Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தரோடை அகழ்வாராச்சி தமிழரின் வரலாற்றை கி.மு. 1300 நோக்கி தள்ளுகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
  • பொறுப்புத்துறப்பு: சிதறிக் கிடந்த பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து, ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன். இந்த எழுத்துக்கள் எதற்கும் நான் சொந்தமன்று. 

 

என்னாது கந்தரோடை தமிழரின் வரலாற்றை கி.பி. 1300க்குத் தள்ளியதா?

main-qimg-fd07bc7c6b80b7658ab049ab5c4ca6c6

தமிழரின் வரலாறு, வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துவுக்கு முன் 1000- 500 ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால் இப்போது, தமிழர் பண்பாடு மேற்கு ஈழத்தின் புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் தென் ஈழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி [கதிரவெளி] இவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள், பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான யாழ். சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை [கந்தரோடை] பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைகள் சில கி.மு. 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள், இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.

கி.மு. 1200 களில் தென்இந்தியாவில் தோன்றிய பெருங்கற்காலப் பண்பாடு, கி.மு. 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்குப் பரவியுள்ளதை, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 50 க்கும்மேற்பட்ட, பெருங்கற்காலக் குடியிருப்பு மற்றும் ஈமச்சின்ன மையங்கள் உறுதிசெய்கின்றன.

1970 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் சிற்றம்பலம், யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தை ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து, பேராசிரியர் சிவச்சாமி, பேராசிரியர் சிற்றம்பலம், கலாநிதி ரகுபதி, நூலகர் ஆ. சிவநேசச்செல்வன், பேராசிரியர் கிருஷ்ணராசா, ஆ. தேவராசா, ஆசிரியர் திருவள்ளுவர், நிலஅளவையாளர் சேயோன், பூநகரி உதவி அரசாங்க அதிபர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு, வடபகுதியில் நடைபெற்ற பலதொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்கு உயிரூட்டியவர்கள் ஆவார்கள்.

இவர்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து தமிழர்களின் பல தொல்லியல் ஆதாரங்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்களாவர்.

இவர்கள் தேடிக் கண்டெடுத்த பல அரியபொருட்கள், 1987 வன்முறையின் பின்னர், அவை எதுவுமே அருங்காட்சியகத்தில் காணப்படவில்லை என்பது கவலைதரும் விடயமாகும்.

main-qimg-191c84bfd83c04250b3ab7251f462bee-mzj

யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னோடு அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் கண்­டு­பி­டிக்­கப்­பட்டுள்­ளன.

main-qimg-526ecb7970dd88cbd24731646e3e5a47-mzj

கொக்­கு­விலில் அமைந்­துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்­சி­யா­ளர்­களைக் கொண்ட குழு­வினர் கடந்த 2012 - கார்த்திகை மாதம் கந்­த­ரோடைப் பகு­தியில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்­சியின் போது இவற்றைக் கண்டுபிடித்­தனர்.

main-qimg-b05d5f487ac2a89142b27ead8e1bfaba

கண்டுபிடிக்­கப்­பட்ட பொருட்­களில் அம்­மியின் புகைப்­ப­டத்­தையும் அம்­மியின் ஒரு பகு­தி­யையும் சில ஓட்டுத் துண்­டு­க­ளையும் எக்­கா­லத்­துக்­கு­ரி­யவை என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக தமிழ்­நாடு தஞ்­சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­கத்­திற்கு கடந்த 2012 டிசம்பர் மாதம் ஆய்­விற்­காக அனுப்பி வைத்­தனர். ஆய்வின் முடிவில் அம்மிக்கல் இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. ஓட்டுத் துண்­டுகள் சுமார் 25௦௦ ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டவை எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

இவ் அகழ்­வா­ராய்ச்­சியில் ஈடு­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான தமி­ழியல் மற்றும் தொல்­பொருள் ஆய்­வாளர் கலா­நிதி ஜெ. அராங்­கராஜ் இது தொடர்­பாகத் தெரி­விக்­கையில், கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி எமது ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­க­ளான சுரேஷ், நெந்­தூரன், நட­ராஜா ஆகியோர் கந்­த­ரோடைப் பகு­தியில் அகழ்­வா­ராய்ச்­சியில் ஈடு­பட்­ட­போது இவ்வம்­மிக்­க­ல்லையும் வேறு சில மண் பாத்­திர எச்­சங்­க­ளையும் கண்­டெ­டுத்தோம் என்று தெரிவித்தார்.

