Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

'தமிழீழத்தின் நேதாஜி'

மாமனிதர் இராசரத்தினம்.jpg

'படிம விளக்கம்: யாழ்ப்பாணத்தில் எங்கையோ ஓரிடத்தில் நின்று புகைப்படத்திற்குப் பொதிக்கிறார் / படிமப்புரவு: நன்னிச் சோழன். ஆனால் இதை இலவச பதிப்புரிமையின் கீழ் வெளியிடுகிறேன்'

 


மூலம்: 
         --> 'விடுதலைப்புலிகள்', குரல் 3, சூலை 1984, பக்: 10
         --> ஈழநாதத்தின் 'வெள்ளி மஞ்சரி', 26|7|1991, பக்: 5 
         --> 'விடுதலைப்புலிகளின் வீர வரலாறு' நூல், பக்: 8-9

எழுத்துணரியாக்கம் & தொகுப்பு: நன்னிச் சோழன்

 

 

விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகம் சாவகச்சேரியில் எடுத்த முத்தமிழ் விழாவில் தமிழீழத் தேசிய விருதான 'மாமனிதர்' வழங்கி மதிப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவரான திரு. ஆ. இராசரத்தினம் ஆவர்கள் பற்றிய குறிப்பை இங்கே தருகின்றோம். மறைந்த திரு ஆ. இராசரத்தினம் அவர்களின் புதல்வியர் இருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்களுடன் இயக்கத்தின் ஆரம்பக் காலத்தில் திரு ஆ. இராசரத்தினம் ஆவர்கள் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தார். 

"எளிமை, அடக்கம், ஓயாத உழைப்பு, இலட்சியப்பற்று என்பன இந்தத் தூய இலட்சியவாதியின் மிக நல்ல பண்புகளாகும். விரிந்த நெற்றி - அதிலே விழுந்திருக்கும் சிந்தனைச் சுருக்கங்கள் - நிறைந்த சிரிப்பு - ஒளிவீசும் கண்கள் - ஒல்லியான உடம்பு - திண்ணியம் உள்ளம் இவற்றுடன் தமிழ், தமிழினம், தமிழீழ விடுதலை பற்றிய எண்ணங்களுடனேயே வாழ்ந்து வந்தார் திரு. ஆ. இராசரத்தினம் அவர்கள்."

இந்தக் கூற்று 1976லே திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் அமரராகியபோது நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்தில் அவரது நண்பர் ஒருவரின் எடுத்தியம்பல் ஆகும்.  

இயல்பாகவே இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவரான திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் அனுராதபுரம் மாவடியை பிறப்பிடமாகக் கொண்டவர் - 1956இல் சிங்களம் மட்டுமே அரச கருமமொழி என்ற சட்டம் வந்ததைத் தொடர்ந்து அவரது இனவிடுதலை பற்றிய ஈடுபாடு தொடர்கிறது. 1956 முதல் 1961 வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட அறவழிப் போராட்டங்கள் அனைத்திலும் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் ஈடுபாடு காட்டியிருக்கிறார்.  

அரசாங்க ஊழியராக பணியற்றிய வேளையிலும் தமிழர்களின் உரிமைக்கா குரலை ஓங்கியொலிக்கச் செய்வதற்கான 'மொழிவழி தொழிற்சங்கம்' அமைக்கப்படல் வேண்டும் எனக் கருதிச் செயற்பட்டவர் ஆவார். இதனால் 'தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்' என்ற அமைப்பின் முன்னோடியகாவும் செயற்பட்டார்.

சிறீலங்கா அரசியலமைப்பின் 29வது விதியின்படி 'சிங்களம் மட்டும் சட்டம்' வலுவற்றது என்று முன்னாள் நீதியரசர் திரு. கிறெஸ்ரர் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்ட 'கோடீஸ்வரன் வழக்கில்' மிகவும் தீவிர அக்கறை காட்டி உழைத்தவர்.  

உண்மைத் தொண்டராக பற்றுறுதி மிக்க உழைப்பாளியாக விளங்கிய திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் 1961ம் ஆண்டு தமிழீழ மடங்கிலும் நடைபெற்ற அறவழிப் போராட்டமான சத்தியாக்கிரகம்(உண்மைப்பற்று), மறியல் போன்ற மக்கள் போராட்டங்கள் படைத்துறை அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது கண்டு உள்ளம் கொதித்தார். வரலாற்றின் கசப்பான அனுபவங்கள் தந்த படிப்பினைகளால் அறவழிப்பட்ட போராட்டங்களில் நம்பிக்கையிழந்து மென்முறைப் போக்கை கைவிட்டார்.

1961 இல் சத்தியாக்கிரகம் முறியடிக்கப்பட்டு தமிழரசுக் கட்சி தடைச் செய்யப்பட்டு, கட்சி உறுப்பினர்கள் தடுப்புக் காவலில் இருந்தபோது, திரு. இராசரத்தினம் மட்டும் சும்மா இருக்கவில்லை. 

பல நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு அவர் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினார். மிகவும் கமுக்கமான முறையில் தலைமறைவு இயக்கம் செயற்பட்டது. அரசுக்குச் சொந்தமான பேருந்துகளுக்குத் தீவைக்கப்பட்டன; யாழ். அரசாங்கச் செயலகத்தையே தீக்கிரையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் சில எதிர்பாராத தடைகளால் கைகூடவில்லை. ஆயினும் அந்த முயற்சிக்கும் முனைப்பிற்கும் யாழ்ப்பாணத்திலே அறுபதுகளிலேயே வித்திட்டவர்களில் திரு. இராசரத்தினம் முக்கியமானவர்; முதன்மையானர். மேலும், அரச உடமைகளை நாசமாக்குவதன் மூலம் தமது இனத்தின் உள்ளக்கொதிப்பை - கோபக்கனலை எடுத்துக்காட்டுவதில் முன்னின்றவர்; முனைப்புடன் ஈடுபட்டவர்.

சிங்கள சட்டத்தைத் தொடர்ந்து அரசாங்க வேலையிலிருந்து சிங்களம் படிக்க மறுத்து ஓய்வு பெற்றுக் கொண்ட திரு இராசரத்தினம், அதன் பின்பு தமிழீழ புரட்சியாளர்களில் ஒருவராக மாறினார். 

இவ்வாறாக சிங்கள வல்லாட்சி ஒடுக்குமுறையிலிருந்து தமிழீழம் விடுதலைபெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை மனதில் இருத்தி எழுபதுகளிலும் அதற்கு முன்பாகவும் தூய பணியாற்றியவர்களுள் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் குறிப்பிடப்படவேண்டியவர் ஆகிறார்.

'இலங்கை மீண்டும் எரிகிறது', 'Tamils Need a Nation, Why? : The History of Thamiraparani' என்பன போன்ற பல நூல்களை எழுதி தமிழ் மக்களின் சிக்கலை உலகின் மனசாட்சிக்கு முன் எடுத்துரைக்கப் பாடுபட்டவர் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள். இவற்றுள் தமிழீழ மக்கள் மத்தியில் மிகவும் பரவலறியான, 'இலங்கை மீண்டும் எரிகிறது' என்கிற நூல் இலங்கையில் சிங்கள அரசிற்கு சினத்தையூட்டிய சிறிய நூல். அதன் பெரும்பாலான பகுதியை 'சேரன்' என்ற பெயருக்குள் மறைந்து நின்று எழுதியவர் இராசரத்தினமேயேவார். இதேபோல் இவரால் எழுதப்பட்டு சிங்கள இனவாத அரசினால் தடைசெய்யப்பட்ட மற்றோர் நூல்தான் 'Why Tamils Need a Nation' (தமிழர்கட்கு ஏன் ஒரு நாடு வேண்டும்?) என்பதாகும்.

தொய்வு நோய் ஏற்படுத்தும் அவதி ஒருபுறமும், பசிப்பிணி ஒரு புறமும், மனைவி பிள்ளைகள் பற்றிய கவலை மற்றொரு புறமுமாக தாக்கியபோது சோர்வடையாமல் தளர்ச்சியின்றி தமிழின விடுதலைக்காக பணியாற்றிய திரு இராசரத்தினம் அவர்களின் வாழ்க்கை பல்வேறு படிப்பினைகளைத் தருவதாகும். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைப் பீடத்தினரின் வஞ்சகத்திற்கு திரு. இராசரத்தினம் அவர்களின் கடைசிக்கால வாழ்க்கை ஒரு சாட்சியாகும்.

"நண்பர்களால் ஏமாற்றப்பட்டேன், தலைவர்களின் உதாசீனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டறிந்தேன், கண்டனம் செய்தேன்"

என 1973ன் ஏப்ரல் 24ல் தனது நாட்குறிப்பில் திரு இராசரத்தினம் அவர்கள் எழுதியிருப்பது ஒருசிறு சான்று.

ஆனால் எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்நாட்டுத் தலைவர்களோடும் கட்சிகளோடும் தொடர்புகளை முதன்முதலில் ஏற்படுத்திக்கொண்ட பெருமையும் உரிமையும் திரு ஆ. இராசரத்தினம் அவர்களுக்கே சொந்தம்.

 1971ம் ஆண்டில் திரு. ஆ. இராசரத்தினம் அவர்கள், தமிழ்நாட்டுக்கு திரு. அமிர்தலிங்கம், திரு. கோவை மகேசன் ஆகியோருடன் வந்து அறிமுகங்களை இன்னும் வளர்த்துக்கொண்டார்.

1972 ஆம் ஆண்டிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று தலைவர்களையும் செய்தியாளர்களையும் சந்திக்க வைத்து தமிழ்நாட்டிற்கு தமிழீழ சிக்கலை அறிமுகம் செய்வதற்கு காரணகருத்தாவாக விளங்கினார் என்பது மிகவும் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

1973 மார்ச் 23ல் யாழ்ப்பாணம் பண்ணப்பாலத்திற்கருகே அன்றைய சிறீலங்கா அரசின் கைக்கூலி அமைச்சரான குமாரசூரியர் சென்ற மகிழுந்தை குண்டுவைத்துத் தகர்க்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரால் காவல்துறையால் தேடப்பட்டார். காவல்துறையினர் விரித்த வலைக்குள் சிக்காமல் எப்படியோ தப்பி தமிழ்நாட்டிற்குச் சென்றார். தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக ஆயுதம் ஏந்திப் போராடக்கூடிய கட்டுப்பாடான ஒரு புரட்சிகரமான இயக்கத்தை கட்டி எழுப்பும் அவாவில் தீவிரமாக செயற்பட்டவர். திரு இராசரத்தினம் அவர்களின் நாட்குறிப்பில் இருந்த சில பகுதிகளை இங்கு காணலாம். 

  • 1973 ஏப்ரல் 21:

"எனது இனம் சுயஉரிமையை பெறவேண்டுமானால் பலாத்காரப் புரட்சிதான் ஒரே வழி. இதற்காக எனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்விடையத்தில் எனது மனம் உறுதியடைந்துகொண்டு வருகிறது."

  • 1973 மே 6:

"ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களைக் கொண்ட விடுதலைப்படை அமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். இவர்களின் உடைக்கு ஒரு நிறம்."

தமிழீழத்தில் தமிழர்கள் ஆயுதப் புரட்சியை ஏற்படுத்தாது விட்டால் நமது இனம் அழிந்துவிடும் எனக் கருதிய அவர், இதற்குரிய வழிவகைகளை வகுப்பதற்காக மற்றைய நாடுகளில் நடைபெற்ற இயக்கங்களின் வரலாறுகளைக் கவனமாகப் படித்து வந்தார். 'Rebels' என்ற நூலை வாசித்துப் பார்த்ததிலிருந்து அதைப் போன்றதொரு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தார்.

