Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாயக அவலங்களை இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துச் செல்லுங்கள்: புலம்பெயர் உறவுகளுக்கு புலித்தேவன் வேண்டுகோள்

Featured Replies

தமிழர் தாயகத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்படும் அவலங்களை அந்தந்த நாடுகளில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துச் செல்லுமாறு புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (31.07.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணல்:

சிங்களத் தலைவர்கள் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எப்போதுமே இல்லை. ஏனெனில் காலம் காலமாக சிங்களத்தரப்போடு தமிழர் தரப்பு பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும் ஒருபோதுமே தமிழ் மக்களுக்கு நீதியான- நியாயமான-உருப்படியான தீர்வை சிங்கள தேசம் முன்வைத்தது கிடையாது. அது இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால் எமது தரப்பு நியாயத்தை- எமக்கு ஏன் தனித்தேசம் வேண்டும் என்பதையும் எமது மக்கள் படுகின்ற அல்லல்களையும் சிங்கள ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளையும் அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறவே சமாதான முன்னெடுப்புக்களையும் சமாதான செயலகத்தையும் நாங்கள் பயன்படுத்தினோம்.

காலம் காலமாக சிங்களத் தரப்பினருடன் தமிழ்த்தரப்பினர் நடத்திய பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பல படிப்பினைகளை நாங்கள் கற்றிருக்கிறோம். 50 களிலிருந்து 80 கள் வரை தமிழர் தரப்பானது பல்வேறு ஒப்பந்தங்களை சிங்கள அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்துமே குப்பைக்கூடைக்குப் போய்விட்டன. 1987 இல் இந்திய அரசாங்கம் உருவாக்கிய ஒப்பந்தத்தாலும் சிங்களத் தலைவர்களை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. அதன் பின்னர் 1994-95 களில் சந்திரிகாவுடன் நாங்கள் பேச்சுக்கள் நடத்தினோம். அதே நிலைதான். சிங்களத்தில் ஆட்கள்தான் மாறினார்களே தவிர எண்ணங்கள் மாறவில்லை. தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விடக்கூடாது என்கிற எண்ணம் எப்பொழுதுமே மாறியதில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசை- நடைமுறை அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதற்கான அங்கீகாரமானது எமக்கு பல்வேறு வடிவங்களில் பல்வேறு இடங்களிலிருந்து கிடைத்தும் வருகிறது. தமிழ் மக்களுக்கான அரசினை அமைப்பதற்கான தொடக்க கால முன்னெடுப்புகளாகத்தான் இதனை நாம் பார்க்கிறோம். இவை அனைத்துமே எமது இராணுவப் பலத்தின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது. இராணுவ வலுச் சமநிலையின் அடிப்படையில்தான் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமும் சமாதான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. போர் என்பது அரசியல் முன்னெடுப்புகளுக்கான இன்னொரு வடிவம் என்று 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பிரஸ்யா நாட்டில் வாழ்ந்த ஜெனரல் கார்ல் வொன் கிளெஸ்விட்ஸ் கூறினார். அதுதான் யதார்த்தமும் கூட.

எமது இராணுவமும் எமது அரசியல் செயற்பாடுகளும் "தமிழீழத் தனியரசு" உருவாக்குவது என்ற ஒரே இலக்கில்தான் குவி மையம் கொண்டிருக்கிறது.

தமிழ் மக்கள் இத்தனை அவலங்களை வெளிப்படுத்தியும் சிறிலங்காவுக்கு உரிய அழுத்தங்களை அனைத்துலகம் கொடுக்காமல் இருக்கிறது ஏன் என்ற கேள்வி காலம் காலமாக தமிழ் மக்களிடத்தில் உண்டு. இது தொடர்பான அனைத்துலகத்தின் செயற்பாட்டில் அதிருப்தி உள்ளது. அதே நேரத்தில் அனைத்துலகம் 100க்கு 100 விழுக்காடு மௌனமாகவும் இருந்துவிடவில்லை. பல்வேறு விடயங்களில் பல்வேறு அழுத்தங்களை சிறிலங்காவுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மனித உரிமைகள், மனிதாபிமான விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலக நாடுகள் கண்டனம் செய்து பல்வேறு நாடுகள் நிதி உதவியையும் நிறுத்தியிருக்கின்றன.

