Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்பம் கடினமாக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கும்- ஜனாதிபதி ரணில் கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் கடினமாக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கும்- ஜனாதிபதி ரணில் கூறுகிறார்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  த எகானாமிஸ்ட் ஆகஸ்ட் 14 அன்று கொழும்பில் நேர்காணலை மேற்கொண்டுள்ளது.

அப்பேட்டியில் ஜனாதிபதி விக்கிரமசிங்க , பொருளாதார ரீதியில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருபெரும் பலம் வாய்ந்த நாடுகளின் நலன்சார்ந்த விடயங்களை இலங்கை சமாளிக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் நாட்டை எதிர்காலத்தில் உயர்ந்த வருமானம் பெறும் நாடாக மிளரச்செய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக உரையாடியுள்ளார்.

பேட்டி வருமாறு;

த எகனோமிஸ்ட் : எங்களைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்பு நாங்கள் இங்கு வந்திருந்தோம்,இது ஒரு நெருக்கடியான நிலையிலுள்ள நாடு என்பது தெளிவாகத் தெரிந்தது.நேற்றிரவு[சனிக்கிழமை ] நாங்கள் பிரவேசித்தோம் ,உணர்வு மிகவும் மாறிவிட்டது. இது வீதியில் ,விமான நிலையத்திலிருந்து உள்ளே செல்லும் வழியில் தெரிகிறது .அந்த மாற்றத்தை ஏற்படுத்த ஜூலை 21 முதல் என்ன நடந்தது?

ரணில் விக்கிரமசிங்க: முதலாவதாக, மக்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.நிறைய பேர் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.வேலை செய்பவர்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்கு முறைப்பாடுகள் இருந்தன.ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெளியேறியபோது அவர்கள் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கத் தயாராக இருந்தனர்.ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பு ரீதியாக நடந்தது,பாராளுமன்றம் வாக்களித்தது மற்றும் தற்போதுள்ள அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது .இதனால் குழு முறைமைக்குள் வெளியில் உள்ளவர்களைக் கொண்ட அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்க முடியும்.அதற்கான சில புதிய வழிமுறைகளை உருவாக்குவோம்.நாங்கள் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியும்.மேலும் அவர்கள் அதிலிருந்து விரைவில் வெளியேற விரும்புகிறார்கள்.அரகலயவை [எதிர்ப்பு இயக்கத்தை] ஆதரித்தவர்களும் கூட, மே மாத இறுதியில் இருந்து,அவர்கள் [குழப்பத்தால்] சோர்வடைந்து கொண்டிருந்தனர்.மேலும் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடந்த வன்முறையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

த எகனோமிஸ்ட் : நாட்டில் அதிக எரிபொருள் உள்ளது,கியூஆர் குறியீடு முறைமை பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரிகிறது.எரிபொருள் வரிசைகள் மறைந்துவிட்டன.வீதியில் அதிக கார்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளன.நாட்டின் மனநிலையை மாற்ற கடந்த மூன்று வாரங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

ரணில் விக்கிரமசிங்க :முதலில், நாம் எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருந்தது.இரண்டாவதாக, நாங்கள் அனைவரையும் சென்றடைகிறோம். அரகலயவின் அமைதியான போராட்டக்காரர்கள் கூட வரவேற்கப்பட்டனர்.அனைத்து மாற்றங்களையும் பார்க்க மக்கள் கூட்டங்களை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.மேற்பார்வைக் குழுக்களுக்கான புதிய நிலையியல் கட்டளையில் நான்கு இளைஞர் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்படுகிறது.தலைவரின் அனுமதியுடன் அவர்கள் கேள்விகளைக் கேட்கலாம்.அவர்கள் அறிக்கையை பெற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், அவர்கள் தங்கள் கருத்துக்களை அதில் பதிவு செய்யலாம்.மேலும் அனைத்துக் கட்சி நிர்வாகத்தில் உள்ள சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதை உறுதி செய்வதில் பாராளுமன்றமே போராடி வருகிறது.

த எகனோமிஸ்ட் : அப்படிப்பட்ட அரசாங்கத்தை அமைப்பது உங்களுக்கு மிகவும் முக்கியம் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.இதில் என்ன முக்கியம்உள்ளது ?மற்றும் அதை சிக்கலாக்குவது எது?

ரணில் விக்கிரமசிங்க : இங்கே ஒரு பெரிய நெருக்கடி இருக்கிறது.அப்படியானால், கட்சிகளை ஒன்றிணைந்து செயற்பட வைப்பது எவ்வாறு?அவர்கள் அனைவரும் விரும்பியதையே [நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும்] 22வது திருத்தத்தை முன்வைப்பதில் நான் முன்னிலை வகித்தேன்.எனவே நாங்கள் அதைக் கொண்டு வருவோம்.பின்னர் அவர்கள் விரும்பினால், புதிய அரசியலமைப்புக்கான புதிய ஆய்வை மேற்கொள்ளலாம்.நான் அதைத் தெரிவுக்குழு,மேற்பார்வைக் குழு முறைமை மற்றும் ஐரோப்பிய பேரவை போன்ற மாதிரியான ஒரு புதிய தேசிய பேரவையுடன் ஒன்றாகக் கொண்டு வந்தேன்.மேலும், எங்களுக்கு கட்சி ஆதரவு உள்ளது என்பதை அரசு அறியும் வகையில்,பொதுவான குறைந்தபட்ச திட்டத்திற்கு பின்வாங்க முயற்சிப்போம்.ஏனைய பிரச்சினைகளை மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் விவாதிக்கலாம்.கட்சித் தலைவர்களை உள்வாங்க வேண்டும் என்பதற்காகவே, கண்காணிப்புக் குழுவின் தலைவர்கள் சிலரையும், தேவைப்படும்போது அமைச்சரவைக்கு அழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.

