Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'Love you all!'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'Love you all!'
ஓர் வார இறுதி விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார்
ஆசிரியை மதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது ...
வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து 'Love you all!' என்று சொல்வது.தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்!
அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்க
முடியவில்லை.
ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்
காட்டுவதற்கு
எந்தவொரு சிறப்புத்
தன்மையும் இல்லாத 'டெடி' என்கிற தியோடர்!அவனிடம் மட்டும் ஆசிரியர் மதி நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமானது!
எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்திற்கும் அவனை நிராகரித்தார்.
அவ்வாண்டிற்கான காலாண்டு தேர்வு வந்தது. முன்னேற்ற தேர்வு அறிக்கைகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்
கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை மதிக்கு அழைப்பு விடுத்தார்.
அவர் வந்ததும், "முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்க வேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை
பெற்றோருக்கு தர
வேண்டும்!
நீங்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது பெற்றோர் அவன்
மீது நம்பிக்கை இழந்து
விடுவார்கள்!" என்று தியோடரின் முன்னேற்ற அறிக்கையை சுட்டிக் காட்டிக் கூறினார்.
ஆசிரியை மதியோ "என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அவனைப் பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம் கூட இல்லை!" என்றார்.
தலைமை ஆசிரியர் அலுவலக ஊழியர் ஒருவரிடம் தியோடரின் கடந்த கால
முன்னேற்ற அறிக்கைகளை கொண்டு வந்து மதியிடம் கொடுக்குமாறு பணித்தார்.அறிக்கைகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்
படிக்கிறார் மதி.
மூன்றாம் வகுப்பு அறிக்கையில் 'வகுப்பின் மிகத் திறமையான மாணவன் தியோடர்' என இருந்ததைக் கண்டு தான் வாசித்ததை நம்ப
முடியாமல் அதிர்ச்சி அடைந்தார் மதி.
நான்காம் வகுப்பு அறிக்கை சொன்னது.
'தியோடரின் தாய் புற்று நோய் முற்றிய நிலையில் உள்ளார். அதனால் தியோடர் மீது முன்னர்
போல அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதன் விளைவு அவனிடம்
தெரிய ஆரம்பித்திருக்கிறது. '
ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது,'தியோடரின் தாயார் இறந்து விட்டார். அவன் மேல் அக்கறை காட்டும் உறவு தேவைப்
படுகிறது. இல்லையேல் நாம் அந்தக் குழந்தையை இழந்து விடுவோம்.!'
கண்களில் கண்ணீருடனமதி தலைமை ஆசிரியரைப் பார்த்து 'என்ன செய்ய
வேண்டுமென்று எனக்கு தெரியும்.' என்று ஓர் உறுதியோடு கூறினார்.
அடுத்த திங்கள் காலை ஆசிரியை மதி வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம் போல்
'Love you all 'என்றார்.
இம்முறையும் தாம் பொய் சொல்கிறோம் என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக் குழந்தைகளை
விட டெடி எனும் தியோடர் மீது அவரது அன்பு அளவு
கடந்திருந்தது.
தியோடருனனான தன் அணுகு முறையை மாற்றிக் கொள்வதென்று அவர் தீர்மானித்திருந்தார்.
அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் தியோடரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின் போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப் பட்டது.
அவ்வாண்டின் பள்ளி இறுதி நாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டு
வந்திருந்தார்கள். அவற்றிற்குள் ஒரு பெட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது.
ஆசிரியை மதிக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்க
வேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது.
முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள்வாசனைத்திரவியம் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த மணிக்கூடு ஒன்றும் இருந்தது. அந்தப் பொருள் தியோடருடையது என்று புரிந்து கொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை மதி அந்த வாசனைத் திரவியத்தை தன்மீது பூசிக் கொண்டார். அந்த மணிக்கூட்டை எடுத்து தன் கையில் அணிந்து கொண்டார்.
மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் தியோடர் சொன்னான்."இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது.
இறக்கு முன் அவர் இறுதியாய் வைத்திருந்த வாசனைத்திரவியம்,இந்த மணிக்கூடு பெட்டிக்குள் வைக்கும்
முன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”
ஓராண்டு கழிந்தது. ஆசிரியை மதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்து போனது. ஆசிரியை மதி ஓய்வு
பெற்றிருந்தார்.பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...
Mrs. mathi
‘I have seen many more people in my life. You are the best teacher I have ever seen’, Now I am going to get married. I cannot dream of my marriage without your presence.
I am your Teddy.
Dr. Theodore
அத்துடன் போய் வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.
ஆசிரியை மதிக்கு இருப்பு கொள்ளவில்லை.
அவரிடம் அந்த வாசனைத்திரவியம் தற்போது இல்லை.மணிக்கூடு பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்து கொண்டு திருமணத்திற்குப் புறப்பட்டார்.
அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்ட போது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டு
கொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர்.
அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".
திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை மதியை அறிமுகம் செய்து வைத்தார்.
''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று தவிர்க்கப்பட்டிருப்பேன்.ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களின் பிரச்சனைகளைக் கவனித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தால் மட்டுமே சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.