"பொன் தட்டில் தமிழீழத் தனியரசை ஒருவரும் தந்து விடப்போவதில்லை. எமது சொந்தப் பலத்தில் நாம் நிற்க வேண்டும். நாமே இரத்தம் சிந்திப் போராட வேண்டும். அப்படிப்பெறுகின்ற விடுதலைதான் உண்மையான விடுதலை அதனையே நாம் உணரக்கூடியதாக இருக்கும்" என்று அடிக்கடி எமது தேசியத் தலைவர் கூறுவார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் கறுப்பு ஜூலை நிகழ்வை நீங்கள் நடத்தியிருந்தீர்கள். அதில் இரண்டாம் தலைமுறையினர் பெருமளவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் வாழும் தமிழர்கள் எமக்கு ஒரு சக்தியாக உள்ளனர். பல்வேறு நாடுகளில் இந்த கறுப்பு ஜூலை நாள் கடைபிடிக்கப்பட்டது. இப்படியான நிகழ்வுகளை அனைத்துலக சமூகம் கவனத்தில் கொள்கிறது. அனைத்துலக சமூகத்துடனான கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் தொடர்ச்சியாக தாயகத்திலும் புலம்பெயர் இடங்களிலும் மேற்கொள்ள வேண்டும். இப்படியாகத்தான் படிநிலைகளாக இதனை மேற்கொள்வதன் மூலமே அனைத்துலக அங்கீகாரம் பெறக்கூடியதாக இருக்கும்.

அனைத்துலகத்தின் அரசியல்-பொருளாதார நோக்கங்கள்?

1990களில் இறுதிப்பகுதியில் எமது தேசியத் தலைவரை நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்த போதே எமது விடுதலைப் போராட்டமானது அனைத்துலக மயமாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். நோர்வே அனுசரணையாளர்கள்தான் இப்போதும் சமாதான முன்னெடுப்புகளுக்கு பொறுப்பாளர்களாக உள்ளனர். அதே நேரத்தில் இணைத் தலைமை நாடுகள், சமாதான முன்னெடுப்புகளுக்கு நிதி உதவி வழங்குதல் உள்ளிட்டவைகளைச் செய்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் போன்ற அனைத்துலக நிறுவனங்கள் சமாதான முன்னெடுப்புகளுக்கு இசைவாக தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்படியாக எமது விடுதலைப் போராட்டம் அனைத்துலக மயமாகிய நிலையில் அனைத்துலகத்திற்கு இங்கே கேந்திர- அரசியல்-பொருளாதார நோக்கங்கள் இருக்குமா? என்ற விவாதங்கள் நிச்சயமாக இருக்கின்றன. இங்கே சில நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய தேவையும் அனைத்துலகத்துக்கு இருக்கிறது. அது தொடர்பாகவும் அனைத்துலகம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு அப்பால் அனைத்துலகத்தின் அரசியல்- பொருளாதார நோக்கங்கள் தொடர்பில் மேலதிகமாக தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

கிழக்கு பின்னகர்வு

எமது தமிழ் உறவுகள் வெகுதொலைவில் இருந்து சிறு, சிறு பின்னகர்வுகளைப் பார்க்கின்றபோது துயரமாகவும் துன்பமாகவும் இருக்கும் என்பது உண்மைதான். தமிழீழம் விரைவில் மலர வேண்டும் என்று எமது புலம்பெயர் தமிழர்கள் உளப்பூர்வமாக விருப்பம் வைத்துள்ளனர்.அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய சக்தி என்றும் எப்போதும் தொடர்ந்து நல்ல செய்திகளைத் தருவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றனர். அதனைப் பாராட்டுகின்றோம்.

எமது தந்திரோபாய நிலைப்பாடுகள் சில எமது மக்களுக்கு புரியாமல் இருக்கலாம். புரியாத புதிராகவும் இருக்கும். நிச்சயமாக இது தொடர்பில் அவர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் எம்மை இயக்குவது எமது தேசியத் தலைவர். நமது விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைவர் அவர்கள், பல தந்திரோபாயங்களை வகுத்து அதற்குரிய வகையில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய கள நிலைமையை நீங்கள் பார்த்தால் மன்னார் பகுதியில் மடு தேவாலயப் பெருவிழா நடைபெறும் எதிர்வரும் 15 ஆம் நாளுக்கு முன்னதாக மடுவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ஒவ்வொருமுறையுமே நமது போராளிகள் கடும் சமர் புரிந்து சிறிலங்கா இராணுவத்தினரைத் தாக்கி சிறிலங்கா இராணுவத்தினரின் முயற்சிகளை முறியடித்து விட்டனர்.

