Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம்

spacer.png

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தை கௌரவ பிரதமர் வழங்கி வைத்தார்

அன்றும் வடக்கு மக்களை பாதுகாத்த நாம், அந்த மக்களை பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கும் வகையில் யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (19) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

யாத்ரீகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை விரிவுப்படுத்தி நயினாதீவு ஆலயத்தை மேலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாக கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

சன்னாஸ் பத்திரம் பேராசிரியர் கபில குணவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை,

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரை என்பது புத்தரின் வருகையால் புனிதமடைந்த இடமாகும். சூலோதர மஹோதர மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையே எழுந்த இரத்தினக்கல் கதிரைக்காககநடந்த போரை நிறுத்துவதற்காக புத்தபெருமான் இந்த புனித இடத்திற்கு வந்ததாக சாசன வரலாறு கூறுகிறது.

அப்போது அனைவருக்கும் தர்மம் உபதேசம் செய்யப்பட்டதால், ஏற்படவிருந்த பெரும் பேரிடரை தடுத்து நிறுத்த முடியும்.

அன்றிலிருந்து இந்த பெறுமதி வாய்ந்த இடம் சிங்கள பௌத்தர்கள் மட்டுமன்றி பௌத்த தத்துவத்தில் பற்று கொண்ட அனைத்து தேசிய இன மக்களும் வழிபடும் இடமாக மாறியுள்ளது.

துடுகெமுனு மன்னன், சத்தாதிஸ்ஸ மன்னன் போன்ற மாபெரும் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்த இடத்தை பாதுகாத்ததாக வரலாறு கூறுகிறது.

வடக்கிலும் தெற்கிலும் பழங்காலத்திலிருந்தே மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர் என்பதை இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட பாதகமான நிகழ்வுகளால் 30 வருடங்களுக்கு மேலாக இந்த இடம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறுவது சரியானது. தென்னிலங்கை மக்கள் வடபகுதிக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அன்றைய காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் இந்த ஆலயத்தை பராமரித்து பாதுகாத்து வந்ததோடு பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கியதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட யுத்தம் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் மக்களையும் அழித்தது.இவ்விகாரையை பராமரிக்க அப்பகுதியில் வாழும் ஏராளமான தமிழர்களும் ஒன்று திரண்டு வந்ததை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

அவர்கள் மற்றும் கடற்படையினரின் உதவியோடு இவ்விகாரை தற்போதைய விகாராதிபதியினால் அபிவிருத்தி செய்யப்பட்டது.எமது வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி நாயக்க தேரர் அவர் என்னுடன் மிகவும் நட்புடன் பழகும் தேரர்.

மேலும், அவர் சொல்ல வேண்டியதை பயப்படாமல் சொல்வதும் அவரிடமிருந்து நான் கண்ட பண்புகளில் ஒன்று. மேலும் இந்த பகுதி மீதும் விகாரையின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.அவர் இந்த மக்களையும் விகாரையையும் விட்டு வெளியே வரவே இல்லை. எனக்கும் அரசாங்கத்துக்கும் மிகவும் விசுவாசமாக இருந்தார்.

புத்தர் பீடத்தை சீர்செய்தல், பக்கச்சுவர் அமைத்தல், விகாரை மற்றும் தேவ மந்திராவை புனரமைத்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூகங்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றை எம்மால் செய்ய முடிந்தது.

மேலும், நயினாதீவில் உள்ள நயினாதீவு விகாரைக்கு செல்லும் பாதையை அமைக்கவும், மருத்துவமனையை சீரமைக்கவும் முடிந்தது.

நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கு செல்லக்கூடிய குறிகட்டுவான் ஜெட்டியை புனரமைத்து, நயினாதீவு விகாரைக்கு வருகை தரும் பக்தர்களுக்கான தங்குமிட வசதிகளை மேலும் மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆலயம் புனிதமான இடமாக மாற்றப்பட்டதன் காரணமாகவே இவை அனைத்தும் சாத்தியமானது என்றே கூறவேண்டும்.

30 ஆண்டு கால பயங்கர போருக்குப் பின்னர் இந்த விகாரையை பெரிய அளவில் மேம்படுத்தி பக்தர்கள் வழிபடும் இடமாக மாற்ற நினைத்தோம்.

எனவேதான் கடந்த வருட அரச வெசாக் விழாவை வடமாகாணத்தில் இந்த ஆலயத்தை மையப்படுத்தி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதையும் மூழ்கடித்த கொவிட் 19  தொற்றினால் அதனை செய்ய முடியாது போனது.

இதனை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புத்தசாசன அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வை பிரமாண்டமாக நடத்துவதற்கு அரசு அமைப்புகள், பாதுகாப்புப் படையினர் உட்பட இந்தப் பகுதி மக்கள் திட்டமிட்டனர்.

எனினும், சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில், நிகழ்ச்சியை ரத்து செய்தோம். இந்த விகாரையின் மீதும், இந்த மாகாணத்தின் மீதும், அங்கு வாழும் மக்கள் மீதும் கொண்ட பக்தியின் காரணமாகவே இந்த விழாக்களில் இணைந்தோம் என்றே கூற வேண்டும்.

