Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சாதனைகளைப் படைத்த பாபர் அஸாம்

By SETHU

27 DEC, 2022 | 11:50 AM
image

நியூ ஸிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் சதம் குவித்ததுடன் பல சாதனைகளையும் முறியடித்தார்.

கராச்சியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இப்போட்டியில், மைக்கல் பிராஸ்வெல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தனது 9 ஆவது சதத்தை பாபர் அஸாம் பூர்த்தி செய்தார். 280 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டறிகள் உட்பட 161 ஓட்டங்களை அவர் குவித்தார். 

இதன்மூலம் ஒரு வருடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரானார் பாபர் அஸாம். 2006 ஆம் அண்டில் 2,435 ஓட்டங்களைக் குவித்து, மொஹம்மத் யூசுப் சாதனை படைத்திருந்தார். 16 வருடங்கள் நிலைத்திருந்த இச்சாதனையை பாபர் அஸாம் நேற்று முறியடித்தார். 

Barbar-Azam-Pakistan-vs-New-Zelaand---AF

2022 ஆம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,170 ஓட்டங்களைக் குவித்துள்ளார் பாபர் அஸாம். இவ்வருடம் இதுவரை அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த சர்வதேச கிரிக்கெட் வீரராக பாபர் அஸாம் விளங்குகிறார்.

2005 ஆம் அண்டில் 24 அரைச் சதங்களைக் குவித்து, ஒரு வருடத்தில்  அதிக அரைச்சதங்களைக் குவித்த அணித்தவைராக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் படைத்த சாதனையையும் பாபர் அஸாம் கடந்து சென்றார்.

https://www.virakesari.lk/article/144214

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் டெஸ்டில் சம அளவில் மோதும் பாகிஸ்தான் -நியூஸிலாந்து

28 DEC, 2022 | 07:04 PM
image

 (என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கராச்சியில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.

பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 3ஆம்   நாளான இன்று புதன்கிழமை (28) ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்களை இழந்து 440 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டொம் லெதம், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் டெவன் கொன்வே பெற்ற அரைச் சதமும் நியூஸிலாந்தின் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தியது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களிலிருந்து நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

டொம் லெதமும் டெவன் கொன்வேயும் ஆரம்ப விக்கெட்டில் 183 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கொன்வே 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து தனது 13ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்த டொம் லெதம் 131 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஹென்றி நிக்கலஸ் 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தனது 89ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கேன் வில்லியம்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 25ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

கேன் வில்லியம்சன் 4ஆவது விக்கெட்டில் டெரில் மிச்செலுடன் 65 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் டொம் ப்ளண்டெலுடன் 90 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

மிச்செல் 42 ஓட்டங்களையும் ப்ளண்டெல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அங்மத் 143 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/144389

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வில்லியம்சனின் ஆட்டமிழக்காத இரட்டைச் சதம் நியூஸிலாந்தைப் பலப்படுத்தியுள்ளது

By VISHNU

29 DEC, 2022 | 07:17 PM
image

(என்.வீ.ஏ.)

கராச்சி விளையாட்டரங்கில் முதல் இன்னிங்ஸ்களில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட  நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் குவித்த இரட்டைச் சதம் நியூஸிலாந்தை வலுவான நிலையில் இட்டுள்ளது.

Imam-ul-Haq survived through to stumps on Day 4, Pakistan vs New Zealand, 1st Test, Karachi, 4th Day, December 29, 2022

இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு சாதகமான முடிவு கிடைக்கக்கூடும் என்ற நிலை 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் காணப்படுகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் போட்டியின் 4ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (29) ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இமாம் உல் ஹக் 45 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் நௌமான் அலி 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல்  உள்ளனர்.

இதன் பிரகாரம் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க நியூஸிலாந்தை விட 97 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருக்கிறது.

Michael Bracewell celebrates after breaking through, Pakistan vs New Zealand, 1st Test, Karachi, 4th Day, December 29, 2022

இதன் காரணமாக போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என கருதப்படுகிறது. கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணித்தியாலத்தில் விக்கெட் விழாமல் தடுப்பதைக் குறியாகக் கொண்டு பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட முனைவதால் அவ்வணி இயல்பாகவே நெருக்கடியை எதிர்கொள்ளும்.

இதேவேளை, வியாழக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 612 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது டிக்ளயார்ட் செய்தது.

அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் அணியின் முதலாவது இன்னிங்ஸை டிக்ளயார் செய்வதாக அறிவித்தார்.

தனது இன்னிங்ஸை 105 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த வில்லியம்சன், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 5ஆவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். அத்துடன் 89ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் பெற்ற 25ஆவது சதம் இதுவாகும்.

395 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன், 7ஆவது விக்கெட்டில் இஷ் சோதியுடன் 159 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தார். இஷ் சோதி 65 ஓட்டங்களைப் பெற்றதுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகப் பதிவானது.

இவர்களைவிட நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம் 113 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 92 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் 47 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பாபர் அஸாம் 161 ஓட்டங்களையும் அகா சல்மான் 103 ஓட்டங்களையும் சர்ப்ராஸ் அஹ்மத் 86 ஓட்டங்களையும் பெற்றனர்.

https://www.virakesari.lk/article/144482

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுவருடத்தில் முதலாவது டெஸ்ட் சதம் குவித்தார் டெவன் கொன்வே ; நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்கள்

02 JAN, 2023 | 07:25 PM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கராச்சியில் இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதத்தைப் பூர்த்தி செய்த டெவன் கொன்வே தனது அணியை ஒரளவு பலமான நிலையில் இட்டுள்ளார்.

