Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீடா பீடா பீடா பீடா பீடா...

Featured Replies

copyofdsc01496nq6.jpg

copyofdsc01497gs8.jpg

copyofdsc01498sq4.jpg

தேவையான பொருட்கள்:

வெற்றிலை

பாக்குத்தூள்

கற்கண்டு தூள்

பீடா கலவை அல்லது சர்பத் கலவை

கராம்பு

செய்முறை:

பீடா கலவையை (கடையில் வாங்கலாம்) முதலில் அடுப்பில் வைத்து சிறிதளவு கொதிக்க வைக்க வேண்டும். (அம்மாவிடம் எவ்வளவு நேரம் என்று கேட்டபோது சட்டி கொதிக்க மூன்று நிமிசம் பிடிக்கும் என்றபடியால் ஒரு ஐந்து நிமிடம் என்று எழுதச்சொன்னா) பின் இந்த கலவையுடன் பாக்குத்தூள், கற்கண்டு தூள் ஐ கலந்து குழைக்க வேண்டும். இந்த கலவையை வெற்றிலையினுள் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மடித்து, கராம்பு குச்சியினால் மடிப்பு கழறாதபடி குற்றிவிட வேண்டும். பீடா கலவை கிடாக்காவிட்டால் சர்பத் கலவையையும், பக்கற்றில் வரும் தேங்காய்ப்பூ தூளையும் பயன்படுத்த முடியும்.

மேலே உள்ள பீடா எனது வீட்டில் முந்தாநாள் செய்யப்பட்டது. இப்போது பிரிஜ்ஜில் இருந்து வெளியே எடுத்து உங்களுக்காக படமாக இணைத்துள்ளேன்.

பீடா தயாரிப்பை இன்னும் தெளிவாக கூறக்கூடியவர்கள் உங்கள் ஐடியாக்களை சொல்லவும்.

பீடா சப்புவதற்கு ருசியாக இருந்தாலும், சிலருக்கு இது நெஞ்சில் அடைப்பை ஏற்படுத்தி குழப்பங்கள் செய்யக்கூடும். இப்போதுவரை இன்று நான் எட்டு பீடாக்களை சப்பி முழுங்கியுள்ளேன். இதன் பின்விளைவுகளை பற்றி இன்னும் 24 மணிநேரத்தில் அறிவிக்கின்றேன்.

இந்த பீடா கலவையை ஏதோ றோஸ் பிராண்ட் என்று சொன்னார்கள். அது ஒரு ரின்னில் வந்தது. இங்கு பீடாவை பற்றி நான் எழுதமுன் ரின் ஏற்கனவே கார்பேஜ் செய்யப்பட்டு விட்டதால் அந்த மேக் என்ன என்று தெரியவில்லை. இந்த பீடா கலவையை சவ்வரிசி, ரோசாப்பூ மற்றும் சில கலவைகள் போட்டு தயாரிப்பதாகவும் அது ஒரு களி போல் தோற்றம் அளிக்கும் என்றும் அறிந்தேன்.

இந்த பீடா கலவையை எமக்கு செய்து தந்தவர் பின்னேரம் தனது ஊருக்கு போய்விட்டார். நான் அவருக்கு லோங்க் டிஸ்டன்ஸ் கோல்போட்டு கதைத்து கேட்டு இந்த செய்முறையை அவரிடம் பெற்று இணைத்துள்ளேன்.

பீடாவை நினைக்க எனக்கு முதலில் நினைவுக்கு வருவது யாழ்தேவி ரெயில் பயணம். ஒவ்வொரு இடங்களிலும் புகையிரதம் நின்றதும் பீடா பீடா பீடா பீடா பீடா என்று கத்திக்கொண்டு புகையிரதத்தினுள் வந்து பீடா விற்பார்கள்.

நீங்களும் பீடாவை செய்து பார்த்து அது எப்படி இருக்குதென்று சொல்லுங்கோ. நான் கூறிய செய்முறையில் ஏதாவது பிழைகள் இருந்தால் அறியத்தரவும். நன்றி!

மாப்பி பீடாவை பார்க்க நல்லா தான் இருக்கு.................இதை பார்த்தா நாட்டில திருமணவீட்டிற்கு போயிட்டு பீடாவை அள்ளி கொண்டு வாறது தான் ஞாபகம் வருது.........இப்ப நினைக்க சிரிப்பா இருக்குது.............எனக்கு சரியான விருப்பம் ஆனா அப்பா சாப்பிட விடமாட்டார் ஏசுவாஎர் ஆனா நாம கள்ளமா சாபிடுறது தான்............ ;)

பீடா கலவையை (கடையில் வாங்கலாம்) முதலில் அடுப்பில் வைத்து சிறிதளவு கொதிக்க வைக்க வேண்டும்

பீடாவை கொதிக்க வைக்க வேணுமா? தண்ணிவிட்டா ? பீடாகலவை எப்படி இருக்கும் எண்டு பார்த்ததில்லை .... எதுக்கு தமிழ் கடைகளுக்கு போனால் பாக்கிறன்....!

