Jump to content

காடுகளை இன்னும் அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காடுகளை இன்னும் அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?

  • உண்மைப் பரிசோதனைக் குழு
  • பிபிசி நியூஸ்
20 நவம்பர் 2021, 02:07 GMT
அமேசானிலிருந்து வரும் வெட்டப்பட்ட மரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமேசானிலிருந்து வரும் வெட்டப்பட்ட மரங்கள்

பல உலக நாடுகளின் தலைவர்கள் 2030 வாக்கில் காடுகள் அழிப்பை நிறுத்தவும், மீண்டும் காடு வளர்க்கவும் உறுதி அளித்துள்ளனர்.

ஆனால், 15 ஆண்டுகளில் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு மிக அதிக அளவில் உள்ளது. மற்ற இடங்களிலும் காடழிப்பை நிறுத்துவது சவாலான ஒன்றாகவே உள்ளது.

பிரேசில்: தொடரும் சட்டவிரோத மரம் வெட்டுதல்

பரந்து விரிந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் 60 சதவீதம் பிரேசில் நாட்டுக்குள் வருகின்றன. தீங்கு விளைவிக்கிற கரியமில வாயுவை உறிஞ்சுவதில் இந்த அமேசான் மழைக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த காடுகள் இப்படி இந்த கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளாவிட்டால், அது வளிமண்டலத்தில் கலந்துவிடும். பிரேசிலில் காடு அழிப்பு நடவடிக்கைகள் 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் காடழிப்பு அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (INPE) தெரிவித்துள்ளது.

பிரேசில் காடழிப்பு
 
படக்குறிப்பு,

பிரேசில் காடழிப்பு

அக்கழகத்தின் சமீபத்திய அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 22 சதவீதம் காடழிப்பு அதிகரித்துள்ளதாகவும், 13,235 சதுர கி.மீ. காடுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானில் சுரங்கத் தொழிலை ஊக்குவிப்பது, காடுகளை அழித்து அங்கே விவசாயம் செய்ய ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்நாட்டின் அதிபர் சயீர் போல்சனாரோ விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் மரம் வெட்டிகள் மற்றும் விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு முகமைகளுக்கான நிதியை போல்சனாரோ குறைக்கிறார். சட்ட விரோதமாக மரம் வெட்டுவோரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதம் 2020ம் ஆண்டில் 20 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

மிகத்துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி பிரேசிலில் நடந்த காடழிப்பு மற்றும், வாழிட அழிப்பு ஆகியவற்றில் 94 சதவீதம் சட்டவிரோதமாக செய்யப்பட்டவை.

ஆனால், அமேசான் காடுகள் அழிக்கப்படுவது பிரேசிலில் மட்டும் நடப்பதில்லை. அதன் அண்டை நாடான பொலிவியாவிலும் இது நடக்கிறது.

முக்கிய நாடுகளின் வன அழிப்பு விவரங்கள்
 
படக்குறிப்பு,

முக்கிய நாடுகளின் வன அழிப்பு விவரங்கள்

காங்கோ படுகை: வேளாண்மை மற்றும் சுரங்கம்

காங்கோ படுகை என்பது உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு ஆகும். இந்தப் படுகை பாதிக்கு மேல் காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டுக்குள் வருகிறது.

பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை நடத்தும் சட்டவிரோத மரம் வெட்டும் நடவடிக்கையால்தான் காடழிப்பு நடக்கிறது என சுற்றுச்சூழல் பிரசார அமைப்பான கிரீன்பீஸ் தெரிவிக்கிறது.

பிழைப்புநிலை வேளாண்மை (குடும்பத்தின் தேவையை நிறைவு செய்ய மட்டும் செய்யப்படும் வேளாண்மை), எரிபொருளாகப் பயன்படும் கரி தயாரிப்புக்காக காடுகளை அழித்தல், நகர்ப்புற விரிவாக்கம், சுரங்கத் தொழில் ஆகிய வேறு அச்சுறுத்தல்களும் நிலவுகின்றன.

காங்கோவில் காணாமல் போகும் வன பரப்பு
 
படக்குறிப்பு,

காங்கோவில் காணாமல் போகும் வன பரப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5 லட்சம் ஹெக்டேர் முதன்மைக் காடுகள் அழிக்கப்பட்டதாக குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் என்ற அமைப்பு கூறுகிறது.

பொதுக்காடுகளில் அறுவடை செய்வதற்கான குத்தகை ஒதுக்கீடுகளை தணிக்கை செய்ய கடந்த மாதம் உத்தரவிட்டார் அதிபர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி. 14 லட்சம் ஹெக்டேர்கள் தொடர்பான உத்தரவு ஒன்றும் அதில் அடக்கம். இது தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளும் வந்தன. இதை செயற்பாட்டாளர்கள் வரவேற்றனர்.

