Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடு விட்டு கூடு பூந்து -Dr. T. கோபிசங்கர்

Featured Replies

கூடு விட்டு கூடு பூந்து…

கிளீல பறந்து வந்த அருணகிரிநாதர் அதை நல்லூருக்கு மேல முகிலில center stand ஐப் போட்டு நிப்பாட்டீட்டு நேரத்தைப் பாத்தார் , மணிக்கூடு வேலை செய்யேல்லை. திடீரெண்டு நல்லூர் மணி கேக்க , “ ஐஞ்சு மணி ஆச்சிது, இப்ப சாமி உள் வீதி சுத்நும் “ எண்டு நெச்சபடி சுருதிப் பெட்டியோட கொஞ்சம் மெல்ல மெல்ல இறங்கி வந்தார். 

“ என்னப்பா நேரம் போட்டுது யாகம் பாக்க வேளைக்குப் போனாத்தான் இடம் கிடைக்கும்” எண்டு மனிசி அந்தரப் படுத்தேக்க நாலரை இருக்கும் . மற்றும் படி கேட்டாலும் கவனிக்காம இருக்கிற மனிசி கேக்க முதலே சிவப்புச் சால்வையை நீட்ட வெளிக்கிட்டுப் போனன். செட்டித் தெரு தடையில வாகனத்தை நிப்பாட்டீட்டு ஶ்ரீ முருகன் தண்ணீர்ப பந்தலால உள்ள ஓடிப் போக கையில சப்பாத்தோட நிண்ட பொம்பிளைப் பொலிஸ் கோயில் வீதிக்கு போகலாமா இல்லையா எண்டு குளம்பின படி நிண்டதைக் கவனிக்காமப் போனன். 

இண்டைக்கு என்ன சாத்துப்படி எண்டு TV இல பாத்து முருகனுக்கு matching ஆ சாறி கட்டின கொஞ்சப் பேர் அது கசங்கீடும் எண்டு உள்ள போகாமல் வெளீல சாமி வரட்டும் எண்டு வெளி வீதீல நிண்டதைப் பாக்காமல் கோபுரத்தைப் பாக்க , 5 மணிக்கும் உச்சத்தில நிண்டு கொண்டு நல்லூர்த் திருவிழாவுக்கு சூரியனும் overtime செய்யிறது தெரிஞ்சுது. 

கண் கூசிக் கொண்டிருந்ததால கோபுரத்துக்கு மேல ஒண்டும் தெரியேல்லை எண்ட படியால் அருணகிரிநாதர் வாறதையும் ஒருத்தரும் கவனிக்கேல்லை. வெளீல வாற முருகனை அறுகோணத்தில படம் பிடிச்சு உலகமெல்லாம் காட்ட பலர் நிண்டதையும் கவனிக்காமல் போனன். 

பனையோலைப் பெட்டியோட அரிச்சனை சாமானை வாங்கீட்டு உள்ள போறதுக்கு என்ன வழி எண்டு யோச்சபடி பாசை தெரியாம திணர்ற ஆக்களைப் பாக்காமப் போனன். Nallur temple க்கு Google rating இல 5 star போட்டிட்டு phone ன்டை உச்சப் பயனாகிய cameraவை தன்மை( தன்னைத்தானே படம் எடுக்கிறது), முன்னிலை ( தான் முன்னால இருக்கிறதை எடுக்கிறது) படர்க்கை ( வேற யாராவது ஒராள் இவையைப் படம் எடுக்கிறது )எண்டு பாவிச்சவையையும் கடந்த போனன். 

எது செய்தாலும் நாலு பேருக்கு தெரியிற மாதிரிச் செய்யவேணும் எண்டு எடுத்த படத்தை உடனுக்குடன் உலகுக்கு பரகசியமாக்கிக் கொண்டிருந்த பக்தர்களையும் தாண்டி கோபுர வாசலுக்குப் போனன். முருகனோட ஒருத்தரும் சேட்டையும் விடேலாது உள்ளுக்குள்ள சேட்டோடேம் விடேலாது எண்ட காவல் காக்கிற வீரவாகுவின் வீரர்களின் check post தாண்டி உள்ள போக பழைய நல்லூர் தெரிஞ்சுது

பிள்ளையாருக்கு குட்டிப் போட்டு மூலஸ்தானத்துக்கு salute ஒண்டு வைச்சிட்டு பழனியைச் சுத்த வெள்ளிமயில் பிள்ளையாரைத்தாண்டி போய்க்கொண்டு இருந்தது. முந்து முந்து முருகனை முந்து எண்டு உள்மனம் சொல்ல ஓடிப்போய் அப்ப மாலை கட்டிற மூலையில வைச்சு முருகனைப பிடிச்சன் . 

