Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ பதிவிடும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ பதிவிடும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி

பட மூலாதாரம்,NASA

சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்த ஐரோப்பிய விண்வெளி வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், இனி வரும் வரலாற்று பக்கங்களில் அவரை மற்றொரு காரணத்திற்காகவும் அறியலாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station) இருந்துக்கொண்டு, டிக்டாக் செயலியில் வீடியோக்களை உருவாக்கும் முதல் நபர் இவர்தான்.

சமூக ஊடகங்களில் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி இப்போது பிரபலமாகிவிட்டார். அவருடைய வீடியோக்கள் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கொண்டிருக்கின்றன.

இத்தாலியின் முதல் விண்வெளி வீராங்கனையான இவர், தனது இரண்டாவது விண்வெளி பயணத்தின் மூலம் டிக்டாக் செயலி சென்றடையக்கூடிய உச்சப்பட்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

கிறிஸ்டோஃபோரெட்டி (Samantha Cristoforetti) முதன்முதலில் 2014ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். அங்குள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 199 நாட்கள் செலவழித்தார். அன்றைய தேதியில், விண்வெளியில் மிக நீண்ட நாட்கள் இருந்த பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்த சாதனையை, 2017இல் பெக்கி விட்சன் என்பவரும், 2019இல் கிறிஸ்டினா கோச் என்பவரும் முறியடித்தனர்.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீராங்கனையான இவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்வெளியில் இருந்து திரும்பினார். அப்போது முதல், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

'தி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி கேலக்ஸி' (The Hitchhiker's Guide to the Galaxy) என்ற அறிவியல் புனைகதை தொடரின் ஆசிரியரான டக்ளஸ் ஆடம்ஸின் நினைவாக அவர் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட வீடியோ, டிக் டாக்கில் 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது.

மற்றொரு வீடியோவில், எடையின்மையின்போது ஈரமான ஒரு துண்டு எப்படி இருக்கிறது என்று கிறிஸ்டோஃபோரெட்டி பார்வையாளர்களுக்கு காட்டுகிறார். அதில் ஹிட்ச்ஹைக்கர்ஸ் தொடரின் இடம்பெற்ற பிரபல வசனத்தையும் பகிர்ந்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதுப்போன்ற நகைச்சுவைகளை கிறிஸ்டோஃபோரெட்டி அவர் முதன் முதலில் விண்வெளி சென்றது முதலே பகிர்ந்து வருகிறார். அவருடைய முதல் பணி, நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா விண்வெளிக் குழு மேற்கொண்ட 42வது பயணமாகும். அது குறித்து, அவர் ஓர் அதிகாரபூர்வமான போஸ்டர் வெளியிட்டது அனைவரையும் ஈர்த்தது.

விண்வெளி எனும் பிரமாண்டம்

கிறிஸ்டோஃபோரெட்டி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின், மினெர்வா திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்த திட்டத்திற்கு, 'விண்வெளியில் மனிதர்கள் பயணம் செய்வதை சாத்தியமாக்கிய உலகெங்கிலும் உள்ள ஆண்கள், பெண்களில் பங்களிப்பை' கௌரவிக்கும் வகையில், அறிவு, கலைகளின் ரோமானிய தெய்வத்தின் பெயரான மினெர்வா பெயரிடப்பட்டது.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பெஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்ற நான்கு பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவர். ஸ்பெஸ்எக்ஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் நான்காம் குழு இவர்களுடையது.

அவர் பதிவிட்ட மற்றொரு டிக்டாக் வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல, விண்கலம் செலுத்தப்படுவது முதல் அங்கு எவ்வாறு அவர்கள் வாழ்கின்றனர் என்பது வரை வெளியிட்டிருந்தார். இது 1.2 மில்லியன் பார்வையாளர்கள் கண்டனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இத்தகைய அசத்தலான வீடியோக்களை அவர் பதிவிடாதப்போது, கிறிஸ்டோஃபோரெட்டி பராமரிப்பிலும் அறிவியல் ஆராய்ச்சியிலும் 12 மணிநேரம் வேலை செய்து வருகிறார்.

நுண்ணிய புவிஈர்ப்பு விசையுள்ள சூழலில், சினைப்பை அணுக்கள் எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துக்கொள்வது அவருடைய திட்டங்களில் ஒன்று. இது ஆரம்ப நிலையில் இருந்தாலும், பூமியில் வாழும் மக்களுக்கு இந்த ஆராய்ச்சி பலனளிக்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

"உயிரியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், இந்த செயல்பாட்டை மேம்படுத்த குறிப்பிடத்தக்க மருத்துகளும், மருத்துவ வசதிகளும் உருவாக்க ஒரு சாத்தியமான வழி கிடைக்கும்," என்கிறார்.

இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நம் வாழ்வுக்கு பங்களிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், அதை மேம்படுத்துவதுமாகும். அதாவது, விண்வெளி சூழலில் மனிதர்களை உயிருடன் வைத்திருப்பதற்கான வழிகளை கண்டறிவது.

இருபது ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி நிலையம் நன்றாக இயங்குவதற்கான சாதனங்களைக் கொண்டுள்ள பெருமை எங்களிடம் உள்ளது. ஆனால், இதுபோன்ற சாதனங்களின் அடுத்த பதிப்புகளை உருவாக்கும் உந்துதலும் உள்ளது. அவை மிகவும் சரியாகவும், திறன் கொண்டவையாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். குறைந்த பராமரிப்பில் இயங்குவதாகவும் அவை இருக்க வேண்டும்,"

அவர் கட்டாயம் உடற்பயிற்சி செய்வதும் பணிநேரங்களில் அடங்கும். ஏனென்றால், விண்வெளியில் நீண்ட காலம் தங்கி இருப்பது விண்வெளி வீரர்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். எலும்புகளை இழக்க செய்யும் நிலைக்கும்கூட அவர்கள் தள்ளப்படுவார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

கிறிஸ்டோஃபோரெட்டி இதனை டிக்டாக் வீடியோவிலும் சொல்லியிருக்கிறார்.

அடுத்த தலைமுறை குறித்த சிந்தனை

அடுத்த பத்தாண்டுகளில் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் பலரும் பயணிப்பார்கள் என்று கிறிஸ்டோஃபோரெட்டி நம்புகிறார்.

""குறைந்த பூமி-சுற்றுப்பாதை இலக்குகளுக்கு அப்பால், குறிப்பாக சந்திரனின் மேற்பரப்பு போன்ற சிறிய விண்வெளி இடங்களை குறிவைத்து விண்வெளி முகமைகள் இயங்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

ஆனால், பூமியின் எல்லைக்குள் விண்வெளியில் ஆர்வமுள்ள வீரர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறுகிறார் கிறிஸ்டோஃபோரெட்டி.

விண்வெளி வீரராக ஆவதற்கு நல்வாய்ப்பு அதிகம் தேவை என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அனைத்து விண்வெளி வீரர்களும் இத்தகைய வாய்ப்புக்கு நன்றியுணர்வு உடையவர்களாகவும், அந்த வாய்ப்பின் மதிப்பை அறிந்தவர்களாகவும் இருப்பதாக அவர் நம்புகிறார்.

சமீபத்தில், விண்வெளி வீரர்களுக்கான புதிய வகுப்பு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடந்த கலந்தாய்வின் போது, "விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் முடிந்தவரை பன்முகத்தன்மை இருப்பதை உறுதிசெய்ய இளம் பெண்களை சேர்ப்பதில் உண்மையான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

"இது பெண்களுக்கு எந்த வகையிலும் எதிரான சூழலாக இருக்கும் என்று நான் கூற மாட்டேன். அதனால், சரியான பாதையை தேர்ந்தெடுப்பதும், அதை பாதையில் நீங்கள் படிப்பது முன்னேறுவதும்தான் நீங்கள் செய்யவேண்டியது," என்று கிறிஸ்டோஃபோரெட்டி மேலும் கூறுகிறார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற படிப்புகளை படிப்பது உண்மையில் இதற்கு உதவும். ஏன்? மருத்துவம் கூட படிக்கலாம். அதன் பிறகு, இந்த துறைக்குள் நுழையும் வழியை தேடலாம்," என்கிறார்.

 

தனது சக ஊழியருடன் யோகா பயிற்சி செய்யும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி

பட மூலாதாரம்,COSMIC KIDS

 

படக்குறிப்பு,

தனது சக ஊழியருடன் யோகா பயிற்சி செய்யும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி

மேலும், விண்வெளியில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு, விண்வெளியில் கூடுதலாக செய்யக்கூடிய ஓர் உடற்பயிற்சி சவாலையும் கிறிஸ்டோஃபோரெட்டி முன்வைக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில், இந்த விண்வெளி வீராங்கனை யோகா பயிற்சி மேற்கொள்வார். இதனை பூமியில் இருக்கும் குழந்தைகள் பார்க்கலாம். பங்கேற்றவும் செய்யலாம்.

https://www.bbc.com/tamil/science-61777664

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.