மரம் வெட்டுவது தொடர்பாக 2002ம் ஆண்டு முதல் இருந்துவந்த தடை உத்தரவு ஒன்று இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்யப்படுவது தொடர்பாக ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்தனை காலம் அது செயல்படுத்தப்பட்டதே இல்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் காடுகளைக் காக்கவும், காட்டு பரப்பளவை 8 சதவீதம் அதிகரிக்கவும் அளிக்கப்பட்ட ஒப்புதலுக்கு முரண்பாடாக அமைந்துள்ளது இது.

இந்தோனீசியா - பாமாயில் தோட்டங்கள்

இந்தோனீசியாவில் காணாமல் போகும் வன பரப்பு
 
படக்குறிப்பு,

இந்தோனீசியாவில் காணாமல் போகும் வன பரப்பு

கடந்த இரு தசாப்த காலங்களில் உலகில் காடழிப்பு அதிகம் நடந்த 5 நாடுகளில் இந்தோனீசியாவும் ஒன்று.

2002 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்த நாட்டில் 97.5 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிவை சந்தித்துள்ளதாக குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் அமைப்பு கூறுகிறது.

காடுகள் அழிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ள பாமாயில் தோட்டத் தொழில் மீது நடவடிக்கை எடுப்பதாக 2014ல் உறுதி அளித்தார் அதிபர் விடோடோ.

அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி 80 சதவீத காட்டுத் தீ இதற்காகவே மூட்டப்படுகிறது. 2016ல் அதிகபட்சமாக 9.29 லட்சம் ஹெக்டேர் காடுகள் காணாமல் போயின. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் குறைந்துவந்தது.

2020ல் ஆண்டு காடழிப்பு 2.70 லட்சம் ஹெக்டேராக குறைந்தது. 2019ல் அதிபர் விடோடோ புதிதாக காடுகளை அழிக்கும் திட்டங்களுக்கு மூன்றாண்டு தடை விதித்தார். 6.6 கோடி ஹெக்டேர் காடுகள் தொடர்பானது இந்த தடை. இந்த ஆண்டு இந்த தடை காலவரையறை இன்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

காடழிப்பை நிறுத்த என்ன திட்டம் உள்ளது?

இந்தோனீசிய வன அழிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தோனீசிய வன அழிப்பு

புவி வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமான கரியமில வாயுவை பெரிய அளவில் காடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. எனவே, மரங்களை வெட்டுவது பருவநிலை மாற்றத்தில் பெரிய தாக்கத்தை செலுத்தும்.

1990 முதல் 42 கோடி ஹெக்டேர், அதாவது 100 கோடி ஏக்கர் காடுகள் அழிவை சந்தித்துள்ளன என்கிறது ஐ.நா. இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மை.

சமீபத்தில் நடந்த காலநிலை மாநாட்டில், 2030 வாக்கில் காடழிப்பை தடுத்து நிறுத்தவும், காடுகளை வளர்க்கவும் 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

இதற்கு முன்பே காடுகளைக் காக்க முயற்சிகள் நடந்துள்ளன. காடழிப்பை 2020ல் பாதியாகக் குறைக்கவும், 2030ல் நிறுத்தவும் 2014ம் ஆண்டே ஒரு திட்டத்தை அறிவித்தது ஐ.நா.

2030 வாக்கில் காடுகளின் பரப்பளவை உலக அளவில் 3 சதவீதம் அதிகரிக்க ஒரு புதிய இலக்கு 2017ல் நிர்ணயிக்கப்பட்டது.

1990-2020 வரை இழந்த வன பரப்பு வரைபடம்
 
படக்குறிப்பு,

1990-2020 வரை இழந்த வன பரப்பு வரைபடம்

ஆனால், காடழிப்பு தீவிரமாக நடந்துவந்தது என்கிறது 2019ல் வெளியான அறிக்கை ஒன்று. இது பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு சவாலாக உருவாகியிருப்பதாகவும் அது கூறுகிறது.

இயற்கையாகவோ, மரம் நட்டதாலோ சில இடங்களில் மறு காடு வளர்ப்பு நடந்துள்ளது. கரியமில வாயுவை முழுமையாக உறிஞ்சும் அளவுக்கு மரங்கள் பக்குவமடைய பல ஆண்டுகளாகும்.

