Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பின் பல முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் பல முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு

By Digital Desk 5

24 Sep, 2022 | 09:28 PM
image

(நா.தனுஜா)

கொழும்பின் பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவு பரந்தளவிலான பொது இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி 'ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் பிரிவுகள் தொடர்பில் நாம் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அதற்கமைய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்' என்றும் சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பிலுள்ள சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்குறிப்பிட்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான அறிவிப்பில் கொழும்பில் மக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இடங்கள் உள்ளடங்கலாக கொழும்பு மாவட்டத்திலுள்ள பல இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹல்ஃ;ப் ஸ்டொப் பகுதியிலுள்ள நீதிமன்ற வளாகப்பகுதியும் அவ்வறிவிப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வீதிகளிலோ, மைதானங்களிலோ அல்லது திறந்தவெளிகளிலோ மக்கள் ஒன்றுகூடுவது தடுக்கப்பட்டிருப்பதுடன் மாறாக ஒன்றுகூடுவதெனின் அதற்கு பொலிஸ்மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் அனுமதி பெறப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அவ்வலயங்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்படாத வாகனங்களை நிறுத்திவைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவானது எந்தவொரு காணியையோ, கட்டடத்தையோ, கப்பலையோ அல்லது விமானத்தையோ தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்கான அதிகாரத்தையே பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்குகின்றதே தவிர, விரிவான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்கவில்லை.

மேற்படி சட்டத்தின் 2 ஆம் பிரிவின்கீழ் உத்தரவொன்றைப் பிறப்பிப்பதன் பிரதான நோக்கம் யாதெனில் இலங்கையின் பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்களையும் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய நிறுவனங்கள், கட்டமைப்புக்களின் தகவல்களையும் பாதுகாப்பதேயாகும். எனவே 2 ஆம் பிரிவின்கீழ் பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவையும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தமுடியாது.

ஆனால் தற்போது ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், அவ்வுத்தரவின்கீழ் இழைக்கப்படும் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்படும் எந்தவொரு நபருக்கும் மேல்நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே பிணை வழங்கப்படமுடியும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது. உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவில் அத்தகைய சரத்துக்கள் எவையும் உள்ளடங்கவில்லை என்பதுடன் மாறாக அச்சட்டத்தின் 22 ஆம் பிரிவு சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிவானுக்கு அதிகாரமளித்துள்ளது. எனவே ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் பிரிவுகள் தொடர்பில் நாம் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அதற்கமைய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

https://www.virakesari.lk/article/136359

 

  • கருத்துக்கள உறவுகள்

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

‘உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானது!’

கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கான ரகசியத் தகவலைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட சட்டத்தின் எல்லைக்குள் விதிமுறைகள் இல்லை என்பதை 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இந்த உத்தரவுகள், ஒழுங்குமுறைகளின் பொருள் மற்றும் அவற்றின் நோக்கம் தெளிவாக சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அடிப்படை உரிமைகளை அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1301110

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing and text that says 'Santa High Security Zone'

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு உயர் பாதுகாப்பு வலய திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானம்

By RAJEEBAN

27 SEP, 2022 | 04:54 PM
image

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

301918390_1226981494823627_3783806573691

உயர்பாதுகாப்பு வலயங்கள் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொருளாதார ஆலோசகர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

High-security-zones-declared-in-Colombo-

இதேவேளை கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாற்று பாதுகாப்பு திட்டமொன்று முன்வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய திட்டம் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

https://www.virakesari.lk/article/136546

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.