Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலியப் பயங்கரவாதிகளின் வழிகாட்டலில் தமிழின அழிப்பை முன்னெடுத்த ஜெயாரும் லலித் அதுலத் முதலியும்
large_Kfir.jpg.e01995964972e9486e659d8154cf6085.jpg

இறுதியுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலியிட இஸ்ரேலினால் வழங்கப்பட்ட கிபிர் கொலைக்கருவி

 

தம்மீது நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னால் இஸ்ரேலின் மறைகரம் இருப்பதை யாழ்ப்பாணத் தமிழர்கள் அறிந்துகொண்டனர். பாலஸ்த்தீனர்களை ஒடுக்குவதில் இஸ்ரேலியர்கள் கடைப்பிடித்த அதே அனுகுமுறையினையே ஜெயவர்த்தன - லலித் குழுவும் பாவித்து வருகின்றது என்பதை அவர்கள் உணரத் தலைப்பட்டனர். தமிழர்களைப் போலவே இந்தியாவும் அதனை நன்கு உணர்ந்து கொண்டது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கைக்குள் செயற்படுவது தனக்குச் சவாலான விடயமாகக் கணித்த இந்தியாவின் ரோ, தனது சொல்லிற்குக் கட்டுப்பட்ட சில தமிழ்ப் போராளி அமைப்புக்களிடம் யுத்தத்தை கொழும்பிற்கும், இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்குமாறு கோரியதாக இவ்வமைப்புக்களின் உறுப்பினர்கள் பின்னாட்களில் என்னிடம் தெரிவித்தனர். புலிகள் இந்தியாவின் திட்டத்தை மறுக்க, ஈரோஸ் அமைப்பு அதனைச் செய்வதற்கு ஒப்புக்கொண்டது (என்னிடம் இந்த விடயத்தை கூறியவர் போராளி அமைப்பொன்றில்  முக்கிய உறுப்பினராக இருந்ததுடன் இலங்கை அரசுடனும் இந்தியாவுடனும் நெருங்கிய தொடர்புகளையும் பின்னாட்களில் ஏற்படுத்திக் கொண்டவர். தான் கூறிய விடயம் வெளியே தெரியவருமிடத்து தனக்கு அது ஆபத்தாக முடியலாம் என்று அஞ்சியதால் தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று என்னைக் கேட்டிருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டு விட்டார் (2005)).

 இக்காலத்தில் பார்த்தசாரதி இலங்கையில் இருந்தார். புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்திலும் பல வெளிநாட்டுச் செய்திச் சேவைகளின் ஊடகவியலாளர்கள் கொழும்பில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தனர். இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் எண்ணிக்கை பல உலக செய்திச் சேவைகளின் கவனத்தை ஈர்த்திருந்ததனால் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களைச் சேர்ந்த பல செய்தி நிறுவனங்கள் இலங்கையில் நடக்கும் அக்கிரமங்களை உடனுக்குடன் வெளியே கொண்டுவர ஆவலாக இருந்தன. தென்னாசியாவின் கொலைக்களம் என்று அக்காலத்தில் அறியப்பட்ட இலங்கை குறித்து இந்தியாவிலிருந்த பி.பி.சி யின் செய்தியாளர் மார்க் டல்லி எழுதுகையில், "உலகிலேயே மிகவும் காட்டுமிராணடித்தனமான, ஒழுக்கக் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிராத இராணுவம்" என்று இலங்கை இராணுவத்தை வர்ணித்திருந்தார்.

1978 ஆம் ஆண்டு முதல் 1997 வரையான 18 வருடங்களில் ஓரிரு நாட்களைத் தவிர பெரும்பான்மையான நாட்களில் டெயிலி நியுஸ் செய்திகளுக்காக மந்திரிசபைச் செய்தியாளர் மாநாட்டில் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். அப்படியான சந்தர்ப்பங்களில் பல வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. 1984 ஆம் ஆண்டின் புரட்டாதி மற்றும் ஐப்பசி மாதங்கள் பெருமளவு வெளிநாட்டுச் செய்தியாளர்களை நாட்டிற்குள் தருவித்திருந்தது.

1984 ஆம் ஆண்டின் ஆவணி 27 ஆம் திகதி வெளிவந்த நியூஸ் வீக் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இலங்கை ராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகள் என்று எழுதியிருந்தது. ஓரிரு பொதுமக்களைத் தவிர கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் தான் என்று இலங்கையரசாங்கம் செய்துவரும் பிரச்சாரத்தைச் சாதாரண சிங்கள மக்களே நம்ப மறுத்தனர் என்று அவ்வறிக்கை கூறியது. தமிழர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான சிங்களவர்கள் கூட ஜெயவர்த்தன சமாதான வழிமுறைகளில் தமிழரின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணப்போவதில்லை என்பதை நம்புவதாகவும் அவவறிக்கை மேலும் கூறியது.

வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் படுகொலைகள் குறித்து எழுதுகையில், "இரவு வேளைகளில் யாழ்நகரம் பேய்நகரம் போல் காட்சியளிக்கிறது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக அப்பாவிகளை இராணுவம் கொன்றுவருகிறது. நாட்டின் அதிபர் ஜெயவர்த்தன, அரசியல் தீர்வில் ஆர்வமுள்ளவர் போல்த் தோன்றவில்லை. தமிழரின் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வொன்றினை வழங்கவே அவர் முயல்வதுடன், அதனை தமிழர்களை அச்சமூட்டிச் சரணடைய வைப்பதன் மூலம் செய்ய எத்தனிக்கிறார்" என்று எழுதியது. 

 மும்பாயிலிருந்து வெளிவரும் பிரபலப் பத்திரிக்கையான பிலிட்ஸ் அதன் ஆவணி 18 ஆம் நாள் இதழில் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் காணப்படும் சூழ்நிலை குறித்து எழுதியிருந்தது. பின்னர் இந்தச் சூழ்நிலைகளை ஆசிரியர் தலையங்கமாக இட்டு செய்தியொன்றினையும் வெளியிட்டது.

யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமங்கள் மீது இராணுவமும் கடற்படையும் தொடர்ச்சியான செல்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் நோக்குடன் அம்மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களை இராணுவம் அழித்து வருகிறது. இப்புராதன தமிழ்க் கிராமங்களை அழித்துத் தரைமட்டமாக்க இராணுவத் தாங்கிகளும், நிலங்களை மட்டமாக்கும் கனரக உபகரணங்களும் அரசால் பாவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வதற்காக விமானக் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டதில்லை. என்று எழுதியிருந்தது. மேலும், இந்தியா சீக்கியத் தீவிரவாதிகளுக்கெதிராகப் போராடுவது போன்றதே இலங்கை தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கெதிராகப் போராடுவதும் என்ற இலங்கையின் பிரச்சாரத்தைக் கேலி செய்த இப்பத்திரிக்கை, "இலங்கையில் இருப்பது ஒரு பயங்கரவாதம் மட்டும்தான். அடிப்படை மனிதவுரிமைகளுக்காகப் போராடும் அப்பாவிகளைக் கொன்றுகுவிக்கும் அரச பயங்கரவாதமே அது" என்று அப்பத்திரிக்கை எழுதியிருந்தது. 

ஜெனீவாவுக்கான இந்திய தூதுக்குழுவும் இதேவகையான விமர்சனங்களை இலங்கை அரசாங்கம் மீது வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.

(மேலதிக வாசிப்புக்களுக்கு :  2009 இறுதி யுத்தத்தில் இஸ்ரேல் ஆற்றிய பங்கு குறித்து தி டிப்லொமட், அல்ஜசீரா மற்றும் தி எலெக்ட்ரோனிக் இன்டிபாடா  எழுதிய கட்டுரைகளின் இணைப்புக்கள்)

https://thediplomat.com/2023/07/israels-role-in-sri-lankas-dirty-war/

https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644

https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated

https://www.greenleft.org.au/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 604
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் வெடித்த குண்டுகள்

1984 ஆம் ஆண்டு ஐப்பசி 22 ஆம் திகதி கொழும்பில் முதலாவது குண்டு வெடித்தது. இந்நாட்களில் இந்திரா காந்தி உயிருடன் இருந்தார் என்பதுடன் ஜெயாரின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளினால்  கடும் அதிருப்தியிலும் இருந்தார். வடக்குக் கிழக்கில் ஆயுதப்போராட்டம் புலிகளால் உக்கிரப்படுத்தப்படுகையில் ஈரோஸ் கொழும்பிற்கு குண்டுவெடிப்பு செயற்பாடுகளை நகர்த்தியிருந்தது. பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வினை விட்டு இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டு செயற்பட்டு வந்த ஜெயாரை அச்சுருத்தி மீளவும் பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் உத்தியாகவே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இலங்கையில் இந்தியாவின் நலன்களை முற்றாக முடக்கிவிட ஜெயவர்த்தனவுக்கு இராணுவ உதவிகள் என்கிற பெயரில் இந்தியாவுக்கெதிரான சீனா, பாக்கிஸ்த்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முயன்றுவருவதாக இந்திரா அஞ்சினார். இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதுதான் என்று இந்தியா கருதியது. 

(குறிப்பு : சமாதானப் பேச்சுக்கள் மூலம் மட்டுமே தமிழருக்குத் தீர்வொன்றினை வழங்க இந்தியா விரும்பியதே ஒழிய, பிரபாகரன் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தமிழர்களுக்கு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை இன்றுவரை இந்தியா முற்றாக எதிர்த்தே வருகிறது. அதேவேளை புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்களை முற்றாக ஒடுக்கிவிட ஜெயார் முயல்வதையும் இந்தியா வரவேற்கவில்லை . இதன் ஒரு பகுதியாகவே இலங்கையுடன் இந்தியா 2005 இல் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தமும் பார்க்கப்படல் வேண்டும்).

large.Fortstation.jpg.0d4f5b558159d2b99231c633f479d01f.jpg

புறக்கோட்டை புகையிரதநிலையம்

 அன்று கொழும்பு முழுவதும் மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. முதலாவது குண்டுவெடிப்பு காலை 5:30 மணிக்கு கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்த்தப்பட்டது. பொலீஸ் நிலையத்திற்கு மிக அண்மையாகக் குண்டை வெடிக்கவைக்கும் நோக்கில் ஊர்காவற்றுரையைச் சேர்ந்த இளம் பொறியியலாளரான பரிபூரணம்  அதனைக் காவிவந்த வேளை எதிர்பாராத விதமாக அது வெடிக்க அவரும் கொல்லப்பட்டார்.  அதனைத் தொடர்ந்து கொழும்பின் 9 வேறு இடங்களில் முதல் நான்கு மணிநேரத்திற்குள் குண்டுகள் வெடித்ததனால் மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அண்மையாக வெடித்த குண்டினால் பல பொதுமக்கள் காயப்பட்டனர். ஏனைய குண்டுகள் அரச வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள், மத்திய பேரூந்து நிலையம், உள்ளூர் அலுவல்கள் அமைச்சுக் கட்டிடம் மற்றும் இதர பகுதிகளில் வெடித்தன. குப்பைகூழங்களைக் கொட்டிவைக்கும் கொள்கலன்களிலேயே இக்குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.  பெலியகொடை பகுதியில் வீடொன்றில் இன்னொரு குண்டு எதிர்பாராத விதமாக வெடித்தபோது இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 

 அரசுக்கு இக்குண்டுவெடிப்புகள் கடுமையான அழுத்தத்தினை ஏற்படுத்தின. லலித் அதுலத் முதலி கொதித்துப்போனார். விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய அவர் 10 மணியளவில் ஆற்றிய உரையில் நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் மீது இன்னொரு படுகொலையினை சிங்களவர்கள் நடத்தவேண்டும் என்பதற்காகவே இக்குண்டுவெடிப்புக்களை பயங்கரவாதிகள் நடத்திவருவதாகஅவர் கூறினார். ஆகவே, பயங்கரவாதிகளின் சதிக்குள் சிக்கிவிட வேண்டாம் என்று சிங்களவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இக்குண்டுவெடிப்புக்கள் இரண்டு முக்கிய செய்திகளை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் கூறியிருந்தன. முதலாவது செய்தி, நாட்டின் தலைநகரான கொழும்பிற்கும், சிங்கள மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளுக்கும் குண்டுகளைக் கொண்டுவந்து வெடிக்கவைக்கும் வல்லமையினைப் போராளிகள் பெற்றுள்ளார்கள் என்பது. இரண்டாவது, கொழும்பு அரசாங்கம் இராணுவத் தீர்வில் அதீத கவனம் செலுத்தினால், போரினை மேலும் விரிவாக்குவதற்கு இந்தியா ஒருபோது பின்னிற்காது என்பது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பில் இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேவையின் பங்களிப்பு

large_kms2.jpg.6cc6bb0194fc8ee5a5b3011f34b9222b.jpg

புது தில்லியும், கொழும்பின் இராணுவ ஆய்வாளர்களும் ஜெயாரின் மூன்றுவழித் திட்டத்திற்கு இந்திரா காந்தி கடுமையான முறையில் பதிலளிப்பதாகவே கருதின. குறிப்பாக ஜெயார் முன்வைத்த இராணுவத் தீர்வில் பாவிக்கப்பட்ட ஆள்ப்பலம், வெளிநாட்டு இராணுவ வல்லுனர்களின் ஆதரவு என்பன இந்திராவைக் கோபப்பட வைத்திருந்தன. தமிழர்களுக்கெதிரான போரில் இஸ்ரேலிய உளவு அமைப்புக்களான மொசார்ட், ஷின்பெட், இங்கிலாந்தின் முன்னாள் விசேட வான் மற்றும் தரை படையணியினரினால் நடத்தப்படும் தனியார் இராணுவக் கூலிப்படையான கீனி - மீனி மற்றும் அவர்களால் கொழும்பில் கொண்டுவந்து இறக்கப்பட்ட சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க கெரில்லா யுத்தங்களின்போது கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசேட படையணி வீரர்களின் ஈடுபடுத்தலும், பாக்கிஸ்த்தான் , சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களும் இலங்கையரசை இராணுவத் தீர்வு நோக்கிச் செல்ல உந்தியிருந்தன.

லலித் அதுலத் முதலியும், ரவி ஜயவர்த்தனவும் ஒருவரையொருவர் வெளிப்படையாகவே தூற்றி வந்தபோதிலும் தமிழர் தாயகத்திலிருந்து அவர்களை அச்சுருத்தி வெளியேற்றி, தமிழ்க் கிராமங்களின் எல்லைகளில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் முன்வைத்த திட்டத்தை முழுதாக ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வந்தனர்.  எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமா, இஸ்ரேலின் திட்டங்களை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்தார். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்கள் முன்னெடுத்துவரும் இதே திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளதால், இலங்கையிலும் அதே நிலைதான் ஏற்படும் என்று அவர் அரசை எச்சரித்தார். நடந்ததும் அதுதான். தம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் அஞ்சவில்லை.  மாறாக அதற்கெதிரான அவர்களின் எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தமிழர்கள் ஒன்றிணையத் தொடங்கினார்கள். தமிழ் மக்களால் முன்னர் ஆதரவளிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழரின் ஒற்றுமையின் முன்னால் அடிபட்டுப் போயிற்று.large_kms4.jpg.16cfadfb18166220708a61126103bccb.jpg

இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன்

இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேர்விசஸ் அமைப்பை தமிழின அழிப்பில் ஈடுபட வைத்தது லலித் அதுலத் முதலியே. லண்டனில் இருந்து வெளிவரும் டெயிலி நியுஸ் பத்திரிக்கை இக்கூலிப்படை இலங்கையில் செய்துவரும் நடவடிக்கைகளை 1987 பங்குனியில் செய்தியாக வெளியிட, 1987 ஆம் ஆண்டு வைகாசி 19 ஆம் திகதி வெளியானஅமெரிக்காவின் வோஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் பல ஆதாரங்களுடன் இக்கூலிப்படையினரின் செயற்பாடுகள் குறித்த இரகசிய விபரங்களை வெளியிட்டது. ஆனால், இந்த விபரங்கள் எல்லாமே 1984 ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது.

லண்டன் டெயிலி நியுஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் பல டசின்கணக்கான கீனி மீனி கூலிப்படையினர் இலங்கையில் போரில் பங்கெடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு வருட வருமானமாக 33,000 (1984 இல்) அமெரிக்க டொலர்கள் இலங்கையரசால் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.  வோஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதிய ரிச்சேர்ட் எல்ரிச், குறைந்தது 35 கீனி மீனி கூலிப்படையினர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பு : பி. பி. சி செய்திச்சேவை 2020 ஆம் ஆண்டு, கார்த்திகை 30 ஆம் திகதி வெளியிட்ட ஆய்வறிக்கையில், "இலங்கையின் விசேட அதிரடிப்படை வீரர்களுக்கு கீனி மீனி கூலிப்படையினர் 1980 களில் பயிற்சியளித்து வந்ததாகவும், இலங்கையின் விமானப்படையினருக்கான விசேட பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும்" கூறியிருந்தது. 

large.KatukurnthaSTFcamp.jpg.7fec022d2fe414bb108739ad0fc2135e.jpg

கட்டுக்குருந்தை - விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாம்

தமிழ் கெரில்லாக்களைக் கொல்வதற்கான பயிற்சிகளை இலங்கை விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாமான கட்டுக்குருந்தையில் இங்கிலாந்துக் கூலிப்படை வழங்கி வந்ததாக எல்ரிச் கூறுகிறார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் கீனி மீனி கூலிப்படையினரின் பங்கு குறித்து எல்ரிச் முன்னாள் இங்கிலாந்து விசேட படைகளின் கேணல் தர அதிகாரியும் பின்னாட்களில் கூலிப்படையின் அதிகாரியாகவும் செயற்பட்ட கென் வைட், இங்கிலாந்து உயர்ஸ்த்தானிகராலய பேச்சாளர் ஜக் ஜோன்ஸ், கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோரிடம் வினவியிருந்தார்.

கென் வைட் பேசுகையில், "நாம் இலங்கை அரசாங்கத்தின் ஊழியர்கள். ஆகவே, எம்மைப்பற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும், இங்கிலாந்தின் உயர்ஸ்த்தானிகரும் கூறும் விடயங்களைச் செவிமடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைத்தவிர நான் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" என்று கூறினார்.

large_KMS3.jpg.3e0e6ff4ddec9271e4fe67207a77ee2a.jpg

இலங்கை கொலைப்படையுடன் கீனி மீனி கூலிகளில் ஒருவன்

இங்கிலாந்து தூதரகப் பேச்சாளர் ஜக் ஜோன்ஸ் மிககவனமாகத் தேர்ந்தெடுத்த வசனங்களைக் கொண்டு பதிலளித்தார், "கீனி மீனி சேவைகளின் இலங்கையின் பிரசன்னம் என்பதை அந்த தனியார் அமைப்பிற்கும் இலங்கை அரசுக்குமிடையிலான தனிப்பட்ட விடயமாகவே இங்கிலாந்து அரசு கருதுகிறது. இங்கிலாந்தின் படை வீரர்கள் இலங்கையில் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால், கீனி மீனி அமைப்பில் இன்று இலங்கையில் செயற்படும் வீரர்கள் முன்னர் இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று நான் அறிவேன். அவர்கள் இலங்கையில் செயற்படுவதை ஆதரிக்கவோ அல்லது தடுக்கவோ இங்கிலாந்து அரசால் முடியாது. என்னைப்பொறுத்தவரை ஒரு சட்டபூர்வமான தனியார் கம்பெனி சட்டபூர்வமான இலங்கை அரசாங்கத்துடன் வியாபார ஒப்பந்தம் ஒன்றில் இணைந்திருக்கிறது. இந்த வியாபார ஒப்பந்தத்தின்படி கீனி மீனி யின் வீரர்கள் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும், நேரடியான இராணுவ நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை என்பதையும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்" என்றும் கூறினார்.

ஜோன்ஸ் மேலும் கூறுகையில், "இங்கிலாந்தின் உள்த்துறை அமைச்சரான டேவிட் வடிங்க்டன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது கூறிய விடயத்தைக் கவனியுங்கள், இலங்கையின் கீனி மீனியின் பிரசன்னம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும் என்றும், அவர்களின் பயிற்சியினால் இலங்கை இராணுவத்தின் போரிடும் திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் அல்லவா?" என்றும் கூறினார். 

large_KMS1.jpg.3de7388c635f4ba454b4e67a6cea4e81.jpg

இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன்

எல்ரிச்சுடன் பேசிய மேற்குநாட்டு இராஜதந்திரி ஒருவர் கீனி மீனி சேவை, இலங்கையின் உள்நாட்டுப் போரில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளால் இங்கிலாந்து அரசாங்கம் அவமானப்பட்டிருப்பதாகக் கூறினார். "கீனி மீனி சேவையின் பங்களிப்பு என்பது உள்நாட்டுப் போரில் இங்கிலாந்தின் பங்களிப்பு என்றே பலராலும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சரியானது என்று கூறினாலும், கீனி மீனி சேவை உள்நாட்டுப் போரில் நேரடியாக ஈடுபட்டிருப்பதன் மூலம், இங்கிலாந்தும் இராணுவத் தீர்வையே விரும்புகிறது போலத் தெரிகிறது. கீனி மீனி சேவையின் உதவிகள் ஊடாக தமிழ் கெரில்லாக்கள் கொல்லப்பட்டு வருவதானது இங்கிலாந்து அரசும் அரசியல் ரீதியிலான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது" என்றும் கூறினார்.

கீனி மீனி கூலிப்படையில் இலங்கையில் பணியாற்றிய கொமாண்டோ சமி டொரத்தி என்பவன் லண்டன் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், "அங்கு பல அட்டூழியங்கள் நடந்திருக்கலாம், ஆனால் நாம் அங்கு செல்லாதிருந்தால் இவை நடந்திருக்காது என்றும் கூற முடியாது. ஒழுக்கயீனமே அட்டூழியங்கள் நடைபெறக் காரணமாகி விடுகின்றன. போரிற்குப் பயந்த, தகுந்த பயிற்சி வழங்கப்படாத படைவீரர்களே அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், நான் வழங்கும் பயிற்சிகள் அவர்கள் அட்டூழியங்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. நாம் அவர்களுக்கு வழங்கும் பயிற்சிகள் மூலம் சுயகட்டுப்பாடு அவர்களுக்கு ஏற்படுவதோடு பல உயிர்களும் காக்கப்படுகின்றன என்பதே உண்மை" என்று கூறினான். 

தொடர்ந்து எழுதும் எல்ரிச், "கீனி மீனி சேவையினால் பயிற்றப்பட்டு வரும் இலங்கை பொலீஸாரின் விசேட அதிரடிப்படையினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு கொலைப்படையாகவே செயற்பட்டு வருவதாகவும், கடுமையான சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டுவருவதன் மூலம் அப்பிரதேசத்தை கடுமையான அச்சத்தில் ஆள்த்தி வைத்திருப்பதாகவும் தமிழர்கள் குற்றஞ்சுமத்துகிறார்கள்" என்றும் எழுதுகிறார். கென் வைட் அவருடன் பேசும்போது, "நாம் அவர்களுக்கு வழங்கிவரும் பயிற்சிகளின்மூலம் அட்டூழியங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். ஆனால், கொழும்பில் தங்கியிருக்கும் பல மேற்குநாட்டு இராஜதந்திரிகளோ கீனி மீனியின் பயிற்சிகளின் பின்னரே கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் காண்பித்திருந்தார்கள்.

எல்ரிச்சுக்குப் பேட்டியளித்த லலித் அதுலத் முதலி, "இலங்கை அரசாங்கம் அரசியல்த் தீர்வில் நம்பிக்கை கொள்ளவில்லை. வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியின் மூலம் இராணுவத் தீர்வு சாத்தியப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

large.BELL212.jpg.628b917c0649bc2ab9f593092bb84021.jpg

 கீனி மீனி கூலிப்படையினரால் செலுத்தப்பட்ட இலங்கை வான்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தியொன்று

" நாம் அவர்களை எமது விசேட அதிரடிப்படை வீரர்களைப் பயிற்றுவிக்கவும், துணை இராணுவக் குழுக்களை அமைக்கவுமே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இப்பயிற்சிகளின் ஊடாக எமது வீரர்கள் பல நுணுக்கங்களைக் கற்றிருக்கிறார்கள். பல பகுதிகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவர்களால் முடிந்திருக்கிறது. இலங்கையின் அரச படைகள் படுகொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தமிழ்மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் கீனி மீனி சேவையினரின் பயிற்சியினால் 42 வீதம் குறைந்திருக்கிறது. கீனி மீனி சேவையின் வீரர்களை நாம் நேரடியான சண்டைகளில் பயன்படுத்தி வருகிறோம் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும்" என்றும் கூறினார். 

தனது ஆய்வுகளின் சாரம்சமாக எல்ரிச் பின்வருமாறு கூறுகிறார், "கீனி மீனி சேவைகளின் வீரர்கள் பயிற்சி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள் என்று அரசு கூறினாலும் கூட, பயிற்சிக்கும் நேரடியான சண்டைக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு சிலவேளைகளில் அழிக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக வான் தாக்குதல்களில் கீனி மீனீ சேவையின் வீரர்கள் நேரடியாகவே பங்கெடுக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, 35 கீனி மீனி சேவைகளின் வீரர்கள் அமெரிக்கத் தயாரிப்புக்களான பெல் 212 மற்றும் பெல் 412 ஆகிய உலங்குவானூர்திகளில் இலங்கை வான்படை வீரர்களுக்குச் சண்டைப்பயிற்சி அளித்து வருகிறார்கள். சாட்சியங்களின்படி, போராளிகள் மீதான வான் தாக்குதல்களுக்குச் செல்லும் வேளைகளில் இலங்கையைச் சேர்ந்த விமானி ஒருவர் பிரதான விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருக்க, கீனி மீனியின் வீரர் உதவி விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருந்த்து தாக்குதலில் ஈடுபடுகிறார். வெளியில் இருந்து பார்ப்போருக்கு இலங்கை விமானியே உலங்குவானூர்தியைச் செலுத்துவதால், கீனி மீனியின் பங்களிப்பு மறைக்கப்பட்டு விடுகிறது.

ஆனால், உலங்கு வானூர்தி மீது போராளிகள் தரையிலிருந்து தாக்கும்போது நிலைமை மாறி விடுகிறது. போராளிகளின் தாக்குதல்களிலிருந்து விமானத்தைத் தப்புவிக்க, இலாவகமாக ஓட்டிச் செல்ல கீனி மீனியின் விமானி பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொள்ள இலங்கை விமானியோ இயந்திரத் துப்பாக்கியை இயக்கச் சென்றுவிடுகிறார்.

large.BELL412.jpg.272048e1de0b473b8d0b4dbf97a0940d.jpg

அமெரிக்காவால் வழங்கப்பட்டு கீனி மீனி கூலிப்படையினரால் இயக்கப்பட்ட பெல் 412 உலங்கு வானூர்தி

பெருமளவு கூலிப்படையினரும் ஆயுதங்களும் இலங்கை அரசால் தருவிக்கப்பட்டபோது இந்திரா காந்தி எரிச்சலடைந்தார். இதுகுறித்து நரசிம்ம ராவோ லோக் சபையில் அறிக்கையொன்றினை வெளியிட்டார். இந்தியாவைக் கடந்து, வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரின் உதவிகள் பெறப்பட்டிருப்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவ ரீதியில் தீர்வு காண முயன்றால் அழிவுகரமான விளைவுகளே ஏற்படும் என்றும் இலங்கை அரசாங்கத்தை அவர் எச்சரித்தார்.

இதனால் கொதிப்படைந்த ஜெயார், இந்தியாவுக்கெதிரான கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பெரியண்ணை பாத்திரத்தை இந்தியா வகிக்க எத்தனிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பிராந்திய வல்லரசு எனும் இந்தியாவின் எண்ணம் வெறும் கனவுதான் என்றும் எள்ளி நகையாடினார். இந்தியாவை அவமானப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள், அதற்கு எதிர்மறையான விளைவுகளையே அவருக்குக் கொடுத்தன. அதுமட்டுமல்லாமல், இலங்கையின் நிலையினையும் இன்னும் மோசமாக்கி விட்டிருந்தது. பெருமளவு போராளிகளும் அவர்களுக்கான ஆயுதங்களும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியாவால் நகர்த்தப்பட்டன. தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கொடுத்த பணத்தினால் வாங்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களும் புலிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு போராளி அமைப்புக்களை ரோ கோரத் தொடங்கியது.

தம்மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக பொலீஸாரும் இராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது  நடத்திய தாக்குதல்கள் ஆவணி, புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. இதனையடுத்து தமிழ் மக்கள், போராளி அமைப்புக்களுக்கு முற்றான ஆதரவினை வழங்கத் தலைப்பாட்டார்கள். இலங்கை அரசுக்கெதிரான புரட்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அவர்கள் முன்னர் வழங்கிவந்த ஆதரவு முற்றாக போராளிகளுக்கு கைமாறியிருந்தது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விசுவாசத்தினை இலங்கை அரசாங்கம் இழந்தது. இலங்கையரசு என்பது சிங்கள அரசுதான் என்கிற நிலைக்குக் அது கீழிறக்கப்பட்டது. தொடர்ந்துவந்த மூன்று மாதங்களில் புலிகளின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், தமிழர்களுக்கான தனிநாட்டினை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர்.

மேலதிக வாசிப்பிற்கு : கீனி மீனிக் கூலிப்படையின் இலங்கைச் செயற்பாடுகள் குறித்த ஆவணம் ஒன்று
 
https://www.puradsimedia.com/wp-content/uploads/2019/02/britains_dirty_war.pdf

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி தாக்குதல்

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1984 ஆம் ஆண்டென்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட முக்கியமான திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த அத்தியாயத்தில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்கள் அவர்களை அரசிடமிருந்து அந்நியப்பட வைத்திருந்தது என்று எழுதியிருந்தேன். தனக்கு எதிரானவர்களை, அவர்கள் தமிழர்களாகவோ அல்லது சிங்களவர்களாகவோ இருந்தாலென்ன, முற்றாக அழித்துவிடுவது எனும் ஜெயாரின் கொள்கையும், எதிர்த்தோரைப் பழிவாங்கும் அவரது இயல்பான குணமும், இஸ்ரேலிய அதிகாரிகளின் ஆலோசனைப்படி தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களிலிருந்து அவர்களை அச்சுருத்தி அகற்றிவிட்டு அப்பிரதேசங்களில் இராணுவ ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், தனது படைகள் மீதான தாக்குதலுக்கு தமிழ் மக்கள் மீது பழிவாங்கல்த் தாக்குதல்களைச் சரியென்று நிறுவியும் வந்த லலித் அதுலத் முதலியின் கொடுங்கரமும் தமிழர்களை போராளிகளின் பின்னால், குறிப்பாக புலிகளின் பின்னால் அணிதிரள வைத்திருந்தது.

இந்த அத்தியாயத்தில் அதன் அடுத்த கட்டமான பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது முதல் தனிநாட்டிற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை புலிகள் உருவாக்கியது வரையான விடயங்களைப் பார்க்கலாம். அடுத்துவரும் அத்தியாயங்களில் புலிகள் இராணுவ நிர்வாகக் கட்டமைப்புக்கள் பற்றி பார்க்கலாம். அந்த அத்தியாயத்தில் பிரபாகரன் எனும் மேதையின் செயற்றிறனும் ஏனைய நான்கு போராளி அமைப்புக்களிடமிருந்து புலிகளை அவர் எவ்வாறு விதிவிலக்காக்கி வழிநடத்திச் சென்று ஈற்றில் 1987 ஆம் ஆண்டு ஒற்றை அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பிக்கையாக புலிகளை எவ்வாறு மாற்றினார் என்பதையும் பார்க்கலாம்.

large.Prabakaran.jpg.d5773af753240fe3174455fd04cfc6e0.jpg

வேலுப்பிள்ளை பிரபாகரன்

 அதன்பின்னர் எழுதப்படும் கதை பிரபாகரனினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கதையாகவே அமையும். ஏனைய போராளி அமைப்புக்கள் வினைத்திறன் அற்ற வெற்று ஆமைப்புக்களாகவும் இன்னும் சில சிங்கள அரசாங்கத்தின் கருவிகளாகவும் மாறிப்போனார்கள். தமிழ் மக்கள், ஏறக்குறைய அனைவருமே பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் தமது முழு நம்பிக்கையினையும், விசுவாசத்தையும் வைத்தார்கள்.

இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. தமிழ் மக்கள் பிரபாகரனின் பின்னாலும், புலிகளின் பின்னாலும் உறுதியாக அணிவகுத்து நிற்கிறார்கள். மேலும் கருணா மற்றும் அவர் போன்றவர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பிரபாகரனை பலவீனப்படுத்தி தோற்கடிக்க எடுத்த முயற்சிகள் அவர்களின் நோக்கத்திற்கு எதிராகவே அமைந்தன என்பதையும் என்னால் கூறமுடியும். இவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலிருந்து தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமாக பிரபாகரன் வெளித்தெரிந்தார். பிரபாகரனைப் பலவீனப்படுத்தித் தோற்கடிக்க அரசாங்கமும் அதன் தமிழ்க் கருவிகளும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுக்கும் கைங்கரியங்கள்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தமிழ் மக்கள் அவர்பின்னால் அணிதிரண்டார்கள்.

தமது சுய கெளரவமும், மரியாதையும், கண்ணியமும் பிரபாகரனின் இராணுவ வல்லமையிலேயே முற்றாகத் தங்கியிருப்பதை அவர்கள் முற்றாக உணர்ந்தார்கள்.

இந்திய ரோ வின் அழுத்தத்தினால் ஈரோஸ் அமைப்பினர் ஐப்பசி 22 ஆம் திகதி போரினை கொழும்பிற்குக் கொண்டுவந்திருந்தார்கள். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் ஜெயாருக்கும் லலித் அதுலத் முதலிக்கும் கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தன. அவர்கள் சிங்களவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். தமிழர்களை அடக்கியாள அவர்கள் அதுவரை வைத்திருந்த "இனக்கலவரம்" எனும் ஆயுதத்தையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு கீழிறக்கப்பட்டிருந்தார்கள். 