இந்த வேளையிலேயே தமிழ் மாணவர் பேரவையின் அமைப்பாளர்களில் ஒருவரான சத்தியசீலன் கைதானதைத் தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்புச் சீர்குலைந்து உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தலைமறைவாகிவிட்ட நிலையில் தமிழகம் சென்றிருந்த வே. பிரபாகரனும் இராசரத்தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழ் மாணவர் பேரவை அமைப்பு சீர்குலைவிற்குப் பிறகு தலைமறைவானவர்கள் மீண்டும் இயங்குவதற்குத் தயங்கி நின்ற வேளையில் தமிழீழ விடுதலைக்காக ஒரு கட்டுப்பாடான விடுதலை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்த பிரபாகரனுக்கு இராசரத்தினம் அவர்களின் தொடர்பு ஒரு புதிய நம்பியைக்கையை ஊட்டியிருந்தது. ஆங்கிலத்திலிருந்த பல்வேறு நாட்டு விடுதலை இயக்கங்களின் வரலாறுகளையும் படைத்துறை அமைப்புக்குத் தேவையான பல செய்திகளையும் தமிழில் மொழிபெயர்த்தார் திரு இராசரத்தினம் அவர்கள். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னோடி இயக்கமான 'புதிய தமிழ்ப் புலிகள்' (TNT) இயக்கம் என்ற பெயர் சூட்டப்படுவதற்கு திரு இராசரத்தினம் அவர்களின் ஆலோசனை மூலகாரணமாக இருந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாடு சென்று விடுதலைப்படையை அமைத்துப் போராடி வீரமரணம் அடைந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள். அதுபோலவே தமிழீழ விடுதலைப் போராட்டதிற்காக இலங்கையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைக்கு போராட ஒரு ஆயுதப்படையை அமைக்க வேண்டும் என்ற ஆவலில் செயற்பட்டு வந்தவர் ஆ. இராசரத்தினம் அவர்கள். தமிழ்நாட்டிலேயே அவர் தன்னுயிரையும் ஈந்துவிடவும் நேரிட்டது. மறைந்த திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் தமிழீழ மக்களால் 'தமிழீழத்தின் நேதாஜி' என நினைவு கூரப்படுதல் பொருத்தமானதே. அவர் கனவு கண்ட 'தமிழரின் தேசிய இராணுவ அமைப்பு' என்பதும் 'தமிழீழ விடுதலைப் போராட்டம்' என்பதும் கண்முன்னான நிகழ்வுகளாக மாறியிருக்கும் இவ்வேளையில் அவரது நினைவைத் தூண்டுதல் உண்மைத் தொண்டன் ஒருவனுக்கு வழங்கப்படும் மதிப்பளிப்பு ஆகும்.

 

 

*********

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பகிர்ந்துகொள்ளப் பின்னிற்காதவர்

 

மறைந்த 'மாமனிதர்' இராசரத்தினத்தின் மனைவியுடன் ஒரு சந்திப்பு

 

 

மூலம்: ஈழநாதத்தின் வெள்ளி மஞ்சரி, 26|7|1991, பக்: 5
தட்டச்சு: நன்னிச் சோழன்

 

சாவகச்சேரிப் பகுதியில் கண்டிவீதியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு ஒழுங்கைக்கு உள்ளிருக்கும் ஒரு விட்டிற்கு ஒரு காலை வேளையில் சென்றேன். தென்னைமரங்கள் வரிசையாக நாட்டப்பட்டிருந்தன. ஒழுங்கையில் இருந்து சுமார் 100 யார் வரையில் உட்புறமாக அமைந்திருந்தது வீடு. 

அவ்வீட்டீல்தான் மறைந்த இராசரத்தினம் அவர்களின் மானைவியார் தங்கி இருக்கிறார். ஈழநாதம் வாசகர்கள் சார்பாக தங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்று கூறி என்னை அறிமுகப்படுத்தி பேச்சைத் தொடங்கினேன்.

  • மறைந்த உங்கள் கணவரின் அரசியல் கருத்துக்கள் செயற்பாடுகள் பற்றி நாமறிவோம். ஆனால் அவரது குடும்ப வாழ்வு பற்றியும் குணநலன்கள் பற்றியும் கூறமுடியுமா?

அவர் எதற்குமே கோபிக்க மாட்டார். அது அவரது இயல்பு. எம்மிலும் பார்க்க மேலான நிலையில் இருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதைவிட, எம்மைவிட கடினப்படுபவர்களை நினைத்து பொந்திகைப்படுவதே மேலானது என்னும் எண்ணம் கொண்டவர். அத்துடன் தேடிச்சேர்த்து வைக்க வேண்டும். அதாவது சொத்துச் சேர்த்துவைக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அவருக்கு இல்லை. அவர் எப்போதும் தன்னிடம் உள்ளவற்றை பயனுள்ள வகையில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப் பின்னிற்காதவர்.

  • அவரது அரசியல் ஈடுபாடு பற்றி நீங்கள் எப்போது அறிந்துகொண்டீர்கள்?

61ம் ஆண்டின் சத்தியாக்கிரகப்(உண்மைப்பற்று) போராட்டம் முடிவுபெற்ற சில காலத்தின் பின்னரேயே எங்கள் திருமணம் நடந்தது. ஆதலால் அவரது அரசியல் ஈடுபாடுபற்றி முன்னரேயே எனக்குத் தெரியும். எனினும் 1968இன் பின்னரேயே அவர் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கினார். குறிப்பாக கோட்டிஸ்வரன் வழக்கு தொடர்பான சிக்கல்களுக்குப் பின்னர் அவர் தீவிர அரசியல் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சத்தியசீலன் உட்படப் பல இளைஞர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சந்தித்துச் சென்றுள்ளனர். சத்தியசீலன் காவல்துறையால் கைதாகிய பின்னர்தான் இவர் தலைமறைவாகி இந்தியா செல்லவேண்டியதாகியது.

  • உங்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?

என்பது எனது அடுத்த கேள்வியாகியது.

அவருக்கு, முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது செருமனியில் வசிக்கிறார். பிறகு எங்களுக்கு திருமணமாகி மூன்று புதல்வியர்கள் உள்ளனர். அவர்களில் மூத்தவர் - ஒருமகள் - கனடாவில் தன் கணவருடன் வசித்து வருகிறார். ஏனைய இரண்டு பெண்பிள்ளைகளும் இயக்கத்தில் உள்ளனர் என மறுமொழி அளித்தார். 

  • அவரது சகோதரர் தாய்தந்தையர் பற்றி ஏதும் கூறமுடியுமா?

குடும்பத்தில் மூத்த பிள்ளை இவர்தான். இவருக்கு இரண்டு தம்பிமார் உண்டு. ஒருவர் ஏற்கனவே மரணமாகிவிட்டார் எனக் கூறிக்கொண்டு இருந்தபோது தேநீரைக் கையில் எடுத்தபடி வந்தவரை எனது மகள் என அறிமுகம் செய்தார். பலாலியில் சிறீலங்கா தரைப்படை முகாமுக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்தபோது காயம்பட்ட அவர் சுமார் நான்கு மாத பண்டுவத்திற்குப் பின்பு இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் தத்தித்தத்தி தளிர்நடை பயின்று வந்து தேநீரைத் தந்தார்.

  • உங்களது அப்பாவைப் பற்றி ஏதும் கூறமுடியுமா?

என்று அவரிடம் வினவினேன்.

நான் பிறந்தது 1965 ஆம் ஆண்டில். அப்போது கொழும்பில் இருந்தோம். சில காலத்திற்குப் பின்னர் இங்கு ஊரோடு வந்துவிட்டோம். அப்பாவைப் பற்றிய ஒரு நிழலுருவம்தான் எனது மனத்திரையில் உள்ளது. ஏனெனில் குழந்தைப் பருவத்தைக் கடந்த நினைவை ஏற்படுத்தும் சூழலில் அப்பா எங்கள் குடும்பத்துடன் இருக்கவில்லை. ஆனால் அப்பாவின் பூதவுடல் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்த நிகழ்ச்சி எனது மனத்திரையில் பதிவாகி உள்ளது என்றார் அவர்.

மறைந்த இராசரத்தினம் பற்றிய நினைவுகளை மீட்டியபோது சுமார் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சிகளை நினைத்துக்கொண்டதாலோ என்னவோ திருமதி இராசரத்தினம் அவர்கள் அடிக்கடி தமது கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தார்.

 

திருமதி இராசரத்தினம்

திரு & திருமதி இராசரத்தினம் இணையர் திருமணம் செய்து கொண்ட புதிதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் / படிமப்புரவு: நன்னிச் சோழன். ஆனால் இதை இலவச பதிப்புரிமையின் கீழ் வெளியிடுகிறேன்.

 

 

 

 

*************************

இந்தக் கட்டுரை வெளிவந்து ஒன்றரை மாதங்கள் கழித்து இவருடைய கடைசிப் புதல்வி கப்டன் அக்கினோ அவர்கள் மணலாற்றில் கிபிர் குண்டுவீச்சில் உடல் சிதறி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார். அத்தோடு இவருடைய இரண்டாவது மகளும் பலாலி வலுவெதிர்ப்பு சமரொன்றில் ஏற்பட்ட விழுப்புண் காரணமாக இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டார். இவருடைய இரண்டாவது மகளைத்தான் இந்தியா இரஜீவ் கொலை(21 மே 1991) வழக்கில் தற்கொடைக் குண்டுதாரி 'தனு' என அறிவித்து கீலா😂 விட்டுக்கொண்டு திரியுது. 

அன்பின் புகழ் ஓங்குக

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'முத்தமிழ் விழா'

09.10.1991

 

இங்குதான் முதற்தடவையாக தமிழீழத்தின் உயரிய தேசிய விருதான 'மாமனிதர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருது இவர்களுக்கு ஏன் வழங்கப்படுகிறது என்பதற்கான விளக்கமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் முத்தமிழ் விழாவின் தொடக்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து,

"ஏனென்றால், இவர்கள் அனைவரும் அற்புதமான இலட்சியவாதிகள். இனப்பற்றும் நாட்டுப்பற்றும் உடைய தேசாபிமானிகள். சுயநல வாழ்வின் குறுகிய வட்டத்திற்கு அப்பால் நின்று, சமூக வாழ்விற்காக தேசிய நலத்திற்காக, மக்கள் நலத்திற்காக சேவையாற்றிய அபூர்வ மனிதர்கள். இவர்களது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்றல் என அனைத்துமே தமிழீழ சமூகத்தின் மேன்மைக்கு உரமூட்டுவதாக அமைந்திருக்கிறது. இவர்களது பணி மேலும் தொடர வேண்டும். இவர்களது தொண்டு மேலும் சிறக்க வேண்டும். இதனால்தான் இவர்களுக்கு பெருமதிப்பளித்து தேசிய விருது வழங்கி கௌரவிக்க தீர்மானித்தோம்."

அற்றை நாளில் நான்காவதாளாக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்.

 

h43.jpg

'தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் முத்தவிழ் விழாவில் உரையாற்றுகிறார். பின்னால், இடது பக்கம் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்னால் தலைவரின் 'ஜக்கற்' மெய்க்காவலர்கள் நிற்கின்றனர்'

இவருக்கு இவ்விருது ஏன் வழங்கப்படுகிறது என்று மேடையில் அறிவிப்பாளராக இருந்த திரு யோ. யோகி அவர்கள் வாசித்தவை,

"அடுத்ததாக திரு ஆ. இரசரத்தினம். போராட்டப் பங்களிப்பு; யாழ் மாவட்டம் மட்டுவிலைச் சேர்ந்த இவர், 1956, சிங்கள மொழித்திணிப்பு அடக்குமுறையை எதிர்த்து உருவாக்கப்பட்ட தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் அமைக்க உழைத்தவர்; அதன் தலைவராக இருந்தவர். 1973, யாழ் பண்ணையின் பாலத் தகர்ப்புக் குறித்து தேடப்பட்டு தலைமறைவான இவர் தமது போராட்ட வளர்ச்சிக்கும் 'புதிய தமிழ்ப் புலிகள்' என்ற எமது இயக்கத்தின் ஆரம்பப் பெயரை உருவாவதற்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தவர். இவரிற்கு போராட்ட பங்களிப்பிற்கான தேசிய விருது தரப்படுகின்றது. அதை அவர் மனைவியார் திருமதி இராசரத்தினம் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

(இரண்டு நொடிகள் கழித்து, திருமதி அதனை பெற்றுக்கொள்ளும் போது) இவரது இரண்டு பிள்ளைகள் எமது இயக்கத்தில் இருக்கிறார்கள்."

