Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக அறிக்கை அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாள் – 30.08.2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக அறிக்கை அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாள் – 30.08.2021

ஊடக அறிக்கை அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாள் – 30.08.2021

spacer.png

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளான 30.08.2021 அன்று, வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் அமைப்பினராகிய எம்மால், வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவை கருதியஜனநாயக போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த போதிலும், கொவிட் 19 நோய் நெருக்கடிநிலை காரணமாக இலங்கை முடக்கப்பட்டிருக்கும் சூழலில், இலங்கைக்குள் உண்மையையும்

நீதியையும் நிலைநாட்டுவதற்கான அனைத்து வழிகளையும் நாடி தோற்றநிலையில் உள்ளோம்.இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக -பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தண்டனையின்மையால் பாதிக்கப்பட்டவர்களாக – பக்கச்சார்பற்ற

சர்வதேச விசாரணை ஒன்றினூடாக - இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இடம்பெறவேண்டும்.சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்தினுடாகவோ இலங்கை விசாரிக்கப்படவேண்டும். இவற்றை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல் ஊடாக எமது கோரிக்கைகள் அடங்கியஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

2015 ஆம் ஆண்டில் இலங்கை இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து சிறிலங்கா விலகியுள்ள நிலையில், 46/1தீர்மானமும் பொறுப்புக்கூறலை வழங்காமல் இருக்கும் நிலையில், இந்த அறிக்கையை - சர்வதேசகுற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான அவசர முறையீடாக - வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களை உள்ளடக்கிய - வடக்கு - கிழக்கு வலிந்து

காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினராக, எங்கள் அன்புக்குரியவர்களுக்கான நீதி மற்றும்பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் கோரிக்கைகளை இந்த அறிக்கையின் மூலம் முன்வைத்துள்ளோம்.

 

 

தன்னிச்சையாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின்அறிக்கையின் பிரகாரம், ஈராக்கிற்கு அடுத்தபடியாக உலகில் அதிக எண்ணிக்கையிலான வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களது வழக்குகளைக் கொண்டிருக்கும் நாடாக இலங்கையே உள்ளது.பல தசாப்த காலமாக , இலங்கையின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகள் மற்றும் துணைராணுவக் குழுக்களின் உதவியுடன் திட்டமிடப்பட்ட மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட,இனவாதநோக்கிலமைந்த வகையில் நீதிக்கு புறம்பாக, வலிந் து காணாமல் ஆக்கப்பட்டிருந்தநிலையிலும், 2009 ஆம் ஆண்டில் யுத்தத்தின் நிறைவில் - இலங்கை இராணுவத்திடம் பல

ஆயிரக்கணக்கான தமிழர்கள் சரணடைந்த பின்னர் பாரிய அளவிலானோர் காணாமல் ஆக்கப்பட்டு,அவர்கள் தொடர்பிலான விபரங்கள் மறைக்கப்பட்ட நிலையில் - எங்கள் குடும்ப உறவுகளைத் தேடி நாங்கள் 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டங்கள், உணவு தவிர்ப்புப்

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலமாக நீதியையும் பொறுப்புக் கூறலையும் வேண்டி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். நம்பகமான பொறுப்புக் கூறல் பொறிமுறை இன்மையும் மற்றும் நீதி கிடைக்கப்பெறாமையால் ஏற்பட்ட கோபம் விரக்தியின் விளைவுமே நாம்

அத்தகைய போராட்டங்களை மேற்கொள்ள தள்ளப்பட்டோம். 

 

இலங்கையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் நியமிக்கப்பட்டிருந்த - வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஆணைக்குழுக்கள் தோல்வியில் முடிவடைந்திருந்தும், நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்பொறிமுறைக்குள் நாம் ஈடுபட்டிருந்ததுடன், இலங்கையின் நீதித்துறை

பக்கச்சார்பானது என அறிந்திருந்தும் இந்த நீதிமன்றங்களினூடாக நீதி கிடைக்கும் எனஎதிர்பார்த்திருந்தோம். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி; - ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் 30ஃ1 தீர்மானமானத்தை - நேரத்தை கடத்தும் பொறிமுறை மற்றும் வெளியுறவுக் கொள்கையில் அனுசரணை என்னும் பெயரிலான இராஜதந்திர உபாய வழிமுறை என தெரிவித்திருந்த நிலையிலும் கூட - நாங்கள் பல்வேறு நல்லிணக்க பொறிமுறைகளினூடாக நீதி கிடைக்கும் என அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தோம்.

 

 

1979 ஆம் ஆண்டில் அவசரகால நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டு 1982 இல் நிரந்தரமாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.ரி.ஏ) மாற்றுவதாக, ஐ.நா.வின் தீர்மானம் 30 /1 இன் பிரகாரம் உறுதியளித்திருந்த போதிலும், இன்று வரை 1979 இல் கொண்டுவரப்பட்ட சட்டம் அழுலில் உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் அமுல் படுத்தப்பட்ட நாளிலிருந்து தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாகவே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்களை பயப்பீதிக்குள்ளும் தண்டனை வழங்குவதற்குமாக உருவாக்கப்பட்ட சட்டமாகவே இன்றும் இது உள்ளது.

