Jump to content

இந்து மதம் என ஒன்று உண்டா? - ஜெயமோகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்து மதம் என ஒன்று உண்டா?

jeyamohanOctober 21, 2022

nataraja-1024x620.jpg

அன்புள்ள ஜெ,

அண்மைக்கால விவாதங்களால் குழம்பிப்போயிருக்கிறேன். உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் மேல் ஒரு மனவேறுபாடு இருந்துகொண்டே இருந்தது. உங்கள் அரசியல் கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை அல்ல. ஆனால் இந்தக்குழப்பம் தொடர்ச்சியாக நீடிப்பதனால் இதை எழுதுகிறேன்.

என் கேள்வி இதுதான். இந்து மதம் என ஒன்று உண்டா? இந்துமதம் என்ற பெயரை இஸ்லாமியர்கள் அளித்தனர், இந்துமதம் என்ற வரையறை பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது, ஆகவே இந்துமதமே இல்லை என்று சொல்கிறார்கள். உங்கள் விளக்கம் என்ன?

நான் இந்து மத நம்பிக்கை உடையவன். நாத்திகனாக இருந்தேன். அப்பா மரணத்துக்குப்பின் பல நிகழ்ச்சிகள். அவற்றில் நான் தாக்குப்பிடித்தது மதநம்பிக்கையால்தான். முருகன் என்னை காப்பாற்றி உறுதுணையாக இருந்தார். நான் பெருமாளையும் வணங்குபவன். இந்து என்று நான் என்னைச் சொல்லிக்கொள்ள முடியுமா?

ரவிக்குமார் பெருமாள்

*

அன்புள்ள ரவிக்குமார்,

இந்த விவாதம் ‘கொழுந்துவிட்டு’ எரிந்தபோது இதைப்போன்ற வினாக்கள் நூறு எனக்கு வந்தன. ஆனால் அப்போது பதில் சொல்வதை முழுமையாகவே தவிர்த்தேன். ஏனென்றால் அப்போது நடைபெற்றது மதம் சார்ந்த விவாதமோ, ஆன்மிக விவாதமோ அல்ல. அரசியல் விவாதம். கடுமையான முன்முடிவுகள், காழ்ப்புகள் கொண்ட விவாதம். எந்த ஒரு மறுதரப்பையும் வசைபாடி, ஏளனம் செய்து, இழிவுசெய்து கெக்கலிக்கும் மனநிலையே அதில் ஓங்கியிருந்தது. அதில் இறங்க எனக்கு ஆர்வமில்லை.

பாண்டிச்சேரியில் பேசும்போது ஒன்று சொன்னேன். உலகிலேயே இந்துக்களிடம் மட்டும் ஒரு விசேஷ மனநிலை காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் நம்மிடம் உருவாகி வந்த ஒன்று அது. தமிழகத்தில் இது உச்சத்திலுள்ளது. இந்துக்கள் மட்டும் இந்து மதம் பற்றிய அறிதல்களை இந்து விரோதிகள் என வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர்களிடமிருந்தும், இந்துமதம் அழியவேண்டும் என்பதற்காகவே பாடுபடுவதாக கூறுபவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். இந்து மதம் பற்றி எழுதிய, பேசிய அறிஞர்களோ ஞானிகளோ அவர்களின் கண்களுக்குப் படுவதே இல்லை.

இந்துமதம் பற்றி அறிய தமிழில் அ.லெ.நடராஜன் முதல் கண்ணதாசன் வரை அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. சுவாமி சித்பவானந்தர் முதல் சுவாமி அசுதோஷானந்தா வரை பல்வேறு ஞானியர் எழுதிய நூல்களும் உரைகளும் உள்ளன. என் நூல்களும் கிடைக்கின்றன. என் கட்டுரைகள் இணையத்திலேயே உள்ளன. இந்த விவாதங்களில் எவரும் அவற்றை மேற்கோளாக்கவில்லை. தாக்குதல்களுக்கும் திரிபுகளுக்கும் பதிலாக அவற்றைச் சுட்டிக்காட்டவில்லை. மாறாக பொதுவெளியில் அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் என்று மட்டுமே கவனித்தனர். இதுதான் உண்மையான பிரச்சினை. இது இந்துக்களிடமிருக்கும் அறியாமை, அக்கறையின்மை.

இந்தக் கட்டுரையே கூட பத்தாயிரம் பேரிடம் சென்று சேரும். என் தளத்துக்கு வருபவர்களிலேயே பலர் படிக்க மாட்டார்கள். ஆனால் அசட்டுத்தனமான ஒரு யூடியூப் வீடியோவை ஒருவன் போட்டால் ஐந்துலட்சம் பேர் அதை சென்று பார்ப்பார்கள். தங்கள் மதநம்பிக்கை மேல், தங்கள் முன்னோர் மேல் ஐயம்கொண்டு குழம்புவார்கள். ஆனால் பதில் தேடி அப்பதில்கள் இருக்குமிடத்துக்கே வரமாட்டார்கள்

அத்துடன் இத்தகைய கேள்விகளுக்கு ஆய்விலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட என்னைப் போன்ற ஒருவர் அரசியல்வாதிகள் சொல்வதுபோல ‘அதிரிபுதிரி’யான பதிலைச் சொல்லிவிட முடியாது. நக்கல் நையாண்டி என கீழிறங்கி பேசமுடியாது. வரலாற்றுப் பார்வையுடன், மதங்களின் இயங்கியல் சார்ந்த பார்வையுடன் மட்டுமே பேச முடியும். அந்த பதிலை நம்மவர்களின் சிறிய மூளைகளால் புரிந்துகொள்ள முடியாது.

அதாவது இந்து மதம் என்பதே இல்லை என்று கொக்கரிப்பவர், அதற்கு எதிராகச் சொல்லப்படும் விரிவான வரலாற்று விளக்கத்தை புரிந்துகொள்ள மாட்டார். ‘வெளக்கெண்ணை மாதிரி வளவளன்னு நீளமா எழுதியிருக்கார்’ என்று சொல்லி கடந்து செல்வார். அவர் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்.

ஆயினும், இளைய தலைமுறையினரிடமிருந்து என்றோ ஒருநாள் இவற்றுக்கெல்லாம் கவனம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நான் என் குருவின் ஆணையை ஏற்று இதையெல்லாம் சொல்ல தொடங்கிய தொண்ணூறுகளில் இவற்றைச் சொன்னால் ஐந்தாறுபேர் கூட கவனிக்காத நிலை இருந்தது. இன்று அந்நிலை மாறிவிட்டிருக்கிறது. கவனமே கிடைக்கவில்லை என்றாலும் சொல்லிக்கொண்டே இருப்பது நம் கடமை என நினைக்கிறேன். பதில் இங்கே இருக்கட்டும். தேவையானவர்களுக்கு அது இல்லை என ஆகவேண்டாம்.

மதம், அடிப்படைப் புரிதல்கள்.

மதங்கள் பற்றிய எந்த விவாதத்திலும் அடிப்படையான சிலவற்றை நினைவில் நிறுத்தவேண்டும். அந்த எளிய புரிதல்கூட இல்லாமல்தான் இங்கே இவை சார்ந்த பேச்சுகள் நிகழ்கின்றன.

அ. மதங்கள் இன்று ஒரு நிறுவனம் தொடங்கப்படுவதுபோல ஒரு காலகட்டத்தில் பெயரிடப்பட்டு, நெறிகள் வகுக்கப்பட்டு உருவாக்கப்படுவன அல்ல. அவை ஏதோ ஒரு வகையில் தொடக்கம் கொண்டு, மெல்லமெல்ல காலத்தில் திரண்டு வருபவை. காலந்தோறும் அவற்றின் பெயர், அடையாளம் ஆகியவை மாறுகின்றன. அவற்றின் வளர்ச்சிப் பரிணாமம் மிகச்சிக்கலான ஒரு வரலாற்று நிகழ்வு.

ஆ. மதம் என நாம் இன்று சொல்லும் இந்த கருத்துருவம், இப்போதுள்ள இந்த அர்த்தத்தில் முன்பு இருந்ததில்லை. இன்று மதங்கள் என நாம் அழைப்பவை எவையும் தங்களை மதம் என சொல்லிக்கொண்டவை அல்ல. அவை வழிமுறை அல்லது மார்க்கம் என்றோ, அறம் அல்லது தர்மம் என்றோ, ஒழுங்கு அல்லது சம்பிரதாயம் என்றோதான் தங்களை சொல்லிக்கொண்டன. இஸ்லாம் என்பது மார்க்கம். கிறிஸ்தவம் என்பது ஒழுங்கு (order) இந்து, பௌத்த, சமண மரபுகள் தங்களை தர்மம் என சொல்லிக்கொண்டன. இன்று நாம் பேசும் மதம் என்னும் இந்த கருத்துவடிவம் பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது.

மதம் என்னும் சொல்

மதம் என்னும் சம்ஸ்கிருதச் சொல் ‘உறுதியான தரப்பு’ என்னும் பொருளிலேயே புழங்கி வருகிறது. மலையாளத்திலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்று ‘பரோட்டாதான் மிகச்சிறந்த உணவு என்பதே என் மதம்’ என்று சொல்லமுடியும். அரசியல் விவாதங்களில் சாதாரணமாக இதை கேட்கலாம். மதம் என்பதற்குச் சமானமான தமிழ்ச்சொல் சமயம். சமயம் என்பது உறுதியான தரப்பு என்பதையே குறிக்கிறது.

ஒரு சிந்தனைத் தரப்பு அல்லது சிந்தனைப் பிரிவு என்னும் பொருளில் இந்திய சிந்தனை மரபில் வெவ்வேறு மதங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகிய ஆறு தரிசனங்களும் ஆறு மதங்கள் என்றே பழைய நூல்களில் சொல்லப்படுகின்றன. இவை தவிர தார்க்கிக மதம், சார்வாக மதம், ஏகான்ம மதம் போன்ற பல மதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை எவையும் இன்று நாம் மதம் என்னும் சொல்லில் பொருளில் செயல்பட்டவை அல்ல. அதாவது தங்களுக்கான தெய்வங்கள், தனித்த வழிபாட்டுமுறை, நிர்வாக அமைப்பு ஆகியவை கொண்டவை அல்ல. அவை கருத்துநிலைபாடுகள் மட்டுமே.

