Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!
  • This document is solely made for an educational purpose only.

 

எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் அதிரடிப்படை சிறப்புப்படை ஆகியவற்றால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. இவர்கள் இருவரும் இருவேறு வகையான பாங்கத்திலான(pattern) சீருடைகளை அணிந்திருந்தனர். 

1) சிறப்புப்படை - கரும்புலிகள் - Black Tigers

  • இவர்கள்தான் தமிழீழ சிறப்புப்படையினர்
  • வெடியே இவராவர்! அதற்காக இவர்கள் திரும்பி வரார் என்றில்லை. இவர்களிலும் பல பகைப்புலம் தொட்டு வெற்றியோடு தளம் மீண்டவர்களும் உண்டு.
  • இவர்கள் நாற்பிரிவாய் இருந்தனர்:
    • தரைக்கரும்புலிகள் - Land Black Tigers
    • கடற்கரும்புலிகள் - Sea Black Tigers
      • நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - Above water attacking Black Tigers
      • நீரடி நீச்சல் கரும்புலிகள் - Underwater Black Tigers
    • வான்கரும்புலிகள் - Air Black Tigers
    • மறைமுகக் கரும்புலிகள் - Undercover Black Tigers
  • (தொடங்கப்பட்டது: முதற் சமர் 1987 - கப்டன் மில்லாரால் வரலாறானது)

2) அதிரடிப்படை - சிறுத்தைப்படை - Leopard Force

  • இவர்கள்தான் தமிழீழ அதிரடிப்படையினர்
  • இவர்கள் பெரும்பாலும் சாஜர்(<Charger) எ வெடியுடை(Explosive Vest) அணிந்தே களம் புகுவர். கையறு நிலையில் மட்டுமே சாஜரை இழுப்பர்.
  • இவர்களில் மூன்று பிரிவு இருந்தது:-
    • தரைச்சிறுத்தைகள் - Land Leopards
    • கடற்சிறுத்தைகள் - Sea Leopards
    • காட்டுச் சிறுத்தைகள் - Literal translation: Forest Leopards
  • (தொடங்கப்பட்டது: 1992 நடுப்பகுதி)

 


சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்:

 

அடுத்து வரிச்சீருடை பற்றி நான் எழுதியதனை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

  • விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:-

விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது...

  1. நீல வரி
  2. பச்சை வரி
  3. கறுப்பு வரி

அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர்.

வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள்.

இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை.

குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும்.

நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும்.

பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர்.

→ குறிப்பு: நான்காம் ஈழப்போர் வரை சமர்க்களங்களில் இச்சீருடையினை பலர் அணிவர்; சிலர் அணியார். அணியாதோர் குடிமை(Civil) உடைகளை அணிவர். ஆனால் நான்காம் ஈழப்போரில் 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இச்சீருடை அணிவதை புலிகளில் பெருமளவானோர் தவிர்த்தே வந்தனர் .

 

 

--------------------

 

முதலாவதாக கரும்புலிகள் பற்றிக் காண்போம்.

 

  • 1991 -1994 ஆம் ஆண்டு வரையிலான கரும்புலிகளின் சீருடை

கரும்புலிகள் அனைவரும் முழுக் கறுப்பு உடையினை அணிந்திருந்தார்கள். ஆனால் இவர்களின் தரைக்கரும்புலிகளின் தொப்பி மட்டும் இக்கால கட்டத்தில் சுற்றுக்காவல் தொப்பியாக இருந்தது.. அதுவும் 1994 இற்குப் பின் வரைகவியாக மாறிவிட்டிருந்தது. ஆனால் 1993 இல் இருந்தே கடற்கரும்புலிகளின் தொப்பி வரைகவியாக(barret) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

main-qimg-88a4cb2ebc24005a59b6a88c2f4ebe48.jpg

'பலாலியைத் தாக்கச் சென்ற தரைக்கரும்புலிகள் . | படிமப்புரவு: Aruchuna.com'

