Jump to content

பிகாரில் தோல்வியடைந்ததா பாஜகவின் 'மகாராஷ்டிரா உத்தி'? - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிகாரில் தோல்வியடைந்ததா பாஜகவின் 'மகாராஷ்டிரா உத்தி'? - என்ன நடந்தது?

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
9 ஆகஸ்ட் 2022, 10:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பதவி விலகிய கையோடு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார் நிதிஷ் குமார்.

பதவி விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அதன்படியே எனது பதவியை ராஜிநாமா செய்தேன்," என்று தெரிவித்தார்.

புதிய மகாகத்பந்தன் கூட்டணியில் ஏழு கட்சிகள் உள்ளன, இதில் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 164 எம்எல்ஏக்கள் உள்ளனர். அனைவரது ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்துள்ளேன். புதிய அரசின் பதவியேற்பு எப்போது என்பதை ஆளுநர் தெரிவிப்பார் என்று நிதிஷ் குமார் கூறினார்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "இந்தியை அடிநாதமாகக் கொண்டுள்ள மாநிலங்கள் முழுவதிலும் பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் இல்லை. எந்த கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளை பாஜக அழித்தொழிக்கிறது என்பது வரலாறு. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் இப்படி நடந்ததை நாங்கள் பார்த்தோம்," என்று கூறினார்."மாநில கட்சிகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஜேபி நட்டா கூறினார். கட்சிகளை மிரட்டி விலைக்கு வாங்க மட்டுமே பாஜகவுக்கு தெரியும். பிகாரில் தனது திட்டத்தை பாஜக செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே எங்களின் ஒரே நோக்கம். அத்வானியின் ரதத்தை லாலு பிரசாத் எப்படி நிறுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாங்கள் எந்த வகையிலும் இனி மனம் மாற மாட்டோம்," என்று நிதீஷ் குமாருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ் கூறினார்."இன்று பாஜகவைத் தவிர பிகார் சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சிகளும் உறுப்பினர்களும் நிதிஷ் குமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி மகாகத்பந்தன் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக ஜிதின் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

திமுக கருத்து

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதன் மூலம் தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை வேகம் பெற்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். மாறும் கூட்டணி, தக்க வைத்த முதல்வர் பதவி

கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார் நிதிஷ் குமார்.

இதையடுத்து இதுநாள்வரை எதிர்கட்சி வரிசையில் இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் அவர் முதல்வராக பதவியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவை உள்ளன.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்த நிலையில், நிதிஷ் குமார் மீது ஒரு துளி நம்பகத்தன்மை கூட இல்லை என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

பிகார் அரசியல்

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி தலைவர்

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப் பேரவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 77 உறுப்பினர்களும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இந்த இரு கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தான் இதுநாள்வரை நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தார்.

அந்த மாநில அரசியலில் திடீரென நடந்த திருப்பம், தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம், அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் திடீரென ஓரணியில் கரம் கோர்த்து ஆட்சியமைப்பது அரிதாக நடக்கக் கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? விரிவாக இங்கே பார்க்கலாம்.

திடீர் பிளவு ஏன்?

கடந்த ஓரிரு மாதங்களாகவே பாரதிய ஜனதாவுக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை. லாலு பிரசாத் - ராப்ரி தேவி இல்லத்தில் நடந்த இஃப்தார் விருந்தில் நிதிஷ் குமார் பங்கேற்றார். அதேபோல் நிதிஷ் குமார் அளித்த இஃப்தார் விருந்தில் எதிர்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.

அப்போதே பாரதிய ஜனதா கட்சிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகப் பேசப்பட்டது. அண்மையில் திரௌபதி முர்மூ இந்திய குடியரசு தலைவராகப் பதவியேற்கும் விழா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்த சில கூட்டங்களில் நிதிஷ் குமார் பங்கேற்காததன் மூலம் இது வெளிப்படையாகத் தெரிந்தது.

