Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
915250.jpg  
 

பண்டோரா எனும் கிரகத்தில் வித்தியாசமான உருவத்தையும், நிறத்தையும் கொண்ட நவி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதியில் உள்ள இயற்கை கனிமவளங்களை சூறையாட நினைக்கும் ராணுவத்தினர், அந்த மக்கள் மீது போர் தொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடையும். அதன் நீட்சியாக தொடங்கும் தற்போதைய இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படத்தில் ராணுவத்தால் பண்டோராவுக்கு அனுப்பப்பட்ட ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) தனது மனைவி நெய்த்ரி (ஜோய் சால்டனா) மற்றும் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். துரோகம் இழைத்த ஜேக் சல்லியை பழிவாங்க மிகப்பெரிய படையைத் திரட்டி வரும் கர்னல் குவாரிச் (ஸ்டீபன் லேங்) பழிதீர்த்தாரா? இல்லையா? பண்டோரா கிரகம் என்னவானது? - இதுதான் திரைக்கதை.

‘அவதார்’ எனும் மாய கனவுலகில் மிதக்கச் செய்து பிரமிப்பூட்டிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. வெண்திரை வழியே நீலவண்ணம் செறிந்த அந்த மாய உலகிற்குள் இம்முறை வனத்தைக் கடந்து கடல் வழிப் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குநர். நவி இன மக்களின் நிறமும், கடலின் நீரின் நீல வண்ணமும் சங்கமிக்கும் இடத்தில் ஊடாக செல்லும் கடல்வாழ் உயிரினங்கள், வண்ணத்துப்பூச்சியின் அழகை விஞ்சும் மிதக்கும் பஞ்சு பூச்சிகள், கடல்நீருக்குள்ளியிருந்து ஒளி உமிழும் சின்ன சின்ன அழகிய உயிரினங்கள், விரிந்து குலுங்கும் பூக்கள், ஆச்சரியமூட்டும் டிராகன்கள், கருணையுள்ளம்கொண்ட ராட்சத மிருகம் என அட்டகாசமான காட்சி அனுபவத்தை கிராஃபிக்ஸின் வழியே கூட்டி தான் முன்பு படைத்த உலகை இன்னும் மெருகேற்றி அழகூட்டியிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.

மிருகங்களோடும், மரம் செடி கொடிகளோடும் தங்கள் கூந்தலை ஒட்டவைத்து, அவற்றோடு உறவாடும் காட்சிகள், ராட்சத மிருகத்துடனான சிறுவனின் பாசம், கோபம் கொள்ளும்போது நவி மக்கள் வெளிப்படுத்தும் அந்த முகபாவனைகள் என ரசித்துப் பார்க்க திரை முழுக்க நீலத்துடன் புதுமையும் கலந்திருக்கிறது.

அந்த ஒட்டுமொத்த மாய உலகமுமே 3டி கண்ணாடியின் வழியே நம் கண்முன் விரிந்து, அந்த உலகில் நாமே சஞ்சரிப்பது போன்ற உணர்வை கொடுப்பதுதான் மொத்தப் படத்தின் க்ராஃபிக்ஸுக்கான வெற்றி. குறிப்பாக, எதிரிகளுடன் நவி இன மக்கள் நடத்தும் இறுதிக்காட்சி யுத்தம் அட்டகாசம்!

ஒளி - ஒலிக் கலவை, தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என நல்ல திரையரங்குகளில் காணும் பார்வையாளர்களுக்கு சிறந்த காட்சி அனுபவம் உறுதி. சாம் வொர்திங்டன், ஜோய் சால்டனா, ஸ்டீபன் லேங், கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நேர்த்தியான நடிப்பின் வழி யதார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நம்முடன் உரையாடுவதன் உணர்வால் படம் உயிர்கொள்கிறது.

‘அவதார்’ படத்தின் முதல் பாகம் ஒரு புதிய உலகை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியிருந்தது. அதன் நீட்சியாக நீளும் இந்த இரண்டாம் பாகத்தில் எந்தவித புதுமையையும் நுழைக்கப்படாமல் திரைக்கதையில் ஆங்காங்கே கற்பனை வறட்சி மேலிடுகிறது. காட்சிகளாக பிரமாண்டமாக விரியும் இப்படம் கதைக்குள்ளியிருந்து வெளிப்படும் சுவாரஸ்யம் சொற்பமே.

