Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான, இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் – அலுவலகம் தேவையில்லை – அரசாங்கம்

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான, இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் சிறுநீரக கோளாறு காரணமாக 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளிக்கான திரவ மருந்திற்கும் அந்த மரணத்திற்கும் தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் 4 வகையான மருந்துகளால் காம்பியாவில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.

இதன் காரணமாக ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துப் பொருட்களையும் உடனடியாக காம்பியா சந்தையில் இருந்து அகற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய மருந்துகளின் அபாயம் குறித்து இலங்கைக்கு வெளிப்படுத்த முடியுமா என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ‘இது தொடர்பில் நாங்கள் உடனடியாக விசேட விசாரணைகளை மேற்கொண்டோம். இலங்கையில் அவ்வாறான மருந்து எதுவும் கொண்டுவரப்படவில்லை என்ற பதில் எமக்குக் கிடைத்தது. இனிமேல் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1303288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காம்பியாவில் இருமல் மருந்து ...

இந்த நான்கு,  இந்திய இருமல்  மருந்துகளை கடைகளில் கண்டால் வாங்க வேண்டாம்.
சிங்களவனும், இந்தியனும்... தமிழர் பகுதிக்கு அனுப்பினாலும் அனுப்புவார்கள். 
உசாராக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில் தயாரிக்கப்படும் 4 வகையான மருந்துகளால் காம்பியாவில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.

இது ஆரம்பம்! மெல்ல மெல்ல பரவி பொருளாதாரத்தை அழிக்கும் வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இருமல் மருந்தால் இறந்த குழந்தைகள்: நீதி கேட்கும் காம்பியா தாய்மார்கள்

  • உமர் வாலே
  • பிபிசிக்காக, காம்பியாவில் இருந்து
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தமது மகன் முசாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று மரியம் குயதே கூறுகிறார்.

பட மூலாதாரம்,OMAR WALLY

 

படக்குறிப்பு,

தமது மகன் முசாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று மரியம் குயதே கூறுகிறார்.

மரியம் குயதேவின் வீட்டில் உள்ள ஒரு சிவப்பு நிற மோட்டர்பைக் பொம்மை மீது தூசி படிந்துள்ளது. அது அவருடைய 20 மாதமான மகன் முசாவுக்காக அவர் வைத்திருந்தார். ஆனால், முசா செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டான்.

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 66 குழந்தைகளில் அவரும் ஒருவர். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த இருமல் மருந்துகள் காரணமாக சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

மரியத்தின் குடும்பத்தினர் யாரும் அந்த பொம்மையைத் தொடுவதில்லை. அது அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்துகிறது. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர், தமது மகனுக்கு என்ன நடந்தது என்று நினைக்கும் போது அழுகிறார்.

காம்பியாவின் மிகப்பெரிய நகரமான செரிகுந்தாவின் புறபுநகர் பகுதியில் உள்ளது அவரது வீடு. அவரது மகனுக்கு முதலில் சளி, காய்ச்சல் ஏற்பட்டது. மருந்துவரிடம் அழைத்து சென்ற பின்னர், மகனை குணப்படுத்த அவரது கணவர் ஒரு மருந்தை வாங்கினார்.

 
 

Presentational grey line

 

Presentational grey line

"நான் அவனுக்கு மருந்து கொடுத்தப்போது, காய்ச்சல் நின்று விட்டது. ஆனால், மற்றோரு பிரச்னை தொடங்கியது," என்று குயதே கூறினார்.

"என் மகன் சிறுநீர் கழிக்கவில்லை."

அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று, முசாவுக்கு ரத்தப் பரிசோதனைக்கு செய்தபோது, மலேரியா இல்லை என்று தெரிந்தது. அவனுக்கு வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலனளிக்கவில்லை. பின்னர் சிறுநீர் வடிகுழாய் பொருத்தப்பட்டது. ஆனால் அவன் சிறுநீர் கழிக்கவில்லை.

இறுதியாக, அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

"அவன் உடல்நிலை சரியாகவில்லை. அவன் இறந்துவிட்டான்."

காம்பியாவில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக, நான்கு இருமல் மருந்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பு உலகளாவிய எச்சரிக்கை விடுத்தது.

