Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தின் இயலாமையின் சின்னங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்தின் இயலாமையின் சின்னங்கள்

[21 - July - 2007]

`கிழக்கின் உதயம்' கொண்டாட்டங்களின் போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இராணுவ முனைப்பைத் தளர்த்தும் உத்தேசம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது. அரசியல் தீர்வு யோசனைகளை வகுக்கும் செயன்முறைகளை துரிதப்படுத்துமாறு சர்வ கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோளொன்றை விடுத்தபோதிலும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவைத் திரட்டும் அக்கறை அவருக்கு இருப்பதாக அந்த உரை உணர்த்தவில்லை. மாறாக, இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பைத் தரவேண்டுமென்று மக்களைக் கோருவதற்கே கிழக்கின் உதயம் கொண்டாட்டங்களை அவர் பயன்படுத்திக் கொண்டார் .

இராணுவத்தின் தொப்பிகல வெற்றியைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகரான வைபவங்களை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலுக்கு எதிரே நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது ஜனாதிபதி ராஜபக்ஷ தனதுரையில், ` குறைந்தபட்சம் ஆனந்த சங்கரி, தேவானந்தா போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்கக் கூடிய அளவுக்காவது நாம் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றோம். சுதந்திர சதுக்க வைபவத்தின் போது நேற்று முன்தினம் ஜனாதிபதி இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு விடயத்தில் எந்தளவுக்கு நேர்மையானவர்களாக தென்னிலங்கை மக்களும் அரசாங்கமும் இருக்கவேண்டுமென்பதில் ஒப்பீடு எதையும் செய்யமுயற்சிக்கவில்லை. அத்தகைய ஒரு தேவை தனக்கு இப்போது இல்லை என்று ஜனாதிபதி நினைக்கின்றார் போலும்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் இருந்தே சமாதான முயற்சிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வலியுறுத்திவந்திருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, அந்த சமாதான முயற்சிகளின் அடிப்படை அம்சமாக விளங்கிய போர் நிறுத்த உடன்படிக்கை மீதான தனது வெறுப்பை மீண்டும் வெளிக்காட்டுவதற்குத் தயங்கவில்லை. `விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படுத்திய தோல்வியை வெறுமனே இராணுவ வெற்றியாக மாத்திரம் குறிப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கு அப்பால் தேசிய, சர்வதேசிய பெறுமானமொன்று இந்த வெற்றியினுள் பொதிந்திருக்கிறது. பயங்கரவாதத்துக்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசமொன்று இருக்கிறதென்பதை உடன்படிக்கையொன்றின் மூலம் ஏற்றுக்கொண்டதுபோன்ற அநியாயமான செயலொன்று இலங்கையிலன்றி உலகில் வேறு எங்குமே நடக்கவில்லை. இந்தப் பிரதேச அதிகார மாயையை அம்பலப்படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் ஈழக்கனவு சுக்குநூறாகச் செல்லும் செய்தியையே தொப்பிகல மலையுச்சியிலிருந்து கொண்டு எமது வீரமிக்க படைவீரர்கள் உலகிற்கு எடுத்துக்கூறினார்கள்' என்று தனதுரையில் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான தனது வெறுப்பை இவ்வாறு காண்பிப்பதன்மூலம் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதி சாடுகிறார் என்பது வெளிப்படையானது. ஆனால், அதே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு அவரது அரசாங்கம் ஏன் இன்னமும் தயங்கிக் கொண்டிருக்கிறது? ஜனாதிபதி ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்து 20 மாதங்கள் கடந்து விட்டன. இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இடம்பெற்று வந்த அரசியல்- இராணுவ நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் போர் நிறுத்த உடன்படிக்கை என்று ஒன்று இருப்பதாக எவராவது பேசுவாரானால் அவர் சித்த சுவாதீனமற்றவராகவே இருக்க முடியும். இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம். உண்மையில், போரை வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்காணிப்புக் குழு ஒன்று இலங்கையில் அன்றி உலகில் வேறு எங்குமே செயற்படுவதைக் காண முடியாது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்துடன் அக்குழுவின் தலைவர் கடந்தவாரம் ஆலோசனைகளையும் நடத்தியிருந்தார். கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக் குழுத் தலைவர் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. போர் நடைபெற்றுக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, போரின் வெற்றியை உலகிற்குப் பறைசாற்ற அரசாங்கம் கொண்டாட்டங்களை நடாளாவிய ரீதியில் நடத்திக் கொண்டிருக்கும்போது கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் அரசாங்க சமாதானச் செயலகத்துடனும் கிளிநொச்சியிலும் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளைப் போன்ற கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியுமா? இன்னமும் அரசாங்கம் ஏன் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அறிவிக்க முடியாமல் இருக்கிறது? இராணுவ நடவடிக்கைகளை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு எந்த விதத்திலும் குந்தகத்தைத் தராத ஏற்பாடாக மாறிவிட்ட ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையின் பெயரில் கண்காணிப்புக் குழுவினர் தொடர்ந்தும் இலங்கையில் எதற்காக தங்கியிருக்க வேண்டும்? இலங்கை நெருக்கடியில் சர்வதேச சமூகத்தின் இயலாமையைத் தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டிருக்கும் சின்னங்களாகவே அந்த உடன்படிக்கையும் கண்காணிப்புக் குழுவும் விளங்குகின்றன !

