Jump to content

வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் தொடங்கப்படும்: கேணல் சூசை | பழைய செய்தி ஆவணக்காப்பிற்காய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

மூலம்: புதினம், http://www.eelampage.com/?cn=26637

தடித்த எழுத்துக்கள்: நன்னிச் சோழன்

 

வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் தொடங்கப்படும்: கேணல் சூசை
[திங்கட்கிழமை, 5 யூன் 2006, 15:18 ஈழம்] [ம.சேரமான்]

 

தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று  விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை பேசியதாவது:

மக்கள் படை கட்டுமானத்தின் முதலாவது பயிற்சியின் நிறைவு மூலம் ஒரு பெரியதொரு செய்தி மிக விரைவாக உலகத்துக்குச் சொல்லப் போகிறது.

மக்கள் படை கட்டுமானத்தினது சூழ்நிலையையும் தற்போதைய நெருக்கடிகளையும் உணர்ந்து, "போராடினால்தான் வாழ்வு" என்ற பதத்துக்குள் பத்து நாட்களுக்கும் மேலாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் சகல வேலைகளையும் புறந்தள்ளி முதலாவது கட்ட பயிற்சியை முடித்திருக்கிறீர்கள்.

எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய இறுதி வெற்றியைத் தீர்மானிக்கப் போகிற முதலாவது அங்கம் இந்தச் செயற்பாடு.

1999 ஆம் ஆண்டு மிக நெருக்கடியான காலகட்டம். எதிரியானவன் 30 ஆயிரம் படை திரட்டி ஒன்று சேர்ந்து ஜெயசிக்குறு என்று ஒரு இராணுவ நடவடிக்கைக்குப் பெயர் சூட்டி வன்னியினுடைய பெரும்பகுதியை தனது இராணுவ நடவடிக்கையினூடாகப் பிடித்து வந்தான்.

அந்த காலகட்டத்தில் இங்கே இருந்த மக்கள் - வன்னியில் எங்கள் ஆளுகைக்குள் இருந்த மக்கள்- எந்த நேரத்திலும் அவன் முழுமையாக வன்னியைப் பிடித்து கண்டி வீதிக்கூடாக யாழ். போக்குவரத்துக்கான பாதையை திறப்பதோடு தமிழீழ விடுதலைப் புலிகளையும் முடித்துவிடலாம் என்ற கங்கணத்தோடு படை திரட்டி பாரிய நடவடிக்கையை மேற்கொண்டான்.

அந்தச் நேரத்தில் இந்த 3 இலட்சம் மக்களுக்குள் இருந்துதான் போராளிகளாக- வன்னியை பிடிக்கின்ற நடவடிக்கையில் முனைப்புடன் செயற்பட்டனர். ஒட்டுமொத்தமாக வன்னியின் பல பாகங்களிலிருந்தும் ஒன்றுதிரட்டப்பட்ட 10 ஆயிரம் எல்லைப் படையினர் எங்களோடு கரம் கோர்த்தனர்.

ஆனால் இன்று புதுக்குடியிருப்பில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயிற்சி எடுத்து முதலாவது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

அன்று 10 ஆயிரம் எல்லைப்படையினர் பயிற்சி எடுத்துக் கொண்டு வன்னியை எதிரியானவன் படிப்படியகப் பிடித்துக் கொண்டு வந்த அந்த சூழலில் ஓயாத அலைகள்-03 இன் பாய்ச்சலுக்காக புலிகளோடு கரம் கோர்த்து யுத்த முனையில் போராடினார்கள். பெருமளவில் நிலப்பரப்பு மீட்கப்பட்டது. எதிரியானவன் இராணுவ நடவடிக்கையைக் கைவிட்டான்.

10 ஆயிரம் எல்லைப் படையினரும் மரணிக்கவில்லை. மாறாக 281 எல்லைப்படையினருடைய அர்ப்பணிப்போடு ஆக்கிரமிக்கப்பட இருந்த வன்னி நிலப்பரப்பும்- அதைவிட மேலதிகமான நிலப்பரப்பும் புலிகள் பிடித்தனர். தலைவர் வழிநடத்தினார்.