அதேபோல்-

சிறிலங்கா இராணுவத்தில் சில கப்டன்கள், லெப். தரத்தில் உள்ளிட்ட 30 பேர் வரையிலான இராணுவத்தினர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தற்போது கிடைத்திருக்கின்றன. அவர்களின் பெயர் விபரங்களை தந்து உங்களிடம் இருக்கின்றதா என்று கேட்டிருக்கின்றனர்.

ஆகையால் ஒரு சிறு வெற்றியை பாரிய வெற்றியாக சிறிலங்கா அரசாங்கம் ஊதிப் பெரிதுபடுத்தி பரப்புரை மேற்கொள்வதையோ வெற்றி விழா கொண்டாடுவதைப் பார்த்தோ தமிழர்கள் மனம் கவலை கொள்ளத் தேவையில்லை.

விடுதலைப் புலிகளுக்கு ஒரு மரபு உள்ளது. "சொல்லுக்கு முன்பு செயல் இருக்க வேண்டும்" என்பதுதான் எமது தேசியத் தலைவர் எப்பொழுதும் வலியுறுத்துவது. அதனைத்தான் விடுதலைப் புலிகளும் விரும்புகின்றனர். தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒருவிதமாக மேடையிலே கத்தலாம். ஆனால் புலிகளைப் பொறுத்தவரை சொல்வதைத்தான் செய்வார்கள். செய்வதைத்தான் சொல்வார்கள். சிறிலங்கா இராணுவம் பாரிய போர் நடவடிக்கைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் நாங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய அளவுக்கு அதனை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எதிர்வரும் காலங்களில் பாரிய வெற்றிச் செய்திகளை புலம்பெயர் வாழ் தமிழர்கள் கேட்கக் கூடியதாக இருக்கும்.

புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு வேண்டுகோள்

புலம்பெயர் தமிழ் மக்கள் எத்தனையோ இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் தங்களால் இயன்றளவு உதவிகளையும் ஆதரவையும் அளித்து வருவது என்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தெம்பையும் ஏற்படுத்துகிறது.

மண் வந்து பாறையாக வெடித்து எந்தவிதமான தண்ணீரும் இல்லாமல் பயிர்கள் வாடி, வதங்கிக்கொண்டு போகின்ற நிலையில் பாரிய மழை கொட்டியது போல் எமது புலம்பெயர் தமிழர்கள் "ஜெயசிக்குறு" சமர் நடைபெற்ற காலப்பகுதியில் செய்த பேருதவிதான் எமது சிறார்களை போசாக்கின்மையிலிருந்தும் எமது மக்களை பட்டினிச் சாவிலிருந்தும் காப்பாற்றியது.

தொடர்ந்தும் தங்களாலான உதவிகளை அந்த பனிக்குளிருக்குள்ளும், பனிமழைக்குள்ளும் தமது குடும்பத்தினருடன் இணைந்திருக்கக் கூட நேரமின்றி அனைவருமே உழைத்து சம்பாதிக்கும் அந்தப் பணத்திலிருந்து எமக்கு என்று ஒரு பகுதியை ஒதுக்குவது என்பது எம் மனங்களை புல்லரிக்கச் செய்கின்ற விடயம். அத்தகைய உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் புலம்பெயர் தமிழர்கள் அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுடனோ அந்தந்த நாட்டு அரசாங்க அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் ஆகியோருடனும் தொடர்புகளையும் உறவுகளையும் உருவாக்கி அதனூடே தாயகத்திலே நிகழ்கின்ற மனித அவலம், மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா இராணுவத்தினது அடக்குமுறைகள, பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றை அவர்களின் மேலதிகமான கனவத்துக்குக் கொண்டு செல்ல உதவிட வேண்டும். யூதர்கள் எப்படி தங்களது மக்களின் பிரச்சனைகளை பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்தார்களோ அதேபோல் எங்கள் மக்களும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இத்தகைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் முக்கியமானதாகும். உணர்வுப்பூர்வமாக மட்டுமின்றி அறிவுப்பூர்வமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இந்தவிடயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் புலித்தேவன்.

