Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது-முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது-முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன்

இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது என முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் தெரிவித்துள்ளார்

திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தூதுவர் கே.பி பேபியன் 1964 முதல் 2000 ஆண்டுவரை இந்திய வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர்இஅக்காலப்பகுதியில இவர் மடகாஸ்கர் இலங்கை அவுஸ்திரியா கனடா உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ளார்இதனது இராஜதந்திர சேவையின் போது  மூன்று வருடங்கள் ஈரானில் பணியாற்றிய இவர் ஈரான் புரட்சியை நேரடியாக பார்த்தார்இவளைகுடாவிற்கான இணை செயலாளராக பணியாற்றியவேளை 1990-91 இல் ஈராக்கிலிருந்து 176இ000 இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை முன்னெடுத்தார்.

என்ற   Commonsense on the War on Iraq and Diplomacy: Indian Styleஇரு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்

fabian.jpg

 நேர்காணல்  ஏ .யதீந்திரா

1

கேள்வி- ஜேஆர்ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் அணிசேரா அமைப்பிலிருந்து நடுநிலை வெளிவிவகார கொள்கையை நோக்கி சென்ற காலப்பகுதியில் நீங்கள் இலங்கைக்கான பிரதி தூதுவராக பணியாற்றினீர்கள்இஅமெரிக்க பாக்கிஸ்தான் இஸ்ரேல் ஆகியநாடுகளுடன் ஜே.ஆர் குழுவினரின் நெருக்கம்  பனிப்போர் சூழ்நிலையில் இந்தியாவிற்கு ஆபத்தான  நிலையை ஏற்படுத்தியது.

அக்காலத்தின் இராஜதந்திரி என்ற அடிப்படையில் இலங்கையில் உங்களின் மறக்க முடியாத நினைவுகள் என்ன?

கேள்வி-1979 முதல் 1982 வரை நான் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றினேன்இவோசிங்டன் திருகோணமலைக்கு அருகில் தளமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளி;ல் ஈடுபட்டிருந்ததுஇகொழும்பிற்கு அருகில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா தனது நிலையத்தை ஏற்படுத்தியது. இந்தியாஇரண்டு திட்டங்களையும் எதிர்த்தது.

திருகோணமலை குறித்து எந்த நலன்களும் இல்லை என அமெரிக்க தூதுவர் நிராகரித்தமையும் நான் திருகோணமலை உட்பட இலங்கையில்  பென்டகன் கோரியிருந்த தளங்களின் பட்டியலை அவருக்கு காண்பித்தமையும் எனக்கு நினைவில் உள்ளது.

தளவசதி வழங்கப்படவில்லைஇவொய்ஸ் ஓவ் அமெரிக்க நிலையம் உருவாக்கப்பட்டதுஇஆனால் சிறிது காலத்தின் பின்னர் அது மூடப்பட்டது.

2

இலங்கை தற்போது நெருக்கடியில் சிக்குண்டுள்ளதுஇஅரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும். அதேவேளை ராஜபக்ச வம்சாவளி பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளதுஇ2020 இல் வழங்கிய செவ்வியொன்றில் நீங்கள் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் ஆட்சியிலிருக்கும் வரை இந்தியாவுடன் சிறந்த இருதரப்பு உறவுகளை எதிர்பார்க்க முடியாது என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்இ இதனை ஏன் திட்டவட்டமாக குறிப்பிட்டீர்கள் இதன் பின்னணியில் உள்ள கதை என்ன?

பதில்-

இலங்கை மக்கள் சகோதரர்களிற்கு வாக்களித்தார்கள் அதன் மூலம் ஜனநாயகத்திற்கு பொருந்தாத சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள்.

ராஜபக்ச அமைச்சரவை சீனாவிற்கு மிகவும் நெருக்கமாக தீர்மானித்தது. இதன் காரணமாகவே நான் இந்த முடிவிற்கு வந்தேன்.

ஜனாதிபதி ராஜபக்சவிற்கு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானதும் பின்வரும் விடயங்களை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன என நான் கருதுகின்றேன்- தேசத்திற்கு உரையாற்றுவதுஇ மன்னிப்பை கோருவதுஇநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் நாட்டின் தலைசிறந்த நபர்களையும் உள்ளடக்கிய தேசிய ஐக்கிய அரசாங்கம் குறித்த தனது முடிவை அறிவிப்பதுஇபொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரை அவர்களில் ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்.

ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவர் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தமாட்டார்இபொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டதும்இஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் இடம்பெறும் அவர் அதில் போட்டியிடமாட்டார்.

கேள்வி

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் திறமை  சிங்கள அரசியல் உயர் குழாமிடம் இல்லாததால் இந்தியா நேரடியாக தலையிடக்கூடிய நிலையில் இருந்தது என்பதை வரலாறு காண்பிக்கின்றதுஇஇந்தியாவின் ஈடுபாடு இன்றி தமிழ் மக்களிற்கு அர்த்தபூர்வமான அரசியல் தீர்வை காணமுடியாது என்ற நிலைமையே காணப்படுகின்றது. 13திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தலையிடவேண்டும் என கோரி ஆறு தமிழ் கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனஇஆனால் இந்தியாவின் அழுத்தங்கள் வெறும் வார்த்தையளவிலேயே உள்ளன என்ற கவலை தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது ஈழத்தமிழர்களின் தீர்க்கப்படாத அரசியல் விவகாரம் இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்- இந்தியா தமிழர்விவகாரம் தொடர்பில் தலையிடலாம் ஆனால் அது அவ்வாறான தலையீட்டினை சிங்கள பெரும்பான்மையினர் எதிர்க்கும் விதத்தில் அமையக்கூடாது.

