Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

main-qimg-b5d3acf953ce3a0181e2392740ad11f6.jpg

 

புதுமைக்கால ஆய்தங்கள் தொடர்பான கலைச்சொற்கள்:

  • முக்கிய விடையம்: துப்பாக்கி, பீரங்கி, தோட்டா ஆகிய மூன்றும் சொற்களும் பிறமொழிகளில் இருந்து தமிழிற்கு வந்து சேர்ந்த சொற்கள்... இவற்றினை தொலைவிற்கு வீசிவிட்டு புத்தம் புதிய தமிழ்ச் சொற்களை கையாள்வோமாக!

துப்பாக்கி/ துவக்கு → இச் சொல்லானது "துபக்(tüfek)" என்னும் துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தேறிய சொல்லாகும்...

    • -நிகரான தமிழ்ச் சொற்கள் = சுடுகலன்(gun ), துமுக்கி (rifle), தெறாடி (musket),

பீரங்கி → இச் சொல்லானது ஒரு போர்த்துக்கேய மொழிச்சொல். அப்படியே கடன் வாங்கி தமிழில் வழங்குகிறோம்..

    • -நிகரான தமிழ்ச் சொற்கள் = கணையெக்கி (Mortar), தகரி/தகரூர்தி (Tank), தெறோச்சி (Artillery), தெறுவேயம் (Cannon)

தோட்டா → இது உருதுச் சொல்லான "தோட்ட" இல் இருந்து தமிழுக்கு துள்ளிக்குதித்து ஓடிவந்த சொல்லாகும்...

    • -நிகரான தமிழ்ச் சொற்கள் = சன்னம் (bullet), எறிகணை (shell), குண்டு (cannonball, minie ball, musket ball), எறியம் (projectile).

 


இதையும் வாசித்துப் பாருங்கள்….

ஆய்தவியலில் வெடிபொதியின் (cartridge) உறுப்புகளுக்கான தமிழ்ச்சொற்கள் என்னென்ன? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்


 

  • எஃகம் - எஃகால் ஆனதே எஃகம் - arms
  • ஆய்தம்/படை - weapons
    • ஆய்தம் என்பது தமிழே!. இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது

ஆ → ஆய் → ஆய்தம் = weapon

செ.சொ.பே.மு அகராதியிலிருந்து....

'ஆய்தல் = நுணுகுதல், சிறுத்தல், கூர்மையாதல்

ஆய்தம் = நுணுகக் கூராக்கப்பட்ட கத்தி அல்லது படைக்கலம். வட மொழியிலுள்ள ஆயுதம் என்னும் சொல்

→ (a-yudh);

போருக்கு உதவும் படைக்கலம் என்னும் பொருளில் ஆளப்படுகிறது. எனினும் அது கூர்மையின் வழிப் பிறந்த தமிழ் 'ஆய்தம்' பெற்ற திரிவடிவே

→ (ஆய்தம்→ ஆயுதம்);

ஆகும். போரிடத் துணைபுரியும் குதிரை, யானை முதலிய உயிரிகளும் தேர், மெய்ம்மறை (கவசம்); போன்ற அஃறிணைப் பொருள்களும் ஆயுதம் (a-yudh) என வழங்கப் பெறாமையின், போருக்குத் துணைக் கருவி எனப் பொருள்படும் வடமொழி ஆயுதம் வடமொழிக்கு மூலச் சொல்லன்று என்பதும் தெளிவாகிறது. அதுவுமின்றி அசுத்திரம் (. கைவிடுபடை), சசுத்திரம் (த.கைவிடாப்படை); என்னும் இரு வகைக்கும் ஆயுதம் பொதுப்பெயராக இருத்தலும் காண்க.'

  • படைக்கலம்/ ஆய்த தளவாடம்- Munition
  • கணைகள் - Ammunition
  • பாரசவம் - heavy weapons (இதுவொரு பண்டைய தமிழ்ச்சொல் ஆகும்)
    • பாரம் - heavy;
    • சவம் - உயிரற்ற உடல், விரைவு
      • இவற்றை இங்கு நாம் ஒருங்கிணைத்து தற்காலத்தில் வழங்கப்பட்டு வரும் heavy weapons-க்கான ஒற்றைத் தமிழ்ச்சொல்லாக வழங்கலாம். அதாவது 'பாரமான விரைந்து உயிரற்ற உடலாக்கும் ஆய்தம்' என்னும் பொருளில் வழங்கலாம். (பண்டைய காலத்தில் இதன் பொருள் ஆய்தம் என்பது நினைவு கூரத்தக்கது)
  • கரிமருந்து, வெடிமருந்து - Gunpowder
  • படைமூர்க்கன், படைக்கரசன், படையிராசன், படையுப்பு, படையோன் - Saltpetre(Potassium nitrate)
  • கோது - case.