அப்போது, திருமதி இராசரத்தினம் அவர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் தட்டினை வழங்குகையில், "வீட்டிலை கொண்டே வைச்சு சமையுங்கோ, ஆ," என பம்பலாகக்😆 கூறினார். அப்போது சுற்றியிருந்தவர்கள், திருமதி இராசரத்தினம் உட்பட, புன்னகைத்தனர். 

 

குறிப்பு:

  • மாமனிதர் விருது வழங்கப்பட்ட போது முதலில் இம்மதாணி கொண்ட பொன்முடிப்பும் வெளுறிய பச்சை-(#7bce95) நிறத்திலான சான்றிதழும் (நிலைக்குத்தாக செவ்வக வடிவில் இருந்து. வழங்கப்பட்ட போது சுருண்டு இருந்தது) வழங்கப்பட்டு அதன் பின் இப்பொன்முடிப்பு வைக்கப்பட்டிருந்த வெள்ளியிலான மூலைகள் வளைந்த செவ்வக வடிவிலான தட்டும் வழங்கப்பட்டது.

hk.jpg

'அம்புக்குறி இடப்பட்டுள்ளவரே (இருக்கையில் அமர்ந்துள்ளவர்) திருமதி பரமேஸ்வரி இராசரத்தினம் ஆவார்.'

 

g.jpg

'திருமதி இராசரத்தினம் அவர்கள் பொன்முடிப்பு மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை தேசியத் தலைவரின் கையால் பெற்றுக்கொள்ளும் போது'

 

fuy.jpg

'திருமதி இராசரத்தினம் அவர்கள் வெள்ளித் தட்டை தேசியத் தலைவரின் கையால் பெற்றுக்கொள்ளும் போது தலைவரின் பம்பலுக்குச் சிரிக்கிறார்.'

 

 

 

 

 

*********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போராட்டப்பாதையில் புகுந்த புலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5

 

'Maamanithar' A Rajaratnam.jpg

'அமரர் ஆ. இராசரத்தினம்' 

 

மூல எழுத்தாளர்: வருணகுலத்தான்
மூல வலைத்தளம்: 
http://eelampakkam.blogspot.com/2012/08/5.html, 25|8|2012

 

துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ் பேருந்து நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடை அட்டையில் தன்னிடம் இருந்த குமிழ்முனைப் பேனாவினால் T.N.T என எழுதிவிட்டு அதனைமேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கலாபதி ஈடுபட்டிருந்தார்.  T.N.T என்பது ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற தமிழ்ப்பதத்தினை நேரிடையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் உருவாகும் TAMIL NEW TIGERS என்பதன் முதலெழுத்துக்கள் இணைந்த குறியீடாகும்.

1974 இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பி பிரபாகரன் சந்தித்துக் கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ. இராசரத்தினமாகும். தணிக்கை தணிக்கை சொந்த இடமாக கொண்ட இவர் தணிக்கை இல் பிறந்திருந்தார். அரச ஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனி அரசு வேண்டும் என்பதற்காகவே இவர் எப்பொழுதும் போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் தீவிர அகிம்சைப் போராளியாக முன்முகம் காட்டிய இவர் 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தை நிறுவுவதில் திரு.கோடீஸ்வரன், திரு.சிவானந்தசுந்தரம், திரு.ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர்.  அத்துடன் 1965இல் அதன் இணைப்பொதுச் செயலாளராக கடமையாற்றினார்.t

தமிழரசுக்கட்சியின் தீவிரம் போதாது என கொள்கைரீதியாக முரண்பட்டு 1969இல் திரு எ.நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சுயாட்சிக் கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாகவும் விளங்கினார். 1970இன் இறுதியில் தோன்றி தமிழ்இன உணர்வுடன் இளைஞர்களை ஆயுதப் போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவையினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைப்புரிந்து வந்தார்.  1972இன் இறுதியில் தமிழ் நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றைய தலைவரான செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்குசென்று அவர்களின் பயண ஏற்பாட்டை புரிந்த செயல்வீரர் இவராவர்.

1973 தை 15இல் நடந்த மண்கும்பான் குண்டுவெடிப்பு முயற்சியைதொடர்ந்து மாணவர் பேரவையின் தலைவர் சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இராசயனப்பொருளை மாணவர் பேரவையினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைது செய்ய காவல்துறையினர் தேடியலைந்தனர். இதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற இராசரத்தினம் அங்கேயே தங்க நேர்ந்தது. தான்சார்ந்த கட்சியினரால் கைவிடப்பட்டு தொய்வு நோயினால் வருந்திய நிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா. ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்றவர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்துவந்தார்.

ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 இன் இறுதிக் காலப்பகுதிகளில்  சென்னையிலேயே கழிக்க நேர்ந்தது. 1974 ஆகஸ்டில் பெரியசோதி, தங்கத்துரை, நடேசுதாஸன் என்பவர்களுடன் வேதாரணியத்திலிருந்து சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் கோடம்பாக்கத்திலேயே தங்கியிருந்தார்.  ஒரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டதை கண்ட வயதிலும் அனுபவத்திலும் மூத்த இராசரத்தினம் மிகுந்த வேதனைப்பட்டார்.

மாமனிதர் திரு ஆ. இராசரத்தினம் - left 1.gif

தமிழகம் சென்ற தமிழரசுக்கட்சியினருடன் இடது கோடியில் இராசரத்தினம்
                                                                                                 

இதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுதலைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன் நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் தனது பரப்புரையை மேற்கொண்டுவந்தார். தமிழரின் படைக்கு தனியான நிறம், உடை கொண்டதான இராணுவக் கட்டமைப்பை பற்றியும் தனது நோக்கில் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டுமென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி இளைஞர்களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட இன விடுதலை சம்பந்தமான பல நூல்களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர்களிடம் கூறிவந்தார்.

The History of Thamiraparni  எனும் ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இக்காலத்தில் இவர் எழுதிவந்தார். (இவரது மறைவின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப்பட்டது)   இதன்மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ என்ற பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974யூன் 1ந் திகதி தான் வாசித்ததாக தனது டயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும்  'Notices of  South India From Magesthens To Mahun' என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக்கண்டு தான் மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு மொகஸ்தனிஸ்(Magesthens)  என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்குமுன்  மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியரின் அரசசபையில் கிரேக்க தூதராக இருந்தவர்.  கிரேக்க மொழியில் இவர் எழுதிய அக்கால குறிப்புகளில் இலங்கையை ‘தப்ரபேன்’ எனக் குறித்துள்ளார்.

இதனையே பாளிமொழியில் எழுதப்பட்ட  மகாவம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் தமிழ்இலக்கிய சான்று கிபி இரண்டாம்நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலாகும். மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதன் முந்தைய பெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத் தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு. ஆ. இராசரத்தினம் எடுத்துக் கொண்டார். ‘புலி’ என்பது தமிழர்களின் அரசவம்சத்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழர்களின் இலச்சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப் பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதிய புலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார்.

     news-paper.gif
       மாமனிதர்    இராசரத்தினத்தின்   நாட்குறிப்பு

 

இவர் தனது 1974செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட்குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும்பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளார்த்தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன். எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப்படுபவர் யாரிடமும் மனம் கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால் அழைக்கப்பட்ட போராட்ட முன்னோடியான தங்கத்துரையாகும். தாமிரபரணி அல்லது தாமிரபரணி புதிய புலிகள் என்பதன் ஆங்கிலச் சொல்லின் சுருக்ககுறியீடு T.N.T. என்பதேயாகும். 1974ஆகஸ்டில் சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் இராசரத்தினமும் மனம்திறந்த நட்புடன் ஆளையால் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தை-மகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர்கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல் நிலையத்தில் பலமணிநேரங்களை செலவிட்டனர்.

ஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு  இந்தியவரலாறு  இலங்கை வரலாறு எனப் பலவரலாற்று நூல்களில் மூழ்கிய இவர்கள் அங்கிருந்தே தமக்கான மாற்று (இயக்க)ப் பெயர்களையும் இக்காலத்தில் தேடிக்கொண்டனர். தலைவர் தனது பெயராக சோழமன்னன ‘கரிகாலன்’ என்பதையும் இராசரத்தினம் ஈழமன்னன் 'எல்லாளன்' என்பதனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக் கொண்டனர்.

இத்தகைய இவரின் தனிநாடு பற்றிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்ற பெயர் விருப்பத்திற்குரியதாகியது. ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் T.N.T என்பதாகும். மேற்படி இரண்டுபெயர்களும் எவ்விதமாறு பாடுமின்றி T.N.T எனவருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப் பட்டது. இதன்வழியில் தமிழின உணர்வில் உந்தப்பட்டு வழிநடந்த தலைவர்; பிரபாகரன் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத இயக்கத்தை உருவாக்கியபோது தாமிரபரணி என்னும் பிரதேசத்தின் பெயரால் தியாகி  இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட பெயரினை அவரின் மனம் கோணாமல் அப்படியே ஆங்கிலத்தில் T.N.T என்பதன் உருவமும் சிதைவுறாமல் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என இனத்தின் பெயரால் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு பெயராக்கிக்கொண்டார். இதனையே துரையப்பாவை எதிர்பார்த்து தவைர் பிரபாகரனுடன் காத்திருந்த முதன்நிலைப் போராளியான கலாபதி T.N.T என எழுதிவைத்தார்.

 

மாமனிதர் திரு ஆ. இராசரத்தினம்.gif

'சென்னை வைத்தியசாலையில் ஆதரவற்றவராக மரணித்த ஈழத்தின் முதலாவது மாமனிதர் ஆ. இராசரத்தினம்.'


T.N.T என்ற பெயரினை அப்பழுக்கின்றி முன்மொழிந்த இராசரத்தினம் அப்பெயர்கொண்ட அமைப்பினால் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை அறிந்து மகிழ்வடைந்த நிலையில் 19.08.1975 இல் தொய்வு நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார்.  சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்ற வேளைகளிலெல்லாம் சந்திக்க மறுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள்  தியாகவாழ்வு வாழந்த அவர் மறைந்தபின் ‘ஈழத்து நேதாஜி’  எனப்பட்டமளித்து தமக்குரிமை கொண்டாடினர்.  மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழங்கிய இராசரத்தினத்தை 1990இல் அவருடைய  சொந்த இடமான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழ் ஈழத்தின் முதலாவது ‘மாமனிதர்’ என பட்டமளித்து தலைவர் பிரபாகரன் பெருமைப்படுத்தினார்.

இராசரத்தினத்தின் மகளே 1991 மே21 இல் நடைபெற்ற இராஜீவ் காந்தி கொலைவழக்கில் தற்கொலை குண்டுதாரியாக குற்றம் சாட்டப்பெற்ற 'தனு' என நம்பப்படுகின்றது.


 

இவர் தொடர்பான இவ்வளவு தகவல்கள் சேகரித்து வெளியிட்ட 'வருணகுலத்தான்' அவர்கட்கு எனது இருகரம் கூப்பிய 🙏 நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் 

 

 

*********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

(பாதுகாப்புச் சிக்கல்களால் பதிவிடப்பட்ட தகவல் அழிக்கப்பட்டுள்ளது)

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கப்டன் அக்கினோ

captain akkinoo - 3rd daughter of Him.jpg

'ஆ. இராசரத்தினம் அவர்களின் கடைசிப் புதல்வி கலா எ கலைவாணி'

 

 

  • மூலம்: 'விழுதுகள்' நூல், பக்: 50-56
  • எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன்

 

  • இயற்பெயர்: கலைவாணி
  • வீட்டுப்பெயர்: கலா
  • பெற்றோர்: இராசரத்தினம் பரமேஸ்வரி
  • பிறந்த ஊர்: கைதடி-நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
  • தோற்றம்: 26|07|1968
  • போராளியாய்: 28-04-1990
  • மாவீரராக தாயக மண்ணில்: 08-09-1991
  • வீசா நிகழ்வு: மணலாற்றில் 'மின்னல்' நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது கிபிர் வான்குண்டு வீச்சில் உடல்சிதறி வீரச்சாவு
  • குறிப்பிடக்கூடிய தாக்குதல்கள்: பலாலி, யாழ் கோட்டை, பூவரசங்குளம் ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருடனான மோதல்கள்

 

போராட்டம்...

இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன. குடும்பம் என்ற சிறிய பரப்புக்குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் ‘விடுதலை இயக்கம்’ என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால், எத்தனை விதமான உள்ளங்களை, சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின் உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம்.

எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத் தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான்.

மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொருளாதாரக் கஸ்டங்களையோ, துன்பங்களையோ கண்டிராத செல்வந்தமான குடும்பச் சூழலின் கடைசிப்பிள்ளைதான் அக்கினோ.

“நாங்கள் செல்லமாக வளந்தனாங்கள், போராட்ட கஸ்டங்களை எங்களால் தாங்க ஏலாது” என்று சொல்கின்றவர்களுக்கு அக்கினோ வாழ்ந்து காட்டி இருக்கின்றாள். விடுதலை உணர்வுக்கு முன்னால் வேறெந்தப்புற உலக உணர்வுகளும் தாக்குப்பிடிக்க முடியாது என நிரூபித்திருக்கின்றாள். ஏனென்றால் ?

அக்கினோவும் ஒரு செல்லப்பிள்ளைதான். பாடசாலை நாட்களில் அக்கினோவைக் கண்டவர்கள், பழகியவர்கள் அக்கினோவைப் பற்றிக்கூறும் தகவல்கள். “இவள் எப்படி இந்த வாழ்வை ஏற்றுக்கொண்டாள்?” என ஆச்சரியப்படவைக்கும்.

அக்கினோவின் எடுப்பான தோற்றம் அவளைப் பற்றிய பார்வையில் ஒரு தவறான கணிப்பைக் கொடுத்திருக்கலாம். ஏன்? நாம் கூட. “இவள் எப்படி எல்லாப் போராளிகளோடும் ஏற்றத் தாழ்வின்றிப் பழகப் போகிறாள்?” என நினைத்ததுண்டு. ஆனால் பழகிய போது புரிந்தது. அவள் இதயத்தில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்று.

அக்கினோவின் அப்பா தமிழீழத்தின் நேதாஜி-மாமனிதர். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் எங்கள் தலைவனின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டியவர்.

உண்மைதான் இப்படி ஒரு தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் எப்படி எங்கள் மண்ணை நேசிக்காமல் இருக்கமுடியும்? அக்கினோவின் அப்பா மட்டுமல்ல அவளது அக்கா கூட எங்கள் அமைப்பில்தான் இருக்கின்றாள்.

தமிழீழம் தனது தலை சிறந்த பெண் போராளிகளில் ஒருத்தியை இழந்து விட்டது. நாங்கள் ஓர் உயர்ந்த, உன்னதமான தோழியை இழந்துவிட்டோம். அந்தத் தோழியின் வீடோ அமைதியைப் பெற்றெடுத்துவிடடது. அந்த வீட்டின் படிகள் அனேகமான நாட்களில் சிங்கள, இந்திய சப்பாத்துக் கால்களையும் , துப்பாக்கிக் காவல்களையுமே சந்தித்திருக்கின்றன.

அப்பாவின் தலைமறைவு வாழ்க்கைக்காலத்திலும், அப்பாவின் நிரந்தர மறைவின் பின்னான வாழ்க்கைக் காலத்திலும், அந்தத் துன்ப நிகழ்வுகளின் தாக்கம் அம்மாவை அதிகம் தாக்காது இருப்பதற்காக தனது கலகலப்பையே தாயின் கவசமாக்கினாள் அக்கினோ.

இன்று எல்லாத் துயரங்களைமே அம்மா தனியாகச் சுமந்துகொண் டிருக்கிறாள் . அக்கினோ எம்மோடு இருந்த போது ஒருநாள்.

‘அப்பாவின்ரை படத்துக்கு இட துபக்கம் என்ரை படமும் வலது பக்கம் அக்காவின்றை படமும் வைக்க இடம் விடுங்கோ அம்மா’ என்று தாயிடம் சொன்னதாகச் சொன்னாள்.

எங்களுடைய ஒவ்வொரு போரா ளிகளும் ஒன்றை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள்.என்றோ ஒருநாள் அது இன் றோ…….

நாளையோ …….

அல்லது இன்னும் சில காலங்களில் பின்னோ, இந்த மண்ணிற்கான மரணத்தை நாம் சந்திப்போம் என்ற உண்மை தான் அது. அதனால் தான் என்னவோ , சண்டைக்கு போக வேண்டும் என்று எல்லோரும் சண்டை பிடித்துக்கொள்கிறார்கள்.

அப்படித்தான் அக்கினோவும்.

சண்டை என்றதும் அவள் சந் தோசப்படுகின்ற கணங்களைத் தான் பார்த்திருக்கின்றோம்.

விடுதலைபுலிகள் எல்லோருமே கூறுகின்ற, ‘நல்லா அடிபட வேணும். நிறைய அயுதங்கள் எடுக்கவேணும் அதுக்குப்பிறகுதான் சாகவேணும்' என்பதைத் தான் அக்கினோவும் சொல்லிக் கொண்டிருப்பாள்.

கட்டுவன்சந்தி இராணுவ மினி முகாம் முன்னால் இவள் காவல்நின்ற காலம்……

இவள் தான் குழுவின் இரண்டாவது பொறுப்பாளர் பலாலி இராணுவத்தினர் அடிக்கடி வெளியேற முற்படும் முக்கிய பாதைகளில் கட்டுவன் சந்தியும் ஒன்று. இந்த மினிமுகாமிற்கு முன்னால் காவல்நிற்கும் எங்கள் குழுவில் அடிக்கடி உறுப்பினர்களை மாற்றவேண்டிவரும். ஏனென்றால் அடிக்கடி தாக்குதல் நடக்கும்போதோ, அல்லது வெளியேறும்போதோ எம்மில் பல போராளிகள் வீழ்ந்திருப்பார்கள். அல்லது காயப்பட் டிருப்பார்கள்.

அக்கினோ வருவதற்கு ஐந்து நாட்கள் முதல்தான் கட்டுவன் நிலையிலிருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்தினருடன் மோதியதில் சுந்தரியுடன் எட்டுப் போராளிகள் வீரமரணமடைந்தனர். அக்கினோ சென்ற நான்கு நாட்களுக்குள் திரும்பவும் அந்த இடத்தில் இராணுவம் வெளியேறியது. கப்டன் சுந்தரி வீரச்சாவடைந்த தாக்குதலில் ஏற்பட்ட எமது தரப்பு இழப்பு அவளை உற்சாகப்படுத் தியிருந்தது போலும், அனால் அன்றைய சண்டை முடிவோ வேறு மாதிரி இருந்தது. அன்று எதிரிகளை பின்வாங்கச் செய்ததில் அக்கினோவின் துப்பாக்கிக்கு அதிக பங்குண்டு.

அக்கினோவுக்கு கணிசமான ஆங்கில அறிவுண்டு. அத்தோடு எந்தத்துறையிலும் விடயங்களை கிரகிக்கும் ஆற்றலுண்டு. தான் பெற்றிருக்கும் அறிவினை சக போராளிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு நிறையவே இருந்தது. அதனால்தான் பயிற்சி முகாமில் கூட கடும் பயிற்சிகளுக்கு நடுவேயும் அவள் இரவில் அவர்களுக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கி வைத்திருந் தாள்.

வவுனியாவில் இராணுவம் வெளியே வந்த காலத்தில் காட்டின் ஒரு பக்கத்தில் இவளின் குழுவும் நின்றது. திசைகாட்டியை (கொம்பாஸ்) எவ்வாறு படிக்க வேண்டும், என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். எந்த நேரமும்வந்து விழுந்து வெடித்துக் கொண்டிருக்கும் செல்களுக்கும் நடுவே ஒரு இடத்தைக் குறிவைத்து திசைகாட்டி மூலம் அந்த இடத்துக்குப் போய் வந்து, பின்னர் தனது குழுவினருக்கும் அவ்வாறே காட்டிக் கொடுத்து, போய்வரப் பழக்கினாள்.

காட்டிலே போர் நடக்கும் போது காடுமாற நேரிட்டால் அதுவே போராளிகளின் இழப்புக்கு மிகப்பெரிய காரணமாகிவிடும். போராளிகளின் இழப்பு ஒரு புறமும், இராணுவ முன்னேற்றம் மறுபுறமுமாகப் பாதகமான தாக்கங்களுக்கு, தான் காரணமாயிருக்கக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். வவுனியாவில் இருந்து வந்தவுடன் ஆனையிறவுச்சண்டை ஆரம்பித்துவிட்டது. வெட்டவெளிகளில் இராணுவத்தினரை இறக்கவிடாது காவல் செய்யும் பகுதியில் அவள் கடமையிலீடுபட்டிருந்தாள்.

அடுத்தடுத்துச் சண்டைகள். ஓய்வெடுக்க எமது போராளிகளுக்கு நேரமில்லை . குண்டுச் சத்தங்களுக்கும் குருதி வெள்ளத்துக்கும் நடுவே எங்கே நாங்கள் ஓய்வைத் தேடுவது?

எப்படி ஓய்வெடுப்பது?

முப்படைத் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தபடி முன்னேற வேண்டியவர்களாயிற்றே நாங்கள். களைப்பும் அலுப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவையே எங்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா?

நித்திரை என்பது எங்களை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிட்டால் என்ன வென்று எண்ணுபவர்கள் நாங்கள். கண்ணுக்குள் நித்திரை சுழன்றுகொண்டிருக்கும். அரைக் கண்ணில் ஆடி ஆடித் தான் நடந்தாலும் கண் மூடிவிடமுடியுமா? கண்முடக் கண்மூட எம்தேசம் காணாமல் போய் விடுமல்லவா?

அதனால் தான்…..

ஓய்வு இல்லாத தேசத்தின் எந்த எல்லையில் சண்டை நடந்தாலும் அங்கு எட்டி நடந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனையிறவுச்சண்டையின் வேகம் குறைய மணலாற்றில் சண்டை ஆரம்பித்துவிட்டது. அக்கினோவின் குழுவும் மணலாற்றிற்கு விரைகிறது. மணலாறு எங்கள் தேசத்தின் மையப்புள்ளி. மணலாற்றுக்காடு தான் எங்கள் தாய்வீடு. பிராந்துகளிடமிருந்து செட்டைக்குள்ளாய் எமை வளர்த்த தாய்க்கோழி. பிராந்திய வல்லரசு ஒன்றை எமது பிரதேசத்திலிருந்து பின்வாங்கச் செய்யுமளவிற்கு அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய இடம். அங்குலம் அங்குலமாக அந்நிய இராணுவம் கால் பதித்து தேடியபோதும் தமிழீழத்தின் தலைவரை தக்க வைத்துக் காத்த பெருமை மணலாற்றிற்கு மட்டும்தான் உண்டு. குண்டுகளைத் தாங்கித் தாங்கியே மணலாற்றுக்காடு வலிமை பெற்றுவிட்டது. உரிமைப்போர் அல்லவா.

உக்கிரமான சண்டைதான். காடு பற்றி எரிகின்றது. எங்கும் ஒரே புகை மண்டலம் தான். மண லாறு மண் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. முதல் நாள் சண்டையின் போது அக்கினோ நின்ற பக்கமாக இராணுவம் முன்னேறியது. அங்குல நிலம் கூட எதிரியை அசையவிடாத சண்டை. அக்கினோவின் குழுவில் இரண்டு போராளிகள் விழுந்து விட்டார்கள். ஒரு உடல் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. ஆனால் அடுத்தது……

எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ……

அவர்களுக்கு மிக நெருக்கமாக…..

