Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் குவைத்தில் சுட்டுக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை சேர்ந்தவர் குவைத்தில் சுட்டுக்கொலை

- ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் நேர்ந்த கொடூரம் 

 குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து குமரன். பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 30 வயதான முத்துகுமரன் கொரோனா காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரத்தை பறி கொடுத்தார். இதனால் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கினார். ஆனால் அதிலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. இதனால் 2 மகன்களையும் படிக்க வைப்பதற்கு அவர் திணற நேரிட்டது. இதையடுத்து வெளிநாடு சென்று பணிபுரிவதற்கு அவர் முடிவு செய்தார். வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். 4, 5, 6-ந் தேதிகளில் அவர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தனக்கு குவைத் வேலை பிடிக்கவில்லை. ஊர் திரும்பிவிடலாமா? என்று யோசிக்கிறேன் என்று மனைவி வித்யாவிடம் வருத்தப்பட்டு பேசினார். Also Read - தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வேயில், சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துள்ளது கண்டனத்துக்குரியது - மக்கள் நீதி மய்யம் இந்த நிலையில் 7-ந்தேதி முதல் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவருடன் பேச முடியாமல் அவரது மனைவி தவித்தபடி இருந்தார். இதற்கிடையே கடந்த 9-ந் தேதி குவைத்தில் முத்துகுமரன் மரணமடைந்து விட்டதாக இடிபோன்ற ஒரு செய்தி வித்யாவுக்கு வந்தது. இதனால் வித்யாவும், அவரது குடும்பத்தினரும் நிலை குலைந்து போனார்கள். கணவர் முத்துகுமரன் எப்படி மரணமடைந்தார். என்ன நடந்தது? என்பது தெரியாமல் தவிப்புக்குள்ளானார் வித்யா. ஐதராபாத் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதுபோல அரசு தரப்பு மூலம் முயற்சி செய்தபோதும் அதற்கு பலன் ஏற்படவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் வித்யா கதறி புலம்பியபடி உள்ளார். இந்த நிலையில் குவைத்தில் முத்துகுமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டுள்ளார். Also Read - அதிமுக ஆட்சியை விட தற்போது குறைவாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் இருந்து அவரை அழைத்து செல்லும் போது பெரிய நிறுவனம் ஒன்றில் குமாஸ்தா வேலை வாங்கி தருவதாகத்தான் அழைத்து சென்றனர். குமாஸ்தா வேலை கிடைக்காத பட்சத்தில் வீட்டில் உள்ள சிறு சிறு பணிகளை செய்யும் உதவியாளராகவும் சேர்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் குவைத்தில் அவருக்கு குமாஸ்தா வேலையோ அல்லது இதர உதவியாளர் வேலையோ எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக முத்துகுமரனை அந்த பகுதியில் உள்ள பணக்காரர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒட்டகம் மேய்ப்பதற்கு முத்துகுமரன் மறுத்துவிட்டார். இதனால் அவருக்கும், அவரது முதலாளிக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த குவைத் முதலாளிக்கு கூடுதல் ஆத்திரம் ஏற்பட்டது. அவர் முத்துகுமரனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். Also Read - குவைத், சவுதியில் 2 தமிழர்கள் உயிரிழப்பு: உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன் முத்துகுமரன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அந்த நபர் சுட்டுக்கொன்றதாக தெரிய வந்துள்ளது. குவைத்தில் இருந்து வெளியாகும் ஐமன் மேட் நியூஸ் என்ற பத்திரிகையில் 24 வயது குவைத் பிரமுகர் 30 வயது இந்திய தொழிலாளியை சுட்டுக் கொன்றுள்ளார் என்று செய்தி வெளியானது. முதலில் முத்துகுமரன் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த செய்தியில் சபா அல்அகமது பாலைவன பகுதியில் துப்பாக்கி சூடு நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏர் ரைபிள் மூலம் இந்திய தொழிலாளி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. குவைத் விசாரணை குழுவினர். தீவிர விசாரணை நடத்தியபிறகு தான் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது தமிழகத்தை சேர்ந்த முத்துகுமரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:- முத்துகுமரனின் மனைவி வித்யா எனக்கு மனு கொடுத்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அதிகாரிகளுக்கு நான் அந்த மனுவை அனுப்பி இருக்கிறேன். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/State/tamil-nadu-worker-shot-dead-by-employer-in-kuwait-791191

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் நிறுவனங்கள்...  
என்ன வேலை  செய்ய வேண்டும் என்பதனையும் குறித்த நபர்களுக்கு தெரிவித்து, இருந்தால்...   
பிள்ளைகளின்,  தந்தை மரணம்   அடைய வேண்டிய சந்தர்ப்பம் நிகழ்ந்து இருக்காது.

