Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா... தனது படைகளை, இலங்கைக்கு அனுப்புவதாக... வெளியான செய்திகள் குறித்து  விளக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக வெளியான செய்திகள் குறித்து இந்தியா விளக்கம்!

இந்தியா... தனது படைகளை, இலங்கைக்கு அனுப்புவதாக... வெளியான செய்திகள் குறித்து  விளக்கம்!

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பகுதியில் தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்று கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையும் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்ரமணிய சுவாமி எல்லாவற்றையும் கவிழ்த்துக் கொட்டிவிடுவார் என்று இந்தியா அவசரப்படுகிறது...🤣

 

Media Center 

Statement by High Commission of India

High Commission of India

Colombo

***

Statement by High Commission of India

The High Commission would like to categorically deny speculative reports in sections of media and social media about India sending her troops to Sri Lanka. These reports and such views are also not in keeping with the position of the Government of India.  

  1.     The Spokesperson of Ministry of External Affairs of India clearly stated yesterday that India stands with the people of Sri Lanka as they seek to realize their aspirations for prosperity and progress through democratic means and values, established institutions and constitutional framework.

***

Colombo

11 July 2022

Statement by High Commission of India PR 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பிமல் ரத்நாயக்க சுப்ரமணியன் சுவாமியின் டுவிட்டுக்கு கேலியாகப் பதில்

(நா.தனுஜா)

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் சுயாதீனமாக நடாத்தப்பட்ட தேர்தலொன்றில் அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்களாவர். எனவே தற்போது ராஜபக்ஷாக்களுக்கு இந்தியாவின் இராணுவ உதவி தேவைப்படுமேயானால், தாம் அதனை வழங்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, அவ்வாறு அனுப்பிவைக்கப்படும் குழு ராஜபக்ஷாக்களை இந்தியாவிற்கு அழைத்துச்செல்வதற்கு வருவார்களேயானால், அதற்குரிய செலவுகளைச் செலுத்துவதற்கு இலங்கை மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றும், ஆனால் அதன்பின்னர் இந்தியாவின் நிதிநிலைவரம் குறித்துக் கவனமாக இருக்கவேண்டும் என்றும் எள்ளிநகையாடல் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டகால நண்பரான சுப்ரமணியன் ஸ்வாமி, கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் ஆதரவாகக் கருத்து வெளியிட்டுவந்தவர்களில் ஒருவராவார். அந்தவகையில் இலங்கையில் தற்போதைய நிலைவரம் குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

'கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் சுயாதீனமாக நடாத்தப்பட்ட தேர்தலொன்றில் அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்களாவர். எனவே அத்தகைய சட்டபூர்வ தேர்தலின் மூலமான தீர்மானத்தைப் புறக்கணிப்பதற்கு இந்தியா எவ்வாறு இடமளிக்கமுடியும்? அவ்வாறெனில் எமக்கு அண்மையிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்கமுடியாது. எனவே ராஜபக்ஷாக்களுக்கு இந்தியாவின் இராணுவ உதவி தேவைப்படுமேயானால், நாம் அதனை வழங்கவேண்டும்' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுப்ரமணியன் ஸ்வாமியின் இக்கருத்து தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டுவிட்டர் பயனாளர்கள் பலர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருப்பதுடன், அவரது கருத்திற்கு தமது அதிருப்தியையும் வெளிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக மக்கள் விடுதலை முன்னிணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக சுப்ரமணியன் ஸ்வாமிக்கு வழங்கியிருக்கும் பதில் பலராலும் பகிரப்பட்டுவருகின்றது. அப்பதிவில் பிமல் ரத்நாயக்க கூறியிருப்பதாவது:

'ராஜபக்ஷாக்களை மீட்பதற்கு இந்தியாவிலிருந்து வருகைதரவிருக்கும் குழுவை வரவேற்பதற்கு இலங்கை மக்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். அவர்கள் ராஜபக்ஷாக்களை இந்தியாவிற்கு அழைத்துச்செல்வதற்கு வருவார்களேயானால், அதற்குரிய செலவுகளைச் செலுத்துவதற்கு எமது மக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அதன்பின்னர் இந்தியாவின் நிதிநிலைவரம் குறித்து நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்' என்று எள்ளிநகையாடல் தொனியில் தெரிவித்துள்ளார். 

பிமல் ரத்நாயக்க சுப்ரமணியன் சுவாமியின் டுவிட்டுக்கு கேலியாகப் பதில் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் ஒருவர்... இந்தியா, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புமானால்,
சாரம் கட்டிய பெடியளிடம்...  முன்பு அடி வாங்கிய மாதிரி,
மீண்டும் அடி வாங்க வேண்டி வரும் என்று பதிவிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.