த எகனோமிஸ்ட் : இந்த அனைத்துக் கட்சி அரசை அமைப்பதில் எது தடையாக இருக் கின்றது ?

ரணில் விக்கிரமசிங்க :நாங்கள் கலந்துரையாடல்களில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறோம், ஒவ்வொரு கட்சியும் இப்போது வெவ்வேறு குழுக்களில் உள்ளன.இது கட்சிகளின் பிரச்சினை மட்டுமல்ல, குழுக்கள் மற்றும் அவர்களின் பார்வை.நாடு நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான பொறுப்பு பாராளுமன்றத்தையே சாரும்.சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை கூட நான் பாராளுமன்றத்திற்கு பாரப்படுத்துகிறேன்.யாரிடமாவது சிறந்த முன்மொழிவுகள் இருந்தால்,நிச்சயமாக நாங்கள் அவற்றைப் பார்க்கிறோம்.இல்லையேல் உள்ளதை வைத்து முன்னேற வேண்டும்.

த எகனோமிஸ்ட் : சமீப வாரங்களில் அது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதையும்,அரசாங்கக் கடனைக் குறைக்க, பற்றாக்குறையைக் குறைத்து, மேலதிகத்தை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றி நீங்கள் மிகவும் நேர்மையாக இருந்தீர்கள்.உறுதியான படிகள், பொருளாதாரக் கொள்கையில் பாராளுமன்ற முன்னுரிமைகள், நீங்கள் முதலில் சமாளிக்க வேண்டிய சில விடயங்கள் யாவை?

ரணில் விக்கிரமசிங்க :எங்களுக்கு புதிய வரிகள் மீது பொது நிதி சட்டமூலம் தேவை, பின்னர் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்.எனது எண்ணம் ஆழமானதும் மிகவும் போட்டித்தன்மையுள்ள ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கான சட்டமியற்றும் கட்டமைப்பை உருவாக்குவது,பின்னர் 2024 ஆம் ஆண்டளவில் மீட்சி பெறுவதை உறுதி செய்வது.அதிகளவு உறைநிலை எடுத்தல் .இதை இழுத்தடிப்பது கவுரமானது அல்ல.ஆனால் நீங்கள் மீட்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

த எகனோமிஸ்ட் : ஆழமான நடவடிக்கை என்று நீங்கள் எதனை அர்த்தப்படுத்துகிறீர்கள் ?

ரணில் விக்கிரமசிங்க :நீங்கள் மாற்றங்களைச் செய்யும்போது, அதை ஆழமாக்குங்கள், நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்து பின்னர் அவை வெளிவர அனுமதிக்கவேண்டும்.தாய்லாந்து அதைச் செய்தது, ஆனால் தாய்லாந்தில் வங்கி நெருக்கடி மட்டுமே இருந்தது.அவர்களுக்கு பட்ஜெட் நெருக்கடி இல்லை. எங்களிடம் இரண்டும் உள்ளன.ஆனால் எப்படியாவது அதைச் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

த எகனோமிஸ்ட் :போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்திற்காக சட்டரீதியான கட்டமைப்பை நிறுவ வேண்டும் என்று நீங்கள் கூறுவது குறித்து நடைமுறையில் என்ன அர்த்தம்?

ரணில் விக்கிரமசிங்க :முதலில், பட்ஜெட். உங்கள் துண்டு விழும் தொகையை குறைக்க நீங்கள் நிதி மற்றும் பண நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்.அதேநேரத்தில், அதிக போட்டித்தன்மை கொண்ட, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை நீங்கள் பார்க்க வேண்டும்.இதை 1977ல் நான் அமைச்சரவையில் இருந்தபோது செய்தோம். பொருளாதாரத்தை திறந்து விடுவதற்கு சட்டம் கொண்டு வந்தோம்.

த எகனோமிஸ்ட் : குறுகிய காலத்திற்கு, வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரி, வற் , அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகியவற்றில் இரண்டு அல்லது மூன்று உதாரணங்களை கூற முடியுமா?

ரணில் விக்கிரமசிங்க :நீங்கள் வரிகளை உயர்த்த வேண்டும்,நீங்கள் மூலதனத்திற்கு வரி விதிக்க வேண்டும்,செல்வத்திற்கு வரி விதிக்க வேண்டும்.வரி கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும்.மேலும் இது இழந்த வருவாயில் சிலவற்றைக் கொண்டுவரும்.அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில், நாங்கள் அதையே பெறுவோம், அல்லது 2018 இல் இருந்த வரிகட்டமைப்பை தாண்டிச் செல்வோம்.

த எகனோமிஸ்ட் : இலங்கை, 25 ஆண்டுகளில் உயர்நடுத்தர வருமானம் பெறும் நாடாக மட்டுமல்லாமல் , உயர் வருமானம் பெறும் நாடாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதைச் செய்ய நீங்கள் இப்போது செய்ய வேண்டிய சில விடயங்கள் யாவை?

ரணில் விக்கிரமசிங்க :நீங்கள் எப்படிஆரம்பிக்கிறீர்கள் என்பது பற்றிய கேள்வி இது? அதற்கு முன், வங்கிகளின் முழுப் பிரச்சினையையும் நாம் கையாள வேண்டும்.நாங்கள் இப்போது சில அரசு சொத்துக்களை அகற்றுவதைப் பார்க்கிறோம்,இதனால் எங்களுக்கு சுமார் 2பில் .டொலர் -3பில். டொலர் கிடைக்கும்.அதுதான் அடித்தளம். பின்னர் ஆரம்பிக்க , 2018-19 இல் நாங்கள் பயன்படுத்திய சில அறிக்கைகளை நீங்கள் செயற்படுத்தலாம், ஆனால் அடிப்படையில் உங்களை பிராந்தியத்துடன் ஒருங்கிணைத்துக்கொள்ளலாம்.தெற்காசியாவிலேயே பிராந்திய ஒருங்கிணைப்பை என்னால் அதிகம் காண முடியவில்லை.எனவே ஆசியான் [தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு] மற்றும் ஆர் சி ஈ பி [பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், ஆசிய வர்த்தக ஒப்பந்தம்] ஆகியவற்றுடன் நெருக்கமான உறவுகளைப் பார்ப்போம்.

