Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலித் தட்சின துறைமுகம்

A view of Galle from the seas..jpg

'தட்சின துறைமுகத்தின் கடலில் இருந்ததான பார்வை | படிமப்புரவு: தமிழ்நெற்'

 

அது 18.10.2006 இன் இராவிருள் அகன்று புலரும் காலை வேளை. போர் வலயத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்திருந்த "கொட்டி"யால் நெருங்கமுடியாதென்ற திமிரோடிருந்த சிங்களத்தின் 'தட்சின துறைமுகம்' அதிர்ந்துகொண்டிருந்தது, கடலின் 'ஐந்தெழுத்து மனிதர்கள்' ஒன்மரின் உயிர்வெடிகளால்!

காரிருட்டைப் பயன்படுத்தி மீனவர்கள் வேடமிட்டு காலியில் அமைந்திருந்த சிறிலங்காக் கடற்படையின் தட்சின துறைமுகத்தினுள் 5 கட்டைப்படகுகளில் (Dinghy) நுழைந்த கடற்கரும்புலிகள், கடற்புலிகள் மற்றும் படையப் புலனாய்வுப்பிரிவினரைக் கொண்ட 15 பேர் அடங்கிய தவிபுவின் சிறப்பு அணியினால் காலை 7:45 மணிக்கு இவ் வெற்றிகர வலிதாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ் வலிதாக்குதலுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்த கடற்புலிகளின் அப்போதைய தாக்குதல் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் விடுதலை அத்தோடு நின்று விடாமல் தாக்குதல் அணிகளை துறைமுகத்திற்கு அருகில் வரை கூட்டிச் சென்று வழியனுப்பிவிட்டும் வந்தார். 

இவ் வலிதாக்குதலின் போது ஆகக்குறைந்தது மூன்று சக்கை வண்டிகளாவது மோதியிடித்தன. அதால் சிங்களக் கடற்படைக்குச் சொந்தமான 3 கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன என்று கொழும்பு பாதுகாப்புச் செய்தியாளர்கள் தமிழ்நெற்றிற்கு தெரிவித்திருந்தனர். இத்தாக்குதலின் போது மூழ்கடிக்கப்பட்டனவோடு மேலும் 3 கடற்கலங்கள் முற்றாக இழக்க/ சேதப்பட (மூண்ட தீயால்) செய்யப்பட்டிருந்தன என்று விடுதலைப்புலிகளின் போர்க்காலப் பாடல்களூடாக அறியக்கூடியதாக உள்ளது. 

"கடற்கரும்புலிகளின் வீரத்திலே - ஆறு
கப்பல்கள் எரிந்தன ஈரத்திலே!"

- கடற்கரும்புலிகள் பாகம் 12இல் உள்ள "காலித் துறைமுகம் மீதில் புகுந்தவர்" பாடலிலிருந்து

ஒரு டோறா விரைவுத் தாக்குதல் கலம் மற்றும் இரு 'வோட்டர் ஜெட்' வகுப்பு உட்கரை சுற்றுக்காவல் படகுகள் என மொத்தம் மூன்று கடற்கலங்கள் முற்றாக மூழ்கடிக்கப்பட்டன. 

சிங்களம் இழந்தவற்றுள் முதன்மையானது "பராக்கிரமபாகு" என்ற கைகுயிங்கு வகுப்பைச் சேர்ந்த சேமமானம்(Corvette) ஆகும். இக்கடற்கலமானது 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்டாலும் மீட்டெடுக்கப்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில் தட்சின துறைமுகத்தில் தரிபெற்றிருந்த போதே தமிழரின் தாக்குதலிற்குள்ளாகி மீளப் பயன்படுத்த முடியாத நிலைக்கு செயலிழக்கச் செய்யப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டு சீனாவிடமிருந்து வாங்கப்பட்டு அடுத்த ஆண்டே சிறிலங்கா கடற்படையின் தாய்க்கப்பலாக ஆணைபெற்று தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளுக்கு எதிரான பல கடற்சமர்களிலும் சிங்களத்தின் தமிழர் தாயக வல்வளைப்புகளுக்கும் துணை நின்ற ஒரு நீர்மூழ்கி துரத்தல் கடற்கலமாகும்.

இவற்றோடு அங்கு நின்றிருந்த ஒரு எரிவாயு காவி கப்பலும் இனந்தெரியாத ஒரு கடற்கலமும் சேதமடைந்தன.

நுழைந்த சதளத்தின்(sqd.) ஏனைய இரு படகுகளிலும் வந்தவர்கள் துறைமுகத்தினுள் தரையிறங்கி அங்கிருந்த கடற்படை நிலையங்கள் மீது சுடுகலன்களாலும் உந்துகணைகளாலும் தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தினர். தாக்குதல் தொடர்ந்து இரு மணிநேரம் நீடித்தது. கடற்கரும்புலிகளின் தாக்குதலால் அப்பரப்பின் வானில் கரும்புகை எழுந்தது.

தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலிருந்த நகரத்தினுள் தப்பிச் சென்றதாக செய்திகள் கசிந்து பரபரப்பினை அப்பரப்பில் ஏற்படுத்தின.

