Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழின அழிப்பை அம்பலப்படுத்திய `சாவிலும் வாழ்வோம்' நினைவு நாள்

Featured Replies

தமிழின அழிப்பை அம்பலப்படுத்திய `சாவிலும் வாழ்வோம்' நினைவு நாள்

கறுப்பு ஜூலையின் ஆறாவடுக்களுடன் உலககெங்கிலும் `கூடு கலைந்து' வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தாம் தங்கியுள்ள நாடுகளில் அந்தக் கரி நாட்களை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.

பேரினவாத மமதைகளின் தமிழின அழிப்புத் தாண்டவத்துக்குள் அகப்பட்டு அநியாயமாக பலியெடுக்கப்பட்ட தமது உறவுகளை மாத்திரமன்றி இற்றைத் திகதி வரை தொடரும் அரச பயங்கரவாதத்தினால் தாயகத்தில் மடிந்துகொண்டிருக்கும் தமது சொந்தங்களையும் நினைவு கூர்ந்தனர்.

கடந்த புதன்கிழமை (25-07-07) நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் தமிழர்கள் மாத்திரமன்றி பிற இனத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர். `சாவிலும் வாழ்வோம்' என்ற அடிப்படைக் கோஷத்துடன் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் இலங்கை அரசின் தொடரும் போர் வெறித்தனமும் காட்சிப் படுப்பட்டிருந்தது.

சுவிஸில்

சுவிஸின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் `கறுப்பு ஜூலை' நினைவுகளுடன் `சாவிலும் வாழ்வோம்' கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் 1983 இல் சிங்களப் பேரினவாதம் பலிகொண்ட தமிழ் மக்களை நினைவில் கொண்டு சுவிஸ்- தமிழ் நட்புறவுக் கழகத் தலைவர் பேர்னார்ட், சுவிஸ் தமிழ் நட்புறவுக் கழகச் செயலாளர் திருமதி எவிலன் பேர்னார்ட் ஆகியோர் நினைவுச் சுடரினை ஏற்றிவைத்தனர்.

பின்னர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் 1983 இல் சிங்களக் காடையர்களின் இனவெறிக்குப் பலியான அப்பாவிப் பொது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் 1983 இல் சிங்களக் காடையர்களாலும் சிங்கள இராணுவத்தாலும் தமிழர்கள் வதைக்கப்பட்டதைச் சித்தரிக்கும் வகையில் ஜெனீவா தமிழ்ச் சிறார்களினால் நாடகங்களாக நடித்துக் காட்டப்பட்டன. சாவிலும் வாழ்ந்து சரித்திரம் படைப்போம் என்பதை எடுத்துக் காட்டும் நடனங்களும் இடம்பெற்றன.

ஜேர்மனியில்

`சாவிலும் வாழ்வோம்' கறுப்பு ஜூலை நிகழ்வு ஜேர்மன் வாழ் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று காலை ஜேர்மனியிலுள்ள 17 நகரங்களில் தொடங்கிய நிகழ்வுளில் இதுவரை நாளும் ஷ்ரீலங்கா அரசபடைகளாற் கொலை செய்யப்பட்ட பொதுமக்களை ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள் நினைவு கூர்ந்தனர்.

முன்ஸ்ரர், முல்கைம், முன்சன், நியூனர்பேர்க், ஸ்ருட்காட், மன்கைம், பிராங்போட், சாபுறுக்கன், டோட்மூன்ட், வூப்பெற்றால், நொய்ஸ், முன்சன்கிளட்பாக், கொற்றிங்கன், பிறிமன், பெர்லின், கனோவர், கம்பேர்க் ஆகிய நகரங்களின் மத்தியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்களில் `ஜூலை 83' இன அழிப்பை விளக்கும் படங்கள், படுகொலை செய்யப்பட்ட மக்களின் புகைப்படங்கள் போன்றவை ஜேர்மனிய மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஜூலை சம்பவம் தொடர்பானதும் ஷ்ரீலங்கா அரச படைகள் மேற்கொண்டு வரும் தமிழின படுகொலைகள் ஆகிய விபரங்கள் அடங்கிய ஜேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். பிராங்போட், ஸ்ருட்காட் ஆகிய நகரங்களில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்களும் ஜேர்மனிய மக்களுக்கு நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.

டென்மார்க்கில்

ஜூலை 25 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு டென்மார்க் ஓகூஸ் மாநகரில் டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தால் கறுப்பு ஜூலை நினைவு கவனயீர்ப்பு நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

300 க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், இளையவர்கள், குழந்தைகள் கறுப்பு ஜூலையை நினைவு கூரும் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் நகரத்தின் மையப்பகுதியில் ஒன்று கூடினார்கள்.

மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பித்தது. டெனிஸ் மக்கள் ஆர்வத்துடன் பதாதைகளின் சுலோகங்களை வாசித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

தமிழ் அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் பொன்.மகேஸ்வரன் இலங்கையில் 24 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இன்றும் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் பற்றி டெனிஸ் மொழியில் விளக்கமளித்தார். மேற்குலக நாடுகள், ஊடகங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பாராமுகமாக நடந்து கொள்வதையும் குறிப்பிட்ட அவர் டெனிஸ் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகைகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அனுதாபம் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கறுப்பு ஜூலையில் நடைபெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சில காட்சிகள் மேடையேற்றப்பட்டன. இடையே இசை நிகழ்ச்சிகளும் நடனமும் நடைபெற்றதால் டெனிஸ் மக்கள் ஆர்வத்துடன் முழு நிகழ்வையும் அவதானித்தனர்.

இறுதியாக தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் செயலாளர் டோறிற் புறுசேலியுஸ் தனது உரையில் தமிழ் மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் துன்பங்களைக் குறிப்பிட்டு இவற்றுக்கெல்லாம் இறுதித் தீர்வாக தமிழீழம் அமைவதே ஒரேவழி என்பதை வலியுறுத்தினார்.

லண்டனில்

லண்டன், மேட்டன் கவுன்சில் மற்றும் கிங்டன் கவுன்சில் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர். இதில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் கைகளில் ஷ்ரீலங்கா அரசுக்கெதிரான சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் காணப்பட்டனர்.

இந் நிகழ்வில் மேட்டன் கவுன்சில் மேயர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

"சாவிலும் வாழ்வோம்" கறுப்பு ஜூலை `கவனயீர்ப்பு நிகழ்வுகள்' வட மேற்கு இலண்டன் Brent, Ealing, Warford நகரசபைகளை மையப்படுத்தி மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரையும் Harrow நகர சபை முன்னால் மாலை 5 முதல் 7 மணிவரையும் நடைபெற்றன. மழையையும் பொருட்படுத்தாது பெரும் அளவில் லண்டன் வாழ் தமிழீழ மக்கள் பங்குபற்றி அக வணக்கம் செலுத்தித் தமது உறவுகளை நினைவு கூர்ந்ததுடன் ஸ்ரீலங்கா அரசின் 1958 முதல் இன்றுவரையான இன அழிப்பு, மனித உரிமை மீறல்களைச் சர்வதேசத்திற்கு உணர்த்தியுள்ளார்கள்.

பிரான்சில்

`சாவிலும் வாழ்வோம்', `கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு' பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 1983 ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றல் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் தொடக்க நிகழ்வாக இசை நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து மாணவ மாணவிகளின் எழுச்சி நடனங்களும் நடைபெற்றன. பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பாலச்சந்திரன் உரையாற்றுகையில்;

"இன்று நடைபெறும் விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம். இப் போராட்டத்தை எந்தவொரு சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது. அதுபோல இப்போராட்டத்தை ஆதரித்து செயற்படும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் "சில கைது நடவடிக்கைகள்" அவர்களின் செயற்பாடுகளில் எந்த ஒரு பின்னடைவையும் ஏற்படுத்தாது. எனவே, தொடர்ச்சியாக நாம் செயற்படுவோம்" எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொறுப்பாளர், கிருபாகரன்;

"ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக விவரித்ததுடன், தற்போதைய சர்வதேசத்தின் போக்கையும் சாடினார். புலம்பெயர் மக்களாகிய நாம் வாழும் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமிழர் சுயநிர்ணய போராட்டத்திற்கான அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு சக்தியும் தடைகளை விதிக்க முடியாது என்றார்.

இறுதியா

`மஞ்சள் பூதம்' என்ற சிறுவர் நாடகம் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வாழும் இளம் சிறார்களினால் அரங்கேற்றப்பட்ட இந் நாடகத்தில், இலங்கையின் வரலாற்றையும், தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட விடயத்தையும் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகவும் விவரிக்கப்பட்டு இருந்தது. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.

இதேவேளை, பஸ்தில் நினைவுச் சதுக்கத்தில் தமிழ் இளையோர், இனப்படுகொலை தொடர்பான பிரஞ்சுத் துண்டுப் பிரசுரங்களை வேற்று இன மக்களுக்கு விநியோகித்தனர்.

அவுஸ்திரேலியா - மெல்பேர்ணில்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் கடந்த புதன்கிழமை மெல்பேர்ண் நகர சதுக்கத்தில் கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் இந்தக் கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை தமிழின அழிப்புக்கு கொடூரங்களை நினைவு கூர்ந்தும், ஈழத் தமிழர் மீது தொடரும் தமிழினப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் நடைபெற்ற இந்தக் கவன ஈர்ப்பு அகவணக்க நிகழ்வில், பல நூற்றுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழீழ உறவுகள் உணர்வுபூர்வமாக அணிதிரண்டிருந்தனர். இந்த நிகழ்வுக்கு விக்டோரிய மாநிலத்தின் அனைத்துப் பிராந்தியங்களிலிருந்தும் வயது வேறுபாடின்றி கலந்து கொண்ட புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் பெருந்தொகையான 2 ஆம் தலைமுறைத் தமிழர்களும் ஒருங்கிணைந்து கறுப்புப் பட்டியணிந்து பங்கேற்றனர்.