த எகனோமிஸ்ட் : இலங்கை விமான நிறுவனங்களைத் தவிர, தனியார்மயமாக்கப்படக்கூடிய சில அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் என்ன?

ரணில் விக்கிரமசிங்க :சரி, நீங்கள் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸை விற்கலாம், தொலைத்தொடர்புகள் உள்ளன.பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நாம் என்ன செய்கிறோம் என்பது வேறு கேள்வி.

த எகனோமிஸ்ட்;எனவே பெற்றோலிய சந்தையை ஏனையவர்களுக்கு திறக்கவா?

ரணில் விக்கிரமசிங்க : ஆம், நாங்கள் முதலீடுகளைத் திறப்போம்,ஆனால் சில சலுகைகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதால், அனைத்து சலுகைகளை வைத்திருப்பவர்களிடமும் பேச வேண்டும்.கடல்சார் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் சட்டங்களும் மாற வேண்டும்.அதற்கான முன்மாதிரியாக அயர்லாந்தை பார்க்கிறோம்.

த எகனோமிஸ்ட் : நீங்கள்உடனடியாக கொண்டு வரப்போகும் சில சட்டங்கள் என்ன?

ரணில் விக்கிரமசிங்க :அமெரிக்காவின் அத்தியாயம் 11 வங்குரோத்து சட்டம் போன்ற ஒரு சட்டம் மிக உடனடியான ஒன்றாகும்.மீதமுள்ளவை பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றியவை.நிலைமையைச் சமாளிக்க அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுள்ளோம்.

த எகனோமிஸ்ட்: நீங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாக சொன்ன சில சட்டங்களை குறிப்பிட்டுள்ளீர்கள்.அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

ரணில் விக்கிரமசிங்க :இந்த செயல்முறை 2024 வரை தொடரும்,நிறுவனச் சட்டம் திருத்தப்பட வேண்டும்,நிறைய வணிகச் சட்டங்கள் உள்ளன, நாங்கள் எளிதாக வணிகம் செய்யப் பார்க்கிறோம்.அதனால் பல கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும். ஒரு அடிப்படைப் பொருளைக் கூட எப்படிச் செயற்படுத்துவது என்பதற்கு எத்தனையோ சட்டங்கள் உள்ளன.எத்தனையோ அதிகாரங்கள் தாங்களாகவே இயங்குகின்றன.நான் முதலீட்டு சபையை பார்க்கிறேன்.இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டு முயற்சியை நாம் பார்க்க வேண்டும்.எனக்கு அதில் திருப்தி இல்லை. நாங்கள் போட்ட பணம் திரும்ப வரவில்லை.எனவே ஒரு விதத்தில் இது ஒரு பேரழிவு என்று நான் நினைக்கிறேன்.ஆனால் 1977 இல் செய்ததைப் போல புதிதாக ஒன்றை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும்.

த எகனோமிஸ்ட் : சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் ஒரு பகுதியைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருந்த விடயங்கள் எவ்வளவு, அதையும் தாண்டி எவ்வளவு தூரம் செல்லமுடியும் ?

ரணில் விக்கிரமசிங்க :நான்கு ஆண்டு ஒப்பந்தத்துக்கான கோரிக்கை எப்போதும் அட்டவணைப்படுத்தப்படுகிறது.எனவே நாம் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.இது மறுசீரமைப்பிற்கான அடிப்படையாக இருக்கும், பின்னர் நாம் அதை உருவாக்க முடியும்.

த எகனோமிஸ்ட்: நீங்கள் பேசும் சில விடயங்களைப் பார்க்கும்போது,நீங்கள் உடனடி சூழ்நிலையை மட்டும் கையாள்வதில்லை.ஆனால் இலங்கைக்கு வலுவான அடித்தளம் இருப்பதை உறுதி செய்வது போல் தெரிகிறது.

ரணில் விக்கிரமசிங்க: ஒரு வலுவான அடித்தளமாகும்.நாங்கள் அப்போது இருக்க மாட்டோம்.ஆனால் ஒரு நாள் உயர் வருமானம் கொண்ட நாடாக மாறுவோம்.

த எகனோமிஸ்ட்: ஆகஸ்டில் வரவிருந்த நாணய நிதிய ஒப்பந்தம்,செப்டம்பரில்தான் இருக்கப் போகிறது என்றீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க: நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.மூன்று விடயங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.குழு வருகிறது, பின்னர் நீங்கள் லாசர்ட் மற்றும் கிளிபோர்ட சான்ஸ் [இலங்கையின் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள்] உடனான கலந்துரையாடலையும் மேற்கொள்கிறீர்கள்.பிரச்சனை என்னவென்றால், ஜூலை மாத இடையூறுகள் இதைத் தொடர வேண்டிய காலத்தைப் பின்னுக்குத் தள்ளியது.

த எகனோமிஸ்ட் : செப்டம்பரிலிருந்து காலவரிசை எப்படி இருக்கும்?