வறுமையில்...  அவசரத்துக்கு, கண்ட நாடுகளுக்கு போகும் போது,
அந்த நாட்டவர்... மனிதர்களா? மிருகங்களா... என்பதனையும் சிந்திக்க வேண்டும்.  
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் குவைத்தில் வேலைக்கு சென்ற இளைஞர் சுட்டுக் கொலை - உறவினர்கள் புகார்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

திருவாரூரைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொலை

ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் குவைத்தில் வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்ட இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா, லட்சுமணன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்(42). பட்டதாரியான இவர் அங்குள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் அவரது வேலை பறிபோனது. இதனால் பல இன்னல்களை சந்தித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள வெளிநாட்டு ஏஜென்சி நிறுவனம் மூலம் வேலை கேட்டு வந்தார். அப்போது குவைத்தில் உள்ள நிறுவனத்தில் அவருக்கு பணி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

"அதனை நம்பி, கடந்த 3-ம் தேதி முத்துக்குமரன் குவைத்தின் அல்-அகமது நகருக்கு சென்றார். குவைத் சென்ற பிறகுதான் உண்மை நிலவரம் அவருக்கு தெரியவந்தது. அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணி வழங்கப்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துக்குமரன், வெளிநாட்டு ஏஜென்சி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது பயனளிக்கவில்லை. ஆனால், வேறு வழியின்றி ஒட்டகங்களை மேய்த்திருக்கிறார்," என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புகாரை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.

 

Presentational grey line

 

Presentational grey line

இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தனது மனைவி வித்யா மற்றும் தாய், தந்தையாரிடம் செல்போன் மூலம் செப். 4, 5, 6 ஆகிய தேதிகளில் முத்துக்குமரன் பேசி உள்ளார். அடுத்த நாட்களில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

முத்துக்குமரனிடமிருந்து எந்தவித தகவலும் வராததால், மனைவி மற்றும் வீட்டில் பெரும் அச்சம் கொண்டனர்.

 

முத்துக்குமரன்

 

படக்குறிப்பு,

முத்துக்குமரன்

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி முத்துக்குமரன் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என தனது முதலாளியிடம் கூறியதாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமரனை அவரது முதலாளி சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் குவைத் ஊடகங்களில் செய்தி வெளியானது என்று முத்துகுமாரனின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற முத்துக்குமரனின் உடலை ஒப்படைக்க வேண்டும், படுகொலை செய்யப்பட்டதற்கு நியாயமான நீதியும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கூத்தாநல்லூரில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச் சங்கத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

 

திருவாரூர்

இதனிடையே, முத்துக்குமரனின் உடலைப் பெற வழிவகை செய்ய வேண்டும் வேண்டும் என அவரது மனைவியும், பெற்றோரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரனின் உறவினர் அய்யப்பன் பிபிசியிடம் பேசுகையில், "குடும்ப வறுமையின் காரணமாக தான் முத்துக்குமரன் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார்.

குவைத் சென்ற மறுநாள் எங்களிடம் செல்போன் மூலம் பேசிய முத்துக்குமரன், அழைத்து வரப்பட்ட வேலை வேறு, ஆனால் பணி செய்ய சொல்வது வேறு. அதுமட்டுமின்றி தனக்கு உணவு, குடிநீர் கூட கொடுக்காமல் சித்திரவதை செய்வதாக கூறினார்."

"இதற்கிடையில் முத்துக்குமரன் ஹைதராபாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகமையிடம் பேசியுள்ளார். அவர்களும் முத்துக்குமரனை திரும்ப அழைத்துவர தேவயானவற்றைச் செய்வதாக உறுதியளித்தனர்.