மத்திய அமைச்சரவையில் எஃகு துறை அமைச்சராக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் ஆர்.சி.பி. சிங் தனது குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்துகளை குவித்துள்ளதாக கட்சி சார்பில் அவரிடம் மேலிடம் விளக்கம் கேட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தும் விலகினார். 'பாரதிய ஜனதா கட்சி சதி செய்தது'

 

நிதிஷ் குமார் செளஹான்

பட மூலாதாரம்,NITISH KUMAR

 

படக்குறிப்பு,

ஆளுநர் பாகு செளஹானுடன் மாநில முதல்வர் நிதிஷ் குமார்

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு நடந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறைந்த இடங்களே கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சியாக இருந்து கொண்டே பாரதிய ஜனதா கட்சி சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

"கடந்த பேரவைத் தேர்தலில் சிராக் பஸ்வான் மூலம் வாக்குகளைப் பிரித்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் தோல்வியைத் தழுவ பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டதாக பரவலாகப் பேசப்பட்டது" என்கிறார் பத்திரிகையாளர் ஆர். ராதாகிருஷ்ணன்.

"மத்திய அமைச்சராக இருந்த ஆர்சிபி சிங்கை பாரதிய ஜனதா கட்சி தன் பக்கம் இழுத்து மகாராஷ்டிராவைப் போல மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தது என ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது நிதிஷ் குமார் எடுத்திருக்கும் நடவடிக்கை அதைத் தடுப்பதற்கான முயற்சியாகவே இருக்கும்" என்கிறார் அவர்.

தேசிய அரசியலில் தாக்கம் ஏற்படுமா?

பிகாரின் அரசியல் நகர்வுகள் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் பத்திரிகையாளர் சந்திரசேகர். அந்த வகையில் இது பாரதிய ஜனதா கட்சிக்கு மோசமான பின்னடைவாக இருக்கும் என்கிறார் அவர்.

"குறைந்த இடங்களைப் பெற்றிருந்தாலும் நிதிஷ் குமாருக்கு 'முதலமைச்சர்' பதவியை பாரதிய ஜனதா கட்சி விட்டுக் கொடுத்தது. காரணம் தேசிய அரசியல்தான். கூட்டணியை விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தது. அதனால் அந்தக் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறும் என்று பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்காது." என்கிறார் சந்திரசேகர்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை ஏற்கெனவே அது அகாலி தளம், சிவசேனை போன்ற முக்கியமான நெருங்கிய கூட்டாளிகளை இழந்திருக்கிறது. இப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் வெளியேறியிருப்பதால் அது நிச்சயமாக 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் வெற்றியைப் பாதிக்கும் என்று சந்திரசேகர் கூறுகிறார்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி இதை மறுக்கிறது. "பாரதிய ஜனதா கூட்டணியை உடைப்பதற்காக நிதிஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் இப்போதைக்கு ஆதரவு கொடுக்கலாம். ஆனால் மீண்டும் தேர்தல் வரும்போது நிச்சயமாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த மாட்டார்கள். அப்போது இந்த முடிவுக்காக நிதிஷ் குமார் வேதனைப்படுவார்." என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்.

பிகாரில் நடந்திருக்கும் அரசியல் மாற்றங்கள் தேசிய அரசியலில் பாரதிய ஜனதா கருத்தைப் பாதிக்கும் என்ற கருத்தை மறுத்த அவர், "பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்காக மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால் நிதிஷ் குமாரின் முடிவு பாரதிய ஜனதா கட்சியைப் பாதிக்கும் என்பதை கற்பனை கூடச் செய்ய முடியாது" என்கிறார்.

புதிய கூட்டணி நீடிக்குமா?

 

தேஜஸ்வி நிதிஷ் குமார்

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் எதிரும் புதிருமானவை. அவ்விரு கட்சிகளுக்கும் இடையே பழைய கசப்புகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியும் இப்போது தனியே உள்ளது. இப்படியொரு சூழலில் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் "இவர்கள் சேர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது" என்கிறார் சந்திரசேகர்.