→ கொழுது--> கோது

    • கோது- வெளிச்சிதறுதல், தோண்டுதல், வெற்றுக்கூடு, சக்ககை, சிறிய கூடு, பயனின்மை.

அதாவது சுடுகலன் சுடும் போது அதுல் இருந்து வெளிச்சிதறும் இவ் வெற்றுக்கூடானது மீண்டும் அதில் சன்னம் ஏற்றபடும் வரை அதுவொரு பயனில்லாத சக்கையே. மேலும் இச்சொல்லானது 1990 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்தில் வழக்கில் உள்ளது.

main-qimg-8af36e6dbfc845c84c7f32c4a0485f95-mzj.jpg

  • வெடிபொதி - cartridge

main-qimg-509aa1275ef0f42145bce93989f4bd90

  • வெற்று - blank [வெற்று என்பது வேட்டெஃகத்தால் சுடும் ஒருவகைக் கோது ஆகும். இதற்குள் பிலிறுந்தி(propellant) உண்டு, ஆனால் எறியம் இல்லை (எ.கா. சன்னம்). அதற்குப் பகரமாக காகிதம் அல்லது plastic wadding பயன்படுத்தப்பட்டு உமிழுந்தி உறைக்குள் மூடப்படுகிறது.]

main-qimg-52fbc1714613f2967243083c89a455b6-mzj

  • Bullet - சன்னம்
  • shot - குளிகைகள்
  • shotgun shell, shot shell - குளிகைச் சுடுகலன் பொதி, குளிகைப்பொதி

main-qimg-78ddaea5c8960e5fdbc4676daf8f6411-mzj

  • musket ball - தெறாடிக் குண்டு

main-qimg-1414caaa9f46c90aa4d8920b450d5b65-mzj

  • Minie ball - மினியே குண்டு

main-qimg-6d2f48d5682371e586a42c8eec0667fb-mzj

  • Buck & ball-
    • buck- கலை
    • ball - குண்டு

main-qimg-59853f75e0b6e1d6e18c85ad9007489b

  • துமுக்கிகளில் பயன்படுத்தப்படும் கத்தியின் பெயர் - சுரிகை (bayonet)

main-qimg-fdcd3d501cb078c6fbcaa3e722ee3f21-mzj

  • ஆய்தங்களைக் காச்சி நனைத்தல்- தோய்த்தல்
  • துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)
  • பணைத்தல் - AIM MISS
  • Target or aim of a gun - சரவியம்
  • சன்னம் விழும் எல்லை - ஏப்பாடு
  • ஆய்தப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை
    • சரம்பு - ஆயுதப்பயிற்சி
    • பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.
    • சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)
  • ஆய்தங்கள் வைத்திருக்குமிடம் - ஆய்தசாலை, படைவீடு, ஆய்தக்களஞ்சியம், தில்லெரி.
  • ஆய்தத்தின் நுனி - முனை (tip of a weapon)
  • கழி - ஆய்தப்பிடி
  • தோற்றானம் - வெடிமருந்துப் பை
  • அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.

main-qimg-81afd410261c10388f10f57e04fe40fe-mzj

  • ஆய்தவுறை - தடறு/ படையுறை/ புட்டில்/ துதி
  • Holster [கோல்சர்(ஈழ.வழ)] - தடறு
  • Leg holster - காற்றடறு
  • Assault vest - தாக்குதல் கஞ்சுகம் [கோல்சர்<Holster (ஈழ.வழ)]
  • Tactical vest - தந்திரமான கஞ்சுகம் (இதை அணிவதால் தாக்குதல் கஞ்சுகத்தை விட நல்ல உருமறைப்பு கிடைக்கும்)
  • Bulletproof vest - சன்னத்தகைக் கஞ்சுகம்
  • Plate carrier - தட்டுக் காவி
  • pouch - சோளியல்

 


  • GUN = சுடுகலன்
  1. சுடுகலன்

இச்சொல்லானது புதுமைக்காலத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையான ஆய்தங்களுக்கும் பொதுச்சொல்லாகும். ஏனெனில்,

