Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் MBBS

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் எம்.பி.பி.எஸ்.,! ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது மருத்துவ சொற்களை மொழிபெயர்க்கும் பணி தீவிரம் நமது சிறப்பு நிருபர்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

மருத்துவச் சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை உருவாக்குவது, மருத்துவ படிப் பிற்கான பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தல் ஆகிய பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற முடியும். தமிழ் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் தமிழில் மருத்துவ படிப்பு என்ற கோரிக்கை குறித்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் கூறியதாவது: மருத்துவ தமிழ் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், டாக்டர் சுதா சேஷையன் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் முதலில் ஒவ்வொரு மருத்துவச் சொல்லுக்கும் உரிய தமிழ் சொற்களை கண்டறிந்து, சொல் அகராதியை உருவாக்குவது என திட்டமிடப்பட்டது.

இரண்டாவது கூட்டம் தமிழ் இணைய பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் நான், உடற்கூறு இயல் டாக்டர் சுதா சேஷையன், குழந்தைகள் நல டாக்டர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அடிப்படை மருத்துவத் துறைகளான உயிர் வேதியியல், உடல் இயங்கியல், உடற்கூறு இயல் ஆகிய பாடங்களுக்கான புத்தகங் களை தமிழில் மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடங்கள் தான் எம்.பி.பி. எஸ்., படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உரியவை. உடற்கூறு இயல் துறைக்கான பாடப் புத்தகம் சுதா சேஷையன் தலைமையிலான குழுவினரால் மொழி பெயர்க்கப்படும். மற்ற இரண்டு துறைகளுக்கான புத்தகங்களை மொழிபெயர்க்கும் குழுவிற்கான அறிஞர்களை தேடி வருகிறோம். இம்முயற்சிக்கு தமிழ் இணைய பல்கலைக் கழகம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. மருத்துவ தமிழை உருவாக்கும் திட்டத்திற்கு தமிழ் இணைய பல்கலைக் கழகம் 50 சதவீத நிதியுதவி வழங்குகிறது. மீதித் தொகைக்கு தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் பல்கலைக் கழகம் ஆகியவற்றிலிருந்து உதவி கோரப்படும்.

மருத்துவத்தில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இத்துறைகள் அனைத்திற்கும் உரிய பாடப் புத்தகங்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஏழு ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு, இந்த புத்தகங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அதன்பிறகே தமிழில் மருத்துவம் படிக்க முடியும். முழு முயற்சியுடனும், முழு மனதுடனும் செயல்பட்டால், இன்னும் பத்து ஆண்டுகளில் மாணவர்கள் தமிழில் எம்.பி.பி.எஸ்., படிப்பை படிக்க முடியும்.

தற்போதுள்ள மருத்துவக் கல்வி பேராசிரியர்கள் மூலமாகவே தமிழ் மொழியில் மருத்துவப் படிப்பை கற்பிக்க முடியும். டாக்டர்கள் ஆங்கிலத்தில் மருத்துவம் படித்தாலும், தமிழில் தான் நோயாளிகளுடன் உரையாடி சிகிச்சை அளிக்கின்றனர். தற்போதுள்ள மருத்துவ பேராசிரியர் களுக்கு தமிழில் மருத்துவப் படிப் பை சொல்லித் தருவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண் டும். இங்கு உருவாக்கப்படும் தமிழ் மொழியிலான மருத்துவ பாடப் புத்தகங்களையும், தமிழ் மருத்துவச் சொற்களையும் உலகளவில் ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும். இதற்கு தமிழில் மருத்துவ அறிவியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அப்போது தான், மருத்துவத் தமிழ் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு மீர்முஸ்தபா உசேன் கூறினார்.

.

Thanks to Dinamalar

News by SNS news service.............

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

இந்தப் பரீட்சார்த்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.. தமிழில் படித்து பட்டம் பெறும் மருத்துவர்கள் தகுதியிலும், தரத்திலும் ஆங்கிலத்தில் படித்து பட்டம் பெறும் மருத்துவர்களுடன் எதிர்காலத்தில் ஒப்பீடு செய்யப்பட்டு புறக்கணிக்கப்படாதவரை பிரச்சனை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தூய கலைச்சொற்களை உருவாக்கி செயற்படுத்துவார்களாக இருந்தால் அதைப் பாராட்டலாம். அதில்லாமல் தமிழிங்கிலிசாக அறிமுகப்படுத்தினால் இத்திட்டம் தோல்வியைத் தான் தழுவும்.

இருந்தாலும் இந்த எண்ணப்பாட்டிற்கு வாழ்த்துக்கள். அடித்தளத்தை ஒழுங்காகப் போட்டால் தான் மேல் தட்டு ஒழுங்காக வரும் என்பதைப் புரிந்து கொண்டு தூயதமிழிலேயே கற்கைநெறிகளை அறிமுகம் செய்வார்களாக.