சரி நீங்க எத்தனை பீடா சாப்பீட்டீங்க! ;)

யாரும் செய்து பார்த்தால் சொல்லுங்க .... நானும் செய்து பழகப் போறன்.... B) :P

பிடிக்கல பிடிக்கல பிடிக்கல எனக்கு பீடா பிடிக்கல :rolleyes:

  • தொடங்கியவர்

யம்மூ, அப்பா ஏன் ஒங்கள பீடா சாப்பிட விடமாட்டாராம்? என்ன காரணம் என்று கேளுங்கோ. குருநாதர் கேட்பதாய் சொல்லுங்கோ. Diaper கட்டும் குழந்தைகளிற்கு பீடா ஆகாது, மற்றும்படி அனைவரும் பீடா சப்பலாம். (நோயாளிகள், இருதய நோய் மற்றும் இருதயத்தில் சிக்கல்கள் உள்ளவர்கள் தவிர)

திருமணவீட்டில் நீங்கள் பீடாவை அள்ளிக்கொண்டு போவீங்களா? எனது திருமணத்துக்கு வாங்கோ (ஒரு காலத்தில் நடந்தால்...) நான் உங்களுக்கு பீடாவிலையே சாப்பாடு போடுறன். பீடா தூள் கலந்த பீடா சோறு, பீடா தூள் தடவிய அப்பளம், பீடா வடை, பீடா குழம்புக்கறி, பீடா வெள்ளைக்கறி, பீடா பிரட்டல், பீடா பொரியல், பீடா பாயாசம்.. போதும்தானே:??

அனி, பீடா கலவையை கொதிக்கவைக்க வேணும். ஆனா தண்ணிவிட தேவையில்லை என்று நினைக்கிறன். களியாக இருந்தால்தானே அதை வெற்றிலையில் வைக்க முடியும்? தண்ணியாக இருந்தால் அது பிறகு கரைஞ்சு வெத்திலை எல்லாம் ஓடித்திரியுமே?

ஹிஹி.. நான் நேற்று எட்டு பீடா சாப்பிட்டனான். உண்மையில இப்படி சாப்பிட கூடாது. எனக்கு நேற்று முழுவதும் சரியான ஒரு மந்தநிலையா இருந்தது. அதாவது ஒரு சோம்பல் மாதிரி உணர்வு. பீடா ஒரு போதை தானே? எனவே, அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டா தலையில் போதை ஏறக்கூடும். உங்களுக்கு பீடா சாப்பிட்டு ஏதாவது நடந்தால் பிறகு அதற்கான பொறுப்பு நான் இல்லை. இன்னொரு விசயம் எனக்கு எட்டு பீடா சாப்பிட்டதால் வயிற்றால் ஒன்றும் அடித்து துன்பப்படவில்லை.. ஒரு நாளைக்கு நாலு பீடாவுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்று நினைக்கின்றேன்.

ஆனால், முக்கியமான ஒரு விசயம் இது சிலருக்கு நெஞ்சில் அடைப்பை ஏற்படுத்தகூடும் அல்லது சுவாசிப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறான பிரச்சனைகள் உடையவர்கள் ஒருபோதும் பீடா சாப்பிட்டு வீண் Risk எல்லாம் எடுக்கக்கூடாது.

மற்றையது, பீடாவில் ஒரு கூடாத விடயம் இது பற்களினுள் போய்ச் சொருகிக்கொண்டு இருக்கும். எனவே, பீடா சாப்பிட்டதும் ஒழுங்காக பல்லு மினுக்க வேண்டும்.

கடைசியாக, வில்லுக்கு ஏன் பீடா பிடிக்கவில்லை? பீடாவிற்கு பின்னால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது சோகக்கதை ஒளிந்து இருக்கோ?