இன்று அதே போன்ற ஒரு நெருக்கடியில்தான் நாங்கள் நிற்கிறோம்.

ஐரோப்பியத் தடையும் அது கொடுத்த உற்சாகத்தால் இன்று மகிந்தவின் சிந்தனையில்- நாங்கள் பிடித்து வைத்திருக்கும் பகுதியை மீட்டெடுக்கலாம் என்ற கற்பனையோடு அந்த எதிரி தன்னுடைய நடவடிக்கையை மேற்கொள்கிறான்.

இன்று நாளாந்தம், ஒவ்வொரு நாளும் புலிகளின் குரல் செய்தியை கேட்டாலும் எமது நாளேடுகள் செய்தி ஏடுகளைப் பார்த்தாலும்சரி- சராசரியாக 6 அல்லது 7 பொதுமக்கள் கொல்லப்பபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய உறவுகள் 6-7 பேர் என கொல்லப்படுகின்றனர். மக்கள் சாவு பெறுமானம் இல்லாத பொருளாக உள்ளது.

ஜெனீவாவில் பேச்சு நடத்திவிட்டு வந்த பிறகு எங்கள் மக்களின் சாவு 200ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும் சர்வதேசம் கண்மூடி மெளனமாக இருக்கிறது.

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அளவுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு எங்களுடைய நல்லெண்ணத்தின் சமிக்ஞைகள்- செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இன்று மக்களினது சாவுகளை- எங்கள் தமிழ் பேசும் உறவுகளினது சாவுகளை நினைத்துக் கூடப் பார்க்காமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை- தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் போராடிக் கொண்டிருக்கிற தமிழீழ விடுதலைப் புலிகளை  ஐரோப்பிய நாடுகள் கூட்டாகத் தடை செய்திருக்கின்றன.

இந்தத் தடை கண்டு அச்சப்படத் தேவையில்லை.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு இந்திய படையானது ஆக்கிரமிப்புப் படையாக மாறியபோது 2 ஆயிரத்துக்கு குறைவான விடுதலைப் புலிகள்தான் இருந்தனர். அந்த 2 ஆயிரம் பேர்தான் இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு எதிரான தலைவரின் கீழ் நின்று போராடினார்கள்.

அந்த ஆக்கிரமிப்புப் படை- விடுதலைப் புலிகளை துவம்சம் செய்ய வெளிக்கிட்ட போது-  ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடுவதற்காக- விடுதலைப் புலிகளுடன் தோளோடு தோள் கோர்த்து இந்திய இராணுவத்தை வெளியேறச் செய்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மேன்மையை இந்த உலகுக்கு உணர்த்தியதும் முன் நகர்த்தியதும் இந்த மக்களே.

2 ஆயிரம் விடுதலைப் புலிகள் வன்னியைத் தளமாக வைத்துக் கொண்டு மணலாற்றிலிருந்து தலைவர் வழிநடத்தியபோது உலகின் 4 ஆவது வல்லரசே தோற்றுத் திரும்பியது.

ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கலாம்- அந்தத் தடை எங்களுக்கு பொருட்டல்ல.

1605 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்கள். இந்த ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முதல் எங்கள் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொண்டு நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்த ஐரோப்பியர்கள் எங்கள் மண்ணை ஆக்கிரமிப்பு செய்த பின்னர்தான் எமது சுதந்திரத்தையையும் இறைமையையும் இழந்தோம். இன்று இந்த மண்ணிலே நாங்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ்கிறோம்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நப்பாசை கடந்த நான்கரை ஆண்டுகளாக இருந்தது. அது கிடைக்கும்- அது கிடைக்கக் கூடிய சூழ்நிலை வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இந்திய இராணுவம் நம்மை ஆக்கிரமிக்க முயன்றபோது எப்படித் தலைவருக்கு தோளோடு தோள் கொடுத்து விடுதலையை வீச்சாக்கினார்களோ- அதே போல் 1999 ஆம் ஆண்டு வன்னியைத் தளமாக வைத்துக் கொண்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கு எல்லைப்படையாக நின்று பெரியதொரு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள்.