  • 1993- 2000 ஆம் ஆண்டு வரையிலான கரும்புலிகளின் சீருடை

கரும்புலிகள் அனைவரும் முழுக் கறுப்பு உடையினை அணிந்திருந்தார்கள். இப்போது வரைகவிக்கு மாறிவிட்டிருந்தனர்

main-qimg-d437c766b47038acd59758e91d2fc130.png

'கடற்கரும்புலி & தரைக்கரும்புலி '

  • 2000 ஆம் ஆண்டு கரும்புலிகளின் சீருடை

இக்கால கட்டத்தில் இவர்களும் வரிச்சீருடைக்கு மாறிவிட்டனர். ஆனால் இவர்களின் தொப்பி மட்டும் வரைகவியாகவே(barret) இருந்தது.

main-qimg-58813f1c13cc14e6f9229052ec89e714.jpg

'ஓ.ஆ.- 3 இன் போது சிங்கள தெறோச்சிப்(Howitzer) படைத்தளத்தினுள் புகுந்த தரைக்கரும்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு'

main-qimg-28c66ce0266912ff6e9b97dccdc8af51.png

'ஓ.ஆ.- 3 இன் போது சிங்கள தெறோச்சிப்(Howitzer) படைத்தளத்தினுள் புகுந்த தரைக்கரும்புலிகள் | படம் பற்றை மறைவில் இருந்து எடுக்கப்பட்டதாகும் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு'

  • 2001–2009(18–05–2009) ஆம் ஆண்டு வரையிலான கரும்புலிகளின் சீருடை

இக்கால கட்டத்தில் இவர்கள் கறுப்பு நிற வரிப்புலியினை அணிந்திருந்தனர்.

main-qimg-dd3201e3f51151eb4eada8054990cd80.jpg

'பெண் கடற்கரும்புலிகள் 2004 இல் படைத்தகையின்(parade) போது | படிமப்புரவு: Linkdin.com'

ஆனால் இவர்கள் அணிந்திருந்த இடைவாரின் நிறமானது பச்சை அ கறுப்பிற்குப் பகரமாக வரி உருமறைப்புக் கொண்டிருந்தது.

main-qimg-43743e4192551d9bd39e55c95c49ecf9.png

நீர்மேற் செல்லும் கடற்கரும்புலிகளில் சிலர் கால் இல்லாதவர்களும் இருந்தனர் (படகோட்ட கால் பயன் அவ்வளவு தேவை இல்லை) . இவர்களின் இடுப்பிற்கு கீழ் அணியும் உடையாக

→ஆண்கள் - கறுப்புச் சறம்

→பெண்கள் - கறுப்பு பாவாடை

main-qimg-12dd77987c5b0c3b5cd9259b31eb9bd9.png

'கறுப்பு பாவடை அணிந்துள்ள கால் இல்லா கடற்கரும்புலி'

  • நீரடி நீச்சல் கரும்புலிகள்:-

இவர்கள் பொதுவாகவே கடற்கரும்புலிகள் பிரிவினுள் அடங்கிவிடுவர். இவர்களும் அவர்களைப் போலவே மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் அந்தந்த சீருடைகளை அணிந்திருந்தனர். ஆனால் 2001 ஆம் ஆண்டு வரை தாக்குதலிற்குச் செல்லும் போது சாதாரண மக்கள் உடைகளையே அணிந்து கரும்புலியாகினர். 2000 ஆம் ஆண்டிற்குப் பின் நீரடித் தாக்குதலிற்குச் செல்லும் போது மூன்று விதமான நீர்முழுகி உடைகளை அணிந்திருந்தனர். அவை,

ஒன்று கறுப்பிலும்

main-qimg-443c3956c6e98a25c19b86b7d54568bf.png

'படிமப்புரவு: திரைப்பிடிப்பு'

இன்னொன்று செம்மஞ்சள் & கறுப்பு கலந்த நிறத்திலும்,

main-qimg-1bd5712b27f0a91c6983e60add3d059b.png

'மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(Floating diver aimed Torpedo)யினைச் செலுத்தும் நீரடி நீச்சல் கரும்புலி |படிமப்புரவு: திரைப்பிடிப்பு''