குருவே நம்மள பற்றி தெரியும் தானே நாம ஒன்று சாப்பிடமாட்டோம் எடுத்தா 6-- 7 என்ற கணக்கில சாப்பிடுவோம் ஆனால் அப்பா கத்த தொடங்குவார் கடைசு இரண்டு தான் சாப்பிட வேண்டும் என்று இல்லாட்டி பல்லுக்கு கூடாது என்று எலாம் ஆனா நாம கள்ளமா சாப்பிடுறது சாப்பிடுறது தான்........ஆனாலும் பாருங்கோ..........பள்ளி படிக்கிற நாட்களிள சரஸ்வதி கோல் என்று பம்பலபிட்டியில இருகிறது அங்கே யாருக்கும் திருமணம் நடக்கும் நாம வடிவா போய் சாப்பிட்டுவிட்டு பீடா எடுத்து கொண்டுவருவோம் அதில இருகிற சுகம் தனி ஒரு சுகம் பாருங்கோ................... :P

குருவே உங்களுக்கு திருமணமா நிச்சயமா வாரேன் எனக்கு எல்லாம் கண்டிப்பா போடுங்கோ அப்படியே சிஷ்யனுக்கு உங்க திருமணத்தில எனக்கு தகுந்த ஒருவாவை பார்த்து தந்தா இன்னும் நல்லா இருக்கும்.......பிறகு அறிவு இருக்கோ மூளை இருகோ என்று ஆராய வேண்டாம் பாருங்கோ.......... :P

;)

அப்ப நான் வரட்டா.............. :P

  • கருத்துக்கள உறவுகள்

பீடா சாப்பிடுவது கெட்ட பழக்கம் என்று சொல்லுகின்றார்களே.. மந்தமாக இருப்பது என்பதும் ஒரு போதையில் இருப்பதும் ஒன்று என்று கொள்ளலாமா?

எனக்குத் தெரிந்தவரை இந்தியாவிலும், இலங்கையிலும் பலர் வாயிலுள்ள துர்நாற்றத்தைப் போக்குவதற்காக பீடாவை சப்புகின்றனர்.. மேற்கு நாடுகளில் பீடாவைச் சப்பியபின் "புளிச்" என்று துப்ப எங்கு போகலாம்??

லண்டனில் என்றால் அல்பேர்ட்டன், சவுத்தோல் போகலாம்

ஏனுங்கோ குப்பைதொட்டி இல்லையா

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ குப்பைதொட்டி இல்லையா

குப்பைத் தொட்டியை சிவப்புத் தொட்டியாக்கக் கூடாதுங்கோ B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞரே உங்கள் பீடாவை பார்க்க எனக்கு கொழும்பில் உள்ள BOMBAY SWEETS தான் ஞாபகம் வருகுது. வகுப்பு முடிய பீடா வாங்குவதற்காகவே அந்த பஸ் கோல்ட்டில இறங்குறனான்

கலைஞரே உங்கள் பீடாவை பார்க்க எனக்கு கொழும்பில் உள்ள BOMBAY SWEETS தான் ஞாபகம் வருகுது. வகுப்பு முடிய பீடா வாங்குவதற்காகவே அந்த பஸ் கோல்ட்டில இறங்குறனான்

பீடா வாங்க இறங்கினீங்களோ என்னதிற்கு இறங்கினீங்களோ யாருக்கு தெரியும்...சரி தங்கா என்ன வகுப்புக்கு போறனீங்கள்............... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீடா வாங்க இறங்கினீங்களோ என்னதிற்கு இறங்கினீங்களோ யாருக்கு தெரியும்...சரி தங்கா என்ன வகுப்புக்கு போறனீங்கள்............... :P

என்ன வகுப்பு என்டு உங்களுக்கு சொல்ல மாட்டன். :D

என்னத்துக்கு இறங்கினான் என்டோ கேட்கிறியள்??? அம்மா தான் அனுப்பினவ அண்ணா எங்க நின்டு சைட் அடிக்கிறான் என்டு பாத்திட்டு வரச்சொல்லி :lol:

என்ன வகுப்பு என்டு உங்களுக்கு சொல்ல மாட்டன். :D

என்னத்துக்கு இறங்கினான் என்டோ கேட்கிறியள்??? அம்மா தான் அனுப்பினவ அண்ணா எங்க நின்டு சைட் அடிக்கிறான் என்டு பாத்திட்டு வரச்சொல்லி :lol:

ஏன் அண்ணாவிற்கு என்ன வகுப்பு என்று சொன்னா என்ன........... ;)

வெறி சொறி நாம பொம்பே சுவீட்டுக்கு முன்னாடி நின்று சைட் எல்லாம் அடிகிறது இல்லை அது நம்ம ஏரியா இல்லை ஆக்கும்...............லிட்டில் ஏசியா பஸ் கொல்டில இருந்து அடிக்கிறது தான் நாம................. :P