ரணில் விக்கிரமசிங்க : சபை இணக்கத்தை பெற முடிந்தால், ஏனைய சில நிறுவனங்களில் முன்பணத்தைப் பெற்று, தவணை வரும் வரை எங்களிடம் கொஞ்சம் பணத்தைப் பெறலாம்.ஆனால் அதை விட, இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும்.வேறு சில நாடுகளுடனும் பேசுகிறோம்.அதன்பின் முக்கிய பிரச்சினை கடன் நிலைத்தன்மை.முதலில், நாங்கள் இதை முக்கிய அதிகாரபூர்வ நன்கொடையாளர்களுடன் சமாளிக்க வேண்டும், பின்னர் முதல் முறையாக, நீங்கள் லண்டன் கிளப்புக்கு [தனியார் கடன் வழங்குநர்களின்] செல்ல வேண்டும்.

த எகனோமிஸ்ட் : உடன்படிக்கை இடம்பெறுமா என்பதை எது தீர்மானிக்கும்?

ரணில் விக்கிரமசிங்க : நிலுவையில் உள்ள சில பிரச்சினைகள் உள்ளன. கடன் நிலைத்தன்மை, நாம் வழங்கிய அளவுகோல்கள், வரிவிதிப்புக்கான சில சலுகைகள் போன்றவை இருக்கின்றன.

த எகனோமிஸ்ட் :இந்தியாவின் உதவியைப் பற்றி நீங்கள் பத்திரிகைகளில் மிகவும் பாராட்டி இருக்கிறீர்கள்.ஏனைய இருதரப்பு கடன் வழங்குபவர்கள் எவ்வளவுக்கு அனுதாபம் காட்டுகிறார்கள்?

ரணில் விக்கிரமசிங்க :அவர்களில் பலர் உள்ளனர்.ஆனால் முதலில் நாணய நிதியத்துக்குக்கு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.இந்த நெருக்கடியை இலங்கை தான் அனுமதித்ததாக அவர்கள் கருதினர்.நாணய நிதிய உடன்படிக்கை கிடைத்தவுடன் இன்னும் உதவி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

த எகனோமிஸ்ட் : சீனாவிற்கும் சம்பியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தால் நீங்கள் ஊக்குவிக்கப்படுகிறீர்களா?

ரணில் விக்கிரமசிங்க :ஆம், ஆனால் இது குறைந்த வருமானம் கொண்ட மாடலுக்கானது, நாங்கள் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டில் இருக்கிறோம்.

த எகனோமிஸ்ட் : பொருளாதாரத்திலிருந்து நகர்ந்து சென்றால், அம்பாந்தோட்டையில் நிறுத்தப்படவிருக்கும் சீனக் கப்பல் மட்டுமல்லாமல் , கொழும்பில் தரித்து நிற்கும் பாகிஸ்தானியக் கப்பலைப் பற்றியும் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியப் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்துள்ளன.இப்போது இலங்கையானது ஏதோ ஒரு பெரிய ஆசிய சக்தியுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள முடியாது.ஆனால் பெரிய சக்திவாய்ந்த அண்டை நாடுகளின் போட்டியிடும் நலன்கள் விவகாரத்தில் சமநிலையை எவ்வாறு சமாளிப்பது ?

ரணில் விக்கிரமசிங்க : குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா சீனாவிற்கிடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு இது இப்போது மிகவும் கடினமாகி வருகிறது.ஐரோப்பிய தரப்பில் அழுத்தம் அதிகரிப்பதை நீங்கள் காணலாம்.அதிலும் குறிப்பாக இந்தப் போட்டியானது இந்துசமுத்திரத்துக்குள் வரலாம் என்பதுதான் எனது கவலை.நாங்கள் இதுவரை இந்து சமுத்திரத்தில் இருந்து அதிகாரப் போட்டியை விலக்கி வைத்துள்ளோம்.ஆனால் அந்தச் சூழலை நாம் எதிர்கொண்டு அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.இலங்கை, நிச்சயமாக, இந்தியாவுடன் ஒரு விசேடமான உறவைக் கொண்டுள்ளது.அங்கு நாம் ஒருவருக்கொருவர் நலன்களைக் கவனிக்க வேண்டும்.ஆனால்,சமுத்திரத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் அதிகாரப் போட்டியிலிருந்து விலகி இருக்க விரும்புகின்றன. எனவே அதில் தெளிவாக இருக்க வேண்டும்.எமது கொள்கைகள் என்ன என்பதை சொல்ல வேண்டும்.

த எகனோமிஸ்ட் : அப்படியானால், பசிபிக் மற்றும் தென் சீனக் கடலில் நாம் காணும் சொல்லாடல்கள், அந்த மாதிரியான விடயங்களுக்கு அடுத்த இடம் இந்து சமுத்திரம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ரணில் விக்கிரமசிங்க : அது நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லை. உதாரணமாக, இப்போது நான்சி பெலோசி ஒரு நெருக்கடியை [தாய்வானில்] உருவாக்கியுள்ளார்.அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.ஆனால் அவர்கள் அவரை ஆதரிக்க வேண்டியிருந்தது.அப்படி எதுவும் இங்கு நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை.இப்பகுதியில் முழுமையான பாதுகாப்பு வழங்குநராக இந்தியாவை பார்க்கிறோம்.அது அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு வழிவகுக்காத வரை அல்லதுஅரசுகளுக்கு இடையிலான போட்டியை அதிகரிக்காத வரை ஏனைய எல்லா நாடுகளும் இருக்க முடியும்.

த எகனோமிஸ்ட் : இதை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதில் ஏனைய நாடுகளுக்குப் படிப்பினைகள் உள்ளதா?

ரணில் விக்கிரமசிங்க : நாம் என்ன செய்தோம் மற்றும் செய்யாதவற்றிலிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும்.