வீழ்ந்த போராளிகளின் உடல்களை மீட்பதற்காகவே புதிய போராளிகள் விழுகின்ற வரலாறுதானே எம்வரலாறு. போர்நிலமை உடனுக்குடன் பொறுப்பாளருக்கு அறிவிக்கப்படவேண்டும். அக்கினோ அறிவிக்கின்றாள்.  "உடலை எடுப்பது கஸ்டம் தான் அக்கா. ஆனால் எப்படியும் நான் எடுப்பேன்” தலைநிமிர்த்த முடியாதளவுக்கு தரையோடு தரையாக வரும் துப்பாக்கி சூடுகளுக்கு அடியில் ஊர்ந்து முன்னேறினாள். எப்படியோ உடலை எடுத்துவிடுகிறாள். அந்த இடத்தில் அனைவருக்கும் ஒரு உறுதி பிறக்கிறது. கடைசிவரைக்கும் இச்சண்டையில் எந்த உடலும் எம்மால் கைவிடப்படக் கூடாது என்பதில் எல்லோரும் முனைப்பாக இருந்தோம்.

ஒத்துழைக்க மறுத்தகாட்டுச் சூழலாலும், நித்திரையோ குளிப்போ இல்லாத கடமையின் இறுக்கத்தாலும் அநேகமான போராளிகளுக்கு காய்ச்சல் வந்துவிடுகின்றது. அக்கினோவுக்கும் காய்ச்சல்தான். காய்ச்சலுடன்தான் மணலாற்றுப் பகுதியில் மகளிர் பிரிவுக்கான மருந்து, உணவு, சன்னம் வழங்கல்களை பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருந்தாள்.

இராணுவத்தினர் ஒரு பக்கமாக முன்னேற முயற்சிக்க, அக்கினோ அந்த இடத்துக்கு விரைந்து, போராளிகளுக்கு நிலைமையை விளங்கிக் கொண் டிருக்கும்போது, அவளது அடுத்த குழு நின்ற பக்கமாக விமானம் பதிந்து எழுந்தது. நிலைமையை நேரில் பார்ப்பதற்காக அக்கினோ அந்த இடத்திற்கு ஓடினாள்.

இன்னொரு தடவை அந்த விமானம் பதிந்து எழுந்தது.

அக்கினோவின் தசைத்துணுக்குகளும், குருதித்துளிகளும் மணலாற்று மரங்களில் தெறித்தன. அக்கினோபோன்ற நூற்றுக்கணக்கானோரின் இறுதிக் கணங்களை அறிந்து கொண்ட அந்த மணலாற்றுக்காடு இன்று மீட்கப்பட்டுவிட்டது. இந்தியப் போரின் பின் இது இரண்டாவது சண்டை, முன்னையை விட இப்போது உறுதியாய் நிற்கும். மணலாற்றுக் காடு இனி வரும் காலங்களில் இன்னும் உறுதியாய் எழுந்து நிற்கும். ஏனென்றால் அதற்குத் தெரியும் தன்னுள் உறங்கும் எங்கள் நண்பர்களைப் பற்றி.

Captain Akkinoo, Maamanithar Irajaratnam's daughter.jpg

கப்டன் அக்கினோ பச்சை வரிப்புலிச் சீருடையில் புலிகளின் பாசறை ஒன்றில் நின்று புகைப்படத்திற்குப் பொதிக்கிறார் (posing) | பதிப்புரிமை: நன்னிச் சோழன். ஆனால் இதை இலவச பதிப்புரிமையின் கீழ் வெளியிடுகிறேன்

 

large.831542265_.jpeg.611abac9a0e6e73eb5

கப்டன் அக்கினோ தனது உறவினர் ஒருவரின் வீட்டில் நின்று புகைப்படத்திற்கு பொதிக்கிறார். | பதிப்புரிமை: நன்னிச் சோழன். ஆனால் இதை இலவச பதிப்புரிமையின் கீழ் வெளியிடுகிறேன்

 

"வென்று கல்லறை வருகிறேன் ஓர்நாள் - இல்லை 
அருகினில் தூங்குவேன், வீழ்ந்தால்"

--> விளக்கேற்றும் நேரம் இறுவெட்டின் 'தோழி என் தோழி' பாடலிலிருந்து

 

 

*********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

💧 முதலைக் கண்ணீர் 💧

iraasaraththinam.jpg

 

'மாமனிதர்' ஆ. இராசரத்தினம்

 

 

மூலம்:  'விடுதலைப்புலிகள்', குரல் 3, சூலை 1984, பக்: 10-11
தட்டச்சு: நன்னிச் சோழன்

 

 

"இலங்கைத் தமிழ் மக்களின் நேதாஜி இங்கே உறங்குகிறார்"

இது இராசரத்தினத்தின் இறுதி யாத்திரையின் போது உதிர்க்கப்பட்ட சொற்கள்.

 

"விரிந்த நெற்றி - அதிலே விழுந்திருக்கும் சிந்தனைச் சுருக்கங்கள் - நிறைந்த சிரிப்பு - ஒளிவீசும் கண்கள் - ஒல்லியான உடம்பு - திண்ணியமான உள்ளம் இவற்றுடன் தமிழ், தமிழினம், தமிழீழ விடுதலை பற்றிய எண்ணங்களுடனேயே வாழ்ந்து வந்த அருமைச் சகோதரர் இராசரத்தினம் திடீரெனச் சொல்லாமல் கொள்ளமல் மறைந்து விட்டதாக வந்த செய்தியை இன்னும் நான் நம்பமுடியாமல் தவிக்கிறேன்"

இவை அவரோடு நெருங்கி உறவாடிய நண்பர் ஒருவரின் நெஞ்சில் இருந்து வந்தவை.

 

"அவர் தமிழரசுக் கட்சியின் விசுவாசம் மிக்க தொண்டர்களில் ஒருவராக இருந்து சேவையாற்றியவர். கட்சியில் மற்றும் அதன் கொள்கைகளில் அசையாத நம்பிக்கையும் கொண்டிருந்தவர். கட்சியின் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்து செயலாற்றியவர்"

இது தமிழர் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.

 

"தமிழ் இனத்தின் மீட்சிக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காவும் தமிழர் கூட்டணியில் ஓர் தீவிர உறுப்பினராக இருந்து தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் செயற்பட்ட செம்மல் அவர்"

இது இராசரத்தினத்தின் இறுதி யாத்திரையில் கண்ணீர் வடித்த சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினரான வை. நவரத்தினம்.

 

"இராசரத்தினம் அவர்களின் மறைவின் மூலம் எங்கள் இயக்கம் எறும்புபோல் ஓயாமல் உழைக்கும் ஓர் உத்தமத் தொண்டனை இழந்து விட்டது... இயக்கத்தினால் தன்க்கு என்ன இலாபம் என்று பாராது தன்னால் இயக்கத்திற்கு என்ன இலாபம் என்று கணக்குப் பார்த்து வாழ்ந்தவர் நண்பர் இராசரத்தினம்"

இது தமிழர் கூட்டணிச் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம்.

 

'தமிழீழத்தின் நேதாஜி' என்றும் 'கர்மவீரர்' என்றும் 'இலட்சியச் செம்மல்' என்றும் இராசரத்தினம் அவர்கள் இறந்தபிறகு குடங்குடமாய் கண்ணீர்விட்டு அவரது உடலின்மீது உதயசூரியன் கொடியைப் போர்த்தி அரசியல் வியாபாரம் செய்த அமிர்தலிங்கங்களும் நவரத்தினங்களும் அந்த இலட்சியவாதி உயிரோடு வாழ்ந்தபோது அவரது இறுதிக் காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை மனித நேயங்கொண்ட எவனும் மன்னிக்க மாட்டான்.

தன்னால் இயக்கத்திற்கு என்ன இலாபம் என்று கணக்குப் பார்த்து வாழ்ந்த மனிதன் அதே இயக்கத்தால் கைவிடப்பட்டு, திக்கற்றவராக்கப்பட்டு சென்னைத் தெருக்களிலே காசு இல்லாமல் பசிகொண்டு அலைந்த கதை துயரம் தோய்ந்தது. தொய்வு நோய் ஏற்படுத்தும் அவதி ஒருபுறம்; பசிப்பிணி ஒரு புறம்; மனைவி குழந்தைகளின் நிலைமை மற்றொரு புறம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பீடத்தின் மிகவும் இழிந்த வஞ்சகத்திற்கு திரு. இராசரத்தினம் அவர்களின் கடைசிக்காலங்கள் தான் சாட்சியாகும்.

இராசரத்தினம் அவர்கள் மறைந்த பிறகு அவரது மரணயாத்திரையில் கூட்டணி நடத்திய நாடகம் அதன் அரசியல் பரத்தமையைச் சந்திக்குக் கொண்டு வருகிறது.

அமிர்தலிங்கம், நவரத்தினம் போன்ற நடிப்பு உள்நாட்டார்களின் வஞ்சகத்தால் ஒரு நேர்மையான நெஞ்சம் எவ்வாறெல்லாம் நொந்துபோயிருந்தது என்பதை இராசரத்தினம் அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் மூன்று ஆண்டுகால நாட்குறிப்புகள் (1973, 1974, 1975) நமக்குத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றன. இராசரத்தினத்தின் நாட்குறிப்பிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.

 

 

மாமனிதர் இராசரத்தினம்.jpg

படிமப்புரவு: விடுதலைப்புலிகள் 

 

மாமனிதர் இராசரத்தினம் 2.jpg

படிமப்புரவு: விடுதலைப்புலிகள் 

 

மாமனிதர் இராசரத்தினம்3.jpg

படிமப்புரவு: விடுதலைப்புலிகள் 

 

 

*********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இராசரத்தினம் நாட்குறிப்பு - 1973

மாமனிதர் இராசரத்தினம் 4.jpg

'மாமனிதர்' திரு ஆ. இராசரத்தினம் அவர்களின் கரிக்கோல் ஓவியப்படம்

 

 

மூலம்:  'விடுதலைப்புலிகள்', குரல் 4, ஓகஸ்ட் 1984, பக்: 10
தட்டச்சு: நன்னிச் சோழன்

 

'மாமனிதர்' திரு. ஆ. இராசரத்தினம் அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் 1973 ஆம் ஆண்டின் நாட்குறிப்பிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.

 

  • சனவரி 13, சனி:

"அலுவலகம் சென்றேன். நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்களுக்குக் கறுத்தக்கொடி காட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது."

  • பெப்ரவரி 10, சனி:

“திரு அமிர்தலிங்கம் அவர்களுடன் தலைவர் பதவிக்குரிய நியமனம் குறித்துக் கதைத்து அவரது பெயரை முன்மொழிந்த கடிதத்தைக் காண்பித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்..... எனது தமிழ்நாட்டுப் பிரயாணத்தைப் பற்றிக் கூறினேன்......”

  • ஏப்ரல் 9, திங்கள்:

“கலணியில் தங்கியிருந்தேன். நானும் மைத்துனரும் சென்று அடியாரரைச் சந்தித்தோம். புதிய அணியின் தலைவராக என்னை இருக்குமாறு கேட்டுக்கொண்டார். நானும் இசைந்தேன். தொடர் கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.”

  • ஏப்ரல் 21, சனி:

"......... எனக்குத் தொய்வு வந்தது. தாயக நண்பர்களிடமிருந்து இதுவரை எவ்வித பொருளுதவியும் கிடைக்காததினால் அவர்களை நினைத்து வேதனைப்பட்டேன். எனது இனம் சுயஉரிமையை பெறவேண்டுமானால் பலாத்காரப் புரட்சிதான் ஒரே வழி. இதற்காக எனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்விடையத்தில் எனது மனம் உறுதியடைந்துகொண்டு வருகிறது."

  • ஏப்ரல் 22, ஞாயிறு:

“பொருள் இல்லாததினால்........ எனது வெறுமையான நிலையையும் அந்நிய நாட்டில் பிறரின் தயவில் வாழ வேண்டிய இழிநிலையையும் உடன் வாழ்ந்த நண்பர்களின் உதாசீனத்தையும் எண்ணி வெறுப்படைந்தேன்.”