வேதத்தை முதல்நூலாகக் கொண்டவர்களின் தரப்பை வைதிக மதம் என்பார்கள். அவர்களிலேயே வேதங்களை சடங்குகளாக மட்டுமே கொள்பவர்கள் மீமாம்ச மதத்தவர். வேதங்களை அறிவிற்கான முதல்தொடக்கமாக கருதுபவர்கள் வேதாந்த மதத்தவர்.

மீமாம்ச மரபுக்குள்ளேயே வேதமரபு பல மதங்களாக பகுக்கப்பட்டுள்ளது. இந்திரனை மையத்தெய்வமாகக் கொண்ட ஐந்திரம், வருணனை மையத்தெய்வமாகக் கொண்ட வாருணம், சூரியனை மையத்தெய்வமாகக் கொண்ட சௌரம், அக்னியை மையத்தெய்வமாக கொண்ட ஆக்னேயம் என வேதமதங்களே பல உள்ளன. (பாரதியின் ஒரு கட்டுரையில் இந்து மதப்பிரிவுகளான ஆறு சமயங்கள் என அவர் சுட்டுவது இவற்றையே)

தெளிவான வழிபாட்டு முறை கொண்டவை ஆறு மதங்கள். ஒரு பிரபஞ்ச தரிசனமும், அதையொட்டிய தெய்வமும், அதற்கான வழிபாட்டுமுறையும் கொண்டவை இவை. சிவனை மையத்தெய்வமாகக் கொண்ட சைவம். விஷ்ணுவை மையத்தெய்வமாகக் கொண்ட வைணவம். சக்தியை மையத்தெய்வமாகக் கொண்ட சாக்தம். முருகனை மையத்தெய்வமாகக் கொண்ட கௌமாரம். பிள்ளையாரை மையத்தெய்வமாகக் கொண்ட காணபத்யம். இவை ஒவ்வொன்றுக்குள்ளும் துணைமதங்கள் உள்ளன.

சைவர்களுக்கு தெரியும், அகச்சமயம் புறச்சமயம் என அவர்கள் சைவத்துக்குள் பல பிரிவினைகளை கொண்டிருக்கிறார்கள். இப்பிரிவினைகள் தத்துவரீதியானவை. பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என சைவ அகச்சமயங்கள் ஆறு. காபாலிகம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என சைவ புறச்சமயங்கள் ஆறு. இவற்றுக்கு வெளியே உள்ள சமணம், பௌத்தம், வேதாந்தம் போன்றவற்றை சைவம் புறப்புறச் சமயம் என்கிறது. (பல அண்மைக்கால நூல்களில் பலவகை பிழைகளுடன் இவை பட்டியலிடப்பட்டுள்ளன). இவை எல்லாமே மதம் என்றே சொல்லப்படுகின்றன.

சைவ வழிபாட்டு மரபிலேயே காஷ்மீர சைவம், வீரசைவம், சித்தாந்த சைவம் (அல்லது மெய்கண்டார் மரபு) ஆகியவை தனித்தனி மதங்களாகவே எண்ணப்பட்டன. இவை தவிர காணபத்யம், கௌமாரம், சாக்தம் ஆகியவையும் இன்று சைவத்துடன் இணைந்து அதன் பகுதிகளாகவே உள்ளன.

வைணவம் சென்ற அறுநூறாண்டுகளாக நான்கு பெருமரபுகளாகவே உள்ளது. இவை சம்பிரதாயம் (order) என அழைக்கப்படுகின்றன. ஆனால் சென்ற கால நூல்களில் வெவ்வேறு மதங்களாகவே இவை குறிப்பிடப்படுகின்றன. ஶ்ரீசம்பிரதாயம் (ராமானுஜர் மரபு) மாத்வ சம்பிரதாயம் (மத்வர் மரபு) ருத்ர சம்பிரதாயம் அல்லது புஷ்டிமார்க்கம் (வல்லபர் மரபு) குமார சம்பிரதாயம் (நிம்பார்க்கர் மரபு). இவையும் இன்று தனித்தனியாகவே செயல்படுகின்றன. ஆறுமதங்களில் சௌரம் வைணவத்துடன் இணைந்தது.

இந்து மரபு மட்டுமல்ல, பௌத்தம் சமணம் ஆகியவையும் பல்வேறு துணைமதங்களின் தொகுதிகளே. இந்து மரபுக்குள் வரும் சைவம் வைணவம் உள்ளிட்ட எல்லா மதங்களுமே பல்வேறு துணைமதங்களின் தொகுப்பாகவே உள்ளன. கொள்கைகள் மற்றும் வழிபாடுகளின் அடிப்படையில் அவை பிரிகின்றன. இணையான கொள்கைகள் மற்றும் வழிபாடுகளின் அடிப்படையில் அவை இணைகின்றன. பலசமயம் இவற்றை மதஞானிகள் நிகழ்த்துகிறார்கள். இந்த செயல்பாடு எல்லா மதங்களுக்குள்ளும் நிகழ்கிறது.

மதம் என நாம் இன்று பகுத்து அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறையை இயந்திரத்தனமாக நேற்றைய வரலாற்றின்மேல் போட்டால் மிகமிக அபத்தமான புரிதலையே சென்றடைவோம். இந்துமதம் என ஒன்று இல்லை என்று சொல்லலாம் என்றால் சைவம் என ஒன்று இல்லை என்றும் அடுத்தபடியாகச் சொல்லிவிடலாம். அப்படியே மறுத்தபடியே செல்லலாம்.

நாம் முன்பு மதம் என சொல்லிவந்தது வேறு, ஐரோப்பியர் வருகைக்குப்பின் நவீன காலகட்டத்தில் மதம் என சொல்லப்படுவது வேறு. ஐரோப்பியர் சொல்லும் religion என்பது நவீனக்கருத்து. நவீன காலகட்டத்தில் நாம் வழிவழியாக மதங்கள் என அழைத்துவந்த பல்வேறு தரப்புகளை இணைத்துக்கொண்டுள்ள பொதுமரபை மதம் என வரையறை செய்தனர். அதை இந்து மதம் என்றனர்.

இரண்டுவகை மதங்கள்

இந்து மதம் என்றல்ல எந்த மதமும் ஏதேனும் ஒரு வரலாற்றுப்புள்ளியில் ஒட்டுமொத்தமாகக் கட்டமைக்கப்பட்டது அல்ல. மதங்களின் பரிணாமம் மிகவிரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.

முதலில் மதங்களை நாம் இரண்டாகப் பிரித்துக் கொள்ளவேண்டும். இயற்கையாக திரண்டு வந்த மதங்கள். ஏதேனும் தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளிடமிருந்து தோன்றிய மதங்கள். இயற்கைமதங்கள், தீர்க்கதரிசன மதங்கள் என பிரித்துக்கொள்ளலாம்.

தீர்க்கதரிசன மதங்கள் ஏராளமாக உள்ளன. சமணம்(வர்த்தமான மகாவீரர்), பௌத்தம் (கௌதம புத்தர்), ஆசீவகம் (மகதி கோசாலன்) சீக்கியம் (குருநானக்) ஆகியவை இந்திய தீர்க்கதரிசன மதங்கள். இஸ்லாம் (முகமது நபி) கிறிஸ்தவம் (ஏசு கிறிஸ்து) கன்பூசிய மதம் (கன்பூஷியஸ்) தாவோ (லவோட்சு) ஆகியவை புகழ்பெற்ற மதங்கள்.

சிலகாலம் இருந்து மறைந்த தீர்க்கதரிசன மதங்கள் ஏராளமாக உள்ளன. பெரிய அளவில் வளராமல் நின்றிருக்கும் மதங்களும் உள்ளன. பாரசீக இளவரசரான மாணி என்பவர் நிறுவிய மாணிகேய மதம் (Manichaeism) பொயு 3 ஆம் நூற்றாண்டு முதல் வலுவாக இருந்து பின்னர் இஸ்லாமிய ஆதிக்கத்தால் முற்றாக மறைந்தது. மத்திய ஆசிரியாவில் நூறுக்கும் மேற்பட்ட சிறிய தீர்க்கதரிசன மதங்கள் இருந்துள்ளன.

அண்மைக்காலத்தில்கூட தீர்க்கதரிசன மதங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.1863ல் ஈராக்கில் பகாவுல்லா என்னும் தீர்க்கதரிசியால் உருவாக்கப்பட்ட பகாயி மதம் உலகமெங்கும் உள்ளது. 1889ல் இந்தியாவில் மிர்ஸா குலாம் அகமத் என்னும் தீர்க்கதரிசி உருவாக்கிய அகமதியா மதம் உள்ளது. இவை இஸ்லாமில் இருந்து உருவானவை. கிறிஸ்தவ மரபுக்குள் இருந்து உருவான தீர்க்கதரிசிகளும் துணைமதங்களும் உலகமெங்கும் உள்ளன.

இந்த தீர்க்கதரிசன மதங்கள் எல்லாமே ஒரு தீர்க்கதரிசியில் இருந்து தொடக்கம் கொண்டிருக்கும். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருந்த ஞானியரில் நீண்ட மரபில், அல்லது தீர்க்கதரிசிகளின் நீண்ட வரிசையில் தான் இறுதியாக வந்தவன் என்றே சொல்வார். வர்த்தமான மகாவீரர் தனக்கு முன் 23 தீர்த்தங்காரர்கள் இருந்ததாகச் சொன்னார். ஏசுவும், முகமது நபியும் அவ்வாறுதான் சொன்னார்கள்.

ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசியால் முன்வைக்கப்படாமல், வரலாற்றின் பரிணாமத்தில் உருவாகி வந்த மதங்களை இயற்கை மதங்கள் என்கிறோம். இந்துமதம் அத்தகையது. பான் மதம் (திபெத்) யூதமதம், ஷிண்டோ மதம் (ஜப்பான்) என பல மதங்கள் உள்ளன உலகில் இருந்த ஏராளமான இயற்கை மதங்கள் இன்று இல்லை. ஐரோப்பாவில் இருந்த கிரேக்கமதம் போன்ற இயற்கை மதங்கள்தான் உலகசிந்தனைக்கே அடித்தளம் அமைத்தவை. அவை மறைந்துவிட்டன.

உலகமெங்கும் இயற்கை மதங்கள் மிகமிகக் கடுமையாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டபடியே உள்ளன. பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மிகச்சிலவே எஞ்சியுள்ளன. பான் மதம், ஷிண்டோ மதம் எல்லாம் பெயரளவுக்கே உள்ளன. யூதமதம் வெறும் குறுங்குழுக்களாகவே நீடிக்கின்றது. இன்று உலகிலுள்ள மிகப்பெரிய இயற்கைமதம் இந்துமதம்தான்.