த எகனோமிக்ஸ்ட் : கடந்த சில மாதங்களில் மேற்குலக வெளியீடுகள் பல நாடுகளில் கடனை திரும்ப செலுத்த தவறும் நிலைக்கு முதன் முதலாக இலங்கை இருக்கக்கூடும் என்று எழுதின.அதே வகையில், 2022 இன் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பொருளாதார ரீதியாக கடந்த சில மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் செய்த சில தவறுகளைத் தவிர்ப்பதற்கு ஏனைய நாடுகளுக்கு என்ன பாடங்கள் உள்ளன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க :பல பாடங்கள் உள்ளன.உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு நாளும் பொருட்களுக்கு மானியம் வழங்க முடியாது.உங்களிடம் பணம் இல்லாமல் போகும். இரண்டாவது,வர்த்தக சமநிலை.சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது வர்த்தக சமநிலையில் எமக்கு அதிக தீமைகள் இருப்பதால், இது எம் அனைவருக்கும் பெரிய பிரச்சினை. எங்கள் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.முதலீட்டை ஈர்ப்பதற்காக நாம் நமது பொருளாதாரத்தை தடத்தில் வைக்க வேண்டும்.ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக: பங்களாதேஷுக்குச் செல்வதற்கான காரணம் இலங்கைக்கு வருவதற்கான காரணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், பிராந்தியத்தில் உள்ள சிறிய பொருளாதாரங்கள் ,நீங்கள் சரியான நேரத்தில் நாணய நிதியத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்,நீங்கள் வெளிநாட்டுக் கடனைப் பற்றி கவனமாக இருங்கள்.கடனை செலுத்தமுடியாத நிலையை தடுக்க விரும்பினால், அடிப்படையில் அரசாங்கங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

த எகனோமிஸ்ட் : பொருளாதாரத்தை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் விடயத்தில், உங்கள் சகாக்களாக யாரைப் பார்க்கிறீர்கள், அல்லது உண்மையில் உங்களில் செலுத்துபவர்கள் அல்லது போட்டியாளர்கள்?

ரணில் விக்கிரமசிங்க : நாங்கள் சிங்கப்பூரைப் போல இருக்க விரும்புகிறோம்.ஆனால் தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமின் தரத்தைப் பின்பற்றுவதன் மூலம் இப்போது தொடங்குவோம்.

த எகனோமிஸ்ட் : நீங்கள் முன்பு கதைத்ததை பொறுத்தவரை, பொருளாதாரத்தை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றுவதற்கான முடிவுகளை எடுப்பது, கடன் மற்றும் பற்றாக்குறையைக் குறைப்பது, இவை அனைத்தும் வேதனையான முடிவுகளாக இருக்கும்.இந்த அரசியல் அமைதியின்மை காலத்தின் பின்னர் இலங்கையர்களை எவ்வாறு உங்களுடன் அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க : என்ன நடக்கிறது என்பதில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும், மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீங்கள் எவ்வளவு பணத்தை ஒதுக்குகிறீர்கள்? அதாவது, இது மோசமானது என்பதை மக்கள் உணர்கிறார்கள், அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள், நீங்கள் விரைவாக வெளியேறலாம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கலாம், பின்னர் அது ஒரு காலத்திற்கு கடினமாக இருக்கும்.ஆனால் அவர்களை விரைவாக வெளியேற்றுவது நாம் செய்ய வேண்டியது, நம்பிக்கை உள்ளது.நீங்கள் ஒரு திடமான மாற்றீட்டை வழங்க முடியாவிட்டால் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை நீங்கள் நிராகரிக்க முடியாது.

த எகனோமிஸ்ட் : ஆனால், எவ்வளவு மோசமான விடயங்கள் மற்றும் எவ்வளவு கடினமாகப் போகிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்தவுடன், மீண்டும் விரோதம் அல்லது எதிர்ப்புகள் ஏற்பட்டால் அதை எப்படிச் சமாளிப்பது?அதைப் பற்றி நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க:நான் குறிப்பாக உணவைப் பற்றி கவலைப்படுகிறேன். மக்களுக்கு உணவு தேவை,அவர்கள் பட்டினி கிடப்பதை நாங்கள் விரும்பவில்லை. நடுத்தர வர்க்கம் விரிவடைந்து வருகிறது,இப்போது நாம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் குறைப்புகளை செய்ய வேண்டியுள்ளது.வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்கள் அதற்குக் கீழே விழுந்துவிட்டதால்,அவர்களுக்கு குறுகிய காலத்தில் நாம் ஆதரவளிக்க வேண்டும்.சில அரச சொத்துக்களை அப்புறப்படுத்தி அந்த பணத்தை எமது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

த எகனோமிஸ்ட் : ஆனால் இது கடினமான செய்தி, இல்லையா?அதாவது, கடந்த ஆறு மாதங்கள், 12 மாதங்கள் ஆகியவற்றுக்கும் பிறகு, “உங்களுக்கு என்ன தெரியும், இப்போது இன்னும் சிறிது காலத்திற்கு விடயங்கள் இன்னும் கடினமாக இருக்கும் என்று மக்களிடம் சொல்ல வேண்டுமா?

ரணில் விக்கிரமசிங்க : மக்களுக்குத் தெரியும், அதாவது, அடிப்படையில், நாங்கள் அவர்களிடம் உண்மையைச் சொல்கிறோம், நாங்கள் கடினமான நேரத்தை எதிர்கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்கிறோம் .

த எகனோமிஸ்ட் : இதைப் பற்றி மக்களிடம் கூறும்போது உங்கள் அனுபவம் என்ன?

ரணில் விக்கிரமசிங்க :நான் சில தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளேன்.

த எகனோமிஸ்ட் : அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புடன், குறிப்பாக, தொழிற்சங்கங்கள் மிகவும் விரோதமாக உள்ளனவே?.

ரணில் விக்கிரமசிங்க : தொழிற்சங்கங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை, முக்கியமானது மக்களே .மக்கள் நிலைமையை மேம்படுத்த முடியும் என்று நினைத்தால் அதைத் தாங்குவார்கள்.