பிபிசி உண்மை சரிபாக்கும் குழு
 
படக்குறிப்பு,

பிபிசி உண்மை சரிபாக்கும் குழு

கடந்த பத்தாண்டில் ஆண்டுதோறும் 47 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ளன. பிரேசில், காங்கோ ஜனநாயக குடியரசு, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இந்த அழிவு அதிகம் நடந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-59350876

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆம் 70களின் ஆரம்பத்தில் பிறந்த என் வயதையொத்த‌ என் சிங்கள நண்பர்கள் 1990 களின் நடுப்பகுதியில் தாங்களை ஒரு தேசாபிமானியாக காட்டிக்கொண்டார்கள். பழக இனிமையானவர்கள் என்றாலும் இனவாதமும் சிங்கள பவுத்த மேலாதிக்கம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும். புலிகளையும், தமிழ் மக்களையும் பற்றி இழிவாகவே கதைப்பார்கள், என்ன ஆச்சர்யம், இன்று இவர்களில் பலர் வெளினாடுகளிலேயே இருக்கின்றார்கள். தாங்கள் பிள்ளைகளை வெளினாடுகளுக்கு அனுப்பிவிட்டு 50 வயதை கடந்த இவர்களும் வெளினாடுகளுக்கு ஓடி விட்டார்கள் அங்கிருந்து இலங்கையயை தூசிக்கின்றார்கள். காலம் எப்படி இவர்களை மாற்றிவிட்டது.  
    • புத்தன், வழமை போல நையாண்டியுடன் கூடிய அனுபவப் பகிர்வு..! எனக்கும் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனதைக் கலக்குகின்றது. போவதே கொஞ்சம் தமிழ் கதைக்கவும் கேட்கவும் தான். ஆனால் இப்போதெல்லாம் வட இந்தியர் தான் எல்லா இடமும்..! சிக்கின் கறி கேட்டால் சிக்கின் ரிக்கா தான் இருக்காம். பருப்புக்கறி கேட்டால் இந்தியன் ஸ்ரயில் தான் இருக்கு வேணுமோ எண்டு கேக்குதுகள். பாரதி சொன்னது போல, மெல்லத் தமிழ் இனிச் சாகும் போல தான் உள்ளது..! தமிழ் மட்டுமல்ல, சைவமும் தான்.. ஆக்குவதும் நாங்கள் தான்..! அதை அழிப்பதும் நாங்கள் தான்..!
    • நல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி கவி…! ஒரு மான்குட்டியை ஒரு சிங்கமோ அல்லது புலியோ பிடித்து வைத்து விளையாடுவதைக் கண்டிருக்கிறீர்களா? கடலின் வெளியே துடித்துக் கொண்டிருக்கும் மீனை,ஒரு கொக்கு ஒன்று தூக்கித் தண்ணீரில் போடுவதைக் கண்டுள்ளீர்களா? வலையில் பிடி படும் குஞ்சு மீன்கள் மற்றும் பாம்பு, பேத்தை போன்றவற்றைத் திரும்பவும் கடலில் விடுவதற்கான காரணம் என்ன? இந்திய மீனவர் விதி விலக்கு. இயற்கையில் ஒரு விதி இருக்கின்றது. அது எம்மை அறியாமலே உயிர்களை இயக்குகின்றது. அவ்வாறான ஒரு நிகழ்வே இந்த இளைஞனின் கதை. பிரம்மஹத்தி என்று சைவம் கூறிவது இதைத் தான். எம்மை இயக்கும் இயற்கையின் சூத்திரங்களில் இதுவும் ஒன்றே ….! 
    • கடந்த மாதம் அமெரிக்காவில் ஒரு வைத்தியர் தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார்..அறைக்கு வெளியில் 8 வயதுக்கு உட்பட்ட 3 பிள்ளைகள்.நீண்ட நேரம் பெற்றோர் அறையை விட்டு வெளியே வராததால் அயலவர்களின் உதவியோடு பெற்றோர் இறந்துள்ளதை அறிந்து கொண்டாராம் முதல் பிள்ளை.அவர்களை இப்போ அயலில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று தான் வைத்துப் பார்ப்பதாகவும் முதல் பிள்ளை ஏன் தங்களது தந்தை இப்படி செய்தார் என்ற கேள்வியை ஒரே கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஒரு லிங்கில் பார்த்தேன்.அந்தக் குழந்தைகளை பொறுப்பாக பார்க்கும் குடும்பத்திற்கு 3 குழந்தைகள் இருக்கிறார்களாம்..இவர்களளோடு சேர்த்து ஆறு..தற்போதைய காலத்தில் ஆறு குழந்தைகளை வைத்து பராமரிப்பது என்பது சாத்தியபடாத ஒன்று.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.