 

இருமல் மருந்து குடித்து உயிரிழந்த 66 குழந்தைகளில் முசாவும் ஒருவர்

பட மூலாதாரம்,KUYATEH FAMILY

 

படக்குறிப்பு,

இருமல் மருந்து குடித்து உயிரிழந்த 66 குழந்தைகளில் முசாவும் ஒருவர்

மெய்டன் ஃப்ரமாசிடிகல் என்ற இந்திய நிறுவனம் தயாரித்த நான்கு மருந்துகள் - ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன்(Promethazine Oral Solution) , கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Magrip N Cold Syrup) - அதன் பாதுகாப்பு தன்மை பற்றி உத்தரவாதம் அளிக்க தவறிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்குமற்று கேட்ட பிபிசி கோரிக்கைக்கு இதுவரை அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக காம்பியா மக்கள் மிகவும் கோபமாக இருக்கின்றனர்.

காம்பியா சுகாதார அமைச்சர் டாக்டர் அஹ்மது லாமின் சமதே ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், அந்த நாட்டிற்கு இந்த மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரி வருகின்றனர்.

"அறுபத்தி ஆறு பேர் உயிரிழந்திருப்பது என்பது மிகவும் பெரிய அளவிலான எண்ணிக்கை. ஆகவே எங்களுக்கு நீதி வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி குழந்தைகள்," என்று குயதே கூறினார்.

 

மரியம் சிசாவோ தமது மகளை தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு, அவரது ஊரில் உள்ள மருந்துவமனைக்கு மூன்று முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

பட மூலாதாரம்,OMAR WALLY

 

படக்குறிப்பு,

மரியம் சிசாவோ தமது மகளை தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு, அவரது ஊரில் உள்ள மருந்துவமனைக்கு மூன்று முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றொரு குழந்தை, ஐந்து மாத குழந்தையான ஆயிஷா. இருமல் மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு, தமது மகள் சிறுநீர் கழிக்கவில்லை என்று அவரது தாய் மரியம் சிசாவோ உணர்ந்தார்.

முதலில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது மகளின் சிறுநீர்ப்பையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து, இரண்டு நாட்களும் அவளை மருந்துவமனைக்கு அழைத்து சென்றார். பிறகு, பிரிகாமாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் பன்ஜுலில் உள்ள மருத்துவமனைக்கு ஆயிஷாவை அழைத்து சென்றார்.

ஆனால் அங்கு ஐந்து நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆயிஷா உயிரிழந்தாள்.

"எனது மகள் மிகவும் வலி அனுபவித்து உயிரிழந்தாள். ஒரு முறை மருந்துவர்கள் அவளுக்கு டிரிப்ஸ் ஏற்ற முயற்சி செய்த போது, அவளது கையில் நரம்புகளையே பார்க்க முடியவில்லை. அந்த மருந்துவமனையில் நானும் அதே வார்டில் உள்ள இரண்டு பெண்களின் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் அனைவரும் எங்கள் குழந்தைகளை இழந்தோம்," என்கிறார்.

"எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆயிஷா ஒரே மகள். ஆயிஷாவைப் பெற்றதில் என் கணவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவளுடைய மரணத்தை அவரால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்கிறார்.

காம்பியாவில் தற்போது மருந்துகள் பாதுகாப்பானதா என்று சோதிக்கும் திறன் கொண்ட ஆய்வகம் இல்லை. அதனால், அவை வெளிநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று காம்பியாவின் சுகாதார சேவை இயக்குநர் முஸ்தபா பிட்டாய் பிபிசியின் ஃபோகஸ் ஆன் ஆப்ரிக்கா நிகழ்ச்சியில் கூறினார்.

ஆனால் காம்பியா அரசு இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிசாவோ கருதுகிறார்.

"இது பெற்றோருக்கு ஒரு பாடம். ஆனால் அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. எந்தவொரு மருந்தும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவை மனிதர்கள் எடுத்துகொள்ள ஏற்றதா இல்லையா என்பதை சரியாக சரிபார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

 

அலியு கிஜேரா தமது மகன் முகமதுவை சிகிச்சைக்காக அண்டை நாடான செனகலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

பட மூலாதாரம்,OMAR WALLY

 

படக்குறிப்பு,

அலியு கிஜேரா தமது மகன் முகமதுவை சிகிச்சைக்காக அண்டை நாடான செனகலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இசடோ சாம் தமது இரண்டரை வயதான மகன் முகமதுவின் மரணத்தைப் பற்றி பேச முடியாத அளவுக்கு மிகவும் வேதனையில் இருக்கிறார்.

