Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போருக்கு காரணமான விடயங்களுக்கு இன்னும் தீர்வில்லை : அதிகாரப்பகிர்வு அவசியம் - சம்பந்தன் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு காரணமான விடயங்களுக்கு இன்னும் தீர்வில்லை : அதிகாரப்பகிர்வு அவசியம் - சம்பந்தன் வலியுறுத்தல்

(இராஜதுரை ஹஷான்)

30வருடகால யுத்தம் நாட்டில் காணப்பட்ட பிரதான பிரச்சினையாக காணப்பட்டது. யுத்தத்தை தோற்றுவித்த காரணிகள் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதிகார பகிர்வு அவசியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

May be an image of 2 people and people sitting

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையில் காணப்பட்ட பிரதான பிரச்சினையாக 30வருடகால யுத்தத்தை குறிப்பிட வேண்டும்.தமிழ் மக்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளதை தெளிவாக அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்கள் காலம்காலமாக கோரும் உரிமை மற்றும் தனியுரிமை,சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.

இதற்கு தீர்வு காணாமல் எவ்வாறு ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்த முடியும்.அதிகார பகிர்வினை எதிர்பார்க்கிறோம்.தமிழ் மக்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

புளோட் அமைப்பின் தலைவர் - பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்

நாட்டின் தந்போதைய நிலைமை பற்றி ஆழமாக ஆராய்ந்தால் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் தாக்கம் மாத்திரம் காரணமல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

பல தசாப்த காலமாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை,அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் கொள்கை  அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாக கொள்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவான காரணியாக அமைகிறது.

சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும்.

எவ்வாறாயினும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட அரசாங்கங்கள் அரசியல் பிரச்சினைக்கு இராணுவ தீர்வையே தேர்ந்தெடுத்தன. உண்மையில்இ அதுவே இன்றைய பேரழிவுகரமான கடன் நெருக்கடிக்குள் நம் நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.

நீங்கள் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால்இ பல தசாப்தங்களாக சிங்கள பௌத்த பெரும்பான்மை சித்தாந்தத்துடன் நடாத்தப்பட்ட யுத்தமானது இன்று எமது நாட்டின் அனைத்து சமூக மக்களினதும் தோள்களில் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையையும் சுமத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னருங்கூடஇ தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வந்த எமது நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை.

மாறாக நீங்கள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட அப்போதைய அரசாங்கம்இ தமிழ் மக்களை யுத்தத்தில் வெற்றிகொண்டுவிட்டோம் என்கின்ற மனப்பான்மையுடன் தொடர்ந்தும் எமது நாட்டை ஆட்சி செய்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தியது.

அதுவேஇ அந்நேரத்தில் பெரும் ஆற்றலையும் விருப்பத்தையும் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்  நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதை தடுத்திருத்தது.

2009 இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கலாம்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வொன்றை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் காணப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் உட்பட பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கும் உறுதியளித்திருந்தார். அவர் அதனைச் செய்திருந்தால்இ புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்த்திருப்பார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மிக சக்திவாய்ந்த மனிதராக இருந்தபொழுதுஇ அரசியல் தீர்வுக்கான சாத்தியமான யோசனையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினால் முன்மொழியப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற ஓர் அரசியல் தீர்வு இருந்தது. அதனை இந்த நாட்டு மக்களின் பேராதரவினைப் பெற்றிருந்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலகுவாக அமுல்படுத்தியிருக்கலாம்.

அவர் வாக்குறுதியளித்தபடி 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண விரும்பாவிட்டாலும்இ குறைந்தபட்சம் 13வது திருத்த வரைபைஇ அதன் ஆரம்ப அசல் வடிவிலேயே முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால்இ அதற்கான துணிவு அவருக்கு இருக்கவில்லை. நாட்டில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆற்றலுடன் இருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்இ தமிழ் மக்களுக்கு உரிய இடத்தினை வழங்க அரசாங்கம்  முன்வராததால் விலகி நிற்க முனைந்தனர்.

இதற்கிடையில் எமது நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கடுமையான விதிமுறைகளைக் கடந்து அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மேம்படுத்தப்பட்ட இந்த அதிகாரிகளின் சிங்கள பௌத்த பெரும்பான்மை மனோநிலை அந்த முதலீட்டாளர்களின் பெரும் உற்சாகத்தை பாரிய அளவில் சிதைத்துவிட்டது. முதலீட்டாளர்கள் மீது சுமத்தப்பட்ட தாங்க முடியாத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சுமைகள் அவர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வசிக்கும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதை நான் உங்களுக்குச் கூறமுடியும். சில முதலீட்டாளர்கள் நாட்டின் தென்பகுதியிலேயே முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தனிப்பட்ட முறையில்இ இதுபோன்ற சில சம்பவங்களை நான் அறிவேன். மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள்பற்றி; எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய ஆட்சிமுறை என்கின்ற நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை எட்டும்வரைஇ   ஒரே நாட்டிற்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான பரிந்துரையாக  குறைந்தபட்சம் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அதன் ஆரம்ப வடிவிலேயேஇ முழுவதுமாக செயல்படுத்துமாறு எமது கட்சியின் சார்பில் பரிந்துரைக்க விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கை ஒன்று மாத்திரமே தற்போதைய பொருளாதார அவலநிலையில் இருந்து நமது நாட்டை மீட்பதற்கான ஒரே வழியென நான் திடமாக நம்புகின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றும் என்பதையும் நான் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விளைகிறேன் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் - எம்.ஏ.சுமந்திரன்.

பொருளாதாரம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.அரசமுறை கடன் மறுசீரமைப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கும்ஈஅதனை செயற்படுத்துவதற்கும் விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைக்கு பொருத்தமான வகையில் செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசாங்கத்திடம் ஏற்கெனவே யோசனைகளை முன்வைத்துள்ளோம்.புலம்பெயர் அமைப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நடைமுறைக்கு சாத்தியமான சூழல் வகுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியுடன் எதிவரும் நாட்களில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் அவ்விடயம் குறித்து விளக்கமாக உரையாற்றவுள்ளோம்.பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து இதுவரயில் சுமார் 10 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்கள்.இது அரசாங்கததிற்கும்,நாட்டிற்கும் சாதகமாக அமையாது என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/124628

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

அதிகார பகிர்வு அவசியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதெல்லாம் அப்புறம் பேசலாம். இப்போ! கூப்பிடுங்கள் புலம்பெயர்ந்தோரை. இவ்வளவு காலமும் எங்களை பேச்சுக்கு கூப்பிடுங்கள் என்று எவ்வளவு தரம் கெஞ்சியிருப்பீர்கள். திரும்பிக்கூட பாக்காதவர், இப்போ கூப்பிட்டிருக்கிறார் என்றால்; அது அவரின் தேவைக்கு, கஜானா நிரம்பணும். அதுக்கு பிறகு யோசிப்பார் என்ன பேசுவதென்று? உங்களை எப்படி சமாளிக்கவேணும் என்பது தெரியாதா அவர்களுக்கு? எங்கே கவிழுவீங்கள் என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.