ஒலி வடிவம்

Edited by தமிழினீ

அதேபோல்-

சிறிலங்கா இராணுவத்தில் சில கப்டன்கள், லெப். தரத்தில் உள்ளிட்ட 30 பேர் வரையிலான இராணுவத்தினர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தற்போது கிடைத்திருக்கின்றன. அவர்களின் பெயர் விபரங்களை தந்து உங்களிடம் இருக்கின்றதா என்று கேட்டிருக்கின்றனர்

சில வேளை கரிநாக படை கருணாவிடம் சேர்ந்து இருப்பார்களோ?

அல்லது சொறி நாய் படை டக்கிளஸ்டம் சேர்ந்து இருப்பார்களோ?

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெம்புதரும் வார்த்தைகள்.. நன்

கிழக்கு பின்னகர்வு

எமது தமிழ் உறவுகள் வெகுதொலைவில் இருந்து சிறு, சிறு பின்னகர்வுகளைப் பார்க்கின்றபோது துயரமாகவும் துன்பமாகவும் இருக்கும் என்பது உண்மைதான். தமிழீழம் விரைவில் மலர வேண்டும் என்று எமது புலம்பெயர் தமிழர்கள் உளப்பூர்வமாக விருப்பம் வைத்துள்ளனர்.அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய சக்தி என்றும் எப்போதும் தொடர்ந்து நல்ல செய்திகளைத் தருவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றனர். அதனைப் பாராட்டுகின்றோம்.

எமது தந்திரோபாய நிலைப்பாடுகள் சில எமது மக்களுக்கு புரியாமல் இருக்கலாம். புரியாத புதிராகவும் இருக்கும். நிச்சயமாக இது தொடர்பில் அவர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் எம்மை இயக்குவது எமது தேசியத் தலைவர். நமது விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைவர் அவர்கள், பல தந்திரோபாயங்களை வகுத்து அதற்குரிய வகையில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய கள நிலைமையை நீங்கள் பார்த்தால் மன்னார் பகுதியில் மடு தேவாலயப் பெருவிழா நடைபெறும் எதிர்வரும் 15 ஆம் நாளுக்கு முன்னதாக மடுவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ஒவ்வொருமுறையுமே நமது போராளிகள் கடும் சமர் புரிந்து சிறிலங்கா இராணுவத்தினரைத் தாக்கி சிறிலங்கா இராணுவத்தினரின் முயற்சிகளை முறியடித்து விட்டனர்.

.ஒலி வடிவம்

அவலங்களையும் பின்னகர்வுகளையும் கண்டு நாம் மனங்குமுறுவது உண்மையிலும் உண்மை. புலித்தேவன்னின் கருத்துக்கள் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றது. தேசியத் தலைவரின் இராஜதந்திர நகர்வுகளை உலக இராஜதந்திரிகள் வியப்புடன் பார்க்கின்றார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலுமே ஊகித்தறிய முடியாத நிலையுள்ளது. ஆய்வுகள், விமர்சனங்கள், முன் வைக்கப்படும் கருத்துக்கள் எல்லாமே தலைவரின் நகர்வுகளுக்கு முன்னால் பொய்த்துப் போய்விடுகின்றன. வரலாற்றில் நடப்பவன் தோற்றுவிடுவான். வரலாற்றைப் படைப்பவன் வெற்றியடைவான். தலைவர் வரலாற்றைப் படைப்பவர்.

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட மௌனம் ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பை குறிப்பா மகிந்த ராஜபக்சவை பீதியடைவைத்துள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்மையில் மன்னார் முன்னரங்கள நிலைகளில் இடம்பெற்ற மோதல்கள் வவுனியா முன்னரங்க நிலையில் தோன்றியுள்ள பதற்றம் என்பன விடுதலைப்புலிகளின் புதிய களமுறை வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அதேவேளை இலங்கையின் போரியல் ஆய்வாளர்களில் ஒருவரான இக்கபால் அத்தாஸ் புலிகளின் தாக்குதல் மணலாற்றினை நோக்கியதாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ளார்.

எனினும் கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவிற்கு புலிகளின் பதில் வேறு விதமாக இருக்கும் என்று வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.

அந்த வேறு விதமான பதில் என்ன என்பதுதான் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தற்போதைய குழப்பத்தின் காரணம்.