ஐப்பசி 27 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த அமெரிக்க செயலாளர் ரிச்சேர்ட் மேர்பியின் மூலம் ஜெயார் தேடிக்கொண்டிருந்த ஆறுதல் அவருக்குக் கிடைத்தது. "இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வென்பது எவ்வளவு அவசியமோ, அதேயளவு அவசியமானது அத்தீர்வு வெளியாரின் தலையீடுகள் இன்றி அமைவது" என்று மேர்பி கூறியிருந்தார்.

1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் திகதி கொல்லப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்காகத் தமிழ் மக்கள் இரங்கினார்கள். பிரபாகரனும் ஏனைய அமைப்புக்களின் தலைவர்களும் தமது இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள். இந்திரா காந்தியை "அன்னை இந்திரா" என்று விளித்து பிரபாகரன் தனது இரங்கல் உரையினை வெளியிட்டிருந்தார். இந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகனான ரஜீவ் காந்தி கார்த்திகை 1 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

large.LTTEFlag.jpg.78432a79eb4636c6ab8cc85a6e6892a4.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி

புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தியே வந்தார்கள். ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நாள் இரவே அச்சுவேலி - வசாவிளான் வீதியில் பயணித்த இராணுவக் கவச வாகனத்தைக் குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை அவர்கள் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 9 இராணுவத்தினர் பலியானதுடன் இன்னும் மூவர் காயமடைந்தனர். மறுநாள், கார்த்திகை 2 ஆம் திகதி தொண்டைமானாறு பலாலி வீதியில் இராணுவக் கவச வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தில் இன்னும் 6 இராணுவத்தினரை அவர்கள் கொன்றனர். பலாலி முகாமிலிருந்து மக்கள் குடியிருப்புக்கள் ஊடாக இரவு வேளைகளில் ரோந்து வரும் இராணுவத் தொடரணியை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் இரண்டும் நடத்தப்பட்டன. தமது பாதுகாப்பிற்காகவும் , பொதுமக்களை அச்சுருத்தி அடிபணியவைக்கும் நோக்கிலும் இராணுவத்தினர் கவச வாகனங்களில் வரிசையாக ரோந்து புரிவதை அப்போது வழமையாகக் கொண்டிருந்தனர்.

இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட கார்த்திகை 3 ஆம் திகதியை துக்கதினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அன்றும், மறுநாளும் புலிகளும் அமைதி காத்தனர். அதன்பின்னர் அவர்களின் கண்ணிவெடிப் போர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. கார்த்திகை 9 ஆம் திகதி இராணுவம் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணம் சந்தைக்குள் நுழைந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது நடத்திய சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட மேலும் பலர் காயமடைந்தனர். இராணுவம் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும் என்கிற இஸ்ரேலின் ஆலோசனைக்கு அமைய "கூட்டுத் தண்டனை" தமிழர்களுக்கு வழங்கப்படத் தொடங்கியது.

large.Pandithar.jpg.2b66cba65a0ffe1ef9e29293c17599b8.jpg

பண்டிதர்

கார்த்திகை 19 ஆம் திகதி இராணுவத்தினர் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தினர்இராணுவத்தின் அதிகாரியான கேணல் ஆரியப்பெரும‌வும் இன்னும் ஏழு சிப்பாய்களும் பயணம் செய்த ஜீப் வண்டி புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. புலிகளின் தாக்குதல்க‌ள் தீவிரமாகக் காணப்பட்ட பருத்தித்துறைப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் திறமைசாலியான கேணல் ஆரியப்பெருமவை பாதுகாப்பு அமைச்சு தெரிவுசெய்து அனுப்பியிருந்தது. பருத்தித்துறைப் பகுதியிலிருந்து புலிகளை முற்றாக துடைத்தழிப்பதே அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி. ஆனால், புலிகளோ பதிலுக்கு அவரை அழித்துவிட திடசங்கற்பம் பூண்டனர்.

புலிகளின் வடபகுதித் தளபதியாவிருந்த பண்டிதரை இத்தாக்குதலை நடத்துமாறு பிரபாகரன் பணித்திருந்தார். பண்டிதரும் அவரது உப தளபதியான கிட்டுவும் ஆரியப்பெருமவுக்கான பொறியைத் திட்டமிட்டனர். கட்டுவன் - தெல்லிபழை வீதியில் அமைந்திருந்த கல்வெட்டொன்றினை வேண்டுமெறே தகர்த்த அவர்கள் தெல்லிப்பழை சந்திக்கு அருகில் கண்ணிவெடியொன்றினை புதைத்துவிட்டுக் காத்திருந்தனர். பண்டிதர் எதிர்பார்த்ததைப் போலவே தகர்க்கப்பட்ட கல்வெட்டைப் பார்க்க ஆரியப்பெருமவும் வந்தார், கண்ணிவெடியிலும் அகப்பட்டார்.  

ஒரு ஜீப்பும் இரு கவச வாகனங்களும் கொண்ட இராணுவத் தொடரணியில் ஆரியப்பெரும தெல்லிபழைக்கு வந்தார். தொடரணியின் முன்னால் பயணம் செய்துகொண்டிருந்த ஜீப் வண்டியில் ஆரியப்பெரும பயணித்திருந்தார். ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய புலிகள் ஆரியப்பெரும உட்பட எட்டு இராணுவத்தினரைக் கொன்றனர். ஆரியப்பெருமவின் இழப்பு இலங்கை இராணுவத்திற்கு விழுந்த பெரிய அடியாகக் கருதப்பட்டது. அவரது மரணத்தின் பின்னர் அவர் பிரிகேடியர் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றார். 

தாக்குதல் நடைபெற்ற தெல்லிப்பழை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் மீது இராணுவத்தினல் காலை 3 மணியிலிருந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடைபெற்றிருக்கொண்டிருந்த வேளையிலேயே அன்றுவரை நடந்த ஆயுதப் போராட்டத்தில் மிகவும் அதிகளவு இழப்புக்களை ஏற்படுத்திய தாக்குதலை டெலோ அமைப்பு நடத்தியது.

அன்று பிற்பகல் 2:30 மணிக்கு நன்கு பலப்படுத்தப்பட்டு, காவலுக்கு உட்பட்டிருந்த இருமாடிகளைக் கொண்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்திற்கு 14 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் சென்றான். வாயிலில் காவலுக்கு நின்ற‌ பொலீஸ் காவலாளியிடம் தனது தேசிய அடையாள அட்டை தொலைந்து விட்டதாகவும், ஆகவே அதுகுறித்து முறைப்பாடு ஒன்றினைச் செய்து, இன்னொரு அடையாள அட்டையினைப் பெறவே தான் வந்திருப்பதாகக் கூறினான். மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக தான் காத்திருப்பதால் அடையாள அட்டை மிகவும் அவசியம் என்றும் அவன் கூறவே, போலீஸ் காவலாளியும் கேட்டினைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தார். ஏக காலத்தில் பொலீஸ் நிலையத்தின் முன்னால் வந்த உள்ளூரில தயாரிக்கப்பட்ட கவச வாகனத்திலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டே வெளியில் குதித்த நிக்கலஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட நியூட்டன் எனும் போராளி பொலீஸ் நிலையம் நோக்கி ஓடத் தொடங்க அவரைத் தொடர்ந்து மேலும் பல டெலோ போராளிகள் உள்ளே புகுந்தார்கள்.

கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த நியூட்டன் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். நியூட்டனின் பின்னால் பத்து போராளிகள் சுட்டுக்கொண்டே உள்நுழைய மேலும் 20 போராளிகள் அவர்களைத் தொடர்ந்து உள்நுழைந்து பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகள் நோக்கிச் சென்றனர். இராணுவச் சீருடையில் இருந்த அவர்களில் ஒரு பிரிவினர் ஆயுதக் கிடங்கு நோக்கிச் சென்று அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர். கட்டிடத்தின் மேற்பகுதியில் அமைந்திருந்த தொலைத் தொடர்பு அறைக்குச் சென்ற ஒரு குழு தொலைத்தொடர்புச் சாதனங்களை அடித்து நொறுக்கியதுடன், பொலீஸாரின் தங்குமிடத்திற்குள் ஒளித்திருந்த பொலீஸாரைச் சுட்டுக் கொன்றனர். டெலோ போராளிகள் கிர்னேட்டுக்களைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட சிறப்புக் கொமாண்டோக்கள் அதிர்ச்சியுற்று சிதறி ஓடத் தொடங்கினர். இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான லொறியைக் கடத்திவைத்திருந்த 3 போராளிகள் அதனுள் வெடிகுண்டுகளை நிரப்பி  ஓட்டி வந்தனர். பொலீஸ் நிலைய வளாகத்தின் நடுவில் அந்த லொறியை நிறுத்திவைத்த அவர்கள் அதிலிருந்து தாம் வந்த வானிற்கு வயர்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் போராளிகளில் ஒருவர் விசில் ஒலியை எழுப்பியதும் உள்ளிருந்த போராளிகள் வெளியேறிவிட பாரிய சத்தத்துடன் லொறிக் குண்டு வெடித்தது. சீமேந்துத் தூண்களினாலும், தகடுகளாலும் பலப்படுத்தப்பட்ட பொலீஸ் நிலையக் கட்டிடம் நொறுங்கி வீழ்ந்தது.

தாக்குதல்க் நடத்தப்பட்ட கட்டிடத்தைப் பார்க்கப் பள்ளிச் சிறுவர்கள் வந்திருந்தார்கள். சேதப்படுத்தப்பட்டுக் கிடந்த பல ஆயுதங்களை அவர்கள் பொறுக்கியெடுத்தார்கள்.  தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பிய தமிழ் பொலீஸ் பரிசோதகர் ஒருவர் அச்சூழ்நிலை இதயத்தைப் பிளக்கும் உணர்வைத் தந்ததாகக் கூறினார். அன்றைய தாக்குதலை தமிழ் மாணவர்கள் மகிழ்வுடன் கொண்டாடிய விதத்தினைப் பார்க்கும்போது எவ்வளவு தூரத்திற்கு தமிழ்ச் சமூகம் இலங்கை அரசிடமிருந்தும், சட்டம் ஒழுங்கினைக் காக்கும் இலங்கைப் பொலீஸாரிடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "இலங்கை அரசிடமிருந்தும் அதன் படைகளிடமிருந்தும் தமிழ் மக்கள் முற்றாகப் பிரிந்து சென்றுவிட்டார்கள்" என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றிற்கு அவர் கூறினார். 24 பொலீஸாரும், உதவிக்கு இருந்த மூன்று சிவிலியன்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மீதமாயிருந்த பொலீஸாரில் பெரும்பாலானோர் காயமடைந்தனர். மிகவும் திட்டமிட்ட ரீதியில், குறுகிய நேரத்தில் கச்சிதமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. வெறும் 15 நிமிடத்தில் அனைத்தும் முடிந்திருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து படையணியொன்றினை சாவகச்சேரி நோக்கி இராணுவம் உடனடியாக அனுப்பிவைத்தது. ஆனால், இராணுவம் பொலீஸாருக்கு உதவிக்கு வரும் என்பதை எதிர்பார்த்த டெலோ போராளிகள் கைதடிப் பகுதியில் இராணுவம் மீது கடுமையான தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடிகளை இயக்கிய அதேவேளை கடுமையான துப்பாகித் தாக்குதலையும் அவர்கள் மேற்கொண்டனர்.  கண்டி வீதியின் இருபக்கத்திலிருந்து தாக்குதல் நடத்திய டெலோ போராளிகள் இராணுவம் மீது சரமாரியாக கிர்ணேட்டுக்களையும் எறிந்து தாக்கினர். டெலோவின் கடுமையான தாக்குலில் குறைந்தது 20  இராணுவத்தினர் கைதடியில் பலியானார்கள்.

இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் தாக்கும் வல்லமையினைப் போராளிகள் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் இத்தாக்குதல் நிரூபித்திருந்தது. இத்தாக்குதலையடுத்து இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வெளிவந்த அனைத்துத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இத்தாக்குதலை மகிழ்ச்சியுடன் செய்தியாக வெளியிட்டன. சிங்கள அரசுக்கு தமிழர்கள் பாடம் ஒன்றினைப் புகட்டியிருக்கிறார்கள் என்பதே இச்செய்திகளின் கருப்பொருளாக இருந்தது.

டெலோ அமைப்பும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. இறுதியாக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்றுவிட்டோம் என்கிற பூரிப்பு அவ்வியக்கத்தில் காணப்பட்டது. அதுஅவரை காலமும் புலிகள் அமைப்பே மக்களின் கவனத்தை ஈர்ந்திருந்தது. பொலீஸார் மீதும் இராணுவத்தினர் மீதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டு வந்தனர். இத்தாக்குதல் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாகவே வெளிவந்திருந்தன. ஆகவே, மக்களின் கவனம் தனது இயக்கம் நோக்கியும் திரும்பவேண்டும் என்று நினைத்த டெலோ அமைப்பின் தலைவர் சிறீசபாரட்ணம் பெரியளவில் தாக்குதல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்று நினைத்தார். மேலும், இதே பொலீஸ் நிலையம் மீது இரு வருடங்களுக்கு முன்னர் புலிகள் நடத்திய தாக்குதலைக் காட்டிலும் வெற்றிகரமான தாக்குதலாக இது அமையவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இத்தாக்குதலைத் திட்டமிடுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அவர் வந்திருந்தார்.

இத்தாக்குதலை ஒளிநாடாவாகப் பதிவுச் செய்யும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருந்தார். இந்த ஒளிப்படத்தைத் தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் டெலோ அமைப்பினர் மக்களிடம் காண்பித்தனர். இதன்மூலம் பணத்தினை மக்களிடமிருந்து அவர்களால் பெற முடிந்தது. ஆனால், தாங்கள் ஏற்படுத்திய தாக்குதல் வெற்றியைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்ல டெலோவினால் முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு நடத்தும் தாக்குதல்கள் ஊடாக விடுதலைப் போராட்டத்தை வென்றுவிட முடியாது என்பதற்கு டெலோவின் இத்தாக்குதல் ஒரு உதாரணமாக அமைந்தது.  ஆனால், புலிகள் அமைப்போ இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தி, பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கும் கண்ணிவெடித் தாக்குதல்களை முதன்மையாகக் கொண்ட நகர்வு முறியடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தியபடியே இருந்தனர்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரிய லலித் அதுலத் முதலி

மட்டக்களப்பில், கார்த்திகை 30 ஆம் திகதி, படகு ஒன்றில் இருந்து இறங்க எத்தனித்த ஐந்து ஆயுதம் தரித்த போராளிகள்  இராணுவத்திற்கு உளவு பார்ப்பவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் பதுங்கியிருந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படகிலிருந்து 10 .கே. 47 ரக துப்பாக்கிகளையும் 3,000 தோட்டாக்களையும் இராணுவத்தினர் கைப்பற்றினர். இரண்டாவது படகு இராணுவத்தினரின் தாக்குதலுக்கு மத்தியிலும் தப்பிச் சென்று விட்டது.

இராஜாங்க அமைச்சரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் செய்தியாளர் மாநாட்டில் பேசும்போது தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையை ஆக்கிரமிக்க தமிழ்ப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், 1985 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி, தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் அன்று தமிழ் ஈழத்திற்கான சுதந்திரப் பிரகடணத்தைச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் கூறினார். "அப்படியான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தால் நாம் போருக்குச் செல்வோம்" என்று அவர் முழங்கினார்.

அல்விஸின் கூற்றிற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், இலங்கையரசு தேவையற்றவிதமாக போர் உளவியலுக்குள் மக்களை இழுத்துச் செல்வதாகவும் கூறியது. தமிழர்கள் மீது கொடூரமான இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இலங்கையரசு இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டியது.

இந்தியாவின் குற்றச்சாட்டினை லலித் ஏளனம் செய்தார். "தமிழர்களுடன் போருக்குச் செல்வதன் மூலம் நாம் எதனை அடையப் போகிறோம்?. இந்த அரசாங்கத்திற்கு அறுதிப் பெரும்பான்மையிருக்கிறது. அடுத்துவரும் தேர்தல் 1989 இல் தான் நடக்கவிருக்கிறது" என்று கவனமாகப் பேசியிருந்தாலும்கூட, அவரது இந்தப் பேச்சு இந்தியாவை நோக்கித்தான் என்பது புதிரல்ல.ராஜீவ் காந்தியும் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அதற்கான பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தேர்தல்ப் பிரச்சாரங்களில் இலங்கையில் நடைபெற்றுவரும் இன முரண்பாடே முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது.

இஸ்ரேலிய ஆலோசகர்களுடன் தான் மிகவும் நுணுக்கமாக வகுத்திருந்த  இராணுவ நடவடிக்கைகளுக்கான சூழலினை லலித் ஏற்படுத்தத் தொடங்கியிருந்தார்.போராளிகளை நோக்கி அவர் விடுத்த எச்சரிக்கையில், "இலங்கைப் படைகள் மீது நீங்கள் நடத்திவரும் பைத்தியக்காரத்தனமானதும், விளைவுகளற்றதுமானதாக்குதல்களை உடனே நிறுத்தி சரணடையுங்கள். அப்படிச் சரணடைந்தால் உங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

ஆனால், போராளி அமைப்புக்கள் லலித்தின் எச்சரிக்கையினை நிராகரித்தன. லலித்தின் வேண்டுகோளினை தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்து ஒரு கடிதத்தை புலிகள் அவருக்கு அனுப்பியிருந்தனர். தமிழில் எழுதப்பட்டிருந்த அக்கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. சிங்கள ஆங்கில ஊடகங்கள் புலிகளின் கடிதத்தை முற்றாகவே புறக்கணித்திருந்தன. யாழ்ப்பாணப் பத்திரிக்கைகள் அக்கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அக்கடிதத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,

அன்பான திரு அதுலத் முதலிக்கு,

நீங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக இனவாத யுத்தம் ஒன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். இந்த யுத்தத்தில் கொடூரமானவனான ஹிட்லரையும் நீங்கள் மிஞ்சி விட்டீர்கள்.

தமிழ் இனத்தை இரத்தமும் கண்ணீரும் சிந்தவைத்து பெரும் பாவத்தையும், குற்றவுணர்ச்சியையும் உங்கள் தலைகளில் சுமந்துவருகிறீர்கள். நீங்கள் செய்துவரும் கொடூரங்கள் சரித்திரம் காணாதவை.

எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால், எமது போராட்டம் என்பது அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஆயுத ரீதியிலான எதிர்ப்பு மட்டுமே. உங்களின் அரச பயங்கரவாதத்தின் விளைவான பிள்ளையே நாம் போராடிப் பெறவிருக்கும் தமிழ் ஈழமாகும். அதன் உருவாக்கத்திற்கு நீங்களே பொறுப்பானவர்கள்.

அதனை இராணுவ அடக்குமுறை மூலம் நீங்கள் தடுத்து நிறுத்திவிட முடியாது. எங்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதன் மூலமும் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை.

இராணுவ ரீதியிலான உங்களின் முன்னெடுப்புக்கள் உங்களுக்கு அழிவுகளை மட்டுமே கொண்டுவரப்போகின்றன.

எங்களை அடையாளம் காண்பதோ, அழிப்பது உங்களால் இயலாத காரியம். நாங்கள் எங்கும் பரந்திருக்கிறோம்.குறிப்பாகச் சொல்லப்போனால் நாங்களே மக்கள்.

பலம் பொறுந்திய நாடுகளே மக்கள் எழுச்சிக்கு முன்னால் தோற்றுப்போன வரலாறுகள் எம் முன்னால் இருக்கின்றன. மக்களின் உண்மையான விருப்பினை அழித்து வெற்றிகொண்ட அரசுகள் கிடையாது.

எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதில் நாம் உறுதிபூண்டு நிற்கிறோம். எத்தடைகள் வரினும், எவ்வகையான தியாகங்கங்களைச் செய்தாவது எமது இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று நாம் உறுதி பூண்டிருக்கிறோம்.

உலக மக்களின் மனச்சாட்சியின் முன்னால் நீங்களே உங்கள் குற்றங்களுக்காக குற்றவாளியாக ஆடையாளம் காணப்படுவீர்கள்.

என்று கூறப்பட்டிருந்தது.

புலிகளின் கடிதத்திற்கு காரசாரமான பதிலை லலித் வழங்கினார். தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகள் இலங்கையை ஆக்கிரமிக்க எடுத்துவரும் நடவடிக்கையினைத் தடுத்து இலங்கையின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் காக்கவே தான் பாடுபடுவதாக அவர் தெரிவித்தார். உடனடியாக இரண்டு வகை அவசரகால திட்டங்களை அவர் வெளியிட்டார். முதலாவது கடல்ப்பரப்பினைப் போராளிகள் பாவிப்பதனைத் தடை செய்வது. இரண்டாவது புலிகள் கூறிய "நாமே மக்கள்" எனும் பதத்திற்கான எதிர்வினையினை வழங்குவது.

கார்த்திகை 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அதுலத் முதலி மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பிரதேசம் மக்கள் செல்ல முடியாத பகுதியென்று அறிவிக்கப்படுவதுடன் இப்பகுதியில் கடற்றொழிலிலோ அல்லது போக்குவரத்திலோ ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைமூலம் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பிரதேசங்கள் குறித்தும் அறிவித்தார். இப்பிரதேசங்களில் தனியார் வாகனங்களான பஸ்வண்டிகள், மோட்டார் வண்டிகள், மோட்டா சைக்கிள்கள், பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அரச பேரூந்துக்கள் மட்டுமே இப்பிரதேசத்திற்கு வரமுடியும் என்றும், அவை கூட ஒரு நாளை 2 மணிநேரத்திற்கு மேல் இப்பகுதிகளுக்குள் நிற்கமுடியாதென்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ இதுகுறித்து எழுதுகையில் "கொடூரமான அப்பயங்கரவாதிகள் இனி என்ன செய்யவிருக்கிறார்கள்? முச்சக்கர சைக்கிள் வண்டிகளில் பயணம் செய்வார்களோ? கடைசியாக முச்சக்கர சைக்கிள்களும் தடைசெய்யப்படுமோ? பயங்கரவாதிகள் சிலர் சைக்கிள்களைப் பாவித்ததால் சைக்கிள்கள் தடைசெய்யப்படுகின்றவென்றால், சில மக்கள் பாலியலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக உடலுறவையும் தடைசெய்துவிடுவார்களோ? என்று கேள்வி எழுப்பியிருந்தது.

large.Coastlinemap.jpg.80de5d602b1c814c235467a510ee6627.jpg

மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கரையோரப் பிரதேசம்

 பாராளுமன்றத்தில் தனது உரையினை நிறைவுசெய்கையில் லலித் அதுலத் முதலி யாழ்ப்பாண மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை விடுத்தார். அதுதான் யாழ்க்குடாநாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என்பது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ விடுமுறையினைக் கழிப்பதற்கு யாழ்ப்பாண மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டால் பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார், எதிர்ப்பவர் யாரென்பதைக் கண்டறிவது இராணுவத்தினருக்கு இலகுவானதாக இருக்கும் அன்று அவர் கூறினார். எனக்கும் அந்த அறிவித்தல் வந்தபோது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன், இதனை என்னால் நம்பவே முடியவில்லை. மறுநாள் காலை 5:30 மணிக்கு லலித்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட நான் அவரது இந்த அறிவித்தலுக்கெதிராக அவரிடம் முறைப்பாடு செய்தேன். எனது தந்தையார், சகோதரி மற்றும் அவரது குடும்பம், எனது மாமியார், மைத்துனி மற்றும் எனது நெருங்கிய உறவினர்களையெல்லாம் என்ன செய்வது என்று அவரைக் கேட்டேன். தமிழர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளால் தான் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்த லலித், பயங்கரவாதிகளைப் புறக்கணிக்க யாழ்ப்பாணத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலினை செய்கிறது என்று ஒரு செய்தியைப் போடுங்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். மேலும், இச்செய்தியைத் தன்னுடன் எந்தவிதத்திலும் தொடர்புபட்டதாகக் காட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இராணுவத்தால்  மேற்கொள்ளப்பட்ட தமிழினச் சுத்திகரிப்பு

கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களும், கொக்கிளாய்நாயாறு மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களும்  முல்லைத்தீவு மாவட்டம் மீது அரசினதும் மக்களினதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. இத்தாக்குதல்களில் 120 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இதற்குப் பழிவாங்கலாக இராணுவமும் சிங்களக் குடியேற்றக்காரர்களும் நடத்திய பழிவாங்கல்த் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு தென்னமரவாடி, அமரவயல் ஆகிய புராதனத் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழ்மக்கள் நிரந்தரமாகவே சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல்ப் படுகொலைகள் மார்கழி மாதத்திலும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. போராளி அமைப்புக்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி வவுனியா இராணுவ முகாமில் அடைக்கப்பட்டிருந்த 21 தமிழ் இளைஞர்களை மார்கழி 1 ஆம் திகதி வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது இராணுவம். இராணுவக் காவலில் இருந்து தப்பிச் செல்ல எத்தனித்தபோதே தாம் அவர்களைக் கொன்றதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கு மேலதிகமாக டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளுக்கு அருகில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த 12 இளைஞர்களையும் இராணுவம் சுட்டுக் கொன்றது.  

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒதியாமலை எனும் புராதனத் தமிழ்க் கிராமத்திற்கு மார்கழி முதாலாம் திகதி இரவு சென்ற 35 இலிருந்து 40 பேர் அடங்கிய பதவிய இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் , மலைக்காடு கோவில்ப் பகுதியில் அன்றிரவைக் கழித்து, பொழுது புலரும் வேளையில் ஒதியாமலைக் கிராமத்தைச் சுற்றிவளைத்துக்கொண்டனர். பின்னர் வீடு வீடாகச் சென்று 15 வயது முதல் 35 வயதுவரையான ஆண்களைக் கைதுசெய்தனர். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டில் இளைஞர்களைக் கைதுசெய்தபோது அவர்களது குடும்பங்களின் முன்னிலையிலேயே அவர்களைக் கடுமையாகத் தாக்கத்தொடங்கியிருக்கின்றனர் இராணுவத்தினர். பின்னர் அவ்விளைஞர்கள், கைகள் பின்னால் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் சிலரை 25 சிறீ 6511 எனும் இலக்கத் தகடு உடைய உழவு இயந்திரத்தில் ஏற்றி கிராமத்தின் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் இராணுவத்தினர்.

large.othiyamalaimassacre1.jpg.13222c10709e3a59661aa8cb6b026833.jpg

இவ்விளைஞர்களுடன் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்களையும் இராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் 27 பேர் மிகக்கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததுள்ளதோடு இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகவும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னர் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு மிகக் கிட்டத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதே உழவு இயந்திரத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களை ஏற்றிய இராணுவத்தினர் கிராமத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று தீமூட்டியிருக்கின்றனர். மீதமாயிருந்த ஐந்து 60 வயது ஆண்களினதும் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் டொலர் பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. பாதி எரிந்த் நிலையிலிருந்த சடலங்களில் காணப்பட்ட ஆடைகளைக் கொண்டே கொல்லப்பட்டவர்கள் ஒதியாமலையில் இருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது தெரியவந்திருந்தது. இக்கிராமத்திலிருந்து அன்று மட்டும் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்ட குறைந்தது 32 ஆண்களின் விபரங்களை சர்வதேச மன்னிப்புச் சபையிடம் உறவினர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

large.othiyamalai(2).jpg.805fe1f32f3582c4782cbe0e91d12e9d.jpg

ஒதியாமலையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய படுகொலைகள் புலிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை. மார்கழி 4 ஆம் திகதி பதவியா பகுதியில் இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை புலிகள் நடத்தினர். இத்தாக்குதலில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட்ட, பழிவாங்கும் தாக்குதல்களில் இறங்கிய இராணுவத்தினர் அப்பகுதியில் வசித்து வந்த குறைந்தது 90 தமிழர்களை அன்று சுட்டுப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும், சிறுவர்களும் முதியவர்களும் அடங்கும்.

large.GaminiDiss.jpg.c5b1426e3a2c559aca11c69926fda778.jpg

காமிணி திசாநாயக்க

 

மாதுரு ஓயாவில் தான் நடத்த முயன்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தின் தோல்வியையடுத்து தனது நேரம் வரும்வரை காத்திருந்த காமிணி, தனக்கான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்திருப்பதாக எண்ணினார். நிவிட்டிகலையில் மார்கழி 3 ஆம் திகதி, பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர் நாட்டின் ஒற்றையாட்சி யாப்பினைக் காத்துக்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் நேரம் வந்துவிட்டதாக அவர் அறைகூவல் விடுத்தார்.

"நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும், பயங்கரவாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காக்க வரும்படி அரசிடம் இருந்து அழைப்பு வந்தால், தமது கைகளில் கிடைக்கும் எந்தவொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு சண்டைக்குச் செல்லத் தயாராக இருக்கவேண்டும் . அந்த ஆயுதம் கத்தியாகவோ, மண்வெட்டியாகவோ அல்லது இரும்புப் பொல்லாகவோ கூட இருக்கலாம். நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்பட்டாலன்றி இந்த நாட்டையும் மக்களையும் காப்பதென்பது சாத்தியமாகாது" என்று கூறினார்.

காமிணியின் புதிய அவதாரத்தால் தான் பிந்தள்ளிவிடக்கூடாது என்று அஞ்சிய லலித் அதுலத் முதலி, போராளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். மார்கழி 8 ஆம் திகதி வட மாகாணம் முழுவதையும் 42 மணிநேர ஊரடங்குச் சட்டத்திற்குள் கொண்டுவந்து , அப்பகுதியெங்கும் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கையினை அவர் ஆரம்பித்தார். கிராமம் கீராமமாக சுற்றிவளைத்த இராணுவத்தினரும் பொலீஸாரும், வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது பல இளைஞர்கள் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைகளுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மொத்தமாக 3,000 இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களுள் 800 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். தேடுதல் நடவடிக்கைகளின்போது பத்து இளைஞர்களை இராணுவம் கொன்றிருந்தது என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவின் அறிக்கை கூறியது. 

தமிழர்களுக்கெதிரான உணர்வுகள் சிங்களப் பகுதிகளில் மீண்டும் மூர்க்கமாகத் தூண்டிவிடப்பட்டது. இரத்திணபுரியில் இயங்கிவந்த தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளைச் சிங்களவர்கள் எரித்தனர்ஹட்டன் நகரிலும் இரு தமிழ்க் கடைகள் எரியூட்டப்பட்டன. மலையகத்தின் பல நகரங்களிலும் தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், பெருமளவிலானவர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகினர்.

கறுப்பு நீல நிறங்களில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் திருகோணமலை நகரில் தோன்றியிருந்தன. "தமிழ் ஈழம் கேட்பவர்கள் துரோகிகள்" என்று ஒரு சுவரொட்டி கூறியது. "அனைத்துத் துரோகிகளையும் திருகோணமலையினை விட்டுத் துரத்துவோம்" என்று இன்னொரு சுவரொட்டி கூறியது. "சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைபார்க்க முடியாது என்றால், தமிழர்கள் திருகோணமலையில் வேலை பார்ப்பது எப்படி?" என்று கேள்வியெழுப்பியது இன்னொரு சுவரொட்டி.

வலி ஓயாவிலிருந்து தமிழர்களை இனச்சுத்திகரிப்புச் செய்துவந்த அதேவேளை, தமிழர்கள் மீதான படுகொலைகளும் அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. மார்கழி 6 ஆம் திகதி தமிழரின் பூர்வீகக் கிராமமான திரியாயில் 24 மணிநேர ஊரடங்கினை இராணுவம் அமுல்ப்படுத்தியது.அக்கிராமத்தில் வசித்து வந்த 1399 குடும்பங்களையும் விளையாட்டு மைதானம் ஒன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் இராணுவம் அறிவித்தது. இராணுவ அறிவிப்பை ஏற்று மைதானத்தில் கூடிய பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலை இராணுவம் மேற்கொண்டது. கடுங்காயங்களுக்கு உள்ளான நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதேவகையான தாக்குதல்கள் வேறு தமிழ்க் கிராமங்களிலும் நடைபெற்றன. பெரியகுளத்தில் 20 இளைஞர்களைக் கைதுசெய்த இராணுவம் அவர்களை வீதியோரத்தில் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது.

1984 ஆம் ஆண்டு மார்கழி முதல் 1985 ஆம் ஆண்டு தை வரையான காலப்பகுதியில் பின்வரும் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டனர்.

கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கணுக்கேணி, உத்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அளம்பில்.

போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளை மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலும் அரசாங்கம் தொடர்ந்து நடத்தி வந்தது. மார்கழி 12 ஆம் திகதி செய்தியாளருக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர், யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குச் சற்று வெளியே அமைந்திருந்த கைதடிப் பகுதியில் குறைந்தது 200 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகக் கூறினார். ஆனால், கைதுசெய்யப்பட்ட அனைவரும் தனியார் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்களே என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழு அறிவித்திருந்தது.

large.Jeevothayam.jpg.dbd8f13f6e999b1adc7959ab4e2357d2.jpg

மன்னாரின் ஜீவோதயம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாதிரியார் ஜெயராஜசிங்கத்தின் நினைவுத் தூபி 2003

மறுநாள், மார்கழி 13 ஆம் திகதி மெதடிஸ்த்த திருச்சபையினைச் சேர்ந்த பாதிரியார் என்.ஜெயராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டர் வண்டி மன்னாரின் முருங்கன் பகுதியூடாகச் செல்லும்போது இராணுவச் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டது. பின்னர் பாதிரியார் ஜெயராஜசிங்கம், அவரது சாரதி அப்துள் காதர் சுலைமான் மற்றும் முருங்கன் பொலீஸ் நிலையத்தில் கொன்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த ஜேசுதாசன் ரோச் ஆகிய மூவரினதும் உடல்கள் பாதி எரிந்த நிலையில் பாதிரியாரின் காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.  

ஐந்து நாட்களுக்குப் பின்னர், மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் ஜீப் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த எட்டுப் பொலீசாரும் அவர்களது சாரதியும் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர். மறுநாள், மார்கழி 19 ஆம் திகதி இரு அதிகாரிகளும் இரு சிப்பாய்களுமாக நான்கு இராணுவத்தினர் பதவியாவில் கண்ணிவெடியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டனர். பழிவாங்கும் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவம் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. அதேநாள் புல்மோட்டைப் பகுதியில் இரு இராணுவத்தினர்கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் இன்னும் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர்.

