Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Argentina Fans-ஐ நடுங்க வைத்த France Player Kylian Mbappé - அந்த இரு நிமிட ஆட்டம் பார்த்தீர்களா?

  • Replies 54
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சண்டை செய்வோம்' - இறுதிப்போட்டி இடைவேளையில் எம்பாப்பேவின் உணர்ச்சிமிகு உரை

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிலியன் எம்பாப்பே

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின்போது, ஆட்ட இடைவேளையில் எம்பாப்பே அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசிய காணொளி வெளிவந்துள்ளது.

அந்தப் போட்டியின் 80வது நிமிடத்தில் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் தொடங்கி பிரான்ஸ் அர்ஜென்டினாவுக்கு பெரும் சவால் விடுத்தது. முதல் பாதி முடிந்தபோது லியோனெல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றியின் விளிம்பில் இருந்தது. அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை விட முன்னிலையில் இருந்தது.

அதுவரை பிரான்ஸால் எதிரணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மெஸ்ஸியின் அணிக்குக் கடும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிலியன் எம்பாப்பே, அதுவரை பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தியிருக்கவில்லை.

அந்த நேரத்தில், ஆட்ட இடைவேளையின்போது அவர் தனது அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார். அப்போது, அவர்களால் மீண்டும் போட்டியைத் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்பதையும் ஃபிஃபா உலகக்கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்பதையும் நினைவூட்டினார்.

 

மேலும், “இது உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி. நம்முடைய வாழ்நாள் போட்டி,” என்று உடை மாற்றும் அறையில் வீரர்களிடம் எம்பாப்பே கூறினார்.

“எப்படி இருந்தாலும், இதைவிட நாம் மோசமாகிவிட முடியாது. ஆகவே, நாம் மீண்டும் களத்திற்குச் செல்வோம். அவர்களை விளையாட விடுவோம் அல்லது கொஞ்சம் தீவிரம் காட்டி சண்டையில் இறங்கி, வேறு ஏதாவது செய்வோம் நண்பர்களே!

ஏனென்றால், இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி” எம்பாப்பே கூறுவதை அந்தக் காணொளி காட்டுகிறது.

மேலும், “அவர்கள் இரண்டு கோல்களை அடித்துவிட்டார்கள். நாம் இரண்டு கோல்கள் பின் தங்கியுள்ளோம். ஆனால், மீண்டுவரலாம். நண்பர்களே, இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடியது,” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்சாம்ப்ஸ், “உங்களுக்கு ஒரு வித்தியாசத்தைச் சொல்கிறேன். அவர்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை விளையாடுகிறார்கள். ஆனால், நாம் அப்படி விளையாடவில்லை,” என்று கூறுகிறார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டிசம்பர் 18ஆம் தேதியன்று லுசைல் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைத் தொடர்ந்து கோப்பை வழங்கும் விழாவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், கிலியன் எம்பாப்பேவுக்கு ஆறுதல் கூறினார்.

இரண்டாம் பாதியில் அணியால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தது என்றால் அதற்குக் காரணம் எம்பாப்பே உடை மாற்றும் அறையில் நிகழ்த்திய அந்த உரையாக இருக்கலாம். அதோடு, அவர் 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்ததும் அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோல் அடித்ததும் அணிக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.

பிறகு, மெஸ்ஸி மூன்றாவது கோலை அடித்து அர்ஜென்டினாவை முன்னிலைக்குக் கொண்டுவந்தபோது, 97வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டுமொரு கோல் அடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் நட்சத்திர வீரரான அவர், மூன்று கோல்களை அடித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாதனை செய்தார்.

எம்பாப்பே, 1966ஆம் ஆண்டில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஜெஃப் ஹர்ஸ்டின் செய்ததற்குப் பிறகு, உலககோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது நபர் என்ற சாதனையை எம்பாப்பே சாதித்தார்.

ஆனால், ஆட்டம் இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றபோது 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அர்ஜென்டினா லுசைல் மைதானத்தில் கோப்பையை வென்றது.

எம்பாப்பேயின் சாதனைகள்

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4. 

அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது.

போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.

23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். 

இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13.

https://www.bbc.com/tamil/articles/c9e19g2m4r4o

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and suit
 
படத்தில் கெமரூன் வம்சாவளி, பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் கிலியான் எம்பாப்பே தனது தந்தையுடன்.
 
இவரது தந்தை ஆப்ரிக்க கெமரூன் நாட்டவர். தாயோ அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்.
எம்பாப்பே கெமரூன் நாட்டுக்காக விளையாட வேண்டுமென்பது அவரது தந்தையின் விருப்பம்.
ஆனால் தாயின் விருப்பமோ மகன் அல்ஜீரிய அணிக்காக விளையாட வேண்டுமென்பதே.
 