மற்றொன்று கடுநீலம் மற்றும் பாசிப்பச்சை கலந்த நிறத்திலும் இருந்தன.

main-qimg-01016ef8272470193842b9dbb424cc27.png

'படிமப்புரவு: திரைப்பிடிப்பு'

  • மறைமுகக் கரும்புலிகள்

இவர்களும் ஏனைய கரும்புலிகளைப் போன்றே சீருடை அணிவர். ஆனால் அவர்களில் இருந்து ஓரிடத்தில் மட்டும் வேறுபடுவர். அதான் தலை மறைப்புத் துணி. இதை இவர்கள் எப்பொழுதும் அணிந்திருப்பர். ஏனையோர் எப்போதாவது தான் அணிந்திருப்பர்.

main-qimg-7df5912f6b6df884616ac8f74aabac9d.png

'தலை மறைப்புத் துணி அணிந்து பயிற்சி எடுக்கும் மறைமுகக் கரும்புலிகள் | 'படிமப்புரவு: திரைப்பிடிப்பு''

main-qimg-adfbb7f0817747acbaf61ea035bfd46e.png

'தலை மறைப்புத் துணி அணியாமல் பொதுவெளியில் அணிநடை போடும் கடற்கரும்புலிகள் | 'படிமப்புரவு: திரைப்பிடிப்பு''

main-qimg-6a3bfec898e2bb1f025027c687ebb2bb.jpg

'தலை மறைப்புத் துணி அணிந்து பொதுவெளியில் அணிநடை போடும் கடற்கரும்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு''

main-qimg-e2b70b7e17d45916e1112275c1c7ed6c.jpg

'தலை மறைப்புத் துணி அணிந்து பொதுவெளியில் அணிநடை போடும் தரைக்கரும்புலிகள் |படிமப்புரவு: Google''

main-qimg-60d223d8c0ffe650f48877d43a63ff7c.jpg

'தலை மறைப்புத் துணி அணியாமல் பொதுவெளியில்(மைதானம்) பொங்கும் தரைக்கரும்புலிகள் |படிமப்புரவு: Fb''

 

  • மிகவும் வேறான பாங்கத்தைக் கொண்ட கரும்புலிகளால் அணியப்பட்ட சீருடை

இவற்றை தரைக்கரும்புலிகள் மட்டுமே அணிந்தனர். அதுவும் ஜயசிக்குறுய் 'காலத்தில்' மட்டுமே.(அப்போதைய படங்கள் மட்டுமே ஏராளமாக இருக்கிறது. அதற்கு முன்-பின் அணிந்த படம் ஏதும் இல்லை). ஏன், எதற்காக இவை அணியப்பட்டன என்ற தகவலேதும் என்னிடம் இல்லை.

main-qimg-4cbd01bc3a0a49e3d19b35bbe90fa7bf.png

'ஜயசிக்குறுயி-இல் தாக்குதல் திட்டம் தீட்டும் கரும்புலிகள் | படிமப்புரவு: Google ''

மேற்படத்தில் உள்ள வரிப்புலி தவிர்ந்த, அந்த ஏனைய இரு நிறத்தில் உள்ள ஒரே தோற்றத்தைக் கொண்ட சீருடையினை நோக்கவும். இவற்றில் ஒன்று வெளுறிய பச்சையிலும் மற்றொன்று மண்ணிறம் மற்றும் கபில நிறம் ஆகிய நிறங்களிலும் உள்ளது.

main-qimg-863b5990d00a72dec8734f406f4be278.png

'கப்டன் நளாயினி பயிற்சியின் போது | அதே மண்ணிறத்திலான சீருடை அணிந்துள்ளார். தரந்தாழ்ந்த படவத்தால்(camera) நீல நிறத்தில் தெரிகிறது. வேறொன்றுமில்லை |படிமப்புரவு: திரைப்பிடிப்பு''

main-qimg-f2af2b747faf7bbdd2e596bc25c6de96.png

'1997-06-10 | தாண்டிக்குள முகாம் மீதான ஊடுருவித் தாக்குதலிற்குச் சென்றோர்.  | நாளிதல் ஒன்றில் இருந்தே எடுத்தேன். அதனால்தான் pink நிறத்தில் தெரிகிறது. வேறொன்றுமில்லை'