தரை­யி­லி­ருந்து நாலடி ஆழத்தில் தோண்­டும்­போதே நான்கு கால்­க­ளை­யு­டைய இந்த அம்­மிக்கல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அத்­துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமா­னி­யர்­களின் நாண­யங்கள் இரண்­டா­யி­ரத்து 300 ஆண்­டுகள் பழ­மை­யான சுடு­மண்­ணினால் செய்­யப்­பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்­புப்­பானை ஓடுகள் போன்ற பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாகக் குறிப்பிட்டார்.

கண்­டெ­டுக்­கப்­பட்ட அம்­மிக்கல் எக்­கா­லத்­துக்­கு­ரி­யது என எம்மால் உட­ன­டி­யாகத் தெரிந்து கொள்ள முடி­ய­வில்லை. இதனால் இதன் புகைப்­ப­டத்­தினை தமிழ் நாடு தஞ்­சா­வூ­ரி­லுள்ள தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு ஆய்­விற்­காக அனுப்பி வைத்தோம். அங்கு கல்­வெட்­டுக்கள் மற்றும் தொல்­லியல் பேரா­சி­ரியர் கலா­நிதி மா. பவானி இதனை ஆய்­விற்கு உட்­ப­டுத்தி இற்­றைக்கு மூவா­யிரம் (பெருங்­கற்­காலம்) ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.

இவ் அம்­மிக்­கல்லின் மாதி­ரியை இந்­தியா, தமிழ் நாட்டில் கொடு­மலை, கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய அம்மிக் கல்­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்­த­போது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாலேயே இவ் அகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இம் அம்மிக்கல்லை ஒத்த அம்மிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் செ.கிருஷ்ணராஜாவிடமும் உள்ளது என்று மேலும் தெரிவித்தார் அவர்.


இந்த அகழ்வாராச்சி கட்டுரையினை வாசிப்பவர்கள் கீழ்க்கண்ட கொழுவியை அழுத்தி அதிலுள்ள அகழ்வாராச்சி காணொளியினை (வெறும் 12 நிமிடங்கள் தான்) கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்! ……_/\_…….

கொழுவி: Tamil Eelam Jaffna historic Archaeological Evidence

இந்த அகழாய்வானது 1970 ஆம் ஆண்டு நடைபெற்றது ... நடத்தியவர்கள் : அமெரிக்கப் பென்சில் வேனியாப் பல்கலைக் கழகத்தினர் !

அந்த அகழ்வாராச்சி காணொளியின் 9:00 ஆவது நிமிடத்தில் காட்டப்படும் பொருட்களுக்கான கரிமவியல் ஆய்வு(carbon dating) கீழே படிமமாக(image) தரப்பட்டுள்ளது...

main-qimg-9fb13a57a9527c45ab0de975ec722186

'நன்றி: ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள்- புத்தகம். | திரைப்பிடிப்புச் செய்தவர்: நன்னிச் சோழன்'

ஆக மொத்தத்தில் எம்மினத்தின் வரலாறு என்றோ 3300 வருடங்களைத் தொட்டு விட்டது... நாம்தான் ஏனோ அதை மறந்து நிற்கிறோம்!

சிறிய வேண்டுகோள்: இக்காணொளிதான் இதற்கிருக்கும் ஒரே சான்று !... எனவே இவ்விடுகையினை வாசிக்கும் வாசகர்கள் அக்காணொளியினை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.... நன்றி _/\_


தமிழ்மக்கள் மத்தியில் வழுக்கையாற்றுப் வடிநிலத்தினூடாக உள்வாங்கப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புப் பற்றிய ஆய்வுகளில் ஆய்வாளர்கள் இன்னும் அக்கறை செலுத்தவில்லை. இருந்தாலும் கந்தரோடையிலிருந்தும் இதுவரையில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் எச்சங்கள் அத்துறை ஆய்வுகளில் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின்றன எனலாம். ‘மயோசின்' காலப்பகுதியில் உருவான யாழ்ப்பாண தீபகற்ப புவியமைப்பியலுடன் இணைந்த தோற்றம் பெற்ற வழுக்கையாற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் கோயிற்குடியிருப்புகளும், விவசாயக் குடியிருப்புகளும் தொடர்ச்சியான வளர்ச்சியோடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தியிருந்தன என்றால் அது மிகையாகாது. இக்குடியிருப்புக்கள் ஒரே சீராக இப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. சிலபகுதிகள் நகரமாகவும் வளர்ச்சியடைந்திருந்தன.