2000 ஆம் ஆண்டு வெறும் 600 மகளிரும் 600 ஆண்களும் கொண்ட 1,200 பேர் போராளிகளைத்தான் வெற்றிலைக்கேணியிலிருந்து மாமுனையில் தரை இறக்கினோம்.

தளபதி பால்ராஜ்- தளபதி விதுசா- தளபதி துர்க்கா தலைமையில் 1,200 பேர்தான் படை இறக்கப்பட்டனர். எங்கள் எல்லைகளில் 800 போர் வீரர்கள் தளபதி வீரன் தலைமையில் நிறுத்தப்பட்டனர். ஒரு மாத காலத்தில் எதிரியினது பாரிய படையெடுப்புகளை முறியடித்து பெரியதொரு நிலப்பரப்பை மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கிய பாய்ச்சல் நடந்தேறியது. அது பாய்ந்த விதம் அறிவீர்கள்.

இன்று 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சிறிலங்கா தன்னுடைய படையெடுப்பை மேற்கொள்வதற்கான ஆசியை சர்வதேச சமூகம் வழங்கியிருக்கிறது. கண்துடைப்பு நடவடிக்கைகளையே சர்வதேச சமூகம் மேற்கொள்கிறது.

முல்லைத்தீவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்னைச் சந்தித்த போது, போர்த் தளபடாங்கள் வாங்குவதற்காக நாங்கள் சிறிலங்காவுக்கு நிதி அன்பளிப்புச் செய்யவில்லை- மக்கள் வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை பெருக்கவே நிதியை வழங்குகிறோம் என்றார்.

நாம் கூறினோம்- நிறுத்துங்கள்- இந்த சமாதான காலத்துக்குள்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு போர்க் கப்பல்- இந்தியாவிலிருந்து சயூரா எனும் ஒரு போர்க்கப்பல் என நேரடியாகவே கொடுத்திருக்கிறீர்கள் என்றோம். அந்த மனிதர் மெளனமாகவே இருந்தார்.

இந்த ஐரோப்பிய நாடுகள் இந்த விடுதலைப் போராட்டத்தை பார்க்கின்ற- மாடுகள்.

சிங்களவனுக்குச் சொன்னால் புரியாது- சிங்களவனுக்குச் சொல்ல வேண்டிய முறையான அடியில் சொன்னால்தான் தெரியும்.

ஆட்சிக்கு மாறி, மாறி வருகிற சிங்கள அரசியல்வாதியாக இருக்கலாம்- இராணுவத் தளபதியாக இருக்கலாம். எல்லாருக்கும் நப்பாசை. தன்னுடைய 5 ஆண்டுகாலத்தில் போர் நடத்தி வென்றுவிடலாம் என்று நப்பாசை. அதே ரீதியாகத்தான் மகிந்தவுக்கும் இப்போது நப்பாசை.

அந்த நப்பாசைக்கு எங்கள் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்- சுமார் 2 ஆயிரம் பேரை வைத்துக் கொண்டுதான் வெற்றிலைக்கேணியிலிருந்து மாமுனை வரையிலான நிலத்தை நாங்கள் மீட்டெடுத்தோம்.  அதேபோன்றுதான் எங்களுடைய போரை இறுதிப் போராக- இனி அங்குலம் அங்குலமாக பிடித்துக் கொண்டிருக்கிற நடவடிக்கையாக இல்லாமல்- ஒரேயடியாக இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பம்.

தலைவரின் விருப்பத்தை நிறைவு செய்ய மக்களே நீங்கள் தயாரா?