புலிகளின் பதில் தனது உயிராக இருக்குமோ என்ற அச்சம் மகிந்த ராஜபக்சவை கோடிக்கணக்கில் செலவளித்து கட்டிய பதுங்கு குழியை விட்டு வெளியேற்றி மலை நாட்டில் தஞ்சமடைய வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவலங்களையும் பின்னகர்வுகளையும் கண்டு நாம் மனங்குமுறுவது உண்மையிலும் உண்மை. புலித்தேவன்னின் கருத்துக்கள் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றது. தேசியத் தலைவரின் இராஜதந்திர நகர்வுகளை உலக இராஜதந்திரிகள் வியப்புடன் பார்க்கின்றார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலுமே ஊகித்தறிய முடியாத நிலையுள்ளது. ஆய்வுகள், விமர்சனங்கள், முன் வைக்கப்படும் கருத்துக்கள் எல்லாமே தலைவரின் நகர்வுகளுக்கு முன்னால் பொய்த்துப் போய்விடுகின்றன. வரலாற்றில் நடப்பவன் தோற்றுவிடுவான். வரலாற்றைப் படைப்பவன் வெற்றியடைவான். தலைவர் வரலாற்றைப் படைப்பவர்.

ஆயிரத்தில் ஒரு வார்த்தை அக்கா.. :rolleyes:

சர்வதேச மட்டத்திலும் ஈழத்தமிழர்களின் இராஜதந்திரக் காய்நகர்த்தல் அவசியம்

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழ் உறவு களிடம் ஒரு முக்கிய பொறுப்பை நினைவுபடுத்தியிருக் கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன்.

""ஈழத்தமிழர் தாயகத்தில் சிங்களத் தரப்பால் ஏற்படுத் தப்படும் அவலங்களை - அல்லல்களை - சர்வதேச மயப் படுத்துங்கள். அந்தந்த நாடுகளில் இராஜதந்திர மட்டத்திலான கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வாருங்கள்!'' இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உணர்வும் உயிரும் ஊட்டும் உன்னதப் பணியை உயர்வுடன் ஆற்றி வருகின்றவர்கள் நமது புலம் பெயர்ந்த உறவுகள்தாம். தாங்கள் கடும் உழைப்பால் பெறும் ஊதியத்தின் ஒரு பகுதியை விடுதலைப் போராட்டத்தின்பால் திருப்பி விடு வதன் மூலம் அந்தப் போராட்டத்துக்கு வெறுமனே நிதிப் பங்களிப்புச் செய்பவர்களாக மட்டுமன்றி, அதற்கு உயிர்ப் புக் கொடுப்பவர்களாகவும் அவர்கள் விளங்குகின்றனர்.

உலகின் எந்த நாட்டினதும் நேரடி உதவியின்றி, ஈழத் தமிழர் தாயகத்தில் ஒரு விடுதலைப் போராட்டம் முன்னெ டுக்ப்படுகின்றது. உலகின் வேறு எந்தச் சக்தியிடமும் மண்டி யிடாமல், ஈழத்தமிழர்கள் தங்களின் விடுதலைப் போராட் டத்தை சுயாதீனமாக - சுதந்திரமாக - பக்கம் சாராமல் - தாங்களே தனித்து நின்று - முன்னெடுக்கின்றார்கள் என்றால் அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

ஒன்று - தனது சொந்தக் காலில் நின்று போராடி தமிழர் களின் இறுதி அபிலாசையை - இலட்சியத்தை - வென்றெடுக்க வேண்டும் என்பதில் தளராத மன உறுதியும் திடசங் கற்பமும் கொண்ட தலைமையின் வழிநடத்தலில் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது.

அடுத்து - சர்வதேச நாடு எதிலும் தங்கியிருக்கத் தேவை யில்லை என்ற வகையில் அந்த இடத்தை முழுஅளவில் நிரப்பத் தயாரான தமிழ் உறவுகள், புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் பரந்து வாழ்ந்தபடி இப்போராட்டத்துடன் தங்களைப் பிணைத்திருப்பது.

விடுதலைப் போராட்டத்துக்கு பின்னணி வலுவூட்டல் சக்தியாக - உயிர்நாடியாக - விளங்கும் புலம்பெயர்ந்த உறவுகளுக்கு அவற்றின் பொறுப்பையும் கடமையையும் மீண்டும் ஒரு தடவை நினைவூட்டியிருக்கின்றார் சமாதானச் செய லகப் பணிப்பாளர் புலித்தேவன்.

