Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபைத்தேர்தல் வடக்கு,கிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அதிகளவுக்கு அனுகூலமானது - ஜெஹான் பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைத்தேர்தல் வடக்கு,கிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அதிகளவுக்கு அனுகூலமானது - ஜெஹான் பெரேரா

000000000000
துரதிர்ஷ்டவசமாக,சேதன விவசாய  பிரச்சனைகள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளைகருத்தொருமைப்பாடு மூலம் தீர்க்கப்படுவதற்கான அறிகுறிகள்  இல்லை
000000000000000000

ஜே ர்மனியைப் போன்ற பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில்  கூட,சேதன  உணவுக்கு அதிக கிராக்கி  உள்ளது, அதன் விவசாய நிலத்தில்  10 சதவீதத்தை மட்டுமே இ ரசாயனம் இல்லாத விவசாயத்திற்காக அந்நாடு ஒதுக்கியுள்ளது. மேலும் உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சுவிட்சர்லாந்துகூட , சமீபத்தில்சர்வஜனவாக்கெடுப்பில்  பூச்சிக்கொல்லிகளை தடை செய்வது  நடைமுறைச்சாத்தியமற்றதுஎன்று   வாக்காளர்கள் கருதியதால்  அது நடைமுறைக்கு மாறானது என்று நிராகரித்திருந்தது
0000000000000

போருக்கான அடிப்படை  காரணங்களை நிவர்த்தி செய்வது மற்றும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எந்தவொரு  அரசாங்கத்தினதும்   முதன்மையான   முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
00000000000

அடுத்த ஆண்டின்  முற்பகுதியில்  மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகஅரசாங்கத்திடமிருந்து அறிக்கைகள் வெளிவருகின்றன. பணப்  பற்றாக்குறையாக  இருந்தாலும், மாவட்ட அபிவிருத்திக்கான பொறுப்பில் இருக்கும்பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள்  தங்களின் தொகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தலா 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிகமாக , மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும்கணிசமான நிதி  வளங்களைப் பெற உரிமை உண்டு. தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகளுக்கு இந்த பெரிய தொகை கிடைக்கப்பெற்றால், தற்போது கஷ்டங்கள் இருந்தபோதிலும் சிறப்பான எதிர்காலத்திற்காக  அரசாங்கம் அபிவிருத்திநடவடிக்கைகளுக்கு  முதலீடு செய்கிறது என்ற சிந்தனைக்கு அவர்கள் பங்களிப்பை  வழங்க முடியும். ஆனால் பணத்தை அச்சிடுதல்  உட் பட இந்த பந்தயத்திற்கு   செலுத்தும் விலை அதிகமாக இருக்கலாம், ஆகவே  ஏனைய  உந்துதல்கள் இருக்க வேண்டும்.
jegan-perera.jpg
தற்போதைய கள நிலவரம் தேர்தலை நடத்துவதற்கு சாதகமாக இல்லை.  அந்நியச்செலாவணி  கையிருப்பு அச்சுறுத்தலுடன்பொருளாதாரம் கடுமையான சிக்கலில் இருக்கின்றது . புதிய வெளிநாட்டு கடன்களின் உட் பாய்ச்சல்  இல்லாவிட்டால் திட்டமிடப்பட்டவகையில்  வெளிநாட்டு கடன்களை உரியகாலத்தில்  திருப்பிச் செலுத்தினால் அந்நிய செலாவணி இருப்பு எதிர்மறையான தாக  இருக்கும்  அந்நிய செலாவணி பற்றாக்குறையாக இருப்பதற்கான பல காரணங்களில், சந்தை சக்திகள் விலையை தீர்மானிக்க விடாமல் அரசாங்கம் அந்நிய செலாவணி விகிதத்தை செயற்கையாக குறைவாக வைத்திருக்கின்றமையும் ஒன்றாகும்.. இது அரிசி மீது அரசுமுயற்சித்திருந்த விலைக் கட்டுப்பாட்டிலிருந்து வேறுபட்டதொன்றல்ல. அது பதுக்கல்காரர்களைச் சமாளிக்க தேசிய அவசரகால நிலையை அறிவித்த போதிலும் பதுக்கல் மற்றும் செயற்கையான  பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. அந்நிய செலாவணி வீதத்தை  அரசாங்கம் தளர்த்தினால் அந்நிய செலாவணி வீ தம் உயருவதுடன்  இறக்குமதி விலைகளும்  உயரும் அதேபோல் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும். இது இப்போது அவசரகால ஆட்சியை நியாயப்படுத்தும் கரிசனையாக  இருக்கலாம்.