  • ஏப்ரல் 23, திங்கள்:

"எனது தொடர் கட்டுரைகளை ஒரு புத்தகமாக வெளியிடலாமென திரு ஆ. சனார்த்தனம் அவர்கள் எனக்கு ஆலோசனை கூறினார். நானும் அதை ஆமோதித்தேன். எல்லாளனின் பெயரில் பத்திரிகையில் வெளியிடவும் திட்டமிட்டேன்"

  • ஏப்ரல் 24, செவ்வாய்:

"மகேசனுக்கு, மிகவும் வேதனையுடனும், வெறுப்புடனும் கடிதம் எழுதினேன். நண்பர்களால் ஏமாற்றப்பட்டதையும், தலைவர்களின் கோழைத்தனத்தையும் உதாசீனத்தையும் கண்டித்து கடிதம் எழுதினேன். இரவு முழுவதும் எனது நிலையை எண்ணிக் கண்ணீர் விட்டேன்.

வருங்காலம் எப்படி அமையப்போகின்றது. எனது குழந்தைகளை எப்பொழுது பார்க்கப்போகிறேன்?"

  • ஏப்ரல் 25, புதன்:

"தலைமுடி வெட்டுவித்தேன். சோவியத் தூதரகத்தில் நடைபெற்ற சொற்பொழிவுக்குச் சென்றேன். சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தொண்டர்கள் எவ்வாறு விடுதலை பெறுவர்? தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எங்கள் மீது அணுவளவும் அனுதாபமில்லை. இலங்கையில் உள்ள தனவந்தர்களுக்கும்.... .... நான் தனி மனிதனாக இங்கிருந்து என்ன செயவது? செலவுக்கும் பணமில்லை. ஐயோ 'தமிழினமே' "

  • ஏப்ரல் 27, வெள்ளி:

"திருச்சியிலிருந்து பணம் கிடைத்தது. எனது நண்பர்கள் எவரிடமிருந்தும் இன்றும் ஒரு கடிதமும் வரவில்லை. இலங்கைக்கு திரும்பிச் செல்லவே எண்ணினேன். சிறையில் இருக்கும் தீரர்களின் குடும்பங்களை எண்ணி வருந்தினேன். அவர்களின் குடும்பங்களின் மாதாந்த செலவுகளுக்குப் பணம் கொடுப்பதற்கு யார் முன்வரப்போகிறார்."

  • ஏப்ரல் 29, ஞாயிறு:

"... ... ... ‘Rebels’ என்ற நூலை வாசித்தேன். அதைப்போல் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகியது "

  • ஏப்ரல் 30, திங்கள்:

"திருமதி இந்திரா காந்தி பெரியவரைப் பார்க்க மறுத்ததைப் பற்றிய செய்தி இன்றைய பத்திரிகைகளில் வந்ததை அறிந்ததும் வேதனைப்பட்டேன். எமது போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்கு ஒரு நாடும் முன்வரமாட்டாது. தமிழ்நாடு ஆட்சியிலிருப்பவர்களும் அசிரத்தை காட்டுகிறார்கள். "

  • மே 3, வியாழன்:

"சீனத் தெருவில் - 300 எடுத்தேன். இன்று மனதிற்கு சற்று உற்சாகமாக இருந்தது "

  • மே 4, வெள்ளி:

"வீட்டில் தங்கியிருந்து இயக்க அமைப்புத் சம்பந்தமான நூல்களைப் படித்தேன். இலங்கையின் பிரச்சினைக்கு ஒரு தனிச் சங்கம் அமைப்பதற்கு ஒரு ஆலோசனைக் கூட்டம் 9|5|1973 மாலை ஆறு மணிக்கு கவிதா ஓட்டலில் வைப்பதற்கு திரு கண்ணதாசன் அவர்கள் இசைவு தந்தார்கள். 50 PC வாங்கினேன்.”

  • மே 6, ஞாயிறு:

"வீட்டிலேயே தங்கியிருந்தேன். 9ம் திகதி கூட்டத்திற்குரிய அழைப்புகளை அனுப்பினேன். ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களைக் கொண்ட விடுதலைப்படை அமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். இவர்களின் உடைக்கு ஒரு நிறம். சினிமா காட்டுவதைத் தடை செய்ய வேண்டும். மது விற்பனையை நிறுத்த வேண்டும்."

  • மே 7, திங்கள்:

"துணைவியிடமிருந்து கடிதங்கள் கிடைத்தன. ஈழத்தில் ஆயுதப் புரட்சியை தமிழர்கள் ஏற்படுத்தாது விட்டால் நமது இனம் அழிந்து விடும். அதற்குரிய வழிவகைகளை வகுப்பதற்காக மற்றைய நாடுகளில் நடைபெற்ற இயக்கங்களின் வரலாறுகளைக் கவனமாக எடுத்துப் படிக்கின்றேன்."

  • மே 9 புதன்:

"இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு சங்கம் அமைப்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 15 அன்பர்கள் வந்திருந்தார்கள்."

  • மே 12, சனி:

"இன விடுதலையின் தலைவிதியைப் பற்றியும் தமிழர்களின் உதாசீனத்தையும் எண்ணியெண்ணி அதிகமாக வருந்தியதால் தொய்வு கடுமையாக இருந்தது. Dr. இராஜேந்திரன் என்னை வந்து சந்தித்து பகலுணவிற்கு அழைத்துச் சென்றார். தொய்விற்கு மருந்து கொண்டுவந்து தருவதாகக் கூறினார். நற்சோதியை சந்தித்தேன். திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக ஒருமனதாய் 5|5|1973 தொடக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக Dr. K. இராஜேந்திரன் எனக்கின்று கூறினார்."

  • மே 16, புதன்:

"தொய்வும் வயிற்று வலியும் இருந்தது. தனிமையில் வேதனையை அனுபவித்தேன். எழுந்து நடக்க முடியாது கஸ்டப்பட்டேன். ஜனாவின் தாயார் எனக்கு ருசியான உணவு சமைத்துத் தந்தார். என்னால் சாப்பிட முடியவில்லை."

  • மே 17, வியாழன்:

"உடல்நிலை கொஞ்சம் குணமடைந்திருந்தது. யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் தந்தை சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற தமிழர் கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில் சரித்திர முக்கியத்துவமான தீர்மானம் எடுக்கப்பட்டது.

  1. இலங்கையில் ஒரு சுதந்திர தமிழ்நாடு அமைப்பதை கொள்கையளவில் ஏற்பது.
  2. அரசமைப்புச் சட்டதை வகுப்பதற்கு ஒரு உபகுழு நியமிக்கப்பட்டது. "
  • மே 22, செவ்வாய்:

"சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு தமிழகத்தில் உள்ள விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன், கறுப்பு கொடியும் திரு ஜனார்த்தனம், மணவைத்தம்பி ஆகியோர்களால் உயர்த்தப்பட்டன. மாலைமுரசுப் பத்திரிகையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டது."

  • சூன் 4, திங்கள்:

"பச்சையப்பன் கல்லூரியில் விண்ணப்பங்கள் எடுத்து காண்டீபனுக்கும், ஜெயக்குமாருக்கும் அனுப்பி வைத்தேன். எனக்கும் தொய்வும் காச்சலும் இருந்தது. இரவு பஸ்ஸில் திருச்சிக்குச் சென்றேன். "

  • சூன் 10, ஞாயிறு:

"கவிஞர் காசி ஆனந்தன் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது."

  • சூன் 16, சனி:

"காண்டீபனின் விண்ணப்பபடிவம் இன்று கிடைத்ததும் அதை பச்சையப்பன் கல்லூரியில் கொண்டுபோய்க் கொடுத்தேன். ரசீது இல. 16778. Appilication No. 5680 …… "

  • சூன் 29, வெள்ளி:

"திருமதி வ.ந. நவரத்தினம் அவர்களது மகன் காண்டீபன், நடேஸ் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்தனர். அவரகளை சாரதநிவாசில் தங்க வைத்தேன். திரு நவத்தின் மகன் சிறீ நமச்சிவாயத்தை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ப்பதற்காக திரு ஜனாவும் நானும் திரு. கபாலி Trust-Board உறுப்பினர் அவர்களிடம் சிபாரிசுக் கடிதம் வாங்கிக் கொண்டு போய்க் கல்லூரியில் சேர்த்தோம். காண்டீபனையும் கல்லூரியில் சேர்த்தோம்."

  • சூன் 30, சனி:

"அரசாங்க எழுதுவினைஞர் சங்க ஆண்டுக் கூட்டம் வவுனியாவில். திருமதி நவம், சிறீ நமச்சிவாயம் பச்சையப்பா கல்லூரிக்குச் சென்றோம். School Leaving Certificate இல்லாதபடியால் அவரை கல்லூரியில் சேர்க்க முடியவில்லை.”

  • ஆகஸ்ட் 11, சனி:

"கவிஞர் கண்ணதாசன் வீட்டு வாசலில் காலை 10.00 மணியளவில் நிற்கும் பொழுது திரு செ. இராசதுரையும் அங்கு வந்தார். ஆனால் அவர் என்னைக் கண்டுவிட்டு மறுபக்கம் திரும்பிக் கவிஞரின் வீட்டுக்குள் சென்றுவிட்டார். நான் ஆச்சரியமடைந்தேன்."

  • ஆகஸ் 23, வியாழன்:

"நானும் திரு ஜனாவும் எழுதிய நூலிற்கு அட்டைப்படம் வரைவித்து எடுத்தோம். இதில் வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கிய ஈழத்தமிழகத்தை வரைவித்தோம். இப்படம் பரணி ஆர்ட்சின் உரிமையாளரால் வரைந்து தரப்பட்டது. இரவு 11-00 மணியளவில்தான் படம் எமது கைக்கு கிடைத்தது. 'மீண்டும் எரிகிறது இலங்கை' என்னும் நாடகத்தை திரு ஜனாவும் 'இலங்கைத் தமிழர் இன்னல் தீருமா' என்னும் பகுதியை நானும் எழுதினோம். "

  • செப்டெம்பர் 20, வியாழன்:

"எனது நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இலங்கைத் தமிழர் விசயமாக இங்கு ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லையென நான் தீர்மானித்திருப்பதாக மகேசனுக்கு விரிவாக கடிதம் எழுதினேன். பென்சன் படிவம் திரு. துரைராஜாவின் பெயரில் அனுப்பினேன். திருமதி யோகநாதனுக்கும் கடிதம் எழுதினேன். விமலா யாழினி ஆகியோரைச் சந்தித்தேன். "

 

 

*********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இராசரத்தினம் நாட்குறிப்பு - 1974

மாமனிதர் இராசரத்தினம் 4.jpg

'மாமனிதர்' ஆ. இராசரத்தினம் அவர்களின் கரிக்கோல் ஓவியப்படம்

 

 

மூலம்:  'விடுதலைப்புலிகள்', குரல் 5, திசம்பர் 1984, பக்: 10
தட்டச்சு: நன்னிச் சோழன்

 

 

'மாமனிதர்' திரு. ஆ. இராசரத்தினம் அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் 1974 ஆம் ஆண்டின் நாட்குறிப்பிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.

 

  • மார்ச் 31, ஞாயிறு:

"பெரியவருக்கு 76வது பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

இவ்விழா நடைபெற்ற மண்டபத்திற்கு இலங்கை பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளையும் இரண்டு சிங்களக் காவலரும் வந்திருந்தனர். திருமதி பாருவிற்கும் கடிதம் எழுதினேன்"

  • ஏப்ரல் 5, வெள்ளி:

"பணமில்லாததினால் சோறு உண்ணவில்லை. இட்டலி, தேநீருடன் பொழுதைக் கழித்தேன். தமிழன் என்றுதான் உணரப்போகிறானோ தெரியவில்லை.

திரு. வி. தருமலிங்கம் பா.உ. 10/4ல் சென்னைக்கு வருவதாக இலண்டனிலிருந்து திரு சனாவிற்கு எழுதியிருந்தார்."

  • ஏப்ரல் 10, புதன்:

"திரு வி. தருமலிங்கம் அவர்களைச் சந்தித்தேன். சீலாவிடம் புகைப்படத்தையும் சுவற்றரையும் ஒப்படைத்தேன். இலங்கையைப்பற்றி வழக்குத் தாக்கல் செய்த திரு. சாமி அவர்களை திரு. தருமலிங்கம் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்."