 

முத்துக்குமரன் குடும்பத்தினர்

"அதன் பிறகு தான் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதால் முத்துக்குமரனை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த நாங்கள், குவைத்தில் பணிபுரியும் எங்களது ஊரைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, முத்துக்குமரன் அடித்து கொல்லப்பட்டதாகவும், சுட்டுக் கொல்லபட்டுள்ளதாவும் செய்திகள் வந்துள்ளது என தெரிவித்தனர்.

மேலும் அவரது உடல் சாலையில் கிடந்ததாகவும் போலீசார் உடலை கைப்பற்றி பிணவறையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்."

"அதனைத் தொடர்ந்து நாங்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடலை சொந்த ஊர் கொண்டு வர மனு அளித்தோம். அதன்பின் எங்களைத் தொடர்பு கொண்ட குவைத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் முத்துக்குமரன் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒரிரு தினங்களில் உடல் வந்து சேரும் எனவும் தெரிவித்தார்," என்றார்.

 

முத்துக்குமரன் குடும்பத்தினர்

மேலும் இதுகுறித்து பேசிய வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வி.கண்ணன், "குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன்‌ உடலை ஒப்படைக்க வலியுறுத்தி மனைவி வித்யாவின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

முத்துக்குமரன்‌ குவைத் சென்ற உடன் தனக்கு சொன்ன வேலை இது இல்லை என்றும் ஒட்டகம் மேய்க்க போட்டதாகவும் அடித்து உதைப்பதாகவும் கூறியுள்ளார். இரண்டு தடவை மனைவிக்கு பேசியுள்ளார். அதன் பின்பு எவ்வித தொடர்பும் இல்லை.

முத்துகுமரன் மனைவிக்கு ஏஜெண்ட் மூலம் அங்கு ஏதோ பிரச்னை என்றும் வித்யாவின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்பு கணவர் இறந்து விட்டதாக தகவல் சொல்லப்பட்டு உள்ளது.

வித்யாவின் கணவர் எவ்வாறு இறந்தார் என முழு விபரமும் கிடைக்காத சூழலில் குவைத்தில் இருந்து வெளிவரும் அல்ராய் பத்திரிகை மற்றும் பல யூடியூப் ட்விட்டர்களில் முத்துக்குமரனை அடித்து கொன்று விட்டதாகவும் குற்றவாளியை போலீஸ் தேடுவதாகவும் மற்றொரு செய்தியில் துப்பாக்கியால் முத்துக்குமரன் கொல்லப்பட்டதாகவும் ஸ்பான்சரின் மகன் (அரபியின் மகன்) கைது என்றும் செய்தி வந்துள்ளது.

 

முத்துக்குமரன்

வித்யாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது தெளிவாக தெரிகிறது. கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏதோ திசை திருப்பப்படுகிறதோ என குடும்பத்தினர் சந்தேகம் கொள்கின்றனர்.

ஆதலால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தீவிரமாக தலையிட்டு குவைத்தில் படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமரன் உடலை இந்திய தூதரகத்தின் பொறுப்பில் குடும்பத்தினர் சார்பாக குவைத்தில் உள்ள நவ்சாத் அலி வழியாக தாயகம் கொண்டு வந்து ஏற்கனவே ஒரு வழக்கில் செய்ததை போன்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் உடல் கூறாய்வு செய்து ஆவணப்படுத்தி உண்மை நிலையை உலகறிய செய்து கொலை செய்த கயவனுக்கு தக்க தண்டனை வழங்கி தர வேண்டும் என கோரி மனு அளித்துள்ளோம்.

மேலும் கணவனை இழந்து வாடும் முத்துக்குமரனின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முத்துக்குமரனின் மனைவியின் படிப்புக்கு ஏற்றாற்போல் அரசு வேலை தர வேண்டும் எனவும் மேலும் இதுபோன்ற இன்னல்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து நடந்து வருவது குறித்து ஆய்வு செய்து பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் மிக குறிப்பாக ஏஜெண்டுகள் முறைபடுத்திட வேண்டும் எனவும் போலி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கைகள் பாய வேண்டும் எனவும் வெளிநாடு செல்லும் ஒட்டுமொத்த இந்தியர்கள் நலன் காக்க சட்ட முறைகள் தமிழகத்தில் இந்த வழக்கின் மூலம் வழிவகுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-62901002

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.