    • சுடு + கலன்

சுடு = சுடும்

→ கலன் = உட்குழிந்த ஏனம்

அதாவது சுடப் பயன்படும் ஓர் கலன் என்னும் பொருளில் மேற்கண்ட சொல்லானது உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் இச்சொல்லானது வேட்டுகளை வெடித்துச் செலுத்தும் தற்காலத்தில் உள்ள அனைத்து வகை ஆய்தங்களுக்கும் பொதுச்சொல்லான GUN என்னும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக வழங்கப்படுகிறது. 'Rifle' என்னும் சொல்லுக்கு இணையாக 'துமுக்கி' என்னும் சொல், தமிழில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  1. இயந்திரச் சுடுகலன் - machine gun
  2. ஊசிச்சுடுகலன்/ சிரலகம் - Needlegun/Fletcher
    1. சிரலினைக் கொண்டிருப்பது சிரலகம் ஆகும்.
  3. துணை இயந்திரச் சுடுகலன் - sub-machine gun
  4. இலகு இயந்திரச் சுடுகலன் - light machine gun
  5. தற்காப்புச் சுடுகலன் - self-defence gun
  6. நீள் சுடுகலன் - long gun
  7. காட்லிங் சுடுகலன் - Gatling gun
  8. பல்குழல் வேட்டெஃகம் - multiple barrel firearm
  9. தொடுப்புச் சுடுகலன் - minigun …. (தொடுப்பு - எய்கை , தொடர்ந்திருக்கை, சங்கிலி, செய்கைத்தொடர்ச்சி ஆகிய பொருட்களில் வழங்குகிறது.. அதாவது சங்கிலி போன்று தொடர்ந்து சுடும் சுடுகலன் என்னும் பொருளில் இது வழங்குகிறது )
  10. சரமாரி சுடுகலன் - organ gun (ribauldequin)/ volley gun
  11. பாக்கிள் சுடுகலன் -Puckle gun
  12. போழ் சுடுகலன் - Punt gun
  13. மையச் சுடுகலன் - Pivot gun
  14. ஏழ்குழல் சுடுகலன் - nock gun
  15. மலை சுடுகலன் -mountain gun
  16. துமுக்கி முகவாய் தாணித்தல் மலை சுடுகலன் - Rifle Muzzle Loading mountain gun
  17. கல் சுடுகலன் - Swivel gun
  18. மதில் சுடுகலன் - wall gun
  19. கன இயந்திரச் சுடுகலன் - heavy machine gun
  20. பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் - general purpose machine gun
  21. சதள தானியங்கி ஆய்தம்- squad automatic weapon
  22. பகுதி தானியங்கி ஆய்தம்- section automatic weapon
  23. இலகு ஆதரவு ஆய்தம்- light support weapon
  24. காலாட்படை தானியங்கிச் சுடுகலன்- infantry automatic gun
  25. நடுத்தர இயந்திரச் சுடுகலன்- medium machine gun
  26. சங்கிலிச் சுடுகலன்- Chain gun
  27. காலாட்படை ஆதரவுச் சுடுகலன்- infantry support gun
  28. தகரி சுடுகலன்- tank gun
  29. தகரி எதிர்ப்புச் ஆய்தம் - anti tank weapon
  30. பின்னுதைப்பற்ற துமுக்கி / பின்னுதைப்பற்ற செலுத்தி/ பின்னுதைப்பற்ற சுடுகலன் - recoilless rifle/ recoilless launcher / recoilless gun.

 


கரச்சுடுகலன் - handgun

    • கரம் + சுடுகலன் → கரச்சுடுகலன்

.

  • Derringer - தேரிஞ்சர்

main-qimg-7342ac5a202997836c796a83abfd74cc-mzj

  • கைத்துப்பு - Pistol

Gun என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் என்ன? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

main-qimg-a8dee932ed887404ea943ec3e3a10ae9-mzj

  1. இயந்திரக் கைத்துப்பு- machine pistol
  2. பணிக் கைத்துப்பு- service pistol

 


  • தொடித்தெறி- revolver / wheel gun

main-qimg-86224656627059a4a06515a8fa204f9d-mzj

→ இச்சொல்லினை உருவாக்கித் தந்த திரு.திருத்தம் பொன் சரவணன் (Thiruththam Pon Saravanan) அவர்கட்கு மிக்க நன்றி!

தொடி என்பது வளையத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இதிலிருந்து சுழல்தல் என்ற வினையைக் குறிக்க தொடித்தல் என்ற சொல்லை உண்டாக்கலாம். இலக்கணத்திற்கு உட்பட்ட விதியே.. மேலும் தொடி என்னும் வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த சொற்கள் அவ்வளவாக தமிழில் இல்லை.

தெறுதல் என்றால் சுடுதல் என்ற பொருளுண்டு. இந்த இரண்டையும் இணைத்து ரிவால்வருக்குக் கலைச்சொல் படைக்கலாம்.

  • தொடி (=சுழல்) + தெறு (=சுடு) + (விகுதி)

தொடித்தெறி = சுழன்று சுடும் கரச்சுடுகலன்.

உலகில் உள்ள பல்வேறு விதமான தொடித்தெறிகள் (Revolver) யாவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

 


  • தெறாடி - musket

main-qimg-65b15ca799d9e2c2d5a35828b7a09167-mzj

இச்சொல்லினை உருவாக்கித் தந்த திரு.திருத்தம் பொன் சரவணன் (Thiruththam Pon Saravanan) அவர்கட்கு மிக்க நன்றி!

