Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு எதிரான மனித உரிமை அமைப்பின் அறிக்கை.

Featured Replies

சட்டவிரோதக் கொலை, காணாமற் போகச் செய்தல் போன்ற கொடூரங்களுக்கு இலங்கை அரசைக் கடுமையாகச் சாடும் மனித உரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது.

[Monday August 06 2007 06:50:03 AM GMT] [யாழ் வாணன்]

இன்று இலங்கையில் இடம்பெறும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆள்களை வல்வந்தமாகக் காணாமற்போகச் செய்தல் மற்றும் அதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அர சைப் பொறுப்பாக்கி, கடுமையாகக் குற்றம் சுமத்தும் நீண்ட அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது.

பிரபல்யம் பெற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம்(human rights watch) என்ற நிறுவனமே இந்த அறிக் கையை இன்று பகிரங்கப்படுத்தவிருக்கின்ற

Edited by வாசகன்

  • தொடங்கியவர்

Sri Lanka accused of abuses on massacre anniversary

06 Aug 2007 08:28:00 GMT

Source: Reuters

Alert Me | Print | Email this article | RSS [-] Text [+]

Background

Sri Lanka conflict

More By Simon Gardner

COLOMBO, Aug 6 (Reuters) - Sri Lanka's government is responsible for unlawful killings and disappearances, Human Rights Watch said on Monday -- the anniversary of the discovery of the massacre of 17 aid workers blamed on security forces.

Issuing a report entitled 'Return to war: Human rights under siege', the U.S.-based group said President Mahinda Rajapaksa's government is resorting to abuses to fight a new chapter in a two-decade civil war against Tamil Tiger rebels.

"The Sri Lankan government has apparently given its security forces a green light to use 'dirty war' tactics," Brad Adams, Asia director at Human Rights Watch, said in a statement.

"Abuses by the LTTE (Tigers) are no excuse for the government's campaign of killings, disappearances and forced returns of the displaced," he added. "The government has repeatedly promised to end and investigate abuses, but has shown a lack of political will to take effective steps."

About 70,000 people have been killed in the conflict between Liberation Tigers of Tamil Eelam, fighting for a separate state for minority ethnic Tamils, and security forces since 1983.

Rights groups say hundreds of people, many of them minority Tamils, have been reported abducted or disappeared this year and 1,000 more in 2006. Rebels, paramilitaries, elements of the security forces, and underworld gangs have all been blamed.

The Sri Lankan government says numbers of disappearances are overblown and many cases are fakes to discredit the administration.

The publication of the Human Rights report coincides with the commemoration of the murder of 17 local staff members of Paris-based aid group Action Contre la Faim, who were shot dead in their compound in the northeastern town of Muttur last August after they were trapped by fighting between troops and rebels.

Nordic truce monitors blamed the killings on the security forces and international observers say an inquiry into the massacre, the worst attack on aid workers since the 2003 bomb attack on the United Nations office in Baghdad, fails to meet international standards.

Action Contre La Faim are not pointing fingers, and are waiting for answers in a case that remains unsolved a year on.

"We want to know who has done this," said Loan Tran-Thanh, head of the group's Sri Lanka mission. "It's very slow, but that's normal."

"We cannot make any judgements ... because we are not the experts. We don't have enough data for us even to give an opinion," she added. "There have been so many contradictions."

The island's human rights minister demanded that journalists be barred from the commemoration ceremony.

The Tigers are also blamed for serial abuses, including killing civilians and troops with roadside bombs and forcibly recruiting people, including children, to fight in the war.

Human Rights Watch is lobbying for a United Nations human rights mission to be sent to Sri Lanka in the name of transparency and to discourage further abuses, but the government has refused.

It says western governments are bullying it on human rights and are hypocritical, citing abuses in Iraq and Afghanistan.

"I understand that they are going to commemorate ... these 17 people, but they have forgotten 35 people from the Muslim community butchered in the same place by the LTTE," said government defence spokesman Keheliya Rambukwella.

"How do these human rights work with 17 and not work for 35?" he added. "As far as the government is concerned, it is doing everything possible in relation to human rights." (Additional reporting by Ranga Sirilal in COLOMBO

http://www.alertnet.org/thenews/newsdesk/COL71168.htm

  • கருத்துக்கள உறவுகள்

கீழ்த்தரமான போர் உத்திகளை கையாள இராணுவத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள சிறிலங்கா: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்

[திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007, 13:01 ஈழம்] [ப.தயாளினி]

கீழ்த்தரமான போர் உத்திகளை கையாள தமது இராணுவத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது போல் அதன் துஸ்பிரயோகங்கள் உள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியுள்ளது.