பெரும்பாலான குடியிருப்புக்கள் கமக்(agriculture) காமக்(village) குடியிருப்புக்களாகவே இருந்திருக்கின்றன. கந்தரோடை அவ்வகையில் ஒரு நகரக்குடியிருப்பாகவும் வணிக மையமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தமையை அங்கிருந்து பெற்றுக்கொள்ளப்படும் தொல்லியல் சான்றுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. கந்தரோடை தொடர்பான ஆய்வின் பின்னணியிலே வழுக்கையாற்றுப்பள்ளத்தாக்கினுடைய தொல்லியல் முக்கியத்துவம் எதிர்காலத்தில் இன்றியமையாததாக ஆராயப்பட வேணடியதொன்றாகும்.

main-qimg-6108721d2cce1b30f316b0b64f133f15

main-qimg-3aae4a078595f1a73e28e2cd5ee42541

வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்குடன் இணைந்த வகையில் பல வணிக மையங்களும் தானியக்களஞ்சியங்களும், ஆலயங்களும் காணப்பட்டிருந்தன என்பதனை அண்மைக் காலத் தொல்லியல் மேலாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சதுர முறையிலும் காணப்படும் இந்நாணயங்களின் முற்பக்கத்தில் சூரிய உருவமும் அல்லது வண்டிற் சில்லு ஒன்றிலே விலங்கு ஒன்று இழுத்துச்செல்வது போன்ற உருவமும் காணப்படுவதனை அவதானிக்கலாம். ஒரு நாணயத்தில் சூரிய உருவம் மிகத்தெளிவாக தெரிகின்றது. அதில் சூரிய உருவத்தினை நோக்கி ஒரு விலங்கு வருவது போன்று அமைந்துள்ளது. இத்தகைய உருவங்களை தாங்கி, வெளியிடப்பட்ட இவ்வகையான நாணயங்களை வடகிழக்கிந்தியாவிலிருந்தும் தக்கண தென்னிந்தியப்பரப்பிலிருந்தும் ஆய்வாளர் பெற்றுள்ளனர். இருப்பினும் கந்தரோடையிலிருந்து கிடைத்தவற்றுள் நான்கு நாகவடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெள்ளிநாணயம் நாகவம்சத்தின் வெளியீடாகவே கொள்ளவேண்டிய ஒருநிலை எமக்கு ஏற்பட்டிருக்கிறது. நாகதீபத்தில் அரசாட்சி செய்த நாகதீப அரசனுடைய வெளியீடுகளாக நாகசின்னம் பொறித்த இந்த வெள்ளிநாணயத்தினைக் கொள்வதில் தவறேதும் இருக்கமுடியாது என்றே கருதவேண்டியுள்ளது.

main-qimg-4e78b80559ad5125cf5ca04bfaac189d

main-qimg-3f5d2eb40cb94d1532a90aa3df81e10b

வழுக்கையாறு தந்த வரலாற்று மூலங்களுள் எமக்கு தற்பொழுது சிறப்பாக கிடைத்திருப்பது தமிழி சாசனங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளாகும். தமிழி வரிவடிவங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் பல்வேறு வகையைச் சேர்ந்தனவாக காணப்படுகின்றன. கறுப்பு, சிவப்பு மட்பாண்டச்சட்டிகள் இவற்றுள் மிகமிகப் முக்கியமானவையாகும். சிவப்பு வண்ணத்திலான பெரிய மண் பானைகளிலும் தமிழி வரிவடிவங்கள் பொறிக்கப்பட்டுக் கிடைத்துள்ளன. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாகக் கிடைத்த தமிழி வடிவங்களுள் ‘குணி' என்ற தமிழ் வாசகம் பொறிக்கப்பட்டுக் கிடைத்த மட்பாண்டத் துண்டு ஒன்று வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ் வாசகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட தமிழி வரிவடிவம் தமிழ் நாட்டில் உள்ள புகலூர் தமிழ் பிராமிச்சாசன வரிவடிவினை ஒத்தமுறையில காணப்படுவது விசேடமாக நோக்கத்தக்கதாகும். வரிவடிவினையிட்டு எவருமே அதனை தமிழி அல்ல என்று மறுக்க முடியாது.