ஆனாலும் குறித்த இருநாட்டு கால்பந்து சம்மேளனங்களும் அவரது திறமையை மதித்து அவரை தத்தமது அணிக்கு தேர்வு செய்யும் விடயத்தில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை.
அதிலும் கெமரூன் கால்பந்து சம்மேளன அதிகாரியொருவர் எம்பாப்பேயின் தந்தையிடம் லஞ்சம் கோரினார் என்ற செய்தியும் உள்ளது.
 
ஆனால் எம்பாப்பே எனும் மிகப்பெரும் நட்சத்திரத்தின் பெயரும், திறமையும் உலகின் நாலாபுறமும் பேசு பொருளாக மாறியதன் பின்னர்தான் குறித்த இரு நாடுகளிலும் பலரது கண்கள் திறந்தன; அவர்களது பார்வை எம்பாப்பேயின் மீது பாய்ந்தன.
ஆனால் என்ன பயன்?
 
பினோய்ட் இகட்டோ என்ற கெமரூன் அணியின் முன்னாள் வீரர் எம்பாப்பே தனது தந்தை வழியான தாய்நாடு கெமரூனுக்காகத்தான் விளையாடியிருக்க வேண்டுமென கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
ஆனால் இனி ஆகப்போவதுதான் என்ன?
இதில் பாரிய படிப்பினை உள்ளது.
இன்று பல நாடுகளிலும் பல துறைகள் எழும்ப முடியாது, வீழ்ச்சி அடைந்ததற்குரிய பிரதான காரணங்களாக:
அரசியல் செல்வாக்கு, லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றமை, திறமைக்கு முன்னுரிமை வழங்காமை போன்றவையே இருக்கின்றன.
 
இது கெமரூன், அல்ஜீரியா ஆகிய இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல.
எமது நாட்டுக்கும், எமது நாட்டிலுள்ள பல ஊர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
விளையாட்டுக்கு மட்டுமல்ல. ஏனைய துறைகளுக்கும் பொருந்தும்...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'FIAWORLDCUP Qatar2022 ay 2022 FIFA உலகக் கோப்பைக்காக கத்தாருக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து பஸ் வண்டிகளையும் கத்தார் அரசினால் லெபனன் நாட்டுக்கு அன்பளிப்பாக வழங்குகிறது'

 

May be an image of 2 people and text that says 'ay 2022 FIFA உலகக் கோப்பைக்காக கத்தாருக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து பஸ் வண்டிகளையும் கத்தார் அரசினால் லெபனன் நாட்டுக்கு அன்பளிப்பாக வழங்குகிறது Qatar lank ans இந்த ஏழை உன் கண்ணுக்கு தெரியலையா'

பஸ் எல்லாம் வேண்டாம். கப்பல் இருந்தா அனுப்புங்க,  கனடா போறதுக்கு. 😂

Edited by தமிழ் சிறி

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு தங்கத்தில் ஐ போன் பரிசளித்த மெஸ்ஸி!

LionelMessi.jpg

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, சக ஆர்ஜென்டினா வீரர்களுக்காக 35 கோல்ட் ஐபோன்களை ஓர்டர் செய்துள்ளதாக தகவல். இந்த போனை அவர்களுக்கு அன்பு பரிசாக வழங்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி. கட்டார் நாட்டில் நடைபெற்ற இந்த தொடரில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வாகை சூடி இருந்தது ஆர்ஜென்டினா. இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணியில் இடம் பிடித்திருந்த வீரர்கள் மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோல்ட் ஐபோனை மெஸ்ஸி வழங்க உள்ளாராம்.

இந்த போன்களில் வீரர்களின் பெயர், ஜெர்சி எண் மற்றும் ஆர்ஜென்டினா அணியின் லோகோ போன்றவை பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல். வீரர்களுக்கு பிரத்யேக சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்ற யோசனையில் மெஸ்ஸி இருந்துள்ளார்.

உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தங்களை மெஸ்ஸி தொடர்பு கொண்டதாவும். அதன்போது வழக்கமாக பரிசாக கொடுக்கப்படும் கைக்கடிகாரம் போன்றவை வேண்டாம் என அவர் சொன்னதாகவும். அதன்படி கோல்ட் ஐபோன் யோசனையை தங்கள் தரப்பில் கொடுத்தாகவும் ஐடிசைன் கோல்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பென் தெரிவித்துள்ளார்.

ஐபோன் கோல்ட்: ஐடிசைன் கோல்ட் எனும் நிறுவனம் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட கலைத்துவம் மிக்க கோல்ட் ஐபோன்கள் மற்றும் மொபைல் கேஸ்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. தற்போது மெஸ்ஸி கொடுத்த ஓர்டரின் பேரில் 35 கோல்ட் ஐபோன்களை வடிவமைத்து அவரிடம் வழங்கியுள்ளது. மெஸ்ஸி, ஐபோன் 14 மொடலை ஓர்டர் செய்ததாக தெரிகிறது.

Untitled-1-1.jpg

https://thinakkural.lk/article/243188

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.