Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

டிமார்போஸ் சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்;10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் - விண்வெளி அறிவியல் அதிசயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

டிமார்போஸ் சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்;10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் - விண்வெளி அறிவியல் அதிசயம்

  • நாதன் வில்லியம்ஸ்
  • பிபிசி நியூஸ்
5 அக்டோபர் 2022
 

புகைப்படம்

பட மூலாதாரம்,CTIO/NOIRLAB/SOAR/NSF/AURA/T KARETA, M KNIGHT

சில நாட்களுக்கு முன் விண்ணில் உள்ள சிறுகோள் ஒன்றின் மீது வேண்டுமென்றே நாசாவின் டார்ட் விண்கலம் மோதவைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதனால் தற்போது பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு சிதறல்கள் தடம் பதித்ததைக் காட்டும் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பெரிய பாறையின் பின் வால் நட்சத்திரம் போன்று புகை பரவுவதை சிலியில் உள்ள தொலைநோக்கியில் படம்பிடிக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றி அடைந்ததா என்பதையும் சிறுகோளின் பாதை மாறியமைக்கப்பட்டதா என்பதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

இந்த அபாரமான புகைப்படம் மோதலுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு சிலியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்டது.

இதற்காக, 'சோர்' எனப்படும் சதன் ஆஸ்ட்ரோ பிசிக்கல் ரிசர்ச் தொலைநோக்கியை அவர்கள் பயன்படுத்தினர்.

இதுமூலம் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். இந்த சிதறல்கள் சிறுகோளில் இருந்து முழுவதுமாக வெளியானபின் விண்வெளியில் மேலும் சில ஆயிரம் கிலோ மீட்டர் வரை இந்தத் தடத்தைப் பார்க்க முடியும்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"இந்த மோதலுக்கு பிறகு ஏற்படும் விளைவை நாம் தெளிவாகக் கண்காணிக்க இயல்வது மிக அருமையான ஒரு விஷயம்" என கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான டெட்டி கரேட்டா தெரிவித்தார்.

இந்தக் குப்பை அடுத்து வரக்கூடிய மாதங்களிலும் கண்காணிப்படும் என அமெரிக்க நேவல் ஆராய்ச்சி ஆய்வகத்தை சேர்ந்த மைகல் நைட் தெரிவித்தார்.

தங்கள் சோதனை முறையாகப் பலனளித்ததா என்பதை நாசா தலைமையிலான இந்த ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானிகள் உறுதியாக அறிய இன்னும் சில வாரங்கள் ஆகும். ஆனால் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக நாசாவின் கோள்கள் அறிவியல் பிரிவின் இயக்குநரான டாக்டர் லோரி கிளேஸ் தெரிவித்துள்ளார்.

 

சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம் - பல்லாயிரம் கிமீ தூரத்திற்கு உருவான குப்பைகள்

"மனிதகுலத்தின் ஒரு புதிய சகாப்தத்தை நாம் தொடங்குகிறோம். ஆபத்தான மற்றும் அபாயகரமான வகையில் ஏற்பட வாய்ப்புள்ள சிறுகோள் மோதலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் கொண்ட ஒரு சகாப்தத்தினுள் நாம் நுழைகிறோம். இதற்கு முன் இப்படி ஒரு திறன் இருந்ததில்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மோதலுக்கு பின் டிடிமோஸ் (Didymos) எனப்படும் மற்றொரு சிறுகோளைச் சுற்றி, டிமார்போஸ் சிறுகோள் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் டார்ட் திட்டத்தின் வெற்றியை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிப்பார்கள்.

பூமியில் உள்ள தொலைநோக்கி இரண்டு பாறைகளில் துல்லியமான அளவுகளை காட்டும். Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே DART ஆகும். இரட்டை சிறுகோள்களை திசைமாற்றும் பரிசோதனை என்பது இதன் பொருள்.

எதிர்காலத்தில் பூமியை நோக்கி சிறுகோள் ஏதேனும் வந்தால் இந்த தொழில்நுட்பம் அப்போது பயன்படுத்தப்படலாம்.

