Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனின்... வரலாற்று சிறப்புமிக்க, "கேம்டன் சந்தை" விற்பனைக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்த் இன்னுமொரு அரிய உதாரணம்.

ஜேம்ஸ் 6 ஸ்கொட்லாந்த் மன்னர், 1ம் ஜேம்ஸ் ஒவ் இங்கிலாந்து ஆகி இரு இராச்சியங்களும் இணைந்த பின்னும், ஸ்கொட்லாந்தில் ஒரு பாராளுமன்றம் தொடர்ந்து இயங்கியது. ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்கொட்லாந்து இப்போ இலங்கை இருப்பதை போல திவாலாகி போகும் நிலை வந்ததும், அந்த பாராளுமன்றம் தாமாகவே தம்மை கலைத்து, முழு இறையாண்மையையும் வெஸ்மினிஸ்டரிடம் கையளித்தது.

இன்று அதை மீளப்பெறுவதாயின் (ஸ்கொட்டிஷ் இண்டெபெண்டென்ஸ்) அதை எப்படி செய்வது என்ற எந்த ஒரு வழிமுறையும் எழுத்தில் இல்லை.

ஸ்கொட்லாந்தில் ஒரு கட்சி சர்வஜன வாக்கெடுப்பை தருவோம் என்று கூறி தேர்தலில் வெல்ல வேழ்ண்டும். பின்னர் அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி வெஸ்மினிஸ்டருக்கு அனுப்ப வேண்டும். 

அப்படி அனுப்பினாலும் அதை வெஸ்மினிஸ்டர் ஏற்று சட்டபடி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  கமரன் நடத்தினார். பொரிஸ் நடத்தமாட்டார் என்பது போல கூறியுள்ளார்.

இதே போல் Catalan சர்வஜன வாக்கெடுப்பை கோரிய போது, ஸ்பெயின் மறுத்தது. Catalan தானாக வைத்து, அது சட்ட விரோதமாகி - கலவரத்தில் முடிந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஆக.... ஜநா மேற்பார்வையில் குடியொப்பம் வையுங்கோ... தமிழ் மக்கள் விருப்பம் போல செய்யலாம் என்ற நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து ?

இதனையே.... தமிழகத்தில்.... சிறிய கட்சிகள் அழுத்தமாக கேட்கின்றன. பெரிய கட்சிகளும் கேட்கலாம்.

முடிவாக.... எந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கும் சுயநிர்ணய உரிமை.... உள்ளது. அதை அண்டை நாடுகள் நிராகரிக்கும் தார்மீக  உரிமை கிடையாது.

இலங்கை அரசை.... அது இருக்கும் கடன் சுமையால்.... வேறு வகையில் சிந்திக்க வைக்கவே... இந்த அறிவிப்பின் நோக்கமாக இருக்கலாம்.

இதை செய்வது என்றால் - அதைதானே கோரல் வேண்டும்? அதைவிடுத்து மீன் சந்தையில் விலை பேசுவது போல் - பேசினால் யாரும் எம்மை சீரியசாக எடுக்க மாட்டார்கள்.

அடுத்து இதை கோர வேண்டியது நாட்டில் உள்ள அரசியல் அமைபுகள். 

அடுத்து என்ன கோரப்பொகிறீகள்? வாக்கெடுப்பு - பிரிந்து போகும் தனி நாட்டுக்கா? அல்லது இணைந்த வட-கிழக்கு confederacy க்கா?

வாக்கெடுப்பு வடக்குக்கு தனியே, கிழக்குக்கு தனியாகவா?

அப்படியாயின் 1/3 தமிழர் உள்ள கிழக்கில் வாக்கெடுப்பை வெல்ல எமது உத்தி என்ன?

இலங்கை வட-கிழக்கை confederated state ஆக்கும் வாக்கெடுப்புக்குக்கு கூட உடன்படாது (எந்த கடன் பட்ட நிலையிலும்) என்பது என் கணிப்பு.

ஆனால் இதைதான் நாங்கள் கேட்கப்போகிறோம் என்றால் - மேலே உள்ள கேள்விகளின் அடிப்படையில் முதலில் எமது position என்ன என்பதை நாம் துணிய வேண்டும். 

அதன் பின் இந்த கோரிக்கை வட கிழக்கில் இருந்து எழ - அதை தமிழகமும், புலம்பெயர் அமைபுக்களும் அழுத்த வேண்டும்.

இதுதான் ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனத்தின் நகர்வாக இருக்கும்.