தற்போதைய இந்திய அரசாங்கத்திடம் அதற்கான இராஜதந்திர திறமைகள் உள்ளதா என்பது எனக்கு தெரியாது ஆகவே நான் இந்தியா தலையிடவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கமாட்டேன்.

கேள்வி – யுத்தத்திற்கு பின்னரா சூழமைவில் தமிழ் மக்களின் அரசியல் அதிகளவிற்கு மனித உரிமை அழுத்தங்கள் ஊடாகவே புரிந்துகொள்ளப்படுகின்றது இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டிருப்பது போல தோன்றுகின்றது 2012 இல் அமெரிக்கா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்றிற்கு அழுத்தம் கொடுத்ததுஇஇந்தோ பசுபிக் மூலோபாயத்திலும் குவாட்டிலும் இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய சகா இவ்வாறான சூழமைவில் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை விவகாரத்தில் ஒன்றுபடுவதற்கான வாய்ப்புள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்- ஆம். ஆனால் இதற்கான முயற்சிகளில் புதுடில்லியும் வோசிங்டனும் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்து எனக்கு தெரியாது.அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பல வேறு விவகாரங்கள் உள்ளன

கேள்வி

கேள்வி – சீனா என்பது இலங்கையில் திகைக்கவைத்த ஒரு விடயமாக காணப்பட்டது ஆனால் தற்போதுஇப்போது அதற்கு சிறிது இடமில்லை போல தோன்றுகின்றதுஇஆனால் சீன நிர்வாகிகள் இலங்கை மீதான தங்களின் ஆர்வம் முற்றிலும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டது என வாதிடுகின்றனர்இ இலங்கையில் சீனா குறித்த உங்களின் அவதானிப்பு என்ன?

பதில்

சீனாவின் திட்டங்கள் ஒரளவிற்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளனஇஇலங்கைக்கு உதவுவதற்கு சீனா விரைந்து செல்லாதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தினால் பாரிய பொருளாதார நெருக்கடிகளை இலங்கை மாத்திரம் எதிர்கொள்ளாதது இதற்கான காரணமாகயிருக்கலாம்இசீனா முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது குறித்து எச்சரிக்கையாக உள்ளது.பாக்கிஸ்தான் எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு கூட அந்த நாட்டிற்கு சீனா உதவிவழங்கவில்லை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்வோம்.

கேள்வி - சீனா குறித்து சிந்திக்கும் விதத்தில் கச்சதீவும் அடிக்கடி அரசியல் அரங்கில் இடம்பெறுகின்றதுஇசமீபத்தில் பா.ஜ.க தலைவர் யாழ்ப்பாணத்தில் இந்தியா கச்சதீவை ஆகக்குறைந்தது குத்தகை அடிப்படையிலாவது மீளப்பெறும் என தெரிவித்துள்ளார்.இதேவேளை தமிழ்நாட்டின் திராவிட கட்சிகள் கச்சதீவை மீளப்பெறவேண்டும் என தெரிவிக்கின்றனஇநாங்கள் இதனை எவ்வாறு புரிந்துகொள்வது ?இந்த விவகாரத்தை கையாளவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படுமா?

பதில்- கச்சதீவு விவகாரத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி நீதிமன்றத்தில் வாதடியவேளை நான் உதவி செயலாளராகயிருந்தேன்.

நான் புதுடில்லி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்கவில்லை.

முடிவில் இ அரசியல் ஸ்திரதன்மை இல்லாததால் இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை மிகவும் ஆபத்தானது என நான் கருதுகின்றேன்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் வெறுக்கின்றனர்.

பி5இஜி-20இசர்வதேசநாணயநிதியம் உலக வங்கி போன்றவற்றை உள்ளடக்கி இலங்கையின் பொருளாதாரமீட்சிக்கான திட்டமொன்றை உருவாக்குவதற்கான  சர்வதேச மாநாடு ஒன்றை இந்தியா கூட்டியிருக்கவேண்டும் என நான் கருதுகின்றேன்.

சர்வதேச நாணயநிதியத்தின் உதவி  அரச செலவீனங்களை குறைக்கவேண்டும்உணவு எரிபொருள் ஏனைய அத்தியாவசிய பொருட்களிற்கான மானியங்களை குறைக்கவேண்டும்  போன்ற ஆபத்தான கட்டமைப்பு மாற்றங்களுடன் வருகின்றது .

இலங்கை மக்கள் இவ்வாறு துன்பத்தில் சிக்குண்டுள்ளமை இந்தியாவில் எங்களி;ற்கு கவலையளிக்கின்றது.

 

https://www.virakesari.lk/article/131031

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.