Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி - காங்கேசன்துறை மீது புலிகள் எறிகணைத் தாக்குதல்

Featured Replies

பலாலி காங்கேசன்துறை படைத்தளங்கள் மீது புலிகள் கடும் எறிகணை வீச்சு

[ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 21, 2007 - 06:06 AM - GMT ]

யாழ். குடாவில் உள்ள படையினரின் மூலத்தளங்களான பலாலி மற்றும் காங்கேசன்துறைப் பகுதிகளில் உள்ள படைத்தளங்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று காலை 9.30 மணிமுதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதலை தாம் நடத்துவதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை

ஈழத்தமிழ்

http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி- காங்கேசன்துறை படைத்தளங்களை நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சு

யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கப் படையினரின் பலாலி மற்றும் காங்கேசன்துறை படைத்தளப் பகுதிகளை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்குப்பின்னர் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதனை சிறிலங்காப் படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

-புதினம்

  • தொடங்கியவர்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்தில் வெளியான செய்தி

LTTE terrorists Fire Artillery at - Palaly and KKS

Defence sources from Jaffna say the LTTE terrorists have lunched an artillery attack targeting Palaly and Kankasanthurai areas in the Jaffna peninsula short while ago(9.20a.m).

The sources further say that few artillery rounds have fallen and the security forces have undertaken retaliatory attacks. Presently the situation has been taken under control by the security forces.

The sources further added that no casualties were caused to troops due to the LTTE attack.

  • கருத்துக்கள உறவுகள்

2 ஆம் இணைப்பு) பலாலி- காங்கேசன்துறை படைத்தளங்களை நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சு

[செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 10:39 ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கப் படையினரின் காங்கேசன்துறை, மயிலிட்டி மற்றும் பலாலி படைத்தளப் பகுதிகளை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஏவிய ஆட்டிலெறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்குப்பின்னர் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய 130 மில்லி மீற்றர் ரக 13 எறிகணைகளே வீழ்ந்து வெடித்துள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

20070821001wp7.jpg

இத்தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் படையினர் தமது தரப்பில் சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எறிகணைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தரப்பு தகவல்களை விடுதலைப் புலிகள் வெளியிடவுள்ளதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

puthinam

Edited by கறுப்பி

பலாலி வானூர்த்தி சேவைகள் இடை நிறுத்தம்

செவ்வாய் 21-08-2007 19:59 மணி தமிழீழம் [மகான்]

பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி போன்ற பகுதிகள் நோக்கி விடுதலைப் புலிகள் நடாத்திய ஆட்லறி எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதானல் யாழ்குடா நாட்டுக்கான வானூர்த்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களால் யாழ் குடாநாட்டில் பேரூந்துப் போக்குவரத்துக்கள் இடம்பெறவில்லை. இதேபோன்று மருத்துவனை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் 3 ம் இணைப்பில் இருந்து

வானூர்தி சேவை இடைநிறுத்தம்

இதனிடையே குடாநாட்டுக்கான வானூர்திப் போக்குவரத்தை காலவரையறையின்றி இடைநிறுத்தி வைக்குமாறு குடாநாட்டுக்கு வானூர்தி போக்குவரத்துச் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இருந்து இந்த அறிவித்தல் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வானூர்திப் போக்குவரத்து நிறுவன அதிகாரி ஒருவர், மீண்டும் எப்போது சேவைகளை தொடங்குவது என்பது குறித்தும் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் இந்த அறிவிப்பால் கொழும்பில் இருந்து இன்று குடாநாட்டுக்குச் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதேபோல் குடாநாட்டில் இருந்து கொழும்பு செல்லவிருந்த பயணிகளும் கட்டுவனில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதி கிடைக்காத காரணத்தாலேயே வானூர்திப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று மற்றொரு வானூர்திச் சேவை நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

நாளை புதன்கிழமையும் பயணிகளை வரவேண்டாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வானூர்தி ஒடுபாதையில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று வானூர்திச் சேவை நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த போதும், அதனை பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.