(மேலும்)
 

 

https://www.jeyamohan.in/174140/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

jeyamohanOctober 22, 2022

nataraj2.jpeg

இந்து மதம் என ஒன்று உண்டா? ( தொடர்ச்சி)

மதங்கள் உருவாகி வரும் முறை

மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது.

இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் உள்ளன. அவை பெரும்பாலும் மூன்று அடிப்படைகள் கொண்டவை என வகுக்கப்பட்டுள்ளன.

அ.நீத்தார் வழிபாடு, மூத்தார் வழிபாடு

ஆ.குலக்குறி வழிபாடு

இ.இயற்கை வழிபாடு.

இந்தப் பகுப்புகள் மானுடவியலாளர்களால் பொதுவாகச் செய்யப்பட்டவை. இவற்றைக்கொண்டு பழங்குடிகளின் ஆன்மிகத்தை புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக, பழங்குடிகள் தங்கள் மறைந்த மூதாதையரை வணங்குகிறார்கள். அது ஓர் எளிய நம்பிக்கையாகவே மானுடவியலாளர் சொல்வார்கள். ஆனால் அது அத்தனை எளியது அல்ல.

பழங்குடிகளிடம் பேசி பதிவு செய்யப்பட்ட உரையாடல்களிலேயே அவர்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பது கண்டடையப்பட்டுள்ளது. மனிதர்கள் இங்கே பிறந்து வருவதற்கு முன் எங்கோ இருக்கிறார்கள் என்றும் இறந்தபின் அங்கே மீள்கிறார்கள் என்றும் பொதுவான நம்பிக்கை உள்ளது. அதாவது மனிதன் ஒரு கருத்துரு (idea) வாக இருக்கிறான். அந்த கருத்துரு பின்னர் பருவுரு (Matter) ஆகிறது. மரணத்திற்குப்பின் மீண்டும் கருத்துருவாக ஆகிறது.

அப்படியென்றால் அவர்கள் வழிபடுபவது எதை? மனிதன் என்னும் கருத்துருவத்தைத் தான். அது சாவுபயம் அல்ல. சாவை புரிந்துகொள்ளமுடியாமல் செய்வதும் அல்ல. கண்ணால் கண்ட ஒன்றில் இருந்து அதன் சாராம்சமான கருத்தைச் சென்றடையும் மனித முயற்சி அது.

அவ்வாறுதான் மாண்டவர்களை வழிபட ஆரம்பித்தனர். பின்னர் மாண்ட அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே கருத்துருவமாக ஆக்கினர். அத்தனை மனிதர்களும் இணைந்த மிகப்பெரிய ஒற்றை மனிதன் என உருவகித்தனர். மிகப்பெரிய சிலைகளாக அந்த கருத்துருவத்தை நிறுவினர். அதுவே பெரும் ஆள் என்னும் பெருமாள். பரமபுருஷன். மானுடம் என்னும் கருத்துருவம். அதை நீங்கள் சாங்கியம் போன்ற மிகத்தொன்மையான மதங்களில் காணலாம்.

பழங்குடிகள் எங்கெல்லாம் இறைசக்தி ஒன்று வெளிப்படுவதாக உணர்ந்தனரோ அதையெல்லாம் வழிபட்டனர். அவற்றை தங்கள் குலங்களின் அடையாளமாகக் கொண்டனர். பாம்பு, யானை, புலி போன்ற மிருகங்கள். மலை, கடல், நதி போன்ற இயற்கையமைப்புகள். மின்னல், இடி, புயல் போன்ற இயற்கை நிகழ்வுகள். எங்குமே பழங்குடிகள் இயற்கையை வழிபடவில்லை – இயற்கையில் வெளிப்படும் தெய்வத்தையே வழிபட்டனர். இருட்டை, நோயைக்கூட தெய்வ வெளிப்பாடாக கருதினர்.

தெய்வம் என்ற ஒன்று உண்டு என்றால், அது இவ்வகையில் மனிதர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொண்டது என்று கொள்வதே முறையான ஆன்மிகப்பார்வையாக இருக்க முடியும். உலகமெங்கும், அனைத்து மக்களுக்கும் அது அவ்வாறு வெளிப்பட்டது.

இந்த பழங்குடி வழிபாட்டுமுறைகள் (worships) என்றே அழைக்கப்பட்டன. அந்த வழிபாட்டுமுறைக்கு ஓர் அமைப்பும், கொள்கையும் உருவாகும்போது அவை மெல்ல மெல்ல குறுமதங்கள் (Cults)ஆகின்றன. இணையான இயல்பு கொண்ட குறுமதங்கள் இணைந்து கொண்டே இருக்கின்றன. இணைந்து இணைந்து இன்னும் பெரிய மரபுங்கள். அந்த பெரிய மரபுகளே முன்பு தர்மம் என்றோ, மார்க்கம் என்றோ, நெறி என்றோ அழைக்கப்பட்டன. இன்று நாம் அவற்றையே மதம் (Religion) என அழைக்கிறோம்.

ஒரு நதி உருவாகி வருவது போலத்தான் இது நிகழ்கிறது. ஒரு ஊற்று மெல்ல சிறு ஓடையாக உருவாகிறது. மேலும் மேலும் ஓடைகள் சேர்கின்றன. அதன்பின் துணையாறுகள் இணைந்துகொள்கின்றன. அது திரண்டு திரண்டு முன்னகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த முதல் ஊற்று என ஒன்றை நாம் உருவகிக்கலாமே ஒழிய அது இதுதான் என சொல்லவே முடியாது. கங்கோத்ரிக்கு முன்னாலும் கங்கை உள்ளது. நதி பெரிதாகும்போது அதில் இருந்து கிளை ஆறுகள் பிரிகின்றன. அதுவும் மதங்களில் நிகழ்கிறது. பெரிய மதங்கள் பிரிந்துகொண்டே இருக்கின்றன.

உலகிலுள்ள இயற்கை மதங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நூறாண்டிலும் அதில் புதிய துணைமதங்கள் இணைந்திருப்பதையும் புதிய கிளைகள் பிரிந்திருப்பதையும் காணலாம். மதங்களின் பெயர்கள் காலந்தோறும் மாறுபடும். ஒட்டுமொத்த கட்டமைப்பே காலத்திற்கேற்ப மாறுபடும்.

ஶ்ரீரங்கத்தில் நின்றுகொண்டு இந்த நதி காவேரி அல்ல; கர்நாடகத்தில் காவேரியே கிடையாது; அங்கே ஹாரங்கி, கபினி, சுவர்ணா என்றெல்லாம்தான் இருந்தது என்று சொல்வதற்கு என்ன பொருள்? ஈரோட்டுக்குமேல் இது பவானி என தனி நதியாக இருந்தது என்று சொன்னால் அதை எப்படி புரிந்துகொள்வது? திருச்சியை பொறுத்தவரை நொய்யலும் அமராவதியுமெல்லாமே காவேரிதான். கீழத்தஞ்சையில் காவேரியில் இருந்து வெண்ணாறு பிரிகிறது. மேலும் பல கிளைநதிகளாகிறது. அவையும் காவேரி என்றே சொல்லப்படுகின்றன. காவேரிப்படுகை என்றே அழைக்கப்படுகின்றன.

மதங்களின் இந்த தொடர்ச்சியான இணைவுச்செயல்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. பழைய சமூகங்கள் கூடுமானவரை பிறரை இணைத்துக்கொண்டு பெரியதாக ஆக முயன்றுகொண்டே இருந்தன. அதுவே வலிமை என அவை அறிந்திருந்தன. இரு பழங்குடிகள் இணையும்போது இரு வழிபாட்டுமுறைகளும் இணைந்தன. இரு சமூகங்கள் இணையும்போது அவர்களின் தெய்வங்களும் ஒன்றாயின.

இது சுரண்டலோ, அடக்குமுறையோ அல்ல. இது எவருடைய சதியும் சூழ்ச்சியும் அல்ல. காழ்ப்பே உருவான உள்ளங்களுக்கு அப்படி தோன்றலாம். ஆனால் கொஞ்சம் வரலாறும் சமூகவியலும் வாசிப்பவர்களுக்குத் தெரியும், இது மானுடசமூகப் பரிணாமத்தின் இயல்பான வழிமுறை.

சுவீரா ஜெயஸ்வால் எழுதிய வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூல் மார்க்சிய ஆய்வுமுறைமை கொண்டது. அது விஷ்ணு, நாராயணன், திருமால், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன் என வெவ்வேறு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் காலப்போக்கில் இணைந்து இணைந்து இன்றைய வைணவம் எப்படி உருவானது என விளக்குகிறது.

சைவமும் அப்படித்தான். வேதங்களில் பேசப்படும் ருத்ரன் போன்ற தெய்வங்களும்; தொல்குடிகளில் பசுபதியும்; லிங்க வழிபாடு, தூண்வழிபாடு, மலைவழிபாடு, அனல்வழிபாடு முதலிய வழிபாட்டு முறைகளும் இணைந்து இணைந்து சைவம் உருவானது.

இந்த இணைவுக்கான ஆன்மிகமான காரணம் ஒன்றையும் சொல்லலாம். இது மனிதன் பிரபஞ்சத்தின் சாராம்சத்தை வெவ்வேறு துளி அறிதல்களாக அறிவதன் விளைவுதான் தனி மதங்கள். அந்த அறிதல்கள் இணைந்து இணைந்து முழுமையறிதல் நோக்கிச் செல்கின்றன.

ஒவ்வொரு அறிதலும் அவ்வாறுதான் நிகழ்கிறது. இயற்பியல் பிரபஞ்சத்தை எப்படி புரிந்துகொள்கிறது? நியூட்டன், ஐன்ஸ்டீன், ஓபன்ஹீமர், ரிச்சர்ட் ஃபெயின்மான் என பலர் பல கோணங்களில், பல பகுதிகளாக அறிந்தவை இணைந்து இணைந்துதான் பிரபஞ்சம் பற்றிய அறிவு திரண்டுகொண்டிருக்கிறது. மெய்யியல் ஞானமும் அவ்வாறே பல ஞானிகளால், பல அறிஞர்களால் பல பகுதிகளாக உணரப்பட்டவை ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் இணைந்தும் ஒன்றாகி இறையறிவாக திரண்டுகொண்டிருக்கிறது.