மாறாக இப்போ போடும் “டீல்” எமது கோரிக்கைகளை நகைபுக்குள்ளாக்கி விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்களுக்குக்கான பதிலை கீழே கடஞ்சா தந்திருக்கிறார் அதில் திருப்தி அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தலையங்கம் எப்போதும் கருத்தை கவர எழுதப்படுவதுதானே நாதம் - ஆனால் விசயம் உள்ளேதான் இருக்கும். 

முன்பே கூறி உள்ளேன் சர்வதேச சட்டம் என்பதும் மிக பெரும்பாலும் state parties ஆல் உருவாக்கப்பட்டு, அவர்களாலேயே கண்காணிக்கவும் படுவது.

ஆனால் புதிய நாட்டை எப்படி உருவாக்குவது என்பதற்கு ஒரு சர்வதேச சட்ட வரையறையும், how to do it handbook உம் இல்லை.

உதாரணமாக சோவியத் - உடைந்த போது - பல காலமாக இறையந்ண்மை அற்ற சோவியத் குடியரசுகளாக இருந்த லத்வியா போன்ற தேசங்கள் தமது இறையாண்மையை வெளிபடுத்தி - தனி நாடுகளாகின. அவற்றை தடுக்கும் வலு மொஸ்கோவுக்கு அப்போ இருக்கவில்லை, அதை தடுக்கும் எண்ணம் அமெரிக்கா உட்பட்ட ஏனைய வலுவான நாடுகளுக்கும் இருக்கவில்லை என்பதால் இது சாத்தியமாயிற்று.

ஆனால் யூகோஸ்லாவியா உடைவின் பின் யுத்தம் மூலமே குரோசியா தனி நாடாக முடிந்தது. அதன் பின், பாரம்பரியமாக சேர்பிய பகுதியாக இருந்த கொசோவோ, சேர்பியாவில் இருந்து தனியே வலுகட்டாயமாக நேட்டோவால் பிரித்து நாடாக்கப் பட்டது.

இதை போலவே தெற்கு ஒச்சேசியாவை ஜோர்ஜியாவில் இருந்து பிரித்து தனிநாடாக்கியது ரஸ்யா.

ஆனாலும் இதுவரைக்கும் கொசோவோ, சவுத் ஒசேசியாவை எல்லா நாடுகளும் ஏற்றுகொள்ளவில்லை.

ஆகவே உலகில் சர்வதேச சட்டபடி இதுவரைக்கும் தனிநாடுகள் இருவகையில்தான் உருவாகியுள்ளன

1. பெரிய நாடொன்றின் அனுசரணை + ஆயுத போராட்டம்

2. மேலே கடஞ்சா சொன்ன படி பிரியும், பிரிக்கும் நாடுகள் இடையில் உடன்படிக்கை மூலம்

நீங்கள், தமிழ்ஸ் போர் பிடன் கேட்பது போல் நாட்டை பணத்தை வாங்கி கொண்டு பிரிப்பது இதுவரையில் நடைமுறை இல்லை.

இனியும் இல்லை -காரணம் இறையாண்மை என்பது விலைக்கு விற்கும் பொருள் அல்ல (கடஞ்சா அழகாக விளக்கியுள்ளார்).

 

 

உங்களுக்கும் எனக்கும் இடையே நடந்தது... விவாதம் அல்லவே.... கருத்தாடல் மட்டுமே.

கடஞ்சா பதிவை.... நல்ல கருத்து என்று பதிவு செய்தே எனது கருத்தை பதிந்தேன்.

ஸ்கொட்லாந்து, கீயூபெக் வென்றிருந்தால்.... என்ன நடந்து இருக்கும் என்ற கேள்விக்கு..... கடஞ்சா... அழகாக.... மிகுதி அணைத்தும் சம்பிரதாய பூர்வமாக என்றே சொன்னார்.

அதே போல...கற்றலான் விடயமும்.... வெல்லும் என்பதால் தேர்தலும் இல்லை.... ஆனாலும் ஜரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

ஆக... பணத்தை வாங்கிக் கொண்டு... சுதந்திரத்தை (கெயிற்றி) இறைமையை (அலாஸ்கா)..... வாங்கிய சரித்திரம் உள்ளது.

பணத்தை வாங்காமல்.... கைமாறிய இறைமை.... கச்சதீவு.

