Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதி மர நிழல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்

தலைவர் அன்னவர்க் கேசரன் நாங்களே.

மகேந்திர மலையின் ஓர் அடர்ந்த வனத்தில் அமைதியாக ஓடும் ஒரு நதியின் அருகில் தியானத்தில் அமர்ந்திருக்கின்றார் முனிவர் பரசுராமர். இவரும்கூட மகாவிஷ்னுவின் அவதாரமே. (6வது அவதாரம். மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகவதாரம், நரசிங்காவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம்.)அப்போது காடே அதிரும் வண்ணம் இடிபோன்ற சத்தம் கேட்கின்றது. நடந்ததை ஞானதிருஷ்டியினால் உணர்ந்த பரசுராமன் நேராக பர்ணசாலை சென்று அங்கிருந்த விஷ்னுதனுசை எடுத்துக்கொண்டு மிதிலைநோக்கி வருகின்றார்.

அப்படி வரும்வழியில் இராமன் தாய், தந்தை, மனைவி, சகோதரர் சுற்றம் சூழ அயோத்திநோக்கி வந்துகொண்டிருக்கின்றார். இவர்களை இடைமறித்தார் பரசுராமர். (ஸ்ரீ மந் நாராயணரின் இரு அவதாரங்களும் இங்கே சந்திக்கின்றனர்).

இராமன்: தந்தையே! இம் முனிவர் யாவர்?

தசரதன்: மகனே! இராமா! கேள். இவர் முனிவர் ஜமதக்னி ரேணுகாதேவி தம்பதியரின் மூன்றாவது மகன் பரசுராமன் ஆவார். பரசுவாகிய கோடரியால் ஷத்திரியவம்ச அரசர்களை இருபத்தியோரு தலைமுறைகளாக கொன்று குவித்து வருகின்றார். எனக் கூறிவிட்டு பரசுராமரிடம் செல்கின்றார். என்ன நடக்கப் போகுதோவெனப் பயந்தபடி.

தசரதர்: முனிவரே! பொறுத்தருள வேண்டும். இவன் எனது மகன் இராமன்ஆவான்.இப்போதுதான் ஜனகனின் மகள் ஜானகியை சுயம்வரம்மூலம் திருமணமுடித்து அயோத்திநோக்கி வருகின்றான்.( பரசுராமன் ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்த அரசர்களை கொல்வதில்லை என்ற கட்டுப்பாட்டில் இருப்பவர். அதனால்தான் அவர் தசரதரைக் கொல்ல வரும்போதெல்லாம் வருடத்திற்கொரு முறை மணமுடித்து அவரிடமிருந்து தப்பியும், நிறைய மனைவியரையும் பெற்றிருந்தார் தசரதர்). அவன் பாலகன். என்ன பிழைசெய்திருந்தாலும் தாங்கள் அவனைப் பொறுத்தருள வேண்டும். என வேண்டிக் கொண்டார்.

பரசுராமர் தசரதனை அலட்சியம் செய்து நேராக இராமனிடம் சென்று! இராமா! யார் அந்த சிவதனுசை முறித்தவன்? அவன் யாராகவிருந்தாலும், அவனுடன் யுத்தம் செய்யவே நான் இப்போது வந்துள்ளேன்.

இராமன்: சுவாமி அடியேனால்தான் அது முறிக்கப் பட்டது. ஜானகியை மணமுடிக்க அதுதான் நிபந்தனை. அதனால்தான் அது உடைக்கப் பட்டது.

பரசுராமன்: அது ஏறிகனவே திரிபுரமெரித்த சிவனின் கையில் நெரிபட்டு இற்றுப் போன வில்லு. முடிந்தால் இதோ எனது கரத்திலிருக்ம் விஷ்னுதனுசை வளைத்து நீ நானேற்றுவாயேயானால் உன்னை யான் மூவுலகிலும் பெரிய வீரனாக ஏற்றுக் கொள்கின்றேன். அப்புறம் உன்னுடன் போர் செய்யாமலே சென்று விடுகின்றேன்.

இராமன்: நன்று! முனிபுங்கவரே நன்று. எங்கே அந்த விஷ்னுசிலையை அடியேனிடம் தரவேண்டும். எனக்கூறி அவ்வில்லைப் பவ்யமாகப் பெற்று மகாவிஷ்னுவை மனதினுள் தியானித்து அதை மிகச் சுலபமாக வளைத்து நானேற்றி அதில் இராமபானத்தைத் தொடுத்து முனிவரே இப்போது எனது வாளிக்கு இலக்கு யாது எனத் தாங்களே கூறவேண்டும் எனக்கூறிப் பவ்யமாக நின்றான். இதுவரை ஆணவம், அகம்பாவம் என்னும் மாயையால் சிறிது மூடிக்கிடந்த மனம் இப்போது மாயைவிலகித் தெளிவடைகிறது. (இதையே பகவான் கீதையிலும் சொல்கிறார். மாயையானது கடத்தற் கரியது. அவருடைய அவதாரரே அதனுள் சிக்குன்டதை இங்கே காண முடிகிறது.) நிமிர்ந்து பார்க்கிறார். அங்கே இராமன் தெரியவில்லை. சாட்சாத் ஸ்ரீமந் நாராயணனே சங்கு, சக்கரம், சார்ங்கம், கதையுடன் புன்முறுவலுடன் காட்சி தருகிறார். தன்னையும் உணர்ந்து கொள்கிறார். அப்படியே இராமனிடம் கூறுகிறார், தனது தவப் பயன்களையே இலக்காக எடுத்தருள வேண்டும்.

அப்படியே இராமனும் வாளியை ஏவி அவரது தவப்பயன்கள் யாவற்றையும் தனக்குள்ளே சுவீகரித்துக் கொள்கிறார். பெருமாளின் ஒரு சக்தி தனது இன்னொரு சக்தியை அப்படியே ஆகர்ஷித்துக் கொண்டது. பரசுராமரும் இராமனையும் ஏனையோரையும் வாழ்த்தி ஆசீர்வதித்துவிட்டுத் தன்வழியே இன்றைய கேரளாவாகிய பரசுராம ஷேத்திரத்துக்குச் சென்றுவிட்டார்.

இராமனும் பரசுராமனிடம் பெற்ற விஷ்னுதனுசை வருணபகவானிடம் வைத்திருக்கும்படி கொடுத்தார். பின்நாளில் கரன்போன்ற அசுரர்களை அழிப்பதற்கு இது தேவைப்படும் என்பதைவுணர்ந்து அப்படிச் செய்தார். தேவசிற்பி விஷ்வகர்மாவினால் செய்து கொடுக்கப் பட்ட அந்த வில் மீன்டும் அவரிடமே சென்றடைந்தது. பின் இராகவன் தனது கோதண்டம் என்னும் வில்லுடன் சுற்றத்தவர் புடைசூழ அயோத்தி மாநகரைச் சென்றடைந்தார்.

இனி இராமாயணம்வரை இந்தக் கோதண்டம் எனும் வில்தான் வில்லங்கப் படப் போகின்றது.

ஸ்ரீ ராம ஜெயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.