நாம் அந்த இணைவின் பரிணாமத்தை தெய்வ உருவகங்கள் வழியாக காணலாம். பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன் எல்லாம் விஷ்ணுவின் வடிவங்களே என ஆயின. அது வெவ்வேறு வகை இறையறிதல்கள் இணைந்து ஒரே அறிதலாக ஆவதுதான். பின்னர் ராமனும் கிருஷ்ணனும் அதில் இணைந்தன. ஒரு கட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என ஆயின. ஹரிஹரன், சங்கரநாராயணன், சிவராமன், சங்கர ராமன் என்றெல்லாம் தெய்வ உருவகங்கள் அமைந்தன.

ஒருவர் அறிதலின் பொருட்டு காலத்தில் பின்னால் செல்லலாம்.சிவசங்கரன் என்னும் தெய்வ உருவகத்தை சிவன் விஷ்ணு என பிரிக்கலாம். விஷ்ணுவை பலவாக பிரிக்கலாம். அதில் ஒன்றான பலராமனின் மூலம் எது என தேடிச்செல்லலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில் வேளாண்மக்கள் வழிபட்ட ஒரு தெய்வம். தோளில் மேழியுடன் நின்றிருக்கும் பலராமன் உழவர்களின் அடையாளம். உழவர்கள் அனைவரையும் இணைத்து ஒரே மனித உருவமாக ஆக்கிய வடிவம். அதை மேலும் பின்னுக்கு கொண்டு சென்றால் அதேபோன்ற ஏராளமான உழுபடை தெய்வங்களை நாம் கண்டடையலாம்.

இது வரலாற்றுப்பார்வை. குறியீடுகளின் வரலாற்றைக்கொண்டு சமூக வரலாற்றை ஊகித்தறியலாம். ஆன்மிகப்பரிணாம வரலாற்றையும் ஊகிக்கலாம். மாறாக ‘அய்யய்யோ பலராமனை விஷ்ணுவாக ஆக்கிவிட்டார்களே, அது அடக்குமுறை’ என ஒருவன் கூவுவான் என்றால் அவன் யார்? விஷ்ணுவில் இருந்து பலராமனை பிரிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வான் என்றால் அவன் நோக்கம் என்ன?

ஒன்று அவன் மோசடியாளன். உள்நோக்கம் கொண்ட ஆதிக்கவாதி. பிரித்தாள நினைப்பவன், பிரித்தாளும் கலையில் வல்லுநர்களின் கையாள். அல்லது அவர்களால் ஏமாற்றப்படும் முழு அசடு.

தீர்க்கதரிசன மதங்களுக்கு ஒரு பரிணாமம் உள்ளது. ஒரு தீர்க்கதரிசி தனக்கு முன்னாலிருந்த ஆன்மிகப்பார்வைகளை தொகுத்து, அதற்கு தன் தரிசனத்தின் அடிப்படையில் மையம் ஒன்றை உருவாக்கி, அதை முன்வைக்கிறார். அதையொட்டி பிற்காலத்தில் அவருடைய மாணவர்களால், வழித்தோன்றல்களால் ஒரு மதம் மெல்லமெல்ல உருவாகிறது. அவர்கள் அந்த முதல் தீர்க்கதரிசியை தங்கள் நோக்கில் விளக்கிக்கொள்ளும்போது அந்த மதத்திற்குள் பிரிவுகள் உருவாகின்றன. மேலும் மேலும் ஞானிகள் அந்த மரபில் தோன்றும்போது கிளைகள் தோன்றுகின்றன.

சமணம் இந்தியாவில் ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்னும் இரு பிரிவாக உள்ளது. அதனுள் பல சம்பிரதாயங்கள் உள்ளன. பௌத்தம் புத்தருக்குப் பின் இருநூறாண்டுகளில் மகா காசியபர் காலத்தில் தேரவாதம் (ஸ்தவிரவாதம், நிலைமரபு) அல்லது ஹீனயானம் மற்றும் மகாயானம் (பெருமரபு) என பிரிந்தது. மேலும் மேலும் பிரிந்துகொண்டே இருந்தது. இறுதியாக இந்தியாவில் உருவான மரபு வஜ்ராயனம். அதுவே திபெத்தில் எஞ்சியிருக்கிறது. மிக அண்மையில் உருவான பௌத்த மரபு என்றால் அம்பேத்கர் உருவாக்கிய நவயான பௌத்த மரபைச் சொல்லலாம். இவ்வாறுதான் மதங்கள் பரிணாமம் அடைகின்றன.

இயற்கை மதங்களும் தீர்க்கதரிசன மதங்களும்

தீர்க்கதரிசன மதங்களின் தோற்றத்திற்கு அந்த தீர்க்கதரிசியை அடையாளப்படுத்தலாம். இயற்கை மதங்கள் எப்போது எப்படித் தோன்றின என்று கூறவே முடியாது. இயற்கைமதங்கள் மிகத்தொன்மையானவை என்பதனால் அவற்றில் தொன்மையான பழங்குடி வாழ்க்கையின் நம்பிக்கைகள், குறியீடுகள், சடங்குகள், வாழ்க்கை ஆசாரங்கள் ஆகியவை நிறைந்திருக்கும். காலந்தோறும் அவற்றை புதுப்பித்தபடியேதான் அவை முன்னகர முடியும். ஆனால் இயற்கை மதங்கள் நெகிழ்வானவையாகவும், உள்விரிவுகளை அனுமதிப்பவையாகவும், புதியவற்றை உள்ளிழுத்து வளர்பவையாகவும் இருக்கும்

இயற்கை மதம், தீர்க்கதரிசன மதம் ஆகியவற்றுக்கு அவற்றுக்கே உண்டான பிரச்சினைகள் மற்றும் எதிர்மறைக்கூறுகள் உண்டு. இயற்கை மதங்கள் தொன்மையான ஆசாரங்கள் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக இந்து மதத்தில் உள்ள நீத்தார்ச்சடங்குகள். சனிக்கிழமை ஒருவர் இறந்தால் ஒரு கோழியையும் கொன்று சிதையில் உடன் வைக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகள். இவற்றின் வேரைத்தேடிப்போனால் மனிதர்கள் சமைத்து உண்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கே சென்றுவிட வேண்டியிருக்கும்.

இவற்றில் எவை இன்று தீங்கானவை அல்லது காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் எவை தவிர்க்கமுடியாதவை என்றும் கண்டடைவது எளிதல்ல. ஞானிகளே அதைச் செய்ய முடியும். அவர்களும் கூட எளிதாக மாற்றங்களை கொண்டுவர முடியாது. அவற்றின் தொன்மையாலேயே அவை ஆழமாக வேரூன்றியவையாக இருக்கும். ஆகவே இம்மதங்களுக்குள் ஒரு தொடர் போராட்டம் நிகழ்ந்தபடி இருக்கவேண்டும். ராமானுஜர் முதல் வள்ளலார் வரை, கபீர் முதல் காந்தி வரை இந்து மதத்திற்குள் அது நிகழ்கிறது.

மறுபக்கம், தீர்க்கதரிசன மதங்கள் ஒப்புநோக்க தர்க்கபூர்வமானவையாகவும் கொஞ்சம் நவீனமானவையாகவும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றின் மையச்சிக்கல் ‘நாங்கள் சொல்வதே உண்மை. எங்களுடையது மட்டுமே கடவுள். மற்ற நம்பிக்கைகளும் மரபுகளும் எல்லாமே பிழையானவை, பொய்யானவை, அழிக்கப்படவேண்டியவை, அவற்றை நம்புகிறவர்கள் பாவிகள் அல்லது அறிவிலிகள், அவர்களை மீட்டாகவேண்டும்’ என்னும் அவர்களின் உறுதிப்பாடுதான். உலகில் மாபெரும் மதப்போர்களை உருவாக்கியவை தீர்க்கதரிசன மதங்களே. ஆப்ரிக்காவிலும், தென்னமேரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் மொத்த மக்களினங்களையே கொன்றழித்தவை அவை. மத்தியகால ஐரோப்பாவின் மதவிசாரணைகள் (Inquisition) போன்றவை ஹிட்லரின் யூதப்படுகொலைகள், ஸ்டாலினின் சைபீரிய வதைமுகாம்களை விடக் கொடூரமானவை, இந்தியாவிலும் அவை நிகழ்ந்துள்ளன (Goa Inquisition)

இயற்கை மதங்கள் அவற்றிலுள்ள ஆசாரவாதத்துடனும் தீர்க்கதரிசன மதங்கள் அவற்றின் ஒற்றைப்படையான மூர்க்கத்துடனும் போராடி முன்னகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இயற்கை மதங்கள் நெகிழ்வானவை, அனைத்தையும் உள்ளடக்குபவை. அப்பண்பு பேணப்படவேண்டும். அவை இறுக்கமான அமைப்பாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு ஆகுமென்றால் இயற்கைமதங்கள் பழமையான ஆசாரங்களின் தொகுப்பாக தேங்கிவிடும். தீர்க்கதரிசன மதங்கள் உறுதியான அமைப்பு கொண்டவை. அவை நெகிழ்வுத்தன்மையை அடையவில்லை என்றால் ஆதிக்க அமைப்பாக மாறி ஒடுக்குமுறையை ஆரம்பித்துவிடும். மதங்களுக்குள் ஞானிகள், சீர்திருத்தவாதிகள் தோன்றி இவற்றை நவீனப்படுத்திக்கொண்டும் விரிவாக்கிக்கொண்டும் இருக்கவேண்டும். அதைக்கொண்டே அந்த மதத்தின் மதிப்பு அளவிடப்படவேண்டும்.

இயற்கை மதங்களிலுள்ள தொன்மையான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டுமே அந்த மதங்களின் ஒட்டுமொத்தம் என எடுத்துக்கொண்டு, அவற்றை காட்டுமிராண்டி மரபுகள் என அடையாளப்படுத்தி அழிப்பது முந்நூறாண்டுகளாக உலகில் நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தாக்குதல்களால் பெரும்பாலான தொன்மையான இயற்கைமதங்கள் அழிந்துவிட்டன. அந்த மதங்களில் சேமிக்கப்பட்டிருந்த தொன்மையான பண்பாடுகளின் குறியீடுகளும், படிமங்களும் மறைந்தன. குறியீடுகளாகவும் படிமங்களாகவும் மாற்றப்பட்டிருந்த பண்பாட்டு அறிவும் தத்துவ ஞானமும் அழிந்தன.