கொழுவி: Musket என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? கேள்விக்கு திருத்தம் பொன் சரவணன் (Thiruththam Pon Saravanan)-இன் பதில்

  • தெறு + ஆடு + இ
    • தெறு - சுடு
    • ஆடு- கொல் (இச்சொல்லுக்கு மட்டும் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கிறது)
    • இ - விகுதி

சுட்டுக் கொல்லப் பயன்படும் ஓர் கருவி என்னும் பொருளில் இச்சொல் வருவதால் அதனை இங்கு பயன்படுத்தியிருக்கிறேன்.

→→அள்=lock

  1. தெறாடி - musket
  2. குறுதெறாடி - musketoon
  3. திரியள் தெறாடி - matchlock musket
  4. சொடுக்கு திரியள்தெறாடி - Snap matchlock musket
  5. அனற்கலள் தெறாடி - flintlock musket
  6. சொடுக்கள் தெறாடி - snaplock musket
  7. நேமியள் தெறாடி - wheellock musket
  8. மூடியள் தெறாடி - caplock musket
  9. சொடுக்குஞ்சேவல் தெறாடி - snaphaunce musket
  10. குண்டுக்குழாய்/ குண்டுக்குழல் (பழந்தமிழ்ச் சொல்) - blunderbuss
  11. கொக்கிக்குழல் - arquebus - ( hook gun)

 


  • Combination gun - இணைந்த சுடுகலன்

main-qimg-4f2946201e0ba0f2e39499d343fdee76-mzj

'M6'


  • துமுக்கி = rifle { துமுக்கு --> துமுக்கி... (இது கொஞ்சம் பழைய சொல்லாகும். துமுக்கி என்னும் சொல்லானது ஏற்கனவே தமிழில் மரையிடப்பட்ட சுடுகலன்களான ரைபிள்களை(rifle) குறிக்க வழங்கப்படும் சொல்லாகும்) }
    • குறுதுமுக்கி - carbine
  1. தாக்குதல் துமுக்கி- assault rifle
  2. சமர்த் துமுக்கி -battle rifle
  3. பணித் துமுக்கி - service rifle
  4. குறிசூட்டு துமுக்கி - sniper rifle
  5. நெம்பியக்க துமுக்கி - lever-action rifle
  6. மரையாணி இயக்க துமுக்கி - bolt-action rifle
  7. தானியங்கி துமுக்கி - automatic rifle
  8. தொடித் துமுக்கி / கோல்ட் துமுக்கி- revolving rifle / colt rifle
  9. பொருண்ம எதிர்ப்புத் துமுக்கி - anti material rifle
  10. நீள் துமுக்கி - long rifle
  11. சாரணர் துமுக்கி - scout rifle
  12. எருமைத் துமுக்கி - buffalo rifle
  13. குறுங் குழல் துமுக்கி - short barrel rifle

 


  1. Bullpup - சேக்குட்டி

 

  • சிதறு சுடுகலன் / வேட்டைச் சுடுகலன்) / குளிகைச் சுடுகலன் - scatter gun/ fowling piece/ shotgun

main-qimg-8f76b085d0e6f935600ba57114dfadb3-mzj

படத்திற்கேற்றாற் போல்,

  1. ஈர்குழல் குளிகைச் சுடுகலன் / முறிப்பியக்க குளிகைச் சுடுகலன்- double barrel shotgun/ break action shotgun / coach gun
  2. நெம்பியக்க துமுக்கி - lever-action rifle
  3. எக்கியக்க குளிகைச் சுடுகலன் - pump-action shotgun [எக்கு (எக்குதல்) + இயக்கம்]
  4. தொடித்தெறி குளிகைச் சுடுகலன் -revolver action shotgun
  5. முழுத் தானியங்கி குளிகைச் சுடுகலன் - fully automatic shotgun

பகுதானியங்கி குளிகைச் சுடுகலன் - semi automatic shot gun

தானியங்கி குளிகைச் சுடுகலன் - automatic shotgun

அடிபாட்டு குளிகைச் சுடுகலன் - combat shotgun

கலவர குளிகைச் சுடுகலன் - riot shotgun

குறு குளிகைச் சுடுகலன்- sawed-off shotgun/ sawn-off shotgun/ short-barreled shotgun

 


  • அணு ஆய்தம்- nuclear weapon
  • மின்காந்த கவண்- Rail gun {மின்காந்த விசையினைப் பயன்படுத்தி எறியங்களை வீசுவதால் அதற்கு இப்பெயர் வந்தது.}

main-qimg-faf67cc2cd23f3fecbc513f50488e27e

  • ஈட்டிச் சுடுகலன்- Spear gun {ஈட்டியினை செலுத்தும் ஓர் வேட்டெஃகம் போன்றதொன்று}

main-qimg-0e1e4e45ed1a63972ff4f49a04ea6c62-mzj

  • எறியுளிச் சுடுகலன் - Harpoon gun {எறியுளியினை வெளியே செலுத்துவதால் இதற்கு எறியுளி வேட்டெஃகம் என்று பெயர் வந்தது.}

main-qimg-4a1d7b7128f01b189aeb96db10ff31f7-mzj

 