மார்கழி 8 இலிருந்து 10 வரையான நாட்களில் தான் வட மாகாணத்தில் முடுக்கிவிட்ட தேடுதல் வேட்டை நடவடிக்கைகள் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களை நிறுத்தப் போதுமானவை அல்ல என்பதை உணர்ந்த லலித் இன்னுமொரு தேடுதல் நடவடிக்கையினை மார்கழி 19 ஆம் திகதி ஆரம்பித்தார். இராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் சுமார் ஆயிரம் இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்டனர். தனது இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமட்டாங்கள் முடக்கப்பட்டு வருகின்றமையினால், தாம் இனிமேல் ரொக்கெட் தாக்குதலிலும், சிறியரக எறிகணைத் தாக்குதல்களிலும், குண்டுவீச்சிலும் ஈடுபடப்போவதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

சண்டை மேலும் விஸ்த்தரிக்கப்பட்டது. பொதுமக்களின் மரணங்கள் கடுமையாக அதிகரிக்க ஆரம்பித்தன. கார்த்திகை மாதத்தின் இறுதிப்பகுதியில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியிருந்தது. இராணுவத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த புதியவகைத் தாக்குதல்கள் போராளிகளையும் அத்தாக்குதல்களில் ஈடுபட உந்தியிருந்தது என்று என்னுடன் தனிப்பட்ட ரீதியில் பேசிய சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

லண்டனில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் இயன் ஜக் இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்களுக்குச் சென்றுவந்தார். 1984 ஆம் ஆண்டு மார்கழி 16 ஆம் திகதி அவர் எழுதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

"உண்மையாகச் சொல்வதானால், இலங்கை இராணுவம் தனது சொந்த நாட்டிற்குள்ளேயே முற்றுகைக்கு உள்ளக்கப்பட்டு, மண்மூட்டைகளுக்கும், முட்கம்பிகளுக்கும் பின்னால் மறைந்து நடுங்கிக்கொண்டு நிற்கிறது" என்று எழுதினார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடியன்களை விட்டு நாம் வெளியேறப்போவதில்லை ‍- யாழ் மக்கள்

large.KidduAnnaa.jpg.49d8405f36fa64f4939df23d593a25da.jpg

இராணுவமும் பொலீஸாரும் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். அவர்களை ஊக்குவிக்கும் முகமாக "இராணுவத்தினருக்கு உதவுவோம்" எனும் பெயரில் நிதிச் சேகரிப்பு நிகழ்வினையும் தேசியப் பாதுகாப்பு நிதியத்தையும் ஆரம்பித்துவைத்தார் லலித்.பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க நாட்டு மக்கள் அனைவரும் முப்படைகளுக்கு தாராள மனது கொண்டு உதவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பணத்திற்கு மேலதிகமாக மழைக்காலத்தில் பாவிக்கும் ரெயின்கோட்கள், தண்ணீர்ப் போத்தல்கள், கட்டில்கள், நீர்க் கொல்கலன்கள், அலவாங்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், அலுமீனியத்தால் உருவாக்கப்பட்ட ஏணிகள், மின் சுவிட்சுக்கள், கைப்பந்து மற்றும் ஏனைய விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றையும் பொதுமக்கள் இராணுவத்தினருக்குக் கொடுத்து உதவிட முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

லலித் அதுலத் முதலியின் தேசியப் பாதுகாப்பு நிதிக்கு நிகரான ஒரு நிதியத்தை பிரபாகரனும் ஆரம்பித்தார். அதற்கு தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதியம் என்று அவர் பெயரிட்டார். தமிழ் மக்களுக்கென்று தனியான வேண்டுகோள் ஒன்றினையும் பிரபாகரன் வெளியிட்டார், 

large.Prabhakaran.jpg.1b9b43eb75fafee971fa07b17214a3f3.jpg

தலைவர் -  1980 களில் 

 

"தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம்.

ஒடுக்குமுறைகொண்ட இராணுவ ஆட்சி தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் அழித்துவிட அரசாங்கம் முயல்கிறது. 

ஆனால், அடக்குமுறைகள் வெற்றிபெற்றதாக வரலாறுகள் உலகில் எப்பக்கத்திலும் இருந்ததில்லை. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களின் எழுச்சியை அடக்குமுறை மேலும் மேலும் உரமாக்கிவிடவே உதவும். சுதந்திரத்திற்கான மக்களின் அவாவையும் அடக்குமுறை ஊக்குவிக்கும். சுதந்திர எழுச்சிக்கான மக்களின் மனவுணர்வையும் அடக்குமுறை புத்துயிர் பெறச் செய்யும்.

எமது ஆயுத ரீதியிலான போர் முன்னெடுப்புக்களை அரசாங்கம் முகம்கொடுக்க முடியாது திணறுவது தெரிகிறது. ஆகவேதான் தனது கோபத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மீது அது காட்டுகிறது.

தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அட்டூழியங்கள் ஊடாக தமிழ் மக்கள், போராளிகளை வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது.அரசாங்கத்தின் இச்சூழ்ச்சிகளை நாம் அறியாதவர்கள் அல்ல. இராணுவம் மக்களைத் தாக்குகிறது என்பதற்காக எமது விடுதலைப் போராட்டத்தை பிற்போடுவது விவேகமானதாக இருக்காது.

தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் நினைப்பதைத் தவறு என்று நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களின் இராணுவத்தை நாம் தொடர்ச்சியான போர் ஒன்றிற்குள் வைத்திருக்க வேண்டும். இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள்ளேயே நாம் முடக்கி வைத்திருக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் நாம் தனியாக நிற்கவில்லை. தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் எமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மக்களின் அனுதாபமும் எம்பக்கம் இருக்கிறது. ஆனால், எம்மீது போடப்பட்டிருக்கும் அடக்குமுறை விலங்கினை நாமே உடைத்தெறிய வேண்டும், அதற்காக நாம் தொடர்ந்தும் போராட வேண்டும்.

இழப்புக்கள் இல்லாது எம்மால் எமக்கான விடுதலையினைப் பெற்றெடுக்க முடியாது. தியாகங்கள் இன்றி விடுதலை கிடைக்கப்பெற்றதாகச் சரித்திரங்கள் இல்லை. சுதந்திரம் கொண்ட , பாதுகாப்பான வாழ்வினை நாம் வாழவேண்டுமானால் நாம் தியாகங்களைப் புரிவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்".

பிரபாகரனின் இந்தக் கோரிக்கை உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் மனங்களை வென்றது. அது அவர் எதிர்பார்த்த நிதியினையும் அவருக்கு வழங்கியது.

யாழ்ப்பாணத்தின் இன்னும் வசித்துவரும் எனது நெருங்கிய உறவுகளை கொழும்பிற்கு வந்துவிடுமாறு அழைக்க நானும் மனைவியும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றோம். நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் எறிகணைகள் எமது வீட்டுப் பகுதிக்குள்ளும் வந்து விழலாம் என்கிற சாத்தியம் இருந்ததனால் நாம் அஞ்சினோம். முதலில் இதுகுறித்து எனது தந்தையுடனும் மாமியாரோடும் பேசலாம் என்று நினைத்தோம். நாம் இதுகுறித்து தந்தையிடம் கேட்டபோது, "பொடியளை விட்டு விட்டு எங்களை ஓடச் சொல்கிறாயா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நாம் அனைவரும் இதுகுறித்துப் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். நாம் அவர்களுடன் தான் இருக்கப்போகிறோம்" என்று அவர் கூறினார். எனது மாமியாருடன் பேசும்போதும், "பொடியன்கள் எங்களுக்காகச் சண்டை பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களுடனேயே இருக்கப்போகிறோம்" என்று அவரும் கூறிவிட்டார். அவர்கள் இருவரும் அப்போதுதான் எழுபது வயதைக் கடந்திருந்தார்கள்.

எனது தங்கையும், மனைவியின் தங்கையும் அதே முடிவில் உறுதியாக இருந்தார்கள். பிள்ளைகளும் தான். எவருக்குமே யாழ்ப்பாணத்தையும், பொடியன்களையும் விட்டு விட்டுத் தப்பியோட விருப்பம் இருக்கவில்லை.

நாவற்குழி முகாமையும் எமது கிராமத்தையும் பிரிக்கும் வயல்வெளிக்குச் சென்றேன். தூரத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட காப்பரண்களை என்னால் காண முடிந்தது. முகாமைச் சுற்றிப் போராளிகள் இந்தக் காப்பரண்களை அமைத்து வைத்திருந்ததுடன், முகாமை எப்போதும் தமது கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். ஒரு போராளி என்னுடன் பேசுகையில், "நாங்கள் முகாமைச் சுற்றி வளைத்திருக்கிறோம். அதனைச் சுற்றிக் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறோம். இராணுவத்தினர் வெளியே வரமுடியாது" என்று கூறினார்.

நான் அவர்களுடன் அப்பகுதியில் நெடுநேரம் நின்றிருந்தேன். உலங்கு வானூர்திகள் மூலம் உள்ளே அடைபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பொருட்கள் இறக்கப்படுவது தெரிந்தது. அப்போராளி என்னுடன் தொடர்ந்தும் பேசுகையில், "யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்" என்றும் கூறினார்.

போராளிகளின் மனோதிடத்தையும், எனது உறவினர்களின் உறுதியையும் கண்ட நாங்கள் நம்பிக்கையுடன் மீளவும் கொழும்பு திரும்பினோம்.

மக்கள் போராளிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது தெரிந்தது, குறிப்பாக புலிகளுடன் அவர்கள் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டார்கள். போராளிகளும் சிறிது சிறிதாக பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்திருந்தார்கள்.

மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டவற்றை எனது சிங்கள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸ் ஸ்த்தாபனத்தின் மூத்த ஆசிரியரான மேர்வின் சில்வாவும் அவர்களுள் ஒருவர். அவர் என்னுடன் பேசும்போது, "சபா, இதுகுறித்து இங்கு எவருடனும் பேசாதீர்கள். இதைக் கேட்கும் மனோநிலையில் எவரும் இங்கு இல்லை. இராணுவ ரீதியில் தாம் வென்று வருவதாகவே இங்கு அனைவரும் நினைக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் வெளிநாடுகள் வழங்குகின்றன, ஆகவே நாம் வெல்வது உறுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். அவர் மட்டுமல்ல, இங்கே பொதுவாக அனைத்துச் சிங்களவர்களும் அதையே நம்பினார்கள்.

இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர், அனுபவம் அற்றை ரஜீவ் காந்தி அரியணை ஏறியிருக்கும் நிலையில், அரசியலில் சாணக்கியமும், சூட்சுமமும் நிறைந்த ஜெயவர்த்தனவும் அவரது வலதுகரமாகச் செயற்பட்ட லலித் அதுலத் முதலியும் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து எப்படியாவது இராணுவ ரீதியில் தமிழ்மக்களின் கோரிக்கைகளையும் அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டனர்.

மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டினை முற்றாக நிறுத்திவிடுவது என்று பாராளுமன்றம் முடிவெடுத்தது. பாராளுமன்றத்தின் இம்முடிவினை லலித் அதுலத் முதலி அறிவித்த செய்தியாளர் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இதுகுறித்து நான் வெளியிட்ட செய்தியின் முதலாவது வசனம் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அச்செய்தி வெளியாகியிருந்தது,

அரசியல் தீர்வொன்றைக் காணவே அரசு விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிடுவதென்பது அதனைக் காட்டிலும் மிக முக்கியமானது.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மனமுடைந்து போயினர்இது குறித்து அமிர்தலிங்கத்தின் கருத்தினையறிய நான் சென்றவேளை அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அரசியல் அரங்கிலிருந்து மிதவாதிகள் முற்றாக அகற்றப்பட்டுவிட்டார்கள் என்பதை அவர் நன்கு அறிந்துகொண்டார். மிதவாதிகளை சிங்கள அரசியல்வாதிகள் கைவிட்டு விட்டார்கள் என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் முன்னால் தம்மால் போகமுடியாது ஆகிவிட்டது என்று அவர் என்னிடம் கூறினார்.

large.AntonBala.jpg.729b558caa7f23e189671f84c9faf522.jpg

அன்டன் பாலசிங்கம்

பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டே அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசமுடியும் என்று லலித் அறிவித்ததையடுத்து புலிகளும் தமது பதிலினை சென்னையில் அறிவித்தனர். அவர்களின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு தெரிவித்தார்,

"தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இராணுவ வழியில் வழங்கவே அரசாங்கம் உறுதிபூண்டிருப்பது தெரிகிறது. இதுதான் அவர்களுக்குத் தேவையென்றால், நாமும் அதற்கான பதிலை இராணுவ வழியிலேயே வழங்க ஆவலாக இருக்கிறோம். எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை எமது நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்துவோம்".

1984 இல் பலமான இராணுவக் கட்டமைப்பொன்றினை உருவாக்குவதன் மூலம் தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கிவிட பிரபாகரன் உறுதிபூண்டபோது அவருடன் கூடவிருந்தவர் என்கிற வகையில் இராணுவ ரீதியில் இராணுவத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை பாலசிங்கம் முழுவதுமாக நம்பினார். இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில்  ஏறத்தாள 75 வீதமான நிலப்பரப்பினைத் தமது கட்டுப்பாட்டில் புலிகளால் வைத்திருக்க முடிகிறதென்றால் அவர்கள் 1984 இல் இட்ட உறுதியான அடித்தளத்தினாலேயே இது சாத்தியமானது என்றால் அது மிகையில்லை (2005 இன் படி).

Edited by ரஞ்சித்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்திற்கான அடிப்படைகளை நிறுவுதல்

1984 ஆம் ஆண்டென்பது பிரபாகரனைப் பொறுத்தவரையிலும், போராட்டத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்த வருடத்திலேயே தாக்கிவிட்டுத் தப்பியோடும் கெரில்லாப் பாணியிலிருந்து ஒரு இடத்தில் நின்று சண்டைபிடித்து அப்பகுதியைத் தக்கவைக்கும் போர்முறைக்கும் அவர் தனது அமைப்பினை மாற்றியிருந்தார். மேலும், தனது அமைப்பினை தேசிய விடுதலை இராணுவம் எனும் நிலைக்கும் மேம்படுத்தியிருந்தார். அவ்வருடத்திலேயே ஒரு தனிநாட்டிற்கான கட்டமைப்புகளான நிர்வாகம், வரி, சட்டம் ஒழுங்கு உட்பட பல நடைமுறைகளையும் அவர் உருவாக்கத் தொடங்கியிருந்தார்.
ஒரு தனிநாட்டிற்கான அடிப்படைகளை நிறுவிக்கொள்ளவும், தேசிய விடுதலை இராணுவமாக புலிகளைக் கட்டியெழுப்பவும் பிரபாகரனுக்கு மூன்று விடயங்கள் உதவியிருந்தன. முதலாவதும் மிக முக்கியமானதுமான காரணம் தமிழ் மக்கள் ஒரு இனமாக அவரின் பின்னால் அணிதிரண்டது. ஜெயவர்த்தனவும், போராளிகளின் துணிச்சலான இராணுவச் செயற்பாடுகளும் இவ்விடயத்தில் அவருக்கு உதவியிருந்தன.  1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையும், தமிழ் மக்கள் மீது ஜெயாரின் படைகள் கட்டவிழ்த்துவிட்ட பழிவங்கும் தாக்குதல்களும் தமிழ் மக்களைப் பிரபாகரனை நோக்கித் தள்ளிவிட்டிருந்தன. இராணுவத்தினர் மீதான புலிகளின் திருப்பியடிக்கும் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மனங்களில் பிரபாகரனுக்கு அழியாத இடத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன.

large.mgr-prabakaran-col-shankar-mid-1980s-300x201.jpg.890f5bd66c04c8d8718ed1f3a9d1497a.jpg

எம்.ஜி.ஆர் உடன் பிரபாகரனும் கேணல் சங்கரும் - 1980 களின் நடுப்பகுதியில்

இரண்டாவது மூன்றாவது காரணங்களும்ம் ஏறக்குறைய அதேயளவு முக்கியமானவைதான். அவையாவன, இந்தியாவினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் மற்றும் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இனால் பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தின்மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களும். 

தம்மீதான 83 ஆம் ஆண்டுப் படுகொலைகள் தமிழ் மக்களின் சுய கெளரவத்தினை வெகுவாகப் பாதித்திருந்ததுடன், அவர்களின் உணர்வுகளையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டிருந்தது. பெருமளவு தமிழ் இளைஞர்கள், குறிப்பாக சிங்களப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள், ஐந்து பெரிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்துகொண்டதுடன், சிங்கள தேசத்திற்கும், ஜெயாரின் அரசிற்கும் எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட விரும்பி முன்வந்தனர். பெருமளவு இளைஞர்கள் தமது அமைப்புக்களில் இணைந்துகொண்ட போதிலும் ஆரம்பத்தில் இவ்வமைப்புக்களிடம் குறிப்பிடத் தக்களவு ஆயுத தளபாடங்களோ அல்லது தேவையான வசதிகளோ இருக்கவில்லை. "எம்முடன் வந்து இணைவோரைத் தங்கவைப்பதற்கான வசதிகள் கூட எம்மிடம் இருக்கவில்லை. அவர்களுக்கு உணவளிக்கத் தன்னும் எம்மிடம் போதியளவு பணம் இருக்கவில்லை" என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்திருந்தார். . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரன்

இந்தியாவினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சி போராளிகளைப்பொறுத்தவரையில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் இதன்மூலம் பெருமளவு இலாபமடைந்தன. தம்முடன் இணைந்துகொள்ள வந்த அனைவரையும் அவர்கள் உள்வாங்கிக்கொண்டனர். இணைந்துகொண்டவர்களின் தரம், இலட்சியத்தின் மீதான‌ உறுதிப்பாடு குறித்து அவர்கள் கவனம் எடுக்கவில்லை. அவர்களுக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் தாமே மிகவும் பெரியதும், செல்வாக்குக் கொண்டதுமான போராளி அமைப்பு என்று இந்தியாவுக்குக் காட்டுவது மட்டும் தான். போராளிகளை அமைப்பில் இணைக்கும்போது அவர்கள் கைக்கொண்ட தேர்வு முறையே அவர்களின் வீழ்ச்சிக்குப் பிரதானமான  காரணமாக அமைந்தது. ஒழுக்கச் சீர்கேடுகளும் இயக்க உள்முரண்பாடுகளும், போட்டிகளும் இவ்வமைப்புக்களுக்குள் தலைவிரித்து ஆடத்தொடங்கின. 

ஆனால் பிரபாகரனோ தனது அமைப்பில் இணைய விரும்பிய இளைஞர்கள் குறித்து மிகுந்த அவதானமும், அவர்கள் குறித்த சரியான கணிப்பீட்டினையும் கொண்டிருந்தார். இணைந்துகொள்ள விரும்பிய போராளிகள் ஒவ்வொருவரையும் தானே தேர்ந்தெடுத்தார். கட்டுப்பாடும், கண்ணியமும், இலட்சிய உறுதியும் ஒவ்வொருவரிடமிருந்தும் கண்டிப்பாக அவரால் எதிர்பார்க்கப்பட்டது. தன்னால் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, உணவளிக்கக் கூடிய அளவிலான போராளிகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார்.  1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய அமைப்பாகக் காணப்பட்டது. ஏனைய அமைப்புக்களின் திடீர் எண்ணிக்கைப் பெருக்கம் குறித்து அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. 

ஒரு தரமான இராணுவ அமைப்பு திட்டமிட்ட ரீதியிலேயே பரிணாம வளர்ச்சி அடையவேண்டும் என்பதில் பிரபாகரன் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் என்று அன்டன் பாலசிங்கம் போரும் சமாதானமும் என்று தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். "அமைப்புக்களின் அசாதாரணமான எண்ணிக்கை வீக்கம் பல்வேறான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, ஈற்றில் அவ்வமைப்பின் அழ்விற்கும் காரணமாக அமைந்துவிடும் என்று அவர் கருதினார்" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும், எம்.ஜி.ஆர் செய்த உதவியும்
 

large.PrabakaraninIndia.jpg.3bd7183f8a12c4c2b81a1847dba5c068.jpg

மற்றைய இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் அளவில்ச் சிறியதாக இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் புலிகளின் திறன் தொடர்பான சிறப்பான மதிப்பீட்டினைக் கொண்டிருந்தனர். மேலும், பிரபாகரன் மீதும் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது.

80 களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் நாட்டில் இயங்கிவந்த தம்ழிப் போராளி அமைப்புக்களை நான்கு இந்திய உளவு அமைப்புக்கள் கண்காணித்து வந்தன. அவையாவன,

1. இந்திய வெளியக உளவுத்துறையான ரோ

2. இந்திய மத்திய உளவு அமைப்பான சி.பி.

3. இராணுவ புலநாய்வுத்துறை

4. தமிழ்நாடு உளவுத்துறையான கியூ பிராஞ்ச்

 

இவை அனைத்தினதும் மதிப்பின்படி புலிகள் இயக்கமே அமைப்புக்களில் சிறப்பானது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணமாக புலிகளின் இடையறாத இராணுவச் செயற்பாடுகளும், போராளிகளின் ஒழுக்கமும், கட்டுக்கோப்பும், இலட்சியமான தமிழ் ஈழம் மீதான பற்றும் அமைந்திருந்தன என்றால் அது மிகையில்லை.

தமிழ்நாட்டு காவல்த்துறையின் புலநாய்வுப் பிரிவிற்கு மலையாளியான மோகன்தாஸ் உதவி ஆணையாளராக அக்காலத்தில் கடமையாற்றி வந்தார். இன்னொரு மலையாளியும், இலங்கையின் கண்டியில் பிறந்தவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான எம்.ஜி.ஆர் உடன் மோகன்தாஸ் மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வந்தார். எம் ஜி ஆர் உடன் பேசும்போது புலிகள் குறித்து மிகவும் பெருமையாகவும், உயர்வாகவும் மோகன்தாஸ் பேசிவந்திருந்தார். அமைப்புக்கள் அனைத்திற்குள்ளும் புலிகளே மிகவும் திறமையானவர்கள் என்பதே மோகன்தாஸின் கணிப்பாக இருந்தது. தான் ஓய்வுபெற்றதன் பின்னர் எம்.ஜி.ஆர் குறித்து புத்தகம் ஒன்றினை மோகன் தாஸ் எழுதினார் . அப்புத்தகத்தில் புலிகள் பற்றியும், தலைவர் பிரபாகரன் பற்றியும் பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"புலிகளின் போராளிகள் இலட்சிய உறுதியும், கட்டுக்கோப்பும் கொண்டவர்கள். கவர்ச்சிகரமான வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்குத் தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு அமைப்பும் தமக்கென்று புலநாய்வுப் பிரிவுகளை வைத்திருக்கின்றபோதிலும், புலிகளின் புலநாய்வு அமைப்பே மிகவும் திறமை வாய்ந்தது".

1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நடைபெற்ற காலத்தில் புலிகள் அமைப்பில் வெறும் 30 போராளிகளே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், புரட்டாதி மாதமளவில் அவ்வெண்ணிக்கை 250 ஐத் தொட்டிருந்தது. அவர்களுள் 200 மூத்த போராளிகளை சிறப்புப் பயிற்சிக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்திற்கு தெரிவுசெய்து அனுப்பிவைத்தார் பிரபாகரன்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டத்தில் புலிகள் அமைப்பே இறுதியாக இணைந்தது. 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் 100 பேர் கொண்ட இரு குழுக்களை பிரபாகரன் அனுப்பிவைத்தார். தொலைநோக்குப் பார்வையுடனேயே இதனை அவர் செய்தார். ரோ சார்பாக புலிகள் இயக்கத்தின் பயிற்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்த உயர் அதிகாரி சந்திரசேகரனிடம் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்து பிரபாகரன் வினவினார்.  மிகுந்த திறமைசாலிகளான இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றும், புதிய போர்த் தந்திரங்களை அவர்கள் போராளிகளுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்றும் சந்திரசேகரன் பதிலளித்தார். மேலும் சிறிய மற்றும் கனரக ஆயுதங்களைப் பாவிப்பது குறித்த சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். வரைபடங்களை படித்து அறிந்துகொள்ளல், கண்ணிவெடிகளை பொருத்தும் பயிற்சிகள், வெடிபொருட்களைக் கையாளும் பயிற்சிகள், தாங்கியெதிர்ப்புப் பயிற்சிகள், விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிகள் என்பன புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் அடங்கியிருந்தன. 

புலிகளுக்கு அவசியமானவை என்று தான் கருதிய பயிற்சி விபரங்கள் குறித்து சந்திரசேகரனிடம் பிரபாகரன் கூறினார். தனது உடனடிக் கவலை இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காப்பதுதான் என்று அவர் சந்திரசேகரனிடம் தெரிவித்தார்.இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள் தள்ளி முடக்கவேண்டும்" என்று பிரபாகரன் தெரிவித்தார்.

சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவித்து, சுதந்திரமான தனிநாடான தமிழ் ஈழத்தை உருவாக்கும் வகையில் தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றுவதே பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. 1976 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் திகதி தனது 21 ஆவது வயதில் தனது அமைப்பிற்கான யாப்பினை அவர் வரைந்தார். அதன்படி தது அமைப்பின் நோக்கங்களை பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்,

முற்றான சுதந்திரம் கொண்ட தமிழ் ஈழம்

இறைமையுள்ள, சோசலிச ஜனநாயக மக்கள் ஆட்சியை ஏற்படுத்துதல்.

சாதி வேற்றுமைகள் உள்ளிட்ட அனைத்து வேற்றுமைகளையும் முற்றாகக் களைதல்.

சோசலிச முறையில் அமையப்பெற்ற உற்பத்திச் செயற்பாடுகளை உருவாக்குதல்.

விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினை இராணுவப் போராட்டமாக மாற்றுதல்.

கெரில்லா போர்முறையில் ஆரம்பிக்கப்பட்டு ஈற்றில் மக்கள் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தை மாற்றுதல்.

என்பனவே அவையாகும்.

புலிகள் இராணுவச் செயற்பாடுகளை மூன்று பிரிவுகளாக பிரபாகரன் வகுத்தார்.அவையாவன,

1. பொலீஸ் புலநாய்வு வலையமைப்பையும், அவர்களுக்கு உளவுபார்க்கும் துரோகிகளையும் அழித்தல்.

2. சிங்கள அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்குதல்.

3. இராணுவ முகாம்களை அழிப்பதன் மூலம், இராணுவஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுப்பதன் ஊடாக அப்பகுதிகளில் புலிகளின் நிர்வாகத்தை ஏற்படுத்தி தமிழீழத்திற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை நிறுவிக் கொள்ளல்.

இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சிகுறித்து பிரபாகரன் தீர்க்கமான கொள்கையினைக் கொண்டிருந்தார். அதாவது, தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றக்கூடியவகையில் அப்பயிற்சி அமையவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தனது கொள்கையின்படியே இந்தியப் பயிற்சியும் அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆகவே, இந்திய அதிகாரிகளிடம் தனது அமைப்பிற்கான பயிற்சித் தேவைகள் குறித்துப் பேசும்போது தனது கொள்கையின்படி அவை அமையவேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

ஏற்கனவே கண்ணிவெடித் தாக்குதல்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த புலிகளின் போராளிகளுக்கு கண்ணிவெடிகளை உருவாக்குவது, வீதிகளிலும், பாலங்களிலும் அவற்றினை சாதுரியமாகப் பொருத்துவது, வெடிபொருட்களைக் கையாள்வது ஆகிய பயிற்சிகளை இந்திய அதிகாரிகள் வழங்கினர். இந்தப் பயிற்சிகளை மிகவும் வெற்றிகரமாகப் பாவித்த பிரபாகரன், 1985 களின் நடுப்பகுதிகளில் இராணுவத்தினரினதும் பொலீஸாரினதும் நடமாட்டங்களை முற்றாக நிறுத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்கிவிடுவதில் வெற்றிகண்டார். 

large.FemaleLTTE1980s.jpg.08f7075a1cf81b5d118f984e8280feb1.jpg

புலிகளின் பெண்போராளிகள்

புலிகளின் அறிவையும், நுட்பத்தையும் இந்தியப் பயிற்சிகள் மேலும் மெருகூட்டின. அவை புலிகளது இராணுவ வல்லமையினையும், திறனையும் அதிகரித்தன. ஆனாலும், இந்தியாவினால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டவை. புலிகளின் 200 போராளிகளை மட்டுமே இந்தியா பயிற்சியளித்தது. புலிகளுக்கான பயிற்சிகளின்போது பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் அக்காலத்திற்குப் பொருத்தமற்றவையாகக் காணப்பட்டன. புலிகளுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் மிகவும் பழமையானவை. 

large.mgr-prabakaran-col-shankar-mid-1980s-300x201.jpg.890f5bd66c04c8d8718ed1f3a9d1497a.jpg

தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தனது அமைப்பின் போராளிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதும், நவீன ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதும் அவசியம் என்று பிரபாகரன் கருதினார். குறைந்தது 1000 போராளிகளும் நவீன ஆயுதங்களும் அவருக்குத் தேவைப்பட்டது. அதற்குப் பெருமளவு பணம் தேவைப்படும். ஆனால், அப்போது அவரிடம் அதற்கான பணம் இருக்கவில்லை. அக்காலத்தில் நாளாந்தச் செலவுகளைப் பராமரிப்பதே அவருக்குக் கடிணமாகத் தெரிந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டு சித்திரையில் பிரபாகரனுக்கு ஒரு தங்கப் புதையல் கிடைத்தது. எம் ஜி ஆர் மூலமாக அவர் எதிர்பார்த்த உதவி வந்து சேர்ந்தது.

எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தினைக் கொண்டு புதிய பயிற்சி முகாம்களையும், அமைப்பிற்கான புதிய போராளிகளையும் அவரால் இணைத்துக்கொள்ள முடிந்ததுடன், தனது அரசியல் வலையமைப்பையும் அவரால் விஸ்த்தரிக்க முடிந்தது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆரம்பகால பயிற்சியணிகள்

large.LTTEtrainingcamp.jpg.2a9bf3ea4fb805debf7edeee4a9181a2.jpg

எம்.ஜி.ஆர் இன் உதவியை அடுத்து பிரபாகரன் இரு தீர்மானங்களை எடுத்தார். ஒன்று இராணுவ ரீதியிலானது, மற்றைய அரசியல் மயப்பட்டது. இரண்டுமே விடுதலைப் போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையானவை.

இராணுவ ரீதியிலான தீர்மானத்தின் அடிப்படைகள் பின்வருமாறு காணப்பட்டன,

1. தமக்கென்று தனியான சுதந்திரமான பயிற்சி முகாம்களை அமைத்துக்கொள்வது.

2. நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது.

3. நவீன தொலைத் தொடர்பு வலையமைப்பினை உருவாக்குவது.

4. கடற்புலிகள் அமைப்பினை உருவாக்குவது.

5. பெண்கள் படையணியினை உருவாக்குவது.

6. புலநாய்வு அமைப்பினை உருவாக்குவது.

அவரது அரசியல்த் தீர்மானத்தின் அடிப்படைகளாக பின்வருபவை அமைந்திருந்தன,

1. அரசியல் பிரிவினைப் பலப்படுத்துவது.

2. பிரச்சார இயந்திரத்திரத்திற்கு புத்துயிர் அளிப்பது.

3. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களையும் மக்களையும் மீட்பது.

4. சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பொறுப்பெடுத்துக்கொள்வது.

5. வரி வசூலிப்பினை நடைமுறைப்படுத்துவது.

6. மக்களை போராட்டத்தினுள் உள்வாங்குவது.

ஆகியனவே அவையாகும்.

large.PrbakaranwithMani.jpg.d2c634b27618ddb8351370a46673c096.jpg

பிரபாகரனுடன் குளத்தூர் மணி

போராளிகள்க்குத் தேவையான பயிற்சியினை வழங்குவதும், தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதுமே பிரபாகரனின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் ஏற்கனவே தனிப்பட்ட ரீதியில் இரு பயிற்சி முகாம்களை அமைத்திருந்தார். முதலாவது மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் பகுதியில் அமைந்திருக்கும் சிறுமலை காட்டுப்பகுதியிலும் இரண்டாவது பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணைக்கு அருகில் அமைந்திருக்கும் குளத்தூரிலும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாம் நெடுமாறனின் உதவியுடனும், குளத்தூர் மூகாம் திராவிடர் கழக ஆதரவாளரான குளத்தூர் மணியின் உதவியுடனும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாமுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை நெடுமாறன் ஒழுங்குசெய்ய, குளத்தூர் முகாமிற்கான ஒழுங்குகளை குளத்தூர் மணி செய்திருந்தார்.

