Jump to content

கனகி புராணம் – யாழ்ப்பாணத்து காமசூத்திரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்தக்கால Sunny Leone, Mia Khalifa போன்ற Porn Star களைப்போல 19ம் நூற்றாண்டில் யாழ் வண்ணார் பண்ணையில் வசித்தவர் பிரசித்தமான கனகி என்னும் கணிகை. கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார்  புலவர் சுப்பையனார். புலவர் வெட்டை நோய் எனும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர் என அறிய முடிகின்றது.கனகியின் 
 வாடிக்கையாளர்களில் ஆறுமுகநாவலரும்  அடங்குவார் என்பது கனகிபுராண செய்யுள்களிலிருந்து ஊகிக்க முடிகின்றது.

அவருடைய ஆதி ஒலைப்பிரதிகள் தொலைந்திருக்கவேண்டும். 19 ம் நூற்றாண்டில் கனகி புராணம் வாய்மொழி இலக்கியமாகவே இருந்திருக்கின்றது. நான் சிறுவயதில் படித்த நளவெண்பா, திருக்குறளின் காமத்து பால் என்பவற்றை விட, கனகி புராணம் கிளர்ச்சியாக இருக்கின்றது, என்பது ஆச்சரியமாகவும் , பெருமையாகவும் உள்ளது. அண்மையில் ஒரு முகநூல் பதிவின் மூலம் தான் கனகி புராணம் அறிமுகம் ஆனது, இவ்வளவு காலமும் இதனை படிக்கவில்லை என்ற கவலைக்கு உள்ளானேன்.


#செய்யுள்01
"தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றோ டொன்றமையா(து)
அடர்த்திமையாத கறுத்த கணதனால்
அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்"

#பொழிப்புரை
பருத்து அடிவிரிந்து மேலோங்கி விம்மிச் செழித்து இரண்டும் தம்முள் ஒன்றோடொன்று மென்மேலும் நெருக்கி முனைந்து நிற்பது போல ஒத்திருந்து தம்முடைய கண்களாலே செய்தற்கரிய தவஞ்செய்த முனிவருடைய உயிரைப் பருகியது போலத் தோன்றி முத்துமாலை முதலா வடங்களுக்குள் அடங்காமல், இரட்டித்துப் போட்ட இறவுக்கையையும் கிழித்து, மதம் பொழியும் யானைக் கொம்பைக் காட்டிலும் குத்துவதுபோல நிமிர்ந்து, மேலாடைக்கு மேலும் புலப்படுகின்ற, தேமல் வரிசைகள் பரந்து புடைத்த இரண்டு பாரமான கொங்கைகளை யுடையவள் (கனகி).

#செய்யுள்02
கொஞ்சிக் கடிக்கத் தனங் கொடுத்துக்
கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்,
மஞ்சட் புரண்ட முகத்தாளே!
மாரன் கரும்பை வளைப்பவளே!
கிஞ்சிற் றனமும் குத்திரமுங்
கேடு நிறைந்த மனமுடையோன்
வஞ்சக் கொடியோன் பெரியதம்பி
வரத்தால் வந்த வைத்தியனே.

#பொழிப்புரை
முத்தமிட்டுக் கடிப்பதற்கு தன் தனத்தை(முலைகள்) ஆடவர்க்குக் கொடுத்து, அவர் கொடுத்த தனத்தைத் தான் வாங்குகின்ற, அரைத்த மஞ்சளிலே புரண்டாற் போல் மஞ்சள் ஒட்டிய முகமுடையவளே! மன்மதனுடைய கரும்பு வில்லை வளைக்கின்றவளே! உலோபத்தன்மையும் வஞ்சனையும் வேறு கெட்ட எண்ணங்களும் நிரம்பிய மனமுடையவன் வஞ்சகஞ் செய்கின்ற இரக்கமற்ற பாவி பெரியதம்பி என்பவன். இவன் தன் பெற்றோருக்கு வரத்தினால் பிறந்த வைத்தியத் தொழிலாளி.

http://www.noolaham.org/wiki/index.php/கனகி_புராணம்
 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.