  • சீர்குழல் - smooth bore

main-qimg-d1315695f4c2c415a0a480afe6461646-mzj

  • மரைகுழல் - rifled bore

main-qimg-4d5b71f91792204998ab08a8bf38b521-mzj

  • உந்துகணை/தெறிப்பு - Rocket - உந்துகணை என்பது ஒரு மின்னியக்கியால் இயக்கப்படும் தானுந்தி கொண்ட, செலவுப்(travel) பாதையை மாற்றவியலாத ஓர் படைக்கலமாகும்.

main-qimg-8e24a5202175c310d1dfe73e45bc1288-mzj

 


  • ஏவுகணை - Missile - ஏவுகணை என்பது ஒரு மின்னியக்கியால் இயக்கப்படும் தானுந்தி கொண்ட, செலவுப் பாதையை மாற்றக்கூடிய ஓர் படைக்கலமாகும்.

 

  • Land mines - நிலக் கண்ணிவெடி
    • Anti - Tank mine (These can be also used against IFV too) - கவசவூர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி
    • Anti-personnel mine - ஆளெதிர்ப்புக் கண்ணிவெடி
      • மிதிவெடி - காலால் அழுத்தினால் வெடிப்பவையை விதப்பாக(specific) குறிக்க, 1990 முதல், இச்சொல் தமிழில் வழங்குகிறது.
  • Naval mines - கடற்கண்ணிவெடி
  • Claymore - அமுக்கவெடி (தமிழீ.வழ‌)
  • Bangalore torpedo/ Bangalore mines/ Banger - பெங்களூர் தடைவெடி/ சும்மா 'தடைவெடி' எனலாம்
  • Directional fragmentation mine - திசை துணுக்க கண்ணிவெடி
  • Electronic Tilt Mine - மின்சார துள்ளல் கண்ணிவெடி
  • Bounding fragmentation mines - பாயும் துணுக்க கண்ணிவெடி

 


  • ஏவரி - Torpedo

நன்றி: திரு திருத்தம் பொன் சரவணன்

ஏ   = ஏவு,கணை
 
  அரி = நீர், அழித்தல்,படைக்கலம்
 
  ஏ + அரி = ஏவரி --> நீரினில் ஏவப்படும் ஏவுகணை.

 


  • கையெறி குண்டு ... சுருக்கமாக கைக்குண்டு எனப்படும்- Hand grenade

 

  1. கைக்குண்டு செலுத்தி - grenade launcher
  2. நேரடி வலிமை ஆய்தம் - direct power weapon
  3. யானைத் துமுக்கி - elephant rifle
  4. காற்று சுடுகலன்- air gun
  5. கோட்டுச் சுடுகலன்- lyle gun
  6. சுடரொளி சுடுகலன்- flare gun
  7. இணைந்த சுடுகலன்- combination gun
  8. மென்சூட்டுச் சுடுகலன்-air soft gun
  9. பயிற்சித் துமுக்கி - drill purpose rifle
  10. நிறஞ்ஞுடுச் சுடுகலன்- paintball gun
  11. விளையாட்டுச் சுடுகலன்- toy gun
  12. நீர்ச் சுடுகலன்- water gun
  13. உந்துகணை பிலிற்றுந்திய கைக்குண்டு செலுத்தி - rocket propelled grenade launcher
  14. உந்துகணை செலுத்தி - rocket launcher
  15. ஏவுகணை செலுத்தி- missile launcher …. eg: Javelin

 


  • Fire arm - வேட்டெஃகம்

1)வேட்டெஃகம் = வேட்டு + எஃகம் (இச்சொல் 1960க்கு கிட்டவாக பாவாணரால் உருவாக்கப்படது )

  • வேட்டு - வெடி
  • எஃகம் - arms- பொதுவாக இதன் பொருள் ஆய்தமாகும். ஆனால் நன்கு விதப்பாய்ப் பார்த்தால் பண்டைய காலத்தில் கையில்கொண்டு போரிடும் ஆய்தங்களையே குறித்து வந்திருக்கிறது. ஆகையால் தற்காலத்தில் உள்ள கையில் ஏந்திச் சுடும் ஆய்தங்களிற்கான பொதுப்பெயராக இதனைக் கொள்ளாலாம்.

வேட்டினைச் செலுத்தும் படை என்னும் பொருளில் இது வருகிறது.