மேற்கு வீதியால போன முருகன் வடக்கு வீதீல திரும்ப முருகனுக்கு முன்னால போய் நிண்டன். எப்பிடிப் பாத்தாலும் வடிவா இருக்கிற முருகன் மூலையில திரும்பேக்க இன்னும் கூட வடிவு அதுகும் இந்த மூலையில ஆறுமுகத்தின்டை தங்கக் கோபுரத்தில பட்டுத் தெறிக்கிற பளபளப்பு extra வடிவு. 

சுத்தி வந்து யாகத்தில சாமி நிக்க , “ என்ன கொம்பு போட்டாச்சோ” எண்டு தில்லை அண்ணை கேக்க அடுத்தது என்டை turn எண்டு சொல்ல வைகுந்தன் ஜயா பூவைக் கொண்டு வந்து “ ஹரி ஹிக் ஓம்” எண்டு தொடங்க கொம்பைத் தட்டி முருகனைத் தோள்வாங்கினன். 

நல்லூரில பல எழுதப்படாத சட்டங்கள் இருக்கு , அந்த சட்டத்தை அமுல்படுத்தப் சிவப்புப் பட்டி ஊழியர் இருக்கினம். யாரா இருந்தாலும் கையில சிவப்பு பட்டி கட்டின கோயில் காரர் சொன்னா கேக்க வேணும். முருகனைக் காவிறதிலேயும் ஒரு ஒழுங்கு முறை இருக்கு அதை மாத்தவோ மீறவோ கூடாது எண்டு கன விசயம் இருக்கு.  

கோபுர வாசலைக் கடந்த மனிசிமாரோட முருகன் வந்து வாகனத்தில ஏறி இருக்க, வைகுந்தன் ஐயா எடுக்கிற ஆலாத்தி முடிஞ்சிட்டு நிக்க . எழும்பி நிண்ட ஆறடி எல்லாம் மூண்டடியாக் குனிஞ்சு நிண்டுச்சுது. சுத்தி ஒரு துலாவல் பார்வை பாத்திட்டு “ எல்லோரும் ஒத்தபடி அரோகரா” எண்டு தருமு அண்ணை சொல்ல , சாமி உயர்ந்திச்சிது, குடை நிமிர்ந்திச்சுது , light எரிஞ்சுது. இது எல்லாம் ஒண்டுக்குப்பின்னால ஒண்டு நடக்க , ரவி அண்ணையின் ரெட்டைக்குழல் வானத்துக்கு கேக்க அருணகிரியர் பாட்டொற்றை , சுருதிப்பெட்டி எல்லாத்தையும் check பண்ணினார். 25 நாளும் முருகன் travels ஓடிற flight ன்டை take off , auto pilot , landing எல்லாம் perfect ஆக இருக்கும் . 

இவ்வளத்தையும் கவனிக்காமல் முருகனை முதல் முதலாப் பாக்கிற மாதிரி அவரையே ரெண்டு கண்ணாலேம் பாத்துக்கொண்டு , மூண்டாவது கண்ணால சுத்தி முத்திப் பாத்த படியும் ரஜீந்திரனின் மல்லாரிக்கு ஏத்த மாதிரி தாள நடையோட கோயில் முதல் அடியவரான முதலாளி சயன் அண்ணா நடக்க அதே தாளம் பிசகாமல் முருகனும் வந்து கொண்டிருந்தார். 