தற்போதைய   பொருளாதாரப் பிரச்சனைகள்சிலவற்றுக்கு தீர்வுகாண்பது  அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. கோவிட் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பல மாதங்கள்முடக்க ப் பட்டதால் பொருளாதார உற்பத்தி இழப்பு இதில் அடங்கும். வெளிநாட்டிலிருந்து தொற்று பரவுவதைத் தடுக்க நாட்டின் விமான நிலையங்கள் மூடப்பட்டதால், பொருளாதாரத்தில்  சுற்றுலாத் துறையின் பங்களிப்பு மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும், சில பொருளாதார பின்னடைவுகள் சுயமாக ஏற்படுத்தப்பட்டவை. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இ ரசாயனம் இல்லாத விவசாயக் கொள்கையை அமு ல்படுத்துவது மிகப்பா ரியதாகும். ஜே ர்மனியைப் போன்ற பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில்  கூட,சேதன  உணவுக்கு அதிக கிராக்கி  உள்ளது, அதன் விவசாய நிலத்தில்  10 சதவீதத்தை மட்டுமே இ ரசாயனம் இல்லாத விவசாயத்திற்காக அந்நாடு ஒதுக்கியுள்ளது. மேலும் உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சுவிட்சர்லாந்துகூட , சமீபத்தில்சர்வஜனவாக்கெடுப்பில்  பூச்சிக்கொல்லிகளை தடை செய்வது  நடைமுறைச்சாத்தியமற்றதுஎன்று   வாக்காளர்கள் கருதியதால்  அது நடைமுறைக்கு மாறானது என்று நிராகரித்திருந்தது.

ஒரேநிலை ப்  பாட்டிலான உறுதிப்பாடு
இரசாயனமில்லாத விவசாயம் என்ற முடிவை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் இதுவரை ஒரேவிதத்திலான உறுதிப்பாட்டைக் காட்டியது. தேயிலைத் தொழில் போன்ற பெரியவர்த்தக  நலன்களுக்கு சில சலுகைகள் உள்ளன. உரத்திற்கு தேவையான சில இரசாயன உள்ளீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், இது ஒரு விதிவிலக்கு மற்றும்இரசாயன  உள்ளீடுகள் இல்லாமல் விவசாயம் நடைபெற வேண்டும் என்ற பொதுவான விதி தொடர்ந்து நிலவி வருகிறது. இதுவரை தங்கள் அறுவடைகள் குறைந்து வருவதைக் கண்டுகொண்டு எதிர்ப்பு தெரிவிக்கும்  விவசாய சமூகத்துடன்நெகிழ்வுத்தன்மை இல்லை. இந்த போராட்டங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகின்றன அத்துடன் சில பகுதிகளில் சிறு விவசாயிகள் விளைச்சல் மிகக் குறைவாக இருக்கும் என்று பயந்து பயிர்செய்கையில் ஈடுபடவில்லை அரசாங்கம் இழப்பீடு  வழங்க முன்வந்துள்ளது , ஆனால், நிதி நெருக்கடியால்  இது குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வருவதற்கான  சாத்தியமில்லை.
farmers-protest-srilanka-300x113.jpg
சேதன விவசாயம்  பற்றிய அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை ஒரு இராணுவவாதத்தை  பின்பற்றுவதாகத் தோன்றுகிறது, அது இலக்கை தெளிவானதாக பார்க்கிறது டன் அதற்காக என்ன விலை கொடுத்தும்   செல்கிறது. ஜனநாயக நிர்வாகத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மாற்றங்களைச் செயற் படுத்துவதற்கு முன்னால் பிரச்சினைகளுடன்சம்மந்தப் பட்டவர்களின் ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
 