த எகனோமிஸ்ட் :முன்னைய அரசாங்கம் செய்த காரியங்களில் ஒன்று, விடயங்கள் மோசமாக இல்லை என்று பாசாங்கு செய்ததாகும்.நிச்சயமாக, மக்கள் முட்டாள்கள் அல்ல.விடயங்கள் மோசமாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்,அவர்கள் வீதிக்கு வந்தனர்.மக்களிடம் நேர்மையாக இருப்பதன் மூலம், “இதோ, நான் உங்களை நிலை நிறுத்தப் போகிறேன்,இது தான் நடக்கிறது என்று சொல்வதன் மூலம், எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை,ஏனென்றால் அதுதான் விடயங்கள் என்பது அவர்களை நம்ப வைக்குமா ?

ரணில் விக்கிரமசிங்க :நான் நம்புகிறேன்.அவர்கள் விரும்பும் முறைமையில் மாற்றங்களைப் பெறுவது, அவற்றைப் பற்றி கலந்துரையாடுவது அரசியல் முறைமையை ஆரம்பிப்பது போன்ற ஏனைய அரசியல் பிரச்சினைகளையும் நாங்கள் பார்க்கிறோம்.

த எகனோமிஸ்ட் : நீங்கள் இராணுவத்துடன் மிகவும் சுமுகமான உறவுகளை வளர்த்துக் கொள்ளத் தொடங்கிவிட்டீர்கள்.இது உண்மையில் மக்களுக்கு உங்களைப் பற்றிப் பழகிய ஒரு விடயமல்ல.அது தொடர்பாக எங்களிடம் பேச முடியுமா?

ரணில் விக்கிரமசிங்க; நான் இராணுவத்துடன் அன்பான உறவுகளை கொண்டிருக்கவில்லை.ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் எனக்கு சில செயற்பாடுகள் உள்ளன.அந்தச் சான்றிதழ்களை பாராளுமன்றத்தைப் பாதுகாக்கும் எயார் மொபைல் படையணிக்கு கொடுத்ததைத்தான் நான் செய்தேன்.நாளை நான் ஜனாதிபதி என்ற முறையில் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இந்தியர்களால் எங்களிடம் வழங்கப்பட்ட டோர்னியர் விமானங்களை ஒப்படைக்கப்போகிறேன். மற்றும் யார் மொபைல் படையணி 1993 இல் நான் தொடங்கிய ஒன்று.அதனால் நான் அவர்களில் ஒருவராக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நான் பாதுகாப்பு சபைக்கு செல்கிறேன்,அதை நான் வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்.அதைத் தவிர, நான் செல்லும் சில நிகழ்வுகள் ஜனாதிபதி கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள் தான்.

த எகனோமிஸ்ட் : அப்படியானால் இராணுவத்துடனான உங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று நீங்கள் கூறமாட்டீர்களா?

ரணில் விக்கிரமசிங்க:இல்லை, அந்த ஒரு முறை நான் பாராளுமன்றத்தை பாதுகாத்த ஆட்களுக்கு சான்றிதழ்களை வழங்கினேன்.பாராளுமன்றம் சென்றிருந்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கும்.மேலும் படையினர் தங்கள் கடமையை செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை நான் கொடுக்க விரும்பினேன்.இப்போது எம்.பி.க்களும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

த எகனோமிஸ்ட் :டோர்னியர் விடயம் மிகவும் சுவாரஸ்யமானது,ஏனென்றால் மீண்டும், இலங்கை இந்த சமநிலைச் செயற்பாட்டை செய்கிறது.கொழும்பில் இந்தக் கப்பல் ஒருபுறம், அம்பாந்தோட்டையில் அந்தக் கப்பல் இருக்கிறது,பின்னர் ஜனாதிபதி சென்று இந்தியர்களிடமிருந்து கண்காணிப்பு விமானங்களை ஏற்றுக்கொள்கிறார்.இதை நான் சமநிலை என்று சரியானமுறையில் விளக்குகிறேனா?

ரணில் விக்கிரமசிங்க :இந்தப் பகுதியின் கடல் பாதுகாப்பு தொடர்பான கொழும்பு உரையாடலில் நாங்கள் இந்தியாவுடன் ஈடுபட்டுள்ளோம்.மேலும் இது கடல்சார் கண்காணிப்பு விமானங்களை வைத்திருப்பதன் மூலம் இலங்கையின் எல்லையை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாகும்.டோர்னியர் எங்கள் ஆட்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியாவால் வழங்கப்படுகிறது.ஆனால் நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.எரிபொருள் தட்டுப்பாடுதான் இப்போது பிரச்சனை.எமது கடற்படையால் முழு திறனுடன் செயல்பட முடியவில்லை.படகில் செல்வோர் தொடர்பாக அவுஸ்திரேலியர்களுடன் இதேபோன்ற நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.நாங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு பெரிய எண்ணிக்கையை இடைமறிக்கிறோம்.ஆட்கள் வரும்போது நான் பாதுகாப்பு அமைச்சிற்கு செல்கிறேன், ஒவ்வொரு வாரமும் 40, 50, 60 பேர் இங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சி செய்கிறார்கள்.எனவே, நாங்கள் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

த எகனோமிஸ்ட் : பாதுகாப்பு அமைச்சை ஏன் உங்கள் பொறுப்பில் ஒரு பகுதியாக வைத்திருக்க முடிவு செய்தீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க :பாதுகாப்பு அமைச்சு அடிப்படையில் ஜனாதிபதியின் வசம் உள்ளது மற்றும் நான் சட்டத்தையும் ஒழுங்கையும் ஸ்திரப்படுத்தவும் நிலைநாட்டவும் அதை நான் பொறுப்பேற்றேன்.ஆனால் பாதுகாப்பு கட்டமைப்பிலும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.நாங்கள் 2030 இல் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறோம்,அன்றிலிருந்து அதை உட்பொதித்துள்ளோம்.இது நாம் செய்ய வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாகும்.