வெறும் நிதிப்பங்களிப்புத் தருவதோடு அவர்களின் கடமை முடிந்து விடவில்லை. அதற்கு அப்பாலும் முக்கிய பொறுப்பு இருப்பதை ஞாபகப்படுத்தி உணர்வூட்டியிருக் கின்றார் அவர்.

ஈழத்தில் துவந்த யுத்தம் என்னவோ விடுதலை வேண் டும் ஈழத்தமிழர்களுக்கும் அரச ஒடுக்கு முறையில் வெறி யாக இருக்கும் சிங்கள அரசுக்கும்தான். ஆனால் இதில் சர்வ தேச ஈடுபாடும் பங்களிப்பும் தவிர்க்க முடியாத விவகாரங் களாக இழுத்து விடப்பட்டிருக்கின்றன.

ஓர் அரசு என்ற முறையில் கொழும்பு தனது வசதி, வாய்ப்பு கள், இராஜதந்திர சிறப்புரிமைகள், தேசக் கட்டமைப்பு ஒன் றுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கக் கூடிய விசேட அந் தஸ்து, அதிகாரங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி, தமிழர் களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசத்தின் முன்னிலை யில் முன்னிலையில் வெறும் குறுகிய இனவாதமாகவும், பயங் கரவாதமாகவும் பிரசாரப்படுத்தி, சித்திரித்து வருகின்றது. தமிழர் களின் விடுதலைப் போராட்டத்தின் உட்கிடையாகப் பொதிந்து கிடக்கும் தார்மீக நியாயங்களையும் அவர்களது போராட்ட வடிவத்தின் தவிர்க்க முடியாத கட்டாயத்தையும் சர்வதேசம் சரிவர அறியாத பின்னணியில், சிங்கள அரசின் பித்தலாட்டப் பிரசாரமே உலக அரங்கில் அம்பலத்தில் ஏற்கப்பட்டு வரும் துன்பியல் போக்கை நாம் காண்கின் றோம்.

தமிழ் மக்களின் தனித்துவத்தையும் இனத்துவ அடையாளத்தையும் - ஏன் இருப்பியலையும் கூட - நிர்மூலமாக்கி அழித்து, ஒழிக்கும் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக - திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் அரச ஒடுக்கு முறைக்கு எதிராக - நியாயமும், கௌர வத்துடன் கூடிய வாழ்வும், வாழ்வியல் உரிமைகளும் வேண்டி, வேறு மார்க்கம் இல்லாததால், போராட வேண்டிய கட்டத்துக்கு - கட்டாயத்துக்கு - ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டி ருக்கின்றார்கள் என்ற மெய்மை நிலை சர்வதேசத்துக்கு இன்னும் சரிவர உணர்த்தப்படவேயில்லை.

தென்னிலங்கைச் சிங்களத்தின் அரச கட்டமைப்பு இராஜ தந்திர ரீதியில் மேற்கொண்டு வரும் திட்டமிடப்பட்ட - அபத்த - பிரசாரங்கள், சர்வதேச ரீதியில் ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை மூடி மறைத்து மறக்கப் பண்ண வைத்துள்ளன.

கொழும்பில் இந்தப் பொய்ப்பிரசாரத்தை முறியடித்து உலகத்துக்கு இலங்கைத் தீவின் உண்மை நிலையை - ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை - எடுத்து ரைத்துத் தெளிவுபடுத்தும் முக்கிய பொறுப்பு வெளிநாடு களில் வசிக்கும் புலம்பெயர்ந்த நமது உறவுகளையே பெரு மளவில் சேருகின்றது. அதையே உரிமையோடு நினைவு படுத்தி, அதை மேற்கொள்ளும்படி புலம்பெயர்ந்த உறவு களைக் கோரியிருக்கின்றார் புலித்தேவன்.

அந்தந்த நாடுகளில் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங் கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அவற்றில், நமது புலம்பெயர்ந்த உறவுகளும் பெரும் எண்ணிக்கையில் பங்குபற்றியும் வருகின்றனர். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தவும் நமது தரப்பு நியாயங்களை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தவும் இத்த கைய எழுச்சி நிகழ்ச்சிகள் உதவும் என்பது வாஸ்தவம்தான்.