எனக்கு ஒரு சந்தேகம் ஏன் பிறகு ஆங்கில மருத்துவத்தை தமிழில் மொழி பெயர்கிறீங்க................தமிழ் வைத்தியம் என்று ஒன்று இருக்குது தானே அதை பரப்பலாம் தானே இதை பற்றி என்ன நினைகிறீங்க.......... :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் ஏன் பிறகு ஆங்கில மருத்துவத்தை தமிழில் மொழி பெயர்கிறீங்க................தமிழ் வைத்தியம் என்று ஒன்று இருக்குது தானே அதை பரப்பலாம் தானே இதை பற்றி என்ன நினைகிறீங்க.......... :P :P :P

ஏன் மாற்றக் கூடாது என்று விதியிருக்கின்றதா? திருக்குறளை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கலாம். ஆங்கில மருத்துவத்தை செய்யக் கூடாதா?

ஆங்கில மருத்துவத்தைப் படித்து விட்டுத் தமிழாக்க நினைப்பவர்களுக்குப் போய்த் தமிழ் மருத்துவத்தை முன்னுக்கு கொண்டு வாருங்கள் என்பது பொருத்தமற்ற கேள்வி. இரண்டுமே வேறுவேறானவை.

அவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தைத் தமிழாக்க மட்டும் தான் தெரியும். தெரிந்ததைத் தானே அவர்களால் செய்ய முடியும். இல்லையா?

தமிழ் மருத்துவம் என்பது இருக்கின்றது. அதை அதை ஒழுங்குபடுத்த உங்களால் முடியும் என்றால் அதைத் தாங்களே செய்யுங்கள். அதில் பெரும்பகுதி ஆயுள்வேதமாக எடுக்கப்பட்டிருக்கின்றது. துரிதமற்ற மருத்துவ வேகம், அளவில் ஏற்படும் குழப்பங்கள். உதாரணத்துக்கு ஒரு உருண்டை எடுத்து 3 வேளையும் உண் என்றால் அது ஒழுங்கான அளவுத்திட்டமாக இருக்காது. இப்படியான விடயங்களால் தான் தமிழ்மருத்துவம் முன்னுக்கு வரமுடியவில்லை.

திருகுறளை மாற்றி வைத்தார்கள் ஆங்கிலத்தில் அத்துடன் அவர்கள் தங்கள் நூல்கள் அதாவது திருகுறளை ஒத்த நூல்களிற்கு அதே அளவு முக்கியத்துவம் கொடுகிறார்கள் நான் சொல்வது சரி தானே.............. :D

மாற்ற நினைகிறவர்கள் உண்மையா பாராட்டதக்க வேண்டியவர்கள் ஆனால் இந்த மொழியில் படித்துவிட்டு ஆங்கில மருத்துவர்களுடன் தொழிலில் போட்டி போடாத நிலை ஏற்பட்டா இதில் பயன் இல்ல என்பது என்னுடைய கருத்து :( ஆனாலும் ஆங்கில மருத்துவ பெயர்கள் தமிழில் வரும் என்பது ஒரு விடயம் ஆனா எத்தனி பேருக்கு செல்ல போகிறது என்பது அடுத்த வினா??மற்றது எத்தனை பெற்றோர்கள் இந்த மொழியில் தங்கள் பிள்ளைகளை படிக்க விடுவார்கள் என்பது அடுத்த வினா?முக்கியாமாக மேலே கருத்து கூறியவர்களில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை படிக்கவிடுவார்கள் என்றா சந்தேகம் தான் உங்களை தவிர தூயவன் அண்ணா......... :P

தமிழை வளர்க்க வேண்டும் என்று சொல்லுறீங்க பிறகு தமிழ் வைத்தியத்தை என்னை வளர்க்க சொல்வது என்ன நியாயம்?எனக்கு தமிழை பற்றியே தெரியாது பாருங்கோ இதில் தமிழ் வைத்தியம் என்றா பாவம் நோயாளிகள் என்ன நான் சொல்லுறது சரி தானே........நீங்களே தமிழ் வைத்தியத்தில் குழப்பம் இருகிறது என்று சொன்னா எப்படி.........நாங்கள் தானே அதை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் இதை பற்றி என்ன சொல்லுறீங்க தூயவன் நனா?? :lol:

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொருளைச் சந்தைக்கு விடாமல் சனம் வாங்குமா... வாங்குமா என்று அழுது கொண்டிருந்தால் அதை விற்க முடியாது. அவர்கள் அவ்வாறு ஆசைப்படுகின்றபோது அவர்கள் நீங்கள் கேட்ட வினாக்களுக்கும் பதில் இல்லாமல் தொடங்கப் போவதில்லை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் படிக்க விடுவார்களாக இல்லையா என்பதை தொடங்குமுன்பு எப்படி முடிவெடுக்க முடியும். எல்லோரும் உங்களைப் போலத் தான் இருப்பார்கள் என்றில்லையே. தமிழில் படிக்க ஆவல் இருந்தும் வழியில்லாமல் ஆங்கிலத்தில் படிக்கின்ற நிறையப் பேர்கள் உண்டு. எல்லோரையும் தங்களைப் போல எடுக்க வேண்டாமே.