1984 ஆம் ஆண்டு தை மாதத்தில் குளத்தூர் முகாமை பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். இங்கிருந்தே புலிகளின் பயிற்சித் திட்டம் விரிவாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. முதலாவது தொகுதியில் 125 போராளிகள் இம்முகாமிற்கு   பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டார்கள். இத்தொகுதியை "மூன்றாவது தொகுதி" (பட்ச்) என்று இயக்கத்திற்குள் அழைத்தார்கள்.இத்தொகுதிப் போராளிகளுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட இரு தொகுதிப் போராளிகளும் முறையே முதலாவது இரண்டாவது பட்ச் என்று அழைக்கப்பட்டார்கள். இப்பயிற்சிகள் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றது.

 large.lt-col-ponnamman.jpg.dbb23eea260ac39d23b109dbca2da85f.jpg

லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான்

இவ்விரு முகாம்களை அமைத்துப் பராமரிக்கும் பொறுப்பு பொன்னாமனிடம் தலைவரால் கொடுக்கப்பட்டது. நாம் இனிப் பார்க்கப்போவது போல, தனது நிர்வாகத்தைப் பரவலாக்கி, மத்தியிலிருந்து உப பிரிவுகளுக்கு விஸ்த்தரித்து வந்திருந்தார். இயக்கத்தின் பொறுப்புக்களை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பரவலாக்கி வழங்கியதுடன் தனக்கு விசுவாசமான மூத்த போராளிகளை அவற்றிற்குப் பொறுப்பாக அவர் நியமித்தார். அந்த வகையிலேயே பொன்னாமான் சிறுமலை மற்றும் குளத்தூர் முகாம்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இம்முகாம்களுக்குப் பொறுப்பாகவிருந்த அதேநேரம், முன்னணி பயிற்சியாளராகவும் பொன்னம்மான் பணியாற்றினார். பொன்னம்மானுடன் வேறு சில முக்கிய தளபதிகளும் இம்முகாம்களில் பயிற்சியாளர்களாக இயங்கியிருந்தனர். பிரபாகரனால் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரபிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மூத்த போராளிகளான குமரப்பா, புலேந்திரன், கிட்டு, லிங்கம் மற்றும் ரகு ஆகியோரே பயிற்சியாளர்களாக அமர்த்தப்பட்ட ஏனைய மூத்த தளபதிகளாகும். பிரபாகரன் அடிக்கடி இம்முகாம்களுக்குட் விஜயம் செய்வது வழமை. தனது விஜயங்களின்பொழுது ஆயுதப்பாவனை மற்றும் ஆயுதங்களைப் பராமரித்தல் தொடர்பாக போராளிகளுடன் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். கைத்துப்பாக்கியை இலாவகமாக இயக்குவதில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்த பிரபாகரனின் திறமையினை போராளிகள் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்ப்பார்கள் என்றும் அறியப்பட்டிருந்தது. முகாம்களின் ஒட்டுமொத்த கண்காணிப்பினை நாயிக் என்கிற இந்திய அதிகாரியொருவரின் பொறுப்பில் பிரபாகரன் கையளித்திருந்தார்.

large.LTTEtrainingcamp2.jpg.87ad60a3d4b3a86a2bf242060a1cc857.jpg

எம்.ஜி.ஆர் இடமிருந்து கிடைத்த பணத்தினைக் கொண்டு 1984 ஆம் ஆண்டு ஆடியில் சிறுமலை முகாமினையும் பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். மேலும், அம்முகாமின் இரு துணை முகாம்களாக திருப்பரங்குன்றம் மற்றும் அழகர் மலை ஆகிய பகுதிகளில் சிறிய முகாம்களை உருவாக்கினார். இவ்விரு இடங்களும் தமிழ்க்கடவுளான முருகனின் ஆறு புனிதத் தலங்களில் இரண்டு என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

large.LTTEtrainingcamp3.jpg.a328329c4a553a1c44e3be53a488db71.jpg

1984 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் மூன்றாவது பயிற்சி அணி தனது பயிற்சியினை நிறைவுசெய்துகொண்டு யாழ்ப்பாணத்தின் போர்க்களத்தில் அம்மாத இறுதியில் பிரபாகரனால் இறக்கப்பட்டது. மூன்றாவது அணியின் தலைவராக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய கிட்டு, அப்போது யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த பண்டிதரின் உப-தளபதியாகக் கடமையாற்றினார். பண்டிதர், புலிகளின் அச்சுவேலி முகாமிலிருந்தே இயங்கிவந்தார். மூன்றாவது அணியின் யாழ்வரவுடன் இராணுவத்தினர் மீதான புலிகளின் வலிந்த தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டதுடன், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மக்களையும் நிலங்களையும் விடுவிக்கும் பிரபாகரனின் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நான்காவது பயிற்சியணி சிறுமலை முகாமில் 1984 ஆம் ஆண்டு ஆடியில் இருந்து அவ்வருட இறுதிவரை பயிற்றப்பட்டது. அவ்வருடம் மார்கழி மாதத்தில் அவ்வணியும் யாழ்க்களத்தில் ஏனைய அணிகளுடன் இணைந்துகொண்டது. இவ்வணியின் அறிமுகத்தின் மூலம் யாழ்க்குடாநாட்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 500 ஐத் தொட்டிருந்ததுடன், மேம்படுத்தப்பட்ட ஆளணி எண்ணிக்கையூடாக பொலீஸாரை அவர்களின் நிலையங்களுக்குள்ளும், இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள்ளும் முடக்க புலிகளால் முடிந்தது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது பெண்போராளிகள் பயிற்சிப் பாசறையும் புலிகளின் கடற்போக்குவரத்தும்

large.majorsothiya.jpg.13cc54fb90be44461bde235a3ce2c275.jpg

1984 ஆண்டின் புரட்டாதி மாதத்தில் மேலும் போராளிகளை அமைப்பில் இணைத்துக்கொண்ட பிரபாகரன் பயிற்சிகளை தீவிரப்படுத்தினார். அக்காலப்பகுதியில் மேலும் ஒரு பயிற்சிமுகாம் குமரப்பிட்டியில் புலிகளால் அமைக்கப்பட்டதோடு அந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது என மேலும் மூன்று தொகுதிப் போராளிகள் அம்முகாமில் பயிற்றப்பட்டு வந்தனர். இம்முகாமில் பயிற்றப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை என்பது முன்னர் பயிற்சியில் ஈடுபட்ட போராளிகளைக் காட்டிலும் அதிகமானது. ஐந்தாவது தொகுதிப் போராளிகள் 200 பேர் குமரப்பிட்டி முகாமில் பயிற்றப்பட்டார்கள்.  அதன் பின்னர் அனுப்பப்பட்ட குளத்தூர் முகாமிற்கான போராளிகளின் எண்ணிக்கை 350 ஆக இருந்தது. 

ஏழாவது தொகுதிப் போராளிகளே புலிகளின் முதலாவது பெண்போராளிகளின் அணியாகத் திகழ்ந்தது. அவ்வணியில் 100 பெண்போராளிகள் அங்கம் வகித்தனர். பெண்களுக்கென்று பிரத்தியேகமாக பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டது அதுவே முதன்முறையாகும். இப்பெண்போராளிகளுக்கான பயிற்சி சிறுமலை முகாமில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மன்னார் மாவட்டத் தளபதியான விக்டர் பொறுப்பாக இருந்தார்.

 1984 ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து தொகுதிப் போராளிகள் தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கப்பட்டிருந்தனர். 100 பெண் போராளிகள் அடங்கலாக 900 போராளிகள் தமிழ்நாட்டு முகாம்களில் பயிற்சியளிக்கப்பட்டனர். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கம் தன்னை மிகவும் பலமான நிலைக்கு உயர்த்தியிருந்தது. பின்னாட்களில் இவ்வெண்ணிக்கை 1000 ஐக் காட்டிலும் அதிகரித்துச் சென்றது. ஆனாலும், மற்றைய பிரதான அமைப்புக்களோடு ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை மிகவும் குறைவானது. டெலோ, புளொட், .பி.ஆர்.எல்.எப் ஆகியன தலா 6000 போராளிகளை தம்மகத்தே கொண்டிருந்தன. 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களில் இருந்த போராளிகளின் மொத்த எண்ணிக்கை 30,000 ஐத் தொட்டது. இது இராணுவத்தில் இருந்த வீரர்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானது. 1984 ஆம் ஆண்டு பங்குனியில் லலித் அதுலத் முதலி பாதுகாப்பு அமைச்சரகாகப் பதவியேற்றபோது இருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15,000 ஐக் காட்டிலும் குறைவானதாகவே இருந்தது.

தமிழ்நாட்டில் தனது அமைப்பிற்கான பயிற்சி வசதிகளை விஸ்த்தரித்து வந்த அதேவேளை தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான வழங்கற்பாதையினை அமைப்பதிலும் பிரபாகரன் மும்முரமாக இறங்கியிருந்தார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலை வரை மீன்பிடிப் படகுகளையும், தனியார்களால் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளையுமே பிரபாகரன் போக்குவரத்திற்காகப் பாவித்து வந்தார். ஆனால் இனக்கொலையின் பின்னர் தமக்கென்று படகுகளை உருவாக்கிப் பாவிப்பதென்று அவர் முடிவெடுத்தார். புலிகளால் உருவாக்கப்பட்ட முதலாவது படகிற்கு கடற்புறா என்று புலிகள் பெயரிட்டனர். சோழர் காலத்தில் தூர கிழக்கு நாடுகளுக்கு தமது இராணுவத்தை அனுப்புவதற்கு சோழ அரசர்கள் கட்டிய கப்பலின் பெயரையே பிரபாகரன் தனது முதலாவது படகிற்கு இட்டார்.  அதன்பின்னர் பல அதிவேகப் படகுகளை புலிகள் அமைத்தனர். இப்படகுகளைக் கட்டும் பணிக்கு சங்கர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

மேலும், கப்பற்சேவை ஒன்றின் தேவையினையும் பிரபாகரன் உணர்ந்தார். போராட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களையும் இதர பொருட்களையும் தருவிப்பதற்கு அவருக்குக் கப்பல்கள் தேவைப்பட்டன. அரசுக்கெதிராகத் தனது போராட்டத்தை ஆரம்பித்த நாட்களில் இருந்தே அரசின் வளங்களுக்கு நிகரான வளங்களைத் தானும் கொண்டிருக்கவேண்டும் என்று அவர் எண்ணிச் செயற்பட்டு வந்தார். தமிழ் மக்களில் மட்டுமே தங்கியிருப்பது என்பது சிலவேளைகளில் பாதகமாகவும் அமையலாம் என்று அவர் கருதினார். தமிழ் மக்களிடமிருந்து வரிகளை அறவிடுவதன் மூலம் அமைப்பிற்கான வருமானத்தை ஈட்டலாம் என்று அவர் கருதினார். 1984 ஆம் ஆண்டளவில் தனது அமைற்கான வழங்கல்களை இலகுவாக்குவதற்கு கப்பற்பாதை ஒன்றினை அவர் உருவாக்கினார்.

large.LTTESHIP.jpg.19ac1884161fe70ffaf54dfc937aeefb.jpg

புலிகள் முதன் முதலாக தமது கப்பல் நிறுவனத்தை தென்கிழக்காசியாவில் உருவாக்கினர். அந்த நிறுவனத்தால் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட கப்பலின் பெயர் எம்.வி.சோழன். சீனாவின் நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கிய பழைய கப்பல் ஒன்றினை பழுதுபார்த்து, புதுமைப்படுத்தி, பணாமா நாட்டில் அதனைப் பதிவுசெய்து இயக்கத்திற்குத் தேவையான ஆயுதங்களையும் பொருட்களையும் கொண்டுசெல்வதற்கு அதனைப் பாவித்தனர். பிற்காலத்தின் இன்னும் பல கப்பல்களை புலிகள் கொள்வனவு செய்து தமது போக்குவரத்துக் கப்பல்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக்கொண்டனர்.

மேலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கையின்  டகிழக்குப் பகுதிகளுக்கும் இடையேயான கப்பற்போக்குவரத்துப் பாதையினையும் புலிகள் அமைத்தனர். தமிழ்நாட்டின் வேதாரணியம், நாகபட்டினம் ஆகிய கரையோரப் பகுதிகளையும், இலங்கையின் வடமாகாணத்தின் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, மணல்க்காடு ஆகிய கரையோரப்பகுதிகளையும் போராளிகளையும் ஆயுத தளபாடங்களையும் இறக்கியேற்றும் பகுதிகளாக உருவாக்கிக்கொண்டனர். இவற்றுக்கு மேலதிகமாக மீன்பிடிக் கிராமங்களான வெற்றிலைக்கேணி, மாதகல், பாசையூர், கொழும்புத்துறை மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளும் புலிகளின் இறங்குதுறைகளாக  பயன்படுத்தப்பட்டு வந்தன. வல்வெட்டித்துறையினை வந்தடையும் ஆயுதங்களும், ஏனைய பொருட்களும் அதிவேகப் படகுகள் மூலம் முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் புலிகளின் இறங்குதுறைகளுக்கு உடனுக்குடன் விநியோகிக்கப்பட்டு வந்தன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தியாவின் நலன்களும், எமது இலட்சியமும் வேறுவேறானவை, நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல ‍- பிரபாகரன்

large.PrabakaranwithAnton.jpg.136506294637e51e5a4aadb040ae0e98.jpg

1984 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே தமக்கென்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று பிரபாகரன் சிந்திக்கத் தொடங்கினார். சர்வகட்சிக் குழு கூட்டத்தை ஜெயவர்த்தன கூட்டியிருப்பது தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்தி தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வொன்றைக் காண்பதற்கே என்று இந்தியா உணர்ந்துகொண்டபோது, 1984 பங்குனியில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது என்று அது முடிவெடுத்தது. இச்செய்தி கேட்டு மகிழ்வடைந்த புலிகளின் சில போராளிகள் இதனை பிரபாகரனுக்கு அறியத் தந்தார்கள். இதனைக் கவனமாகச் செவிமடுத்த பின்னர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார், "நாம் வெளியாரிடமிருந்து உடனடியாக ஆயுதங்களை வாங்கத் தொடங்க வேண்டும்".

 பிரபாகரனின் கூற்றைக் கேட்டு அச்சரியமடைந்த போராளிகள், "இந்தியா ஆயுதம் தருவதாகக் கூறுகையில் நாம் வெளியாரிடமிருந்து ஆயுதங்களை வாங்கவேண்டிய தேவை என்ன?" என்று வினவினார்கள்.

அதற்குப் பதிலளித்த பிரபாகரன், "இந்தியா எமக்கு ஆயுதங்களைத் தருவதே நம்மைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கத்தான். தனது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகவே அது எமக்கு ஆயுதங்களைத் தருகிறது. நாம் இந்தியாவின் கூலிப்படைகளாக இருக்க முடியாது. எமது கால்களில் நாம் நிற்கவேண்டுமானால் எமக்கென்று ஆயுதங்களை வெளியாரிடமிருந்து கொள்வனவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.

பின்னைய நாட்களில் போராளிகளுடனான கலந்துரையாடல்களில் தனது கருத்தினை மீளவும் முன்வைத்தார் பிரபாகரன். தமது இலட்சியத்திற்கும் இந்தியாவின் நலன்களுக்கும் இடையே இருக்கும் பாரிய பிணக்கினை அவர் விளங்கப்படுத்தினார். "எமது இலட்சியம் இலங்கைக்குள் தமிழருக்கென்று சுதந்திரமான தனிநாடொன்றினை உருவாக்குவதே" என்று கூறிய அவர், "இந்தியா இதனை ஒருபோதும் ஆதரிக்காது" என்று கூறினார். "இந்தியாவுக்குத் தேவைப்படுவதெல்லாம் இலங்கையை தனது செல்வாக்கு வட்டத்திற்குள் வைத்திருப்பது மட்டும்தான். சிறிமா ஆட்சியில் தற்போது இருந்திருப்பின், தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களையோ, பயிற்சிகளையோ தருவதை இந்தியா ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்காது" என்றும் அவர் கூறினார். "இப்போதே ஜெயார் தனது அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டிலிருந்து விலகி, அணிசேராக் கொள்கையினைக் கடைப்பிடித்து, இந்தியாவை இப்பிராந்தியத்தின் வல்லரசாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவாராகில், இந்தியா தமிழ் மக்களின் அவலங்களை ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை" என்றும் அவர் கூறினார்.

"இந்தியாவின் நலன்கள் குறித்து ஜெயாரை அக்கறைகொள்ளவைக்க, தமிழ்ப்போராளிகளூடாக அழுத்தம் கொடுக்க இந்தியா முனைகிறது. இந்த அழுத்தத்தினைக் கொடுப்பதற்குத் தேவையான ஆயுதங்களை மட்டுமே இந்தியா எமக்கு வழங்கவிருக்கிறது. ஆனால், தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்றத் தேவையான எந்த ஆயுதங்களையும் இந்தியா ஒருபோதும் எமக்குத் தரப்போவதில்லை. இந்தியா எமக்குத் தரவிரும்பும் ஆயுதங்களை நாம் ஏற்றுக்கொள்வோம், ஆனால், இராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்றத் தேவையான ஆயுதங்களை நாம் வெளியாரிடமிருந்து பெற்றுக்கொள்வோம்" என்று பிரபாகரன் கூறினார். 

 இந்தியாவால் போராளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் போதுமானவையாக இருக்கவில்லை. எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் குறைவான் ஆயுதங்களையே இந்தியா வழங்கியது. அவற்றில் பெரும்பாலானவை மிகப் பழமையானவையாகக் காணப்பட்டன. தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும்போது அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகிறார், "வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து பிரபாகரன் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தார். வழங்கப்பட்ட ஆயுதங்களில் இருந்த ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், 60 மி.மீ மோட்டார்கள் என்பன மிகவும் பழமையானவை, பாவனைக்கு உதவாதவை. எமக்குத் தேவையான நவீன, திறனுள்ள ஆயுதங்களைத் தருவதை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை நாம் நன்கு உணர்ந்துகொண்டோம். தமிழ்ப் போராளிகளின் ஆயுத வல்லமை மட்டுப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும், அவர்களின் போர்வல்லமை ஒரு அளவிற்கு மேல் விருத்தியடையக் கூடாது என்பதற்காக மிகவும் திட்டமிட்ட வகையிலேயே பழமையான ஆயுதங்களை இந்தியா எமக்கு வழங்கியது.  நவீன ஆயுதங்களைப் பாவிக்கும், திறனுள்ள போர்ப்படையினைக் கட்டியெழுப்ப விரும்பும் பிரபாகரனுக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எவ்விதத்திலும் போதுமானவையாகவோ தரமுள்ளவையாகவோ இருக்கவில்லை" என்று கூறுகிறார்.

தனது அமைப்பிற்குத் தேவையான நவீன ஆயுதங்களை உலகச் சந்தையில் இருந்து கொள்வனவு செய்ய பிரபாகரன் விரும்பினார். ஆனால், அதற்கு அதிகளவு பணம் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆர் அதற்கான பணத்தினை வழங்கியிருந்தார். அப்பணத்தைக் கொண்டு நவீன ரக ஆயுதங்களை லெபனனின் சட்டவிரோத ஆயுதச் சந்தையிலிருந்து பிரபாகரன் கொள்வனவு செய்தார். இவ்வாறான ஆயுதக் கொள்வனிற்காக இரகசிய ஆயுதக் கொள்வனவு அமைப்பொன்றை உருவாக்கிய பிரபாகரன் அதற்குப் பொறுப்பாக கே.பி என்றழைக்கப்பட்டும் குமரன் பத்மனாதனை நியமித்தார். அவர் இன்றுவரை அப்பணியில் செயற்பட்டு வருகிறார் (2005 இன்படி).

உலகின் அனைத்துச் சட்டவிரோத ஆயுதச் சந்தைகளுக்கும் பயணம் செய்த கே.பி, மலிவான சந்தையென்று தான் கண்டறிந்த லெபனின் ஆயுதச் சந்தையிலிருந்து புலிகளுக்கான ஆயுதங்களை வாங்குவதென்று முடிவெடுத்தார். அவ்வயுதங்கள் மலிவானவை மட்டுமல்லாமல், திறனுள்ளவையாகவும் காணப்பட்டன. இதனையடுத்து கே,பி இன் பெயர், அவரது புனைபெயர்கள், அவரின் மறைவிடங்கள் போன்ற பல விடயங்கள உலகின் பல புலநாய்வு அமைப்புக்களின் கோப்புக்களுக்கு வந்து சேரத் தொடங்கின. அவரிடம் ஒரு இலங்கைக் கடவுச் சீட்டும், இரு இந்தியக் கடவுச் சீட்டுக்களும் காணப்பட்டன. புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்காக பல கறுப்புச் சந்தைகளுக்கும் அடிக்கடி பயணித்தவர் என்கிற வகையில் கே.பி யின் பெயர் பலவிடங்களில் பிரபலமாகிப் போனது.

புலிகளுக்காக கே.பி முதன் முதலாக கொள்வனவு செய்த ஆயுதக் கொள்கலனில் ஏ.கே - 47 ரக ரைபிள்கள், ஆர்.பி.ஜி க்கள், ஸ்னைப்பர் ரைபிள்கள், வெடிபொருட்கள், இரவு பார்வைக் கருவிகள், தாங்கியெதிர்ப்பு ஆயுதங்கள், நவீன தொலைத் தொடபு உபகரணங்கள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் போன்றவை  இருந்தன. வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் இவ்வாயுதங்கள் சென்னை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அக்கொள்கலனை வெளியே எடுத்துவிட புலிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. அதுவரை புலிகளுக்கு உதவி வந்த சென்னைச் சுங்க அதிகாரிகள் இம்முறை உதவி செய்ய மறுத்தனர். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உமா மகேஸ்வரனுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு கொள்கலன் ஆயுதங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தமையினால், இக்கொள்கலனை வெளியே விடுவது குறித்து அதிகாரிகள் அஞ்சினர். இறுதியாக, எம்.ஜி.ஆர் இன் தலையீட்டினையடுத்து புலிகளின் கொள்கலன் வெளியே வந்தது. இச்சம்பவம் குறித்த விபரங்களை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

 large.an-ltte-fighter-in-clearing-operation-with-seized-weapons-from-the-sla.jpg.ed503b47f5273f074c8a984e7add1719.jpg

ஆர்.பி.ஜி உந்துகணையுடன் புலிகளின் போராளி ஒருவர்

 

நான் முன்னர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தமிழ்க் கடவுளான முருகன் மீது அதிக பற்று வைத்திருப்பவர். தனது அமைப்பிற்கென்று கொண்டுவரப்பட்ட கொள்கலன் சென்னை சுங்க அதிகாரிகளால் பிரச்சினைகளின்றி விடுவிக்கப்படுமிடத்து பழனி முருகன் ஆலயத்திற்கு வந்து வழிபடுவதாக அவர் வேண்டியிருந்தார். அவ்வாறே, கொள்கலன் புலிகளின் மறைவிடத்தை அடைந்ததும், தான் வேண்டிக்கொண்டவாறு பழனிக்குச் சென்று தனது வேண்டுலை நிறைவேற்றிக்கொண்டார். அந்நாள் முழுதும் உண்ணா நோன்பிருந்து, முருகனை வேண்டிக்கொண்டதுடன், தனது கொள்கலனை வெளியே எடுத்துத்  தந்தமைக்காக நன்றியும் கூறினார். மறவாது எம்.ஜி.ஆர் இற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

large.PazaniMurugan.jpg.da9b9107fd558f74a87d17d0d38cde70.jpg

பழனி முருகன் ஆலயம்

மூத்த போராளியொருவர் என்னுடன் பேசும்போது, புலிகளின் கொள்கலன் மடக்கப்பட்டபோது எம்.ஜி.ஆர், சுங்க ஆணையாளர் மற்றும் பொலீஸ் டி.ஐ.ஜி ஆகியோருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அக்கொள்கலனை விடுவித்தது மட்டுமன்றி, பொலீஸ் பாதுகாப்புடன் அதனை புலிகளின் இரகசிய மறைவிடத்திற்கு இரவோடு இரவாக எடுத்துச் சென்று இறக்கியதாகவும் கூறினார். கொள்கலன் இருந்த ஆயுதங்கள் முழுவதையும் புலிகளின் மறைவிடத்தில் சேமிக்க முடியவில்லை. மேலதிக ஆயுதங்களை பாலசிங்கத்தின் வீட்டிற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்தார்கள். தனது சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் எழுதும் அடேல், "ஒரு கட்டத்தில் நாம் வசித்து வந்த வீட்டின் ஒரு அறை முழுவதும் ஏ.கே - 47 ரைபிள்களும் ஆர்.பி.ஜி க்களும் குவிந்து காணப்பட்டன" என்று குறிப்பிடுகிறார்.  பின்னர் விரைவாக அவ்வாயுதங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் புலிகளுக்கு இருந்த ஆயுத மறைவிடங்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கு மேலதிகமாக கற்பாறைகளை உடைக்கப் பயன்படும் வெடிபொருளான ஜெலட்டினை பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் கொள்வனவு செய்தனர்.

இயக்கத்திற்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களைக் கொண்டு தனது அமைப்பை மறுசீரமைப்புச் செய்தார் பிரபாகரன். தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கை ஐந்து வலயங்களாக வகுத்து அவை ஒவ்வொன்றிற்கு ஒரு தளபதியை அவர் நியமித்தார். அதன்படி யாழ்க்குடாநாட்டிற்குப் பண்டிதரும், வன்னிக்கு மாத்தையாவும், மன்னாருக்கு விக்டரும், திருகோணமலைக்குச் சந்தோசமும் நியமிக்கப்பட்டனர். ஐந்தாவது வலயமாக மட்டு அம்பாறை விளங்கியது.

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது தலையீட்டின் மூலம் சிங்கள தேசத்தைக் காப்பாற்றிய இந்தியா

 

தனது கெரில்லா இராணுவத்தை பாரிய தேச விடுதலை இராணுவமாகக் கட்டியெழுப்ப முயன்று வந்த அதேவேளை, தனிநாட்டிற்கான அடிப்படைக் கட்டமைப்புக்களை அமைப்பதிலும் பிரபாகரன் மும்முரமாகச் செயற்பட்டு வந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல கிராமப் பகுதிகளை இராணுவத்தினதும், பொலீஸாரினதும் பிடியிலிருந்து அவர் விடுவித்திருந்தார். யாழ்க்குடாநாட்டில் இயங்கிவந்த 16 பொலீஸ் நிலையங்களில் வெறும் 7 நிலையங்களே அப்போது இயங்கிவந்தன. இப் பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள பொலீஸார் முன்வந்த போதிலும், அவைகுறித்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுக்க விரும்பவில்லை. மேலும், மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் புதிய வழக்குகளையும் அவர்கள் தாக்கல் செய்ய விரும்பவில்லை. பழைய வழக்குகளே விவாதிக்கப்பட்டு வந்தன. வீதி ஒழுங்கு நடவடிக்கைகளையும் பொலீஸார் நிறுத்தியிருந்தனர். இராணுவத்தினரின் உதவியுடனேயே பொலீஸாரின் வீதி ரோந்துக்கள் நடைபெறலாயின. இராணுவத்தினரின் கவச வாகனங்களில் பொலீஸாரும் கூடவே வலம் வந்தனர். 

பொலீஸார் இயக்கமற்று இருந்த இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து சில சமூக விரோத சக்திகள் செயலில் இறங்கத் தொடங்கின. களவுகள், அச்சுருத்தல்கள், கப்பம் அறவிடுதல், பாலியல் வன்புணர்வுகள் உள்ளிட்ட பல சமூகச் சீர்கேடுகளை இச்சக்திகள் அரங்கேற்றத் தொடங்கியிருந்தன. புலிகளும், புளொட் அமைப்பும் இச் சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கின. 1984 ஆம் ஆண்டு பங்குனியில் புலிகள் வெளியிட்ட அறிவித்தல் ஒன்றில் சமூக விரோத நடவடிக்கைகள் ஈடுபடுவோர் உடனடியாக அவற்றினை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்தனர். மேலும், தமது எச்சரிக்கைகள் உதாசீனப்படுமிடத்து அவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவ்வெச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது.

புலிகளின் எச்சரிக்கை வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அச்சுவேலிச் சந்தியில் நபர் ஒருவரின் உடல் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டுக் கிடந்தது, அருகில் ஒரு காகிதத் துண்டும் காணப்பட்டது. உடலின் தலைப்பகுதியில் குண்டு துளைத்த அடையாளம் தெரிந்தது.

புலிகளின் இலச்சினையுடன் காணப்பட்ட அக்காகிதத் துண்டில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது, "மக்களைத் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது". 28 வயதுடைய பொன்னம்பலம் நடராஜா என்பவரே அந்த சமூக விரோதியாவார்.

க‌ல்வியங்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் என்பவரும் புலிகளின் எச்சரிக்கையினை உதாசீனம் செய்திருந்தார். குக்கு என்ற புனைபெயருடைய குணரட்ணம் எனும் 29 வயதுடைய நபர் தொடர்ந்தும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். பகல் வேளை ஒன்றில் நவாலிப் பகுதியிலிருந்த வீடொன்றிற்குள் நுழைந்த குணரட்ணம், அங்கு தனியாகவிருந்த பெண்ணைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவ்வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய்கள் பெறுமதியான நகைகளையும் களவாடிச் சென்றார். 

இக்கொள்ளைச் சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின்னர் தேநீர்க் கடையொன்றில் அமர்ந்திருந்த குக்குவை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வெளியே வருமாறு அழைத்தனர். வந்திருப்பது யாரென்பதை உடனேயே அடையாளம் கண்டுவிட்ட குக்கு ஓட ஆரம்பித்தார். இளைஞர்களில் ஒருவர் குக்குவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே அவர் இறந்து வீழ்ந்தார். குக்குவின் உடலை அருகிலிருந்த‌ மின்கம்பம் ஒன்றில் கட்டிய இளைஞர்கள் கையால் எழுதப்பட்ட காகிதம் ஒன்றினையும் அருகில் வைத்துவிட்டுச் சென்றனர்.  புலிகளின் இலச்சினையோடு இருந்த அத்துண்டில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது, "நாங்கள் இவருக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அவர் அவற்றை உதாசீனம் செய்திருந்தார். அதனாலேயே அவருக்குத் தண்டனை வழங்கினோம்".

புளொட் அமைப்பும் சில சமூக விரோதிகளுக்குத் தண்டனை வழங்கியது. அவர்களில் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சின்னையா சிவபாலன். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது உடல் சுழிபுரம் சந்திக்கருகில் கிடக்கக் காணப்பட்டது. அவரது குற்றங்களைப் பட்டியலிட்ட துண்டொன்று அருகில் கிடந்தது. சுழிபுர‌ம் பகுதியில் பல வீடுகளில் நகைக்கொள்ளையில் ஈடுபட்டது, இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்தது, வாகனங்களைக் கொள்ளையிட்டது ஆகிய குற்றங்களுக்காக அவர் கொல்லப்பட்டுள்ளதாக அத்துண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. புளொட் அமைப்பின் சங்கிலியன் பஞ்சாயத்து எனும் பிரிவே இத்தண்டனையினை வழங்கியதாகவும் அத்துண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதே புலிகளின் முக்கிய கரிசணையாக மாறியது. பழமையான பஞ்சாயத்து முறைமூலம் குற்றங்களை தீர்க்கும் வழிகளும் ஆராயப்பட்டன. கிராமத்திலிருக்கும் முதியவர்கள், சிவில் மற்றும் சிறிய கிரிமினல்க் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு புலிகளால் கோரப்பட்டனர். மேலும் சிங்கள அரசினால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களைப் பதிவுசெய்து, விசாரித்து பின்னர் அரச அமைப்புக்களுடன் இணைப்பாளர்களாக‌ இதுகுறித்துப் பேசி நீதியைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக சிவில் அமைப்புக்கள் செயற்படவேண்டும் என்றும் புலிகள் கோரினர். இதனையடுத்து வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பிரஜைகள் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த மதிப்பிற்குரியவர்களும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களும் இணைந்து பிரஜைகள் குழுவினை அமைத்தனர். இக்குழுக்கள் உருவாவதற்கு புலிகளும் ஆதரவு வழங்கினர். தமிழ்நாட்டில் அக்காலப்பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன், பிரஜைகள் குழுக்களுடன் புலிகள் சார்பாக தொடர்புகொள்ள தனது உப தலைவரான மாத்தையாவை நியமித்தார்.

பிரஜைகள் குழுக்கள் இணைந்து யாழ்ப்பாணப் பிரஜைகள் குழு மற்றும் கிழக்கு மாகாண பிரஜைகள் குழு என்று இரு கிளைகளாக இயங்கி வந்தன. பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான பிரஜைகள் குழுவின் ஒருங்கிணைப்புக் குழு உதயம் பெற்றது. யாழ்ப்பாணப் பிரஜைகள் குழுவிற்கு ஓய்வுபெற்ற பேராசிரியர் கே சிவத்தம்பியும், கிழக்கு மாகாணப் பிரஜைகள் குழுவிற்கு எஸ் சிவபாலனும் தலைமை தாங்கினார்கள். இவ்விருவரும் இணைந்து வடக்குக் கிழக்கு பிரஜைகள் குழுவின் ஒருங்கிணைப்புச் சபையின் தலைவர்களாகச் செயற்பட்டு வந்தார்கள்.

 large.SIVATHAMBY.jpg.0b777a51ca5687c355c0c9ff71846557.jpg

பேராசிரியர் கே சிவத்தம்பி 2003

இப்பிரஜைகள் குழு மக்களாலும், புலிகளாலும், அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிற்காலத்தின் மனிதவுரிமை மீறல்கள் குறித்து அவதானிக்கும் அமைப்பாகவும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களின் அமைப்பாகவும் மாறலாயிற்று. இதன் உறுப்பினர்கள் இராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வந்த தமிழ் இளைஞர்களைச் சென்று பார்வையிட்டு வந்ததுடன், அவர்கள் மீதான சித்திரவதைகளின் கடுமையினையும் இவர்களால் குறைக்க முடிந்தது. மேலும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள், புலிகள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பாளராகவும் இவ்வமைப்பு செயற்பட்டு வந்தது. அத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளிலும்,  அகதிகளுக்கான பராமரிப்புக்களை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகளிலும் முன்னின்று செயற்பட்டு வந்தது. 

சிங்கள அரசாங்கத்தின் பிடியிலிருந்து பெருமளவு பிரதேசங்கள் புலிகளால் விடுவிக்கப்பட்டதையடுத்து இப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அரசுக்கு வரிசெலுத்தும் கட்டாயத்திலிருந்து விடுதலை பெற்றனர். இப்பிரதேசங்களைப் பொறுப்பேற்ற புலிகள், மக்களைப் பாதுகாக்கும் கடமையினைச் செய்ததோடு பாதுகாப்பு வரி உள்ளிட்ட அரசு ஒன்று அறவிடும் வரிகளைப்போன்ற வரிகளை இப்பிரதேசங்களில் அறவிடத் தொடங்கினர். இப்பிரதேசங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான உறபத்திவரி மற்றும் இப்பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி ஆகியவை புலிகளால் அறவிடப்பட்டன.

புலிகளின் வரி வசூலிப்பினை அறிந்த அரசாங்கம் கொதிப்படைந்தது. வரி அறவிடுவது அரசாங்கத்தின் உரிமையென்றும், புலிகளுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்றும் அரசு வாதிட்டது. மேலும், மக்களை மிரட்டியே புலிகள் பணத்தினைப் பறிக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியது. ஆனால், புலிகள் தொடர்ந்து வரிவசூலிப்பில் ஈடுபட்டே வந்தனர். அப்படிச் செய்வதன் மூலம் ஒரு அரசு செய்யும் செயற்பாடான வரி அறவிடுதலை நிழல் அரசுபோன்று செயற்படுத்தி வந்தனர்.