த எகனோமிஸ்ட் : அப்படியானால் இலங்கைக்கான பாதுகாப்பு முன்னுரிமைகள் என்ன?

ரணில் விக்கிரமசிங்க : முதலாவதாக, இங்கு பாதுகாப்பைப் பராமரிக்க பொலிஸ் , சிவில் அதிகாரத்திற்கு உதவ வேண்டும்.இரண்டாவதாக, நாங்கள் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கடல்சார் தரப்பில் வேலை செய்கிறோம். ஆனால் நாங்கள் வெளிப்புறமாகப் பார்க்கிறோம்.நாங்கள் இப்போது மாலியில் இருக்கிறோம் மற்றும் ஐ.நா அமைதி காக்கும் படைகளில் எங்கள் பங்கை விரிவுபடுத்துகிறோம்.மாலியில் நாங்கள் நன்றாக இருக்கிறோம்.எனவே நாம் அதை விரிவுபடுத்தலாம்.அங்கே எமக்கு எதிர்காலம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.ஆனால் நாம் பாதுகாப்பு பட்ஜெட்டையும் வைத்திருக்க வேண்டும்.

த எகனோமிஸ்ட் : பாதுகாப்பு பட்ஜெட்டில், நீங்கள் குறைப்பனவுகளை செய்ய வேண்டிய சாத்தியமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.அதை எப்படி செய்யப் போகிறீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க : பாதுகாப்புச் செயலாளரும் ஏனையவர்களும் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

த எகனோமிக்ஸ்: பயங்கரவாதம் என்ற தலைப்பில், நீங்கள் பிரதமராக இருந்தபோது நீங்கள் கூறிய ஒரு விட யம்,2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றி முழுமையான முறையான விசாரணையை நடத்துமாறு பிரிட்டிஷ் உளவுத்துறையைக் கேட்டுக் கொண்டதாகும்.

ரணில் விக்கிரமசிங்க : ஆம்,உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் பற்றிய இந்த விசாரணைகளில் பிரிட்டிஷ் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.இதில் பல பிரச்னைகள் எழுப்பப்பட்டுள்ளன.இறுதி மதிப்பாய்வைச் செய்வதற்கான உதவியைப் பெற நாங்கள் பிரிட்டனிடம் பேசுகிறோம்.என்ன நடக்கிறது என்பது பற்றிய அவர்களின் கருத்துக்கள் எங்களிடம் இல்லை.

த எகனோமிஸ்ட் : அப்படியானால்,அது உத்தியோகபூர்வமாக இறுதி செய்யப்பட்டதென அதை நிறுத்தி வைப்பதா?

ரணில் விக்கிரமசிங்க :ஆம்.

த எகனோமிஸ்ட் : சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை செயற்பாட்டில் உள்ள மாற்றங்களுக்குத் திரும்பிச் செல்வோம்.நீங்கள் மாத இறுதியில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.பின்னர் செப்டம்பரில் சிறிது நேரம் அலுவலர் நிலை ஒப்பந்தம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?அது எப்படி நடக்கிறது? நீங்கள் ஏற்கனவே பல்வேறு கடன் வழங்குநர்கள், இருதரப்பு, தனியார் போன்றவர்களிடம் பேசுகிறீர்களா?

ரணில் விக்கிரமசிங்க : நாங்கள் உத்தியோகபூர்வமாக கடன் வழங்குபவர்களிடம் பேசுகிறோம்.ஒருவேளை இந்த வாரம் சிலசமயம் நான் தனிப்பட்ட கடன் வழங்குநர்களுக்கு எழுதவிருக்கிறேன்.

த எகனோமிஸ்ட் : நீங்கள் அவர்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க : நாங்கள் அவர்களுக்கு நிலைமையை தெரிவிக்கிறோம்.

த எகனோ மிஸ்ட் : உங்களிடம் ஒரு கணிப்பு உள்ளது:இலங்கை எந்த கட்டத்தில் 2018 செழிப்பு நிலைக்குத் திரும்பும்? இலங்கையர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

ரணில் விக்கிரமசிங்க :ஒருவேளை 2024, 2025? ஆரம்பத்தில் 2024 என்று நினைத்தோம், ஆனால் 2023 உலகளவில் மோசமான ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது,எனவே அது 2024, 2025 ஆக இருக்கலாம்.

த எகனோமிஸ்ட் : மேலும் இலங்கையர்களுக்கு, 2022 ஐ விட 2023 சிறந்ததாக அல்லது மோசமான ஆண்டாக இருக்குமா?

ரணில் விக்கிரமசிங்க :ஆரம்பம் கடினமாக இருக்கும் என்று நான் கூறுவேன். ஆனால் முடிவு சிறப்பாக இருக்கும், வலியின் காலத்தை குறைக்க முயற்சிக்கிறோம். வருமானம் வந்துகொண்டே இருந்தால், அடுத்த மூன்று மாதங்களில் தெரியும், பிறகு முடிவு சிறப்பாக இருக்கும்.

த எகனோமிஸ்ட் :வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களால் பணம் அனுப்பப்படுகிறதா?

ரணில் விக்கிரமசிங்க :கொஞ்சமாகும்.ஆனால் அது அடுத்த ஆண்டு சிறப்பாக வரலாம், மேலும் சுற்றுலா வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்பும் உள்ளது.இந்த குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முயற்சிக்கிறோம், விலைகள் மலிவாக இருக்கும்.ஆனால் அடுத்த ஆண்டு முதல் கோடைக்காலமும், குளிர்காலமும் வரவேண்டும்.இந்த ஆண்டு,கட்டண ஈர்ப்பு இருக்கும்.அடுத்த ஆண்டு விலைகள் ஈர்க்கப்படாது என்று நம்புகிறேன்.