தினக்குரல்

வெளி நாடுகள் இனி புலிகளை எந்த முகத்துடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்க முடியும்?

போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இடங்களை கைப்பற்றி கொக்கரிக்கும் இலங்கையை கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் ஒரு பக்க சார்பாக செயல்படும் வெளினாடுகள் இனி புலிகளை எவ்விதத்திலும்

கட்டுப்படுத்த முடியாது....

உண்மையில் அவர்கள் எமது தாயக விடுதலைக்கு நியாயமாக உதவி செய்யவேண்டும்...

உண்மையில் கண் திறந்து இருந்து நீதியாக செயல்படுவதானால்.......

நாங்கள் உண்மையில் பெரும்பாண்மையான இனத்தால் பாதிக்கப்படுகின்ற இனப்படுகொலைக்கு ஆகும்

இனம்... புலிகளே தமிழ் மக்களின் பாதுகாவலர்கள்..........

அவர்களுடன் செய்த ஒப்பந்தத்தை பகிங்கிரமாக ஒரு அரசை மௌனமாக இருப்பதின் மூலம் மறைமுகமாக

இலங்கையுடன் ஒரு இரகசிய திட்டம் காலகடத்தலுடன் வெளினாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது...என்பது வெளிச்சம்...

எனவே போலிக்கு நாம் எதற்கு கட்டுப்படவேண்டும்?

காலதாமதம் எதிரியின் பலப்படுத்தல் நடவடிக்கைக்கும், இனபடுகொலைகள் தொடர்வதற்கும்

வெற்றிகளை காட்டி படை சேர்பதற்கும்,வெளி நாட்டு உதவிகளுக்கும் தான் உதவும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம்....மக்களுக்கு இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை.............

வெளி நாடுகள் இனி புலிகளை எந்த முகத்துடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்க முடியும்?

போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இடங்களை கைப்பற்றி கொக்கரிக்கும் இலங்கையை கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் ஒரு பக்க சார்பாக செயல்படும் வெளினாடுகள் இனி புலிகளை எவ்விதத்திலும்

கட்டுப்படுத்த முடியாது....

வெளிநாடுகள் தாங்கள் செய்ய வேண்டியதை எப்போதுமே மாற்றம் இல்லாது சரியாகத்தான் செய்து வருகிறது...!

அதாவது இலங்கையில் நிரந்தரமாக ஒரு தீர்வு... அந்த தீர்வுக்கு இரு பக்கமும் சம பலத்துடன் இருக்கும்போது சாத்தியம் இல்லை என்பதை சர்வதேசம் நன்கு புரிந்து வைத்து இருக்கிறது, அப்படி சமபலத்துடன் இரு தரப்பும் இருப்பதால் பிரச்சினைக்கு முடிவு இழுபறியாகி வருவதையும் அவதானிக்கிறது..!

இப்போ இலங்கை அரசு அல்லது புலிகள் யாராவது ஒரு தரப்பு பலவீனப்பட வேண்டும்... அப்போதுதான் அவர்கள் தங்களின் தீர்வை பலவீனமானவர்களை நோக்கி திணிக்க முடியும் எனும் நிலைதான் இப்போது இருக்கிறது... இலங்கை அரசு பலமாகி வருகிறது எனும் செய்தி அவர்களுக்கு இனிப்பானது, அதனால் புலிகளை மேலும் பலவீனப்படுத்த அல்லது தங்களின் கட்டளைக்களுக்கு கீழ் படிய எண்ணுற்று சில நடவடிக்கைகளை சர்வதேசம், இவ்வளவு காலமும் இல்லாது இப்போது எடுக்கிறது... அதுவும் ஒப்புக்கு சப்பாக..

இப்போ சர்வதேசம் என்ன செய்ய போகிறது எண்றால் தாங்கள் பலமாக இருக்கிறோம் எண்று முரண்டு பிடித்து காட்டும் சிங்களத்தை நம்பி அவர்களுக்கு சாதகமாக நடக்க ஆரம்பித்து புலிகளை பலவீனபடுத்தி தீர்வை திணிக்க எத்தனிக்கிறது...! ( கணிப்பு எவ்வளவு சரியானது என்பது வேறு விடயம்)

அதனால்த்தான் அண்மைய தமிழர் தரப்பு அரசியல் தலைவர் தமிழ்செல்வன் அவர்கள்... இராசதந்திர நடவடிக்கை ஒண்றை மேற்கொண்டார்...! அதாவது சர்வதேசத்தின் எண்ணத்தில் பேரிடியாக விழுந்த "மகிந்த அரசோடு பேச்சு கதவுகளை மூடி , இராணுவத்துக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எண்ற அறிக்கை".. இப்போ பந்து சர்வதேசத்தின் கைகளுக்கு மாறி இருக்கிறது.... அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் எண்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேணும்....!

