Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மகிந்தவின் வெற்றிவிழாவும் அடுத்த இலக்கும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மகிந்தவின் வெற்றிவிழாவும் அடுத்த இலக்கும்"

அவ்வாறெனில், வடக்கு - கிழக்கு தமிழர்களின் தேசம் என்பதையும் அது இன்னொருநாடு என்பதையும் சிறீலங்கா அங்கீகரித்து விட்டதாகவே கருத முடிகிறது.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறும் சிங்கள அரசு, பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போரையே தாம் முன்னெடுத்து வருவதாக சர்வதேசத்திற்கு பரப்புரை செய்கிறது.

இப்பரப்பரைக்கு சாதகமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அனைத்துலக நாடுகள் சிறீலங்காவிற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. உண்மையில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டுமானால் போரில் அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு ஆளணி, ஆயுத இழப்புக்களை ஏற்படுத்தவது£டாகவே அதனை மேற்கொள்ள முடியும்.

சிறீலங்காப் படைத்துறைக்கு இவ்வாறான ஆலோசனைகளையே சில முக்கிய அனைத்துலக போரியல் நிபுணர்களும் வழங்குகின்றனர். ஆனால், கிழக்கில் அது சாத்தியமற்றதாகப் போய்விட்டது.

கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு பாரிய சேதங்கள் எவையும் சிறீலங்காப் படையினரால் ஏற்படுத்த முடியவில்லை. தமது ஆளணி வளத்தையும், ஆயுதவளத்தையும் தக்கவைத்துக் கொண்டே கிழக்கில் விடுதலைப் புலிகள் சிறீலங்காப் படையினருடனான மரபவழிச்சமரை எதிர்கொண்டு போரிட்டனர்.

பின் களநிலவரங்களின் தன்மையைப் பொறுத்து எதவித இழப்புக்களுமின்றி அவர்கள் பின்வாங்கினர்.

மரபுவழிப்போர் சாதகமற்ற சூழ்நிலையில் எதிரியுடன் போரிட்டு இழப்புகளை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயாரா யில்லை. விடுதலைப் புலிகளின் இத்தந்திரோபாய பின்வாங்கல் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தற்காலிகமான ஒரு வெற்றியை, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வெற்றி

விழாக் கொண்டாடுவதற்கான வாயப்பினை வழங்கியிருக்கிறது.

நீண்டகால நோக்கில் இது எவ்விதமான ஆபத்துகளை தோற்றுவிக்கப் போகிறது என்பதை பகுப்பாய்வு செய்துபார்க்க சிறீலங்கா அரசுத்தலைவ

ருக்கு இப்போது நேரமில்லை. ஏனெனில், இந்த வெற்றிவிழா ஒரு அரசியல் திருவிழா. சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்கான மகிந்தவின் விழா.

மகிந்த ராஜபக்சவின் இவ்வெற்றிவிழாவின் அரசியல் நோக்கங்கள் குறித்து ஜே.வி.பி கூட கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமான பேச்சவார்த்தைகளுக்கும் போகக்கூடாது போர்மூலம் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் ஜே.வி.பியினர் கூட இந்த விழாவைப் புறக்கணித்தனர்.

இது முழுக்க முழுக்க மகிந்தவின் அரசியல் இலாபத்திற்கான பரப்புரை என்பதை ஜே.வி.பி விளங்

கிக் கொண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசயக்கட்சி மகிந்தவின் குடும்பிமலை வெற்றியையும், இவ்விழாவையும் கோமாளித்தனமானதாகவே வர்ணிக்கிறது.

புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற கருத்தில் உடன்படுகிற சிங்களக்கட்சிகள் மகிந்தவின் அரசியல் திருவிழாவை கடுமையாக விமர்சிக்கின்றமையை அவதானிக்க முடிகிறது. கடந்த 19ம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற வெற்றிவிழாவில் தாம் பேச்சிற்கும் தயார் போருக்கும் தயார் என்று முழங்கியிருக்கிறார் மகிந்த.

முன்னர் “போர் என்றால் போர் சமாதானமென்றால் சமாதானம்” என ஜே.ஆர் முழங்கியதைப்போல. பின்விளைவுகளை கருத்தில் எடுக்காமல் சுய அரசியல் இலாபங்களுக்கான நகர்வுகளையே மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. கிழக்கை கைப்பற்றியதான வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த பறைசாற்றுவதில் இந்த மக்களை உணர்ச்சிவசப்படுத்தும், உருவேற்றும் கோசங்களும் வெளியிடப்படுகின்றன.

திருகோணமலையையே விடுதலைப் புலிகள் தங்கள் தனியரசின் தலைநகராகக் கொண்டுள்ளனர். இன்று அது சிங்களவர்களின் கைக்குள் வந்துவிட்டது என்கிற கோசம் தான் அது. இப்போது தெற்கில் மகிந்தவிற்கெதிரான சக்திகள் பலமாகக் கூட்டுச் சேர்ந்துள்ளன. மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராட்சி ஆகி

யோரது அணியும், ஐக்கிய தேசியக்கட்சியும் மகிந்தவிற்கெதிரான நடவடிக்கைகளில் இணைந்து தீவிரமாக செயற்படுவதற்கான கூட்டு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இக்கூட்டணியின் செயற்பாடுகள் மகிநதவிற்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கலாம் என கொழும்பிலே பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்த பரபரப்பை தணியவைக்கும் ஒரு சம்பவமாக ‘கிழக்கின் உதயம்’ கொண்டாடப்பட்டிருக்கிறது. இனி, மகிந்த சூட்டோடு சூடாக வடக்கிலும் படைநடவடிக்கையை ஆரம்பிக்கப்போகிறார்.