இந்து மதம் போன்ற இயற்கை மதத்தில் இரு எல்லைகள் உள்ளன. ஓர் எல்லையில் அது ஒரு தொன்மையான பழங்குடி மதம். பழமையான சடங்குகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் கொண்டது. இன்னொரு எல்லையில் அது தூய தத்துவ மதம். ஒரு கிராமதேவதையின் பூசாரியை நாராயண குரு சந்தித்து வணங்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. ஒரு புகைப்படமும் உண்டு. இரு எல்லைகள். ஒருவர் பழங்குடிப் பண்பாட்டில் இருக்கிறார். இன்னொருவர் தூய வேதாந்தி. இருவருமே இந்துக்கள்தான்.

பழங்குடி மரபிலிருந்து வந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆசாரங்களையும் தொடர்ச்சியாக தத்துவ அறிஞர்களும் ஞானிகளும் எதிர்கொண்டபடியே இருப்பதை இந்து மரபில் காணலாம். ஒருபக்கம் அவர்கள் அந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சடங்குகளையும் காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து, காலத்திற்கு ஒவ்வாதனவற்றை களைந்துகொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அவற்றில் சிலவற்றை தத்துவத்திற்கும் மெய்ஞானத்திற்கும் குறியீடுகளாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

சங்கரர் முதல் காந்தி வரை, திருமூலர் முதல் வள்ளலார் வரை அத்தனை ஞானிகளும் இந்த இரண்டு பணிகளையும் செய்துகொண்டே இருந்தார்கள். அந்த மரபு அழிவற்று தொடர்வது. இந்து மரபு தன்னைச் சீர்திருத்திக்கொண்டும் தத்துவார்த்தமாக ஆக்கிக்கொண்டும் செயலூக்கத்துடன் திகழ ஞானியரே காரணம். அவர்கள் நிகழாத காலகட்டமே இருந்ததில்லை. இன்னும் அவர்கள் வருவார்கள்.

ஆகவே, ஒருவர் இன்று நம்மிடம் வந்து இந்துமதம் என்பதே சில ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மட்டுமே என சொல்கிறார் என்றால் அவர் உண்மையில் சங்கரர் முதல் காந்தி வரையிலான நம் ஞானியரை அவமதிக்கிறார். திருமூலர் முதல் வள்ளலார் வரையிலானவர்களைச் சிறுமை செய்கிறார். அதற்கு அவருடைய மறைக்கப்பட்ட மதவெறியோ, அரசியல் உள்நோக்கங்களோ காரணமாக இருக்கலாம். நாம் அச்சொற்களுக்குச் செவிகொடுத்தோம் எனில் நம்மையே கீழ்மைப்படுத்திக் கொள்கிறோம். அதைக்கூட செய்யலாம், நம் முன்னோரையும் ஞானியரையும் நாம் கீழ்மைப்படுத்திக் கொள்வோம் எனில் நம் தலைமுறைகளுக்குப் பெரும் பாவத்தைச் சேர்த்து வைக்கிறோம் என்றே பொருள்.

(மேலும்)

 

https://www.jeyamohan.in/174144/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து மதம் என ஒன்று உண்டா?-3

jeyamohanOctober 23, 2022

nataraj1.jpeg

இந்து 

இந்து என்னும் மதம்

இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை உருவகிக்கிறோம். இது முன்பு வேறுவேறு பெயர்களில் அறியப்பட்டது.

இந்த மரபின் வேர்கள் வரலாற்றுக்கு முந்தைய பழங்குடி வாழ்க்கையில் உள்ளன. அன்று அவை பலநூறு தனித்தனி குலவழிபாடுகளாக இருந்திருக்கலாம். அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து இணைந்து குறுமதங்களாயின. அவை பின்னர் இணைந்து பெருமதங்களாயின. அவை மேலும் இணைந்து இந்துமதம் என இன்று அறியப்படுகின்றன.

இந்த மரபில் மேலும் மேலும் துணைமதங்கள், புதிய வழிபாட்டு முறைகள் இணைந்துகொண்டே இருக்கின்றன. புதிய வழிபாட்டு முறைகளும், துணைமதங்களும் பிரிந்து உருவாகிக்கொண்டும் இருக்கின்றன. இரு உதாரணங்கள். ஷிர்டி சாய்பாபா வழிபாடு தனித்தன்மை கொண்ட ஒன்று. இஸ்லாமிய ஞானி ஒருவரை இந்து முறைப்படி வழிபடுவது அது. இன்று அது இந்து மரபுக்குள் வந்துவிட்டது. பல இந்து ஆலயங்களில் ஷிர்டி சாய்பாபா வந்துவிட்டார். வள்ளலாரின் ஜோதிவழிபாடு இந்து மரபில் இருந்து தனித்து பிரிந்து அவர் உருவாக்கியது. அது இந்து மரபுக்குள் தனி வழிபாட்டுமுறையாக நீடிக்கின்றது.

அமெரிக்கா சென்றால் சமண தெய்வங்கள் இந்து ஆலயங்களுக்குள் இருப்பதைக் காணலாம். ஏனென்றால் சமணர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள். அவர்களால் தனி ஆலயம் அமைக்க முடியாது. ஆகவே இந்து ஆலய வளாகத்திற்குள் அவர்கள் தங்கள் தெய்வங்களை நிறுவிக்கொள்கிறார்கள். இந்துக்களுக்கு அதில் எந்த சிக்கலும் இல்லை. சமணர்களுக்கும் பிரச்சினை இல்லை. இருநூறாண்டுகளுக்குப்பின் அவை இந்து மரபுக்குள் அமைந்திருக்கலாம்.

இந்த மகத்தான இணைவுச்செயல்பாடை, தத்துவார்த்தமான உள்விரிவை, அனைத்தையும் மறுக்காமல் இணைத்துக்கொள்ளும் நெகிழும் தன்மையை ‘ஆக்ரமிப்பு’ என்றும் ‘அடிமைப்படுத்தல்’ என்றும் நமக்கு விளக்குகிறார்கள் சிலர். எதிர்த்தரப்பாக இருந்த எல்லா மதங்களையும் ஒரு சொல் கூட மிச்சமில்லாமல் அழித்த வரலாறுகள் கொண்ட மதங்களின் மேடைகளில் நின்று அதை நம்மிடம் சொல்கிறார்கள். அந்த மதங்கள் உருவாக்கும் கல்விநிறுவனங்களின் அரங்குகளில் சென்று அப்படி முழக்கமிடுகிறார்கள். அதைக்கேட்டு நாமும் ‘உண்மையா சார்?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அறியாமைக்காக நாம் கூச்சப்படவேண்டாம், அலட்சியம் மற்றும் பொறுப்பின்மைக்காக கூச்சப்பட்டே ஆகவேண்டும்.

இந்துமதத்தின் பரிணாம வரலாற்றை நமக்குக் கிடைக்கும் நூல்கள் மற்றும் தரவுகளில் இருந்து இப்படி தொகுத்துக்கொள்ளலாம்.

இந்து மதம் என நாம் இன்று சொல்லும் இந்த மரபு முதன்மையாக ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம்) ஆறுதரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்) அடங்கியது. ஆறுதரிசனங்களும் ஆறு மதங்களும் ஒன்றுடன் ஒன்று விவாதித்து அது வளர்ந்தது.

அந்த விவாதத்தின் சித்திரம் மிகச்சிக்கலானது. அதை தத்துவப்பயிற்சியும் ஆர்வமும் கொண்டவர்களிடமே விவாதிக்கமுடியும். பிறவி மடையர்களான யுடியூப்வாயர்களுடனும் அரசியலியக்கங்களின் அல்லக்கைகளுடனும் அவற்றை விவாதிக்கப்புகுவது நம் மீதும், நமது முன்னோர் மீதும் சேற்றை அள்ளிப்பூசிக்கொள்வது போல.

ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறு உதாரணம். வைணவம் என பின்னாளில் பெயர்பெற்ற வழிபாட்டுமுறை பொயு ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில்தான் ஒற்றை இயக்கமாக ஆகியது. வைணவத்தின் அடிப்படைப் புராணங்கள் உருவாயின. வழிபாட்டுமுறைக்கான ஆகமநூல்கள் உருவாயின. அவற்றின் அடிப்படையில் அனிருத்தன், பலராமன் போன்ற வெவ்வேறு தெய்வங்களும், துணைத்தெய்வங்களும் வைணவத்திற்குள் ஒருங்கிணைந்தன.

வைணவ வழிபாட்டு மரபின் தத்துவ அடிப்படை பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரருக்கு பின்னர்தெளிவடைய ஆரம்பித்தது. ஆறு தரிசனங்களில் ஆறாவதான உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தம் வைணவத்தை தத்துவார்த்தமாக வலுப்படுத்தியது. ராமானுஜர் (விஷ்டாத்வைதம்), மத்வர் (துவைதம்),நிம்பார்க்கர் (துவைதாத்வைதம்) வல்லபர் (சுத்தாத்வைதம்) என வைணவம் வளர்ந்தது. பதினாறாம் நூற்றாண்டில் வல்லபருக்குப் பின்னரே இன்றைய வடிவை அது அடைந்தது.

அதேபோல சைவத்திலும் சாங்கியம், யோகம், வேதாந்தம் முதலிய ஆறுதரிசனங்கள் ஊடுருவி தத்துவார்த்தமாக அதை வளர்த்தபடியே இருந்தன. சைவம் என எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நூறாண்டிலும் அது வளர்ந்து உருமாறியபடி இருப்பதைக் காணலாம். இன்று நாம் பார்க்கும் சைவம் என்பது பொயு பதினான்காம் நூற்றாண்டில் மெய்கண்டாருக்குப் பின்னர்தான் இவ்வடிவத்தை அடைந்தது.

அதாவது இந்த வழிபாட்டுமுறைகள் எல்லாம் முற்றிலும் வெவ்வேறு ‘மதங்கள்’ (Religions) ஆக இருந்து திடீரென்று ஏதோ ஒரு சதிவேலையால் ஒன்றாக ஆனவை அல்ல. அப்படி எல்லாம் மதங்களை இணைக்கவும் பிரிக்கவும் எவராலும் முடியாது. அணுவளவு வரலாறு அறிந்த எவரும் அதைச் சொல்ல மாட்டார்கள். இந்த வழிபாட்டு முறைகள் தனித்தனித் ‘தரப்புகள்’ ஆக இருந்தபோதிலும் ஒரே அமைப்பின் பகுதிகளாகவே இருந்தன.