மாப்பி பீடாவை பார்க்க நல்லா தான் இருக்கு.................இதை பார்த்தா நாட்டில திருமணவீட்டிற்கு போயிட்டு பீடாவை அள்ளி கொண்டு வாறது தான் ஞாபகம் வருது.........இப்ப நினைக்க சிரிப்பா இருக்குது.............எனக்கு சரியான விருப்பம் ஆனா அப்பா சாப்பிட விடமாட்டார் ஏசுவாஎர் ஆனா நாம கள்ளமா சாபிடுறது தான்............ ;)
நானும் இதே போலவே தான். திருமண வீட்டில் 2 3 என்று எடுத்துடுவேனே. ஹீஹீஆனால் ஒருமுறை பாக்கு வெத்திலை சுண்ணாம்பு புகையிலை இவ்வளத்தையும் சாப்பிட்டு மயக்கமாக இருந்திச்சு. அதன் பின்பு உந்த பாக்கு சாப்பிடுறதில்லை. ஆனால் எங்காவது திருமணம் னு போனால் கண்டிப்பாக 2 3 பீடா எடுத்து சாப்பிடுவேன் அதுவும் அந்த நுனில குத்தி இருக்குமே கராம்பு அதை எறிஞ்சிட்டு.[quote name='Ja

நானும் இதே போலவே தான். திருமண வீட்டில் 2 3 என்று எடுத்துடுவேனே. ஹீஹீஆனால் ஒருமுறை பாக்கு வெத்திலை சுண்ணாம்பு புகையிலை இவ்வளத்தையும் சாப்பிட்டு மயக்கமாக இருந்திச்சு. அதன் பின்பு உந்த பாக்கு சாப்பிடுறதில்லை. ஆனால் எங்காவது திருமணம் னு போனால் கண்டிப்பாக 2 3 பீடா எடுத்து சாப்பிடுவேன் அதுவும் அந்த நுனில குத்தி இருக்குமே கராம்பு அதை எறிஞ்சிட்டு.

ஓ நிலா அக்காவும் நம்மள மாதிரியோ..........கீப் இட் அப்.........வெற்றிலை சுண்ணாம்பு சாப்பிட்டு மயங்கி போனீங்களோ..............இந்த நிலா அக்காவிற்கு எப்ப பார்த்தாலும் மயங்கி விழுறது போகுது இல்லை....ஆமாம் எனக்கும் அந்த கராம்பு பிடிக்காது தான்............... :P

ஏன் அண்ணாவிற்கு என்ன வகுப்பு என்று சொன்னா என்ன........... ;) வெறி சொறி நாம பொம்பே சுவீட்டுக்கு முன்னாடி நின்று சைட் எல்லாம் அடிகிறது இல்லை அது நம்ம ஏரியா இல்லை ஆக்கும்...............லிட்டில் ஏசியா பஸ் கொல்டில இருந்து அடிக்கிறது தான் நாம................. :P
இங்கை பார் எப்ப பார்த்தாலும் சைட் அடிக்கிறதுதான் வேலையாப்போச்சு.ஓ லிட்டில் ஏசியாவுக்கு முன்னாலையோ? நான் நினைச்சேன் சீடீ வேர்ல்ட் & ரூபம் இதுகளுக்கு முன்னாலை என்று எல்லோ :angry: :angry:
ஓ நிலா அக்காவும் நம்மள மாதிரியோ..........கீப் இட் அப்.........வெற்றிலை சுண்ணாம்பு சாப்பிட்டு மயங்கி போனீங்களோ..............இந்த நிலா அக்காவிற்கு எப்ப பார்த்தாலும் மயங்கி விழுறது போகுது இல்லை....ஆமாம் எனக்கும் அந்த கராம்பு பிடிக்காது தான்............... :P
ஓகோ கராம்பு பிடிக்காதா? அதென்ன எதை நான் பிடிக்கும் னு சொல்லுறேனோ அதெல்லாம் உங்களுக்கும் பிடிக்கும் னு சொல்லுறீங்க. பிடிக்காது என்றாலும் அப்படியே தான் ஏன் ? :D

இங்கை பார் எப்ப பார்த்தாலும் சைட் அடிக்கிறதுதான் வேலையாப்போச்சு.ஓ லிட்டில் ஏசியாவுக்கு முன்னாலையோ? நான் நினைச்சேன் சீடீ வேர்ல்ட் & ரூபம் இதுகளுக்கு முன்னாலை என்று எல்லோ :angry: :angry:

நிலா அக்கா லிட்டில் ஏசியா காலம சிவ்ட்.............ரூபம்...............சீடிவே??? எல்லாம் ஆவ்டநூன் சிவ்ட் மறந்து போனீங்க போல............ :P