அதற்கான முயற்சிகளை கடந்த வாரமே வவுனியா, மன்னார் எல்லைகளில் சிறீலங்காப் படையினர் தொடங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் எதிர்பாராத விதத்தில் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல்கள் கடுமையானதாக இருந்தன. பெரும் இழப்புக்களோடு படையினர் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது.

எனினும், எல்லைபகுதிகளில் குறிப்பிட்ட சில பிரதேசங்களை உடனடியாக கைப்பற்றுவதே படையினரின் நோககமாகவுள்ளது. கிழக்கில் முழுமையாக விடுதலைப் புலிகளை விரட்டி விட்டதாக பரப்புரை செய்யும் அரசிற்கு உடனடியாக வடக்கில் சிறு நிலப்பகுதியையேனும் கைப்பற்றினால் அது மேலும் தனது அரசியல் வெற்றிக்கு உதவும் என மகிந்த நம்புகிறார்.

கிழக்கில் படைநடவடிக்கைளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த சமவேளையிலேயே வவுனியா, மன்னார் பகுதிகளில் அதிகளவிலான படையினர் குவிக்கப்பட்டு போர் தயாரிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. படைநகர்வுகளுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அங்கு மேற்கொள்

ளப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்புகளையும் கடந்து புதிய பாதைகளூடாக படைநகர்வுகளை மேற்கொள்ள நகர்வுப்பாலங்கள் என்பனவும் கொண்டுவரப்பட்டு வவனியா, மன்னார் எல்லைகளில் தயாராகவுள்ளன.

வடக்கில் முதல் இலக்காக மன்னார் மடு ஆலயத்தை உள்ளடக்கிய பகுதிகளை கைப்பற்றுவதே அரசின் நோக்கமாகவுள்ளது. குடும்பிமலையை விடவும் இதனைப்பெரு வெற்றியாக உள்நாட்டிலும், வெளிநாடு

களிலும் சிறீலங்கா அரசு காட்ட முனை

யும். மடு என்பது இலங்கைத்தீவிலுள்ள அனைத்து சிங்கள மக்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சிங்களவர்களுக்கு தெரிந்த இடம், வத்திக்கான் வரை மடுவின் பெயர் பிரபலம்.

எனவே கிறிஸ்தவர்களின் புகழ்பெற்ற வணக்கத்தலத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டுவிட்டதாக மகிந்த வசதியானதொரு பரப்பரையை மேற்கொள்

வார். இதனாலேயே மடு தற்போது மகிந்தவின் பிரதான இலக்காக அமைந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, சிறீலங்காவிற்கான ‘பெரிய இடத்து’ போரியல் ஆலோசகர்கள் வன்னி மீது அவசரப்பட்டு ஆக்கரமிப்புப் போர் ஒன்றைத் தொடாங்க வேண்டாமென சிறீலங்காப் படைத்தலைமைக்கு அறிவுறுத்தியிருப்பதாக கொழும்பிலிருந்து சில உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.

முதலில் வன்னியின் எல்லைப்பிரதேசங்களில் வலிந்த போரைத்தொடங்கி விடுதலைப் புலிகளை அங்குவரச்செய்து அவர்களுக்கு ஆள், ஆயுத இழப்புக்களை ஏற்படுத்தல், வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் தளங்கள் மீது விமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துதல், விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் ஆயுதங்களை தடுக்கும் விதமாக கடற்பரப்பில் தீவிர பாதகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடல், இவை வழங்கப்பட்ட முக்கியமான அலோசனைகளாக தெரியவருகிறது.

இந்திய, சிறீலங்கா கடற்படையினருக்கிடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தகவல் பரிமாற்ற உடன்பாடு இதனடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வெளிநாட்டு ஆலோசனைகளைப்பெற்றுக் கொண்டாலும் மகிந்த அரசாங்கம் தனது அரசியல் நலன்களுக்கான உடனடித் தேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் எதனையும் செய்யும் நிலையிலேயே உள்ளது.

எதிர்வரும் காலங்களில் கிழக்கை தீவிர கெரில்லா தாக்குதற் களமாக மாற்றும் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபடுவர். வடமுனை தீவிர மரபுவழித்தாக்குதல் களமாக மாறும் என்றே நோக்கர்கள் எதிர்வு கூறுகின்றனர். விடுதலைப் புலிகளின் போராட்

டவரலாற்றில் பெரும் நெருக்கடிகள், முற்றுகைகள், உள்நாட்டு, வெளிநாட்டு சதிமுயற்சிகள் என்பன புதிய விடயங்களல்ல. கடந்து வந்த பாதையில் ஏராளமான பட்டறிவுகளை அவர்கள் உள்வாங்கியுள்ளனர். எனவே புதிய திட்டங்களுடனும், புதிய மூலோபாயங்களுடனும் அவர்கள் முன்னேறுவர்.

-ஈழமுரசு

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாரும் ஏறி இளைச்ச குதிரையிலை சக்கடத்தார் ஏறி சறுக்கிவிழுந்தாராம்!" எண்டு மூத்தாக்கள் முந்தி பகிடி விடுவதுதான் நினைவுக்கு வருகின்றது :D

"எல்லாரும் ஏறி இளைச்ச குதிரையிலை சக்கடத்தார் ஏறி சறுக்கிவிழுந்தாராம்!" எண்டு மூத்தாக்கள் முந்தி பகிடி விடுவதுதான் நினைவுக்கு வருகின்றது :D

" சக்கடத்தார் எத்தினை பேர் தடக்கிவிழுந்த குதிரை அது எத்தினை நீ எறி வந்தாய் அம்மா.?" எண்று சந்திரிக்காவை கேலி செய்து வந்த தாயக பாடல் நினைவுக்குள் வருகிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.