கனிம சுரண்டலுக்கு எதிராக நிற்கும் வேற்று கிரகவாசிகளின் அந்தப் போராட்டம், உறுதி என முதல் பாகத்திலிருந்த கதையின் அடர்த்தி, இரண்டாம் பாகத்தில் வெறும் குடும்பக் கதையாக சுருண்டு வறண்டிருப்பது ஏமாற்றம். வெறுமனே நாயகன் ஜேக் சல்லி தனது குடும்பத்தை எதிரிகளிலிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டும், சென்டிமென்ட் காட்சிகள் வழியே உரையாடிக் கொண்டுமிருப்பது சோர்வு.

மொத்தத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அட்டகாசமான காட்சி அனுபவத்தை வழங்கி, குடும்பக்கதையாக வழிமாறி திரைக்கதையில் போதிய சுவாரஸ்யமின்றி வறண்டிருக்கும் நீ......ளம் தோய்ந்த ‘குடும்பங்கள் கொண்டாடும்’ ஹாலிவுட் படம்!

‘Avatar: The Way of Water’ Review - ஹாலிவுட்டில் ஒரு ‘குடும்பங்கள் கொண்டாடும்’ வெற்றி! | Avatar: The Way of Water movie review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் - சினிமா விமர்சனம்

அவதார்-2 திரைப்படம்

பட மூலாதாரம்,AVATAR/TWITTER

16 டிசம்பர் 2022

நடிகர்கள்: சாம் ஒர்திங்டன், ஜோ சல்தானா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், க்ளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர்; ஒளிப்பதிவு: ரஸ்ஸல் கார்ப்பன்டர்; இசை: சிமோன் ஃப்ராங்ளன்; கதை, இயக்கம்: ஜேம்ஸ் கேமரான்.

2009ஆம் ஆண்டில் வெளிவந்த அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் இது. முதல் பாகம் வெற்றியடைந்ததும் அடுத்த பாகத்தை 2014ஆம் ஆண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மேலும் சில பாகங்களை உருவாக்க நினைத்ததாலும், புதிய தொழில்நுட்பம் தேவைப்பட்டதாலும் முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாம் பாகம் வெளியாயிருக்கிறது.  முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், உற்சாகம் குறையாமல் இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இப்போது உலகம் முழுவதும் சுமார்  50,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் தற்போது வெளியாகியிருக்கிறது. உலகில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

 

முதல் பாகம், பண்டோராவின் வனப் பகுதியில் நடந்தது எனில், இந்த இரண்டாவது பாகம் கடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் கதை இதுதான்: மனிதனாக இருந்து நவியாக மாறிய ஜாக் சல்லியும் நவியின் இளவரசி நேத்ரியும் சேர்ந்து 4 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆகாயவாசிகள் Vs மனிதர்கள்

அவர்களோடு மனிதக் குழந்தையான ஸ்பைடரும் ஒன்றாக வாழ்கிறான். ஆனால், பூமியில் வசிக்கும் மனிதர்கள் இவர்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.

மீண்டும் பண்டோராவுக்கு வரும் அவர்கள், ஜாக்கை பிடித்து ஒழிக்க நினைக்கிறார்கள். இதனால், அங்கிருந்து ஜாக்கின் குடும்பம் புறப்பட்டு கடல் பிரதேசத்தில் வாழும் மெட்கயினாவுக்கு வருகிறது.

புதிய சூழலோடு அவர்கள் பொருந்த நினைக்கையில், அங்கேயும் வந்துவிடுகிறார்கள் ஆகாயவாசிகளான மனிதர்கள். அவர்களை வென்று, நவி குடும்பத்தினர் நிம்மதியாக வசித்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், இதற்கு 4.5 நட்சத்திரங்களைக் கொடுத்திருக்கிறது. இந்த வருடத்தின் மிகச் சிறந்த சினிமா அனுபவம் இந்தப் படம் என்கிறது அந்த நாளிதழ்.

"இந்த முறை கதை பசுமையான காடுகளில் இருந்து பவளப்பாறைகள் நிரம்பிய கடலுக்கு நகர்ந்திருக்கிறது. ஆனாலும் முந்தைய படத்தைப் போலவே மெய்மறக்க வைக்கிறது. அந்தக் கடல் மனிதர்களின் உலகில் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீங்கள் மூழ்கிவிடுவீர்கள்.