ஜமபத்திரண்டு பில்லியன் டொலர்.... நான் முன்னரே சொன்னது போல.... மஞ்சள் பையில போட்டுக்கொண்டு போய்... நிக்கப்போவதில்லை.....

ஒரு தூண்டிலைப் போட்டுப் பார்கிறது தான் ஜடியாவாக இருக்கலாம்.

சிக்கினால்..... வருசம் ஜந்து பில்லியன் படி பத்து வருசத்துக்கு என்றும் சொல்லலாம் அல்லவா...

ஆகவே..... எதனையும் நிராகரிக்க முடியாது.

சம்பந்தப்பட்ட மக்கள்..... தமிழ் மக்கள் தனியே செல்லும் ஜனநாயக முடிவு எடுக்க சந்தர்ப்பம் கிடைத்தால்..... அதனை தவறு என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.

முக்கியமாக 1834 முன்னர் தனியாக இருந்தவர்கள் தானே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆக... பணத்தை வாங்கிக் கொண்டு... சுதந்திரத்தை (கெயிற்றி) இறைமையை (அலாஸ்கா)..... வாங்கிய சரித்திரம் உள்ளது.

இங்கேதான் வரலாற்றை தவறாக புரிந்து கொண்டு அதன்படி நடக்க முற்படுகிறீர்கள் என்கிறேன். 

கெயிற்றி யில் சுந்தந்திரம் அடிமைகள் புரட்சி மூலமே பெறப்பட்டது. அப்படி பெற்ற சுதந்திர கெயிட்டியை, அன்றைய வல்லரசான பிரான்ஸ் தொடர்ந்தும் தாக்க கூடாது என்பதற்கு, கட்டபட்ட compensation தான் இந்த பணம்.

அடிமைகள் காசை பிரான்சிடம் கொடுத்து, கெயிட்டியின் சுதந்திரத்தை வாங்கவில்லை.

ஆகவே காசை கொடுத்து சுதந்திரம் இதுவரை வாங்க படவில்லை.

அலாஸ்கா - அது இரு இரிமையுள்ள நாடுகள் ஒரு நிலத்தின் மீதான உரிமையை விற்றது. அதுதான் முன்பே கூறினேன், அலஸ்கா மட்டும் அல்ல, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோவில் இருந்து பெரும் நில பரப்புகளை அமெரிக்கா வாங்கியுள்ளது. ஆனால் இது நாடுகளுக்கு இடையானது.

ஒரு குறித்த நிலத்தின் இறைமை, ஒரு இறைமை உள்ள நாட்டில் இருந்து இன்னொரு இறைமை உள்ள நாட்டுக்கு கைமாறியது. இதை வைத்து அதே போல் ஒரு non state party க்கும் விற்கலாம் என சொல்ல முடியாது.

14 minutes ago, Nathamuni said:

முக்கியமாக 1834 முன்னர் தனியாக இருந்தவர்கள் தானே

உண்மைதான் - ஆனால் இதன் அடிப்படையில் நாம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பைதான் கோரலாம். 

அதன் முதற்படியாக இலங்கைக்கு உதவுவதாயின் எமது பிரச்சனைக்கு ஒரு தீர்வை கொடுக்க வேண்டும் என உதவும் மேற்கு நாடுகளை, அமைபுக்களை நெருக்க வேண்டும்.

அடுத்து அந்த தீர்வு (confederacy க்கான சர்வஜன வாக்கெடுப்ப்பா?, அரசியல் சட்ட மாற்றமா, தனி நாட்டுக்கான வாக்கா) என, இருப்பதில் நடைமுறை சாத்தியமானதை இனம் கண்டு, அதை கோரல் வேண்டும்.

அதன் பின் - அந்த வாக்கெடுப்பை எப்படி வெல்லுவது என்ற உத்திகளை வகுக்க வேண்டும்.

இப்படி படிமுறை, படிமுறைகாவே நகர வேண்டும். முடியும்.

இந்தா காசை பிடி, நாட்டைதா என்றால் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

இங்கேதான் வரலாற்றை தவறாக புரிந்து கொண்டு அதன்படி நடக்க முற்படுகிறீர்கள் என்கிறேன். 

கெயிற்றி யில் சுந்தந்திரம் அடிமைகள் புரட்சி மூலமே பெறப்பட்டது. அப்படி பெற்ற சுதந்திர கெயிட்டியை, அன்றைய வல்லரசான பிரான்ஸ் தொடர்ந்தும் தாக்க கூடாது என்பதற்கு, கட்டபட்ட compensation தான் இந்த பணம்.