இதற்கு அப்பாலும் ஒரு முக்கிய பணி உண்டு. எமது விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளை சர்வதேச நாடு கள் ரீதியாக அவற்றின் இராஜதந்திர வட்டாரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அதுவாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் நடத்தப்படும் பகிரங்க பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு மேலதிகமாக மூடிய அலுவலக அறைக்குள் மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நகர்வுகளும், சந்திப்புக்களும், கலந்துரையாடல்களுமே அவை.

அதனையே தவறாது முன்னெடுக்க நமது புலம்பெயர்ந்த உறவுகளை நினைவூட்டித் தூண்டியிருக்கின்றார் புலித் தேவன்.

உதயன்

தமிழர் தாயக அவலங்களை சர்வதேச மயப்படுத்துங்கள்! புலம் பெயர்ந்தவர்களிடம் புலிகள் அமைப்புக் கோரிக்கை

தமிழர் தாயகத்தில் சிங்களத் தரப்பால் நிகழ்த்தப்படும் அவலங்களை சர்வதேச மயப்படுத்துங்கள். அந்தந்த நாடுகளில் இராஜதந்திர மட்டத்திலான கவனத்துக்கு அவற்றைக் கொண்டுவாருங்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் இந்த வேண்டு கோளை முன்வைத்தார்.

ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட் டுத்தாபன வானொலிச் சேவை தனது "செய்தி அலைகள்' நிகழ்சியில் கடந்த செவ்வா யன்று புலித்தேவனின் செவ்வியை ஒலி பரப்பியது. அந்தச் செவ்வியிலேயே புலித் தேவன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் அந்தச் செவ்வியில் கூறிய முக் கிய விடயங்கள் வருமாறு:

சிங்களத் தலைவர்கள் எமக்கு நீதியான தும் நியாயமானதுமான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை தமிழீழ விடுதலைப் புலி களுக்கு எப்போதுமே இல்லை. ஏனெனில், காலம் காலமாக சிங்களத் தரப்போடு தமி ழர் தரப்பு பல்வேறு பேச்சுகளை மேற்கொண்ட போதும் ஒருபோதுமே தமிழ் மக்களுக்கு நீதியான நியாயமான உருப்படியான தீர்வை சிங்கள தேசம் முன்வைத்தது கிடை யாது. அது இப்போதும் நடைபெற்றுக்கொண் டிருக்கிறது. ஆகையால் எமது தரப்பு நியா யத்தை எமக்கு தனித்தேசம் வேண்டும் என்பதை எமது மக்கள் படுகின்ற அல்லல் களை சிங்கள ஆட்சியாளர்களால் கட்ட விழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறவே சமாதான முன்னெடுப்புகளையும் சமாதான செயலகத்தையும் நாங்கள் பயன்படுத்தி னோம்.

காலம் காலமாக சிங்களத் தரப்பினரு டன் தமிழ்த் தரப்பினர் நடத்திய பல்வேறு பேச்சுகளில் பல படிப்பினைகளை நாங்கள் கற்றிருக்கிறோம். 50 களிலிருந்து 80கள் வரை தமிழர் தரப்பு பல்வேறு ஒப்பந்தங்களை சிங் கள அரசுகளுடன் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தங்கள் அனைத்துமே குப்பைக் கூடைக்குப் போய்விட்டன. 1987 இல் இந்திய அரசு உருவாக்கிய ஒப்பந்தத்தாலும் சிங் களத் தலைவர்களை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை.

சிங்கள அரசியலில் ஆள்கள் மட்டுமே மாறுகின்றனர்

அதன் பின்னர் 1994 95 களில் சந் திரிகாவுடன் நாங்கள் பேச்சுகள் நடத்தினோம். அதுவும் அதே நிலைதான். சிங்களத்தின் ஆட்சியில் ஆள்கள்தான் மாறினார்களே தவிர எண்ணங்கள் மாறவில்லை. தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிவிடக்கூடாது என்கின்ற எண்ணம் எப்பொழுதுமே மாறிய தில்லை.