இந்த இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன், உணர்ச்சிகரமான காட்சிகள் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அடிப்படையில் பார்த்தால் இந்தக் கதை ஒன்றும் புதுமையானதல்ல.  ஆனால், கதை சொல்லப்பட்ட விதமும் காட்சி ரீதியான அனுபவமும் இதனை ஒரு காவியத் திரைப்படமாக்கியிருக்கின்றன.

அவதார்-2 திரைப்படம்

பட மூலாதாரம்,AVATAR/TWITTER

"அவதார் உலகுக்கு அழைத்துச் செல்லும் படம்"

இந்தப் படத்திற்குள் மூழ்கியிருக்கும்போது, நீங்கள் நிஜ உலகிற்குத் திரும்பவே விரும்ப மாட்டீர்கள்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

அவதாரின் முதல் பாகம், அதனுடைய கதை - திரைக்கதை, காட்சி அனுபவம் ஆகியவற்றுக்காகப் பேசப்பட்டாலும், அதிலிருந்த அரசியல் குறியீடுகளும் சூழல்சார்ந்த கருத்துகளும் பெரிதும் கவனிக்கப்பட்டன. இந்தப் படமும் அதே பாணியில் தொடர்வதைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.

"மாயமான, கற்பனை உலகில் கதை நடந்தாலும், சமூக - அரசியல் கருத்துகளும் படத்தில் இல்லாமல் இல்லை.  இனம், நாகரீகம் குறித்த விவாதங்களை எழுப்பும் இந்தக் கதை, ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தையும் முன்வைக்கிறது. அதே நேரம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்தும் பேசுகிறது.

பெற்றோர் குழந்தைகளைக் காப்பாற்றும் அதே நேரத்தில் குழந்தைகளும் பெற்றோரைக் காப்பாற்றும் உச்சகட்ட காட்சி அட்டகாசமாக இருக்கிறது.

13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த முதல்பாகம், விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுக்கு ஒரு உயர் தரத்தை நிறுவியது. இந்தப் படம் ஒரு அடி அதனைத் தாண்டிச் சென்றிருக்கிறது.

முப்பரிமாணம் என்பதை, இன்னொரு வித்தையாகப் பயன்படுத்தாமல் பார்வையாளர்களின் அனுபவத்தை அதிகரிக்கப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்த வருடத்தின் மிகச் சிறந்த சினிமா அனுபவம் இந்தப் படம்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

அவதார்-2 திரைப்படம்

பட மூலாதாரம்,AVATAR/TWITTER

இந்தியா டுடே வார இதழும் இந்தப் படத்தை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறது. நான்கு நடசத்திரங்களை இந்தப் படத்திற்கு வழங்கியிருக்கிறது.

"அவதாரின் முதலாவது பாகம் காடுகளைப் பாதுகாப்பது பற்றியும் மனிதனின் பேராசை எப்படி நமது கிரகத்தை அழித்து வருகிறது என்பது பற்றியும் பேசியது. இரண்டாவது படம் கடலைப் பற்றியும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றியும் பேசுகிறது.

இரண்டு படங்களுமே, ஒன்றோடு ஒன்று ஆழமான உறவைக் கொண்டிருக்கின்றன.  இந்தப் படத்தில் வரும் காட்சிகளும் பாத்திரங்களும் நம் கிரகம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து உபதேசிக்காத தொனியில் பேசுகின்றன.

படம் துவங்கும் முதல் காட்சியிலிருந்தே நாம் உள்ளே மூழ்கிப் போகிறோம். அவதார் பட வரிசையில் இந்தப் படத்தைத்தான் முதலில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால்கூட,  முப்பரிமாணத் தொழில்நுட்பத்தை கேமரான் பயன்படுத்தியிருக்கும் விதமும் அவர் உருவாக்கியிருக்கும் காட்சி அற்புதங்களும் அவர் காட்டும் காடுகளில் வரும் தாவரங்களும் கடல்களில் தெரியும் மீன்களும் பவளப் பாறைகளும் அதன் வண்ணங்களும் உங்களை மயக்கி உள்ளே இழுத்துவிடும்" என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

அவதார்-2 திரைப்படம்

பட மூலாதாரம்,AVATAR/TWITTER

ஆனால், அவதாரின் இரண்டாம் பாகத்தைப் பார்த்த சில ரசிகர்கள் படம் வெகு நீளமாக இருப்பதாகவும் சில சமயங்களில் அலுப்பூட்டுவதாகவும் சொல்கிறார்கள். இந்தியா டுடே இதழின் விமர்சனமும் அதனைச் சுட்டிக்காட்டுகிறது.