தமிழை வளர்க்க வேண்டும் என்று சொல்லுறீங்க பிறகு தமிழ் வைத்தியத்தை என்னை வளர்க்க சொல்வது என்ன நியாயம்?எனக்கு தமிழை பற்றியே தெரியாது பாருங்கோ இதில் தமிழ் வைத்தியம் என்றா பாவம் நோயாளிகள் என்ன நான் சொல்லுறது சரி தானே........நீங்களே தமிழ் வைத்தியத்தில் குழப்பம் இருகிறது என்று சொன்னா எப்படி.........நாங்கள் தானே அதை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் இதை பற்றி என்ன சொல்லுறீங்க தூயவன் நனா??

உங்களுக்குத் தமிழ் வைத்தியம் தெரியாது போன்று தான், ஆங்கில வைத்தியம் படித்துத் தமிழில் அதை மாற்ற முயல்பவர்களும் அதை அறிந்திருக்கப் போவதில்லை. ஏனென்றால் இரண்டும் வேறுவேறானவை. அப்படியிருக்கின்றபோது, ஆங்கில மருத்துவத்தை விட்டுவிட்டு, தமிழ் வைத்தியம் பற்றிக் கதையுங்கள் என்று தாங்கள் கேட்ட கேள்வி நியாயமானதா?

எந்தவெருவனும் தங்களுக்குத் தெரிந்ததைத் தான் செய்யமுடியும். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருப்பது மிகமிக உத்தமம் என்பதைத் தான் அந்த ஆங்கில வைத்தியர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்.

பொருளை சந்தைக்கு விடமுடியும் அண்ணா ஆனா நல்ல வணிகனுக்கு அழகு நீண்டகாலத்தில் அந்த பொருள் சந்தையில் எவ்வாறு நிலைத்து நிற்கும் என்பது................குறுங்காலத்தில் அதில் அதாவது அந்த பொருளுக்கு ஏதாவது வரும் என்று விற்க வருபவன் எல்லாம் வணிகன் இல்லை என்று நான் சொல்லவில்லை வணிகம் சொல்லுகிறது தூயவன் அண்ணா.............. :(

எல்லாரும் என்னை போல் இருக்கமாட்டார்கள் தான் தூயவன் அண்ணா ஆனா உங்களை போல் இருப்பவர்களும் சரியான குறைவு என்று தான் நினைக்கிறேன்............தமிழில் படிக்க ஆர்வம் ஆனால் ஆங்கிலத்தில் படிக்கீனமாம் நல்ல கதை நான் ஏற்றுகொள்கிறேன்............இதை ஒருத்தரும் ஏற்றுகொள்ளமாட்டீனம் என்று தான் நான் சொல்லுவேன்............ஏன் என்றா பாருங்கோ..........பாடசாலைகளிள் நான் சொல்வது இலங்கையை அங்கே ஆங்கில மீடியம் வந்தவுடனே எத்தனை பேர் மாறீனார்கள் அப்ப அவைக்கு எல்லாம் ஆசை இருந்தது தமிழில் படிக்க ஆனா ஆங்கில மீடியம் வந்துவிட்டது என்று மாறினவர்களா...........அப்படி என்றா சரி........ :lol:

அவர்கள் மாற்றுவது சரி நீங்க கூறி இருகிறீங்க தமிழை வளர்க்க வேண்டும் என்று ஏன் தமிழ் மருத்துவத்தை இலகுவாக்கி உங்களாள் பரப்ப முடியாதா...........திருகுறள் ஆங்கிலத்தில் வந்திருக்கு ஆனால் அதற்கு அவர்கள் பெரிதும் முக்கியத்துவம் கொடுகிறதில்லை.........அதேபடி நீங்களும் ஆங்கில வைத்தியத்தையும் எடுத்து கொண்டு தமிழ் வைத்தியத்தையும் வளர்கலாம் தானே.........என்ன ஏற்க கஷ்டமாக இருகிறதா.........அதை போல் தான் இருக்கும் தமிழ் வளர்பதும்............ :P .