2018 ஆம் ஆண்டில், 30 /1 தீர்மானத்தின் படி நிறுவப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் மீது (OMP) எமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்து அவர்களிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தோம், தற்போதைய 46/1 தீர்மானத்தின் அடிப்படையில் கூட, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் நடைபெறப்போவதில்லை. தற்போதுள்ள கொவிட் 19 அவசரகால நிலையில், இரவோடு இரவாக OMP அலுவலகம் கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளமை எமக்கு இன்னும் அதிகளவான சந்தேகத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏனெனில் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த வெளிப்படைத்தன்மையும் இதில் இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவொரு பொது ஆலோசனையும் இல்லாமல் இரகசியமாக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது என்பதாலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றத்துக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் இந்த அலுவலகத்தின் அமைப்பில் வெளிப்படையான முரண்பாடு காணப்படுவதாகவும், சுட்டிக்காட்டியிருந்தோம்.

2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை OMP வெளியிடவேண்டும் என்று பலமுறை நாம் கோரிக்கை விடுத்த போதிலும், சிறிய நம்பிக்கையை கூட OMP எமக்கு வழங்கியிருக்கவில்லை. தற்போதைய இலங்கையின் அதிபர் கோட்டபாய ராஜபக்ஸ அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த காலப்பகுதியிலேயே அதே ஆண்டு ஜனவரியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். 2016 இல் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா.வின் வதிவிடப் இணைப்பாளருக்கு காணாமல் போனவர்கள் ‘இறந்துவிட்டார்கள்’ எனவும் தெரிவித்திருந்தார்.

யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் இலங்கையின் ஆயுதப் படையினரிடம் சரணடைந்தவர்களின்; பட்டியலை வெளியிடுமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம். குறிப்பாக 2008 – 2009 ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின்; கட்டுப்பாட்டுப்பகுதிகளிலிருந்து வெளியேறியபோது சட்டவிரோதமாகவும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாகவும், இலங்கை அரச படைகளால் நடத்தப்படும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாகவும், விபரங்களை வழங்குமாறு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம். ஆயினும் இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காணாமல் போனோரின் அலுவலகமானது சர்வதேச சமூகத்தின் நலனுக்கான வெறும் கண்துடைப்பாகவே நிறுவப்பட்டது என்பதே உண்மையாகும். இவ்விடயம் உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கான எமது நடைமுறைத் தேடலைத் தாமதப்படுத்தியதோடு, 30/1 தீர்மானத்திலிருந்து சிறிலங்கா முற்றாக விலகியுள்ளதன் மூலம் உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நடைமுறைத் தேடலைத் சாத்தியமற்றதாக்கியியுள்ளது.

நீதி, மற்றும் பொறுப்புக்கூறலில் சிறிலங்கா முற்றாக விலகியுள்ளதோடு மட்டுமல்லாமல் – தண்டனை வழங்கப்படாமையால், வலிந்து காணாமல் ஆக்குவதற்கான தலைமையை வழங்கியவர்கள் இன்று இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் ஏறியுள்ளனர். அதேவேளை - இக்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் உளவுப்பிரிவின் அதிகாரிகளுக்கும் பதவிஉயர்வுகளும், வெகுமதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக எமது நீண்ட கால தேடலுடனான போராட்டம் மிகவும் வேதனையானதாகும். வடக்கு மற்றும் கிழக்கின் 8 மாவட்டங்களிலும் நாம் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் 11 வருடங்களை எட்டியுள்ளது. இதன்போதும், இலங்கையின் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு இராணுவத்தினரின் மிரட்டல், துன்புறுத்தல்களை எதிர்கொண்டோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் எமது போராட்டத்துடன் தீவிரமான இணைந்திருந்த ஏறத்தாள 74 பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும், தங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியாமலேயே மரணமடைந்துள்ளார்கள்.

இலங்கை விடயங்களைக் கையாளும் இணைத் தலைமை நாடுகளினாலும், அனுசரணை வழங்கும் நாடுகளினாலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், சர்வதேசத்தின் மீது நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த பின்னணியில் தான், இலங்கைக்குள் உண்மையையும்; நீதியையும் நிலைநாட்டுவதற்கான அனைத்து வழிகளையும் நாடி தோற்றநிலையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக - பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தண்டனையின்மையால் பாதிக்கப்பட்டவர்களாக – பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றினூடாக - இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாகவோ விசாரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் அமைப்பு - வடக்கு கிழக்கு

 

https://www.thaarakam.com/news/4c5cc4d2-ebaf-4ae8-91fb-d5a87efed04d

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம்: வீடுகளில் இருந்தவாறு உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம்: வீடுகளில் இருந்தவாறு உறவுகள் போராட்டம்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தங்களது வீடுகளிலிருந்தபடியே அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை உறவுகள் முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக நீதிகோரி போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் எப்போது திரும்புவார்கள், இந்த விடயத்தில் இலங்கையை நம்பப்போவதில்லை போன்ற வாசகங்களை ஏந்தியே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

https://athavannews.com/2021/1236827

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.