"அதே நேரத்தில் புதிய கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றிருக்கும் தேஜஸ்வி யாதவ் அமைச்சரவையில் முக்கிய இடங்களைக் கோரலாம். அது நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக அமையலாம். ஒரு வேளை இந்த மகா கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தல் வரை நீடித்திருந்தால் அது பாஜகவுக்கு நெருக்கடியாக மாறிவிடும்" என்கிறார் அவர்.

நிதிஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் பழைய எதிரிகள் என்று கூறுவதை மறுக்கும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கௌரிசங்கர், "இதற்கு முன்பு இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்தபோது பாரதிய ஜனதா கட்சியால்தான் பிரிய நேரிட்டது" என்றார்.

"இப்போது அந்த வரலாறு திரும்பியிருக்கிறது" என்று கூறும் அவர், "இதே நிலை நாடு முழுவதும் தொடர்ந்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு இறங்கு முகம்தான். அடுத்த தேர்தலில் அந்தக் கட்சி முன்பைப் போல 2 இடங்களில்தான் வெற்றி பெற முடியும்" என்கிறார் கெளரி சங்கர்.

ஜனதா தளம் மீண்டெழும் வாய்ப்பு'

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பாரதிய ஜனதா கட்சி ஒழிக்கப்பார்த்தது என்று குற்றம்சாட்டுகிறார் சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் தமிழக பிரிவு தலைவர் ராஜகோபால்."ஒரு காலத்தில் ஜனதா தளம் ஆதரவு கொடுத்ததால்தான் பாரதிய ஜனதா கட்சி பெரிய கட்சியாக உருவெடுக்க முடிந்தது. ஆனால் ஜனதா தளத்தை சுக்கு நூறாக பாரதிய ஜனதா உடைத்துப் போட்டுவிட்டது. தற்போது பிகாரில் நடந்து கொண்டிருப்பது ஜனதா தளத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக அமையும்." என்கிறார் அவர்."தேஜஸ்வியும் சரி, நிதிஷ் குமாரும் சரி 'ஜனதா தளம்' என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதனால் அவர்களது கூட்டணியை முரண்பாடுகளைக் கொண்டதாகக் கருத முடியாது." என்கிறார் அவர்.ஜனதா தளம் என்ற கட்சி ஒருங்கிணைந்து மீண்டெழுந்தால் அதுவே தேசிய அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

சதுரங்கம் ஆடிய நிதிஷ்

பிகாரில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கோலோச்சி வந்த லாலு பிரசாத் யாதவ் கட்சியை வீழ்த்தி, அரசியல் அதிகாரத்தில் அமர வேண்டுமானால், அதற்கு தனித்து அரசியல் செய்வது பலன் கொடுக்காது என்பதை உணர்ந்தார் நிதிஷ். ஜெயபிரகாஷ் நாராயணின் அரசியல் பள்ளியில் கற்றுக் கொண்ட படிப்பினையின் விளைவாக, லாலு கட்சியுடனேயே நிதிஷ் தேர்தல் உறவு வைத்துக் கொண்டார்.

சமூக நீதிக்கான வளர்ச்சி என்ற முழக்கத்தை அந்த இரு தலைவர்களும் முன்வைத்து மக்களை சந்தித்தார்கள். தனது அமைச்சரவையில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார்.

ஆனால், தேஜஸ்விக்கு எதிரான ஊழல் புகார்களோடு மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை 2017ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி நிதிஷ் குமார் அளித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார். அதன் விளைவாக தேஜஸ்வி துணை முதல்வர் பதவியை இழந்தார்.

ஆனால், பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த மறுதினமே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் அரியணையில் அமர்ந்தார் நிதிஷ் குமார். இதே நிதிஷ்தான் அதற்கு முந்தைய தேர்தலில் வாக்காளர்களை சந்தித்தபோது, நான் மண்ணுக்குள் புதைவேனே தவிர, பாஜகவுடன் மீண்டும் அணி சேர மாட்டேன் என்று முழங்கியவர்.