இந்த சீருடை அணிவோரில் பெரும்பாலும் சிலர் இதே உருமறைப்பிலான தாக்குதல் கஞ்சுகத்தினையும்(Assualt vest) அணிந்து செல்வர்;

main-qimg-7e4faeac9cb1eadf4a8597edea577bef.png

'தரைக்கரும்புலிகளான மேஜர் நிலவன் (LAWவிற்கான கஞ்சுகத்துடன்), கப்டன் உமையாள்(தாக்குதல் கஞ்சுகத்துடன்), மேஜர் சசி (நுகர்பயன்(utility) பை & தாக்குதல் கஞ்சுகத்துடன் ), கப்டன் நளாயினி (RPk தாக்குதல் கஞ்சுகத்துடன்) | படிமப்புரவு: திரைப்பிடிப்பு''

இவ்வுருமறைப்புடன் கூடிய கஞ்சுகம் உபிகை(RPG) க்கும் உண்டு

 


இரண்டாவது & கடைசியாக நாம் அதிரடிப்படையான சிறுத்தைப்படை  பற்றி பார்ப்போம். இவர்கள் 2 விதமான சீருடை அணிந்திருந்தனர்.

  • 1992 நடுப்பகுதி –2009 வரையிலான சிறுத்தைப்படை சீருடை

இவர்களின் சீருடையில்ல் வரிக்கோட்டு மாற்றாக சிறுத்தையின் உடலில் இருக்கும் அந்த சிறு வளையங்கள் இருக்கும். இந்த வளையங்கள் கடு நிறத்தில் இருந்தன. சீருடை தோற்றமானது எப்படி இருந்தது என்றால்,

  • நெஞ்சின் சமச்சீர் கோட்டின் இரு பக்கத்திலும் அப்படியே பின்னும்(முதுகிலும்) முன்னுமாக தோளில் இருந்து உள்ளங்கால் வரை நெடுகோடு போல இருந்தது. இதேபோல கையிலும் இருந்தது(கடுநிறம்)-
    • தரைச் சிறுத்தை - நிறம் பிடிக்க முடியாதலால் கீழ்ப்படத்தில் கண்டுகொள்க.
    • காட்டுச் சிறுத்தை - நிறம் பிடிக்க முடியாதலால் கீழ்ப்படத்தில் கண்டுகொள்க.
    • கடற்சிறுத்தை - RGB (26,33,48)
  • ஏனைய இடங்களில் (மெல்லிய நிறம்)
    • தரைச் சிறுத்தை - நிறம் பிடிக்க முடியாதலால் கீழ்ப்படத்தில் கண்டுகொள்க.
    • காட்டுச் சிறுத்தை - நிறம் பிடிக்க முடியாதலால் கீழ்ப்படத்தில் கண்டுகொள்க.
    • கடற்சிறுத்தை - RGB (66,85,97)

இடுப்பில் மங்கல் வெள்ளை நிற்த்திலான இடைவாரினை எல்லோரும் பொதுவாக அணிந்திருந்தனர். தலையில் எல்லோரும் ஒருவித நீல நிறத்திலான வரைகவி(barret) அணிந்திருந்தனர்.

→ தரைச்சிறுத்தைகள்:-

main-qimg-379b2897e71db12c12b9bc5ad626a926.png

'தரைச் சிறுத்தைகள் | இவ்விரு சிறுத்தைப்படையினரின் மேற்சட்டையின் கையில் உள்ள சீருடை நிறத்தினையும் பாங்கத்தினையும் நோக்குக'

