Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் JVP சார்பு அணி பெரு வெற்றி. மக்கள் மாற்றி யோசிக்கிறார்களா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் JVP சார்பு அணி பெரு வெற்றி. மக்கள் மாற்றி யோசிக்கிறார்களா!
80களின் நடுப்பகுதியில் இருந்து 90களின் இறுதிவரை இலங்கையின் தென் மாவட்டங்கள் JVPஎன்ற மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கோட்டைகளாக விளங்கியிருந்தன. குறிப்பாக ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, புலிகள் காலத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த இளையவர்களை இலங்கைப் படையினர் எப்படி விசேடமாக கண்காணித்தனரோ அவ்வாறு காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை அடையாள அட்டையைக் வைத்திருப்பவர்கள் படையினரால் விசேடமாக நடத்தப்பட்டனர்.
ஆனால் 2000 ஆண்டுகளின் பின் குறிப்பாக ஜே.வி.பியில் இருந்து விமல் அணியினரின்- சோமவன்ச அமரவன்ச தரப்பின் உடைவுகளின் பின் மகிந்த அணியினரின் கோட்டைகளாக தென் மாவட்டங்கள் மாறின. இந்த 3 மாவட்டங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர மகிந்த தரப்பினர் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டதோடு, தமக்கு நெருக்கமானவர்களை மாவட்ட அமைப்பாளர்களாக நியமித்தனர்.
இருந்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையிலான புதிய ஆட்சியில் அண்ணன் மகிந்த ராஜபக்ஸவினால் கட்டமைக்கப்பட்ட பாரிய அரசியல் காப்பரன்கள், அரசியல் கோட்டைகள் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து எதிர்த்தரப்பின் ஆதிகத்தின்கீழ் செல்வதான நிகழ்வுகள் ஆரம்பித்து விட்டதாக அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
இலங்கையின் தெற்கில் பிரதான கரையோர மாவட்டமான மாத்தறையின் கொட்டபொல (Kotapola Divisional Secretariat is a Divisional Secretariat of Matara District, of Southern Province) பலநோக்கு கூட்டுறவு சங்கமே நாட்டின் மிகப்பெரிய பலநோக்கு கூட்டுறவுச் சங்கமாக (MPCS) விளங்குகிறது. இந்த சங்கத்தில் ஏறத்தாள 50000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் அண்மையில் இடம்பெற்று முடிவுகள் வெளியாகி உள்ளன. முன்னைய தேர்தலில் 90 வீத கட்டுப்பாட்டை அறுதிப் பெரும்பான்மையை வைத்திருந்த பொதுஜன பெரமுன (SLPP) இம்முறை பாரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. ஜே.வி.பியும் அக்கட்சி ஆதரத்த சுயேட்சை அணியும் 55 ஆசனங்களை பெற்றிருக்கின்றன. 35 ஆசனங்களை மட்டுமே பொதுஜனபெரமுன பெற்றிருக்கிறது. சஜித் தலைமையிலான ஐக்கியமக்கள் சக்த்தி 7 வரையிலான ஆசனங்களையே பெற்றிருக்கிறது.
கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் அமைந்துள்ள தெனியாய தொகுதி ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரான பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க அமைப்பாளராக பதவி வகிக்கும் தொகுதியாக இருந்தும் இந்தப் பாரிய தோல்வியை பொதுஜனபெரமுன எதிர்கொண்டுள்ளது.
ஆயின் தற்போதைய ஆட்சியளர்கள் குறித்த தெற்கின் மனோ நிலை மாத்தறை தெனியாய கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் வெளிப்பட்டு உள்ளதா?
தவிரவும் ஐக்கியதேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்ட்சி ஆகியவற்றை பின்தள்ளி மேற்கிழம்பிய பொதுஜனபெரமுன, மற்றும், ஐக்கிய மக்கள் சக்த்தி ஆகிய கட்சிகளை குறுகிய காலத்தில் பின் தள்ளி நாட்டின் பிரதான சக்த்தியாக JVP உருவெடுக்கிறதா?
இலங்கையின் சுதந்திரத்தின் பின்னான பிரதான அரசியலில் - மரதன் ஓட்டத்தில் பிரதான பங்காளிகளாக இருந்த பாரம்பரிய கட்சிகளை புறந்தள்ளி அல்லது அந்தக் கட்சிகளில் இருந்து பிரிந்து புதிதாக எழுச்சி பெற்றவர்களை நிராகரித்து மக்கள் மாற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார்களா?
என்ற கேள்விகளை மாத்தறை தெனியாய கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தல் முடிவுகள் எழுப்புவதனை கடந்து செல்ல முடியவில்லை.
265058967_736297911106168_56584369460687
 
 
264687199_736297851106174_20952189844271
 
 
264747545_736297967772829_54853671128336
 
 
265034301_736298024439490_43544548621089
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

காலங்களும் காட்சிகளும் மாறிக்கொண்டுதான் இருக்கும்......ஆனாலும் அடுத்த தேர்தலில் எதிரணியில் இருப்பவர்களை சமாளித்து விடுவார்கள்......!

நன்றி நுணா......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.