அவர் தமது மற்ற இரண்டு குழந்தைகளுடன் அழுதுகொண்டே செர்ரெகுண்டாவில் உள்ள அவர்களது வீட்டு கூடத்தை விட்டு வெளியேறினார்.

முகமதுவின் தந்தை அலியு கிஜேரா தமது மகனுக்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார்.

தமது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாமல் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவர் கூறினார். ஆனால் மருத்துவர்கள் முகமதுவுக்கு மலேரியாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் அவரது மகனின் உடல்நிலை மோசமடைந்தது.

மருத்துவர்கள் அவரது மகனுக்கு அண்டை நாடான செனகலில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர். காம்பியாவை விட அங்கு மருத்துவ சேவை சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் அவரது மகனின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், அது அவரைக் காப்பாற்றவில்லை.

தமது நாட்டில் போதுமான சுகாதார வசதி இல்லை என்று கிஜேரா கோபமடைந்தார். இதற்காக, அவர் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மருத்துவ உபகரணங்களும் சரியான மருந்தும் இருந்திருந்தால் அவரது மகனையும் இன்னும் பல குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/global-63183217

  • கருத்துக்கள உறவுகள்

காம்பியா குழந்தைகள் மரணம்: இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் சென்றது ஏன்?

  • ஸ்ருதி மேனன்
  • பிபிசி ரியாலிட்டி செக்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

காம்பியா - இந்திய மருந்துகள் விவகாரம்

பட மூலாதாரம்,WHO

காம்பியாவில் கிட்டத்தட்ட 70 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் காரணமாக நடந்ததா என்று விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவில் மருந்துகளின் தயாரிப்பு மற்றும் வணிகத்தை திறம்பட கட்டுப்படுத்துவது குறித்த சில சந்தேகங்கள் நிலவும் நிலையில் இந்த விசாரணை நடக்கிறது.

காம்பியாவில் எது தவறாக போனது?

கடந்த வாரம், உலக சுகாதார நிறுவனம் நான்கு இந்திய இருமல் மருந்துகள் குறித்து உலகளாவிய எச்சரிக்கை வெளியிட்டது. காம்பியாவில் குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகளையடுத்து, இந்த மருந்துகள் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

இந்த மருந்துகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான மாசுத்தன்மை, டைஎதிலீன் கிளைகோல் (diethylene glycol) மற்றும் எத்திலீன் கிளைகோல் (ethylene glycol) ஆகிய இரண்டும் உள்ளன என்று ஆய்வக பகுப்பாய்வு உறுதிப்படுத்துகிறது.

 

இந்திய அதிகாரிகளும் இருமல் மருந்து உற்பத்தியாளர் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமும் இந்த மருந்துகள் காம்பியாவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

 

காம்பியா - இந்திய மருந்துகள் விவகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உற்பத்தியாளர் பற்றி கண்டறிந்த தகவல்கள்

தங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு தரநிலையை கடைப்பிடிப்பதாக மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் கூறுகிறது.

ஆனால் அதன் சில தயாரிப்புகள் இந்தியாவில் தேசிய அல்லது மாநில அளவிலான தரக் கட்டுப்பாட்டு தரநிலையை மீறியுள்ளன.

இந்த நிறுவனத்தைப் பற்றிய அதிகாரபூர்வ தரவுகள் பின்வருமாறு:

  • 2011 ஆம் ஆண்டில், உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்யத் தவறிய ஒரு மருந்தை விற்றதற்காக பீகார் மாநிலம் இந்த நிறுவனத்தை கரும்பட்டியலில் சேர்ந்தது.
  • இந்த நிறுவனம் தரக் கட்டுப்பாட்டில் செய்த விதிமீறலுக்காக, 2018ஆம் ஆண்டு, இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த நிறுவனம் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்தது.
  • 2022ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் நான்கு முறை தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்துள்ளது.
  • தரமற்ற தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததற்காக வியட்நாம் கரும்பட்டியலில் உள்ள 40 இந்திய மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், காம்பியாவில் நடந்த உயிரிழப்புகள் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஹரியாணா மாநில மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இந்தியாவின் மருந்து தர கட்டுப்பாடு ஜெனரல் ஆஃப் இந்தியா உட்பட சுகாதார அதிகாரிகளின் நெறிமுறைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளது.

மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகள் இன்னும் இந்த மருத்துகளைச் சோதனை செய்யும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் எந்த கருத்துகளும் கூற விரும்பவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் ஏதேனும் தவறு இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹரியாணா சுகாதார அமைச்சர் அணில் விஜ் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் தரக் கட்டுப்பாடு எந்தஅளவுக்கு உள்ளது?