நியூயோர்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்பு இன்று திங்கட்கிழமையன்று "இலங்கை- அரசாங்க துஸ்பிரயோகம் தீவிரமடைகிறது- தண்டனைகளிலிருநது பாதுகாப்பளிக்கும் அதிகார சூழ்நிலையில் கொலைகள்- கடத்தல்கள் மற்றும் இடப்பெயர்வுகள் அதிகரிக்கின்றன" என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பாரியளவில் போர் மீண்டும் மூண்டதிலிருந்து சட்டவிரோதக் கொலைகள், வலுக்கட்டாயமான காணமற் போதல்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பாகவுள்ளது என மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு, இன்று வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 18 மாதங்களுக்கு மேலாக அரசாங்கப்படைகளினாலான துஸ்பிரயோகங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் கண்காணிப்புக் குழுவை நியமிப்பதற்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் கரிசனை கொண்ட அரசுகளின் ஆதரவையும் கோரியுள்ளது.

பொதுமக்களை இலக்காகக் கொண்ட கொலைகள், அச்சுறுத்திப் பணம் பெறுதல் மற்றும் படைகளில் சிறுவர்களை பயன்படுத்தல் என பல தீவிரமான குற்றங்களுக்கு பொறுப்பானவர்களாக ஆயுதந் தாங்கிய தமிழ்ப் பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவற்றைக் கண்டித்துமுள்ளது.

"போரிற்கு மீளல்: முற்றுகையின் கீழ் மனித உரிமைகள்" எனும் புதிய 129 பக்க அறிக்கை, அரசாங்கப் படைகளினாலான மீறல்களின் அதிர்ச்சிகரமான அதிகரிப்பு பற்றி பாதிக்கப்பட்டவர்களினதும் மற்றும் கண்கண்ட சாட்சிகளதும் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்த மீறல்களின் விளைவுகளை தமிழ் மக்களே தாங்கிக் கொண்டனர் என இவ்வறிக்கை கூறுவதுடன், முஸ்லிம் மற்றும் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தினரைக் கூட அரசாங்க துஸ்பிரயோகங்களிலிருநது; பாதுகாபப்ளிகக்ப்பட்டிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உரிமைகள் அமைப்பின் குற்றச்சாட்டிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை- ரம்புக்வெல

சட்டவிரோத படுகொலைகளிற்கும், கடத்தல்களிற்கும் இலங்கை அரசே பொறுப்பு என நியூயோர்க்கினை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள குற்றச் சாட்டிற்கு போதுமான ஆயுதங்கள் இல்லையென இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இக்குற்ற சாட்டுகளிற்கு நம்பதகுந்த ஆதாரம் இல்லையென இவ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையையடுத்து பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சரும் கெஹெலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்..

மனித உரிமைகள் விடுத்துள்ள அறிக்கையை நான் வாசிக்கவில்லையெனினும் பொறுப்புமிக்க அரசாங்கமாக நாங்கள் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக விசாரணை நடந்ததாகவும் கண்காணிக்கவும் சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுக்குமென அமைச்சர் கெஹெலிய ஊடகவியலாளர்களிற்கு தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது..

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 07-08-2007 01:50 மணி தமிழீழம் [செந்தமிழ்]

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஆதாரங்களற்றது - ஸ்ரீலங்கா அரசு

அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கை அடிப்படை ஆதாரங்களற்றது என ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் அநாகரீகமான யுத்த நடைமுறைகளை மேற்கொள்ளவதற்கு தனது இராணுவத்தை அனுமதித்துள்ளதாக அந்த அமைப்பின் தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்

கடந்த வருடம் ஜனவரி முதல் இந்த ஆண்டின் ஜ+ன் மாதம் வரையிலான 18 மாத காலப்பகுதியில் காலப்பகுதியில் இலங்கையில் 1100 பேர் காணமல் போயுள்ளதாகவும் காணமல் போனவர்களில் பெருமளவானவர்கள் தமிழர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

ஊடக சுதந்திரம் மிக மோசமாக மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கையில் 2005ம் ஆண்டு ஓகஸ்ட மாதம் முதல் இதுவரை இலங்கையில் 11 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அரச படைகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை அடிப்படை ஆதரமற்றது என ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெஉலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் பொறுப்பற்ற விதத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அறிக்கை குறித்து அரசாங்கம் விரைவில் உத்தியோகபூர்வமான பதிலை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - பதிவு

மனித உரிமைகள் அவதானிப்பு மையம் விளக்கம்.