இதன் காரணமாகவே நிதிஷ் குமாரை 'சந்தர்ப்பவாதி' என்று தனது அரசியல் மேடைகளில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி விமர்சித்து வந்தார்.

லாலு, நிதிஷ் நட்பு மலர்ந்த காலத்தில், நிதிஷை 'மாமா' என்றே பதின்ம வயதைக் கடந்திருந்த தேஜஸ்வி அழைத்து வந்தார். இப்போது வளர்ந்து முப்பது வயதை கடந்த நிலையில், அதே நிதிஷுக்கு எதிராகவே இதுநாள்வரை அரசியல் நடத்தினார் தேஜஸ்வி.

"இன்ஜினியர் பாபு"

அரசியலில் விட்டுக் கொடுப்புகள், சதுரங்க ஆட்டங்கள் போல மாறி வந்தாலும், அணிகள் மாறி வாக்கு கேட்கும் தலைவர்களை பிகார் மக்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாகவே பார்த்து வருகின்றனர்.

1951ஆம் ஆண்டு பாட்னா நகரை அடுத்த பக்தியார்பூரில் பிறந்த நிதிஷ் குமார். பிகார் பொறியில் கல்லூரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தவர். அரசியலுக்கு நுழைந்த காலத்தில் 'இன்ஜினியர் பாபு' என்றே அழைக்கப்பட்டு வந்தார். இன்றளவும் பிகாரின் தொலைதூர கிராமங்களில் அந்தப் பெயருடனேயே நிதிஷ் அறியப்படுகிறார்.