(பொதுமக்கள் ஒருமித்த குரலில் நாங்கள் தயார் என்று உற்சாகக் குரல் எழுப்பினர்)

இனி பகுதி பகுதியாக சண்டை பிடிப்பது இல்லை- ஒரே முறையில் வடக்கு - கிழக்கில் நடக்கப் போகிற போரில் ஒரேடியாக நமது தாயகம் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் தலைவரது திட்டம்.

அந்தத் தலைவரது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பயிற்சி தொடர்ந்து அரங்கேறும். இந்த மக்கள் படை கட்டுமானத்திலிருந்து புலிகளாக- துணைப் படையாக- மக்கள் படை கட்டுமானமாக- தலைவரது கரங்களை வலுப்படுத்த வேண்டும.

எதிரி நம்மை நோக்கி படையெடுப்பதைவிட அவனது நிலைகளை உடைத்துக் கொண்டு நமது நிலப்பரப்பை மீட்டெடுக்க வேண்டும். அதுதான் சிறந்த வழி.

அவன் எப்போது படையெடுப்பான்- அவன் எப்போது சண்டை தொடங்குவான் - அப்போது நாம் போய் முட்டிக்கொண்டு  நிற்பதைவிட ஆக்கிரமித்து நிற்கும் எதிரியை- நாங்களாகவே பாய்ச்சல் மேற்கொண்டு பாய்வதனூடாகத்தான் வெல்ல முடியும்.

தலைவர் சொல்வது கிடையாது- செயலில்தான் செய்வார். அதுதான் அவரது விருப்பம்.

நாளாந்தம் மக்கள் கொல்லப்படுகிற நிகழ்வுகள் தலைவரது மனதை ஆழமாக வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த ஆழமான வேதனையிலிருந்து மிக விரைவாக எங்கள் நிலத்தை- மக்களை- மீட்டெடுப்பதற்கு அவர் எந்த நேரமும் தயாராக இருக்கிறார்.

இளைஞர்களே! யுவதிகளே! தாய்மார்களே! தந்தையரே!

தமிழீழ விடுதலைப் புலிகளை பலப்படுத்துவனூடாக- அவன் பாய்வதற்கு முன்னதாக நாம் பாய்வதனூடாக மிக விரைவில் வெற்றியைப் பெறுவோம். அந்த விரைவான பாய்ச்சலுக்கு நாங்கள் சண்டையைத் தொடங்கும்போது - அந்தப் பாய்ச்சலுக்கு புலிகள் தேவை. தமிழீழத் தேசியத் துணை படையாக- மக்கள் படையாக பல கோணத்திலும் வியூகத்திலும் எல்லா மக்களும் ஒன்று திரண்டு போராடவேண்டிய இறுதிக் கட்டம் இது.

இனியும் காலம் தாழ்த்துவதும் ஒவ்வொரு மணித்தியால நேரத்தை பிற்போடுவதும் நெருக்கடியைத்தான் தரும்.

இன்றைக்கு அவன் தீர்மானிப்பதுதான் சட்டம். புளியங்குளத்தில்-முகமாலையில் நிற்கிற எதிரியானவன் பாதையை மூட வேண்டும் என்று நினைத்தால் மூடுவான். திறக்க வேண்டும் என்றால் திறப்பான். மண்ணெண்ணெய் விட வேண்டும் எனில் விடுவான். இல்லையெனில் மறைப்பான்.

எண்ணிலடங்காத பல நெருக்குவாரங்களை- பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியிருக்கிறான். இதெல்லாம் பேசிப் பெற்றுக் கொள்ள வேண்டியவை அல்ல. இவை எல்லாவற்றையும் உடைத்து எறிந்து எங்களின் நிலத்தை மீட்டெடுக்க எல்லோரும் தலைவரது கரங்களை வலுச்சேர்க்க வேண்டும்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!" என்றார் கேணல் சூசை.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
    • அடுத்த வாரமே தன்னைப்  பிரபாகரனின் பேரன் என்பார்.  இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு  அடிக்கிற (B)பிராண்டை  பொறுத்து மாறுபடலாம். 😂
    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.