பாரிய விளைவுகளை ஏற்படுத்த க்கூடிய வாய்ப்பு இருந்தால் இந்த ஆலோசனைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல நிலைகளில் நடக்க வேண்டும். மேலும் கலந்துரையாடல்களில் பெயரளவு  நடவடிக்கைகள்  போதாது. பெரும்பாலும் கந்துரையாடல்கள்  நடைபெறுகின்றன ஆனால் ஏற்பட்ட கருத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை.
 
கலந்தாலோசிப்பவர்கள் சில சமயங்களில் கேட்பதாகத் தோன்றினாலும் உண்மையில் கேட்பதில்லை அல்லது அவர்கள்முன்பாகவே உள்வாங்கியிருந்த  மனப்பான்மையையும் திட்டங்களையும் மாற்றத் தயாராக இல்லை. முடிவுகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. ஜனநாயக அரசாங்கத்தின் சாராம்சம் பொதுமக்களின்  கருத்துக்கு பதிலளிக்க வேண்டுமென்பதாகும். மேலும் சமூகத்தின்பாரிய  நலன்களுக்காக எடுக்கப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து பொதுவான  கருத்தை கற்பிப்பதாகும்.
சாதக மான  பக்கத்தில் , அரசாங்கத்தின்  கொள்கைகளுக்கு எதிரான பொது மக்கள் எதிர்ப்புகளுக்குஅது இடமளிக்கிறதென்றநற்பெய ரை வழங்குகிறது..
 
ஐநா பொதுச்சபையில் நியூயார்க்கில் உரையாற்றிய ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ச  , அமைதியான போராட்டங்களைதடுக்க   தடியடி மற்றும் வன்முறையை பயன்படுத்த வேண்டாம் என்று பொலி சாருக்கு அறிவுறுத்தியதாக கூறினார்.
 
எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வரும்அரசாங்க  பாடசாலை ஆசிரியர்களின் மூன்று மாத வேலைநிறுத்த விடயத்தில் தன்னடக்கம்  காட்டப்பட்டுள்ளது. கோவிட் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் சில ஆசிரியர்களைத் தடுத்து நிறுத்தும் போது கடுமையான கட்டுப்பாட்டுக்கான ஆரம்பகட்ட  அறிகுறிகள் இருந்தன. இந்த நேரத்தில் இந்த வலுவான கட்டுப்பாட்டு முறைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
துரதிர்ஷ்டவசமாக,சேதன விவசாய  பிரச்சனைகள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளைகருத்தொருமைப்பாடு மூலம் தீர்க்கப்படுவதற்கான அறிகுறிகள்  இல்லை . அத்துடன்  மாற்று வழிகள்தொடர்பாக  ஆராய்ந்ததாகவோ   அல்லது முன்மொழியப்பட்டதாகவோ தெரியவில்லை.
பன்முக செயல் நோக்கங்கள்
teachers-700x375-3-300x161.jpg
தற்போதையதருணத்தில்  மாகாண சபைத்  தேர்தலை நடத்துவதில் பலநோக்கங்கள்  இருக்கலாம். இந்த தேர்தல்கள் ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தாமதமாகிவிட்டன.
 