அடிமைகள் காசை பிரான்சிடம் கொடுத்து, கெயிட்டியின் சுதந்திரத்தை வாங்கவில்லை.

ஆகவே காசை கொடுத்து சுதந்திரம் இதுவரை வாங்க படவில்லை.

அலாஸ்கா - அது இரு இரிமையுள்ள நாடுகள் ஒரு நிலத்தின் மீதான உரிமையை விற்றது. அதுதான் முன்பே கூறினேன், அலஸ்கா மட்டும் அல்ல, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோவில் இருந்து பெரும் நில பரப்புகளை அமெரிக்கா வாங்கியுள்ளது. ஆனால் இது நாடுகளுக்கு இடையானது.

ஒரு குறித்த நிலத்தின் இறைமை, ஒரு இறைமை உள்ள நாட்டில் இருந்து இன்னொரு இறைமை உள்ள நாட்டுக்கு கைமாறியது. இதை வைத்து அதே போல் ஒரு  க்கும் விற்கலாம் என சொல்ல முடியாது.

நீங்கள் வழக்கம் போல... வார்த்தைகளால் குழப்பி குழம்புகிறீர்கள்.

நான் இணைத்த, கார்டியன், வாசிங்டன் போஸ்ட் தெளிவாக சொல்கின்றனவே..... சுதந்திரம் non state party யால் காசுக்கு வாங்கப்பட்டதாக....

உலகின் முதலாவது அடிமைகள் அமைத்த சுதந்திர நாடு என்று சொல்கிறார்களே.

நான் அவர்கள் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள விளைவேன்....

மன்னிக்கவும்.... உங்கள் கருத்தையல்ல. 🙏

மலேசியாவின் மாகாணங்களில் ஒன்றாக இருந்த சிங்கப்பூர், மலேசியாவால் உதறி வீசப்பட்டது.

சிங்கப்பூர்...... பிரியும் வரை... நீங்கள் சொன்ன non state party தான் லீகுவான் யூ வின் People Action Party . அவர்கள் முதலில் செய்த வேலை.... பிரிட்டிஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து, பிரிட்டிஸ் படையினர் வெளியேறலை பத்து வருடத்துக்கு தள்ளிப் போட வைத்தமை.

படிபடியாக.... அரச... அலுகுகளை கட்டி எழுப்பினர்.

உலகிலே... சிங்கப்பூர் மட்டுமே, மலேசியாவால் வேண்டாம் என... தனியே போரிலாமல் பிரிந்த நாடு.

ஆகவே.... பல முன் உதாரணங்கள் உள்ளன.

இப்படி தான் இருக்கவேண்டும் என்று இல்லை.... என்று சொல்ல வருகிறேன்.

நாடுகள்.... தமது வசதி... சந்தர்ப்பம்.... அப்போதுள்ள அரசியல் சூழல் காரணமாக முடிவுகளை எடுப்பர்.

அது போலவே இனிவரும் காலங்களிலும் நடக்கும், வித்தியாசம் இராது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்த திரியில் பல புதிய விடயங்களை அறிந்தேன். இனி... நிறுத்தலாம் என்று நிணைக்கிறேன். 👍

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

நீங்கள் வழக்கம் போல... வார்த்தைகளால் குழப்பி குழம்புகிறீர்கள்.

நான் இணைத்த, கார்டியன், வாசிங்டன் போஸ்ட் தெளிவாக சொல்கின்றனவே..... சுதந்திரம் non state party யால் காசுக்கு வாங்கப்பட்டதாக....

உலகின் முதலாவது அடிமைகள் அமைத்த சுதந்திர நாடு என்று சொல்கிறார்களே.

நான் அவர்கள் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள விளைவேன்....

மன்னிக்கவும்.... உங்கள் கருத்தையல்ல. 🙏

மலேசியாவின் மாகாணங்களில் ஒன்றாக இருந்த சிங்கப்பூர், மலேசியாவால் உதறி வீசப்பட்டது.

சிங்கப்பூர்...... பிரியும் வரை... நீங்கள் சொன்ன non state party தான் லீகுவான் யூ வின் People Action Party . அவர்கள் முதலில் செய்த வேலை.... பிரிட்டிஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து, பிரிட்டிஸ் படையினர் வெளியேறலை பத்து வருடத்துக்கு தள்ளிப் போட வைத்தமை.

படிபடியாக.... அரச... அலுகுகளை கட்டி எழுப்பினர்.