மக்களுக்கான பாதுகாப்பு, சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுதல், வரி வசூலித்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் ஒரு அரசாங்கத்தின் அத்தியாவசியச் செயற்பாடுகளை பிரபாகரன் கையகப்படுத்திக்கொண்டார். இந்த அரசுக்கான அடிப்படைக் கட்டுமாணங்களைச் சரிவர அமைத்துக்கொண்ட பிரபாகரன், அவற்றை மென்மேலும் பலப்படுத்தி வருகிறார் (2004 இன் படி).

எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியினை பிரபாகரன் அரசியற் செயற்பாடுகளுக்குச் செலவிட்டார். சென்னையில் இயங்கிவந்த புலிகளின் அரசியற் பிரிவு விரிவாக்கப்பட்டதுடன் மேலும் பலப்படுத்தப்பட்டது. புலிகளின் அரசியற் செயற்பாடுகளுக்கு அன்டன் பாலசிங்கமே பொறுப்பாகவிருந்தார்.

மாதாந்த சஞ்சிகையான விடுதலைப் புலிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட வெளிவரலாயிற்று. இதற்கு மேலதிகமாக புலிகளின் குரல் எனும் பத்திரிக்கையும் அச்சுவடிவில் வெளிவரத் தொடங்கியது. புலிகளின் குரல் வானொலி ஆரம்பிக்கப்பட்டதுடன், போர்க்குரல் எனும் சஞ்சிகை போராளிகளுக்காக வெளிவரத் தொடங்கியது.

தனியான பிரச்சாரப் பிரிவு ஒன்றினை புலிகள் உருவாக்கினார்கள். புகைப்படத்துறையிலும், ஒளிநாடாத் துறையிலும் கைதேர்ந்தவர்களைச் சேர்த்து உருவாக்கிய அமைப்பொன்று புலிகளின் இராணுவத் தாக்குதல்களைப் படமாக்கத் தொடங்கியது. தாக்குதல்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஒளிநாடாக்கள் ஆகியவை பிரச்சாரத்திற்காகவும், இயக்கத்தின் நிதிதேடல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

1984 ஆம் ஆண்டு மார்கழியின்போது விடுதலைப் போராட்டத்திற்குள் மக்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் புலிகள் இறங்கினார்கள். பொதுவிடங்களில் அறிவித்தல்ப் பலகைகள் வைக்கப்பட்டு அப்பகுதி இளைஞர்கள் மூலம் புலிகளின் செய்திகள் அப்பலகைகளில் பதிவேற்றப்பட்டு வந்தன. மேலும், இராணுவ முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் புலிகளின் காப்பரண்களில் இருந்துகொண்டு இராணுவத்தினரின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் இளைஞர்கள் பழக்கப்பட்டனர். சிலருக்கு வோக்கி டோக்கி எனப்படும் தொலைத்தொடர்புக் கருவியும் புலிகளால் வழங்கப்பட்டது. இராணுவமோ அல்லது பொலீஸாரோ தமது முகாம்களை விட்டு வெளியே வர எத்தனித்தால் அதுகுறித்த தகவல்களைப் புலிகளுக்கு உடனடியாக அறிவிக்கவே இக்கருவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றிற்கு மேலதிகமாக, இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வீதித்தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் மக்கள் புலிகளுக்கு உதவினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற எத்தனித்த வேளைகளில் கண்ணிவெடிகளை இயக்கியோ அல்லது குண்டுகளை எறிந்தோ புலிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். 

 1985 ஆம் ஆண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்னொரு முக்கிய ஆண்டாகும். பொலீஸாரும், இராணுவத்தினரும் அவர்களது முகாம்களுக்குள்ளேயே தள்ளி, முடக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் தலையீடு நடந்திருக்காவிட்டால் மொத்த வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுமே தமிழ்ப் போராளி அமைப்புக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வாய்ப்பிருந்தது. தமிழ்ப் போராளித் தலைவர்களுக்கு இந்தியா இட்ட கடுமையான கட்டளை எதுவெனில், "ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்பண்ணுவதே உங்கள் போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும், அதை மீறி எச்செயற்பாட்டிலும் நீங்கள் ஈடுபடுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை" என்பதாகும். தனது தலையீட்டின் மூலம், இந்தியா சிங்களவர்களை அச்சந்தர்ப்பத்தில் காப்பாற்றிவிட்டது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர் இற்கும் இடையிலான நட்பு

தமிழர்களின் மிகுந்த அபிமானத்திற்கு உரியவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமாகவிருந்த எம்.ஜி.இராமச்சந்திரனை முதன்முதலாக 1984 ஆம் ஆண்டு சித்திரை மாத்தில்த்தான் பிரபாகரன் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பே அவர்கள் இருவரையும் மிக நெருக்கமாக்கிவிட்டதுடன் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் மிகுந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. எம்.ஜி.ஆர் இன் பரோபகாரம் பிரபாகரனின் கனவான தனது கெரில்லாப் படையணியை ஒரு தேசிய விடுதலை இராணுவமாக மாற்றுவதைச் சாத்தியப்படுத்தி இருந்தது.

 large.MGRnPrabakaran1985-1.jpg.a254bc290f8139153a508676690eb121.jpg

எம்.ஜி.ஆர் உடன் பிரபாகரன் மாசி 1985

 இவர்கள் இருவருக்குமிடையிலான நெருக்கமான நட்பினை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய சகாவும் அவரது அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்து இலங்கை தொடர்பான விடயங்களைக் கவனித்துக்கொண்டவருமான பன்ருட்டி இராமச்சந்திரன் கூறும்போது, "அது ஒரு நெருக்கமான நட்பு" என்று கூறுவார். அச்சந்திப்பினூடாக இருவரும் நெருக்கமாகி வந்ததுடன் எம்.ஜி.ஆர், பிரபாகரனை வாஞ்சையுடன் "தம்பி" என்றே அழைக்கத் தொடங்கினார். பிரபாகரனும் எம்.ஜி.ஆர் இற்கு மிகுந்த மரியாதையுடனான கெளரவத்தை வழங்கி வந்தார்.

பிரபாகரன் குறித்து அறிந்த காலத்திலிருந்தே அவரைச் சந்திக்க மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார் எம்.ஜி.ஆர். வெண்திரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி, நீதியினை நிலைநாட்டும் வீரனாக நடித்துவந்த எம்.ஜி.ஆர், தான் வெண்திரையில் செய்வதை ஒருவர் நிஜவாழ்விலேயே செய்துவருகிறார் என்று அறிந்தபோது, பிரபாகரனில் தன்னையே அவர் கண்டிருக்கலாம்.

large.MGRPANRUDDI.jpg.b8e634b58de10c5e9290d267a9f8eac0.jpg 

பன்ருட்டி இராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் மற்றும் கே.கருணாகரன்

 

இலங்கைத் தமிழர்கள் மீது, குறிப்பாக மலையகத் தமிழர்கள் மீது எம்.ஜி.ஆர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். அவர் கண்டியில் பிறந்திருந்ததோடு அவரது பெற்றோர்கள் அங்கேயே வாழ்ந்தவர்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கொலை தமிழ்நாட்டில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமிழ்நாட்டிலேயே அடைக்கலம் தேடிக்கொண்டபோது இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் குறித்த கரிசனை தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியது.

மேலும், இலங்கைத் தமிழரின் பிரச்சினையே எம்.ஜி.ஆர் இற்கும் அவரது பரம வைரியான கருநாநிதிக்கும் இடையே கடுமையான போட்டியினை உருவாக்கியிருந்தது. சி.என்.அண்ணாத்துரையினால் உருவாக்கப்பட்ட திராவிட அரசியற் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.ஜி.ஆர் உம், கருநாநிதியும் ஒன்றாக முன்னர் பயணித்தவர்கள். 1967 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. கட்சியின் தலைவரான அண்ணாத்துரை புற்றுநோயால் அவதியுற்று இறந்தபொழுது கட்சியை தலைமைதாங்குவது யார் என்பதில் எம்.ஜி.ஆர் இற்கும் கருநாநிதிக்கும் இடையே கடுமையான பூசல் உருவானது. இதனையடுத்து எம்.ஜி.ஆர், தி.மு. விலிருந்து விலகி தனக்கென்று புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். அதுவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படலாயிற்று. 1977 ஆம் ஆண்டு இலங்கையில் ஜெயவர்த்தன ஆட்சியைக் கைப்பற்றிய அதே காலத்தில் எம்.ஜி.ஆர் உம் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றினார். வீர தீரச் செயல்களை விரும்பும் பிரபாகரனும் எம்.ஜி.ஆர் இன் தீவிர ரசிகர் தான். அவரைப்போன்றே அவரது நெருங்கிய சகாவும், தமிழ்நாட்டில் பிரபாகரனது தொடர்பாடல் உதவியாளருமான பேபி சுப்பிரமனியமும் எம்.ஜி.ஆர் ரசிகர் .

 large.KARUNANITHI.jpg.15d704411c516e2ae39aa7b6f667dc73.jpg

முத்துவேல் கருநாநிதி

 

தமிழ்நாட்டிலிருந்து இயங்கிவந்த இலங்கைத் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் குறித்து எம்.ஜி.ஆர் இற்கு தொடர்ச்சியான தகவல்களை தமிழ்நாட்டு உளவுத்துறையான கியூ பிராஞ்ச் வழங்கி வந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களை வளைத்துப்போடுவதன் மூலம் கருநாநிதி கோரிவந்த "உலகத் தமிழரின் தலைவன்" எனும் பெயரினை அடைந்துகொள்ள முயலக்கூடும் என்பதனால், போராளி அமைப்புக்களைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார் அம்.ஜி.ஆர். உண்மையாகவே டெலோவின் சிறீசபாரட்ணம், ஈரோஸின் பாலக்குமார், .பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஆகிய போராளித் தலைவர்கள் தொடர்ச்சியாக கருநாநிதியின் அலுவலகத்திற்குச் சென்று அவரைச் ச‌ந்தித்து வரலானார்கள். அரசியல் சூழ்ச்சிகளை நன்கு அறிந்துவைத்திருந்த பிரபாகரனோ தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தன்னை விலத்தியே வைத்திருந்தார். இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மொத்தத் தமிழ்நாட்டினதும் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்பிய பிரபாகரன், தனிப்பட்ட அரசியற்கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் ஏனையவர்களைப் பகைவர்களாக்கி, தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு கொடுத்துவரும் ஆதரவினை இழக்கலாம் என்று அவர் கருதினார். 

தமிழ்நாட்டு பொலீஸ் புலநாய்வுத்துறையான கியூ பிராஞ்சின் தலைவரான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் மோகன்தாஸ் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் கருநாநிதிக்கும் இடையிலான நெருக்கம் குறித்து எம்.ஜி.ஆர் இன் கவனத்திற்குக் கொண்டுவந்தார். போராளி அமைப்புக்கள் அனைத்திலும் புலிகளே மிகவும் திறமையானவர்கள் என்றும், பிரபாகரனே போராளித் தலைவர்களில் மதிநுட்பமும், இலட்சிய உறுதியும் கொண்டவெரென்றும் எம்.ஜி.ஆர் இடம் அவர் கூறினார். மேலும் போராளி அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தமக்கான புலநாய்வுப் பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும், புலிகளின் புலநாய்வுப் பிரிவே அவை அனைத்திலும் செய‌ற்றிறன் மிக்கது என்பதையும் அவர் எம்.ஜி.ஆர் இடம் தெரிவித்திருந்தார். 

தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் அன்றைய காலகட்டத்தில் தமிழர்களால் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயம் தான் போராளி அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமை என்பது. ஆகவே, 1984 ஆம் ஆண்டு சித்திரை மாத ஆரம்பத்தில் போராளி அமைப்புக்கள் அனைத்தையும் வரவழைத்து ஒற்றுமையின் அவசியம் குறித்து வலியுறுத்தப் போவதாக மோகன் தாஸிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.  போராளி அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமையின் மூலம் விடுதலைப் போராட்டத்தை வீரியப்படுத்தலாம் என்கிற நோக்கமே  எம்.ஜி.ஆர் இன் இந்த அழைத்தலுக்குக் காரணம். ஆனால், பிரபாகரனுக்கு இக்காரணம் திருப்தியைத் தரவில்லை. ஏனெனில், ஒருமித்துச் செயற்படுதல் என்பதனூடாக உள்வீட்டுப் பிணக்குகளும், கசப்புணர்வுகளுமே உருவாகும் என்பதை  தனது அனுபவத்திலிருந்து அவர் கற்றிருந்தார். "வெளியே எதிரியுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, உள்வீட்டில் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவார்கள்" என்று அவர் கூறினார்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.MGRnPrabakaran1985-1.jpg.a254bc290

சிறிய வயதிலிருந்தே எம் ஜி ஆரை ரொம்பவும் பிடிக்கும்.

புலிகளுக்கு உதவிகள் செய்தார் எனும்போது ஏறத்தாள கடவுள் மாதிரியே தெரிந்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருநாநிதி நடத்திய நாடகமும், எம்.ஜி.ஆர் புலிகளுக்குக் கொடுத்த இரண்டு கோடி ரூபாய்களும்

தமிழ்ப்போராளி அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்கிற பொதுவான விருப்பம் தமிழ்நாட்டில் அன்று இருந்துவந்தது. இதனை தனது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த தந்திரசாலியான எம்.ஜி.ஆர் எண்ணினார். போராளி அமைப்புக்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்த தமிழ்நாட்டின் பொலீஸ் உளவுத்துறைத் தலைவர் மோகன் தாஸ், போராளிகளை எம்.ஜி.ஆர் சந்திப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார். இந்த சந்திப்பு குறித்து பத்திரிக்கைகளிலும் பரவலான விளம்பரம் கொடுக்கப்பட்டது.

 large.withrebelleaders.jpg.bd6209ee5931e0f53ffc03aff2564683.jpg

தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவராக அன்று இருந்த கருநாநிதியுடன் டெலோ, .பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் தலைவர்கள்.

1984 ஆம் சித்திரையில் பாலசிங்கம் தம்பதிகள் சென்னை திருவாண்மியூரில் தங்கியிருந்தனர். அருகிலிருந்த இன்னொரு வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்தார். அடையாரில் அமைந்திருந்த புலிகளின் அரசியல்ப் பணிமனையில் ஒருநாள் பாலசிங்கம் இருந்தவேளை தமிழ்நாடு பொலீஸ் புலநாய்வுத்துறையைச் சேர்ந்த பொலீஸ்காரர் ஒருவர் போராளித் தலைவர்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சந்திக்க விரும்புவதாகக் கூறி  அழைப்பிதழ் ஒன்றினைக் கொடுத்தார். மேலும் இச்சந்திப்பின்போது ஐந்து போராளி அமைப்புக்களையும் ஒன்றிணைத்து பொதுவான அமைப்பொன்றினை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் அப்பொலீஸ் அதிகாரி பாலசிங்கத்திடம் கூறினார். போராளிகளுக்கிடையிலான பிணக்குகள் குறித்து எம்.ஜி.ஆர் அக்காலத்தில் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததுடன் "ஒற்றுமையே பலம்" என்றும் அடிக்கடி பேசி வந்தார்.

மறுநாள் அதேவகையான அழைப்பிதழ் ஒன்றினை எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த கருநாநிதியிடமிருந்தும் பாலசிங்கம் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர் நடத்தவிருந்த சந்திப்பிற்கு ஒருநாள் முன்னதாக கருநாநிதி தனது சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். கருநாநிதியின் போராளிகளுடனான சந்திப்பிற்கும் பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தம்மை விலத்தியே வைத்திருப்பது என்கிற புலிகளின் நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டின் இரு முக்கிய அரசியல்த் தலைவர்கள் விடுத்திருந்த சந்திப்பிற்கான அழைப்புக்கள் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தன.

பாலசிங்கம் தமிழில் எழுதிவந்த விடுதலை இதழில் குறிப்பிடும்போது தன்னிடம் வழங்கப்பட்ட இரு அழைப்பிதழ்களையும் பிரபாகரனிடம் தான் காட்டியபோது அவை எவற்றிலும் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று அவர் கூறியதாக எழுதுகிறார். பிரபாகரனின் இந்த முடிவிற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது, எம்.ஜி.ஆர் இற்கும் கருநாநிதிக்கும் இடையிலான அரசியப் போட்டியில் தான் அகப்பட்டு விடக் கூடாதென்பது. அவரைப்பொறுத்தவரை ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு இவ்விரு தலைவர்களினதும் ஆதரவு தேவை என்று அவர் உறுதியாக இருந்தார்.இவர்களுள் எவரினதும் எதிர்ப்பினைத் ஈழத் தமிழர்கள் சம்பாதித்துவிடக்கூடாதென்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இரண்டாவது, இவ்வாறான சந்திப்புக்களின்போது உமாமகேஸ்வரனும் பங்குகொள்வார் என்பதனால் அவ்வாறான சந்திப்புக்களை பிரபாகரன் வெறுத்தார். ஒருவரையொருவர் நேராகச் சந்திக்கும்போது தேவையற்ற மோதல்கள் இடம்பெறலாம் என்று பிரபாகரன் கருதினார். ஆகவே, இது சந்திப்பிற்கான மூல நோக்கத்தையே கலைத்து விட்டுவிடும் என்று பிரபாகரன் வாதிட்டார்.

ஐந்து முக்கிய போராளி அமைப்புக்களின் தலைவர்களில் மூன்று அமைப்புக்களின் தலைவர்களே கருநாநிதியின் சந்திப்பில் கலந்துகொண்டனர். சிறீசபாரட்ணம், பத்மநாபா, பாலக்குமார் ஆகியோரே அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். பிரபாகரனைப் போலவே உமா மகேஸ்வரனும் இக்கூட்டத்தில் இருந்து தன்னை விலத்தி வைத்திருந்தார். ஆனாலும், மூன்று போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்த நிகழ்வினை பெருவெற்றியாகக் காட்டிய கருநாநிதி அச்சந்திப்பின் பின்னர் பெரும் எடுப்பில் பத்திரிக்கை மாநாடு ஒன்றினையும் நடத்தினார்.

இதனால் எம்.ஜி.ஆர் சினமடைந்தார். போராளித் தலைவர்கள் சிலரைச் சந்தித்தன் மூலம் கருநாநிதி அரசியல் வெற்றியொன்றினைச் சம்பாதித்துவிட்டதாக எம்.ஜி.ஆர் எண்ணினார். ஆனால், கருநாநிதியிடம் தோற்றுப்போக அவர் விரும்பவில்லை. மறுநாள் தான் நடத்த எண்ணியிருந்த போராளித் தலைவர்களுடனனான சந்திப்பினை திடீரென்று அவர் இரத்துச் செய்தார். அவரிடம் வேறொரு திட்டம் இருந்தது.

"அன்று மாலை, புலநாய்வுத்துறையின் உப தலைவர் அலெக்ஸாண்டர் அடையார் அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார்" என்று பாலசிங்கம் விடுதலையில் எழுதுகிறார். "அவரை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. எமக்குப் பலமுறை அவர் உதவியிருக்கிறார். கருநாநிதியைச் சென்று சந்தித்த மூன்று போராளித் தலைவர்கள் மீதும் எம்.ஜி.ஆர் கோபத்தில் இருக்கிறார் என்று அவர் என்னிடம் கூறினார். அன்று மாலையே புலிகளைச் சந்திக்க எம்.ஜி.ஆர் விரும்புவதாக அலெக்ஸாண்டர் என்னிடம் கூறினார். தனது விருந்தினர் மாளிகைக்கு புலிகளை அழைத்துவர எம்.ஜி.ஆர் தனக்குக் கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். நான் தலைமையிடம் இதுகுறித்துப் பேசியபின்னரே முடிவெடுக்க முடியும் என்று கூறவும், உங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார், அவரை ஏமாற்றி விடாதீர்கள் என்று அலெக்ஸாண்டர் பதிலளித்தார்" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.

மேலும், பாலசிங்கத்திடமிருந்து விடைபெற்றுச் செல்லுமுன் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறிச் சென்றார் அலெக்ஸாண்டர். அதுதான், "தமிழ்நாட்டு முதலமைச்சரை கோபப்பட வைத்துவிட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்து செயற்படலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்" என்பதுதான் அந்த எச்சரிக்கை.

"எம்.ஜி.ஆர் உமாமகேஸ்வரனையும் சந்திக்கிறாரா?" என்று பாலசிங்கம் வினவினார். அதற்குப் பதிலளித்த அலெக்ஸாண்டர், "அவரை இன்னொருநாள் சந்திக்கலாம், ஆனால் பிரபாகரனைச் சந்திப்பதில் அவர் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்" என்று கூறினார்.

பின்னர் பிரபாகரனுடன் இந்தக் கோரிக்கை குறித்து ஆலோசித்தார் பாலசிங்கம். எம்.ஜி.ஆர் உடனான சந்திப்பை எக்காரணம் கொண்டும் தவிர்க்க முடியாது என்று அவர் பிரபாகரனிடம் விளங்கப்படுத்தினார். இதனையடுத்து பாலசிங்கத்தை சங்கரையும், பேபி சுப்பிரமணியத்தையும், நித்தியானந்தனையும் அழைத்துக்கொண்டு எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்லுமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். நித்தியானந்தன் அப்போது விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். எம்.ஜி.ஆர் தன்னை சந்திக்க அழுத்தம் கொடுத்தால் தான் அவரைச் சந்திக்க வரமுடியும் என்றும் பாலசிங்கத்திடம் தெரிவித்தார் பிரபாகரன்.

புலிகளின் தூதுக்குழுவினரை மிகுந்த வாஞ்சையுடன் வரவேற்ற எம்.ஜி.ஆர், "உங்களின் தலைவர் பிரபாகரன் வரவில்லையா?" என்று பாலசிங்கத்திடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த பாலசிங்க, "அவர் சென்னையில் இல்லை, அடுத்த சந்திப்பில் அவரும் கலந்துகொள்வார்" என்று கூறினார்.

பின்னர், "கருநாநிதி ஏற்பாடு செய்த சந்திப்பில் ஏன் நீங்கள் கலந்துகொள்ளவில்லை" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர். 

அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "போராளிகளுக்கிடையிலான ஒற்றுமை குறித்து பேச முதன்முதலாக அழைப்பு விடுத்த தலைவர் நீங்களே. ஆனால், உங்களைத் தோற்கடிக்கவே கருநாநிதி ஒருநாள் முன்னதாக தனது சந்திப்பினை நடத்தினார். அவரது சந்திப்பில் கலந்துகொள்வதன் ஊடாக அவருக்கு அரசியல் ஆதாயத்தை நாம் வழங்கிவிட விரும்பவில்லை. அதனாலேயே நாம் அச்சந்திப்பினைத் தவிர்த்தோம்" என்று  கூறினார்.

இதனையடுத்து எம்.ஜி.ஆர் இன் முகம் பிரகாசமானது. "தமிழ்நாடு அரசியலை நீங்கள் நன்கு தெரிந்துவைத்திருக்கிறீர்கள்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார் எம்.ஜி.ஆர். பின்னர், "நீங்கள் ஏன் குழுக்களாகப் பிரிந்து இயங்குகிறீர்கள்? ஏன் நீங்கள் சேர்ந்து இயங்கக் கூடாது?" என்று பாலசிங்கத்திடம் வினவினார் எம்.ஜி.ஆர்.

இச்சந்தர்ப்பத்தினை இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினையின் அடிப்படை, பல தமிழ்ப் போராளி அமைப்புக்களின் உருவாக்கம், புலிகள் அமைப்பின் கொள்கைகள், கட்டமைப்புக்கள், இலட்சியம் மீதான உறுதிப்பாடு, போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆகிய விடயங்கள் குறித்து விளங்கப்படுத்துவதற்காக பாலசிங்கம் பாவித்தார். இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் வன்கொடுமைகள் குறித்த புகைப்படங்களையும், ஒளிநாடாக்களையும் எம்.ஜி.ஆர் இடம் அவர் காண்பித்தார்.

பின்னர் , "உமா மகேஸ்வரனைப்பற்றிக் கூறுங்கள். அவர் தனது அமைப்பே உண்மையான புலிகள் என்று கூறிவருகிறாரே? பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே என்னதான் பிரச்சினை?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் அம்.ஜி.ஆர்.

பாலசிங்கம் பதிலளித்தபோது, "தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் எல்லாவற்றையும் ஈழத்துப் புலிகள் என்றே அழைக்கிறார்கள். அதனால் சில சமூக விரோத அமைப்புக்களின் செயற்பாடுகளும் புலிகளின் பெயரிலேயே வந்து வீழ்ந்துவிடுகின்றன. உமா மகேஸ்வரனும் ஒருகாலத்தில் புலிகள் அமைப்பில் இருந்தவர்தான், ஆனால் ஒழுக்கச் சீர்கேடு ஒன்றிற்காக அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டோம்" என்று அவர் மேலும் கூறினார்.

 அதன்பின்னர், இந்தியாவினால் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், நிதியுதவிகள் குறித்து பாலசிங்கத்திடம் எம்.ஜி.ஆர் வினவினார்.

அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், இந்தியப் பயிற்சி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது என்று கூறினார். இப்பயிற்சியின் மூலம் 200 புலிகளையே பயிற்றுவிக்க முடிந்திருக்கிறது. புலிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்தியா நடத்துகிறது. புலிகளைக் காட்டிலும் மிக அதிகளவான மாற்றியக்கப் போராளிகளை இந்தியா பயிற்றுவித்து வருகிறது. ஆனால், இப்போராளிகள் ஈழத்தில் செயற்றினுடன் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதில்லை என்று கூறியதோடு, இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் வினைத்திறன் குறைந்த‌ பழமையான ஆயுதங்கள் என்றும், மிகச் சிறிய எண்ணிக்கையான ஆயுதங்களே இந்தியாவினால் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவே தமிழ்ப் போராளி அமைப்புக்களை இந்தியா பயன்படுத்தி வருகிறதென்பது தமக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

பாலசிங்கம் பேசுவதைப் பொறுமையாக செவிமடுத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், "இப்போது எனக்கு எல்லாமே புரிகிறது. நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள். என்னிடம் இருந்து எவ்வகையான உதவியினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் பாலசிங்கத்திடம் வினவினார்.

அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "இந்தியாவினால் பயிற்றப்பட்ட 200 புலிகளைக் கொண்டு இலங்கை இராணுவத்தைப் போரில் வெற்றிகொள்ள முடியாது. குறைந்தது 1000 பயிற்றப்பட்ட போராளிகளாவது எம்மிடம் இருக்க வேண்டும். ஆகவே, மேலதிகப் போராளிகளைப் பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் நாமாகவே சில பயிற்சி முகாம்களை அமைத்துக்கொள்ள விரும்புகிறோம். பின்னர் அவர்களுக்கான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பெருமளவு பணம் வேண்டும். அதற்கான நிதியுதவியினை உங்களால் கொடுக்க முடியுமா? அப்படி நீங்கள் உதவினால், அது எமது போராட்டத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக அமையும். நீங்கள் செய்யும் இந்த உதவியினை எமது மக்கள் என்றென்றும் நினைவில் வைத்து நன்றிகூர்வார்கள்" என்று எம்.ஜி.ஆர் ஐப் பார்த்துக் கூறினார் .

"சரி, என்னிடம் இருந்து எவ்வளவு பணத்தினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று பாலசிங்கத்திடம் கேட்டார் எம்.ஜி.ஆர். 

இந்த தருணத்தை பாலசிங்கம் இப்படி நினைவுகூர்கிறார்,

"எனக்கு எப்படிப் பதில‌ளிப்பதென்றே தெரியவில்லை. எமக்குப் பெருமளவு பணம் தேவைப்படும் என்று நான் இழுத்தேன். பரவாயில்லை, எவ்வளவுதான் வேண்டுமென்று சொல்லுங்கள் என்று அவர் என்னைடம் மீண்டும் கேட்டார். நான் சங்கப்படுவதை உணர்ந்துகொண்ட சங்கர், இடையில் பேசத் தொடங்கினார். எமக்குக் குறைந்தது இரண்டுகோடி ரூபாய்களாவது வேண்டும் என்று அவர் கூறினார். ஆயிரம் போராளிகளைப் பயிற்றுவிக்க ஒரு கோடியும், அவர்களுக்கான ஆயுதங்களை வாங்கிக்கொள்ள இன்னொரு கோடியும் தேவைப்படும் என்று சங்கர் கூறினார். பெருமூச்சு ஒன்றினை வெளியிட்ட முதலமைச்சர், வெறும் இரண்டு கோடிகளா? என்று கூறிவிட்டு, என்னைப்பார்த்து, நாளைக்கு இரவு 10 மணிக்கு ஒரு வாகனத்தையும் எடுத்துக்கொண்டு வந்து பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று சாதாரணமாகக் கூறவும் நாம் வாயடைத்துப் போனோம். அவரது பரோபகாரத்தை மெச்சிக்கொண்ட நாங்கள், நாளை நிச்சயம் பிரபாகரனையும் அழைத்து வருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்றோம்" என்று கூறுகிறார். 

பாலசிங்கமும் ஏனையோரு இந்த மகிழ்ச்சியான செய்தியை பிரபாகரனிடம் தெரிவிக்க அவரது வாசஸ்த்தலத்திற்குச் சென்றார்கள். பிரபாகரனாலோ அதனை நம்ப முடியவில்லை. ஆகவே, தாம் நகைச்சுவைக்காக இதனைக் கூறவில்லை என்று அவர்கள் மீண்டும் அவரைப் பார்த்துக் கூறினார்கள். அதன்பின்னர் பேசிய பிரபாகரன் ஓரிரு நாட்களில் தான் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, தனிப்பட்ட ரீதியில்  இதற்கு நன்றி கூறப்போவதாகக் கூறினார்.

எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டவாறே மறுநாள் வாகனம் ஒன்றினை அமர்த்திக்கொண்டு எம்.ஜி.ஆர் இன் மாளிகைக்குச் சென்றார் பாலசிங்கம். ரகுவே வாகனத்தை செலுத்திக்கொண்டு போனார். தனது மாளிகையின் வாசலில் பாலசிங்கத்தின் வருகைக்காக எம்.ஜி.ஆர் காத்து நின்றார்.

வாசலை நோக்கி வாகனம் வருவதை அவதானித்த எம்.ஜி.ஆர் சற்று விலகி நின்று, வாகனத்தை தனது மாளிகையினை நோக்கி செலுத்துமாறு கூறினார். மாளிகையின் முன்னால் வாகனம் நின்றதும் பாலசிங்கத்தை அவர் வரவேற்றார்.

பின்னர் பாலசிங்கத்திற்கு அருகில் நின்றிருந்த ரகுவைப் பார்த்து, "இந்தப் பையன் யார்?" என்று எம்.ஜி.ஆர் வினவினார்.

"இவர் பிரபாகரனின் நம்பிக்ககைக்குரிய மெய்ப்பாதுகாவலர்" என்று பாலசிங்கம் பதிலளித்தார்.

 திருப்தியடைந்த எம்.ஜி.ஆர், அவர்களை மாளிகையினுள் அழைத்துச் சென்றார். பின்னர் தனியே பாலசிங்கத்தை அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர், வீட்டினுள் அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டினுள் நுழைந்து வீட்டின் நிலக்கீழ் பகுதிக்குச் சென்றார். லிப்ட்டின் கதவு திறந்துகொண்டதும், அங்கிருந்த அறைகளில் ஒன்றிற்குள் பாலசிங்கத்தை அழைத்துச் சென்றார் அவர். அப்பகுதியில் சில பெட்டிகள் நிரையாக அடுக்கப்பட்டிருக்க இரு திடகாத்திரமான மனிதர்கள் அவற்றிற்குக் காவல் காத்து நின்றனர்.

அந்த இரு நபர்களுடனும் மலையாளத்தில் பேசிய எம்.ஜி.ஆர், "அவர்களுக்கு இரு கோடிகளைக் கொடுங்கள்" என்று கூறினார்.

அவர்கள் 20 பெட்டிகளை எடுத்து லிப்ட்டினுள் வைத்தார்கள். வீட்டின் முன்பகுதிக்கு வந்ததும் வாகனத்தில் அப்பெட்டிகளை ஏற்றிவிட்டார்கள்.

 எம்.ஜி.ஆர் இடம் நன்றி தெரிவித்த பாலசிங்கம், கூடவே பொலீஸாரையும் துணைக்கு அனுப்பமுடியுமா என்று வினவினார். பெருந்தொகைப் பணத்தை தனியாக எடுத்துச் செல்லும்போது வழியில் பொலீஸார் மறித்தால் விபரீதமாகிவிடும் என்பதே அதற்குக் காரணம். உடனேயே பொலீஸாருடன் தொலைபேசியில் எம்.ஜி.ஆர் பேசவும், சில நிமிடங்களில் ஆயுதம் தரித்த பொலீஸார் இரு ஜீப் வண்டிகளில் வந்திறங்கினர். அவர்களின் அதிகாரியிடம் பேசிய எம்.ஜி.ஆர், பாலசிங்கமும் ஏனையோரும் வந்த வாகனத்தை பத்திரமாக அவர்களின் வீடுவரை வழிநடத்திச் செல்லுமாறு பணித்தார்.

"எமது வாகனத்திற்கு முன்னால் ஆயுதம் தரித்த பொலீஸ் ஜீப்பொன்று சென்றுகொண்டிருந்தது. இரண்டாவது ஜீப் எமக்குப் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. வண்டியில் இரண்டு கோடி ரூபாய்களை வைத்துக்கொண்டு நானும் ரகுவும் சென்னையின் கடற்கரைச்சாலயூடாக திருவாண்மியூரில் இருந்த எமது வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தோம். எமது தலைவர் பிரபாகரன், நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி, கேணல் சங்கர் மற்றும் சில போராளிகள் எமது வருகையினை எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருந்தனர். வீட்டினையடைந்ததும், என்னிடம் வந்து பேசிவிட்டு பொலீஸார் அங்கிருந்து சென்றனர்" என்று அந்த எதிர்பாராத அனுபவம் குறித்து பாலசிங்கம் எழுதுகிறார்.  