இலங்கை விடயம் தொடாபாக இலங்கை அரசு மீதும்,அரசுப்படைகள்மீதும்,

அரசுப்படைகளோடு சேர்ந் இயங்கும் கருணா குழு மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களைச்

சுமத்தி, நேற்றுத் தனது அறிக்கையை வெளியிட்டிருக்கும் மனித உரிமைகள் அவதானிப்பு மையம் அந்த அறிக்கையில் புலிகள் தரப்பை அதிகம் சாடவில்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றது.

"அண்மைய 'இந்த" காலகட்டத்தில் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும், கருணா

குழுவுக்கும் எதிராகவே பெரும்பாலான முறைப்பாடுகள் எமக்குக் கிடத்துள்ளன. அது ஒரு காரணம். அடுத்தது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியுடன் அல்லது பகுதியில்

எமக்குக் கிரமமான தொடர்பு இல்லாத விடயமாகும். இதன் காரணமாகப் புலிகளுக்கு

எதிரான முறைப்பாடுகள் எமக்குத் தெரியவராமல் போயிருக்கலாம்" என்று 'சுடர் ஒளி'க்கு

விளக்கமளித்தார். மனித உரிமைகள் அவதானிப்பு மையத்தின் ஆசியப் பிரிவுக்குப்

பொறுப்பான ஆய்வாளரான சாரு ஹோக் அம்மையார். லண்டனைத் தளமாகக் கொண்டு

அவர் செயற்பட்டு வருகின்றார்.

"ஊடகப் பணியாளர்கள் அரசுத் தரப்பினதும் புலிகளினதும் கடும் அழுத்தத்துக்கு

உள்ளாகியிருக்கின்றார்கள். என்று இந்த அறிக்கையில் குறிப்பட்டுள்ளீர்கள். ஊடகத்

தரப்பினர் புலிகளின் அழுத்தத்துக்கு உள்ளாகியமை தொடர்பாக உங்களுக்கு விஷேடமான குறிப்பாக புலிகள் மீது குற்றம் சுமத்துகின்ற முறைப்பாடுகள் ஏதும் அண்மைக்காலத்தில் கிடைத்திருக்கின்றனவா? என்று அவரிடம் கேட்டோம்.

"உண்மையில் அத்தகைய குறிப்பிட்டுக் கூறக்கூடிய முறைப்பாடுகள் ஏதும் ஊடகவியலாளர்

மீதான அழுத்தம் தொடர்பான விடயத்தில் புலிகளுக்கு எதிராக அண்மைக் காலத்தில்

எமக்கு கிடைக்கவில்லை. அல்லது எமது கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை என்றே

கூறவேண்டும். எனினும், இவ்விவகாரம் தொடர்பாக புலிகள்மீதுள்ள பொதுவான குற்றச்சாட்டே இந்த அறிக்கையில் பதிவு செய்யபட்டடுள்ளது என்றார் அவர்.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 08-08-2007 23:47 மணி தமிழீழம் [மயூரன்]

புலிகளுக்கு ஆதரவான அறிக்கையை அனைத்துலக கண்காணிப்பகம் வெளியிடுகிறது - ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளோ

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும், கருணா குழுவினருக்கு எதிராகவும் குற்றங்களை விமர்சித்ததோடு, விடுதலைப் புலிகளின் குற்றங்களை வெளியிட மறந்துவிட்டதாகவும் சிறீலங்கா அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணான்டோபிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் அரசாங்க திணைக்களத்தில் நடாத்தப்பட்ட ஊடாகவியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அண்மைக் காலத்தில் ஜயாயிரத்திற்குகு மேற்பட்ட சிறுவர்களை படையில் இணைந்தது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டு சிறீலங்கா அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்துலக உதவிகளை தடுத்தும் நிறுத்தும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிகைகள் கண்காணிப்பகம் ஈடுபடுவதாக ஜெயராஜ் பெர்னான்டோப்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார்.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.