த எகனோமிஸ்ட் :எங்களின் முதல் கேள்விக்கு மீண்டும் வந்தால் கொழும்பில் உள்ள விடயங்களை குறைந்தபட்சம் மேம்படுத்தப்பட்டதாக காட்டுவதற்கு நீங்கள் உள்ளே வந்ததற்கும் இப்போதுக்கும் இடையே எடுத்த உறுதியான படிகள் என்ன?

ரணில் விக்கிரமசிங்க :அனைத்து கொந்தளிப்புகளுடனும் பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறாததால், இப்போது அது அதிகரித்து வருகிறது.அந்த பொருளாதார நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.எங்களிடம் மிகப் பெரியவிழா ,கூட்டங்கள் உள்ளன.மக்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள், அவர்கள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.அதனால் அவர்கள் மிகவும் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள்.ஆனால் கொந்தளிப்புகாலம் இங்கே இருந்தது. ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தது.அதாவது, ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் வெளியே தள்ளப்பட்டனர்.அவர்களில் பலர் என்னுடன் பேசினர்,ஏனென்றால் அவர்கள் அதிக வன்முறைக் கூட்டத்தை எடுக்க முடியாது.எனவே நாங்கள் இங்கே ஒழுங்கை மீட்டெடுத்தோம்.அந்த இடத்தை நாங்கள் மூடிவிட்டோம்.இளைஞர்கள் செல்லக்கூடிய மற்றொரு இடத்தை நாங்கள் இப்போது தயார் செய்கிறோம், ஒருவேளை ஒரு மாத காலத்திற்குள் நாங்கள் அதை தயார் செய்யலாம் என்று நம்புகிறேன்.

த எகனோமிஸ்ட் : எதிர்ப்புக்கென நியமிக்கப்பட்ட ஒரு தளமா?

ரணில் விக்கிரமசிங்க :ஆம், ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் அவர்கள் இங்கு வைத்திருந்த தளத்தைப் போலவே, வந்து நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் எவருக்குமாகும் .

த எகோனமிஸ்ட் : நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப நாட்களில், அந்த நபர்களில் சிலரை இங்குள்ள கட்டிடத்தின் முன் சந்தித்தோம்.நீங்கள் ஏதோ ஒருவகையில் ராஜபக்சக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் அல்லது பாதுகாக்கிறீர்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.இந்த மக்களிடையே இருக்கும் அத்தகைய உணர்வை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்?

ரணில் விக்கிரமசிங்க :நான் ஜனாதிபதி [சந்திரிகா] குமாரதுங்கவுடன் இணைந்து பணியாற்றினேன்.நான் முன்னைய தேர்தலில் [1999 இல்] போட்டியிட்டேன்.மேலும் [2001] தேர்தலில், நான் பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றேன்,அதனால் நாங்கள் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்தோம்.பின்னர் முழு விடயமும் பிரிந்தது. அடுத்த முறை நான் ஜனாதிபதி [மைத்திரிபால] சிறிசேனவுடன் சென்றேன்.அவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர்.ஆனால் நாங்கள் அவரை அழைத்துச் சென்றோம். எங்களுக்கு எங்கள் சொந்த பிரச்சினைகள் இருந்தன.எனவே நிலைமை ஏற்படும் போது மறுபக்கத்தில் இருக்கும் ஜனாதிபதிகளுடன் இணைந்து பணியாற்றுவதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன்.மேலும் சில அமைச்சர்கள் இரு தரப்பிலும் இதையே செய்திருக்கிறார்கள். நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் நான் உள்ளே வந்தேன், நாங்கள் அதை பொருளாதார ரீதியாக கையாள வேண்டியிருந்தது.மேலும் நான் முதல் தெரிவு கூட இல்லை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதனை வழங்கினர். அவர் அதை எடுக்க விரும்பவில்லை, அதனால் நான் உள்ளே வந்து பரந்த அடிப்படையிலான அரசாங்கத்தை கொண்டு வர முயற்சித்தேன்.

த எகனோமிஸ்ட் : நீங்கள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்போகும் சில சட்டங்கள் மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தப் போகிறது. நீங்கள் அதனூடாக அவர்களைத் கொண்டுசெல்ல முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ரணில் விக்கிரமசிங்க : நீங்கள் நாணய நிதியத்தை விரும்பவில்லை என்றால், நீங்கள் மாற்று திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்.

த எகனோமிஸ்ட்: 2020களில் அல்லது ஒருவேளை 2030களில் எதிர்கால ஜனாதிபதி ராஜபக்ச ஒருவரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

ரணில் விக்கிரமசிங்க :என்னால் எதிர்காலத்தைப் பற்றி பேச முடியாது.

த எகனோமிஸ்ட்: நீங்கள் ஜனாதிபதியாக வருவீர்கள் என்று நினைத்தீர்களா?

ரணில் விக்கிரமசிங்க :என் வீடு எரிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை,அதனால், உங்களுக்குத் தெரியும்.

த எகனோமிஸ்ட் : இது ஒரு நியாயமான பரிமாற்றமென நீங்கள் நினைக்கிறீர்களா?

ரணில் விக்கிரமசிங்க :இல்லை.

த எகனோமிஸ்ட் : நீங்கள் அரசியல் ரீதியாக வலுவாக இருக்கிறீர்கள், ஆனால் உணர்வுபூர்வமாக அதனை உணர்கிறீர்களா?

ரணில் விக்கிரமசிங்க : நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது நிச்சயமாக நீங்கள் அதை உணர்கிறீர்கள், உங்களிடம் படிக்க புத்தகங்கள் அல்லது கேட்க இசை இல்லை.

https://thinakkural.lk/article/202403

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.