  • ஏப்ரல் 11, வியாழன்:

"திரு தருமலிங்கம் அவர்களுடன் அமைச்சுகளுக்குச் சென்றேன்"

  • ஜூன் 1, சனி:

"பணம் 100/- வங்கியில் எடுத்தேன். பல்கலைக்கழகத்திற்குச் சென்று ‘Foreign Notice of South India from Megasthanes To Ma Huan’ என்னும் நூல் வாங்கினேன்.

இந்நூலை வாங்கியதற்கு மகிழ்ச்சி அடைந்தேன். ஈழத்தமிழர்கள்தான் அங்கு மூத்த குடியினர் என்பதற்கு மேலதிகமான தகவல்கள் சில இருந்தன."

  • ஜூன் 8, சனி:

"வைத்தியசாலைக்குச் சென்றேன். திரு சிவகுமாரன் இறந்த செய்தியை இன்று அறிந்தேன். கவலைப்பட்டேன். கண்ணீர் விட்டேன்.

ஈழத் தமிழரின் உரிமைக்காத் தனது உயிரைப் பலிகொடுத்த அவர் உத்தமத் தியாகி, அவர் வீரமரணம் அடைந்து விட்டார். அவரது ஆத்மா சாந்தியடைக. "

  • ஜூன் 22, சனி:

"திருமதி வ. ந. நவரத்தினம் இன்று காலை என்னுடம் பேசினா. ஆனால் நான் தவிர்த்துக்கொண்டேன்."

  • ஜூன் 25, செவ்வாய்:

"சிங்கப்பூர் திரு. ஜபார், திரு ஜனா, சினிமா நடிகர் முஸ்தபா அவர்களும் எங்களது கடைக்கு வந்து பார்வையிட்டார்கள்.

திருமதி நவத்தின் முன்னிலையில் நான் எவருக்கும் உதவி செய்யவில்லையென்று காண்டீபன் கூறினார். இவ்வார்த்தை ஈட்டியால் என் உள்ளத்தில் குத்துவது போன்றிருந்தது. ஏனெனில் சென்ற ஆண்டு செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் என்னிடம் உணவு உண்டவர், அதற்கு ஒரு சதம் கூடத்தரவில்லை. இவ்வாறு தான் செய்ததையே மறந்து நன்றி கெட்டத்தனமாகக் கூறினார்."

  • சூலை 1, திங்கள்:

"இன்று காலை சகுனியான ரகுபதிநவத்துடன் தர்க்கம் செய்தேன். எவரிடமோ கொடுக்கப்பட்ட 35/- இற்கு என்னிடம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். இந்தத் தாடகை, இவள் தன்மைகள், யோக்கியதைகள் யாவும் அரக்கத்தன்மையுடையவை. வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவள். பகட்டாக உயர்வுநிலையைக் காட்டும் இழிவு மனப்பாண்மை உடையவள். இவளின் மூர்க்கத்தனத்தினாள் நான் அவமானப்பட்டேன். வேதனையடைந்தேன். உள்ளம் கறைபடிந்துள்ளது."

  • செப்டெம்பர் 4, புதன்:

" 'தாமிரபரணி புதிய புலிகள்' என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளாக்கருத்தையும் விளக்கித் தங்கத்திடம் கூறினேன். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இது ஒரு புதிய சகாப்தம்.

கம்பெனிப் பிரயாணத்திற்குரிய வண்டியில் நானும் திரு. கமுரும் ஏறிவந்தோம், திரு. கஜன் என்னைச் சந்தித்தார். "

  • செப்டெம்பர் 5, வியாழன்:

"கடையிலேயே தங்கியிருந்தேன். எங்களது முதலாவது டூரிஸ் பஸ் இன்று அதிகாலை 5-00 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. டி.என்.டி. க்குரிய உறுதிப் பிரமாணத்தையும் குறிப்புகளையும் வரைந்தேன்."

  • ஒக்டோபர் 4, வியாழன்:

"தொய்வுக்குணமிருந்தது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றிய செய்தியை இங்குள்ள எல்லாப் பத்திரிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன."

  • ஒக்டோபர் 8, ஞாயிறு:

"தொய்வுக்குணமிருந்தது. ஆங்கிலத்தில் துண்டுப்பிரசுரம் இலங்கைத்தமிழர் பிரச்சினைப் பற்றித் தயார் செய்தேன். திரு. சுந்தரம், புருசோத்தமன் ஆகியோரைச் சந்தித்தேன். "

  • ஒக்டோபர் 9, செவ்வாய்:

"வீடு இன்று ஒப்படைத்தேன் - கனடாவிலிருந்து 'மீண்டும் எரிகிறது இலங்கை' என்னும் நூலை அனுப்பக்கோரியிருந்தார்கள். மகிழ்சிக்குரியது - புகைப்படங்கள் கொடுத்தனுப்பினேன் - சின்னக்கண்ணருடன் அதிகாலையில் கதைத்தேன் - சுதந்திரன் கிடைத்தது. "

  • ஒக்டோபர் 20, சனி:

"வீட்டு வாரிய அலுவலகத்திற்கு சனாவும் நானும் சென்று வீடு திருப்பிக் கொடுத்த விபரங்களைக் காட்டினோம். பணமில்லாததினால் மூன்று இட்லியுடன் இரவுணவைச் சமாளித்துக்கொண்டேன். தமிழினத்தின் சுயஉரிமைக்காகப் போராடும் எனது இன்றைய நிலை பசி, பட்டினி, என்ன செய்வது? யாரை நோவது?"

  • ஒக்டோபர் 21, ஞாயிறு:

"காலையில் சாப்பிடவில்லை. பகல் இரண்டு தோசை, இரவு சிறு துண்டுப் பாண் 26 காசு. இது எனது நிலை. பசி, உண்பதற்குப் பணமில்லை. இதை எழுதுவதில் எவ்விதமும் எனக்கில்லை. காரணம் நன்றியில்லாத தமிழினம்."

  • ஒக்டோபர் 22, திங்கள்:

"சனா வங்கியில் கடன் எடுத்துப் பணம் தந்தார். அரிசி வாங்கிச் சமைத்தோம். திரு. ஜி.ஜி. பொன்னம்பலம், பிரதம அமைச்சர் சிறீமாவோ பண்டாரநாயக்காவைச் சந்தித்து உணவுப் பிரச்சினை பற்றிப் பேசியதாகப் பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. திரு. பொன்னர் இன்னும் என்னென்ன, துரோகங்கள் தமிழினத்திற்குச் செய்யப்போகிறாரோ தெரியவில்லை. "

  • ஒக்டோபர் 23, புதன்:

"பணமில்லாததினால் இட்டலியும் பாணும் உண்டு பசியைப் போக்கினேன். மருமகன் என்னைச் சந்தித்தார். நிர்மலாவைச் சந்தித்து பணம் நாளை தருவதாகக் கூறினேன். "

  • ஒக்டோபர் 24, வியாழன்:

"இன்றும் பணமில்லாதபடியால் சோறு உண்ணவில்லை. என்ன ஊழ்வினையோ தெரியவில்லை இறைவா. இவ்வாறு எவ்வழவு காலம் பட்டினிவாழ்வு? சனா புதுடில்லி சென்றார்.

மருமகன் வந்தார். எனது தொய்வுநோய் இனிமேல் குணமாகிவிடுமென அன்னை மாயம்மா காட்சி கொடுத்ததாகக் கூறினார். அவவின் அனுமதியுடனும் ஆசியுடனும் விபூதியை நீரில் கலந்து திரு. பாண்டி என்னிடம் தந்தார். நான் அதை வாங்கிக் குடித்தேன்."

  • ஒக்டோபர் 27, ஞாயிறு:

"திரு மகேஸ்வரனையும் துணைவியையும் சந்தித்தேன். 20ரூபாய் தந்தார். அதன்பிறகுதான் கடைக்குச் சென்று உணவருந்தினேன். பகல் முழுக்க பட்டினி இருக்க இடமில்லை. உண்பதற்குப் பணமில்லை. வசந்தனைச் சந்தித்தேன். சில உறுதியான முடிவுகளைச் செய்தேன். கவலையினால் தூக்கமில்லை. காலையில் ஒரு தேநீர் குடித்துவிட்டு பகல் 2௩0 மணி வரையும் மத்திய புகைவண்டி நிலைய குந்திக்கொண்டிருந்தேன் - பசியினால் சோர்ந்து போயிருந்தேன். அப்போதுதான் திரு மகேஸ்வரன் என்னைச் சந்தித்தார். அவரது உதவியை என்றுமே மறக்க இயலாது. அந்தப் பணத்தில் எனக்கு துரோகமிழைத்த சுந்தரத்திற்கு இரவுணவு வாங்கிக் கொடுத்தேன் "

  • நவம்பர் 4, செவ்வாய்:

"காய்ச்சல் இருந்தது. வீட்டிலேயே தங்கியிருந்தேன். பசியின் கொடுமை அதிகமாக இருந்தது. இரவு முருகன் ரூபா 10 கொண்டுவந்து தந்தார். கண்ணனுக்கு கடிதம் எழுதினேன்.

  • நவம்பர் 7, வியாழன்:

"திரு. ஞானரத்தினத்தின் பதிவுக் கடிதம் இன்று எடுத்தேன். இருமலும் காய்ச்சலும் அதிகமாக இருந்தது. மூன்று பிளேடுகள் அனுப்பியிருந்தார். பணமில்லாதபடியால் இரண்டு 'பன்' வாங்கிச் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன். "

  • நவம்பர் 29, வெள்ளி:

"இராமநாத சுவாமி சத்திரத்தில் தங்கியிருந்தேன்."

  • நவம்பர் 30, சனி:

"சத்திரத்தில் தங்கியிருந்தேன்."

  • டிசம்பர் 1, ஞாயிறு:

"சத்திரத்தில் தங்கியிருந்தேன்."

  • டிசம்பர் 22, சனி:

"அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற தமிழின ஆராச்சி மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். குறவஞ்சி நாட்டிய நாடகத்தில் கொழும்பு செல்வி துசிதா திருநாவுக்கரசும் பங்குபெற்றினார்."

  • டிசம்பர் 25, செவ்வாய்:

"எனக்கு இன்று வயிற்றோட்டம் அதிகமாக இருந்தது. பெரியாரின் சடல இறுதி ஊர்வலத்தை தரிசிப்பதற்காக எழும்பூருக்குச் சென்று தினத்தந்தி அலுவலகத்திற்கு முன்பு நின்று பார்வையிட்டேன். ஊர்வலம் முடிந்ததும், கல்லேறியினால் சனம் அங்கும் இங்கும் ஓடியது. நானும் அதில் அகப்பட்டு நசிபட்டேன். திரு. பிள்ளை இரவு புகைவண்டியில் சிதம்பரம் சென்றார்."

 

 

*********

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இராசரத்தினம் நாட்குறிப்பு - 1975

'Maamanithar' A Rajaratnam ..jpg

'மாமனிதர்' ஆ. இராசரத்தினம் 

 

 

 

இதுவரையிலும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. விடுதலைப்புலிகள் குரல் 6இல் இது தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லை. எனவே இது விடுதலைப் புலிகளால் வெளியிடப்படவில்லை என்ற முடிவிற்கு துணிபுகிறேன்.

 

 

*********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முடிவுரை

 

இவர் எமது விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி புரட்சியாளர்களுள் ஒருவராவார். தலைவர் மாமாவிற்கு மிகவும் நெருக்கமான ஆள். இலங்கையில் சிங்களக் காவல்துறை தேடியதால் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தபடி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போது எந்தவொரு உதவியுமில்லாமல் வறுமையில் வாடினார். அங்கு வாழ்ந்த போது ஏறிட்டும் பார்க்காது வஞ்சித்த இவர் சார்ந்த அரசியல் கட்சியான 'தமிழர் விடுதலைக் கூட்டணி', இவர் இறந்த பின் பல புகழாரங்கள் சூட்டி உரிமை கொண்டாடியது வெறுக்கத்தக்க சந்தர்ப்பவாத இழிசெயலாகும். 