→ காட்டுச் சிறுத்தைகள்:-

main-qimg-9e65d27d4be6adca7c22a897588c7486.png

'காட்டுச்சிறுத்தையினர் | படிமப்புரவு: LTTE'

main-qimg-6aa89ce228a27ad7b8ae3cebb0720758.jpg

'மேற்கண்ட படத்தில் இருநிறத்திலான சீருடையோடு நிற்பவர்களே தரைச் சிறுத்தைகள் & காட்டுச் சிறுத்தைகள் ஆவர் | பேரரையர்(கேணல்) ராஜு அவர்களின் சந்தனப் பேழையினை தூக்கிச் செல்லும் சிறுத்தைச் சீருடை அணிந்தவர் காட்டுச் சிறுத்தைப்படையினைச் சேர்ந்தவர் ஆவர். இடது மூலையில் நிற்பவரும் ஏனையோரும் தரைச் சிறுத்தைப்படையினர் ஆவர்.' | படிமப்புரவு: புலிகள்'

main-qimg-372e3feee9dee2429479f5a82d68c7d3.png

'ஓ.ஆ.-3 இல் எங்கோ ஒரு சமர்க்களம் நோக்கிச் செல்லும் சிறுத்தைப்படை | திரைப்பிடிப்பு மங்கலாக உள்ளதால் எப்பிரிவென அடையாளங் காண முடியவில்லை| படிமப்புரவு: திரைப்பிடிப்பு

main-qimg-043598f72b60c7cd7425c6388d2d356a.png

'1998 இல் களத்தில் அல்விசு சராசென் ஒன்றினை அழித்த பூரிப்பில் தரைச் சிறுத்தைப்படைஞர் ஒருவன் | இவர் சீருடை அணிந்திருப்பதை நோக்குக | படிமப்புரவு: திரைப்பிடிப்பு'

  • கடற்சிறுத்தைகள்:

main-qimg-8c0e5386b7e8a3b4a3d3ef2813f8a42b.png

'கேணல் ராயூ அவர்களின் வீரவணக்க நிகழ்வின் போது அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட படையான சிறுத்தைப்படையின் கடற்சிறுத்தை வீரிகள் பிரிவைத் தாங்காமல் அழுகின்றனர் | படிமப்புரவு: aruchuna'

main-qimg-ab8cae8931f76d16681670e35fcdacba.jpg

'கேணல் ராயூ அவர்களின் வீரவணக்க நிகழ்வின் போது அவரது சந்தனப்பேழையைச் சுற்றி நிற்கும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட படையான சிறுத்தைப்படையின் கடற்சிறுத்தை வீரர்கள் | படிமப்புரவு: aruchuna'

எல்லோருடைய சீருடையின் பின்கழுத்தின் தோள்மூட்டுப் பகுதி இப்படித்தான் இருக்கும்:

main-qimg-ac58fb4ec92c25b79bb61319eb24c6f9.jpg

  • கடற்சிறுத்தைகள் தாக்குதல் நடத்தும் போது

கடற்சிறுத்தைகள் தாக்குதல் நடத்தும் போது இவ்வாறான உடை அணிவர். இதில் சீருடை ஏதும் அணியார். மாற்றாக நீல நிறத்திலான மேற்சட்டை & காற்சட்டையும் கைமேசு(gloves), முக்காடு(hood) ஆகியவை அணிந்து நீரிற் சென்று தாக்குவர்.

main-qimg-0eb55dfe92e3b5ce6ab7263d0dd4eb6a.png

'1998 இல் கிளாலியில் எதிரியின் படகினைத் தாக்கி இழுத்துவரும் கடற்சமரின் போது கடற்சிறுத்தைகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு'

 


  • அணிநடையின்போது - During Marchpast

இவர்கள் அணிநடையின்போது தங்களின் இடுப்புப் பகுதியின் இடது பக்க பளுவில் வீரத்தின் அடையாளமாக ஒரு கத்தியினை தொங்கவிட்டிருப்பர். அத்தோடு தோள்மணையும்(Shoulder boards) அணிநதிருப்பர்.

main-qimg-c69bbe02b86480eb7330c3b5d7587354.png

 


இவையே ஈழத்தமிழரின் கடற்படை மற்றும் அதிரடிப்படைகளால் அணியப்பட்ட சீருடைகள் ஆகும்.


 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • கிடைத்த படங்களை வைத்தே எழுதினேன்

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

  • நன்னிச் சோழன் changed the title to கரும்புலிகள் & சிறுத்தைப்படையின் சீருடைகள் - ஆவணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.