இவ்வெற்றிகர வலிதாக்குதலின் போது சிறிலங்காக் கடற்படையின் கடற்கலவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காணாமல்போயுள்ளனர் என்றும் மேலும் 14 பேரும் 15 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் என்று சிங்களக் காவல்துறை செய்தி வெளியிட்டது. காயமடைந்தவர்கள் காலி கரைப்பிட்டி (கரபிட்டிய) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழர் தரப்பில் நடவடிக்கைக்குச் சென்றோரில் 8 கடற்கரும்புலிகள் வெடியாகி காற்றோடு கரைந்து போயினர். அன்னவர்களின் பெயர் விரிப்பு பின்வருமாறு:

  1. கடற்கரும்புலி லெப்.கேணல் அரவிந்தா

  2. கடற்கரும்புலி மேஜர் தமிழ்வேந்தன்

  3. கடற்கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

  4. கடற்கரும்புலி மேஜர் கடலவன்

  5. கடற்கரும்புலி மேஜர் முகிலன்

  6. கடற்கரும்புலி மேஜர் வன்னிமன்னன்

  7. கடற்கரும்புலி கப்டன் இசையின்பன்

  8. கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன் 

இவ்வதிரடித் தாக்குதலின் தோல்வியை செமிக்கவியலாத சிங்களக் காடையர்கள் காலியில் இருந்த தமிழரின் கடைகள் மீது வன்முறையினைக் கட்டவிழ்த்துவிட்டனர். இதில் தமிழரின் 20 கடைகள் சூறையாடப்பட்டதுடன் மேலும் 8 கடைகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டன. கொழும்பு காலி வீதி மூடப்பட்டது. காலி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மூத்த காவல்துறை அத்தியட்சகர் கீர்த்தி டி சில்வா நடைமுறைப்படுத்தினார்.

 

smoke from SLNS Dakshina.jpg

''எரியும் கடற்கலத்திலிருந்து புகை எழுகிறது. | படிமப்புரவு: தமிழ்நெற்''

 

18_10_2006_galle_02.jpg

'காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார் | படிமப்புரவு: தமிழ்நெற்'

 

sub chaser PARAKRAMABAHU p351.jpg

'முற்றாகச் செயலிழக்கச் செய்யப்பட்ட P-351 என்ற தொடரிலக்கமுடைய 'பராக்கிரமபாகு' என்ற பெயருடைய நீர்மூழ்கி துரத்தல் கடற்கலம்| படிமப்புரவு: lankanavy | படிமக் காலம்: 1995'

 

SLN boat.jpg

'புலிவீரர்களால் அழிக்கப்பட்ட படகு ஒன்று | படிமப்புரவு: Shutterstock'

dakshina.jpg

 

 

190lanka600.1.webp

'காலித் துறைமுக அழிபாடுகள் | படிமப்புரவு: NYT'

 

 

 

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலி தட்சின துறைமுகம் - 2006
  • நன்னிச் சோழன் changed the title to உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலித் தட்சின துறைமுகம் - 2006
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெடியான கடற்கரும்புலிகளின் திருவுருவப்படங்கள்

 

 

"உடல்வெடி வெடித்த அந்நேரத்திலே - எங்கள்
உயிர்க்கொடி அதிர்ந்தது தூரத்திலே!"

 

 

BT Lt Col Aravintha.jpg

  

capkannalan_black_tigers-185x300.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன் சிறுகுறிப்பு

 

மூலம்: https://eelamaravar.wordpress.com/2008/09/13/கடற்-கரும்புலி-கப்டன்-கண/

 

2004ம் ஆண்டு 26 ஆம் நாள் ஆழிப்பேரலை பேரழிவு நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று.

அங்கு அவனுக்காக பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை போhக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று.

ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிக்காக பயிற்சித் திட்டங்கள் எல்லாம் நிறைவு செய்த நிலையில் அவன்… ஓர் அளவுகோலில் ‘’பாசம்’’ இ ‘‘கடமை’’ என்றை இரண்டையும் நிறுவை செய்தான். அவனது மனச்சாட்சி முன் ‘‘கடமை’’ என்ற பக்கம் தாண்டு கொண்டது. அவன் முடிவெடுத்தான். தன் நிலைமையை அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சென்று கதைத்தான்.

‘‘நான் அந்த நடவடிக்கையைச் செய்யப் போறன்… இனி இந்த நடவடிக்கைக்காகப் புதுசா ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்தெடுக்க எவ்வளவு காலம் எடுக்கும்… என்னால இந்த நடவடிக்கையில் எந்தவொரு காலதாமதமும் ஏற்படக்கூடாது… ஆனா… என்ற குடும்பத்த நீங்கள் பார்க்க வேண்டும்…"

குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டபோதும் அவன் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது தன் கடமையைச் சரிவரச் செய்தான். அவன் வேறுயாருமல்ல காலிமுகத் துறைமுகத்தில் வரலாறு எழுதிய கடற்கரும்புலிகளில் ஒருவரான கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன்…

‘‘ஈன்ற பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.’’ என்ற வள்ளுவன் கூற்றுக்கு எடுத்துக்காட்டான பெரு வீரனாய் கண்ணாளன்.

Edited by நன்னிச் சோழன்

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் நிகழ்படமொன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது தற்செயலாக இவரின் காட்சியைக் கண்டேன், திரைப்பிடிப்பு செய்தேன். இவரும் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி ஆவார். இவரின் பெயர் லெப். கேணல் அரவிந்தா எனப்தாகும்.

 

 

large.SeadBlackTigerLt_Col.Aravintha-operationcommanderfortheraidonThatchinanavalbaseGalleSriLanka.jpg.4deae3f6c874feb160880ca15324a72a.jpg

இது 2006ம் ஆண்டு கரும்புலிகள் நாளில் எடுக்கப்பட்ட காட்சி என்று துணிபுகிறேன்.

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.