  1. மனித தாணித்தல் வேட்டெஃகம் - man loading firearm
  2. பகு தற்தாணித்தல் வேட்டெஃகம் - semi automatic loading firearm
  3. தற்தாணித்தல் வேட்டெஃகம் - automatic loading firearm
  4. தானியங்கிச் வேட்டெஃகம் - automatic firearm
  5. பகுதானிச் வேட்டெஃகம்- semi automatic firearm

 


  • Shell (Artillery and Mortar) - எறிகணை

main-qimg-d2c0afae49e1768f7509ccc25011ed9e-mzj

 


10356027_282779978590103_8437122755012765298_n.jpg

MORTAR என்னும் ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லினை உருவாக்கித் தந்த திரு திருத்தம் பொன் சரவணன் அவர்கட்கு மிக்க நன்றி

  • கணையெக்கியானது எறிகணைகளை தானாகவே எக்கி ஏவும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால் 'எறிகணை' என்னும் சொல்லில் உள்ள 'கணை' என்னும் விகுதியையும் 'எக்குதல்' என்னும் சொல்லின் எக்கு என்னும் வினைவடிவினை எடுத்து அதனை விகுதியோடு புணர்த்தி எக்கி என்றாக்கி இரு சொற்களும் புணர்க்கப்பட்டுள்ளது.

கணை+எக்கி = கணையெக்கி

எக்குதல் என்னும் சொல்லிற்கு,

-மேலே செல்ல வீசுதல்

-உள்ளிழுத்தல்

-தாக்கி யூடுருவுதல்

ஆகிய பொருட்கள் உள்ளன. இவை mortar செய்யும் அத்தினை காரியத்தினையும் குறிக்கிறது. அதாவது மோட்டார் என்னும் ஆய்தமானது எறியங்களை உயரத்திற்கு செலுத்துவதில்லை ; மாறாக மிக குறுகிய தொலைவிற்கு மட்டுமே செலுத்துகிறது ( கூடியது 4.5கி.மீ). மேலும் அது மனித வலு இல்லாமல் தானகவே எக்கி எறியத்தினை செலுத்துகிறது. அந்த எறிகணையானது எதனையும் தாக்கி ஊடறுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது. ஆகவே இச்சொல்லானது மோட்டார் என்னும் இங்கிலீசுச் சொல்லுக்கான சரியான தமிழாக்கமாகும்.

 


  • HOWITZERS- தெறோச்சி

1538669_482171065227495_557339820_n.jpg

தெறோச்சி:

  • தெறு+ ஓச்சு + இ
    • தெறு- சுடுதல், அழித்தல், கொல்லுதல், வருத்துதல், நெரித்தல், கொட்டுதல், துன்பம்
    • ஓச்சு- எறிதல், செலுத்துதல், பாச்சுதல், உயர்த்துதல் , தூண்டி விடுதல்
    • - விகுதி

அதாவது எறிகணையினை சுட்டு மிகக் கூடிய தொலைவிற்கும் அதிக அளவிலான உயரத்திற்கும் செலுத்துத்தும் ஓர் படைக்கலம் என்று பொருள் படும்.

 


  • கட்டுத் துவக்கு - ஈழத்தின் ஒரு பாரம்பரியச் சுடுகலன். இதனை சரியான எழுத்து வழக்கில் எழுதினால் கட்டுக்குழல் என்றே எழுத வேண்டும். ஆனால் பாரம்பரிய சொல் என்பதால் எப்படி வேண்டுமானாலும் வழங்கலாம். (துமுக்கி= மரை குழல் கொண்டது)

main-qimg-d2c70732d39e33c40c4f03303b3c77a9.jpg

main-qimg-8c6e92f7c67e22e3b1d51c3ffe7150df.png

 


  • இடியன் - ஈழத்தமிழர்களின் மற்றொரு பாரம்பரியத் துப்பு சுடுகலன்.

main-qimg-a4131d7d5582ddfa18575bc74575065c


  • தெறுவேயம் - CANNON

தெறுவேயம் - தெறு+வேய்+அம்

  • தெறு - சுடுகை
  • வேய் - உட்டுளை கொண்டது (குழாய்)
  • அம் - சொல்லாக்க ஈறு

தற்காலத்தில் வழங்கப்படும் இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருள் அயலான் என்பதே ஆகும் ; எறிகணையினைச் செலுத்தும் பொறி அல்ல. இப்பொறியானது வெளிநாட்டில் இருந்து வந்தது; எமது மண்ணிற்கு சொந்தமில்லாதது. ஆகையால் எம் மக்கள் அதற்கு வெள்ளையனின் அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் ஃவிரங்கி(firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர் . இச்சொலானது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதே பொருளிலே வழங்கப்படுகிறது.