"முதல் பாதியில் சற்று தடுமாற்றம் இருக்கிறது. படத்தின் இந்தப் பகுதியில் பல புதிய, பழைய பாத்திரங்களை அவர் அறிமுகப்படுத்துவதால், யார் என்ன செய்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்படுகிறது. சில காட்சிகள் மிக நீளமாக இருப்பதால், காட்சிகளின் அழகைக் காட்டுவதற்காகவே அவை வைக்கப்பட்டதைப் போல இருக்கின்றன" என்கிறது இந்தியா டுடே.

இருந்தபோதும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதையும் இந்தியா டுடே விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது.

"மேலே குறிப்பிட்ட தடைகளைத் தாண்டி, இரண்டாவது பாகம் வேகமெடுக்கிறது. பண்டோராவின் உள்ளே உங்களை இழுத்துக் கொள்கிறது.   கேமரானின் மிகப் பெரிய பலமே, நீங்கள் விரும்பக்கூடிய பாத்திரங்களை உருவாக்குவதுதான். டைட்டானிக் திரைப்படத்தில் பனிமலை கப்பலோடு மோதும் காட்சியைவிட, ஜாக்கிற்கும் ரோஸிற்கும் இடையிலான காதல்தான் ரசிகர்களை ஈர்த்தது. அவதார் படத்திலும் இதுபோன்ற காட்சிகளே ஜாக் சல்லியின் குடும்பத்தினரோடு ஒன்ற வைக்கிறது.

சினிமா வரலாற்றின் மிகப் பெரிய திரைப்படத்திற்கு, மிகச் சரியான இரண்டாவது பாகம். பார்க்கத் தவறவிடாதீர்கள்" என்கிறது இந்தியா டுடே வார இதழின் இணைய தளம்.

அவதார்-2 திரைப்படம்

பட மூலாதாரம்,AVATAR/TWITTER

இந்து தமிழ் திசையின் விமர்சனத்தைப் பொறுத்தவரை, படம் குறித்து பெரும் பாராட்டுகளை முன்வைத்திருந்தாலும் சில விமர்சனங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

"‘அவதார்’ படத்தின் முதல் பாகம் ஒரு புதிய உலகை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியிருந்தது. அதன் நீட்சியாக வந்துள்ள இந்த இரண்டாம் பாகத்தில் எந்தவித புதுமையும் நுழைக்கப்படாமல் திரைக்கதையில் ஆங்காங்கே கற்பனை வறட்சி மேலிடுகிறது. காட்சிகளாக பிரமாண்டமாக விரியும் இந்த படத்தில், கதையில் இருந்து வெளிப்படும் சுவாரஸ்யம் சொற்பமே.

கனிம சுரண்டலுக்கு எதிராக நிற்கும் வேற்று கிரகவாசிகளின் போராட்டம், அவர்களது உறுதி என முதல் பாகத்திலிருந்த கதையின் அடர்த்தி, இரண்டாம் பாகத்தில் வெறும் குடும்பக் கதையாக சுருண்டு, வறண்டிருப்பது ஏமாற்றம். வெறுமனே நாயகன் ஜேக் சல்லி தனது குடும்பத்தை எதிரிகளிலிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டும், சென்டிமென்ட் காட்சிகள் வழியே உரையாடிக் கொண்டுமிருப்பது சோர்வளிக்கிறது" என்கிறது இந்து தமிழ் திசை.

இருந்தபோதும் அட்டகாசமான காட்சி அனுபவத்தை வழங்கி,  ‘குடும்பங்கள் கொண்டாடும்’ ஹாலிவுட் திரைப்படம் என்றும் கூறியிருக்கிறது இந்து தமிழ் திசை.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அவதாரின் முதல் பாகத்திலிருந்து காட்சி அனுபவத்தைவிட, இந்தப் பாகம் சிறப்பான காட்சி அனுபவத்தைத் தந்தாலும், படத்தின் நீளமும் கதையில் போதிய ஆழமின்மையும் சோர்வளிப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன.

https://www.bbc.com/tamil/articles/ced90879qndo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
    • இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
    • அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.  
    • ரணிலுக்கு சுமன்… அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே. புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.