தெரிந்ததை செய்வோம் என்று இருக்க கூடாது தெரியாதை செய்ய துணியிறவன் தான் வெற்றி காண்பான் அண்ணா...........என்ன நான் சொல்லுறது சரி தானே.............. :D

வாயை மூடி கொண்டிருந்தால் எப்படி தமிழை வளர்க்கமுடியும் வாயால............. :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்குள் மாட்டை விடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்க

நான் கேட்டது செய்யமுடியுமா இல்லையா என்று அதற்கு விடையை காணவில்லை..........ஏன் தமிழ் வைத்தியத்தை ஓரம் கட்டு நீங்கள் எப்படி தமிழை வளர்க்க போறீங்க என்பது தான் என் வாதம்............ஆட்டுகுள் மாட்டை கொண்டு வந்தா தான் நாலு விசயம் வெளியால வரும் பாருங்கோ................... :P

இந்த திட்டத்தை நான் சொல்லி அவை நிற்பாட்ட போறதும் இல்லை அறிவுரை சொல்ல எல்லாம் நம்மால முடியாது பாருங்கோ அது எல்லாருக்கும் தெரியும் ஆனா என்ட சந்தேகத்தை கேட்பேன் தானே :( ............ஆகா தமிழ் வைத்தியம் வளர்க்க ஏலாது என்று முதல் சொன்னீங்க இப்ப தலைப்பு தொடங்கி அதை பற்றி பேசுவோம் என்று சொல்லி இருகிறீங்க அதுவும் பேச்சோட முடிந்திடு போகும் சரி தானே அதை தான் நானும் சொல்லுகிறேன் பேச்சோட முடிகிறதிலை நாங்கள் தமிழை வளர்கிறோம் என்று............... :lol:

தமிழை வளர்ப்பது மனதால் வரவேண்டும் எல்லாம் கீழே நீங்க குறிபிட்டு இருந்தீர்கள் அதை மாதிரி வார்த்தை ஜாலங்களிற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். :) ........என்ட பிறப்பு ஆங்கிலம் சார்ந்தது என்று நான் சொன்னேனா...........இப்ப ஏன் குழப்புறீங்க..........நான் ஒன்றும் தடை போடவில்லை ஆனால் கேட்கிறேன் வெறும் தமிழில் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை ஆங்கிலமும் தேவை தான்............ :D

கேட்கிறேன் தமிழ் பற்றி கதைத்து தமிழை வளர்க்க வேண்டாம் மற்றும் பிற மொழியில் இருந்து பெற்று விட்டு பிற மொழியை ஏளனம் செய்யாதீர்கள் என்பது தான் என் வாதம்............ :lol: .

பல்கலைகழங்களில் ஆங்கில கல்வி வந்தபடியா மாறினவர்களா அப்ப முதல் இருந்தவர்கள் எல்லாம் பல்கலைகழங்களில் என்ன பாசையில் படித்தவர்கள் அவர்கள் பாடசாலைகளிள் தமிழில் தானே படித்தார்கள் பிறகு ஆங்கிலம் பாடசாலைக்கு வந்தவுடன் மாறிவிட்டார்கள்...........இதில் இருந்து தெரிகிறது தானே தமிழிற்கு பேச்சளவில் நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.............. :lol: .

அவர்களை நான் பிழை சொல்லவில்லை அவர்கள் செய்தது சரி தான் என்று சொல்லுவன்.........ஆனா பேச்சளவில் தமிழ் வளர்கிறவர்களை தான் பிழை என்று சொல்லுறன்...........அதற்காக பிறகு என்னை தமிழை வளர்க்க சொல்ல கூடாது என்னால முடியாது பாருங்கோ.......நீங்க ஒருக்கா முயற்சி செய்து பாருங்கோவேன்.................. :P

நாலு பேர் தடைபோட்டாலும் அது நீண்டகாலத்தில் வெற்றி அளிக்கும் என்றா அமுலுக்கு வந்து தான் ஆகும்..........தடை வருகிறது என்றா அதில் ஏதோ பிழை இருக்கு என்று தானே அர்த்தம்.........தடைய பார்க்காம செய்யிறதை செய்ய வேண்டும் பாருங்கோ..............

முதலில எம்.பி.பி.ஸ் க்கு தமிழ் என்ன தூயவன் அண்ணா.ஓ எனி அவர்கள் கண்டுபிடித்தா பிறகு தான் தெரியுமோ அப்ப சரி.............. :lol:

நீங்கள் தெரிந்ததை செய்து கொள்கிறீங்க என்று விட்டு கதையில போயிடுறீங்க ஆனா தெரியாதையும் செய்வேன் என்று சொல்லி செய்து முடிபேன்.............வார்த்தை ஜாலங்கள் ஒவ்வொரு விசயத்தை பொறுத்து என்றேன் சொல்லலாம்..............

இப்ப பாருங்கோ தமிழை வளர்கிறது நல்ல விடயம் ஆனா மற்றமொழிகளிற்கும் மதிப்பு கொடுங்கோ அவை உங்களை இந்த மொழிகள் தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாங்களே படித்துவிட்டு அவையை உதாசினபடுத்துவது எவ்வகையில் சிறந்தது............