பெட்டிகளில் இருந்த பணம் பாலசிங்கத்தின் படுக்கையறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு பெட்டியாக அவற்றை அவர்கள் திறக்கத் தொடங்கினார்கள். பெட்டிகளுக்குள் நூறு ரூபாய்க் கட்டுகள் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்படிருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் பத்துலட்சம் ரூபாய்கள் இருந்தன. பணத்தை எண்ணி முடிக்கும்போது விடிந்துவிட்டிருந்தது. விரைவில் எம்.ஜி.ஆர் ஐச் சந்தித்து தான் நன்றி தெரிவிக்கப்போவதாக அங்கு பிரபாகரன் அறிவித்தார். 

பிரபாகரன் சிலிர்த்துப் போயிருந்தார். ஏனையவர்களும் அப்படித்தான். புலிகள் அமைப்பு பெரும் பண நெருக்கடியில் அப்போது சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களின் உதவியின் மூலமே அவர்களது நாளாந்தச் செலவுகள் சமாளிக்கப்பட்டு வந்தன. சிலவேளைகளில் பிரபாகரன் பெரும் விரக்தியில் காணப்பட்டுவார். புலிகளை கெரில்லா இராணுவம் எனும் நிலையிலிருந்து தேசிய விடுதலை இராணுவமாக மாற்றும் தனது நோக்கம் ஈடேறும் நிலையில் தான் இல்லையோ என்றும் அவர் வருந்தியிருக்கிறார். ஆனால், இந்த அச்சத்தையெல்லாம் போக்கி, அவரது நோக்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அன்று உதவியிருந்தார்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர் இற்கும் இடையிலான நட்பு

large_MGR.jpg.a8db613fd83613a0bbd5980e95f9f56a.jpg

அந்தவாரமே பிரபாகரன் எம்.ஜி.ஆரை ஐச் சென்று சந்தித்தார். பாலசிங்கமும் பிரபாகரனுடன் கூடவே சென்றிருந்தார். பிரபாகரனை மிகுந்த அன்புடன் எம்.ஜி.ஆர் வரவேற்றார். அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு அப்போதே ஆரம்பித்து விட்டது. தனது சொந்தத் தம்பி போன்றே பிரபாகரனை எம்.ஜி.ஆர் நடத்தினார். அவரை வாஞ்சையுடன் "தம்பி" என்று அவர் அழைக்க ஆரம்பித்தார். 

பிரபாகரனுடன் பேசும்பொழுது அவரது பெற்றோர், சகோதரர்கள், அவரது இளம்பிராயம், அவரது கனவுகள், இலட்சியம் ஆகியனபற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். இளைஞனாக தனது கெரில்லா வாழ்வினை தான் ஆரம்பித்த நாட்கள் குறித்து பிரபாகரன் பேசும்பொழுது எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போனார். இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் அட்டூழியங்கள் குறித்து பிரபாகரன் பேசும்பொழுது எம்.ஜி.ஆர் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். அச்சந்திப்பு எம்.ஜி.ஆர் இன் வாக்குறுதி ஒன்றுடன் அன்று முடிவிற்கு வந்தது, "தம்பி, உனக்கு என்ன வேண்டுமென்றாலும், எப்போதும் என்னைக் கேள்" என்பதுதான் எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்குக் கொடுத்த வாக்குறுதி.

"சந்திப்பு பொதுவானதாகவே அன்று காணப்பட்டது. பிரபாகரன் பேசப் பேச எம்.ஜி.ஆர் அமைதியாக அவற்றை உள்வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால், அக்கணமே எம்.ஜி.ஆர் இற்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய நட்பு உருவாகி விட்டது" என்று எம்.ஜி.ஆர் குறித்து எழுதும்போது மோகன்தாஸ் குறிப்பிடுகிறார்.

தனக்குப் பிரியமானவர்களை தன்னுடன் காலையுணவுக்கு அழைப்பதென்பது எம்.ஜி.ஆர் இற்குப் பிடித்த ஒரு விடயம். அவர்களுக்கிடையிலான  முதலாவது சந்திப்பு முற்றுப்பெற்று சில நாட்களுக்குள் எம்.ஜி.ஆர் இன் காரியதிரிசியிடமிருந்து பாலசிங்கத்திற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. உடனடியாக பிரபாகரனை அழைத்துக்கொண்டு சந்திப்பொன்றிற்கு வாருங்கள் என்பதே அந்த அழைப்பின் நோக்கம். "முதலமைச்சர் அவருக்காகக் காத்திருக்கிறார்" என்று அந்த அதிகாரி பாலசிங்கத்திடம் கூறினார்.

அவர்கள் உடனடியாக எம்.ஜி.ஆர் இன் வாசஸ்த்தலத்திற்கு விரைந்தார்கள். வாசலிலேயே அவர்களை வரவேற்ற காரியாதிரிசி, அவர்களை உணவருந்தும் அறைக்கு அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆர் அங்கிருந்தார். "வா தம்பி, உன்னுடன் இன்று காலையுணவு அருந்த விரும்புகிறேன்" என்று அவர் பிரபாகரனைப் பார்த்துக் கூறினார்.

முதலில் சட்னி, சாம்பாருடன் இட்லி பரிமாறப்பட்டது. பின்னர் தோசை. பூரி, உப்புமா போன்றவையும் பின்னர் பரிமாறப்பட்டன. நீரிழிவு நோயினால் அவஸ்த்தைப்பட்டு வந்த பாலசிங்கம் அன்றைய அவதியில் தனது இன்சுலின் ஊசி மருந்தினை எடுக்க மறந்திருந்தார். ஆகவே சிரமப்பட்டுக்கொண்டு நின்ற பாலசிங்கத்தை எம்.ஜி.ஆர் கவனித்து விட்டார். "எனது விருந்தினர்கள் வயிறார உணவருந்தவேண்டும் என்று நான் விரும்புவேன்" என்று எம்.ஜி.ஆர் பாலசிங்கத்தைப் பார்த்துக்கொண்டே கூறவும், பாலசிங்கம் செய்வதறியாது பிரபாகரனைப் பார்த்தார். ஆனால் பிரபாகரனது உணவருந்தும் தட்டோ சுத்தமாகக் காலியாகியிருக்கவே எம்.ஜி.ஆர் அகமகிழ்ந்து சிரித்தார். "தம்பியைப் பாருங்கள், உங்களை விருந்திற்கு அழைத்தவர்களை திருப்திப்படுத்துவது எப்படியென்று கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு பரிமாறப்படும் உணவிற்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக்கொண்டே எம்.ஜி.ஆர் கூறினார்.

அருகிலிருந்து உணவு பரிமாறிக்கொண்டிருந்த ஊழியரைப் பார்த்தும் மேலும் இட்லி, தோசை சாம்பார் ஆகியவற்றை அவர் எடுத்துவரச் சொன்னார்.

"எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது, நான் வழமையாக எடுக்கும் இன்சுலின் மருந்தினை இன்று எடுக்க மறந்துவிட்டேன், ஆகவேதான் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன், நான் அதிகம் சாப்பிடலாகாது" என்று கெஞ்சுமாற்போல் கூறினார் பாலசிங்கம்.

சிரித்துக்கொண்டே பேசிய எம்.ஜி.ஆர், "எனக்கும் நீரிழிவு நோய் இருந்தது, ஆனால் நான் சுகமடைந்து விட்டேன். நீரிழிவு நோய் இருந்தால் உண்ணக் கூடாது என்று யார் உங்களுக்குச் சொன்னது? உங்களை தவறாக வழிநடத்தும் அந்த வைத்திய மூடர் யார்?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

பதிலளித்த பாலசிங்கம், தான் ஒவ்வொருநாளும் இன்சுலின் மருந்தினைத் தவறாது எடுப்பதாகவும், தனது வாழ்வே அதில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

ஆனால், நீரிழிவு நோயினைக் குணப்படுத்த முடியும் என்று எம்.ஜி.ஆர் தொடர்ந்தும் விவாதித்தார். தனது வைத்தியர் தன்னிடம் அப்படியே கூறியதாகவும் அவர் கூறியதுடன் தனது வைத்தியரையும் அங்கு வரவழைத்தார். வைத்தியருடன் பேசிய எம்.ஜி.ஆர், "பாலசிங்கம் தன்னை ஒரு நீரிழிவு நோயாளியென்றும் , அதனைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார். நான் அவரிடம் நீரிழிவு நோயினைக் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறேன். நீங்கள் ஒரு நிபுணர்தானே? எங்களில் யார் கூறுவது சரியென்று கூறுங்கள் பார்க்கலாம்" என்று கேட்டார்.

பதிலளித்த வைத்தியரும், "நீங்கள் சொல்வதே சரி" என்று எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறினார்.

 தொடர்ந்து பேசிய எம்.ஜி.ஆர், வைத்தியரைப் பார்த்து, "நீரிழிவு நோயினைக் குணப்படுத்த எவ்வளவு காலம் தேவைப்படும்? சுமார் இரு வாரங்கள் போதுமல்லவா?" என்று கேட்டார். அதற்கு ஆமென்று பதிலளித்தார் வைத்தியர்.

"சரி, அப்படியானால் பாலசிங்கத்தை அழைத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துப் பராமரியுங்கள்" என்று பணித்தார் எம்.ஜி.ஆர்.

பாலசிங்கம் திரும்பிப் பிரபாகரனைப் பார்த்தார். அவரது முகம் எந்தச் சலனமும் இல்லாமல் இருப்பதைக் கண்ட அவர், நடப்பதை பார்த்து உள்ளுக்குள் இரசித்துக்கொண்டிருக்கிறார் பிரபாகரன் என்பதை நன்கு புரிந்துகொண்டார்.

எம்.ஜி.ஆர் இன் வீட்டை விட்டுக் கிளம்பியதும், அடக்கமுடியாமல் வெடித்துச் சிரித்தார் பிரபாகரன். வைத்தியர் பக்கம் திரும்பிய பாலசிங்கம், "எதற்காக எம்.ஜி.ஆர் இடம் பொய் கூறினீர்கள்?" என்று கேட்டார்.

பதிலளித்த வைத்தியர், "எனது முதலமைச்சருடன் நான் எப்படி முரண்பட முடியும்? இப்போது ஒரு பிரச்சினையுமில்லை. நீங்கள் என்னுடன் வைத்தியசாலைக்கு வாருங்கள், இரு வாரங்கள் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறினார். வைத்தியர் கூறியவாறே இரு வாரங்கள் ஓய்வெடுக்கச் சம்மதித்தார் பாலசிங்கம்.

சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை பிரபாகரனும், பாலசிங்கமும் எம்.ஜி.ஆர் உடன் காலையுணவினை அருந்த அழைக்கப்பட்டார்கள். அன்று செல்லுமுன் தேவைக்கு அதிகமாகவே இன்சுலின் மருந்தினைச் செலுத்திக்கொண்டார் பாலசிங்கம். அவர்களைக் கண்டதும், "உங்களின் நீரிழிவு நோய் எப்படி இருக்கிறது? குணமாகிவிட்டீர்ர்களா?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர். "ஆம் சேர், மிக்க நன்றி" என்று பதிலளித்தார் பாலசிங்கம். அன்று அவருக்குப் பரிமாறப்பட்ட அனைத்தையும் எம்.ஜி.ஆர் திருப்திப் படுமளவிற்கு உண்டுமுடித்தார் பாலசிங்கம்.

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை மீறிக் கொள்வனவு செய்யப்பட்ட புளொட்டின் ஆயுதங்களைப் பறித்த ரஜீவும், புலிகளின் கொள்கலனை விடுவித்த எம்.ஜி.ஆர் உம்

large.Chennaiport.jpeg.bb834ed3ddce035063cc7482986a28cc.jpeg

விடுதலை வேட்கை எனும் தனது புத்தகத்தில் எழுதும் அடேல், எம்.ஜி.ஆர் வழங்கிய பணத்தைக் கொண்டு புதிய போராளிகளை இனைக்கவும், அவர்களுக்கான பயிற்சிமுகாம்களை அமைக்கவும், ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவும், அரசியல்த் துறையினைப் பலப்படுத்தவும் பிரபாகரனால் முடிந்தது என்று கூறுகிறார்.

கறுப்புச் சந்தையில் இருந்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ள சர்வதேச ஆயுதக் கொள்வனவுப் பிரிவினை கே.பி தலைமையில் பிரபாகரன் உருவாக்கினார். லெபனானில் இருந்து பெருமளவு ஆயுதங்களைக் கொள்வனவு செய்த கே.பி, அவற்றைக் கொள்கலன் ஒன்றில் அடுக்கி வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் ஒன்றின் மூலம் சென்னைத் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தார். அக்கொள்கலனில் பெருமளவு நவீன ஆயுதங்களும், தொலைத்தொடர்புக் கருவிகளும் இருந்தன.

1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னை துறைமுகத்தை அந்தக் கொள்கலன் வந்தடைந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக துறைமுகத்திலிருந்து அக்கொள்கலனை விடுவிக்க முடியாது போய்விட்டது. அதனை விடுவிக்க புலிகள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்தன. முதல் மாதத்தில் புளொட் அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து சுங்க அதிகாரிகள் புலிகளின் கொள்கலனை விடுவிக்க அஞ்சினார்கள்.

அந்நேரம் தில்லியில் இருந்த மத்திய அரசை புளொட் அனுகியபோதும், கொள்கலனை விடுவிக்க முடியாது போய்விட்டது.

1984 ஆம் ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டிலிருந்து புளொட் கொள்வனவு செய்த ஆயுதங்கள் நிரம்பிய கொள்கலன் ஒன்றினை சென்னைத் துறைமுகத்தில் இறக்கும்போது சுங்க அதிகாரிகள் அதனை கையகப்படுத்திக் கொண்டனர். பழைய செய்தித்தாள்கள் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட அக்கொள்கலனில் 1400 ரைபிள்கள், 300 ஸ்டன் துப்பாகிகள், ஐந்து ஜப்பானிய தொலைத்தொடர்புக் கருவிகள், எலெக்ட்ரோனிக் வானொலிக் கருவி மற்றும் பெருந்தொகையான ரவைகள் காணப்பட்டன. தவறான தசகவல்களைக் கொண்டு பெருமளவு ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதால் அக்கொள்கலன் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. தாய்வானிய ஆயுத முகவர் ஒருவரூடாக இவ்வாயுதங்களை புளொட் அமைப்பு கொள்வனவு செய்திருந்தது. தமது கொள்கலனை விடுவித்துக்கொள்ள புளொட் அமைப்பினர் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். தில்லியில் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு புளொட் அமைப்பினர் அதனை விடுவிக்க முயன்றபோது அது கைகூடவில்லை. பின்னர் கம்மியூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக புதிய பிரதமர் ரஜீவ் காந்தியை அணுகி விடுவிக்க முயன்றனர், அதுவும் கைகூடவில்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஊடாக ரஜீவ் காந்தியைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன.

தன்னை அணுகிய தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேசிய ரஜீவ், ஆயுதங்கள் கொண்டுவரப்படுவது குறித்து தன்னிடம் முன்னரே அறிவித்திருந்தால் தன்னால் உதவியிருக்க முடியும் என்று கூறியிருந்தார். தற்போது விடயம் ஊடகங்களுக்குச் சென்றுவிட்டதால் தான் செய்யக் கூடியது எதுவுமில்லை என்று ரஜீவ் கூறினார். "அதனை அவர்களை மறந்துவிடச் சொல்லுங்கள்" என்று தமிழ்நாடு கம்மியூனிஸ்ட் உறுப்பினர்களைப் பார்த்துக் கூறினார் ரஜீவ்.

நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று பிரபாகரன் ஒரு முருக பக்தர். தனது ஆயுதக் கொள்கலன் விடுவிக்கப்படுமிடத்து பழனி முருகன் ஆலயத்திற்கு வருவதாக அவர் நேர்ந்திருந்தார். அவ்வாறே அக்கொள்கலன் புலிகளின் மறைவிடத்தை பத்திரமாக வந்தடைந்ததும் வேண்டிக்கொண்டது போல பழனி முருகன் ஆலயத்திற்குச் சென்றார். ஆயுதங்கள் விடுவிக்கப்பட்டதற்காக முருகனுக்கும், தவறாது எம்.ஜி.ஆர் இற்கும் அவர் நன்றி கூறினார்.

புளொட் அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை ரஜீவ் அரசு கையக்கபடுத்தியதன் மூலம் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு அது ஒரு தெளிவான செய்தியைக் கூறியிருந்தது. அதாவது, போராளிகள் தமது ஆயுதத் தேவைக்காக இந்தியாவில் மட்டுமே தங்கியிருக்க முடியுமென்பதும், இந்தியாவைத் தாண்டி எடுக்கப்படும் எந்த முயற்சியும் இந்தியாவால் தடுக்கப்படும் என்பதுமே அது. இது பிரபாகரனுக்கு நன்கு தெரிந்தே இருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்கள் இந்தியாவின் நலன்களுக்காக செயற்பட வேண்டுமே தவிர சொந்த விருப்புகளுக்காக அல்ல என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுப்பதே இந்தியாவால் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே பணி. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தைக்கு வந்து தமிழருக்கான தீர்வொன்றினை அடைவதற்கான இராணுவ அழுத்தத்தினை ஜெயவர்த்தன மீது கொடுப்பதைத் தவிர வேறு விடயங்களில் போராளி அமைப்புக்கள் ஈடுபட முடியாது என்பதை இந்தியா தெளிவாகவே சொல்லியிருந்தது. ஆகவேதான், இவ்வழுத்தத்தினைப் பிரியோகிக்க மட்டுமே போதுமான ஆயுதங்கள் என்று இந்திய அதிகாரிகள் கணக்கிட்ட சிறியளவிலான ஆயுதங்கள் போராளிகளுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டிருந்தன.

ஆகவேதான், தனது ஆயுதக் கொள்கலனை இந்திய மத்திய அரசு ஒருபோது விடுவிக்காது என்பதை பிரபாகரன் தெளிவாக உணர்ந்துகொண்டார். ஆகவே, பாலசிங்கத்தை எம்.ஜி.ஆர் இடம் உதவிகேட்டு தூது அனுப்பினார். எம்.ஜி.ஆர் ஐ அவரது வாசஸ்த்தலத்தில் சந்தித்த பாலசிங்கம், அவர் வழங்கிய பணத்தினைக் கொண்டு வாங்கப்பட்ட ஆயுதங்கள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றினை விடுவிக்க அவர் உதவிட‌ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், அவை விடுவிக்கப்பட்டாலன்றி, விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வது பிரபாகரனுக்குச் சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனைக் கேட்டதும் எதுவித தயக்கமும் இன்றி எம்.ஜி.ஆர் செயலில் இறங்கியதை பாலசிங்கம் நன்றியுடன் நினைவுகூர்கிறார். உடனடியாக சுங்க அதிகாரி ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய எம்.ஜி.ஆர், அவரது பெயரை ஒரு காகிதத் துண்டில் எழுதி, சுங்கத் திணைக்களத்தில் அவரைச் சென்று சந்திக்கும்படி பாலசிங்கத்திடம் கூறினார். "அவர் உங்களுக்குத் தேவையானதைச் செய்வார்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார் எம்.ஜி.ஆர்.

கொள்கலனை மீட்டுவரும் நடவடிக்கையினை சங்கரிடம் கொடுத்தார் பிரபாகரன். சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த புலிகளின் இரகசிய மறைவிடத்திற்கு பூரண பொலீஸ் காவலுடன் ஆயுதக் கொள்கலன் கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. அங்கு சேமிக்கப்பட முடியாத மேலதிக ஆயுதங்கள் பாலசிங்கத்தின் படுக்கையறையிலும் சேமிக்கப்பட்டன.

தனது ஆயுதக் கொள்கலன் விடுவிக்கப்பட்டவுடன் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்து நன்றி கூறிய பிரபாகரன், அவரிடம் நன்றிப்பரிசாக ஒரு ஏ.கே ‍- 47 ரக ரைபிளையும் கொடுத்து, "நீங்கள் கொடுத்த பணத்திலிருந்து வாங்கிய ஆயுதங்களில் ஒன்று" என்று கூறினார். மேலும், அதனை அங்கேயே துண்டு துண்டுகளாகக் கழற்றி மீளவும் ஒன்றாக்கிக் காட்டினார். பிரபாகரனின் நன்றியை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், அவர் கொடுத்த துப்பாக்கியையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். 

எம்.ஜி.ஆர் இன் பரோபகாரம் அன்றுடன் நின்று விடவில்லை. 1985 ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை புலிகள் விரிவாக்கியபோதும் அவர்களுக்கும் மேலதிகப் பணம் தேவைப்பட்டது. ஆகவே, எம்.ஜி.ஆர் உடன் இதுகுறித்துப் பேசி உதவி கேட்க பாலசிங்கத்தைப் பிரபாகரன் அனுப்பி வைத்தார்.  "உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர்.

"ஐந்து கோடிகள்" என்று பாலசிங்கம் பதிலளித்தார்.

"கவலைப்பட வேண்டாம்" என்று கூறிய எம்.ஜி.ஆர், தனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடிகளை அன்று வழங்கினார்.

சுமார் ஒருவருடம் சுகயீனமுற்றிருந்த பின்னர் 1987 ஆம் ஆண்டு மார்கழியில் எம்.ஜி.ஆர் இயற்கை எய்தினார். அவ்வருட ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை பாலசிங்கம் அவரைச் சென்று சந்தித்தார். பாலசிங்கத்தைக் கண்டதும் எழுது அமர்ந்துகொண்ட எம்.ஜி.ஆர், அருகிலிருந்த தலையணையை மேலே தூக்கி, அடியில் இருந்த ஏ.கே - 47 ரகத் துப்பாக்கியை வெளியே எடுத்து பாலசிங்கத்திடம் காட்டி, "தம்பி இதை எனக்குப் பரிசளித்தான்" என்று மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரபாகரன் தனக்குக் கொடுத்த துப்பாக்கியை மகிழ்வுடன் அவருக்குக் காண்பித்தார்.

 தான் இறக்கும்வரை பிரபாகரன் தனக்குப் பரிசளித்த துப்பாக்கியை தலைமாட்டில் அவர் வைத்துக்கொண்டிருந்தார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது நேர்காணல் 

large.PrabakaranSunday.jpg.f5c7d4d2a0eb28ee19aac514a79cc30b.jpg

இந்தியாவின் முன்னணிச் சஞ்சிகையான ச‌ண்டே, தனது பங்குனி 11 முதல் 17 வரையான இதழில் பிரபாகரனின் முதலாவது பேட்டியை வெளியிட்டதன் மூலம் இலங்கையிலும், இந்தியாவிலும் பலரது கவனத்தையும் ஈர்ந்தது. அதன் முன் அட்டையில் அகன்ற விழிகளுடன், சற்று பருமனான முகம் கொண்ட பிரபாகரன் இராணுவச் சீருடையில், அருகே துப்பாக்கியும் ஒலிநாடாக் கருவியும் இருக்க, மேசையொன்றின் பின்னால் அமர்ந்திருக்கும் வர்ணப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அட்டைப்படத்தில், நேர்காணலின் போது பிரபாகரன் கூறிய வசனமான , "ஜெயவர்த்தன ஒரு உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை வந்திருக்காது" என்றும் எழுதப்பட்டிருந்தது.

 large.anita-prabakaran.jpg.f79bb64011692ccab9d8e4058b894b1e.jpg

பிரபாகரன், அநிதா பிரதாப்புடனான நேர்காணலின் போது ‍ 1984

இந்த நேர்காண‌லின்போது இந்தியாவின் கொள்கைகள், இக்கொள்கைகளை முன்னெடுப்பதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆற்றும் பங்கு, தனிநாடான ஈழத்திற்காக புலிகள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆகியன பற்றி பிரபாகரன் வெளியிட்ட கருத்துக்கள் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இது மட்டுமல்லாமல், இந்த நேர்காணல் இலங்கையிலும் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை இராணுவமும், பொலீஸாரும் பிரபாகரனின் தற்போதைய உருவ அமைப்பினை புகைப்படமாகக் கண்டது இந்த அட்டைப்படத்தில்த்தான். அதுவரை காலமும் அவர்கள் பிரபாகரனின் சிறுவயதுப் படம் ஒன்றை வைத்துக்கொண்டே இலங்கையில் மிகவும் வேண்டப்பட்டவரான அவரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இப்புகைப்படம் வெளிவந்தவுடன், அதனைப் பல பிரதிகள் எடுத்து நாடெங்கிலும் உள்ள பொலீஸ் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

கல்கத்தாவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் சண்டே மற்றும் டெலிகிராப் ஆகிய பத்திரிக்கைகளின் நிருபராக, கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த மலையாளியான 25 வயது நிரம்பிய அனீட்டா பிரதாப்பே இந்த நேர்காணலினை செய்தவர். கல்கத்தாவில் தனது பள்ளிப்படிப்பினை நிறைவுசெய்து, தில்லியில் பட்டப்படிப்பினை முடித்து பின்னர் தமிழ்நாடு வந்து அங்கிருந்து இலங்கை தொடர்பான விடயங்களையும், இனப்பிரச்சினை தொடர்பான தகவல்களையும் அவர் வழங்கிவந்தார். 1981 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அதீத அக்கறை காண்பித்து வந்த அனீட்டா, சென்னையில் அமைந்திருந்த பல தமிழ்ப் போராளி அமைப்புக்களினதும் அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். பிரபாகரனைத் தவிர ஏனைய தமிழப் போராளி அமைப்புக்களினதும் தலைவர்களை அவர் ஏற்கனவே பேட்டி கண்டிருந்தார்.

புலிகளின் தலைவரைப் பேட்டி காண்பதற்கு தான் பலமுறை முயன்றபோதும்கூட, இவ்வாறான பேட்டிகளில் தலைவருக்கு நம்பிக்கையில்லை என்பதனால் அவர் இதற்கு உடன்படப்போவதில்லை என்று புலிகளின் அரசியல்த்துறை தன்னிடம் கூறிவந்ததையும் அவர் ஒத்துக்கொள்கிறார். "பேட்டிகள் கொடுப்பதைக் காட்டிலும், செயலில் ஈடுபடுவதன்மூலமே மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் நம்புகிறார்" என்று அனீட்டாவிடம் புலிகள் கூறியிருக்கிறார்கள். தனது போராளிகளுடன் பேசும்போது, "எமக்குப் பிரச்சாரம் தேவையில்லை, எமது தாக்குதல்களே எமக்கான பிரச்சாரத்தைச் செய்கின்றன" என்று பிரபாகரன் அடிக்கடி கூறியிருக்கிறார்.

 செவ்விகாண்பதில் சிறந்தவரான அனீட்டா, பிரபாகரனைப் பேட்டி காண வேண்டும் என்று பாலசிங்கத்தையும், புலிகளின் அரசியல்த்துறையைச் சேர்ந்தவர்களையும் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக கேட்டுவந்ததனால், இவர்குறித்து புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இரத்தத் தீவு என்று தான் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனைத் தனித்துவமான மனிதராக அவர் சித்திரித்திருக்கிறார்.

அனீட்டா பிரதாப் இலங்கைக்கு இருமுறை பயணம் செய்திருக்கிறார். தனது கணவருடன் 1983 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் பின்னர் ஆடி இனக்கொலை நடந்தபின்னர் அதனைப் பதிவுசெய்யவும் அங்கு சென்றிருக்கிறார். மாசி மாத பயணத்தின்போது இலங்கை ஜனாதிபதியான ஜெயாரை அவர் பேட்டி கண்டார். "தன்னைப் பேட்டி காண நான் கேட்டுக்கொண்டபோது ஜனாதிபதி ஜயவர்த்தன இணங்குவார் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். "நான் ஒரு அனுபவம் குறைந்த, இளவயதுப் பெண், ஆகவே அவர் நேர்காணலுக்கு இணங்கியபோது உண்மையாகவே நான் அதிர்ச்சியடைந்தேன்" என்று 2001 இல் தனது புத்தகத்தை வெளியிட அவர் கொழும்பு வந்திருந்தபோது கூறினார்.

தகவல்த் தொடர்ப்பாற்றலின் இயக்குநரான மானல் அபெயரட்ண என்னிடம் பேசும்போது, இந்திய மக்களுக்கு, இந்திய ஊடகம் ஒன்றின் ஊடாகவே தனது செய்தியைச் சொல்வதற்கு அனீட்டாவின் நேர்காணலினைப் பயன்படுத்த ஜெயவர்த்தன விரும்பியதாக கூறினார். யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து உடனடியாக இந்திய மக்களுக்கு அறிவிக்கவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருந்த மதகுருக்களையும், தொழில்சார் நிபுணர்களையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், மதகுருமார், தொழிலாளிகள், சாதாரண பொதுமக்கள் என்று பாரிய சனக்கூட்டம் ஒன்று தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தது. மாணவர்களும், அரசியற்கட்சி தலைவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு போராடி வந்த அதேவேளை, ஆயுத அமைப்புக்கள் பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருந்தனர். இந்நாட்களிலேயே பொலீஸ் அதிகாரியான விஜயவர்த்தனவும், அவரது பொலீஸ் சாரதியும் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். ஆகவே, இவ்வாறான போராட்டங்களுக்கெதிராக தான் எடுத்திருக்கும் கடுமையான நிலைப்பாட்டினை சர்வதேசத்திற்கும், இந்தியாவுக்கும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ஜெயவர்த்தனவுக்கு இருந்தது.

தனது நேர்காணலுக்கான வரவேற்பின்பொழுது ஜெயவர்த்தன் கைகளைக் கட்டியபடி வரவேற்ற விதமும், அவ்வரவேற்பினை தகவற்தொடர்பாற்றல் பிரிவு புகைப்படம் எடுத்துக்கொண்ட விதமும் அனீட்டாவை ஆச்சரியப்பட வைத்திருந்தன. இந்த நேர்காணலுக்கான பிரச்சாரத்தை வர்ணப் புகைப்படங்களுடன், தலைப்புச் செய்தியாக வெளியிட வேண்டும் என்று லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் அரசால் பணிக்கப்பட்டன. டெயிலி நியூஸ் தனது முதலாவது பக்கத்தில் பேட்டியினையும், இரண்டாவது பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. இப்புகைப்படங்களில் ஒன்றினை தகவற் தொடர்பாடல் அமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட அனீட்டா, ஆடியில் இனக்கொலையினைப் பதிவுசெய்ய மீண்டும் இலங்கை வந்தபோது தனது பையில் அதனையும் கொண்டுவந்திருந்தார்.

ஆடி இனக்கொலையினை அனீட்டா பிரசுரித்த விதம் பிரபாகரனைக் கவர்ந்திருந்தது. அதனாலேயே அனீட்டா கேட்டுக்கொண்டபோது நேர்காணலுக்கு அவர் ஒத்துக்கொண்டார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலையினை அவர் பதிவுசெய்த விதமும், துணிவுடன் அவர் வெளியிட்ட செய்திகளும் தன்னைக் கவர்ந்திருந்ததாக அனீட்டாவிடம் நேர்காணலின்பொழுது பிரபாகரன் தெரிவித்திருந்தார். அனீட்டவுடன் பிரபாகரன் பேசும்போது, "நாம் கெரில்லாப் போராளிகள், நாம் தெரிவுசெய்திருக்கும் பாதை மிகவும் ஆபத்தானது. ஆகவே, கடிணமான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பதென்பது எங்களைப் பொறுத்தவரை இயல்பானது. ஆனால், செய்தியாளரான நீங்கள் ஆபத்தான விடயங்களில் இறங்கவேண்டிய தேவையில்லை. ஆனால், உண்மையினை வெளிக்கொண்டுவருவதற்காக போர்நடக்கும் தேசத்திற்குள் வந்து எம் மக்களின் அவலங்களைச் செய்தியாக்கியிருக்கிறீர்கள். உங்கள் மூலம் தமிழர்களின் அவலங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக தமிழர்கள் என்றென்றைக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

தனது சொந்த விருப்பின் பேரிலேயே ஆடி இனக்கொலை தொடர்பாக செய்தி சேகரிக்க இலங்கை வர எண்ணினார் அனீட்டா. அதற்காக டெலிகிராப் ஆசிரியரான அக்பரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுமதிகோரியபோது, தயக்கத்துடனேயே அவரும் அனுமதியளித்தார். மிகக் கொடூரமான இனக்கலவரம் ஒன்றினைச் செய்தியாக்குவதற்காக இளவயதுப் பெண் ஒருவரை அனுப்புவதென்பது அக்பரைப் பொறுத்தவரையில் கடிணமான செயலாக இருந்தது. இனக்கொலை ஆரம்பித்து நான்காம் நாளான ஆடி 28 ஆம் திகதி அனீட்டா கட்டுநாயக்கவில் வந்திறங்கினார். அன்றிரவு அவர் வந்திறங்கியபோது நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததுடன், அவர் தங்குவதற்கான விடுதியும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கவில்லை. அவருடன் விமானத்தில் கூடவே பயணம் செய்த பி.பி.சி யின் மாக் டல்லி அவருக்கு விடுதி ஒன்றினை ஒழுங்குசெய்ய உதவினார். கோல்பேஸ் ஹோட்டலில் அவருக்கு தங்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மறுநாளான வெள்ளிக்கிழமை, புலிகள் கொழும்பு நகருக்குள் வந்துவிட்டார்கள் என்கிற வதந்தி பரவவே நகர் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. ஊரடங்கு உத்தரவின்போது செய்தி சேகரிக்கும் அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் தான் தங்கியிருந்த கோல்பேஸ் ஹோட்டலில் இருந்து கொள்ளுப்பிட்டியில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார்.