ஆறுமதங்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் தொன்மையான நூல்கள் விஷ்ணுபுராணம், அக்னிபுராணம், பிரம்மாண்ட புராணம் போன்ற முதன்மையான புராணங்கள். அவை பொயு 3 முதல் பொயு 6 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவற்றில் மிகமிகத் தெளிவாகவே ஆறுமதங்களும் ஒரே அமைப்பின் பகுதிகளாக இருந்தமை காணக்கிடைக்கின்றது. ஆறு மதங்களின் தெய்வங்களும் உறவினர்களாகவே காட்டப்படுகின்றனர். ஆறுமதக்கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன.

பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷன்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religion களை அவர் ஒன்றாக்கவில்லை. ஆறு தரப்புகளை ஒன்றாக்கினார். அதாவது ஆறு வழிபாட்டுமுறைகளை இணைத்தார். அதன்பின் பொயு 14 ஆம் நூற்றாண்டில் ஆறுமதத்திற்கும் பொதுவான பூசகர் மரபை சிருங்கேரி மடாதிபதியான வித்யாரண்யர் உருவாக்கினார்.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இன்று நாம் இந்துமதம் என்று சொல்லும் இந்த அமைப்பு இன்றிருக்கும் வடிவில் ஒன்றாகவே இருந்துள்ளது. ஒருவர் அதற்குள் சைவத்தையோ வைணவத்தையோ பின்பற்றலாம். ஆனால் பிற வழிபாட்டு மரபுகளுடன் இணைந்தே இருந்தாகவேண்டும். ஆலயங்கள் விஷ்ணுவுக்கோ சிவனுக்கோ உரியதாக இருக்கலாம். ஆனால் அங்கே மற்ற வழிபாட்டு மரபுகளின் தெய்வங்களும் இருக்கும்.

இந்தியாவில் தீவிர வைணவர்கள், தீவிர சைவர்கள் என சொல்லத்தக்கவர்கள் மிகமிகக் குறைவானவர்கள். அவர்கள் ஏதேனும் குறிப்பிட்ட சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக நான்கு வைணவ சம்பிரதாயங்களில் ராமானுஜரின் ஶ்ரீசம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமேவிஷ்ணுவை அன்றி பிறரை வணங்காதவர்கள். ருத்ர சம்பிரதாயம் மற்றும் குமார சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த தடைகள் இல்லை. மாத்வர்கள் வேறு ஆலயங்களில் அர்ச்சகர்களாகவே இருக்கிறார்கள். கர்நாடகத்தில் பல சமண ஆலயங்களிலேயே மாத்வபிராமணர்களே அர்ச்சகர்கள்.

சைவர்களில் வீரசைவ மரபினரே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். மற்றமரபினரில் தீட்சை எடுத்துக்கொண்ட சிலர் மட்டுமே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். எஞ்சியோருக்கு அந்த தடைகள் இல்லை. சாக்தர்களுக்கும் சிவ, விஷ்ணு என்னும் வேறுபாடு இல்லை. அதாவது இந்திய மக்கள் தொகையில் இந்துக்கள் ஏறத்தாழ அறுபது கோடி என்றால் அதில் மொத்தமாக ஐம்பதுலட்சம் பேர் சைவர்கள் அல்லது வைணவர்கள் என தனியாக அடையாளம் கொண்டவர்கள். எஞ்சியோர் இன்று நாம் இந்து மதம் என்று சொல்லும் பொதுவான வழிபாட்டு முறையிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.

ஏறத்தாழ ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக இது இவ்வாறுதான் இருந்தது என்பதற்கான மாபெரும் சான்று தமிழில் சிலப்பதிகாரமே. ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவவரியும் ஒரே நூலில் இடம்பெறுகின்றன அதில். குமாரசம்பவம், ரகுவம்சம் இரண்டையும் எழுதிய காளிதாசன் சைவனா, வைணவனா? காளியை வழிபடும் உவச்சர் குடியில் பிறந்து ராமாயணம் எழுதிய கம்பன் சாக்தனா வைணவனா?

இந்த மாபெரும் ஒற்றைப்பேரமைப்பின் மீதுதான் இன்று திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த முறையில், அத்தனை ஊடகங்களையும் பயன்படுத்தி அதை பிளவுபடுத்தும் பிரச்சாரம் நிகழ்கிறது. கவனியுங்கள், அதற்கு எதிராக ஒரு குரலேனும் உண்மையைச் சொல்லும்படி ஒலிக்கிறதா? ஒரு முணுமுணுப்பாவது கேட்கிறதா? ஏன் இல்லை?

விஷயமறிந்தோர் பலர் உள்ளனர். பேசமுடியாது, பேசினால் கீழ்த்தர வசை, அரசியல் முத்திரை, ஏளனம் மற்றும் அரசியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகவேண்டியிருக்கும். ஆகவே அஞ்சுகிறார்கள். அதுவே இங்குள்ள சூழல். நான் பேசுகிறேன், அதன்பொருட்டு ஒவ்வொருநாளும் வசைபாடப்பட்டு அவமதிக்கப்படுகிறேன். அதை கொண்டாடி கும்மியடிப்பவர்களில் என் மேல் தனிப்பட்ட பொறாமை கொண்ட இந்துக்களும் பலநூறுபேர் இருப்பதைக் காண்கிறேன்.

இந்தியாவிற்கு ஐரோப்பிய சிந்தனைகள் வந்தபோது ஐரோப்பிய சிந்தனைமரபின்படி ஒரு மதம் (Religion) என இந்து மெய்ஞான மரபு அடையாளம் காணப்பட்டது. அவர்களுக்கு முன்னால் இருந்த நிர்வாக முறை என்பது முகலாயர்களுடையது. அவர்கள் இந்த மரபை ஒட்டுமொத்தமாக ஹிந்து என்னும் பாரசீகச் சொல்லால் குறிப்பிட்டனர். ஆகவே அதையே பிரிட்டிஷ் நிர்வாகமும் குறிப்பிட்டது. ஆரம்பகால ஆய்வாளர்களும் அச்சொல்லையே கையாண்டனர். அச்சொல்லே இந்த மதத்திற்கு உரியதாகியது. சீனா நம்மை கைப்பற்றியிருந்தால் லின்-டுக் என இந்த மரபு அழைக்கப்பட்டிருக்கும். லின் -டுக் என்று ஒரு மதமே இல்லை, அது சீனர்கள் உருவாக்கியது என ஒரு சாரார் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

இந்துமதம் என்னும் இச்சொல் பல குழப்பங்களை மரபான அறிஞர்கள் நடுவே உருவாக்கியது. இங்கே மதம் என்றால் உறுதியான தரப்பு என்று ஏற்கனவே பொருள் இருந்தது. Religion என்ற கருத்தே இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த மரபு தர்மம் என்று அழைக்கப்பட்டது. ஆகவே இந்து மதம் என்ற சொல் முன்வைக்கப்பட்டபோது மரபான அறிஞர்கள் அதை நிராகரித்தனர். அப்படி ஒன்று இல்லை என்றும், சைவமும் வைணவமும் இன்னும் பிறவுமே மதங்கள் என்றும் சொன்னார்கள். காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி முதல் வெவ்வேறு மடாதிபதிகள் அதைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது, இந்து என ஓர் உறுதியான ஒற்றைத்தரப்பும் ஒற்றைவழிபாட்டு முறையும் இல்லை என்பதைத்தான். சைவமும் வைணவமுமே மதங்கள் என சொல்லத்தக்கவை என்றுதான். இவையனைத்தையும் ஒன்றாக்கி தன்னுள் அடக்கி இங்கே நிலைத்துள்ள ஒட்டுமொத்த மரபையே நவீனகால அறிஞர்கள் இந்துமதம் என்கிறார்கள் என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மேலும் இந்துமதம் என்று சொல்லி, இன்றுவரை பல்வேறு வழிபாட்டுமுறைகளின் தொகுப்பாக இருக்கும் இந்த மரபை எதிர்காலத்தில் ஒற்றைத்தரப்பாக ஆக்கினால் காலப்போக்கில் சைவமும் வைணவமும் பிற வழிபாட்டு முறைகளும் தங்கள் தனித்தன்மையை இழக்கக்கூடும் என்றும், ஒற்றை நிர்வாகமும் ஒற்றை கருத்தியலாதிக்கமும் உருவாகிவிடக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அந்த அச்சம் நியாயமே என்றும், அவ்வாறு இந்து மதம் என்னும் ஒற்றை அமைப்பு உருவாகக்கூடாது என்றும், இந்து வழிபாட்டுமுறைகளின் தனித்தன்மையை அழித்து அதை ஒற்றைப்போக்காக ஆக்கும் எல்லா முயற்சிகளும் தடுக்கப்படவேண்டும் என்றும் நான் திரும்பத்திரும்ப இருபதாண்டுகளாக எழுதி வருகிறேன்.

ஆனால் அதற்கும் இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. இந்து மரபு சென்ற ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பை நிகழ்த்தியவர்கள் சங்கரர் முதல் சித்பவானந்தர் வரை நாம் வழிபடும் மாபெரும் ஞானிகள். தொடர்ச்சியான தத்துவ உரையாடல்கள் வழியாக, மெய்ஞானப் பரிமாற்றம் வழியாக இந்த இணைப்பும் தொகுப்பும் நடைபெற்றுள்ளது.

இன்று இந்து மதம் என அழைக்கப்படும் மொத்தமான ஞானமரபின் ஒவ்வொரு அணுவிலும் அந்த உரையாடலின் அம்சம் உள்ளது. நம் ஆலயங்கள் அனைத்திலும் அந்த இணைப்பின் வெளிப்பாடுகள் உள்ளன. அந்த இணைப்பின் விளைவான தெய்வங்கள் உள்ளன. 2010ல் தமிழ் சைவமரபின் தலைமை ஆளுமையான சீர்வளர்சீர் தருமை ஆதீனம் மிகமிக தெளிவாக அதை விளக்கினார். அந்த மேடையில் நானுமிருந்தேன். மேலும் பலமுறை அவர் அறுதியாக அதைச் சொல்லியிருக்கிறார்.

இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்று கூச்சலிடுபவர்கள் எவரும் நேற்றுவரை சைவத்தில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. சைவத்தை அறிந்தவர்கள் அல்ல. பலர் இந்துமதம் அழியவேண்டும் என அறைகூவியவர்கள். அதன் ஒரு பகுதியாகவே அவர்கள் சைவம் இந்துமதம் அல்ல என கூவுகிறார்கள்.

இறுதியாக, நீங்கள் இந்து மரபின் உள்ளே அமைந்த எப்பிரிவை ஏற்றவர் என்றாலும் இந்துவே. சைவத்தின் ஆறு அகச்சமயம், ஆறு புறச்சமயம் ஆகியவற்றில் எதைச் சேர்ந்தவர் என்றாலும். வைணவத்தின் நான்கு சம்பிரதாயங்களில் எதில் நம்பிக்கை கொண்டவர் என்றாலும்.

இந்து மதமே மூன்று அடுக்குகளால் ஆனது. நடைமுறை தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் (குலதெய்வங்கள், குடும்பதெய்வங்கள், காவல்தெய்வங்கள், ஊர்த்தெய்வங்கள்) அதன் முதல் அடுக்கு. இன்று எந்த வேள்வியிலும் எந்த பூஜையிலும் குடும்பதேவதா, கிராமதேவதா என சொல்லி இரண்டுக்கும் பூஜை செய்துவிட்டே அடுத்த கட்ட தெய்வங்களுக்கு வழிபாடு செலுத்துகிறோம்.

இரண்டாவது அடுக்கு பெருந்தெய்வங்களால் ஆனது. ஆறு சமயங்களுக்கும் உரிய மையத்தெய்வங்கள் அவை. சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், கணபதி, சூரியன். அதற்கு அடுத்த அடுக்கு தூய தத்துவத்தெய்வம். பிரம்மம். உருவற்றது, எந்தவகையான அறிதலுக்கும், வரையறைக்கும் அப்பாற்பட்டது. உணரப்படுவது, ஆனால் அறியவே முடியாதது. இம்மூன்றில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் நீங்கள் இந்துவே.

இந்து மரபை இன்றைய பொருளில் நாம் இந்து மதம் என்று சொல்கிறோம். சொல்லும்போதே அச்சொல்லில் உள்ள மதம் என்பது மேலைநாட்டு பொருளில்தான் அமைந்துள்ளது, இன்றைய விவாதங்களுக்காகச் சொல்லப்படுகிறது என அறிந்திருக்கிறோம். இன்னொரு தருணத்தில் தர்மம் என்றோ, நெறி என்றோ, வழி என்றோ, மரபு என்றோ சொல்வோம். இந்து மதம் என நாம் இன்று சொல்லும் இது தொல்குடிக்காலம் முதல் இங்கே இருப்பது. ஒவ்வொரு நாளும் புதியவை இணைந்து வளர்வது. உட்பிரிவுகள் வழியாக விரிவது.

இந்து மதம் இன்னும் மாறுதல் அடையும். இன்னும் விரிவாகும். அதில் எது அடங்கும் அல்லது அடங்காது என நம் ஞானியர் முடிவுசெய்யட்டும். நம் அறிஞர்கள் விளக்கட்டும். மேடைப்பேச்சாளர்களும் அரசியல்வாதிகளும் நம் மதத்தை வரையறுக்க வேண்டியதில்லை.

இதைச் சொல்லும்போது ஒவ்வொரு முறையும் தெளிவுபடுத்த வேண்டியது ஒன்று உண்டு. அரசியல்வாதிகள் மதத்தை வரையறுக்க வேண்டியதில்லை என்று சொல்லும்போது எல்லா அரசியல்வாதிகளையுமே உத்தேசிக்கிறோம். இந்து மதத்தை, அதன் பண்பாட்டுக்கூறுகளை அரசியலாக்கும் இந்துத்துவர்கள் அதை ஒற்றை அமைப்பாக ஆக்கி, அதன் உள்விரிவுகளை மறுத்து, ஒரே மேலாதிக்கத்தின்கீழ் கொண்டுவர முயன்றால் அதை வன்மையாகவே கண்டிப்போம். அது இந்து மதத்தை அழிப்பது. கூடவே இந்து மதத்தை உடைத்தும், திரித்தும் விளக்குபவர்களை கண்டிப்போம்.

நேற்றுவரை தர்மம் என அழைக்கப்பட்டு இன்று மதம் என வரையறை செய்யப்பட்டுள்ள இந்த மெய்ஞான மரபு அதற்குள் உள்ள பல வழிபாட்டு மரபுகளும், தத்துவ மரபுகளும் தங்கள் தனித்தன்மையுடன் செயல்படுவதன் வழியாகவே உயிர்த்துடிப்புடன் இதுவரை இயங்கியது. அந்த பன்மைத்தன்மையே நம் ஞானியர், முன்னோர் நமக்குக் காட்டிய வழி. அதை இழக்காமலிருப்போம். ஆனால் அந்த உட்கூறுகள் அனைத்தும் ஒற்றைப்பெரும்பெருக்காக காலப்போக்கில் நம் ஞானியர் வழியாக ஆகியுள்ளன என்றும் உணர்ந்திருப்போம். அந்த உட்கூறுகள் ஒன்றுடனொன்று கொள்ளும் கொள்ளல் கொடுத்தல் வழியாகவே ஒவ்வொன்றும் இதுவரை வளர்ந்தது என்பதையும் மறக்காமலிருப்போம்

(நிறைவு)
 

https://www.jeyamohan.in/174148/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்து மதம், இந்திய தேசியம்

jeyamohanOctober 26, 2022

nata.jpg

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களின் “இந்து மதம் என ஒன்று உண்டா?” பதிவை வாசித்தேன்.

இரண்டுவகை மதங்கள்

1) இயற்கைமதங்கள் : இயற்கையாக வரலாற்றுப்போக்கில் திரண்டு வந்த மதங்கள்

2) தீர்க்கதரிசன மதங்கள் : ஏதேனும் தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளிடமிருந்து தோன்றிய மதங்கள்.

உங்கள் பதிவு, மதங்கள் குறித்த தெளிவான விளக்கம் எனக்கு கொடுத்தது.

இந்து மதம் குரு வழிபாட்டையும் ஏற்று கொண்டிருக்கிறது. ஆகையால் ஒரு இந்து தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளையும் ஏற்று கொள்ள தடை இல்லை என்று நினைக்கிறன். இது சரியா ?

எளிய இந்து மக்கள், அவ்வாறு ஏற்று கொண்டு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும், நாகூர் தர்காவிற்கும் சென்று வருகின்றனர்.

மதம் (religion) குறித்து உண்மையான புரிதல் இல்லாமல் அரசியல் ஒன்று திரட்டலுக்காக மற்ற மதத்தினர் மீது வன்மம் வளர்ப்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

’ஐரோப்பியர் சொல்லும் religion என்பது நவீனக்கருத்து’ என்கிறீர்கள்.

மதம் (religion) போலவே இந்தியாவில் ஐரோப்பியர் சொன்ன தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறேன். ஐரோப்பியர்களே தற்போது தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) விட்டு ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி நகர்ந்து விட்டனர். அது போல வருங்காலத்தில் ஒரு சர்வதேச ஒன்றியம் உருவாகலாம்.

தயவு செய்து தாங்கள் தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

மிக்க நன்றி

அன்புடன்

சந்தானம்

***

அன்புள்ள சந்தானம்,

இக்கேள்விகளுக்கான பதில்கலையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விரிவாகச் சொல்லியிருப்பேன் என நினைக்கிறேன். ஆயினும் இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக மீண்டும் சொல்கிறேன்.

இந்துமதத்தின் இரண்டு அம்சங்கள் பிற தரிசனங்களையும், பிற வழிபாட்டு முறைகளையும் ஏற்க உதவும் அடிப்படைகளாக உள்ளன. ஒன்று, பிரம்மம் என்னும் தத்துவ வடிவமான தெய்வ உருவகம். இரண்டு குருவழிபாடு.

பிரம்மம் என்னும் உருவற்ற, விளக்கத்த்திற்கெல்லாம் அப்பாற்பட்ட, எந்த வகையிலும் வகுத்துரைக்க முடியாத ஒரு கருத்துருவ தெய்வமே இந்து மரபின் மையம். அது இப்பிரபஞ்சமாக ஆகி நிற்பது, இப்பிரபஞ்சத்தின் முதல்வடிவமாக நிலைகொள்வது, இப்பிரபஞ்சத்தின் சாரமாகவும் இருப்பது. அது எந்த மதத்திற்கும், எந்த ஞானிக்கும், எந்த நிலத்திற்கும், எந்த சமூகத்திற்கும் உரிமையானது அல்ல. எல்லா ஞானியரும் பிரபஞ்ச சாரமாக உணர்வது அதையே. எல்லா சாமானியரும் ஏதேனும் ஒரு கணத்திலேனும் அதை உணர்ந்திருப்பார்கள்.

ஆகவே, எல்லாவகையான பிரபஞ்ச சாரம் பற்றிய தரிசனங்களும் பிரம்மத்தை உணர்வதுதான். எல்லா தெய்வங்களும் பிரம்மத்தின் வடிவங்களே. ஆறுகள் எல்லாமே கடலில் சென்றே சேரவேண்டும் என்பதைப்போல எல்லா அறிதல்களும் அதைப்பற்றிய அறிதல்களே என சாந்தோக்ய உபநிடதம் சொல்கிறது.

ஆகவே ஓர் இந்துவுக்கு கிறிஸ்து, அல்லா என எந்த தெய்வத்தை ஏற்பதும் பிழையல்ல. எதற்கும் தடையோ விலக்கோ இல்லை. அப்படிச் சொல்ல இங்கே எந்த அதிகார மேலிடமும் இல்லை. இந்து என உணர்பவர் சென்றகாலத்தில் பௌத்த, சமண ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான நூலாதாரங்கள் உள்ளன. (சிலப்பதிகாரம் உட்பட)

இந்து என உணர்பவர் மாதாகோயிலுக்குச் செல்லலாம். மசூதிக்கும் செல்லலாம். நான் செல்வதுண்டு, வழிபடுவதும் உண்டு. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக. நாராயண குருகுலம், ராமகிருஷ்ண மடம் போன்ற வேதாந்த குருகுலங்களில் எல்லா மதப்பிரார்த்தனைகளும் ஒலிப்பதுண்டு.