இன்றைய கவன ஈர்ப்பு நிகழ்வில் ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட, தமிழின அழிப்பையும் அரச பயங்கரவாத செயல்களையும் விளக்குகின்ற வகையில் பதாதைகளை தாங்கியிருந்தனர். அவுஸ்திரேலிய நேரம் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்தக் கவனஈர்ப்பு நிகழ்வைப் பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலியப் பொதுமக்கள பார்வையிட்டனர்.

ஸ்ரீலங்கா அரசின் 83 கறுப்பு ஜூலை, இன்றும் நடைபெறுகின்ற பயங்கரவாத செயல்களை விளக்குகின்ற துண்டுப் பிரசுரங்கள், 83 கறுப்பு ஜூலை நினைவு சுமந்த அடையாளச் சின்ன அட்டைகள், கறுப்புப் பட்டிகள் போன்றவற்றை அவுஸ்திரேலிய நாட்டுக் குடிமக்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் விநியோகித்தனர். 83 ஜூலையிலிருந்து இன்று வரையில் 24 ஆண்டு காலப் பகுதிக்குள் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தினால் பலியாகிய அப்பாவித் தமிழ் மக்களை நினைவு கூர்ந்து மாலை 4.30 மணியளவில் 24 சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வில், அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில பாராளுமன்ற உறுப்பினர் லூக் டொனலன் ஜோர்ஜ் சீட்ஸ் மற்றும் கிறீன்ஸ் அரசியல் கட்சிப் பிரமுகர், மனித உரிமை ஆர்வலர்கள், பிரபல சட்டத் தரணிகள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.

இந்த சிறப்புரைகளின் நடுவே எமது தாயக மக்களின் இன்னல்களை எடுத்துக்கூறும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. நிகழ்வின் தகவல்களை சேகரிக்கும், புகைப்படம் எடுக்கவும் அவுஸ்திரேலிய ஊடகர்கள் வந்திருந்தனர்.

நோர்வேயில்

கறுப்பு ஜூலை நினைவாக நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலும் `சாவிலும் வாழ்வோம்' எழுச்சி நிகழ்வு நடத்தப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தார்மீக நியாயங்களையும் தமிழ் மக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைகளையும் நோர்வே மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் `சாவிலும் வாழ்வோம்' கவன ஈர்ப்பு எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒஸ்லோ நகர மையப் பகுதியில் புதன்கிழமை மதியம் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை சிங்கள அரச பயங்கரவாதத்தை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள் நோர்வே மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு, துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் இன அழிப்புப் படுகொலைகளையும் தொடரும் சிங்கள அரச பயங்கரவாதத்தையும் எடுத்துரைக்கும் வகையில் எழுச்சி நிகழ்வு புனித ஹன்சௌஜன் திறந்தவெளி அரங்கத்தில் நடத்தப்பட்டது. மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒஸ்லோவில் பலராலும் அறியப்பட்டு வரும் "குடடிணஞு" எனும் தமிழ் இளைஞர் இசைக்குழுவினரின் ரப் - இசை நிகழ்ச்சி, எழுச்சி நடனம் மற்றும் சிறப்புரை என்பனவும் இடம்பெற்றன.

இவ்வாறு தமிழர் வாழும் பகுதியெங்கும் ஜூலை இன அழிப்பு நினைவு கூரப்பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இன அழிப்பின் வடிவங்கள் இன்று மாறியுள்ளதே தவிர சிங்கள பேரினவாதிகளின் தமிழின அழிப்பு மமதை இன்னமும் மாறவில்லை. மாறப்போவதுமில்லை.

இந்த யார்த்தத்தை உலக அரங்கில் தமிழர்கள் எடுத்துரைத்தே வருகின்றனர். அதன் ஒரு அங்கமே இந் நினைவு நிகழ்வுகளாகும். இலங்கைத் தீவில் தமிழர்படும் துயரை திரும்பிப் பார்க்க மறுக்கும் நாடுகளை எம்பக்கம் தலையசைக்க வைக்க வேண்டிய பொறுப்பு புலம் பெயர் வாழ் தமிழர்களிடமேயுள்ளது. அந்த தார்மீகப் பொறுப்புக்காக அவர்கள் மேலும் உழைக்க வேண்டியே உள்ளது.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாவிலும் வாழ்வோம், அந்தமாரி கெடிங். :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.