Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

நானும் அவளும்….

அவள்

“ ஏய் கொஞ்சம் சுண்ணாம்பு தாவன், பொயிலைக் காம்பிருக்கே எண்டு தனித்தனியக் கேட்டு முழுசா வெத்திலைப்பையை வாங்கிக் கொண்டு, “ இதைப்பார் ஒரு எட்டு போட்டு வாறன்” எண்டு சொல்லீட்டு வெளிக்கிட்டன். காலமை மூண்டு மணிக்கே எழும்பி வந்தது சாக்கு சாமான் எல்லாம் ஏத்திக் கொண்டு வர நாலு மணி தாண்டீட்டு. வந்து மூட்டை விரிக்க கோயில் மணி நாலரை எண்டு சொல்ல ஆரவாரம் கூடிச்சுது. 

வெத்திலையோட வெளிக்கிட்டு வர மூத்திரம் முட்டிக்ககொண்டு வந்தது , போறதுக்கு இடம் தேடினால் ,இடமில்லை. ஆம்பிளைகள் எண்டால் மூலை வழிய எங்கையும் எப்பவும் ஒதுங்கலாம் எங்கடை சீரழிவு எங்களோட தான் . ஒருமாதிரி கோழிக்கடை பின்மூலையில கட்டி இருந்த தட்டி மறைப்புக்க ஒதுங்கீட்டு வந்தா காலில ஓட்டினது கோழிப் பீயா, கோழிச்செட்டையா இல்லை வெட்டிக் கழிச்சு எறிஞ்ச துண்டா எண்டு தெரியாம காலைக்கழுவீட்டு வர கொஞ்சம் வெளிச்சம் வந்திட்டுது. 

எவ்வளவு நாள் கேட்டும் மாநகரசபை கக்கூஸ் கட்டித் தருதில்லை, பொம்பிளைகளின்டை பிழைப்பு விளங்கினாத்தானே. இந்தமுறை காசு கேக்க வரேக்க சொல்லோணும் எண்டு யோச்சபடி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு வெத்திலைப்பையை துறந்தன். சரசக்கா பாவம் எதைக் கேட்டாலும் இல்லை எண்டு சொல்லாது. எல்லா அவசரத்திக்கும் அது தான் உதவி. சந்தையில senior கிட்டத்தட்ட இருவத்தைஞ்சு வருசம் service . 

“பதினாறு வயசில ஓடிப்போய் கலியாணம் கட்டி ஒரு வருசத்தில அந்தாள் விட்டிட்டுப் போக பிள்ளைத்தாச்சியாக் கடகம் தூக்கினனான்” எண்டு அடிக்கடி சொல்லுவா. இப்பவும் அவவின்டை வடிவில கன பேருக்கு கண் . மஞ்சள் நிறம் கூடின வெள்ளை, பெரிய கொண்டை, வெத்திலைச் சிவப்பு வாய் , ஒரு ரூபாய் அளவு குங்குமம் , கழுத்தில ஒரு சங்கிலி எண்டு அம்சமா இருப்பா.  

முதல்முதலா சந்தைக்கு வந்து கடகத்தோட இருக்க பாத்தவன் , முறைச்சவன் , சிரிச்சவன் எண்டு எல்லாரையும் ஓடும் செம்பொன்னும் போல் ஒக்கவே நோக்கி ,ஆம்பிளைகள் மட்டும் தான் எண்ட சந்தையில அடிப்படையை மாத்தி தனிச்சு நிண்டு ,நிமிந்து , காசுழைச்சு திருப்பியும் ஒண்டைக் கட்டி இப்ப இன்னும் நாலு பிள்ளை . 

“ சந்தையில எல்லாப் பொம்பிளையையும் சொர்ணாக்கா எண்டு தான் சொல்லுவினம் , அதைக் கணக்கெடுக்காத , கொஞ்சம் சிரிச்சாலும் அவனவன் தலையில ஏறி இருந்திடுவான் இல்லாட்டியும் வீட்டை போனா சந்தையில ஒரே சிரிப்பும் கனைப்புமாம் எண்டு கதைக்கிறதில கரவு இருக்கும் “ எண்டு சரசக்கா வந்த முதல் நாளே சொல்லீட்டா.  

பஸ்ஸில கடகம் ஏத்தேக்க கண்டக்டரோட சண்டை தொடங்கி ,விக்க சந்தைக்குள்ள கொண்டு போற சாக்குக்கு கணக்கு போடிறவனோட முழுச்சாக்கை அரைச்சாக்கெண்டு சண்டை பிடிச்சு உள்ள கொண்டு போய் , எல்லாரும் ஒரே விலையெண்டு கதைச்சு சந்தை தொடங்கும். கொஞ்ச நேரத்தில விக்கத்தந்திரமில்லாதவன் மரக்கறி விலையைக்குறைக்க அவனோட சண்டையைத் தொடர்ந்து, வித்து முடிஞ்சு வீட்டை வெளிக்கிட்டு வந்து கொமிசன் வாங்கறவனோட சண்டை பிடிச்சு காசைக்குறைச்சு ,வீட்டை வர பள்ளிக்கூடத்தால வந்துதுகள் சண்டை பிடிக்கத் தொடங்க அதோட சேந்து சண்டையைப் பிடிச்சு , சாராய மணத்தோட வந்தவன் சாப்பாட்டைக் குறை சொல்ல அவனோடேம் சண்டையைப் பிடிச்சிட்டுப் படுக்க நித்திரை மாத்திரம் சண்டை பிடிக்காம வரும்.