ஓகோ கராம்பு பிடிக்காதா? அதென்ன எதை நான் பிடிக்கும் னு சொல்லுறேனோ அதெல்லாம் உங்களுக்கும் பிடிக்கும் னு சொல்லுறீங்க. பிடிக்காது என்றாலும் அப்படியே தான் ஏன் ? :D

பின்னே அக்காவிற்கு பிடிக்காது தம்பிக்கும் பிடிக்காது தானே.............இட்டிலியில் இருந்து எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு எது இரண்டு பேருக்கும் மாறி வருது என்று பார்போம்............. :P

Edited by Jamuna

பீடா போட்டால் வீட்ட பேசிவினம் போடக்கூடாது என்று ,நான் களவா போட்டிடுவன் என்றதற்காக சொல்லுவினம் பீடா போட்டா படிப்பு வராது என்று அப்பிடி இருந்தும் ஒரு நாள் போட்டிட்டன் அது தலைச்சுற்றும் மயக்கமும் அதிலிருந்து அதை தொடுறதில்லை :P :P

நிலா அக்கா லிட்டில் ஏசியா காலம சிவ்ட்.............ரூபம்...............சீடிவே??? எல்லாம் ஆவ்டநூன் சிவ்ட் மறந்து போனீங்க போல............ :P

பின்னே அக்காவிற்கு பிடிக்காது தம்பிக்கும் பிடிக்காது தானே.............இட்டிலியில் இருந்து எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு எது இரண்டு பேருக்கும் மாறி வருது என்று பார்போம்............. :P

அட அட சிவ்ட் வேர்க்? அட பாவி

ஓ சரி சரி என்ன என்ன மாறி வருது னு பார்ப்பம்/

அட அட சிவ்ட் வேர்க்? அட பாவி

ஓ சரி சரி என்ன என்ன மாறி வருது னு பார்ப்பம்/

அதை சிட்னியிலையும் கொன்டினியு பண்ணுகிறேன் ஆனா நேரம் தான் கொஞ்சம் சிக்கல் பாருங்கோ.........

பார்த்தா போச்சு.......... :P

அதை சிட்னியிலையும் கொன்டினியு பண்ணுகிறேன் ஆனா நேரம் தான் கொஞ்சம் சிக்கல் பாருங்கோ.........

பார்த்தா போச்சு.......... :P

ஓ அங்கேயுமா?

தங்கா கொஸ்டல் சுண்டல் கொலிஜ் மொண்டசூரி

ஓகே நடக்கட்டும் நடக்கட்டும்

பீடா போடுறதில்லையோ சிட்னி ல

ஓ அங்கேயுமா?

தங்கா கொஸ்டல் சுண்டல் கொலிஜ் மொண்டசூரி

ஓகே நடக்கட்டும் நடக்கட்டும்

பீடா போடுறதில்லையோ சிட்னி ல

தங்கா இங்கே கொஸ்டலில இல்லை நிலா அக்கா.............அவா பிரிஸ்பன் ஆத்தில இருக்கா..............மொண்டசூரி சுண்டல் எல்லாம் சரியா செய்வோமல..........நிலா அக்காவே சொல்லிட்டா பிறகு என்ன.............இங்கே பீடா எல்லாம் போடுறதில்லை.............கல்யான வீடு வந்தால் தான்.......எனக்கு பீடாவை விட நிஜாம்பாக்கு என்று சொல்லுவீனம் அது சரியான விருப்பம்......அது இங்கையும் சாப்பிடுறனான் தான்...........அப்பாவிற்கு தெரிந்தா திட்டு தான் விழும் ஆனா வருக்கு தெரியாம தான்............. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கா இங்கே கொஸ்டலில இல்லை நிலா அக்கா.............அவா பிரிஸ்பன் ஆத்தில இருக்கா..............

தங்கா ஆத்தில என்டு சொல்லுறார் கரை சேர்ப்பம் என்டு ஒரு யோசனையும் இல்லை :P

தங்கா ஆத்தில என்டு சொல்லுறார் கரை சேர்ப்பம் என்டு ஒரு யோசனையும் இல்லை :P

ஆமாம் கரை சேர்கிறதோ...............அது தானே கப்பலில அண்ணாவிற்கே சொல்லாம ஏறி போட்டு இப்ப கரை சேர்க்க சொன்னா............... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் கரை சேர்கிறதோ...............அது தானே கப்பலில அண்ணாவிற்கே சொல்லாம ஏறி போட்டு இப்ப கரை சேர்க்க சொன்னா............... :P

சொன்னா கரை சேர விடமாட்டீங்க என்ட பயத்தில தான் சொல்லலையாக்கும் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.