தமிழ் மக்கள் இத்தனை அவலங்களை வெளிப்படுத்தியும் ஸ்ரீலங்காவுக்கு உரிய அழுத்தங்களை அனைத்துலகம் கொடுக் காமல் இருக்கின்றமை ஏன் என்ற கேள்வி காலம் காலமாக தமிழ் மக்களிடத்தில் உண்டு. இது தொடர்பான அனைத்துலகத்தின் செயற் பாட்டில் அதிருப்தி உள்ளது. அதேநேரத் தில் அனைத்துலகம் நூற்றுக்கு நூறுவீதம் மௌனமாகவும் இருந்துவிடவில்லை. பல் வேறு விடயங்களில் பல்வேறு அழுத்தங்களை ஸ்ரீலங்காவுக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறது. மனித உரிமைகள், மனிதாபிமான விவ காரங்களில் ஸ்ரீலங்கா அரசை அனைத்துலக நாடுகள் கண்டனம் செய்கின்றன. பல்வேறு நாடுகள் நிதியுதவியையும் நிறுத்தியிருக்கின் றன.

1990 களின் இறுதிப்பகுதியில் எமது தேசி யத் தலைவரை நோர்வேயின் எரிக் சொல் ஹெய்ம் சந்தித்த போதே எமது விடுதலைப் போராட்டமானது அனைத்துலக மயமாகிவிட் டது என்றுதான் கூற வேண்டும்.

சொல்லுக்கு முன் செயல் என்ற மரபு

விடுதலைப் புலிகளுக்கு ஒரு மரபு உள் ளது. "சொல்லுக்கு முன்பு செயல் இருக்க வேண் டும்' என்பதுதான் அது. எமது தேசியத் தலை வர் எப்பொழுதும் வலியுறுத்துவதும் அத னைத்தான். விடுதலைப் புலிகளும் அதையே விரும்புகின்றனர்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒருவிதமாக மேடையிலே கத்த லாம். ஆனால், புலிகளைப் பொறுத்தவரை சொல்வதைத்தான் செய்வார்கள். செய்வதைத் தான் சொல்வார்கள். ஸ்ரீலங்கா இராணுவம் பாரிய போர் நடவடிக்கைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் நாங்களும் (தமிழீழ விடுதலைப் புலிகளும்) பாரிய அள வுக்கு அதனை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங் களில் பாரிய வெற்றிச் செய்திகளை புலம் பெயர்வாழ் தமிழர்கள் கேட்கக் கூடியதாக இருக்கும்.

புலம்பெயர் தமிழரின் உதவியே பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றியது

மண், பாறையாகி வெடித்து, எந்தவித மான தண்ணீரும் இல்லாமல் பயிர்கள் வாடி, வதங்கிக்கொண்டு போகின்ற நிலை யில் பாரிய மழை கொட்டியதுபோல் எமது புலம்பெயர் தமிழர்கள் "ஜெயசிக்குறு' சமர் நடைபெற்ற காலப்பகுதியில் செய்த பேருதவி தான் எமது சிறார்களை போஷாக்கின்மை யிலிருந்தும் எமது மக்களை பட்டினிச் சாவி லிருந்தும் காப்பாற்றியது.

தொடர்ந்தும் தங்களாலான உதவிகளை அந்த பனிக்குளிருக்குள்ளும், பனிமழைக்குள் ளும் தமது குடும்பத்தினருடன் இணைந் திருக்கக்கூட நேரமின்றி அனைவருமே உழைத்து சம்பாதித்து அந்தப் பணத்திலிருந்து எமக்கு என்று ஒரு பகுதியை ஒதுக்குகின் றீர்கள். இது எம் மனங்களை புல்லரிக்கச் செய் கின்ற விடயம். அத்தகைய உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழர் கள் அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுடனோ, அந்தந்த நாட்டு அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், பிரமுகர் கள் ஆகியோருடனோ தொடர்புகளையும், உறவுகளையும் உருவாக்கி அதனூடே தாய கத்திலே நிகழ்கின்ற மனித அவலம், மனித உரிமை மீறல்கள், ஸ்ரீலங்கா இராணுவத் தினது அடக்கு முறைகள், பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றை அவர்களின் மேலதிக மான கவனத்துக்குக் கொண்டுசெல்ல உத விட வேண்டும். யூதர்கள் எப்படித் தங் களது மக்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அனைத் துலகத்தின் கவனத்தை ஈர்த்தார்களோ அதே போல் எங்கள் மக்களும் அத்தகைய முயற் சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இத்தகைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் முக்கியமானதாகும். உணர்வு பூர்வமாக மட்டுமன்றி அறிவுபூர்வமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இந்த விடயத்தை எடுத்துச் செல்ல வேண்டும். என்றார் புலித் தேவன். (சி)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.