உடம்பு வருந்தி வேலைக்குப் போறவை எல்லாரும் வெத்திலைப்பையோடயே தான் திரிவினம் . பலருக்கு ஒரு நேரச் சாப்பாட்டை மறக்கப்பண்ண இந்த வெத்திலை உதவி செய்யும். 

வெத்திலையால வயித்தை நிறப்பீட்டு வந்து இருக்க, வழக்கமா வாற சில்லறைக்கடைக்காரர் எல்லாம் வந்து சாமானை ஏத்தத் தொடங்கிச்சினம். வந்தவன்டை பழைய கணக்கெல்லாம் பாத்து காசைக் கேக்க, “நாளைக்கு எண்டவனுக்கு” சாமானை மாட்டன் எண்டு சொல்லாமல் எப்பிடியும் நாளைக்குத் தா எண்டு சொல்லீட்டு , வீட்டை ஈடு வைச்சவனுக்கு இண்டைக்கெல்லோ காசுத் தவணை சொன்னான், அவனுக்கு என்ன சொல்லிற எண்டு யோசிக்கத் தொடங்கினன். அப்ப முன்னுக்கு வந்து எங்க சாமான் வாங்குவம் எண்டு யோச்சபடி நிண்ட சின்னப் பெடியினை இந்தா என்ன வேணும் , கொண்டா பையை எண்டு அங்கால போக விடாமப் பையை வாங்கினன். 

நான்……

சந்தையில சாமான் விக்கிற பொம்பிளைகள் எல்லாரும் வயசு வித்தியாசம் இல்லாமல் ஆச்சி மார் தான் எங்களுக்கு . “ சாமான் வாங்கப் போனா ஆச்சிமாரிட்டை கவனமா இருக்கோணும் , அங்க நிறைய சொர்ணாக்காக்கள் இருப்பினம் பாத்தோன்னயே நாங்கள் சந்தைக்கு புதுசு எண்டு எழுதி ஒட்டி இருக்கிறது அவைக்குத் தான் தெரியும் . தப்பித் தவறிக் கிட்டப்போனா சரி , என்ன ஏது எண்டு கேக்காமல், உந்தப் பையைத்தா எண்டு பறிச்சு வாங்கீடுவினம். பையைக் குடுத்தா பொல்லைக் குடுத்து அடி வாங்கின மாதிரித்தான் “ எண்டு ஒரு அனுபவஸ்தன் சொன்னது எனக்கும் நடந்திச்சிது. 

என்னென்ன எப்பிடி வாங்கிற எண்டு அம்மா சொன்ன theory க்கு practical செய்வம் எண்டு கையை வைக்கச் ,”சரி, நீ உடைச்சிட்டு வைக்கிறதை நானே கொண்டு போய்த் தின்னிறது , இங்க என்ன அழுகலே நான் விக்கிறனான்” எண்டு கை வைச்சுப் பாக்க முதலே புறுபுறுக்கத் தொடங்கீனா ஆச்சி. வெளீல இருந்து மூட்டை ஒண்டைக் கொண்டந்து இறக்கினவன், “ எணை காசு” எண்டு சொன்னதுக்கு “நான் என்ன ஓடியே போப்போறன் எண்ட ஆச்சி சொல்ல”, “உன்ன எவன் கூட்டிக்கொண்டு ஓடப் போறான் , இருக்கேலாதெண்டு தானே கட்டினவன் விட்டிட்டுப் போனவன்” எண்டு திருப்பிச் சொன்னவனுக்கு ஆச்சி ஓளவையார்த் தமிழில பதில் சொல்ல நான் அடக்கமா நிண்டன். 

கொண்டந்த பிளாஸ்டிக் பைக்குள்ள சாமாங்களை அடைஞ்சிட்டு நிமிந்து பாக்க ஆச்சி கணக்குச் சொல்லி காசை கேட்டா. நான் கணக்குப் பாக்க முதலே காசை வாங்கீட்டா ஆச்சி. சரியெண்டு பாரத்தோட பையைத் தூக்க பையின்னடை கைபிடி அறுந்திச்சுது. சத்தத்தைக் கேட்டு ஆச்சி பழைய உரபாக்கும் சணல் துண்டும் சும்மா தந்திட்டு மற்ற ஆக்களைக் கவனிக்கத் தொடங்கினா. கணக்குக்கு நல்ல மாக்ஸ் எடுத்த எனக்கு நூற்றைம்பது கிராம் பச்சை மிளகாயில இருந்து ரெண்டு கிலோ கிழங்கு வரை எல்லாச் சாமாங்களும் வாங்க எழுதாமல் ஆச்சி சொன்ன கணக்கு வீட்டை வந்து ரெண்டாந்தரம் கூட்டிப் பாக்கத் தான் சரியா வந்திச்சுது.

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்.

  • Like 2


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • குரங்கும்...சுமந்திரனும் ஒன்றா கோபாலு ?
    • முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂
    • தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!   நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக  பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.