https://www.bbc.com/tamil/india-62477777

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎
    • நன்றிகள் மீண்டும் எல்லாருக்கும்  குமாராசாமி அண்ணா நன்றிகள் பழசை கிளறி எடுத்ததுக்கு …. கிருபன் அண்ணா எல்லாம் உங்களை பாத்து கத்திக்கிட்டது தான் 😁
    • ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் மீண்டும் கிட்லர் ஆட்சி வேண்டாம் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள்  வலதுசாரிகள் வளர்ச்சி உண்மை தான்  ஆனால் அவர்கள் ஜேர்மனியில் உள்ள 16  மாநிலத்தில்  ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியாது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டஙள். அங்கீகாரம்…………………… வழங்குவது. புண்டாஸ்  ராட். ஆகும்  இது 16 மாநிலத்திலிருந்தும்  முதலமைச்சர்  ...உள் நாட்டு அமைச்சர்   என்று இருவர் வீதமும். பிரதமர் ஐனதிபதி,[இவர் தான் தலைவர் ]35.  பேர் அளவில் அங்கம் வகிப்பார்கள். SPD.  CDU.  தான்  மாநிலத்தில் ஆள்வதுண்டு  தமிழ் சிறியின. மாநிலம்  GRUNE. கட்சி ஆள்கிறது  பையர் மாநிலம் CSU. ஆட்சி செய்யுது  இது CDU. இன். கூட்டணி கட்சி  மற்றைய எந்தவொரு கட்சியும். மாநிலங்களை ஆளவில்லை.முடியாது  இந்த வளர்ந்து வரும் வலதுசாரிகளும் ஒருபோதும் மாநிலங்களை ஆளப்போவதில்லை   மத்தியில் ஆளும் கட்சி  7 மாநிலங்களை  ஆள வேண்டும்  அப்போ தான்  சட்டம்களை இயற்றி அங்கீகரிக்க முடியும்   நடைமுறையில் வரும  இந்த வலதுசாரிகள் 25 %   மேல் வளரப்போவதில்லை.  எப்படி மாநிலத்தில் அல்லது மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்  ??
    • அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர். இந்த விவாதத்தில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குக் குறை இல்லை. மேலும், பைடன் அவ்வப்போது கம்மிய குரலில் பேசினார். இதனால், ஜனநாயக கட்சியினர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், “மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்ததாக,” பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மறுபுறம், டொனால்ட் டிரம்ப், பைடனை பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27, வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் நடைபெற்றது. ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பொருளாதாரம் பொருளாதாரம் சார்ந்துதான் இந்த விவாதம் தொடங்கியது. விவாதத்தில் பணவீக்கம் பிரச்னை எழுப்பப்பட்டபோது, வேலை வாய்ப்பின்மையுடன் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே டொனால்ட் டிரம்ப் தனக்குக் கையளித்ததாகத் தெரிவித்தார் பைடன். அப்போது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் ‘சிறப்பாக’ இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறிய பைடன், அவருடைய ஆட்சிக் காலத்தில் நிலைமை “மோசமாக” இருந்ததாகக் கூறினார். “எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியிருந்ததாக” பைடன் கூறினார். அப்போது, “பெருங்குழப்பம்” என்ற வார்த்தையை அடிக்கடி பைடன் உபயோகித்தார். “டிரம்ப் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக” பைடன் தெரிவித்தார். அப்போது டிரம்ப், தான் மக்களுக்கு முன்பு இல்லாத வகையில் வரியை குறைத்ததாகக் கூறினார்.   ஆப்கானிஸ்தான் விவகாரம் பட மூலாதாரம்,REUTERS ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது குறித்தும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டிரம்ப் ஆட்சிக் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சண்டையிட்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை கண்ணியம் மற்றும் பலத்துடன் திரும்பப் பெறத் தான் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், “அப்படைகளை (பைடன் ஆட்சிக் காலத்தில்) திரும்பப் பெற்றபோது அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அவமானகரமான நிகழ்வாக இருந்ததாகவும்” டிரம்ப் கூறினார். கொரோனா கொரோனா பெருந்தொற்று விவகாரம் இந்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது. கொரோனா காலத்தை டிரம்ப் எப்படி கையாண்டார் என்பது குறித்துப் பேசிய பைடன், அச்சமயம் “பெருங்குழப்பங்களுடன் கூடியது” எனக் குறிப்பிட்டார். “கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின்போது தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் பணத்தைச் செலவழித்தோம். இதனால், மிகுந்த அழுத்தத்திற்குள் நாங்கள் தள்ளப்படவில்லை. எல்லாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது” என்றார் டிரம்ப். எல்லைகள் குறித்த பிரச்னை அமெரிக்க எல்லைகள் சார்ந்த கொள்கைகளில் பைடனை டிரம்ப் தாக்கிப் பேசினார். அப்போது, சிறைவாசிகள், மனநல சிகிச்சை மையங்களில் உள்ளவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் எல்லைகள் வாயிலாக நாட்டுக்குள் வருவதாக டிரம்ப் கூறினார். ஆனால், டிரம்ப் கூறுவதை ஆதரிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என பைடன் கூறினார்.   அமெரிக்கப் படையினர் மரணங்கள் பட மூலாதாரம்,REUTERS கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கப் படையினர் தன்னுடைய ஆட்சியில்தான் உயிரிழக்கவில்லை என பைடன் கூறினார். பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழுவின்படி, பைடனின் இந்தக் கூற்று தவறானது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். இதுதவிர, ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 13 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஐ.எஸ்-கே பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. போரில் உயிரிழக்கும் படையினர் குறித்த ஆய்வு அமைப்பு (Defense Casualty Analysis System) அளித்தத் தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 65 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.   டிரம்ப் மீதான வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார். இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை விவாதத்தின்போது ஜோ பைடன் குறிப்பிட்டார். பைடன் கூறுகையில், “குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் இங்கு இருக்கிறார், அவரைத்தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார். டிரம்ப் ஒழுக்கமான நபர் அல்ல என பைடன் கூறினார். அதேநேநேரம், பைடனின் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.   இஸ்ரேல்-ஹமாஸ் போர் பட மூலாதாரம்,REUTERS காஸா குறித்த கேள்வி எழுகையில், முன்னாள் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் தன் வேலையை முடிக்க வேண்டும் எனக் கூறினார். பைடன் பாலத்தீனியராகவே மாறிவிட்டதாக டிரம்ப் கூறினார். மேலும், யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவுவது குறித்தும் டிரம்ப் எழுப்பினார். யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகள் குறைவாக செலவழித்துள்ளன என தெரிவித்தார். யுக்ரேனுக்கு உதவ அதிகமாக பணம் செலவழிக்குமாறு நேட்டா (NATO) நாடுகளுக்கு பைடன் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் டிரம்ப் கேள்வியெழுப்பினார். இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்வீர்கள் என பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, போரை நிறுத்த ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் தெரிவித்தார். இஸ்ரேலின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய பைடன், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS இருவரும் எப்படி விவாதித்தனர்? வட அமெரிக்கா குறித்து செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் விவாதம் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் இருந்ததாகக் கூறினார். வாக்குவாதம் செய்தல், மிகைப்படுத்தப்பட்ட பதில்களைத் தருவதிலிருந்து டிரம்ப் விலகியிருந்தார்55. ஏனெனில், கடந்த தேர்தல் விவாதத்தின்போது, இந்த விஷயங்கள் அவரை பலவீனமாக்கின. டிரம்ப்பின் சில கூற்றுகள் முழுமையான தரவுகளின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், அவை முழுவதும் தவறான தகவல்கள் இல்லை. எனினும், டிரம்ப்பை பைடனால் மடக்க முடியவில்லை. உதாரணத்திற்கு கருக்கலைப்பு குறித்த விவாதம் எழுந்தபோது, டொனால்டு டிரம்ப் அதை ‘ஜனநாயக (கட்சியினரின்) தீவிரவாதம்’ எனக் குறிப்பிட்டார். மேலும், பைடன் கட்சியின் தலைவர்கள் குழந்தைகள் பிறந்த பிறகு, கருக்கலைப்பை ஆதரிப்பதாக, தவறான தகவலைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பைடன் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதைச் செய்ய பைடன் தவறிவிட்டார். விவாதத்தின்போது பல நேரங்களில் பைடனின் குரல் கரகரப்பாக இருந்தது, இதற்கு கடந்த சில தினங்களாகவே அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவே காரணம் என, அவருடைய பிரசார அதிகாரிகள் தெரிவித்தனர். பைடன் விவாதத்தின்போது சில நேரங்களில் தடுமாறியதாகவும் அவருடைய வாதங்கள் தட்டையாக இருந்ததாகவும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தின் ஆரம்பத்தில் அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமற்றதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வயதைக் கடந்து தனக்கு போதிய ஆற்றல், வலு இருப்பதாக நிரூபிக்க பைடன் தவறிவிட்டார் என ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c8vdpnvg6e8o
    • Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 03:30 PM   மன்னாரில் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்கள் மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவ் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (28) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கனிய மண் அகழ்விற்காக  உள்ளூர் காணி முகவர்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் காணி அபகரிக்கப்படுவதாக பல்வேறு விதமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சில குழுக்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் அதிகாரத்தை உபயோகித்தும் சாதாரண மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு ஆட்சி  உறுதிகளையும் எழுதுவதாகவும் கூறுகின்றனர். அது மாத்திரமின்றி சில காணிகளுக்கு பயன்பாட்டில் இல்லாத வேறு உறுதிகளை எல்லைகளை மாற்றி  குறித்த இடங்களில் நில அபகரிப்பிலும் ஈடுபடுகின்றனர் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆதாரங்களோடு குற்றம் சாட்டுகின்றனர். இதில் இவ்வாறு முறைகேடான உறுதிப் பத்திரம் தயாரிப்புகளை சில சட்டத்தரணிகள் மேற் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பல கோடி ரூபாய் பெறுமதிக்கு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு கனிய மண் அகழ்வில் ஈடுபட உள்ள இலங்கை முகவர் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் இவ்வாறான மோசடி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.  இவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்ற மக்கள் எங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  இந்த மோசடி கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.  ஆகவே, நில அபகரிப்பாளர்களுக்கு அஞ்சாமல் முன்வருமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187181
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.