இது "ஓர் எளிமையான யோசனை" என விவரிக்கும் இந்த திட்டத்தின் தலைவர் ஆண்டி ரிவ்கின், நீங்கள் எந்த கோள் குறித்து கவலை கொள்கிறீர்களோ அதன்மீது விண்கலத்தை ஏவி விடவேண்டும் என்கிறார்.

"விண்கலத்தின் எடை மற்றும் வேகத்தை பயன்படுத்தி, நீங்கள் எந்தக் கோளின் மீது மோத விரும்புகிறீர்களோ அதன் சுற்று வட்டப் பாதையை மாற்ற முடியும். எனவே அதன் பூமியை நோக்கிய பயணம் மாறுபடும்," என விளக்குகிறார்.

https://www.bbc.com/tamil/science-63146833

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாசாவின் "டார்ட்" மிஷன் வெற்றி

By T. SARANYA

12 OCT, 2022 | 11:52 AM
image

கடந்த மாதம் விண்கல் மீது செயற்கைகோளை மோத வைத்து சோதனை நடத்திய ‘டார்ட்’ திட்டம் வெற்றி பெற்றதாக நாசா அறிவித்துள்ளது.

ஒரு சிறுகோள் பாதையை திசை திருப்புவதற்கான தனது சமீபத்திய முயற்சி வெற்றியடைந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறுகிறது.

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த விண்கற்களால் அன்றைய டைனோசர் இனம் அழிந்து, மலைகள் வெடித்து சிதறியதுடன், சுனாமி போன்ற பேரழிவுகளை பூமி சந்தித்தது.

தற்போது பூமிக்கு உடனடியாக எந்த விண்கல்லினாலும் ஆபத்து இல்லை என்றாலும், எதிா்காலத்தில் அத்தகைய அபாயம் ஏற்படும் நிலையில், அந்தக் கற்களிலிருந்து பூமியைக் காப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அத்தகைய முயற்சியை சோதனை முறையில் நாசா மேற்கொண்டது.

அதற்காக, விண்கல் ஒன்றின் மீது வேண்டுமென்றே மோதி அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதற்காக ‘டார்ட்’ என்ற செயற்கைக்கோள் ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ரொக்கெட் மூலம் கடந்த 2021 நவம்பர் மாதம் விண்ணில் ஏவியது நாசா.

இந்த ‘டார்ட்’ செயற்கைகோளானது பூமியிலிருந்து சுமார் 63 இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ள 2,500 அடி விட்டம் கொண்ட ‘டிடிமாஸ்’ என்ற விண்கல்லைச் சுற்றி வரும் ‘டிமாா்ஃபாஸ்’ என்ற குட்டி நிலவு விண்கல்லைக் குறிவைத்து செலுத்தப்பட்டது.

நாசாவின் திட்டத்தின்படி, ரொக்கெட்டிலிருந்து பிரிந்த ‘டார்ட்’ செயற்கைகோள் சரியான பாதையில் பயணம் செய்து டிமாா்ஃபாஸ் விண்கல்லின் மையப்பகுதியை செப். 27 அன்று துல்லியமாக தாக்கியது.

இந்நிலையில், 15 நாள்களுக்கு பிறகு செயற்கைகோள் தாக்கிய டிமாா்ஃபாஸ் விண்கல் தனது பாதையை மாற்றியுள்ளதால், நாசாவின் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது Dimorphos விண்கல்லை நாசா துல்லியமாக நகர்த்தி உள்ளது.  எதிர்பார்த்தபடியே Dimorphos விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை மாற்றம் அடைந்து உள்ளது. இதற்கு முன் Didymosஐ Dimorphos சுற்றிவர 11 மணி நேரம் 55 நிமிடம் எடுத்தது. 

தற்போது இது 11 மணி நேரம் 23 நிமிடங்களாக குறைந்து உள்ளது. இதன் மூலம் சுற்று வட்ட நேரத்தில் மொத்தம் 32 நிமிடங்கள் குறைந்து உள்ளன.

இனிவரும் காலங்களில் டார்ட் விண்கலம் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கல்லை விண்ணிலேயே துல்லியமாக தாக்கி அதன் பாதையை மாற்ற முடியும். விண்கல்லால் இனி பூமிக்கு ஆபத்தில்லை.

https://www.virakesari.lk/article/137490

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.