என்னை மாதிரி 4 பேர் வார்த்தையால தமிழை வளர்க்க விருப்பமில்லாதவர்கள் போல தூயவன் அண்ணா............ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது செய்யமுடியுமா இல்லையா என்று அதற்கு விடையை காணவில்லை..........ஏன் தமிழ் வைத்தியத்தை ஓரம் கட்டு நீங்கள் எப்படி தமிழை வளர்க்க போறீங்க என்பது தான் என் வாதம்............ஆட்டுகுள் மாட்டை கொண்டு வந்தா தான் நாலு விசயம் வெளியால வரும் பாருங்கோ................... :P

தமிழ் வளர்க்கின்றது என்று எதைக் கருதுகின்றீர்கள்.

ஒரு இனம் சார்பான அடிப்படையில் இருந்து கொள்வதா? அல்லது மொழியை வளர்ச்சியைக் கருதுவதா? அந்தக் குழப்பதை முதலில் தீருங்கள்.

இனம் தொடர்பான எந்தச் செயற்பாட்டிற்கும் முடியாது என்ற கருதுகோளை நான் கொண்டிருக்கவில்லை. முடியும் அல்லது முடிக்க வேண்டும் என்பது தான் நிலை. எனவே தான் கேட்டேன், புதுத்தலைப்புத் தொடங்குங்கள், அதில் தமிழ் வைத்தியம் பற்றிய ஆராய்வையும், அதற்கு ஏற்படும் சிக்கலையும் ஆராயலாம் என்று.

ஆனால் தமிழ் வைத்தியத்தைப் பற்றிய அறிவு எனக்குக் கிடையாது. வெளியில் உள்ள தடைகளைப் பற்றி ஆராயலாம்.

தமிழ் வைத்தியம் வளர்க்க ஏலாது என்று முதல் சொன்னீங்க இப்ப தலைப்பு தொடங்கி அதை பற்றி பேசுவோம் என்று சொல்லி இருகிறீங்க அதுவும் பேச்சோட முடிந்திடு போகும் சரி தானே அதை தான் நானும் சொல்லுகிறேன் பேச்சோட முடிகிறதிலை நாங்கள் தமிழை வளர்கிறோம் என்று............... :D

தமிழ் வைத்தியம் இயலாது என எங்கு சொன்னேன். அதற்கு இருக்கின்ற தடைகளைப் பற்றித் தானே சொன்னேன். அவ்வாறன தடைகளை வென்றால் தான் அதனால் என்னும் உயர முடியும்.

இங்கே தமிழ் வைத்தியத்தில் உள்ள சிக்கல்களை நான் இயம்பியதற்குக் காரணம் அதற்குள்ள வளர்ச்சியை மையப்படுத்தியே தவிர, முடக்க வேண்டும் என்றல்ல.

பேச்சோடு முடிக்கின்றது என்றால் ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை விட்டுப் போட்டுப் போய் கொண்டிருப்பேன்.

வேறு தடைகளும் உண்டு. அது ஒரு குடும்ப வைத்தியமாக இருப்பதும், இரகசியத் தன்மை பேணப்படுவதுமாகும். தமக்குத் தெரிந்த மருத்துவத்தைப் பிள்ளைகளுக்கு மட்டும் தான் சொல்லுவார்களே தவிர, பிறர் கூடப் பகிரமாட்டார்கள். அந்த நிலையும் மாறினாலும் தான் அதை உயர்த்த முடியும்.

தமிழை வளர்ப்பது மனதால் வரவேண்டும் எல்லாம் கீழே நீங்க குறிபிட்டு இருந்தீர்கள் அதை மாதிரி வார்த்தை ஜாலங்களிற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். :lol: ........என்ட பிறப்பு ஆங்கிலம் சார்ந்தது என்று நான் சொன்னேனா...........இப்ப ஏன் குழப்புறீங்க..........நான் ஒன்றும் தடை போடவில்லை ஆனால் கேட்கிறேன் வெறும் தமிழில் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை ஆங்கிலமும் தேவை தான்............ :(

தமிழ் பற்றிக் கதைச்சால் எல்லாத் தலைப்பிலும் தமிழால் ஒன்றுமே முடியாது எனத் தாங்கள் கதைப்பதற்குத் தடை போடுகினன்ற உணர்வில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். தமிழால் வேலைவாய்ப்புத் தொடக்கம் எதுவுமே முடியுமாக இருந்திருந்தால் எங்களுக்கு வேறு மொழி அவசியமாகப் போகாது.

அந்த நிலையில்லாமல் தற்போது இருப்பதால் தான் எங்களுக்கு ஆங்கிலமும், வடமொழியும் பிறமொழிகளும் தேவைப்படுகின்றது.

கேட்கிறேன் தமிழ் பற்றி கதைத்து தமிழை வளர்க்க வேண்டாம் மற்றும் பிற மொழியில் இருந்து பெற்று விட்டு பிற மொழியை ஏளனம் செய்யாதீர்கள் என்பது தான் என் வாதம்............ :lol: .