“ அடியால , மெல்ல மெல்ல , நேர வரட்டும், சுதன் அமத்திப்பிடி, ஈசன் நடுவால , மதுசன் பின் கொம்பைப் பார், அடேய் காவேக்க மேல சாமியை நிமிந்து பாருங்கோ” எண்டு மைக்குக்குள்ளால ஓடர் போடிற தர்மு அண்ணையின்டை குரலைக் கேட்ட அருணகிரிநாதரும் பயத்தில கடகடவென இறங்கத் தொடங்கினார். 

கிழக்கு நோக்கி வந்த முருகன் தேரடீல right turn போட்டுத் திரும்பினார் . அவ்வளவு ஆர்ப்பரிப்புக்குள்ளும் “நிக்கட்டும் “ எண்டிற விஜயன் அண்ணையின்டை குரல் அடுத்ததா காவ நிக்கிறவனுக்கு மட்டும் கேக்க தோள்கள் மாறின . 

கட்டின மணிக்கூட்டைப் பாக்காமலே steering control செய்யிற விஜயன் அண்ணையின்டை மணிக்கூடு model என்ன எண்டு கேட்டு அதை வாங்கோணும் எண்டு அருணகிரிநாதரும் முடிவெடுத்தார். Relay இல Baton மாத்திற மாதிரித் தான் இங்கயும் முருகன் தோள் மாறேக்க நிண்டு வாங்கிறேல்லை, ஆனாலும் தோள் மாறிக் காவிறது முன்னுக்கு நிண்டு பாக்கிறவைக்குத் தெரியாது. 

இறங்கி வந்த அருணகிரி பிரசன்னா ஜயாவின் உடம்புக்குள் திருப்பியும் கூடுவிட்டு கூடு பூந்து , சுருதி சேத்துக் கொண்டு வந்த தன்டை அனுபூதியையும் , பாட மறந்த நல்லைக்கந்தன் புகழையும் பாடீட்டு திருப்பியும் வெளிக்கிட்டுப் போய் பாக்க கிளி park பண்ணின இடத்திலேயே நிண்டிச்சுது . முருகன் வீதி சுத்தேக்க கோயிலுக்கு மேலால கடந்து போற முகில் கூட நிண்டிடும். முகிலன் கொஞ்ச நேரம் site அடிச்சிட்டுப் போறவர் எண்டு நினைக்கிறன். 

திரும்பிப் போற வழீல திருவாசகம் கேக்கிறதுக்கு வந்துகொண்டிருத்த மணிவாசகரை கெதியெண்டு போம் சாமி வடக்கு வீதிக்கு போட்டுது ரஜீந்திரன் உருக்கொண்டு வாசிக்கிறது கேக்குது எண்டார் அருணகிரி. வடக்கு வீதில திரும்பி முருகன் வர, இனி முகத்தைப் பாக்க ஏலாது எண்டு சூரியன் முகம் புதைச்சார். 

வடக்கு வீதி எப்பவுமே பிரமாண்டத்துக்கு பிரசித்தும். திலீபன், கம்பன் விழா எண்டு அதுக்கெண்டு சிறப்பு இருக்கு. முருகன் வரேக்கேம் அப்பிடித்தான், சாம்பல் மூடி எரிஞ்சு கொண்டிருக்கிற விறகை விசிறி விட்ட மாதிரி வானம் இருக்கும். விறகுகள் மாதிரி மறைஞ்ச சூரியனின் மஞ்சள் கதிர், நடுவில செந்தணலாய் சிவப்பு மேகம், பறக்கும் சாம்பலாய் சில முகில்கள், கரிக்கட்டையாய் திரளும் கரு மேகங்கள் சேர்ந்து நிக்க முருகன் மேகத்தீ மிதித்து வருவது போல இருக்கும் .

படைப்பின் உச்சம் படைத்தவனே அதை வியந்து ரசிப்பது, இப்பிடி மனோன்மணி அம்மன் மூலையில திருவாசகத்தைக் கேட்டு தன்னிலை கெட்டு நிண்ட மணிவாசகரை ஆறரை ஆச்செண்டு கோபுர மணி தட்டி எழுப்ப அடுத்த பிறப்பொண்டைக் கேட்டு வந்து முருவாசகம் ஒண்டு எழுதோணும் எண்ட முடிவோட தலைப்பட்டார் சிவனைச் சந்திக்க . 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.