Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை தேவை

 
stalin-586x365.jpg
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தமிழகத்திலிருந்து பொருள்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.
இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.
A. மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-
1. மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html
வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கி கிளை : தலைமைச் செயலக கிளை
சென்னை – 600 009
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070
IFSC குறியீடு : IOBA0001172
CMPRF பான் எண் : AAAGC0038F
SWIFT குறியீடு : IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம்,
சென்னை. (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).
ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரபூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பின்வரும் விவரங்களை தயவுசெய்து வழங்கவும்:-
பங்களிப்பாளரின் பெயர் :
பங்களிப்பு தொகை :
வங்கி மற்றும் கிளை :
பணம் அனுப்பும் திகதி :
பரிவர்த்தனை குறிப்பு எண்:
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
மின்னஞ்சல் முகவரி :
தொலைபேசி எண் / கைபேசி எண். :
UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள்.
B. காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-
The Joint Secretary to Government & Treasurer,
Chief Minister’s Public Relief Fund,
Finance (CMPRF) Department,
Secretariat, Chennai 600 009,
Tamil Nadu, India.

 

அரசு இணைச் செயலாளர் & பொருளாளர்,
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி,
நிதி(மு.பொ.நி.நி) துறை,
தலைமை செயலகம், சென்னை 600 009,
தமிழ் நாடு, இந்தியா.

என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்கலாம்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை தேவை - oosai.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் மக்களுக்கு  என்று திருத்தம் செய்தால் போதும்..👌

  • கருத்துக்கள உறவுகள்

திமுக சார்பில் 1 கோடி .. திமுக MLA க்களின் ஒரு மாத ஊதியம்.. இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கும் ஸ்டாலின்.

MKStalin_030422_1200x800_PTI.jpg?itok=BX

இலங்கையில் பசி பஞ்சம் தலை விரித்து ஆடி வரும் நிலையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியம், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தையும் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுமென மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடை வழங்கிடும் மாறும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் நிதி வழங்க ஏதுவாக வங்கி என் மற்றும்  விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  "திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”- என்பது வள்ளுவர் வாக்கு.“உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்

எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக, 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம்.

மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்.

https://tamil.asianetnews.com/politics/1-crore-on-behalf-of-dmk-one-month-salary-of-dmk-mlas-stalin-giving-to-sri-lanka--rbb4id

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் – தமிழக முதலமைச்சர்

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அத்துடன், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத வேதனமும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அறிக்கை ஒன்றினை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால்மா மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நன்கொடைகள் வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-ஜி ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1279890

  • கருத்துக்கள உறவுகள்

rjwW4X.jpg

கொங்கிரஸ் எம்பிமாரும் அறிவித்து விட்டினம்..

rjwKq8.jpg

rjwVth.jpg

இன்னும் இருக்குற அல்லு சில்லு கட்சிகள் எல்லாம் இனி இறங்கும்..

போக இரண்டு பக்கமும் (கிந்திய/இலங்கை) வாங்கும் பணத்தில்  கமிசன் எடுக்காமல் மக்களிடம் கொடுங்கப்பா..😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.