அப்போதும் நாங்கள் வடக்கு மக்களை பாதுகாத்தோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் எமது அரசாங்கமும் இன்று அந்த மக்களைப் பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்விகாரைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இப்பணிகளை முன்னெடுப்பதில் புத்தசாசன அமைச்சு உட்பட அரச நிறுவனங்களும், இலங்கை கடற்படை மற்றும் இராணுவமும் கணிசமான பங்காற்றியுள்ளன.

இந்தப் புனித பூமியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யும் என்று உறுதியளிக்கிறேன். 'என்று கௌரவ பிரதமர் கூறினார். (R
 

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நயினாதீவு-ரஜமஹா-விகாரை-புனித-பூமியாக-பிரகடனம்/71-293274

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட யுத்தம் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் மக்களையும் அழித்தது

அரசியல்வாதிகள் = பொய்யர்கள்

அரசியல்வாதிகள் = ஏமாற்றுக்காரர்கள்

அரசியல்வாதிகள்  = நிலஆக்கிரமிப்பாளர்கள்

அரசியல்வாதிகள் =  புளுகுமூட்டையர்கள்

அரசியல்வாதிகள் =  கொள்ளையர்கள்

அரசியல்வாதிகள்  =  கொலைஞர்களென  பல்வகைப் பஞ்சமாபாதகங்களின் கூட்டுருவானவர்களுக்கும், அவர்களுக்குச் சாமரம்வீசி  இன்னொரு இனத்தின் நிலத்தை ஆக்கிரமித்துப் புனிதபூமியாகமாற்றும் இவர்களுக்குப் புத்தனைத் தொழும் தகமை இருக்கிறதா என்று கொஞ்சம் சிந்திப்பார்களா? ஈழதத்தில் புத்தன் ஒரு தமிழின அழிப்பின் அடையாளம், நிலப்பறிப்பின் அடையாளம், ஆக்கிரமிப்பின் அடையாளம், தமிழரது வாழ்வியல் சிதைவின் அடையாளமாகவெனப் பல்வகமைகளிலும் புத்தன் தமிழினத்தின் குருதியில் குளித்து வரும் ஒரு இனஅழிப்பின் முதன்மை அடையாளமாகும்.  இதனை ஒவ்வொரு தமிழரும் இவர்களுக்கு உணர்த்தவேண்டும் அப்போதாவது வெட்கம் வருமா என்று பார்கலாம். இவர்களுக்கு அப்படி ஏதும் இருக்கிறதா... 
 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

புத்தர் பீடத்தை சீர்செய்தல், பக்கச்சுவர் அமைத்தல், விகாரை மற்றும் தேவ மந்திராவை புனரமைத்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூகங்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றை எம்மால் செய்ய முடிந்தது.

 

13 hours ago, கிருபன் said:

நயினாதீவில் உள்ள நயினாதீவு விகாரைக்கு செல்லும் பாதையை அமைக்கவும், மருத்துவமனையை சீரமைக்கவும் முடிந்தது.

 

13 hours ago, கிருபன் said:

30 ஆண்டு கால பயங்கர போருக்குப் பின்னர் இந்த விகாரையை பெரிய அளவில் மேம்படுத்தி பக்தர்கள் வழிபடும் இடமாக மாற்ற நினைத்தோம்.

அப்போ முப்பது வருட போரே இதற்காகத்தானா?

13 hours ago, கிருபன் said:

கடந்த வருட அரச வெசாக் விழாவை வடமாகாணத்தில் இந்த ஆலயத்தை மையப்படுத்தி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

 

13 hours ago, கிருபன் said:

இதனை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புத்தசாசன அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வை பிரமாண்டமாக நடத்துவதற்கு அரசு அமைப்புகள், பாதுகாப்புப் படையினர் உட்பட இந்தப் பகுதி மக்கள் திட்டமிட்டனர்

 இவர்களும்  எங்கள் அரசியல் வியாதிகளும் குறிப்பிட்ட வடமாகாண அபிவிருத்திகள் இவையே!

13 hours ago, கிருபன் said:
13 hours ago, கிருபன் said:

இந்த விகாரையின் மீதும், இந்த மாகாணத்தின் மீதும், அங்கு வாழும் மக்கள் மீதும் கொண்ட பக்தியின் காரணமாகவே இந்த விழாக்களில் இணைந்தோம் என்றே கூற வேண்டும்.

தவறு! இங்கு வாழும் மக்களுக்கும், இந்த புத்தனுக்கும் இப்போது ஒரு தொடர்புமில்லை.

13 hours ago, கிருபன் said:

அப்போதும் நாங்கள் வடக்கு மக்களை பாதுகாத்தோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் எமது அரசாங்கமும் இன்று அந்த மக்களைப் பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

உங்களால் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை தேடி, விடை தெரியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த  வேண்டிய நிலையிலுள்ளோம். தீக்கோழி மணலுக்குள் தன் தலையை புதைத்து விட்டடால் தன்னை யாரும் காண மாட்டார்கள் என்று நினைத்துக்கொள்ளுமாம்.

13 hours ago, கிருபன் said:

.துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதையும் மூழ்கடித்த கொவிட் 19  தொற்றினால் அதனை செய்ய முடியாது போனது

இயற்கைக்கு தெரியும் நீதியும் நிஞாயமும், இரண்டாவது தடவை நிரூபித்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.