அதென்ன தமிழைப் பற்றிக் கதைச்சால் பிறமொழிகளை ஏளனம் செய்வதாகச் சிந்திப்பது. இது பல தடவை பலரிடம் அவதானித்த ஒன்று. எம் மொழியை 1ம் தர மொழியாக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே நாங்கள் ஏதோ ஆங்கில எதிர்ப்பாளர்களாக சிந்திப்பதும், காட்டுவதும் பிற்போக்குத்தனமான சிந்தனை.

பல்கலைகழங்களில் ஆங்கில கல்வி வந்தபடியா மாறினவர்களா அப்ப முதல் இருந்தவர்கள் எல்லாம் பல்கலைகழங்களில் என்ன பாசையில் படித்தவர்கள் அவர்கள் பாடசாலைகளிள் தமிழில் தானே படித்தார்கள் பிறகு ஆங்கிலம் பாடசாலைக்கு வந்தவுடன் மாறிவிட்டார்கள்...........இதில் இருந்து தெரிகிறது தானே தமிழிற்கு பேச்சளவில் நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.............. :lol: .

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் போய் இருப்பீர்களா தெரியவில்லை. அங்கே விஞ்ஞானப் பிரிவில் கற்பவர்கள், வர்த்தகப்பிரிவில் கற்பவர்கள், உயர்தரம் வரை தாய்மொழியில் கற்றுவிட்டு, பிற்பாடு பல்கலைக்கழகத்திற்கு நுழைகின்றபோது முதல் வருடம் ஆங்கிலம் தெரியாமல் படுகின்ற பாடு.. பெரும்பாடு.

இலங்கையரசும் அதை மனதில் கொண்டு தான் பாடசாலைகளில் அடிப்படைான ஆங்கிலக்கல்விக்கு ஏற்பர்டு செய்திருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் தாய்மொழிக் கல்விக்கு ஏற்பாடு இருந்திருந்தால் பாடசாலைகளில் அது அவசியப்படாது.

உடனே பல்கலைக்கழகங்களில் நூல்களைத் தமிழாக்கம் செய்யலாம் என்று வழமையான ஆலோசனை செய்யாதீர்கள். அதற்கான பரிட்சாத்த முயற்சியைத் தான் இந்தியாவில் செய்ய முயல்கின்றார்கள். அதற்கே எத்தனை தடைகளுக்கு ஆட்கள் இருக்கின்றார்கள்.

அவர்களை நான் பிழை சொல்லவில்லை அவர்கள் செய்தது சரி தான் என்று சொல்லுவன்.........ஆனா பேச்சளவில் தமிழ் வளர்கிறவர்களை தான் பிழை என்று சொல்லுறன்...........அதற்காக பிறகு என்னை தமிழை வளர்க்க சொல்ல கூடாது என்னால முடியாது பாருங்கோ.......நீங்க ஒருக்கா முயற்சி செய்து பாருங்கோவேன்.................. :P

நிச்சயமாக. எனக்குத் தெரிந்த விடயங்களில் தமிழ்மொழிக்கான ஒத்துழைப்பை வழங்குவேன். வழங்கியும் வந்துள்ளேன். ஆனால் தெரியாத விடயங்களில் மூக்கை நுழைப்பது என் வேலையல்ல அம்மணி. எனக்குத் தெரியாத விடயங்களில் செயற்படுபவர்களுக்கு ஊக்கத்தையும், தெரிந்த ஆலோசனைகளையும் மட்டுமே பகிர முடியும்.

நாலு பேர் தடைபோட்டாலும் அது நீண்டகாலத்தில் வெற்றி அளிக்கும் என்றா அமுலுக்கு வந்து தான் ஆகும்..........தடை வருகிறது என்றா அதில் ஏதோ பிழை இருக்கு என்று தானே அர்த்தம்.........தடைய பார்க்காம செய்யிறதை செய்ய வேண்டும் பாருங்கோ..............

தடைகள் இல்லாமல் எச் செயற்பாடும் இருந்ததில்லை. அது பிழைகள் என்று அர்த்தப்படுகின்றமை சரியான பதிலாகத் தெரியவில்லை. இன்றைக்கு எம் விடுதலைப் போராட்டம் சந்திக்காத தடைகள் எவை. அதற்காக அப்படி அர்த்தப்பட முடியுமா?

ஆனால் தடைகளை அப்புறப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றதல்லவா. அதற்கு நிறையப் போராடித் தான் ஆகவேண்டும்.

நீங்கள் தெரிந்ததை செய்து கொள்கிறீங்க என்று விட்டு கதையில போயிடுறீங்க ஆனா தெரியாதையும் செய்வேன் என்று சொல்லி செய்து முடிபேன்.............வார்த்தை ஜாலங்கள் ஒவ்வொரு விசயத்தை பொறுத்து என்றேன் சொல்லலாம்..............

நீங்கள் திறமையானவராக இருக்கலாம். அதை நான் அறியேன்.