இல்லை புலிகளின் தாக்குதல் உக்கிரமடைந்து உண்மை சம நிலை தெரிய வந்தால் நிலைமை கட்டாயம் மாறும்..!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பு அரசியல் தலைவர் தமிழ்செல்வன் அவர்கள்... இராசதந்திர நடவடிக்கை ஒண்றை மேற்கொண்டார்...! அதாவது சர்வதேசத்தின் எண்ணத்தில் பேரிடியாக விழுந்த "மகிந்த அரசோடு பேச்சு கதவுகளை மூடி, இராணுவத்துக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எண்ற அறிக்கை".. இப்போ பந்து சர்வதேசத்தின் கைகளுக்கு மாறி இருக்கிறது.... அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் எண்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேணும்....!

இதில் சர்வதேஷ நாடுகளின் நடவடிக்கைகளை நாம் ஆராயாமல் எங்க தரப்பின் அடுத்த நகர்வு என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயம் இங்குள்ளது.

அதாவது முக்கியமாக புலம்பெயர்ந்த மக்களாகிய நாம் மனந்தளராது நம்பிக்கையுடன் இருக்கவேண்டிய ஒரு கட்டம் இது.

நான் ஏற்கெனவே பலதடவைகள் கூறியது போல் எங்களால் எடுக்கவிருக்கும் உறுதியான, இறுதியான நடவடிக்கைக்கு புறசூழ்நிலை இன்னும் சரியான முறையில் கனியவில்லை என்பதுதான் எனது கணிப்பு.

இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த நில ஆக்கிரமைப்பு எல்லாம் புலிகளைப் பொறுத்தவரை பெரிய இழப்போ அல்லது தோல்வியோ என்று சொல்வதிற்கில்லை...

இப்போது இடம்பெறும் இந்த நடவடிக்கைகள் ,சூழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தமிழர்தரப்புத்தான் பயங்கர வெற்றியை ஈட்டிக்கொண்டிருக்கின்றது என்பதை விரைவில் அனுபவரீதியாக புரிந்துகொள்வோமாக..

Edited by Valvai Mainthan

இதில் சர்வதேஷ நாடுகளின் நடவடிக்கைகளை நாம் ஆராயாமல் எங்க தரப்பின் அடுத்த நகர்வு என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயம் இங்குள்ளது.

எதையுமே ஒப்பு நோக்காமல் நடவடிக்கை எடுப்பீர்களா..??? என்ன ஊப்புக்கு சப்பாகவா..???

சர்வதேசம் என்பது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழரின் உரிமை போரில் ஒரு அங்கமாகி விட்டது... மக்கள் அபிவிருத்தி பணிகள் எல்லாமே வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை நம்பியே நடாத்த படுகின்றன.. போராட்டம் மீதான தடைகள், அதை பலவீனப்படுத்தும் உதவிகளை எதிர் முனைக்கு வழங்கல் என்று சர்வதேசம் தனது கைகளை அகல விரிக்கும் போது நீங்கள் அது சம்பந்தமாக ஆராயமல் நடவடிக்கை எடுப்பீர்களா..???

அப்படி என்ன விதமான நடவடிக்கைகள் என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா....?? அறிய ஆவலாக இருக்கிறேன்...!

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இந்தியா தமிழர்களுக்கு விருப்பமில்லாத ஒரு தீர்வை திணிப்பதற்காக புலிகளை பலமிழக்கச் செய்யும் நடவடிக்கையில் அமைதிப்படை என்ற போர்வையில் ஈடுபட்டது. தற்போது சர்வதேசம் அதே பாணியில் ஒரு தீர்வைத் திணிப்பதற்காக சிங்கள அரசிற்கு முட்டுக்கொடுத்து வருகின்றது. சர்வதேச நாடுகளின் நோக்கம் புலிகளைப் பலவீனப்படுத்தி தமிழீழம் என்ற நாட்டை உருவாகாமல் தடுப்பதுதான். அதற்காகத்தான் மகிந்த அரசபடைகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை உதட்டளவில் மட்டும் கண்டித்துத் தமிழர்கள் மேல் அக்கறையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளுகின்றன. எனினும் அடிப்படையில் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சிங்கள அரசின் தாக்குதல்களை ஊக்குவிக்கவும், புலிகள் மேலான அரசியல், இராணுவ, பொருளாதார அழுத்தங்களை மேற்கொள்ளவும் இந்நாடுகள் சளைக்காமல் முயன்றுவருகின்றன என்பதைத் தமிழர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.