இந்து மதம் என நாம் இன்று அழைக்கும் இந்த மரபுக்குள் பல சம்பிரதாயங்கள் உண்டு. வைணவர்களின் ஸ்ரீசம்பிரதாயம் போல. அவர்கள் அந்தச் சம்பிரதாயத்திற்குரிய நெறிகளை, விலக்குகளை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு ஆசாரியார்கள் எனப்படும் தலைமைக்குருநாதர்களும், நிர்வாக அமைப்புகளும் உள்ளன. அவர்களின் வழி இதற்குள் தனி. ஆனால் அப்படி ஏதேனும் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இந்துக்களில் அரைசதவீதம்பேர்கூட இருக்க வாய்ப்பில்லை.

எல்லா மெய்ஞானமும் பிரம்மஞானமே என்றால் எல்லா ஞானியரும் மெய்யாசிரியர்களே. ஆகவே குருவழிபாடு இந்துக்களுக்கு முக்கியமானது. கபீரும் ஷிர்டி சாய்பாபாவும் குருதெய்வங்களாக ஆனது அப்படித்தான். ஆகவே ஓர் இந்து சூஃபிகளை வணங்கலாம். நான் சவேரியார் ஆலயத்திற்கும் செல்வதுண்டு. சூஃபி தர்காக்களுக்கும் செல்வதுண்டு.

இவற்றை கட்டுப்படுத்தவும், தண்டிக்கவும் இன்றுவரை எந்த தலைமையமைப்பும் இல்லை. அவ்வாறு ஒன்றை உருவாக்கி கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பிக்கையில் இந்துமதம் அழியத் தொடங்கும். நாம் – பிறர் என்னும் பேதம் இந்துக்களுக்கு சமூகவாழ்க்கையில் இருக்கலாம், அது மனித சுபாவம், அதை தவிர்ப்பது கடினம். ஆனால் அதைக் கடக்காமல் இந்துமெய்மையை இந்துக்கள் சென்றடைய முடியாது.

நாம் – பிறர் என்னும் இரட்டைநிலையை, அதன் விளைவான காழ்ப்பை உருவாக்கிக் கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் இந்துக்களின் ஆன்மிகப்பயணத்திற்கு தடையானவர்கள். இந்துக்கள் இன்று கடந்தேயாகவேண்டிய ஆன்மிகப்பெருந்தடை இந்த பிளவரசியலும் காழ்ப்புகளும்தான்.

ஆனால் இன்று இதை இந்து அரசியல்நோக்கிச் செல்லும் பெரும்பான்மையிடமும் சொல்லமுடியாது. மறுபக்கம் இந்துமெய்மையை ஒட்டுமொத்தமாகத் துறக்காதவர்கள் அனைவருமே இந்துத்துவர்கள் என்று கூச்சலிடும் இங்குள்ள அரைவேக்காட்டு முற்போக்காளர்களிடமும்

சொல்லமுடியாது. இந்துக்களை இந்துத்துவர்களாக ஆக்க பெரும்பாடுபடுபவர்கள் இரண்டாம் வகையினரே.

என் குரல் சிலரையே சென்றடைகிறது. இங்குள்ள இருமுனைப்பட்ட காழ்ப்புகளால் அது திரிக்கப்படுகிறது. ஆயினும் இங்கே ஒருவன் இதை நா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தான் என்றாவது இருக்கட்டும் என்றே இதை பதிவுசெய்கிறேன்.

*

மதம் என்பதைப் போலவே நவீனத் தேசம் என்னும் கருத்தும் ஐரோப்பிய வருகையே. ஆனால் ஐரோப்பியக் கருத்துக்களை வடிகட்டி விலக்கிவிட்டு நாம் இன்று சிந்திக்க முடியாது. நாம் இன்று புழங்கும் கருத்துக்களில் கணிசமானவை ஐரோப்பா நமக்களித்தவை.

இக்கருத்துக்களை நாம் பயன்படுத்தும்போது இரண்டு விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும்

அ. அக்கருத்தின் ஐரோப்பிய அர்த்தத்தில் அக்கருத்து உருவாவதற்கு முன்பிருருந்த சிந்தனைகளையும், வரலாற்றையும் வகுத்துவிடக்கூடாது. உதாரணமாக மதம் என்னும் சொல் மேலைநாட்டுப்பொருளில் religion என்ற வகையில் இங்கே வந்து முந்நூறாண்டுகளே ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கே எவையெல்லாம் மதம் என்று சொல்லப்பட்டனவோ அவற்றை எல்லாம் இன்றையபொருளில் religion என்று அர்த்தம்கொள்வது பிழையானது. அந்த எச்சரிக்கை நமக்கு வேண்டும்.

ஆ. ஒர் ஐரோப்பியக் கருத்தை நாம் கையாளும்போது அதன் ஐரோப்பிய வரலாற்றுப்பின்னணியை, தத்துவப்பின்னணியை விலக்கி இந்தியச் சூழலில் அது தனக்கென உருவாக்கிக்கொண்ட அர்த்தங்களுடன் கையாளலாம். அந்த பிரக்ஞை இருந்தால்போதுமானது. மதம், தேசம், தெய்வம், தனிமனிதன் என நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான கலைச்சொற்களுக்கான அர்த்தங்களை இப்படித்தான் நாம் வகுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த அடிப்படையில் மதம் என்னும் சொல்லை நாம் இன்று பயன்படுத்தலாம். இந்து மதம் என்று சொல்லலாம். ஆனால் ஐரோப்பியப்பொருளில் அல்ல. ஐரோப்பியப்பொருளில் மதம் என்பது

அ. தெளிவாக வரையறை செய்யப்பட்ட தெய்வங்கள்

ஆ. மையப்படுத்தப்பட்ட தத்துவம்

இ. மூலநூல், அல்லது மூலநூல் தொகை

ஈ. மத அதிகாரம் கொண்ட அமைப்பு

உ. தெளிவாக வரையறை செய்யப்பட்ட வழிபாட்டுமுறைகள் மற்றும் ஆசாரங்கள்

ஆகியவை கொண்டதாக இருக்கும். அந்த நான்குமே இந்துமதம் என நாம் சொல்லும் அமைப்புக்கு இல்லை. நாம் இன்று இது மதம் என்று சொல்வது நேற்றுவரை தர்மம் என்று சொல்லப்பட்ட ஒரு மெய்ஞானப் பரப்பு. அதற்குள் பல மெய்ஞான வழிகள் உண்டு என்னும் புரிதல் நமக்கிருக்கவேண்டும்.

அதேதான் தேசம் என்னும் கருத்துருவிற்கும். நான் ஐரோப்பா பதினாறாம் நூற்றாண்டுமுதல் உருவாக்கி வந்த ‘பண்பட்டு அடிப்படையிலான தேசியம்’ என்னும் கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதை முப்பதாண்டுகளாக திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். பண்பாடு என்னும்போது மதம், மொழி, இனம் ஆகிய அனைத்தையும்தான் குறிப்பிடுகிறேன்.

பண்பாட்டுத் தேசியம் ஒரு குறிப்பிட்ட மக்களை ஒரு நிலத்தின்மேல் அறுதி உரிமை கொண்டவர்கள் ஆக்குகிறது. எஞ்சியவர்களை சிறுபான்மையினர் ஆக்குகிறது. எந்நிலையிலும் நிலமற்றவர்களாக அவர்களை மாற்றுகிறது. அதுவே ஃபாஸிசம்.

அதாவது நான் தேசம் என்பது ‘உயிருள்ள’ ஓர் அமைப்பு இயல்பான ஓர் அமைப்பு (organic) என நம்பவில்லை. இந்தியா ஒன்றாகத்தான் இருக்கமுடியும் என்றோ தமிழகம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும் என்றோ நினைக்கவில்லை. தேசம் என்பது ஒரு நிலப்பகுதியின் மக்கள் ஒரே நிர்வாகத்தின்கீழ் இருக்கலாம் என அவர்களே முடிவெடுத்து உருவாக்கிக்கொள்ளும் ஓர் அமைப்பு மட்டுமே.

அவ்வாறு அவர்கள் முடிவெடுக்க காரணமாக அமைவது நிலப்பகுதியின் வாய்ப்புகளாக இருக்கலாம். வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். பொருளியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த தேச அமைப்பின் கீழ் அதன் ஒவ்வொரு கூறும் வளர்ச்சிபெறவேண்டும். எதுவும் அழுத்தி அழிக்கப்படலாகாது.

இந்தியா ஏன் ஒன்றாக இருக்கவேண்டும்? அதற்கான வரலாற்றுக்காரணம் ஒன்றை பலகாலமாகச் சொல்லிவருகிறேன். இந்த நாடு வணிகத்தாலும், போராலும் நிகழ்ந்த மக்கள்பெயர்வுகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகக் கலக்கப்பட்டுவிட்டது. இங்கே எல்லா நிலப்பகுதிகளிலும் எல்லாரும் வாழ்கிறார்கள். மொழி, இன, மத அடிப்படையிலான மக்கள்திரள் கலந்து வாழ்கிறது இங்கே.

ஆகவே இந்த தேசம் ஒன்றகாவே திகழமுடியும். இதில் எந்தப் பிரிவினைவாதமும் பேரழிவையே உருவாக்கும். அதற்குச் சமகாலத்தில் பெரிய சான்று கஷ்மீரும் வடகிழக்கும்தான். தனித்தேசியம் பேசுபவர்கள் அனைவருமே குறுகிய மொழித்தேசியமோ, இனத்தேசியமோதான் கொண்டிருக்கிறார்கள். அவை எல்லாமே முதிரா ஃபாசிசங்கள்தான்.

ஆனால் , இந்தியதேசம் என்பது அதுவே ஒரு மூர்க்கமான ஃபாஸிச அமைப்பாக ஆகி, அதன் உட்கூறுகளை எல்லாம் சிதைக்கும்தன்மை கொண்டிருக்கும் என்றால் இந்தியதேசியம் என்பதை மறுப்பதும் இயல்பானது என்றே கருதுவேன்.

ஜெ

 

https://www.jeyamohan.in/174436/

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
    • 22 DEC, 2024 | 09:49 PM   இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/201905
    • ஆளணிப்பற்றாக்குறையே சுகாதாரத் தொண்டர்கள், தொண்டராசிரியர்கள் ஆகியோருக்கு வாய்ப்பாக அமைகிறது. தற்போது தொண்டராசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலுள்ள திரியிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெளிவாக நிலைமைகளை எடுத்துச் சொல்கிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.