 மோசமான செயல்திறனால்  ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து  விலகிச் செல்லும் மக்களுக்கு எதிர்மறையான செய்தியை அனுப்பக்கூடும் என்பதால் முன்னைய  அரசாங்கம் தேர்தலை நடத்தத் தவறியிருந்தது   மீண்டும் தேர்தலை நடத்துவதை மிகவும் கடினமாக்கும் வகையில் தேர்தல் சட்டத்தை மாற்றினார்கள். இருப்பினும், முன்னைய ய அரசாங்கத்தைப் போலல்லாமல், தற்போதைய அரசாங்கத் தலைமைத்துவம்  தேர்தல்களை நடத்தி வெற்றிபெறுவதற்கான வலுவான ஆளுமையை  கொண்டுள்ளது.  மீண்டும் மேலோங்குவதற்கான   புதிய உபாயங்களை திட்டமிடுவதாகத் தெரிகிறது.
இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022வரவுசெலவு த்திட்டம்  வாக்காளர்களின் உடனடி கவலைகளை குறுகிய காலத்திலாவது தீர்க்க அரசுக்கு வாய்ப்பளிக்கும். இந்தத் தருணத்தில் தேர்தல்கள் அரசியல் அதிகாரம் மற்றும் தற்போதைய தருணத்தில் திருப்தியடையக்கூடியவர்களாக  உள்ள  இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கான அனுகூலங்களை உறுதிபடுத்துவதற்கு   உதவியாக இருக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லி ம் கட்சிகளுக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவது அதிகளவுக்கு  நன்மை பயக்கும்.மத்தியில் அவை அரசியல்  அதிகாரத்தை கொண்டிராத நிலையில் தேர்தலைநடத்துவது மாகாண  மட்டத்தில்அரசியல்  அதிகாரத்தை  பகிர்ந்து  கொள்வதற்கானஒரு வாய்ப்பை  கொடுக்கிறது . மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் திடீர் முடிவு இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் விளைவாகும் என்ற ஊகம் உள்ளது. இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை க்கு வருகைதந்த  குறுகிய காலத்திலேயே  அரசின் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான  அவரது சந்திப்பில், 13 வது திருத்தத்தை முழுமையாக அமு ல்படுத்த வேண்டும் மற்றும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியி ருந்தார்..  இந்திய வெளியுறவு செயலாளர்அவரது  வருகையின் போது  தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன் ஆனால் தங்களுக்கு  உள்ள பிரச்சனைகளை கலந்துரையாடி   இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டுமெனவும்  தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், மாகாணசபை த்  தேர்தல்களை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டை ஆக்கிரமித்துள்ள நெருக்கடியானநிலைமைக்கு மத்தி யில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையும்.  அத்துடன்   நியூயார்க்கில்ஐநா பொதுச்சபையில்அவர் அளித்திருந்த  உறுதிமொழிகளில் ஜனாதிபதிகோத்தாபய  ராஜபக்ச உறுதியாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறியாகும். அரசாங்கம் தற்போது இருக்கும் சாதகமற்ற அரசியல் சூழ்நிலையில் கூட மாகாணசபை தேர்தல்களை நடத்துவது, நல்லிணக்க செயல்முறை தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி புறக்கணிக்கவில்லை என்ற சாதகமான செய்தியை அளிக்கிறது. போருக்கான அடிப்படை  காரணங்களை நிவர்த்தி செய்வது மற்றும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எந்தவொரு  அரசாங்கத்தினதும்   முதன்மையான   முன்னுரிமையாக இருக்க வேண்டும். தற்போது உள்ள மாகாண சபை முறைமையை அதிகாரங்கள் மற்றும் வளங்களை விநியோகிப்பதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட வேண்டியதேவை  உள்ளது . இன மற்றும் மத சிறுபான்மையினர் தாங்கள்  நாட்டின் நிர்வாக கட்டமைப்புகளின்ஓரங்கமாக  இருக்கிறார்கள்என்று உணர்வதற்கும்  தேசிய நல்லிணக்கதிற்கான  பகிர்ந்துகொள்ளப்பட்டஎதிர் காலதின் இணைப் பங்காளர்களாகஇருப்பதற்கும்       இதுவே  முன்னோக்கி  செல்வதற்கான வழியாகும்.

https://thinakkural.lk/article/145132

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.