தமிழை வளர்க்க வேண்டும் என்று சொல்லுறீங்க பிறகு தமிழ் வைத்தியத்தை என்னை வளர்க்க சொல்வது என்ன நியாயம்?

என்ற கேள்விகள் அதை உணர்த்தவில்லை. வார்த்தை ஜாலங்களாகவே உணர்த்துகின்றது.

இப்ப பாருங்கோ தமிழை வளர்கிறது நல்ல விடயம் ஆனா மற்றமொழிகளிற்கும் மதிப்பு கொடுங்கோ அவை உங்களை இந்த மொழிகள் தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாங்களே படித்துவிட்டு அவையை உதாசினபடுத்துவது எவ்வகையில் சிறந்தது............

திருப்பித் திருப்பி ஒரே மாதிரிக் கதைக்கின்றீர்கள். தமிழைப் பற்றிக் கதைச்சால் உடனே ஏன் மற்றமொழிகளை உதாசீனம் செய்வதாகக் கருதுவது. நீங்கள் உங்களின் குடும்பத்திற்கு உழைத்துப் பணம் அனுப்பினால் பக்கத்துவீட்டுக்காரன் கவலைப்படுவான் என்ற மாதிரி அல்லவா உங்களின் கதை இருக்கின்றது.

முதலில் தமிழைப் பற்றிக் கதைத்தால் உடனே மற்றமொழிக்கு அவமானம் செய்கின்றோம் என்ற மனதை மாற்றுங்கள்.

என்னை மாதிரி 4 பேர் வார்த்தையால தமிழை வளர்க்க விருப்பமில்லாதவர்கள் போல தூயவன் அண்ணா............

இருக்கலாம். உங்களின் செயற்பாட்டையும் பார்க்கத் தானே போகின்றோம். :) எவ்வளவு தூரம் செயற்பாட்டில் சாதிக்கப் போகின்றீர்கள் என்று.

தமிழை வளர்பது இன ரீதியான செயற்பாடாக எடுத்து கொண்டா தமிழை சொல்லி கொடுத்து வளர்க்கலாம் இல்லை என்று வாதாடவில்லை.........ஆனால் தமிழ் என்று பேசி கொண்டு என்னொன்று செய்பவர்கள் தான் அதிகம் அவ்வாறான சூழ்நிலையில் தமிழால் மட்டும் அது செய்ய முடியும் இது செய்ய முடியும்..........கல் தோன்றி மண தோன்றா காலத்து மூத்த மொழி தமிழ் என்று கொண்டு நிற்காம கொஞ்சம் நடைமுறைக்குள்ள வரவேண்டும் அதை தான் சொன்னேன் பாருங்கோ......... :( .

தமிழ் வைத்திய சிக்கல்களை பற்றி ஒரு தலைப்பு தொடங்கி அதை பற்றி ஆராய்ந்து பயனுள்ளதாக இருந்தா நிச்சயம் ஆரம்பிக்கலாம் ஆனால் அது பயனில்லாத முயற்சி அதற்கு ஒரு தலைப்பு தொடங்கி விவாதிபது பிரயோசனமற்றது........... :lol: .

நீங்களே தமிழ் வைத்தியம் இரகசிய தன்மை பேணபட்டது என்று சொல்லிவிட்டீங்க இப்படி தான் இரகசியமாக தான் எல்லாம் செய்வார்கள் எங்களுடைய ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் எல்லாம் ஆனா வெள்ளைகாரன் அப்படி செய்தானா உங்களுக்கும் அதை பயன்படுத்த தாரான்..........ஆனா பயன்படுத்தி விட்டு பிறகு அவனை குறை சொல்லுறது அந்த மொழியை குறை சொல்லுறது ஏன் என்பது தான் என்னுடைய கேள்வி.........அவன் எங்கையாவது சொல்லுறானோ தன்ட இனதிற்கு ஆங்கிலத்தை வளர்போம்.........வளர்போம் என்று இல்லை ஆன நாங்கள் சொல்ல வேண்டும் மற்றவர்கள் முன்னெறுவது தமிழர்களுக்கு பிடிகாது அது தான் வைத்தியம் கூட இரகசியமான முறையில் குடும்பத்தவர்களிற்கிடையில் பரப்பி உள்ளார்கள்............ :D

தமிழில் வேலைவாய்பு தொடக்கம் எல்லாம் இருந்திருந்தாலும் ஆங்கிலம் அவசியம் என்றே சொல்லலாம்......நிகழ் காலத்தோடு சிந்தித்து பார்க்க வேண்டும் எதிர் காலத்தில் நாடு எங்களுக்கு கிடைத்தாலும் உடனே வேலைவாய்பு எல்லாம் தமிழில் செய்து எல்லாருக்கும் கொடுக்கலாம் என்று நினைக்க கூடாது அது தவறு..........நான் தமிழால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லவில்லை ஆனால் தமிழ் தான் சிறந்தது என்ற விதாண்டவாதம் வேண்டம் என்று தான் குறிபிட்டு இருந்தேன்.........அது சரி கேட்கிறேன் தமிழை படித்து வெளிநாட்டில் போய் உத்தியோகம் பார்த்து இருக்க முடியுமா பிறகு என்ன............அதற்காக தமிழை குறை சொல்லவில்லை ஆனால் நடைமுறையோடு செயற்படுங்கள்..........வெறும் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறேன்....................