உலகிலே... சிங்கப்பூர் மட்டுமே, மலேசியாவால் வேண்டாம் என... தனியே போரிலாமல் பிரிந்த நாடு.

ஆகவே.... பல முன் உதாரணங்கள் உள்ளன.

இப்படி தான் இருக்கவேண்டும் என்று இல்லை.... என்று சொல்ல வருகிறேன்.

நாடுகள்.... தமது வசதி... சந்தர்ப்பம்.... அப்போதுள்ள அரசியல் சூழல் காரணமாக முடிவுகளை எடுப்பர்.

அது போலவே இனிவரும் காலங்களிலும் நடக்கும், வித்தியாசம் இராது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்த திரியில் பல புதிய விடயங்களை அறிந்தேன். இனி... நிறுத்தலாம் என்று நிணைக்கிறேன். 👍

 

நிச்சயமாக வார்த்தைகளால் குழப்பவில்லை.

ஹெயொட்டி, உட்பட எந்த உதாரணமும் டயஸ்போராவிடமோ அல்லது வேறு எந்த non state party யிடமோ காசை வாங்கி கொண்டு சுதந்திரத்தை கொடுத்த உதாரணங்கள் அல்ல.

ஹெயிட்டில்யில் அடிமைகள் ஒரு அரசை புரட்சி மூலம் போராடி ஸ்த்தாபித்து விட்டார்கள். அதை பிரான்ஸ் விற்கவில்லை.

பணம் கொடுக்கபட்டது அடிமைகளை இழந்த நிலபுரபுகளுக்கி நட்ட ஈடாக.

அதே போல் - மலேசியா ஒரு சுயாட்சி அலகாக இருந்த சிங்கபூரை மலேசிய கூட்டரசில் இருந்து வெளியேற்றியது. இங்கேயும் பணம் கைமாறவில்லை.

ஆனால் உங்களுடன் கதைக்கும் போது அநேகமாக இப்படி வந்து முடிவது உண்மைதான் - காரணம் நீங்கள் சிலதை மேலோட்டமாக பார்ப்பதால் என நினைக்கிறேன். 

நீங்களே சில தடவைசொல்லி உள்ளீர்கள் “ஒரு சாமனியன் விளங்கி கொள்வதை போல” விளங்கிகொள்கிறேன் என்று. 

அது தப்பில்லை - ஆனால் ஆங்கிலத்தில் சொல்வது போல the devil is always in the detail. 
 

ஆகவே இதை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். நேரத்துக்கு நன்றி.

நான் முன்பே சொன்னது போல இந்த டீல் ஒரு தேவையில்லாத distraction. இப்போ பணகஸ்டத்தில் இருக்கும் இலங்கையை, தந்திரமாக இணைந்த வட-கிழக்கு, federal, confederal நோக்கி தள்ளுவதே செய்ய கூடியது. அதை செய்யவே தெற்கில் பலத்த எதிர்ப்பு வரும்.

ஒரு autonomous வடகிழக்கை உருவாக்கி, கால ஓட்டத்தில், ஒரு சந்ததி கழிய பிரிந்து போகும் அரசியலை, அன்றைய உலக நிலமைபடி முன்னெடுக்கலாம்.

மாறாக இப்படி டீல் போடுவது, இனவாதிகள், இந்தியா, யூஎஸ், சைனா, ரஸ்யா என எல்லாரையும் விழிப்படைய செய்து மீண்டும் எம்மை எதிக்க வைக்கும்.

கடைசியாக,

இந்த டீலை யாரும் சீண்ட போவதில்லை. This will come to nothing. No one will even take any person making  such an offer seriously என்பது என் கருத்து.

சிலவேளை சில சிங்கள அரசியல்வாதிகள் புலி பூச்சாண்டி காட்ட இதற்கு எதிர்வினையாற்றலாம்.

நாங்கள் இருவரும் இங்கே தான் இருப்போம், இந்த ஸோலின் படி இலங்கை வட-கிழக்கை விற்று விட்டால் - உங்களிடம் பிழையாக வாதடினேன் என மன்னிப்பு கேட்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

ஆனால் அப்படி ஒரு நிலை வராது என்பதில் எனக்கு 100% நம்பிக்கை உண்டு.

நான் பொதுவாக எதிர்வுகூறல் செய்பவன் அல்ல, ஆனால் இங்கே ஒரு விதிவிலக்காக இதை சொல்கிறேன்.

🙏🏾

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.