main-qimg-4d4cd4df7bb6dd79f7e8ece43dacf7ae-mzj

"ஆனைக்கோட்டை முத்திரை"

அத்தோடு இம் மட்பாண்டச் சாசனத்துடன் இணைந்த வகையில் கிடைத்த வேறு மட்பாணடங்களில் தமிழ் நெடுங்கணக்கிற்கே சிறப்பெழுத்தாக அமைந்த ‘ழ' கர ஒலிக்குரிய வரிவடிவமும் கிடைத்துள்ளது. மேலும் ’ஈ' கார ஒலிக்குரிய தமிழி வரி வடிவமும் கிடைத்துள்ளது. இன்னும் மேலதிகமாக தமிழி வரிவடிவங்களில் வழங்கிவந்த எண்முறைக்குரிய குறியீட்டுமுறையும் கிடைத்திருப்பது எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலேயே இவ்வகையான எண்முறை நிலவியிருப்பத ற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரிவடிவ முறைக்குரிய காலப்பகுதியை கி.பி.1ம், 2ம் நூற்றாண்டுக் காலப்பகுதி எனக் கொள்ள முடியும்.

1980ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சியில் சிவப்பு மட்பாண்டம் ஒன்றும் அதனுள் இருந்த முத்திரை மோதிரமும் எமது கைக்கு கிடைத்தன. பின்னர் பேராசிரியர் இந்திரபாலா அதைனை எம்மிடமிருந்து வாங்கி ஆராய்ந்த பின் ஊற்றுப்பேனாவுக்குரிய மையில் தேய்த்து ஒரு தாளில் அம் முத்திரையைப் பதித்தார். உடனே அத்தாளில் கலாநிதி ஜேமஸ் இரட்ணம், கலாநிதி இரகுபதி ஆகியோரால் எழுதி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று கந்தரோடையில் எமக்குக்கிடைத்த சிவந்த மட்பாண்டத்துண்டு ஒன்றில் ஓர் எழுத்தானது அன்று ஆனைக்கோட்டையிற் கிடைத்த ஈரின எழுத்து முத்திரையின் மேல் வரியில் பொறிக்கப்பட்டுக் காணப்படும் சிந்துவெளியின்(?)எழுத்தினை ஒத்திருப்பதனை ஒப்பிட்டு நோக்கிக்கொள்ள முடிகிறது. அவ்வாறாயின் ஆனைக்கோட்டையிலிருந்து கந்தரோடை வரைக்குமுள்ள வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கில் சமகாலத்தில் அத்தகைய வரிவடிவங்களைக் கையாண்ட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது .கந்தரோடையில் கிடைத்த இந்த சிவப்பு வரிவடிவமானது அன்று கலாநிதி இரகுபதி குறிப்பிட்டது போன்று ‘கோ' என்பதனை உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சூலக் குறியீடாக இருப்பது கந்தரோடையில் உள்ள குறிப்பிட்ட மையத்தில் கிடைத்த இருவகையான முத்திரை பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களை இங்கு குறிப்பிடலாம்.

முதலாவது வகையானது ஒரு வெளிவட்டத்தினுள் அமைந்த நீள் வட்ட வடிவிலான – உருவம் பதித்த முத்திரையாகும். இரு வட்டங்களுக்கிடையே தமிழி எழுத்துக்கள் தெளிவற்ற முறையில் காணப்படுகின்றன. இவற்றுள் ’ம'என்ற எழுத்து முத்திரையில் பதிந்துள்ளது. நடுவட்டத்தினுள் மையத்தில் நாகத்தினது உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வகையான முத்திரையானது வட்ட வடிவில் அமைந்துள்ளது. தமிழி எழுத்துக்கள் மிகவும் தெளிவாகப் பொறிக்ப்பட்டுள்ளன. நாகபாம்பினது உருவமும் தெளிவாக உள்ளது. இவ்விரு முத்திரைகளின் பதிவுகளையும் ஆராயும் போது உலோகத்தினாலான முத்திரையிடும் கருவியே இங்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

