திருந்தனர் .
அந்த அரிய நிகழ்வு நேற்றும் தாம்சன்-ஹேரா, ஃப்ரேஸர்-ப்ரைஸ், ஷெரிக்கா ஜாக்சன்ஆகியோரால் நிகழ்த்தப்பட்டு ஒரு வெள்ளையடிப்பு மேற்கொள்ளப்பட்டது.   (சாதாரணமாக  ஆங்கில மரபுத் தொடரில் ‘வெள்ளையடிப்பு’என்பதற்கு ‘குற்றங்களை மறைத்தல்’ என்றொரு பொருள் இருந்தாலும் கூட எதிர் வீரர்களை ஒரு புள்ளியும் எடுக்க விடாமல் அசாதாரணமான முறையில் அசாத்திய திறமையை வெளிக்காட்டி வெற்றி பெறுதலையும் குறிக்கும்.)
உண்மையில் எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு முன்னரே  தாம்சன்-ஹேராவின் மகிழ்ச்சிக் கூச்சல் தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் அது கொண்டாடப்பட வெற்றி தான். 33 வருடங்களுக்கு முன்னர் சியோலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னரின் 33 வருட சாதனையை முறியடித்த…அதுவும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காயம் காரணமாக விலக வேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் அவ்வாறு மகிழ்ச்சிக் கூக்குரலிட்டுக் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான்
இப்போது, அவர் தங்கப் பதக்கம் வென்றவர் மட்டுமல்ல, ஒலிம்பிக் சாதனை படைத்தவரும் கூட.இந்தத்தூரத்தை ஓடுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் நேரம் 10.61 வினாடிகள். சியோலில் ஃப்ளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னர் எடுத்துக் கொண்ட நேரம் 10.62. அதாவது ஒரு கணப்பொழுது  நூறாகப் பிரிக்கப்பட்டு அதிலொரு பகுதியால் தான் அதாவது மிகமிகக் குறுகிய நேரத்தால் தான் இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் தான் கிரிஃபித் ஜாய்னரின் சாதனை 10.61. ஆனால் அதே ஆண்டில் அதாவது 1988 இல் அமெரிக்காவில் நடந்த இன்னுமொரு  சர்வதேச தடகளப் போட்டியில் அவர் எடுத்துக் கொண்ட நேரம் 10.49. ஆக, 1998 இல் அவர் இறந்து விட்டாலும் கூட அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை .  இப்போதைக்குத் தங்கப் பதக்கம் பெற்றாலும் கூட, ஒலிம்பிக் சாதனையை முறியடித்தாலும் கூட ‘உலகின் அதிவேகமான பெண்’ என்ற பட்டத்தைப் பெறுவதற்கு தாம்சன்-ஹேரா இன்னும் முயற்சிக்க வேண்டும்  “10.49 உலக சாதனை சாத்தியமா? “என்று ஊடகவியலாளர்கள் கேட்ட போது அவர் “”எனக்கு வயது 29. எனக்கு இன்னும் பல வருடங்கள் உள்ளன. நான் இன்னும் பயிற்சியும் முயற்சியும் செய்கிறேன்.  ஆகவே  சாத்தியமாக வாய்ப்புண்டு .” என்று கூறினார்.
இந்த வெற்றியுடன் இவருக்குக் கிடைத்தது மூன்றாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரியோவில் இருந்து 100 மீற்றர்  மற்றும் 200 மீற்றர்  ஓட்டங்களில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
மற்றொருதடகளப் போட்டியாளரான  அதே நாட்டைச் சேர்ந்த  சக போட்டியாளரான சேர்ந்த உசைன் போல்ட், 2008 மற்றும் 2016 க்கு இடையில் தொடர்ச்சியாக 100 மீற்றர்   ஒட்டப்போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.  தாம்சன்-ஹேராவுக்கு இப்போது பாரிசில் அந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட ஃப்ரேஸர்-ப்ரைஸ்-10.74 நேரத்தில் இத்தூரத்தைக் கடந்திருந்தார். இவர் இதுவரை பங்குபற்றிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில்  இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் ஆகியவற்றை பெற்றிருக்கிறார் . ஷெரிக்கா ஜாக்சன்-10.76 இல் இந்தத் தூரத்தைக் கடந்திருப்பதுடன் அவருக்கு 4×400 அஞ்சலோட்டத்தில்  வெள்ளிப்பதக்கமும் மற்றும் 400 மீற்றர் ஓட்டத்தில்  வெண்கலப்பதக்கமும் பெற்றிருக்கிறார்.

https://tamonews.com/small-boxes/26665/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.