ஊரடங்கு நேரத்தில் பயணிக்கும் அனுமதியைப் பெற்று, தனது கைப்பையில் பத்திரமாக மடித்து வைத்துக்கொண்ட அனீட்டா, உண்மையைத் தேடி ஆபத்தான பயணத்தினை ஆரம்பித்தார். அக்பர் அஞ்சியது போல, அவரது பயணம் சுமூகமானதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வீதியாகச் சென்று அங்கு இடம்பெற்றிருக்கும் அழிவுகளை ஒளிப்படங்களாகவும், குறிப்புக்களாகவும் பதிவுசெய்யத் தொடங்கினார். எரிந்துபோய், எலும்புக்கூடுகளாகக் காட்சியளித்த தமிழருக்குச் சொந்தமான கடைத் தொகுதிகள், வீதிகளில் கவிழ்த்து எரிக்கப்பட்ட தமிழர் பயணித்த வாகனங்கள், மனித ஆரவாரம் இன்றி வெறிச்சோடிப் போயிருந்த நகர வீதிகள், வீதியெங்கும் பரவிக் கிடந்த தளபாடங்களும், ஏனைய கண்ணாடிப் பொருட்களும், ஆங்காங்கே இன்னமும் கட்டிடங்களிலிருந்து மேலெழுந்துகொண்டிருந்த கரிய புகை, வீதிகளில் பெருகத்தொடங்கியிருந்த குப்பை கூழங்கள் என்று எல்லாமே செயலிழந்துபோன தேசத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

ஒரு கட்டத்தில் துப்பாக்கிகளை ஏந்திப்பிடித்துக்கொண்டு அவரை நோக்கி ஓடிவந்த இரு பொலீஸார் அவரது ஒளிப்படக்கருவியைப் பறித்துக்கொண்டதோடு, பொலீஸ் நிலையம் நோக்கி இழுத்துச் செல்லத் தொடங்கினர். தான் கட்டிடக் கலை பயிலும் மாணவி என்றும், கட்டடங்களைப் படமெடுக்கவே அங்கு வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் பொலீஸ்காரர்கள் அவரை நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆகவே, அவரது கைப்பையைப் பறித்துச் சோதனையிட‌த் தொடங்கினார்கள். உள்ளே அவ்வருட மாசி மாதத்தில் ஜெயவர்த்தனவுடன் அனீட்டா எடுத்துக்கொண்ட புகைப்படம் கண்ணில்ப் படவே, அவரது ஒளிப்படக் கருவியை அவரிடமே கொடுத்துவிட்டு, உள்ளிருந்த ஒளிப்படச் சுருளினை வெளியே எடுத்து, "இங்கே ஒளிப்படம் எதனையும் எடுக்காதே" என்று எச்சரித்து அனுப்பினர்.

தான் கொழும்பில் இருந்த நாட்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், குறிப்புக்களையும் நட்டைவிட்டு வெளியே கொண்டுவருவதும் சவாலாக இருக்கப்போகிறது என்பதை அனுமானித்த அவர், குறிப்புக்களை மடித்து தனது காலணிக்குள் மறைத்துக்கொண்டதோடு, புகைப்படச் சுருட்களை இன்னொரு இந்தியப் பயணியிடமும் கொடுக்கவேண்டியதாயிற்று.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனீட்டா பிரட்டாப் வெளையிட்ட  இனக்கொலை பற்றிய அறிக்கை

 large.RiotVictim.gif.79cf30b4c54385ad43e794891c2c4f40.gif

டெலிகிராப் பத்திரிக்கை அனீட்டா பிரடாப்பின் இனக்கொலை தொடர்பான செய்தியை முதற்பக்க செய்தியாக வெளியிட்டபோது இந்தியாவிலும், சர்வதேசத்திலும் அது கடுமையான அதிர்ச்சியலையினை ஏற்படுத்தியது. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை பாராளுமன்றத்தில் விவாதித்ததோடு, இந்தியா இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.இத்தாக்குதல்கள் தமிழர்களின் மீதும், அவர்களின்  பொருளாதார தளத்தினை அழிக்கும் நோக்கத்திலும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் திட்டமிட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் என்பது சர்வதேசத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது. 

தான் கண்டுகொண்ட காட்சிகள் ஊடாகவும், அழிவுகள் தொடர்பாக தான் வரைந்துகொண்ட விபரங்களைத் தொகுத்தும், தாக்குதலுக்குள்ளான‌ தமிழர்களின் வாக்குமூலங்களைக் கொண்டும் மிகவும் தத்ரூபமாக இனக்கொலையின் நிகழ்வுகளை அனீட்டா பதிவுசெய்திருந்தார். 

"வாக்ககளர் பட்டியலை ஆயுதமாகப் பாவித்து வெற்று லொறிகளில் வந்திறங்கிய காடையர்கள் தமிழர்களின் வீடுகளிலிருந்த பொருட்களை அந்த லொறிகளில் நிரப்பிக்கொண்டு சென்றனர். அவற்றுள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இசைக்கருவிகள், நகைகள், கடிகாரங்கள், உடைகள் உட்பட பல பொருட்கள் காணப்பட்டன. தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமல்லாமல், அவர்களிடம் எவ்வகையான பொருட்கள் இருந்தன என்பது குறித்தும் அவர்களிடம் தகவல்கள் இருந்தன" என்று அவர் எழுதுகிறார். 

பல இந்தியர்களூடாகவும் தனது செய்தியை அனீட்டா நகர்த்தியிருந்தார். "இந்திய உயர்ஸ்த்தானிகரான மோகன் சந்திரனின் மனவியான‌ ஓமனாவும் அவர்களுள் ஒருவர். 1983 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதி தனது வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் வீழ்ந்து நொறுங்கும் சத்தம் அவருக்குக் கேட்டது. நடப்பதை அறிந்துகொள்ள அவர் வீட்டின் முற்பகுதிக்குச் சென்றபோது பலர் வீட்டின் மூன்னால் குழுமி நின்று வீட்டின்மீது கற்களை எறிவது தெரிந்தது. அவர் பார்த்துக்கொண்டிருக்க கைகளில் இரும்புக் கம்பிகள், கோடரிகள், வாட்கள், பொல்லுகளுடன் அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்தார்கள்.  வீட்டை விட்டு வெளியேறுமாறு அவரை நோக்கிக் கூச்சலிட்ட அந்தக் கும்பல் தாம் கொண்டுவந்த ஆயுதங்களால் வீட்டிலிருந்த தளபாடங்களை அடித்தி நொறுக்க ஆரம்பித்தது. ஒரு கையில் தனது ஐந்துமாதக் குழந்தையினையும், மறுகையில் அழுதுகொண்டிருக்கும் தனது ஐந்து வயது மகளையும் இழுத்துக்கொண்டு ஓமனா அருகிலிருக்கும் வீட்டிற்குள் அடைக்கலம் தேடி ஒளிந்துகொண்டார். அவர்களும் சிங்களவர்கள்தான், ஆனாலும் அவர் உள்ளேவர அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்" என்று அனீட்டா எழுதுகிறார்.

மோகன் சந்திரன் தம்பதிகளின் உடமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. "எங்களிடம் தற்போது எதுவுமே இல்லை, பிச்சைக்காரர்களாகிவிட்டோம்" என்று ஓமனா அனீட்டாவிடம் கூறியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட இன்னொரு இந்தியரூடாக மேலும் பல அவலங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். திரிலோக் சிங் தம்பதிகள் தொடர்மாடிக் கட்டடம் ஒன்றின் முதலாவது மாடியில் வசித்து வந்தார்கள். அவர்களது வீட்டிற்குக் கீழே வசித்த 60 வயதுடைய தமிழ்ப்பெண் ஒருவரின் வீட்டினை உடைத்துக்கொண்டு ஒரு கும்பல் உள்நுழைவதை அவர் கண்டார். அக்கும்பலால் அவர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதோடு அவரது உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அருகிலிருந்த தமிழரின் வீடொன்றிற்குள் சென்ற அக்கும்பல் அங்கிருந்த ஆண் ஒருவரின் கையை வாட்களால் வெட்டி வீழ்த்தியது. திரிலோக் தம்பதிகள் வீதிக்கு இறங்கி ஓடத் தொடங்கும்போது ஒரு தமிழ்க் குடும்பமும் அவர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. தமது ஏழு வயது மகனை திரிலோக்கின் கைகளில் எறிந்துவிட்டு அத்தமிழ்த் தம்பதி தொடர்ந்து ஓடத் தொடங்கியது. இந்தியர்களின் மகனென்று அச்சிறுவனை சிங்களவர்கள் உயிருடன் விட்டுவிடலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம்.  அச்சிறுவனின் தமிழ்ப் பெற்றோர்கள் அன்று கொல்லப்பட திரிலோக் தம்பதிகளே அவனைப் பராமரிக்கத் தொடங்கினார்கள். 

தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருந்த முகாம் ஒன்றிற்கு அனீட்டா சென்றவேளை அங்கு அவர் கண்ட காட்சி அவரை மனம் நெகிழச் செய்திருந்தது. "நான் பல பெற்றோர்களை அங்கே கண்டேன். பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர்கள், ஏழைகள் என்று அனைவருமே ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். படுகொலைகள் தலைவிரித்தாடியபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவேளை தாம் தவறவிட்ட தமது குழந்தைகளை எண்ணி அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அவ்வாறே இன்னுமொரு முகாமில் பெற்றோர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது கொண்டிருக்கும் குழந்தைகளையும் நான் கண்டேன்" என்று அவர் எழுதுகிறார்.

அகதி முகாம்களில் காணப்பட்ட மிகவும் அசெளகரியமான சூழ்நிலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, "அங்கிருந்த நிலைமைகள் மிகவும் கவலைக்கிடமாக இருந்தன. ஐந்து நாட்களாக உணவின்றி அம்மக்கள் அவஸ்த்தைப்பட்டார்கள். ஆறாவது நாள் வெறும் 30 உணவுப் பொட்டலங்களை யாரோ கொண்டுவந்து கொடுத்தார்கள், ஆனால் முகாமிலிருந்தவர்களோ ஏறக்குறைய 1,000 பேர். முகாமின் சுகாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு நீர் வசதிகள் இருக்கவில்லை, ஆகவே மலசல கூடங்கள் பூட்டப்பட்டிருந்தன. அம்முகாமின் இன்னொரு மூலைக்குச் சென்று மலங்கழிக்கவும், சிறுநீர் கழிக்கவும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு சில நாட்களிலேயே அம்முகாம் எங்கும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அன்றிருந்த வெப்பமான காலநிலை முகாமினை கிருமிகள் உற்பத்திசெய்யும் நிலையமாக மாற்றிவிட்டிருந்தது. அம்முகாமெங்கும் இருந்த மலக்கழிவுகளில் உயிர்வாழ்ந்த சாதாரண வீட்டு இலையான்கள் பருத்துப் போய் பல்வேறு நிறங்களில் வலம்வந்துகொண்டிருந்தன. நோய்கள் பரவத் தொடங்க, பல அகதிகள் வாந்திபேதியினாலும், வயிற்றுப்போக்கினாலும் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தனர். ஏற்கனவே பரவிவந்த துர்நாற்றத்துடன் இவையும் கலந்துகொள்ள அப்பகுதி வசிப்பதற்கே மிகவும் கடிணமான இடமாக மாறிவிட்டிருந்தது.   காய்ச்சலால் இரத்தச் சிவப்பாகிவிட்ட கண்கள், தண்ணீரின்மையினால் வெடித்துப்போயிருந்த உதடுகள், வயிற்றோட்டத்தால் எரிந்துகொண்டிருந்த பின்புறங்கள் என்று அம்மக்கள் நரக வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்".

 large.pratap_anita1.gif.56039ae648dce1123bae96dc6eb3414c.gif

அனீட்டா பிரட்டாப்.

அகதிகளாக்கப்பட்ட தமிழர்களின் அவலங்களைத் தனது அறிக்கையில் சேர்த்ததன் மூலம் அவ்வறிக்கையினை சோகம் நிறைந்ததாக மாற்றியிருந்தார். அவ்வகையான மூன்று அகதிகளின் கதைகள் பகிரப்பட்டிருந்தவற்றில் முக்கியமானவையாகத் தெரிந்தன.

சச்சிதானந்தன் எனும் வயோதிபர் வாழ்ந்துவந்த தொடர்மாடி வீட்டினுள் நுழைந்த சிங்களவர்கள் அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையிட்ட பின்னர் வீட்டிற்குத் தீமூட்டினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிங்களவன் அவ்வயோதிபரைப் பிடித்து இழுத்துவந்து கைகளைப் பின்னால்க் கட்டினான். இன்னும் மூன்று சிங்களவர்கள அவரது மகனையும் இழுத்துவந்து பின்னால் கைகளைக் கட்டி இருத்தினார்கள். தமது வீட்டின் விறாந்தையில் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். பின்னர் கீழே எரிந்து கொண்டிருந்த மொறிஸ் மைனர் காரின் மீது மகனை உயிருடன் தூக்கி வீசியது அச்சிங்களக் கூட்டம். மகன் எரிந்து கருகுமட்டும் தகப்பனாரை அதனைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள் மீதிச் சிங்களவர்கள்.

இன்னொரு தமிழரான சிவானந்தன் நான்கு மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் இருந்து கீழே பாய்ந்து உயிர் தப்ப முனைந்தார். கீழே வீழ்ந்தபோது அவரது கால்கள் இரண்டும் நொறுங்கிப்போக, நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை கொழும்பு பிரதான வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றபோது இன்னும் பல தமிழர்களை வைத்தியசாலையில் பணிபுரிந்த சிங்களவர்கள் அவமதித்துத் திருப்பியனுப்பியது போன்று அவரையும் திருப்பியனுப்பினார்கள்.

மேர்சி மொறாயஸ் 29 வயது நிரம்பிய சட்டக்கல்லூரி மாணவி. அகதி முகாம்களின் ஒன்றின் நிர்வாகத்தை அவரே கவனித்து வந்தார். நீண்டநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரது கணவரான மொறாயஸ் குறித்து அனீட்டா வினவினார். இதைக் கேட்டதும் மேர்சி அழத் தொடங்கினார், "எனக்குத் தெரியாது, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்" என்று அவர் தேம்பியபடியே கூறினார்.

அனீட்டாவின் அறிக்கையினை படித்த ஒவ்வொரு தமிழரும் அவருக்கென்று ஒரு இடத்தை அவர்களின் மனங்களில் அமைத்தார்கள். அதற்கு நன்றிக்கடனாகவே தனது முதலாவது நேர்காணலுக்கான அனுமதியினை பிரபாகரன் அனீட்டாவிற்கு வழங்கினார்.   

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் தான் பிரபாகரன்"

large.PrabakaranLeader.jpg.066a4181a0c3fc2dcc9db5b20771d8cb.jpg 

 

பிரபாகரனைப் பொறுத்தவரை செய்தியாளர் ஒருவரைச் சந்திக்கும் முதலாவது தருனம் அதுதான். அனீட்டாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய தருனம். இந்த நேர்காணலூடாக செவ்வி காண்பவரும், காணப்படுபவரும் பிரபலமானார்கள். 

தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலை எடுப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையோரத்தில் அமைந்திருந்த புலிகளின் பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட வீட்டிற்குச் சென்றார். அவர் அமரவைக்கப்பட்ட அறையினுள் சில பிரம்பினால் பின்னப்பட்ட கதிரைகளும், சிறிய உணவருந்தும் மேசையும் சுற்றிவர ஆறு சிறிய‌ கதிரைகளும் அடுக்கப்பட்டிருந்ததுடன் ஓரத்தில் சிறிய வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது.அவர் அமரவைக்கப்பட்ட சில நிமிடங்களின் பின்னர் தமது இயக்கம் தொடர்பான சில கசெட்டுக்களை அத்தொலைக்காட்சிப் பெட்டியில் புலிகள் ஓட்டினார்கள். தமிழ் ஈழம் எனும் தனிநாட்டின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட இராணுவ அமைப்பான புலிகள் பற்றி அக்காணொளிகள் பேசின. ஒரு காணொளியில் பிரபாகரன் இராணுவ அணிவகுப்பொன்றினை ஏற்றுக்கொள்வதும் படமாக்கப்பட்டிருந்தது. 

ஒரு இரு மணிநேரம் அனீட்டா அங்கு இருந்திருப்பார்.  உயரம் குறைந்த, சற்றுப் பருமனான, சராசரி மனிதர் ஒருவர் அவர் அமர்ந்திருந்த அறைப்பகுதிக்குள் நுழைந்தார். பல லட்சம் தமிழ் ஆண்களுக்கும் அப்போது உள்நுழைந்த மனிதருக்கும் உருவ அமைப்பில் எந்த வேறுபாடும் இல்லாமையினால் உள்ளே வந்தவர் குறித்து தான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறுகிறார். "ஆறடி உயரம் கொண்ட கம்பீரமான வீரன் ஒருவனை நான் எதிர்பார்த்திருந்தேன்" என்று கூறுகிறார். இரத்தத் தீவு எனும் தான் எழுதிய புத்தகத்தில் இத்தருணம் குறித்து எழுதும் அனீட்டா, "சில நிமிடங்களுக்குப் பின்னர்...." என்று ஆரம்பிக்கிறார்.

"அந்த மனிதரின் முகத்தில் சிறிய புன்னகை ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட மன்னிப்பொன்றினை இரைஞ்சுவது போன்று வைத்துக்கொள்ளலாம். அவரின் முகத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினேன், அடக் கடவுளே அது பிரபாகரன் தான் என்று உணர்ந்தபோது அதிர்ச்சியடைந்தேன்...."

"பழுப்பு நிறத்தில் நீளமான காற்சட்டையினையும், பெருக்கத் தொடங்கியிருந்த இடைப்பகுதியை மறைக்கத்முடியாத மென் நீல நிறத்தில் மேற்சட்டையும் அணிந்திருந்தார். எனது அவநம்பிக்கையினையும், அவரது உருவ அமைப்புப் பற்றி நான் எண்ணிவைத்திருந்தவற்றிற்கும் அவரது உண்மையான தோற்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டினால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் மறைக்க நான் கடுமையாகப் போராட வேண்டியதாயிற்று. ஆனால் நான் ஒரு ஊடகவியலாளர், நடிகையல்ல. எனது ஏமாற்றத்தை மறைக்கும் பிரயத்தனத்தில் நான் முற்றாகத் தோற்றுப்போயிருந்தேன்.அதிர்ஷ்ட்டவசமாக பிரபாகரனை எனது ஏமாற்றம் மகிழ்வித்திருந்தது. அவர் புன்னகைத்தார், சிறு பையனைப்போல.........."

 பிரபாகரன் குறித்த தனது எண்ணங்களையும் அனீட்டா எழுதுகிறார்.

"அந்த நேர்காணல் இரு மணித்தியாலங்கள் வரை நீண்டு சென்றது. நான் எனது வாழ்க்கையில் சந்தித்த அல்லது நான் சந்திக்கவிருந்த‌ மிக முக்கியமான மனிதர் அவர்தான் என்பதனையும் நான் உணர்ந்து கொண்டேன்.ஆகவேதான் அந்தச் சந்திப்பிற்கு பத்து வருடங்களுக்குப் பின்னர் உலகின் மிகவும் பிரபலமான கெரில்லா நாயகனாக அவர் உயர்ந்தபோது அது என்னை ஆச்சரியப்பட வைக்கவில்லை".  

"ஈவு இரக்கமற்ற, சூட்சுமம் கொண்ட, கடுமையான மனிதராக பிரபாகரன் வலம் வந்திருக்கலாம். ஆனால் அவர் மிகச் சிறந்த திட்டமிடலாளன் என்பதும் இராணுவ நிபுணன் என்பதும் அதேயளவிற்கு உண்மையானது. அவரது சிந்தனைகள் ஒருபோது தெளிவற்று இருந்ததில்லை. கூர்மையாக, தெளிவாக, சிக்கலற்றுத் தெளிவானது அவரது சிந்தனை. சந்தேகங்களோ, அச்சங்களோ வருத்தங்களோ அவரது இலட்சியப் பார்வையினை மழுங்கடிக்கவில்லை. எதிர்காலம் நோக்கிய அவரது பார்வையும் விசாலமானது. இனிவரும் காலங்களில் எதிரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அவரால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அவருக்கு செஸ் விளையாட்டில் பிரியமிருந்திருந்தால் மிகச்சிறந்த செஸ் வீரராக அவர் வந்திருப்பார்".

எதிர்காலம் குறித்து அனுமானிக்கும் திறமை மிக்கவர்

 இரத்தத் தீவில் எழுதும்போது பிரபாகரனின் தீர்க்கதரிசனம் குறித்து அனீட்டா பேசுகிறார். நேர்காணலின் பகுதியொன்றினை மேற்கோள் காட்டி அது எழுதப்பட்டிருந்தது. தனது கேள்வி பதில் பகுதியில் அச்சந்தர்ப்பம் வராமையினால் பத்திரிக்கையில் அதனை எழுதுவதை அவர் தவிர்த்திருக்கலாம்.

 ஆனால், புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பத்தினை அதன் முக்கியத்துவம் கருதி முழுமையாக இங்கு பதிகிறேன். 

"நாம் பேசிக்கொண்டிருக்கும்போது "இறுதியாக நான் இந்தியாவுடன் மோதவேண்டி வரும்" என்று கூறினார். இந்தியப்படைகள் இலங்கைக்குள் வருவதற்கும், ரஜீவ் காந்தி பிரதமராவதற்கும் முன்னாலேயே இதனை பிரபாகரன் அனுமானித்திருந்தார். அத்தருணத்தில் இந்தியாவின் சர்வதேச உளவு அமைப்பான ரோ புலிகளுக்கு பணமும், ஆயுதங்களும், பயிற்சியும் வழ‌ங்கிக்கொண்டிருந்தது".

"அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் அதனைத் தெரிவித்தேன். அவருக்கு உணவளிக்கும் கரத்தையே அவர் கடிப்பது எவ்வாறு அவரால் சாத்தியமாகிறது? இது நன்றி மறுப்பல்லவா? நன்றிமறுப்பிற்கப்பால தற்கொலைக்குச் சமனானது இல்லையா?"

"இலங்கையை விடவும் இந்தியாவே எமது தனிநாட்டினை எதிர்க்கும் என்பது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் இருக்கும் ஐம்பத்தைந்து மில்லியன் தமிழர்களை மனதில் வைத்தே இந்தியா எமது தனிநாட்டுக் கனவினை அழிக்க முனையும்" என்று அவர் பதிலளித்தார்.

"அப்படியானால் எதற்காக இந்தியாவின் உதவியினை இவர் ஏற்றுக்கொள்கிறார்? "நாம் இப்போது சிறிய அமைப்பாக இருக்கிறோம், நாம் வளர்வதற்கு இந்தியாவின் ஆதரவு எமக்குத் தேவை".

 பேட்டியின் பிரதான பகுதியில் இச்சம்பாச‌ணை வெளிவராத போதிலும், பிரபாகரனின் தீர்க்கதரிசனம் குறித்து அனீட்ட கொண்டிருந்த பார்வை அவரது புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தனது இறுதிக் கேள்வியில், "உங்களின் ஈழத்தினை அடைவதற்கு எத்தனை வருடங்கள் ஆகலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். "ஒரு விடுதலைப் போராட்டம் எவ்வாறு வென்றெடுக்கப்படும் என்பது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் திட்டமோ அல்லது கால அவகாசம் கொண்ட செயற்பாடோ கிடையாது. எமது தாயகத்திலும் சர்வதேசத்தில் நடக்கு சம்பவங்களை அடிப்படையாக வைத்தே அது தீர்மானிக்கப்படும்" என்று அவர் அன்று கூறியிருந்தபோதும், அது எவ்வளவு உண்மையானது என்பதனை இன்று போராட்டம் இருக்கும் நிலை  உண்மையென்று உறுதிப்படுத்தியிருக்கின்றது.

"தேசியப் பற்றுக்கொண்ட ஒரு பலமான இராணுவத்தினால் தனிநாடான ஈழம் உருவாக்கப்பட்டு, அதன் மக்களும், சொத்துக்களும் பாதுக்காக்கப்படும் நிலை உருவாகும் வரையில் தமிழ் மக்கள் இங்கு பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழமுடியாது" என்று பிரபாகரன் அன்று தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார். 

"தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல்த் தீர்வொன்றினை வழங்குவதற்கு ஜெயவர்த்தனா ஒருபோதுமே விரும்பாதபோது, அவர் கண்துடைப்பிற்காக 1984 ஆம் ஆண்டில் நடத்திவந்த சர்வகட்சி மாநாடு ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை" என்று பிரபாகரன் எதிர்வுகூறியிருந்தார். "பல தசாப்த்தங்களாக நாம் கண்டுகொண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே எமது பார்வை அமைந்திருக்கிறது" என்று கூறிய பிரபாகரன் "சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் அவலங்களைத் தீர்க்கும் நேர்மையான செயற்பாடுகள எதனையும் மேற்கொள்ளவில்லை. இப்போது நடக்கும் பேரம்பேசல்களும் இதே முடிவினையே அடையும். அனைத்துச் சிங்களக் கட்சிகளும், பெளத்த அமைப்புக்களும் அதிகாரம் கொண்ட பிராந்தியங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதையே முற்றாக எதிர்க்கின்றன. சிறிய அதிகாரப் பகிர்வினைக்கூட அவர்கள் வழங்கத் த‌யாராக இல்லை. ஆகவே, தமிழருக்கு எதுவித தீர்வும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளால் கிடைக்கப்போவதில்லை" என்று அன்று அவர் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை?

"சிங்கள இனவாத அரசுகள் இந்தியாவின் உதவியைக் கொண்டு தமிழருக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்கும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை" என்று பிரபாகரன் கூறினார்.

"தமிழர்களை சிறிது சிறிதாகப் பலவீனப்படுத்தி, ஈற்றில் முற்றாக அழித்துவிடவே பேச்சுவார்த்தை நாடகங்களை சிங்கள இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்" என்று அவர் அன்று எதிர்வு கூறியதை பிரேமதாசவும் சந்திரிக்காவும் பின்வந்த காலங்களில் உறுதிப்படுத்தினர்.

" தமிழருக்கான தீர்வு ஒன்றினை உருவாக்குவதில் இந்தியா வகிக்கக்கூடிய பாகம் எவ்வாறு இருக்க வேண்டும்?" என்று அனீட்டா பிரபகாரனிடம் வினவினார். மிகுந்த தீர்க்கதரிசனத்துடன் கேட்கப்பட்ட, பதிலளிக்கப்பட்ட இந்த விடயங்கள் குறித்து நான் இங்கு பகிர்கிறேன்.

கேள்வி : தமிழர்களுக்கு உதவ இந்தியா சரியாக எதனைச் செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 பிரபாகரன் : எமது மக்களின் நியாயமான , நீதியான அபிலாஷைகளை இந்தியா புரிந்துகொண்டு, நாம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனக்குழுமம் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி : " இராணுவ ரீதியிலான தலையீடு ஒன்று தேவைப்படும் என்று கருதுகிறீர்களா?

 பிரபாகரன் : எமது விடுதலையினை நாமே வென்றெடுக்கக் கூடிய துணிவும், உறுதியும், இலட்சிய வேட்கையும் எமக்குத் தாராளமாகவே இருக்கின்றன. நாம் போராடியே எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் அனுதாபமும், ஆதரவும் இருந்தாலே போதுமானது.

 ஆனால் இந்தியாவுக்கு வேறொரு திட்டம் இருந்தது. இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தனது செல்வாக்கு வட்டத்திற்குள் இலங்கையை வைத்திருக்க வேண்டும் என்று என்று அது விரும்பியது. அதனை அடைவதற்கு, ஈழத் தமிழர்களைப் பாவித்து இலங்கையரசாங்கத்தை தன்னிடம் மண்டியிட வைக்க அது முயன்றது. இன்றோ, தமிழர்கள் தொடர்பான அச்சத்தினை சிங்களவர்களிடையே உருவாக்குவதன் ஊடாக இலங்கையரசாங்கத்தை தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயல்கிறது. 

1983 ஆண்டின் தமிழினக்கொலையினை ஜெயாரே திட்டமிட்டு, தமிழரை அழிக்க அதனைச் செய்தார் என்பதனை பிரபாகரன் உறுதியாக நம்பினார். ஆகவேதான், ஜெயவர்த்தன, தனது அமைச்சர்களினதும், சிங்கள இனவாதக் கழுகளினதும் சிறையில் அடைபட்டிருக்கிறார் என்று அனீட்டா கூறியபோது பிரபாகரன் அதனை முற்றாக நிராகரித்தார்.

 அனீட்டா : ஜெயவர்த்தன தனது அமைச்சரவையில் இருக்கும் ப‌லமான சிங்கள இனவாதக் கழுகுகளினதும், இன்னும் சில பலம் மிக்க அமைச்சர்களினதும் கைகளில் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் என்றோ அல்லது கடும்போக்குச் சிங்கள பெளத்த துறவிகளினதும் அழுத்தத்தினால் இப்படி நடந்துகொள்ளலாம் என்றோ நீங்கள் நினைக்கவில்லையா ? என்று கேட்ட‌போது, 

"ஜெயவர்த்தன தனது சுய விருப்பத்தினாலேயே இப்படி நடக்கிறார். அவரிடமே அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. இனவாதக் கழுகுகளும், பெளத்த துறவிகளும் அவருக்கு ஆதரவாக நிற்கின்றனர்" என்று பிரபாகரன் பதிலளித்தார்.

தான் ஒரு நேர்மையான, சமத்துவத்தினை ஆதரிக்கும் மனிதர் என்றும், கொடூரமான இனவாதிகள் மத்தியில் இருந்துகொண்டு நீதியானதைச் செய்ய எத்தனிக்கும் மகான் என்றும் நாட்டு மக்களையும், சர்வதேசத்தையும் நம்பவைப்பதில் ஜெயவர்த்தன ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்டவர்தான் சிறில் மத்தியூ எனும் கடும்போக்குச் சிங்கள இனவாதி. ஜெயவர்த்தன சிறில் மத்தியுவை பதவிநீக்கியபின்னர் அவர் முற்றாக மறைந்துபோனார். காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும் கூட ஜெயார் விரும்பியதைச் செய்வதற்காகவே அவரால் பாவிக்கப்பட்டார்கள்.

ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிகளை பிரபாகரனைப் போலவே அனீட்டாவும் உணர்ந்துகொண்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு ஆவணி 5 ஆம் திகதி சென்னையிலிருந்து வெளிவந்த கல்கி இதழில் அவர் எழுதும்போது ஜெயவர்த்தனவுடனான தனது கலந்துரையாடல் ஒன்றுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். தமிழர்களுக்கான நீதியான தீர்வொன்றைக் காண்பதில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், தமிழர்களுக்கான நீதியான தீர்வொன்றைக் காண்பதில் தான் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகக் கூறினார். "நான் அதிகபட்சமான தீர்வொன்றினை அவர்களுக்கு வழங்க முயல்கிறேன். ஆனால், அதனைச் செய்வது எனக்குக் கடிணமானதாகத் தெரிகிறது. ஏனென்றால் தமிழர்களுக்கு எதிரான அமைச்சர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்" என்று அவர் பதிலளித்தார்.

ஆனால் ஜெயார் கூறியதை தன்னால் நம்பமுடியவில்லை என்று எழுதும் அனீட்டா, "சினிமா நடிகர்கள் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் மட்டும்தான் சினிமாவில் ஈடுபடாத அரசியல்வாதிகளால் மிகவும் திறமையாக நடிக்க முடிகிறது. ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் மிகத் திறமையான நடிகர். உலகிலேயே ஜெயவர்த்தனவைக் காட்டிலும் திறமையாக நடிக்கக் கூடிய அரசியல்வாதியொருவர் இருக்கிறார் என்பது சந்தேகம்தான். அவரது  சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு ஒஸ்கார் விருது கூடக் கொடுக்கலாம்" என்று கூறுகிறார்.

 சிங்களத் தலைவர்களின் சூட்சுமங்களையும், திட்டங்களையும் பிரபாகரன் நன்கு அறிந்தே வந்திருந்தார். அவர்களின் அத்திட்டங்களை முறியடிக்க தேசிய விடுதலை இராணுவமான தமிழீழ விடுதலைப் புலிகளை அவர் உருவாக்கினார். அவரது ஒப்பற்ற மகத்துவம் அங்கேயே ஆரம்பிக்கிறது.

புனைபெயர்கள்

large.OyathaalaikalLTTE.jpg.7c72f9fb0664f85d2a5c38d364646750.jpg

1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே தமது விடுதலைக்கான போராட்டத்தின் முன்னணிப் போராளிகள் புலிகள்தான் என்பதை யாழ்ப்பாணத்து மக்கள் உணர ஆரம்பித்திருந்தனர். ஐந்து முக்கிய போராளி அமைப்புக்களுக்கு அவர்கள் வழங்கிய புனைபெயர்கள் இதனைத் தெளிவாக உணர்த்தியிருந்தன. அக்காலத்தில் பிரபலமாக இருந்த தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் பெயர்களை இவ்வமைப்புக்களுக்கு அவர்கள் சூட்டி அழைத்தனர். புலிகளுக்கு தமிழர்கள் வழங்கிய பெயர், "ஓயாத அலைகள்". இராணுவத்தினரையும், பொலீஸாரையும் இடையறாது தாக்கி, அவர்களை எப்போது அச்சத்தில் வைத்திருந்தமையினால் புலிகளுக்கு இந்தப் பெயரை தமிழர்கள் வழங்கினார்கள். புலிகளால் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் அதனூடாகப் பெறப்பட்ட வெற்றிகளும் யாழ்ப்பாணத்து தமிழர்களால் விரும்பி வரவேற்கப்பட்டன.

தம்மை அடக்கி, ஆக்கிரமித்து நின்ற சிங்கள இராணுவத்தை திருப்பியடித்து, அகற்றிவிட வீரன் ஒருவனை தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பினை பிரபாகரன் பூர்த்தி செய்து வைத்தார்.

புலிகளைத் தவிர வேறு சில அமைப்புக்களும் தமிழர்களால் பேசப்பட்டன. அவ்வாறான அமைப்பொன்றுதான் டெலோ. அதற்கு அவர்கள் சூட்டிய பெயர் "தூறள் நின்றுபோச்சு" எப்போதாவது ஒரு தாக்குதலைச் செய்துவிட்டு நீண்டகாலம் ஓய்வெடுக்கும் காரணத்தினால் அவர்களை அப்படி ஏளனமாக அவர்கள் அழைத்தார்கள்.

புளொட் அமைப்பிற்கு "விடியும் வரை காத்திரு" என்று அவர்கள் பெயரிட்டார்கள். மார்க்சிய சிந்தனைகளால் உந்தப்பட்டு, சிங்கள இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள் புரட்சி வெடிக்கும்வரை அவர்கள் காத்திருந்தமையினால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள்.  .பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு அவர்கள் இட்ட பெயர் "பயணங்கள் முடிவதில்லை". தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரே பாணியிலேயே தமது தாக்குதல்களை மேற்கொள்வதும், அவை தோல்வியில் முடிவடைவதும் அவர்கள் எப்போதாவது நடத்தும் தாக்குதல்களில் நடைபெற்று வந்தமையினால் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். தமிழர் தாயகத்திற்கு வெளியே, கொழும்பு போன்ற இடங்களில் குண்டுத் தாக்குதல்களில் ஈரோஸ் அமைப்பு ஈடுபட்டு வந்தமையினால் அவர்களுக்கு "தூரத்து இடிமுழக்கம்" என்று பெயர் வழங்கப்பட்டது.