main-qimg-ac72d1ecf57a7dde38ee419fc4dbf513-mzj

  • தானியங்கித் தெறுவேயம் (Autocannon)

main-qimg-e47d0aa342c1ebb71723a6f49141e01d-mzj

'ஒலிகன் தானியங்கித் தெறுவேயம்'

  • தெறுவேயக் குண்டு - cannonball
    • உருண்டைக் குண்டு - Round shot
    • சங்கிலிக் குண்டு -Chain shot
    • ?? - Case Shot
    • ?? - Canister shot
    • சிலந்திக்குண்டு - Spider shot
    • முந்திரிக்குண்டு - Grapeshot

main-qimg-7f34678cfdb0a8961bdf4dcd35b0acca-mzj

  • சலாகை - ramrod - பண்டைய காலங்களில் இருந்த பீரங்கிகளுக்கு வெடிமருந்தினை வாய்வழி தாணிக்க பயன்படும் ஓர் கோல்.

main-qimg-9c9195c9c154aeef1097e68283fa412a

  • தீக்கோல் - linstock

main-qimg-aee9b73eba48a81b0ec88836310b5e8e-mzj

 


  • கூடுதல் செய்திகள்

போர்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள் என்னென்ன? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

படைத்துறையில் (military) பயன்படுத்தும் கலைச்சொற்கள் யாவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்

 

உசாத்துணை:

படிமப்புரவு

 

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்r

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

துப்பாக்கி(படைக்கலம்) என்பது ஒரு தமிழ்ச் சொல்லா?

 

இதுபற்றி ஏற்கனவே பல அகராதிகளில் ஒரு வரி விளக்கமாக "தமிழில்லை" என்று உள்ளதால், பண்டைய அகராதிகள் மற்றும் ஆவணங்களின் துணைகொண்டு அதைக் கொஞ்சம் விரிவாக, அக்கூற்றினை ஆணித்தரமாக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் இது எங்கிருந்து வந்தது என்று பார்ப்போம். இந்த 'துப்பாக்கி' என்னுஞ் சொல்லானது துருக்கி மொழியில் சுடுகலத்தைக் குறித்த 'tüfek' (பலுக்கல்-துஃவேக்) என்னும் சொல்லில் இருந்து தமிழிற்கு வந்தேறியுள்ளது என்று செ.சொ.பே.மு. இல் உள்ளது.

→பலுக்கல் - உச்சரிப்பு

இத் 'துப்பாக்கி' என்னுஞ் சொல்லானது முதன் முதலில் எங்கு தமிழில் பதியப்பட்டுள்ளது என்றெல்லாம் என்னால் அறிய முடியவில்லை. ஆனால், 160 ஆண்டுகளிற்கு முன்னர் இச்சொல்லின் முந்தை வடிவம் பதியப்பட்ட இடம் ஒன்று எனக்கு தெரியும். அங்கிருந்தே எடுத்து வந்திருக்கிறேன், நான் சொல்லப்போகும் பற்றியத்தை. ஆம், அது ஒரு பண்டைய தமிழ்-ஆங்கில அகராதி ஆகும். அது 1839 ஆம் ஆண்டு எழுதப்பட்டது ஆகும். அதன் பெயர்:-

A Dictionary Of The Tamil And English Languages

main-qimg-351bd6c09b8ea45f6b3b93fa9a460b99

இதன் மூன்றாம் பகுதியின் 103 ஆவது பக்கத்தில் இவ்வாறாக உள்ளது:-

main-qimg-efadc6ae65730cd7e9700b822b609851

இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், துப்பாக்கி என்னும் தற்காலத்திய வேற்று மொழிச்சொல்லின் பண்டைய வடிவம் துபாக்கி ஆகும்; துப்பாக்கி இல்லை! நன்கு உன்னிப்பாக பார்க்கவும், துபாக்கி என்னுஞ் சொல்லில் இப்பன்னா(ப்) என்னும் ஒற்று நடுவில் இல்லை.

எனவே, இது துருக்கி மொழியில் இருந்துதான் தமிழிற்கு வந்தது என்பது நன்கு தெளிவாகிறது. அதாவது,

துஃவேக்(tufek) → துபேக் > துபேக்கி > துபாக்கி (1839இற்கு முன்னதாக) > துப்பாக்கி(தற்காலத்தில்).

என்று மருவி தமிழில் நுழைந்துள்ளது என்பது என் துணிபு.

இதிலிருந்து நானறிவது யாதெனில், இந்த துஃவேக் என்னுஞ்சொல்லானது தமிழிற்குள் நேரடியாக தற்சமமாக நுழைய முடியாதலால் (முந்தைய காலங்களில் f இற்கு நிகராக 'ஃவானா(ஃவ)' என்னும் எழுத்தானது வழக்கில் இல்லை என்பதை மனதில்கொள்க), தற்பவமாக துபேக் என்று நுழைந்து பின்னாளில் துபேக்கி>துபாக்கி என்றாகி அக்காலத்து வழக்கில் ஊன்றியுள்ளது.