எம் மொழியை நாங்கள் 1 மொழி என்று சொல்லி திரிய கூடாது மற்றவர்கள் சொல்ல வேண்டும் அதற்கு நாங்கள் வாயில வெட்டி விழுத்தாம.............தேசிய தலைவர் அவர்களாள் இன்று தமிழ் மொழி என்ற அடையாளம் உலகிற்கு காட்டபட்டுள்ளது...........அது அவரின்ட ஆளுமையை காட்டி நிற்கிறது நீங்க அதை போல் செய்ய சொல்லி சொல்லவில்லை...........

ஆனால் கருணாநிதி வாயால தமிழ் வளர்ந்து கொண்டிருகிறார் அப்படி வளர்த்து நீங்களே உலகமொழி என்று சொல்லி கொண்டிருந்தா பார்கிறவன் சிரிபான் என்று தான் சொன்னேன்.......

ஏன் பல்கலைகழங்களிள் ஆங்கிலம் மூலம் படிபிகிறார்கள் எல்லாம் அந்த மொழியில தான் இருக்கு.......எனி அதை மாற்றி தான் தமிழில் படிக்க போறீங்க பிறகு ஏதோ சாதித்த மாதிரி ஒரு சிந்தனை..............எங்களின்ட மொழியில கதை தானே எழுதி போட்டு போயிட்டீனம் என்ன செய்ய......1 வருசம் போகும் போது கஷ்டபடுகீனம் ஆனால் படித்து முடித்து தானே வாறீனம்...........இதே போல தானே முந்திய பாடசாலை மாணவர்களும் ஆனால் அவர்கள் தமிழில் படித்து விட்டு தானே சென்றார்கள்..........இப்ப ஆங்கில மீடியம் வந்தவுடன் மாறிவிட்டு அதற்கு ஒரு கதை சொல்லுவோம்..........இப்படியே ஒவ்வொன்றுக்கு ஒரு கதை சொல்லி தமிழை வளர்போம்.............

தமிழிற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் உங்கள் சேவை பாராட்டதக்கது............தமிழை வளர்க்க வித்தியாசமான வழிமுறைகளை கண்டுபிடியுங்கோ வளருங்கொ வெற்றி காணுங்கோ அதை நான் வரவேற்கிறேன் ஆனால் இன்னும் பழைய பல்லவியில் தமிழ் மொழி போல் இனிமையானம் மொழி உண்டா அப்படி இப்படி என்று பேசியே தமிழை வளர்கிறோம் என்று அழிகிறவர்கள் தான் கூட அது தான் வேண்டாம்.......அத்துடன் மற்ற மொழிகளிற்கும் மரியாதை கொடுங்கோ................ :lol:

தடைகள் அப்புறபடுத்து போது நாம் எடுத்து கொண்ட வழி சரி என்றா எல்லாரும் ஆதரவு அளிபார்கள் இல்லை என்றா தடை உங்களை அகற்றி சென்றுவிடும் தூயவன் அண்ணா..........தேசிய போராட்டம் சந்திகாத தடை இல்லை ஆனா இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது என்றா அதன் குறிகோளும் நீண்டகால பார்வையும் தான்...ஆகவே எதையும் நீண்டகால பார்வையில் சிந்திக்க வேண்டும்............ :lol:

நான் திறமையானவன் இல்லை ஆனால் முடியாததை முடியாது என்று விட்டுவிடாம அதை செய்வேன் அது தான் வெற்றி இருகிறது ஆனால் எடுகிற காரியம் எப்படிபட்டது என்று பார்தே ஆராய்வேன்..................

தமிழை கதைத்தா மற்ற மொழியை அவமானபடுத்துகிறோம் என்று நான் நினைக்கவில்லை ஆனா நீங்கள் மற்றமொழிகளை புறம் தள்ளி தமிழ் அது இல்லாவிடால் ஒன்றும் இல்லாத தோறணையில் கதைத்ததை என்னால் ஏற்று கொள்ள முடியாது.................எல்லா மொழிகளும் ஒன்றுகொன்று சளித்தது இல்லை என்பது என்னுடைய வாதம்...........

அண்ணா பக்கத்துவீட்டு காரனையும் கவலைபடாம நாங்களும் பணம் அனுபுறதில்லை தான் கெட்டிதனம் இருக்கு அங்கே தான் தமிழையும் தமிழனின்ட பெருமையும் நிலை நிறுத்த வேண்டும் அதை தான் செய்ய சொல்லி சொல்லுறன்...............பக்கத்துவீட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.