இந்தியா பெரும்பாலும் பொதுவாக வழங்கப்படும் மருந்துகள் என்ற அடிப்படையில், உலகில் உள்ள மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இந்தியா உற்பத்தி செய்கிறது.

ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளும், ஆசியாவின் பிற பகுதிகளிலும் சப்ளையராகவும் இந்தியா உள்ளது.

 

காம்பியா - இந்திய மருந்துகள் விவகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன் உற்பத்தி ஆலைகள் கடுமையான தரக் கட்டுப்பாட்டு தரநிலைகள் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

ஆனால் இந்திய நிறுவனங்களின் சில ஆலைகளில் தரக் கட்டுப்பாட்டு பிரச்னைகளுக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) போன்ற வெளிநாட்டு ஒழுங்குமுறை ஆணையங்களின் விமர்சனங்களையும் தடைகளையும் சந்தித்துள்ளன.

இந்தியாவின் மருந்துத் தொழில்துறை பற்றிய ஒரு பகுப்பாய்வு, கண்காணிப்பு அமைப்புகளுக்கு குறைவான நிதியுதவி, ஒழுங்குமுறைகளின் தளர்வான விளக்கம் ஆகியவற்றை முக்கியப் பிரச்னைகளாகச் சுட்டிக்காட்டுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்தியாவில் தரக்கட்டுப்பாடுகளை மீறுவதற்கு அளிக்கப்படும் தண்டனை ஒப்பீட்டளவில் குறைவே என்று பொது சுகாதார ஆர்வலர் தினேஷ் தாகூர் சுட்டிக்காட்டுகிறார். அதாவது 242 டாலர் அபராதம் மற்றும் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை.

"ஒரு தரமற்ற மருந்துக்கும் ஒரு உயிரிழப்புக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்த முடியாத வரை, இதுதான் தண்டனையின் விதிமுறை," என்று அவர் கூறுகிறார்.

மேலும், தடுப்பூசிகள் தவிர, உலக சுகாதார அமைப்பின் தரநிலையில் மருந்துகளை ஒழுங்குமுறையைப்படுத்தும் தேசிய அமைப்புகளில் இந்தியா சேர்க்கப்படவில்லை.

"இது மருந்து உற்பத்தி நடவடிக்கைகளில் சீரற்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம்," என்று எம்.எஸ்.எஃப்பின் (Médecins Sans Frontières (MSF) Access Campaign South Asia) தலைவர் லீனா மென்கானே கூறுகிறார்.

காம்பியா சோதனை செய்திருக்க வேண்டுமா?

டெல்லியில் உள்ள சுகாதார அமைச்சகம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆனால் "தரத்தை பொருத்தவரையில், இந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடு, இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை தமது நாட்டின் தரத்தின் அடிப்படையில் சோதனை செய்வதே நடைமுறை வழக்கம்," என்று கூறுகிறது.

ஆனால் காம்பியாவின் மருத்துவக் கட்டுப்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநர் மார்கியு ஜன்னே கைரா (Markieu Janneh Kaira), இருமல் மருந்தை காட்டிலும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலிநிவாரணிகள் ஆகியவற்றின் சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

இது குறித்து, தெளிவான தகவலைப் பெற அந்த முகமையை பிபிசி நியூஸ் தொடர்பு கொண்டது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

காம்பியாவின் அதிபர் அடாமா பாரோ, இந்த பெரும் துயரத்திற்காக காரணங்களின் ஆணிவேர் கண்டறியப்படும் என்றார். மேலும், அந்நாட்டில் மருந்துகள் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான தரக் கட்டுப்பாட்டு தேசிய ஆய்வகத்தை உருவாக்குவதாக அறிவித்தார்.

காம்பியா தரமற்ற மருந்துகளின் இறக்குமதியை தடுக்க பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

காம்பியா போன்ற குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு, போதுமான சோதனை வசதிகள் கொண்ட நாடுகள் உதவ வேண்டும் என்று எம்.எஸ்.எஃப் விரும்புகிறது.

"இது இறக்குமதி செய்யும் நாடுகளின் பொறுப்பு மட்டும் அல்ல," மென்கானே கூறுகிறார்.

நைஜீரியாவில், உணவு, மருந்து நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய முகமை, இந்தியாவை விட்டு வெளியேறும் முன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து பொருட்களையும் சரி பார்த்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-63233749

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.