இத்துருக்கி மொழிச் சொல்லானது துபேக்கி என்றானதற்கான காரணமாக நான் தெரிந்து கொண்டது யாதெனில், துபேக் என்பது தமிழ் இலக்கணத்திற்கு ஏற்புடையதில்லையாதலாலும், இது ஒரு வகை காருவியாதலாலும் [படைக்கலம்(Munition)], தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப கருவிப்பொருள் விகுதியான ஈனா(இ) என்னும் எழுத்து சேர்க்கப்பட்டு(புணர்ந்து) துபேக்கி என்றாகியுள்ளது. பிறகு, காலப்போக்கினால்(<1839) துபாக்கி என்று பேச்சு வழக்கில் மருவியும், ஏட்டில் ஏறியும்(1839), பின்னாளில் துப்பாக்கி என்றாகி இன்றுவரை அவ்வாறே தரிபெற்றுள்ளது, இவ்வேற்றுமொழிச்சொல்!

மேலும், இந்த துஃவக் என்னும் சொல்லானது ஈழத்து மொழிகளான ஈழத்தமிழில், தற்பவமாக 'துவக்கு' என்று பேச்சுவழக்கில் நுழைந்துள்ளது (எழுத்து வழக்கு: துப்பாக்கிதான். ஆனால் சிலவிடங்களில் 'துவக்கு, சுடுகலன்' என்றும் வழங்கப்படுவதுண்டு). அங்குள்ள, சிங்களத்திலும் சுடுகலன்(Gun) என்பதைக் குறிக்க துவக்கு(තුවක්කුව) என்னுஞ் சொல்லும் சேணேவி(Artillery) என்பதைக் குறிக்க களத்துவக்கு(කාලතුවක්කු) என்னும் சொல்லும் வழங்குகிறது.

இவற்றுடன்,

→ மலையாளத்தின் பேச்சுவழக்கு மற்றும் எழுத்து வழக்கு ஆகியவற்றில் தோக்கு(തോക്ക്) என்றே வழங்குகிறது. இங்கு குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த தோக்கு என்னும் சொல்லும் தமிழில் வழங்கப்பட்டுள்ளதை மேற்கண்ட அகராதி குறிப்பிடுகிறது.

தெலுங்கின் பேச்சுவழக்கு மற்றும் எழுத்து வழக்கு(!?) ஆகியவற்றில் துபாக்கி(తుపాకీ) என்று வழங்குகிறது.

 


எனவே, முடிவாக நான் சொல்வது யாதெனில் இதைத் தூரவீசிவிட்டு கீழக்கண்ட தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தவும்:

  1. Gun - சுடுகலன்
  2. Rifle - துமுக்கி
  3. Musket - தெறாடி | கிட்டிப்பு(credit): திரு.திருத்தம் பொன் சரவணன்

 


பிற்சேர்க்கை(2–11–2021):

  • நான் கண்டறிந்த வரை இச்சொல்லானது 1888 ஆம் ஆண்டுதான் முதன்முதலில் அகராதியில் ஏற்றப்பட்டுள்ளது.

English and Tamil Dictionary for the Use of Students and Colleges


 

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
    • 'எனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குங்கள் அல்லது இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்" - தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மன்றாட்டமாக வேண்டுகோள் 12 DEC, 2024 | 03:18 PM இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு  இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம்  முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறும் அல்லது இலங்கைக்கு அனுப்புமாறும் கோரும் வீடியோவை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பு மறுக்கின்றார் அதேவேளை தனக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பிலான ஆவணங்களையும் வழங்க மறுக்கின்றார் என ஜொய் என்ற அந்த இளைஞன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. இராமநாதபுரம் ஆட்சியரிடம் நான் பத்திற்கும்  மேற்பட்ட ஆவணங்களை கையளித்துவிட்டேன்,என யாழ்ப்பாண இளைஞன் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. தான் பல வருடகாலமாக இந்த விடயத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/201095
    • பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன். "காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்." ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன். அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார். சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 தந்தையை போலீஸில் ஒப்படைத்த மகன் பட மூலாதாரம்,HANDOUT இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார். இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!8 மணி நேரங்களுக்கு முன்னர் தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார். 'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார். இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன், மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார். யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்5 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருடப்பட்ட நகை கஞ்சா விற்றதாக தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கணேசன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் நெல்வன். அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார். கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. "கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன். ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராமச்சந்திரன், "உண்மைதான். இதற்காக நானும் கடன்களை வாங்கி ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அதற்காக திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்கிறார். இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும். "அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cm2exyp63j0o
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.