வழுதி தந்த வரலாற்று மூலங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ’சிவ' என்ற வாசகத்தினை கொண்ட சதுரமான செம்பு நாணயமானது சங்ககால வாணிபத் தொடர்பினை கந்தரோடையுடன் உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளது. இந் நாணயத்தில் தமிழி வரிவடிவில் சிவ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ’வார்வை' நாணயமான இச்செம்பு நாணயம் கந்தரோடையில் குறிப்பிட்ட மையத்தில் மேற்பரப்பிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 


வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண நகரில் இருந்து 14 கி.மீ. தூரத்திற்குச் செல்லும்போது கந்தரோடையை அடையலாம். இப்பகுதியானது வரலாற்றின் ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழர்களின் கட்டுப்பாட்டில் கதிரமலை என்று அழைக்கப்பட்டு பின்னர் கந்தரோடை என்று மாற்றம் அடைந்தது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட முதலாவது தொல்பொருள் களமாக கந்தரோடை. அகழ்வாராய்ச்சியின் போது 62 விகாரைகள் கண்டுபிடிக்கப்பட்டன அவை சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இந்த விகாரைகள் 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தையன. அந்த நினைவுச்சின்னங்களில், அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பௌத்த துறவிகளின் நோன்பிருந்து சமாதியான பின்பு அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் உள்ளன.

main-qimg-b1865aefead25c9cdca63eee0a71e03f

யாழ்ப்பாணத்தில் புத்தமதத்தின் இருப்பைக் காட்டும் இங்கு கிடைத்த பொருட்கள் அருகில் உள்ள யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் தற்போது காணப்படுகிறது. சில நாணயங்கள், புத்த சிலை, கல் கல்வெட்டுகள் மற்றும் சில வெளிநாட்டுப் பொருட்கள் இந்த இடமானது வணிகத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் பௌத்த மதமும் இங்கு இருந்ததற்கு சாட்சியாகத் திகழ்கின்றன. கந்தரோடை விகாரையானது யாழ்ப்பாண மாவட்ட சுன்னாகத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான புத்த கோவிலாகும். இக்கோவிலுக்கும் பௌத்த சிங்களத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  • கந்தரோடை விகாரை பற்றிய நிழம்புகளைப் பார்க்க கீழ்க்கண்ட கொழுவியினை அழுத்தவும் :

கொழுவி : கந்தரோடையிலிருந்து கதுருகொட வரை

இத்தகைய பெருமை மிகுந்த எமது தொல்லியல் இடமான கந்தரோடை இன்று சிங்களத்திடம் மாட்டி அதன் பெயர் கதுருகொட என மாற்றியமைக்கப்பட்டதுதான் பெருஞ்சோக வரலாறு.

ஆக மொத்தத்தில் பௌத்தத்தை வளர்த்தவர்களே தமிழர்கள்தாம்.

சிங்கள வரலாற்று ஆய்வாளர் லயனல் சரத் என்பவர்

“அண்டை நாட்டு தமிழ் பௌத்தர்கள் இலங்கைக்கு வந்து இருக்கா விட்டால் சிங்கள பௌத்தம் என்னும் மதத்தை இன்று காணும் வாய்ப்பே கிடைத்து இருக்காது “

என்று கூறியிருக்கின்றார்.

உசாத்துணைகள் :

  1. கலாநிதி எஸ். தியாகராசா, ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், தேசம் வெளியீடு , பக் 18
  2. கிருஸ்ணராசா.செ., 2010,இலங்கை பண்பாட்டு பரிணாமத்தின் அடிப்படைகள் , ஏவி கிறியேற்றர் , யாழ்ப்பாணம், பக். 123-124.
  3. சிற்றம்பலம்.சி.க.,1993,யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு , யாழ் பல்கலைக்கழக வெளியீடு , பக்.64-69.
  4. கிருஸ்ணராசா.செ.,1999,இலங்கைவரலாறு.பாகம்-01 , வரலாற்றுத் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் , பக். 71-72.

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

 

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211214-214953.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.