இவரைப்பற்றி நான் எனது சிறுவயது முதல் அறிந்திருந்ததால், இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பியது உண்டு. ஆனால் அதற்கான சரியான சந்தர்ப்பம் கைகூடவில்லை. நேற்றிரவுதான் அதற்கான சந்தர்ப்பமும் தேவையான தகவல்களும் கிடைத்தன. கையோடு எழுதி இன்று முடித்துவிட்டேன்.

இதை வாசகர்கள் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். ஏற்கனவே யாரேனும் எடுத்து வைத்திருந்தால் புதுப்பித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். ஏனெனில் அனைத்து மறுமொழிப்பெட்டிகளையும் இன்று  இற்றைப்படுத்தியுள்ளேன்.

இத்தோடு இவ்வாணக்கட்டு முடிவிற்கு வருகிறது. 

 

நன்றி

 

முற்றும்.
 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to 'மாமனிதர்' ஆ. இராசரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாறு | ஆவணக்கட்டு
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பின்னிணைப்பு - 1

 

'மாமனிதர்' விருதின் போது சேர்த்து வழங்கப்பட்ட மதாணி

 

ஈ தங்க மதாணியானது அன்னாருக்கு தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்ட போது - அவருடைய மனைவியிடம் கையளிக்கப்பட்டது - அதனோடு சேர்த்து வழங்கப்பட்டது ஆகும். இது வழங்கப்பட்ட போது சங்கிலி இல்லமலேயே வழங்கப்பட்டு பின்னாளில் பயன்பாட்டிற்காக அன்னாரது குடும்பத்தினரால் சங்கிலி இணைக்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்டபோதே சங்கிலி இணைக்கும் குதை இம்மதாணியின் பின்புறத்தில் இருந்தது.

  • மதாணியின் வடிவம்:

தமிழீழத் தேச வரைபடத்தின் நடுவிலே தமிழீழத் தேசிய இலச்சினையான விலங்குடைத்துப் பாயும் புலி பொறிக்கப்பட்டுள்ளது.

 

மாமனிதர் மதாணி

படிமப்புரவு: நன்னிச் சோழன். ஆனால் இதை இலவச பதிப்புரிமையின் கீழ் வெளியிடுகிறேன்.

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பின்னிணைப்பு - 2

 

கீழ் வருபவை இவருடன் நேரடியாகத் தொடர்புடைய பலருடன் நேரில் கதைத்து நான் பெற்ற தகவல்களும் கட்டுரைகளிலிருந்து பொறுக்கியெடுத்தவையுமாகும்.

 

  • இவர் ஆறுமுகம்-செல்லம்மா இணையரின் மூத்த மகன் ஆவார். இவரிற்கு இரு தம்பிகள் உள்ளனர்; ஆறுமுகம் குமாரசாமி (இரண்டாமவர்) மற்றும் ஆறுமுகம் நடராஜா (மூன்றாமவர்) என்பவை அன்னவர்களின் பெயர்களாகும். இவரும் இவரின் உடன்பிறப்புகளும் சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தின் பழைய நகரத்திலுள்ள மாவடி என்ற ஊரில் பிறந்தனர். அநுராதபுரம் சிங்கள பேரினவாதத்தால் "புனித நகர்" என்று புத்த சிங்களத்திற்கு மட்டுமே தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டு, தமிழர்கள் விரட்டியடிக்கப்படும் வரை அங்கு தமிழர்களும் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்துவந்தனர். இன்றுளவும் சில சிற்றூர்களிலும் நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே வாழ்ந்துவருகின்றனர் (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்).

 

  • இவரது பெற்றாரின் சொந்த ஊர் தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நீர்வேலி என்ற ஊராகும். இணையர்கள் வேலை காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று மாவடியில் வசித்தனர். அப்போதுதான் அவர்தம் பிள்ளைகள் அங்கே பிறந்துள்ளனர். (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்).

 

  • ஆறுமுகம் அவர்கள் இவரின் சிறுவயதிலேயே இயற்கை எய்திவிட்டார். பின்னாளில் அநுராதபுரம் புதிய நகரம் தோற்றுவிக்கப்பட்டவுடன் பழைய நகரிலிருந்து இடம்பெயர்ந்து புதிய நகரிலுள்ள ஜெயந்தி மாவத்தை என்ற ஊரினூடாகச் செல்லும் C.T.B. வீதியிலுள்ள ஒரு வீட்டில் இவர் தம் இரண்டாம் புதல்வரின் குடும்பத்தினர் வசித்தனர். அதே சமயம் திருமதி செல்லம்மா அவர்கள் அதே வீதியிலுள்ள எண். 64 B என்ற வீட்டிலக்கம் உடைய வீட்டில் வசித்து வந்தார் (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்). 

 

  • "மாமனிதர்" ஆ. இராசரத்தினம் பிறந்த திகதி : செப்டம்பர் 4, 1928 (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்). 

 

  • திருமதி பரமேஸ்வரி இராசரத்தினம் வாழ்வுக் காலம் : 18.2.1938 - வைகறை 22.8.2022

 

  • காலி முகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இவர் கலந்துகொண்டிருந்த போது சிங்களக் குண்டர்கள் இராசரத்தினம் அவர்களின் நெஞ்சில் உழக்கினர். இதை இவருடைய மனைவியார் கொழும்பு சென்றிருந்த போது அங்கு வைத்து அன்னாரால் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதாம். (காலஞ்சென்ற அவருடைய மனைவியின் நேரடி வாக்குமூலம்)

 

  • 1974 ஓகஸ்டில் பெரியசோதி என்னும் சோதிலிங்கம், தங்கத்துரை மற்றும் நடேசுதாஸன் ஆகியோருடன் வேதாரணியத்தில் இருந்து சென்னைக்கு வந்த தேசியத் தலைவர் அவர்கள் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த போது எக்மோர் C.I.T காலனியில் ஆ. இராசரத்தினம் தங்கியிருந்தார். அன்னவர்கள் இருவரும் கன்னிமாரா நூல்நிலையத்தில் பல முறை சந்தித்து மணிக்கணக்கில் கலந்துரையாடினர் (வர்ணகுலத்தான் அவர்கள் எழுதிய 'விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்த மோகனதாஸ்!' கட்டுரையிலிருந்து).

 

  • திருகோணமலை கச்சேரியின் வாயிலில் 1961 மார்ச் 4இல் சிங்களத்தின் "ஸ்ரீ" என்ற எழுத்துக்கு எதிராக மறியல் செய்த சத்தியாக்கிரகிகள் மீது காவல்துறையினர் இரக்கமற்ற முறையில் தடியடி நடத்தினர். இந்நிகழ்வில் காயமடைந்த மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் 23 மார்ச் 1961 அன்று காலமானார். உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தேறிய இவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் அகிம்சை வழியில் நம்பிக்கையிழந்ததால் தீவிரவாதப் பாதையில் "புலிப்படை" என்னும் அமைப்பைத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் கோணேஸ்வரத்தில் உறுதியெடுத்துக்கொண்டனர். இதில் 'மாமனிதர்' ஆ. இராசரத்தினம், வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம், சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நவரத்தினம், தமிழ் எழுதுவினைஞர் சங்கத் தலைவர் 'மாமனிதர்' சிவானந்தசுந்தரம் மற்றும் வவுனியாவின் முன்னாள் அரச அதிபரான இராசதுரை என்போர் குறிப்பிடத்தக்கவராவர். இதில் ஏறத்தாள 20 பேர் உறுப்பினர்களாய் இருந்தனராம் (மூத்த செய்தியாளர் சபாரத்தினம்). இதில் இணைந்திருந்த இளையோர் சிலர் கண்டிக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தனர். அத்துடன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் தற்பாதுகாப்பு பயிற்சிகளையும் பயின்றனர். எனினும் 1965 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் குறிப்பிட்ட புலிப்படை கலைந்து போனது. அமிர்தலிங்கம் மற்றும் நவரத்தினம் என்போர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த கூட்டாச்சியில் சிங்கள அரசுடன் சோரம்போயினர். ஆயினும் இராசதுரை, சிவானந்தசுந்தரம் மற்றும் இராசரத்தினம் ஆகியோர் ஒடுவில் வரை தனித் தமிழரசு என்ற நோக்கத்துடன் வாழ்ந்து இறந்தனர் (வர்ணகுலத்தான் அவர்கள் எழுதிய 'புலிப்படைமுதல் விடுதலைப்புலிகள்வரை புலிகளின் வரலாறு!').

 

  • இவரின் கடைசிப் புதல்வியான கப்டன் அக்கினாவிற்கு கறுப்பு உடைகளே மிகவும் பிடிக்கும். அவர் கடைசியாக வீட்டிற்கு வந்த போது கூட அவரது தாயாரின் கையால் தைக்கப்பட்ட ஒரு கறுப்பு மேற்சட்டையினையே தைத்துத்தரும்படி கேட்டுப் பெற்றுச் சென்றார். (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்).

 

  • இவரின் கடைசிப் புதல்வியான கப்டன் அக்கினோ போராளியாகுவதற்கு முன்னர், ஒரு தடவை இவர்களின் வீட்டிற்குச் சில பெண் போராளிகள் வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் கொண்டுவந்திருந்த வகை-56 - 1 துமுக்கியை தனது கையில் ஏந்தியபடி புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்).

 

  • "மாமனிதர்" ஆ. இராசரத்தினம் அவர்கள் கடைசியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு பண்டுவம் அளித்த இந்திய தமிழ் மருத்துவரின் பெயர் மரு. புருசோத்தமன் ஆவார். அவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இன்னொரு தமிழீழ மருத்துவருக்கு ஆ. இராசரத்தினம் அவர்களின் இறப்புத் தொடர்பில் எழுதிய கடிதத்தில் இரவு 8 மணி போல அன்னாருக்கு தான் "சாத்துக்குடி" (தமிழீ. த.: தோடம்பழம்) பழச்சாறு வழங்கி அவர் அதை அருந்திய பின்னர் தான் சென்றுவிட்டதாகவும் பேந்து காலமை வந்து பார்த்த போது அன்னார் இறந்திருந்ததாகவும் எழுதியிருந்தார். (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்).

 

  • இவரது சடலம் வைக்கப்பட்ட சவப்பெட்டியானது கடுநீல நிற துணியால் போர்த்தப்பட்டுத்தான் சாவகச்சேரியிலிருந்த இவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அந்தக் கடுநீல நிறத் துணியில் "ஈழத்தின் நேதாஜி இங்கே உறங்குகிறார்" என்ற சொற்றொடரானது வெள்ளி நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்).

 

ஆக்கம் & வெளியீடு: 
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 இதுபோல இன்னும் பல ஆவணங்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

 

 

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/11/2021 at 04:54, நன்னிச் சோழன் said:

நான் பிறந்தது 1965 ஆம் ஆண்டில். அப்போது கொழும்பில் இருந்தோம். சில காலத்திற்குப் பின்னர் இங்கு ஊரோடு வந்துவிட்டோம். அப்பாவைப் பற்றிய ஒரு நிழலுருவம்தான் எனது மனத்திரையில் உள்ளது. ஏனெனில் குழந்தைப் பருவத்தைக் கடந்த நினைவை ஏற்படுத்தும் சூழலில் அப்பா எங்கள் குடும்பத்துடன் இருக்கவில்லை. ஆனால் அப்பாவின் பூதவுடல் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்த நிகழ்ச்சி எனது மனத்திரையில் பதிவாகி உள்ளது என்றார் அவர்.

அகவுலகைக் கரைத்து கண்ணீர்த் தாரைகளைத் தரவைக்கும் கனதி நிறைந்தவையாக இந்த மறுமொழி அமைந்துள்ளது. 

 நன்னிச்சோழனவர்களே நன்றி 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
1 hour ago, nochchi said:

அகவுலகைக் கரைத்து கண்ணீர்த் தாரைகளைத் தரவைக்கும் கனதி நிறைந்தவையாக இந்த மறுமொழி அமைந்துள்ளது. 

 நன்னிச்சோழனவர்களே நன்றி 

தங்கள் கருத்திற்கு நன்றி. உண்மையில் அவர் பிறந்து 1964.. 65 அல்ல.

Edited by நன்னிச் சோழன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.