தமது விருப்பத்தின்பால் போராளி அமைப்புக்களைப் பெயரிட்டு தமிழ் மக்கள் அழைத்தார்கள். பிரபாகரனைத் தமது வீரனாகவும், அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை தமது பிரியமான போராளிகளாகவும் அவர்கள் கண்டுகொண்டனர். தமது திட்டமிடல், தீர்மானம் எடுக்கும் ஆற்றல், தாக்குதல்களின் வீரியம் என்பவற்றினால் பிரபாகரனும் புலிகளும் மக்களின் மனங்களின்  ஆளமாக பதிந்துபோனார்கள்.

 அனீட்டா பிரபாகரனை பலமுறை பேட்டி கண்டிருந்தார். அப்படிச் செய்த ஒரேயொரு பத்திரிக்கையாளரும் அவர்தான். வேறு எவருக்கும் ஒருமுறைக்கு மேல் செவ்விகளை பிரபாகரன் வழங்கியதில்லை. 90 களின் இறுதிப் பகுதிகளில் பிரபாகரனைப் பேட்டிகண்டபோது, "இந்த இருபது வருட கால கெரில்லாப் போராட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட ஒற்றை விடயம் எது?" என்று கேட்டபோது "துணிபவனே வெற்றியடைகிறான்" என்று அவர் பதிலளித்தார்.

அவர் வெற்றி பெற்று வருகிறார் என்பதற்கான அடையாளங்கள் 1985 ஆம் ஆண்டிலேயே தென்படத் தொடங்கியிருந்தன. அந்த வருடத்திலேயே தமிழர்கள் தமது அபிலாஷைகள், தேசியம், தாயகம் , சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்கான வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தார்கள். 1985 இல், புலிகளின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் சிங்கள இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள் தள்ளி,  முடக்கி வைத்துக்கொண்டனர் !

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புலிகளின் அச்சுவேலி முகாம் சுற்றிவளைப்பும் பண்டிதரின் வீரமரணமும்

large.Pandithar.jpg.4447473ad6bb81da9f8799913adf3c09.jpg

1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் நாள் இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது ஜெயார் தனக்கான சந்தர்ப்பம் ஒன்று கனிந்து வந்திருப்பதாக எண்ணினார். ஆகவேதான் அன்றுவரை தான் நடத்துவதாகப் பாசாங்கு செய்து வந்த சர்வ கட்சி மாநாட்டினை முற்றாக மூட்டை கட்டி வைத்துவிட்டு தனது ஒற்றை நோக்கமான இராணுவ ரீதியில் தமிழர்களின் அபிலாஷைகளை அழித்தலை ஆரம்பித்தார்.

மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஜெயாரினால் திடீரென்று கலைத்துப் போடப்பட்டது. தனது இராணுவ அதிகாரிகளுடன் பேசிய ஜெயார், உடனடியாக இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு  பணித்தார்.

1985 ஆம் ஆண்டு தை மாதம் 9 ஆம் திகதி இராணுவம் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது. அச்சுவேலி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். காலை புலரும் வேளைக்குச் சற்று முன்னர் அப்பகுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர், முகாமை சுற்றிவளைக்கத் தொடங்கினர்.புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி பண்டிதர், அவரது துணைத் தளபதி கிட்டு மற்றும் இன்னும் சில பிரதான போராளிகள் இம்முகாமில் இருந்தபோதிலும் இராணுவத்தின் ஊடுருவல் குறித்து அறிந்திருக்கவில்லை.

லலித் அதுலத் முதலியின் வழிநடத்துதலிலேயே இத்தாக்குதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. புலிகளுடன் இருந்து விட்டு பின்னர் இராணுவத்தினரின் உளவாளியாகச் செயற்பட்ட ஒரு நபரை கொழும்பு ஸ்லேவ் ஐலண்ட் பகுதியில் உள்ள‌ தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 7 ஆவது மாடியில் அமைந்திருந்த தனது அலுவலகத்தில் சந்தித்தார் லலித். இந்தச் சந்திப்பிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து இந்த உளவாளி விமானத்தில் கொண்டுவரப்பட்டிருந்தார். புலிகளின் முகாம்கள், தலைவர்களின் மறைவிடங்கள், ஆயுதச் சேமிப்புக் கிடங்குகள் குறித்த விடயங்களுடன் நன்கு பரீட்சயமான இந்த முன்னாளப் போராளி அச்சுவேலி முகாம் குறித்த தகவல்களை லலித்திடம் கூறினார். முகாமின் அமைவிடம், பதுங்கு குழிகள், ஆயுதங்கள், அம்முகாமிற்கு அடிக்கடி வந்துபோகும் தளபதிகள் போன்ற விடயங்களை உளவாளியூடாக இராணுவத்தினர் அறிந்துகொண்டனர். இம்முகாமில் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் அடங்கும் என்றும் லலித்திடம் கூறப்பட்டது. .கே - 47 துப்பாக்கிகள், கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள், ரைபிள்கள், பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன அங்கு சேமிக்கப்பட்டிருந்தன.

large.KidduAnnaa.jpg.d29b409e4a0639d81148e8236eac8a44.jpg

கிட்டு

இராணுவத்தினர் முன்னெடுத்த இத்தாக்குதலின் போது இரு முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய தேவை பண்டிதருக்கு இருந்தது. முகாமிற்கு மிக அருகில் வாழ்ந்துவந்த மூதாட்டி ஒருவர் மற்றும் அவரது இரு புதல்விகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது. இரண்டாவது அங்கிருந்த ஆயுதத் தொகுதியில் ஒரு பகுதியையாவது பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்வது. இப்பணிகளைச் செய்யும் பொறுப்பினை கிட்டுவிடம் கையளித்தார் அவர். இராணுவத்தினரின் தாக்குதலைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் பண்டிதரும் இன்னும் சில முக்கிய போராளிகளும் முகாமின் ஒரு திசையிலிருந்து இராணுவம் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பண்டிதரும் ஏனைய போராளிகளும் தாக்குதல் நடத்திய திசை நோக்கி இராணுவத்தினர் தமது தாக்குதலை ஆரம்பிக்க, கிடைத்த இடைவெளியினைச் சாதகமாகப் பாவித்த கிட்டு அருகிலிருந்த பெண்கள் மூவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதோடு, ஆயுதங்களில் பெரும்பாலானவற்றையும் வெளியே எடுத்துச் சென்றார். அச்சண்டையில் பண்டிதரும் இன்னும் ஐந்து போராளிகளும் வீரச்சாவை எய்தினர். பண்டிதருடன் இச்சண்டையில் வீரச்சாவடைந்த மற்றைய போராளிகளின் விபரங்கள் : தில்லைச் சந்திரன் (நேரு), நவரட்ணம் (சாமி), தவராஜா (தவம்), சிவேந்திரன் (சிவா) மற்றும் பிரதாபன் (ரவி).

பண்டிதர் தனது சிறுபராயத்திலிருந்தே பிரபாகரனின் நெருங்கிய தோழராக இருந்தவர். வல்வெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதரின் இயற்பெயர் ரவீந்திரன் ஆகும். தமிழர்களின் கண்ணியம் குறித்து அவர் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்ததனால் போராளிகளினால் "பண்டிதர்" என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். ஆங்கிலத்தில் சிறிதளவும் பரீட்சயம் அற்ற பண்டிதர் தனது பேச்சிலும், எழுத்திலும் ஆங்கில வார்த்தைகளைப் பாவிப்பதை முற்றாகத் தவிர்த்து வந்தார். இதனால் பண்டிதர் எனும் செல்லப்பெயரே அவருக்கு இயக்கத்தில் வழங்க‌ப்படலாயிற்று. பண்டிதர், சங்கர் மற்றும் ரகு ஆகிய மூவருமே பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளிகளாக அன்று இருந்தனர். சங்கரும், ரகுவும் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக பணிபுரிய, பண்டிதரோ அரசியற்செயற்ப்பாட்டாளராக பணியாற்றி வந்தார். ஆஸ்த்துமா நோயினால் பெருமளவு அவதிப்பட்டு வந்த பண்டிதர் ஒரு சிறந்த சமையற்காரர். 1981 ஆம் ஆண்டுகளில் வலசரவாக்கம் பகுதியில் அன்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த வீட்டில் சமையல் வேலைகளை பண்டிதரே கவனித்துக்கொண்டார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதும் அடேல், "மண்ணெண்ணெய் குக்கரில் பண்டிதர் வேர்த்து விறுவிறுக்கச் சமையல் செய்வார்" என்று எழுதுகிறார். பண்டிதரின் கட்டளைக்கேற்ப ரகுவும், சங்கரும் காய்கறிகளை நேர்த்தியாக‌ வெட்டிக் கொடுப்பார்கள் என்றும், அவர்கள் மூவருக்கும் இடையே பண்டிதரே சிறந்த சமையற்காரர் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அவர் கூறுகிறார். 

தமது இராணுவ நடவடிக்கை வெற்றியளித்ததையிட்டு லலித் அதுலத் முதலியும், இராணுவ உயர் அதிகாரிகளும் பெருத்த உற்சாகத்தில் காணப்பட்டனர். மறுநாளான தை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய லலித், அச்சுவேலியில் அமைந்திருந்த புலிகளின் தலைமைச் செயலகத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து அழித்துவிட்டதாக பெருமையுடன் பேசினார். புலிகளுக்கெதிரான போரில் இது ஒரு முக்கிய திருப்பம் என்று கூறிய லலித், இம்முகாமை அழிக்க முன்னாள்ப் போராளி ஒருவரே தகவல் தந்து உதவினார் என்பதையும் சொல்லத் தவறவில்லை.

"நான் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டபின்னர் இராணுவத்தினர் நடத்திய மிகப்பெரும் தாக்குதல் இதுதான்" என்று லலித் கூறினார்.

தீவிரவாதிகளுக்கெதிரான புதிய பாணி ஒன்றினைக் கைக்கொண்டே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக லலித் கூறினார். பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்கள் தமக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட வழங்கப்படும் தகவல் ஒன்றிற்கு தலா 25000 ரூபாய்களை தான் வழங்கவிருப்பதாகவும் கூறினார்.

"இராணுவத்தினரின் முன்னகர்வு மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. அப்பகுதியின் புலிகளின் தளபதி உட்பட பல முக்கிய பயங்கரவாதிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மீதிப்பேர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டனர். பெருமளவு ஆயுதங்களும் அவர்களின் நிலக்கீழ் பதுங்குழியில் இருந்து கைப்பற்றப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார்.

"தை மாதம் 14 ஆம் திகதி ஒருதலைப் பட்சமாக சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யக் காத்திருந்த பிரிவினைவாதப் பயங்கரவாதிகளுக்கு இம்முகாம் அழிக்கப்பட்டது பாரிய பின்னடைவினைக் கொடுத்திருக்கிறது" என்றும் அவர் மேலும் கூறினார். 

ஆனால் லலித் குறிப்பிட்ட ஒருதலைப்பட்சமான சுதந்திர ஈழப் பிரகடனத்தைச் செய்யப்போவதாக அறிவித்தது அதிகம் அறியப்படாத சிறிய அமைப்பான பாலசுப்பிரமணியம் என்பவர் தலைமையில் நடத்தப்பட்டு வந்த ஈழப் புரட்சிகர கம்மியூனிஸ்ட் கட்சி என்கிற அமைப்பாகும். இக்கட்சியும் தென்னிலங்கையின் ரோகண‌ விஜேவீர தலைமையில் செயற்பட்டு வந்த மக்கள் விடுதலை முன்னணியும் மிக நெருக்கமாக இயங்கி வந்தன. கம்மியூனிஸ்ட் கட்சியின் சண்முகதாசன் பிரிவு எனும் அமைப்பில் இயங்கிய ரோகண விஜேவீர, பின்னர் அதிலிருந்து விலகி மக்கள் விடுதலை முன்னணியினை ஆரம்பித்தார். அதன்போது பாலசுப்ரமணியமும் அவ்வியக்கத்தில் இணைந்துகொண்டார். 

புலிகளின் முகாம் மீதான இராணுவத்தினரின் வெற்றிகரமான தாக்குதல் தமிழ் மக்களை வருத்தப்படச் செய்திருந்தது. தமிழ் மக்களின் மனநிலையினைப் புரிந்துகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சிவசிதம்பரம் பேசும்போது, "தமிழர்களுக்கு இனிமேல் இந்தியாதான் பாதுகாப்புத் தர‌வேண்டும்" என்று கோரினார். 

அச்சுவேலித் தாக்குதலின் வெற்றியினால் களிப்படைந்திருந்த லலித், நாட்டின் 25 மாவட்டங்களினதும் அரச அதிபர்களை வரவழைத்து மாநாடு ஒன்றினை நடத்தினார். தேசிய பாதுகாப்புச் சபை என்று ஒரு அமைப்பினை தான் உருவாக்குவதாக அறிவித்த லலித், இனிமேல் ஒவ்வொரு மாவட்ட அரசாங்க அதிபரும் தமது வழமையான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இராணுவத்தினருடன் இணைந்து தேசியப் பாதுகாப்பில் பங்கெடுப்பதும் அவசியம் என்று அறிவித்தார். மேலும், அரசாங்க அதிபர்கள் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் தேசியப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அரச அதிபர்கள் முன்னிலையில் பேசிய லலித், அச்சுவேலி முகாமிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை இந்தியாவினால் வழங்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் தம்ழிப் பிரிவினைவாதப் போராளிகளுக்கு இந்தியா உதவிவருவது வெட்ட வெளிச்சமாகிறது என்றும் கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த தகவல்களின்படி போராளிகள் ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ஈடுபட முயற்சித்து வருகிறார்கள் என்றும் அரச அதிபர்களை எச்சரித்தார். 

ஆனால், அச்சுவேலிச் சண்டையின் பின்னடைவினால் போராளிகள் சோர்ந்துவிடவில்லை. அவர்கள் பாரிய தாக்குதல்களுக்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். 1985 ஆம் ஆண்டு டெலோ அமைப்பு மிகப்பெரும் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டது. அனறிரவு, தை 19 ஆம் திகதி கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதத்தை டெலோ போராளிகள் முருகண்டியில் வைத்துத் தாக்கினர். இக்குண்டுவெடிப்புத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 50 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் 20 பேரும், காயமடைந்தவர்களில் 25 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து விடுமுறைக்காகக் கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த இராணுவத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது. இராணுவத்தினர் பயணம் செய்த பெட்டியின் கழிவறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

குண்டுவெடிப்பினால் குடைசாய்ந்த புகையிரதப் பெட்டிகளின் மீது டெலோ போராளிகள் கிர்ணேட்டுக்களை எறிந்தும், துப்பாக்கிகளினாலும் தாக்குதல் நடத்தினார்கள். புகையிரதத் தாக்குதலில் மாட்டிக்கொண்ட இராணுவத்தினரின் உதவிக்கென்று அருகிலிருந்த மாங்குளம் முகாமிலிருந்து அவசரமாகக் கிளம்பி வந்த இராணுவ அணிமீதும் டெலோ போராளிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து முருகண்டி நோக்கி முன்னேற முயன்ற பொலீஸ் அணியும் போராளிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

புகையிரதத் தாக்குதலினால் கொதிப்படைந்த அரசாங்கம் வடக்குக் கிழக்கிலும், கொழும்பிலும் சந்தேகத்திற்கிடமான தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்யுமாறு இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொழும்பில் மட்டும் 4,000 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஒருநாளில் மட்டும் 200 புலிச் சந்தேக நபர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக பொலீஸார் அறிவித்தனர். இச்சுற்றிவளைப்பு மற்றும் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் பொலீஸாருடன் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.தை 25 ஆம் திகதி நான்கு தமிழ் இளைஞர்களை மட்டக்களப்பில் பொலீஸார் சுட்டுக் கொன்றதுடன், மாசி 4 ஆம் திகதி மேலும் 6 இளைஞர்கள் திருகோணமலையில் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அச்சுவேலிச் சண்டையின் வெற்றியும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமையும் பயங்கரவாதம் அழிக்கப்படவேண்டும் என்று ஜெயாரைப் பேச வைத்தது. மாசி 4 ஆம் திகதி சுதந்திர தினமன்று நாட்டு மக்களுக்குப் பேசிய ஜெயார், "பயங்கரவாதிகளை நாம் முற்றாக அழித்து அனைத்து இன மக்களும் சமாதானமாகவும், சமமாகவும், ஒற்றுமையாகவும் வாழும் நிலையினை உருவாக்குவோம்" என்று பறைசாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியற் பிரிவு, இந்தியா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகச் சாடியது. அச்சுவேலி முகாமில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், இராணுவத்தினரின் மீதான தாக்குதல்களின்போது போராளிகள் பாவிக்கும் ஆயுதங்களும் இந்தியா போராளிகளின் நடவடிக்கைகளின் பின்னால் நிற்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் சாடியிருந்தது.

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல்

large.Kokkilaymap.jpg.8164a7fd287747fc76fe096c2ef51ef0.jpg

அச்சுவேலியில் அமைந்திருந்த தமது முகாமை இராணுவத்தினர் தாக்கியமைக்குப் பழிவாங்கலாக இராணுவத்தினரின் நன்கு பலப்படுத்தப்பட்டிருந்த முகாம் ஒன்றினைத் தாக்க புலிகள் முடிவெடுத்தனர். மாசி மாதம் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது இராணுவச் சீருடையில் வந்த சுமார் 100 புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைக்கப்பட்டுவந்த சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்கென்று அரசாங்கத்தால் இவ்வருட ஆரம்பத்திலேயே இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. காலை புலரும் முன்னர் மாத்தையா தலைமையில் முகாமைச் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகள் சிறுது சிறிதாக முகாமை அண்மித்து நிலையெடுத்துக்கொண்டனர். முகாமின் காப்பரண் ஒன்றில் கடமையிலிருந்த இராணுவத்தினன் ஒருவன் முகாமிற்கு அருகில் நிலையெடுத்திருந்த புலிகளைக் கண்டவுடன் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். தமது இருப்புத் தெரியவந்ததையடுத்து வேறு வழியின்றி புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள், இயந்திரத் துப்பாக்கிகள் கொண்டு புலிகள் தாக்கினார்கள். தமது இராணுவத்தினன் ஒருவனின் முயற்சியால் சுதாரித்துக்கொண்ட முகாமினுள் இருந்த இராணுவத்தினர் பாதுகாப்பாக நிலையெடுத்து திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். சுமார் 5 மணிநேரம் கடுமையாக நடைபெற்ற சண்டையினையடுத்து புலிகள் பின்வாங்க முடிவெடுத்தார்கள். இச்சண்டையில் புலிகளில் 14 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும் தம்மில் 4 இராணுவத்தினர் பலியானதாகவும் அரசாங்கம் அறிவித்தது. சென்னையில் இயங்கிவந்த புலிகளின் அரசியற் பணிமனை வெளியிட்ட அறிக்கையில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 16 போராளிகள் வீரமரணம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போரில் எதிரிகளின் இழப்பினை அதிகமாகக் காட்டுவதும், தம்பக்க இழப்புக்களை குறைத்துக் காட்டுவதும் காலம் காலமாக போரில் ஈடுபடுபவர்கள் செய்துவரும் ஒரு செயல். இச்செயலுக்கு இலங்கை இராணுவமோ அல்லது தமிழ்ப் போராளிகளோ விதிவிலக்கல்ல. போரில் கொல்லப்படும் தமது போராளிகளின் விபரங்களை அப்படியே வெளியிடுவது என்பது புலிகளின் கொள்கை. கொல்லப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் என்று அனைத்து விடயங்களும் புலிகளால் காலக்கிரமமாக வெளியிடப்பட்டே வந்தன. ஆனால், இராணுவத்தின் இழப்புக்களை அதிகரித்துக் காட்டும் நடைமுறை புலிகளுக்கும் இருந்தது. ஆனால், இராணுவமோ சர்வதேச நடைமுறையான எதிரியின் இழப்புக்களைப் பன்மடங்கு அதிகரித்தும், தன்பக்க இழப்புக்களை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டும் செய்தி வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. புலிகளால் 106 இராணுவத்தினர் கொக்கிளாயில் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தி தமிழ் மக்களை உற்சாகப்படுத்தியிருந்தது.

கொக்கிளாயில் நன்கு பலப்படுத்தப்பட்ட இராணுவ முகாம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. உடனடியாக தேசியப் பாதுகாப்புச் சபையினைக் கூட்டிய அரசாங்கம், முப்படைகளின் தளபதிகள், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜயவர்த்தன ஆகியோருடன் கொக்கிளாய் இராணுவ முகாம் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தது.

ஒவ்வொரு திங்கள் காலையிலும் தேசிய பாதுகாப்புச் சபை கூடுவது வழமை. ஜெயாரே அதற்குத் தலைமை தாங்குவார். இச்சபையின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித், ஜனாதிபதியின் ஆலோசகர் ரவி, முப்படைகளின் தளபதிகள், பொலீஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அங்கம் வகித்தனர். 

கொல்லப்பட்ட புலிகளின் உடல்களையும் அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் ரவி ஜயவர்த்தனவும், முப்படைகளின் தளபதிகளும் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். கொல்லப்பட்ட போராளிகள் இராணுவச் சீருடையில் காணப்பட்டதோடு அவர்களிடம் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், மருந்துவகைகள் என்பன காணப்பட்டன. இரவு நேரத்தில் பார்க்கும் உபகரணங்கள், ஏ.கே - 47 மற்றும் எம் - 16 ரக நவீன துப்பாக்கிகளும், கிர்ணேட்டுக்களும் அவர்களிடம் இருந்தன. கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகளை பின்வாங்கிய புலிகள் தம்முடன் எடுத்துச் சென்றிருந்தனர்.

பாதுகாப்புச் சபைக்கு இத்தாக்குதல் தொடர்பாக ரவி ஜயவர்த்தன வழங்கிய அறிக்கையில் கொக்கிளாய்த் தாக்குதலின் மூலம் இனப்பிரச்சினை முழு அளவிலான போராக உருமாறியிருப்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டிருந்தார். நவீன ஆயுதங்களுடன் போரிடும் எதிரியை எதிர்கொள்வதற்கு இராணுவமும் தயார்ப்படுத்தப்படுவது அவசியம் என்று அவர் கூறியிருந்தார்.

சண் பத்திரிக்கை இத்தாக்குதல் குறித்து பின்வருமாறு எழுதியது,

இது இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல. இராணுவத்தினரின் மீது கிர்ணேட்டுக்கள், மோட்டார் எறிகணைகள், ரொக்கெட் உந்துகணைகள், தாக்குதல்த் துப்பாக்கிகள் கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். பாதுகாப்புப் படைகளுடன் நேருக்கு நேராகப் பயங்கரவாதிகள் மோதிக்கொண்டது இதுவே முதல்முறையாகும். இரு நாட்களுக்கு முன்னரும் காரைநகர் கடற்படை முகாம் மீதும், வல்வெட்டித்துறை, குருநகர், நெல்லியடி மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த இராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்போது முதன்முறையாக ஒரு இராணுவ முகாம் மீது நேரடியான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

ஆனால் சண் பத்திரிக்கை குறிப்பிட்ட ஏனைய முகாம்கள் மீதான தாக்குதல் என்பது தூரவிருந்து குறிப்பார்துச் சுடும் தாக்குதல்கள். குருநகர் மீதான தாக்குதலை நடத்தியவர் கிட்டு. பலாலிக்கும் குருநகருக்கும் இடையே விமானப்படை உலங்குவானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபடுவதுண்டு. குருநகர் முகாமின் உலங்கு வானூர்தி தரையிறங்கும் பகுதியினை அருகிலிருக்கும் இரண்டுமாடிக் கட்டடம் ஒன்றில் இருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். ஒருநாள் குருநகரில் தரையிறங்கிக்கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது அக்கட்டடத்திலிருந்து கிர்ணேட் உந்துகணைச் செலுத்தியினால் கிட்டு சுட்டார். ஆனால், இலக்குத் தவறிவிட்டது. உலங்கு வானூர்தியிலிருந்து சில மீட்டர்கள் தூறத்தில் அது வீழ்ந்து வெடித்தது. விமானப்படையினர் மீது புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல் அது.

கொக்கிளாய் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின் மூலம் தமிழ் ஆயுதப் போராட்டம் புதிய நிலை ஒன்றினை அடைந்திருப்பதை ஜெயவர்த்தன உணர்ந்துகொண்டார். மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயார் இதுகுறித்தும் பேசினார். இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடும் செயற்பாட்டில் இதுவரை ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் தற்போது நன்கு பலப்படுத்தப்பட்ட இராணுவ முகாம் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். தேவையானளவு பயிற்சியினையும், ஆயுதங்களை அவர்கள் பெற்றுக்கொண்டபின்னர் இறுதியானதும், தீர்க்கமானதுமான தாக்குதல் ஒன்றினை நடத்துவதன் மூலம் தமது இலட்சியத்தை அவர்கள் அடைந்துவிடுவார்கள் என்று அவர் எச்சரித்தார். மேலும் இலங்கையின் இதயப்பகுதி என்று தான் அழைத்த பகுதிகள் மீதும் அவர்கள் தாக்கக் கூடும் என்று எச்சரித்த ஜெயார், இவை நடக்கும் கால எல்லை குறித்து எதுவும் கூறவில்லை. அவ்வருடம் புதுவருட நாளுக்கு முன்னர் போராளிகள் தமது இறுதித் தாக்குதலை நடத்தலாம் என்று அதுலத் முதலி எதிர்வுகூறினார்.

தமிழர் தாயகத்தினை சிறுகச் சிறுக அபகரிக்க தான் ஏற்படுத்திவந்த எல்லையோரச் சிங்களக் கிராமங்களை நியாயபடுத்தவும், தனது ஊர்காவல்ப் படைத் திட்டத்தின் மூலம் இக் குடியேற்றங்களை இராணுவமயப்படுத்தும் தனது நோக்கத்தினை முடுக்கிவிடவுமே போராளிகள் இறுதித் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறார்கள் எனும் செய்தியை ஜெயார் பரப்பத் தொடங்கியிருந்தார். மாசிமாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது நாட்டின் எப்பகுதியையும் ஒரு குறிப்பிட்ட இனம் தனது பூர்வீகத் தாயகம் எனும் கோருவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக குடியேற்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார் .

1985 ஆம் ஆண்டு மன்னார் முதல் முல்லைத்தீவு வரையான வன்னியின் உலர்வலயப் பகுதிகளில் தெற்கிலிருந்து 30,000 சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் தனது திட்டத்தினை மனதில் வைத்தே இதனை அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு வன்னியில் குடியேற்றப்படும் ஒவ்வொரு சிங்களக் குடும்பத்திற்கும் தலா அரை ஏக்கர் நிலம் வழங்கப்படுவதோடு வீடு கட்டுவதற்கான பணமும் அரசால் வழங்கப்பட ஏற்பாடாகியிருந்தது. வன்னியில் இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சிங்களக் குடியேற்றத்தினதும் பாதுகாப்பிற்கென்று 25 இயந்திரத் துப்பாக்கிகளும் 200 ரைபிள்களும் இராணுவத்தால் வழங்கப்படவிருந்தன.

மேலும், மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்தும் பேசும்பொழுது "நாம் சிங்களவர்களை எல்லைகளில் குடியேற்றி, அதனை விஸ்த்தரிக்காவிட்டால், அவ்வெல்லை எம்மை நோக்கி நகரத் தொட‌ங்கும்" என்று தான் நடத்திவந்த குடியேற்றங்களை நியாயப்படுத்தினார்.

Far Eastern Economic Review எனும் பத்திரிகைக்குப் பேட்டியளித்த காமிணி திசாநாயக்க,சிங்களக் குடியேற்றங்கள் இராணுவமயப்படுத்தப்படுவது அவசியமானது என்று வாதிட்டார். இஸ்ரேலின் மேற்குக்கரைக் கொள்கையினை அடிப்படையாக வைத்தே தாம் சிங்களக் குடியேற்றங்களை இராணுவ மயப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

தமிழ் மக்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்கான ஒரே வழி அவர்கள் மீது பாரிய படுகொலைகளைப் புரிவதன் மூலம் அச்சப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைக் கைவிடப்பண்ணுதல் தான் என்று ஜெயவர்த்தனவின் அரசாங்கம் எண்ணியது. அத்திட்டத்தின்படி, கொக்கிளாய் முகாம் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கலாக, மாசி 15 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்நாள் தாக்குதலில் மட்டும் 52 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் "தமிழ்ப் பிரிவினைவாதிகள்" என்று லலித் அதுலத் முதலி அறிவித்தார். ஆனால், கொல்லப்பட்ட அனைவரும் அப்பகுதியில் அகதிகள் முகாமிலிருந்து இராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களே என்று உள்ளூர் வாசிகள் உறுதிப்படுத்தினர்.

தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் திட்டமிட்ட படுகொலைகளும், தமிழர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து அவர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டமையும் நிலைமையினை மிகவும் மோசமாக்கியிருந்தது. இவ்வாறு விரட்டப்பட்ட மக்களினால் தமிழர் தாயகம் கடுமையான இடப்பெயர்வுகளையும், தாயகத்திற்குள்ளேயே தமிழ்மக்கள் அகதிகளாகும் நிலைமையினையும் எதிர்கொண்டது. இதன் பக்கவிளைவாக பெருமளவு இளைஞர்கள் தமிழ்ப் போராளி அமைப்புக்களில் தம்மை இணைத்துக்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு இடப்பெயர்வினைச் சந்தித்த பெருமளவு குடும்பங்கள் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல, அக்குடும்பங்களின் இளைஞர் யுவதிகள் ஆயுத அமைப்புக்களில் இணைந்துகொண்டனர். தமிழர்கள் அகதிகளாகிவரும் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாக உருமாறத் தொடங்கியது.

இப்படுகொலைகளை எதிர்த்து அமிர்தலிங்கம் விமர்சனத்தில் ஈடுபட்டார். இந்தியா உடனடியாக இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார். "1970 முதல் 1971 வரையான காலப்பகுதியில் கிழக்கு வங்கத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஒத்த சூழ்நிலை இலங்கையின் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் நிலவுகிறது. தமிழ் மக்கள் மீதான இனக்கொலையினை நிறுத்துவதற்கு இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும்" என்று அவர் சென்னையிலிருந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பு (TESO) எனும் பெயரில் தமிழ்நாட்டில் இயங்கிவந்த அமைப்பின் தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருநாநிதி செயற்பட்டு வந்தார். முல்லைத்தீவில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகளை இவ்வமைப்பு அறிக்கை ஒன்றின்மூலம் கண்டித்திருந்தது. அமிர்தலிங்கத்தின் கோரிக்கையினை ஆதரித்து இந்திய இராணுவத் தலையீட்டினைக் கோரிய இவ்வறிக்கை, இந்தியா தமிழ்மக்கள் தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தது. மேலும், இப்படுகொலைகளையடுத்து பல படகுகளில் ஈழத் தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் இவ்வறிக்கை கூறியது.

 large.VEERAMANI.jpg.c740a5a69029f4792d71a6550e6f3990.jpg

 வீரமணி ‍- திராவிடர் கழகம்

கருநாநிதியினால் அரசியல் இலாபம் கருதி உருவாக்கப்பட்ட டெஸோ அமைப்பு நெடுநாள் நீடித்து நிற்கவில்லை. இவ்வமைப்பில் திராவிடர் கழகத்தின் வீரமணி மற்றும் நெடுமாறன் ஆகியோர் ஒருகாலத்தில் இணைந்து செயற்பட்டு வந்தனர். இவ்வமைப்பு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

1. தமிழர்களைப் பாதுகாப்பதற்கு இந்தியா இராணுவத்தை அனுப்ப வேண்டும்.

2. இலங்கையுடனான சகல இராஜதந்திரத் தொடர்புகளையும் இந்தியா இரத்துச் செய்ய வேண்டும்.

3. தமிழ் ஈழம் பிறப்பெடுக்க இந்தியா உதவிட வேண்டும்

 ஆகியவையே அம்மூன்று கோரிக்கைகளுமாகும்.

இலங்கையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கருநாநிதி போராட்டங்களை ஆரம்பித்தார். இப்போராட்டங்களை முடக்கிவிட எத்தனித்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , கருநாநிதியையும் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யுமாறு பொலீஸாருக்கு உத்தரவிட்டார். கருநாநிதியும் அவரது 8000 தொண்டர்களும் சிறையிலடைக்கப்பட்டார்கள். இதனையடுத்து ஈழத்தமிழர் மீது எம்.ஜி.ஆர் இற்கு அக்கறையில்லை என்று திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

 தான் எதிர்பார்த்த இலக்குகளை அடையாமலேயே டெஸோ அமைப்பு கலைந்து போனது. கருநாநிதி டெலோ அமைப்பினை ஆதரிக்க, வீரமணியும், நெடுமாறனும் புலிகளை ஆதரித்து வந்தனர். டெலோ அமைப்பைத் தவிர அனைத்து தமிழ் ஆயுத அமைப்புக்களும் டெஸோவிடமிருந்து தம்மை விலத்தியே வைத்திருந்தன.

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
    • பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி. இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? மெய்யழகன் படத்தின் கதை என்ன? '96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார். அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின? இதுதான் இப்படத்தின் கதை.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT ‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’ இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன. தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது. “படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி? இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது. “படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம். அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது. மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது. இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது. படத்தின் மிகப்பெரிய குறை இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அது, இப்படத்தின் நீளம். சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள். இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது. அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.   பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA சொல்ல வந்ததை விட்டுவிட்டு… படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது. இன்னொரு அன்பே சிவம்? இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம். கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/cwyv6q7yg2eo
    • நல்ல ஒரு காணொளி. இணைப்பிற்கு நன்றி சுவியர். 👍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.