இதன் மூலம் புத்தாண்டில் முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற வீரர் என்ற பெருமையை டெவன் கொன்வே பெற்றுக்கொண்டார்.

0201_aga_salman_pak_vs_nz.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலனமான நிலையில் இருக்கிறது.

நியூஸிலாந்தின் முதல் 2 விக்கெட்களுக்கான இணைப்பாட்டங்கள் சிறப்பாக அமைந்தபோதிலும் அதன் பின்னர் 5 விக்கெட்கள் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கராச்சியில் கடந்த வருட இறுதியில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் குவித்த டொம் லெதம் இப் போட்டியிலும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.

டொம் லெதம் ஆட்டமிழந்த பின்னர் டெவன் கொன்வேயுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 2ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், அதன் பின்னர் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்தன.

0201_tom_latham_nz_vs_pak_2nd_test...jpg

டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 9 பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெவன் கொன்வே 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 122 ஓட்டங்களைப் பெற்றார்.

முதலாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் குவித்த கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அவர்களைத் தொடரந்து ஹென்றி நிக்கல்ஸ் (26), டெரில் மிச்செல் (3), மைக்கல் ப்றேஸ்வெல் (0) ஆகிய மூவரும் ஆட்டமிழந்தனர்.

0201_devon_convay_nz_vs_pak_2nd_test.jpg

டொம் பளண்டல் 30 ஓட்டங்களுடனும் இஷ் சோதி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அகா சல்மான் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஸீம் ஷா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/144790

  • nunavilan changed the title to நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்து சார்பாக ஹென்றி, பட்டேல், பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக் துடுப்பாட்டத்தில் அசத்தல்

03 JAN, 2023 | 08:28 PM
image

(என். வீ. ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்தி நியூஸிலாந்தை பலப்படுத்திய மெட் ஹென்றி, அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக் மீண்டும் பிரகாசித்து அரைச் சதம் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 449 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் போட்டியின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (03) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

0301_mat_henry_nz_vs_pak_batting.jpg

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 449 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய ஆட்டத்தின் முதலாவது பகுதியில் சீரான இடைவெளியில் 3 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன் பின்னர் 10ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கடைநிலை ஆட்டக்காரர்களான மெட் ஹென்றியும் அஜாஸ் பட்டேலும் பெறுமதிமிக்க 104 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தைப் பலப்படுத்தினர்.

0301_mat_henry_nz_vs_pak_bowling.jpg

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெட் ஹென்றி 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாக இது அமைந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் 7 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் பெற்ற 66 ஓட்டங்களே இதற்கு முன்னர் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

அஜாஸ் பட்டேல் பெற்ற 35 ஓட்டங்கள் அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக அமைந்தது.

முதலாம் நாள் ஆட்டத்தில் டெவன் கொன்வே 122 ஓட்டங்களையும் டொம் லெதம் 71 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் 51 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 149 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அகா சல்மான் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முதலாவது டெஸ்டில் போன்றே மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவரும் இமாம் உல் ஹக் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். பாபர் அஸாம் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 24 ஒட்டங்களுடன் வெளியேறினார்.

பாகிஸ்தானின் 3ஆவது வீக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தது. எனினும் இமாம் உல் ஹக், சவூத் ஷக்கீல் (13 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைத் தடுத்தனர்.

பந்துவிச்சில் அஜாஸ் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மெட் ஹென்றி 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/144887

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எல்லாம் இந்திய உபகண்டத்தில் பாகிஸ்தான் பிட்சுகள் லைவ்லியாக இருந்தன. இப்ப இந்தியாவைப் பின்பற்றி ப்ளாட் பிட்சுகளை அமைக்கின்றார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்துடனான டெஸ்டில் 319 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; இக்கட்டான நிலையில் பாகிஸ்தான்

06 JAN, 2023 | 11:09 AM
image

(என். வீ. ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் 319 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான், போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓட்டமும் பெறாமல் 2 விக்கெட்களை இழந்து  இக்கட்டான நிலையில் இருக்கிறது.

இரண்டாவது பந்தில் ஆரம்ப வீரர் அப்துல்லா ஷபிக்கின் விக்கெட்டை டிம் சௌதீ நேரடியாகப் பதம் பார்த்ததை அடுத்து இராக்காப்பாளனாக கடைநிலை ஆட்டக்காரர் மிர் ஹம்ஸாவை பாகிஸ்தான் ஆடுகளம் அனுப்பிவைத்தது. ஆனால், அவர் 3ஆவது ஓவரில் இஷ் சோதியின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அத்துடன் 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இமாம் உல் ஹக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

போட்டியின் கடைசி நாளான நாளைய தினம் பாகிஸ்தான் அணி நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடத் தவறினால் நியூஸிலாந்தின் வெற்றியை அவ்வணியினால் தடுக்க முடியாமல் போகும்.

போட்டியின் 4ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (05) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 407 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான் 408 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

தனது 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி கன்னிச் சதம் குவித்த சவூத் ஷக்கீல் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

0501_nighwatchman_mir_hamza_bowled_by_is

0501_nz_players_celebrate_the_wicket.jpg

நியூஸிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல், இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 48 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

டொம் லெதம், டொம் ப்ளண்டெல், மைக்கல் ப்றேஸ்வெல் ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்றனர்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: 449 (டெவன் கொன்வே 122, டொம் லெதம் 71, மெட் ஹென்றி 68 ஆ.இ., டொம் ப்ளண்டெல் 51, அப்ரார் அஹ்மத் 149 - 4 விக்., நசீம் ஷா 71 - 3 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: 408 (சவூத் ஷக்கீல் 125 ஆ.இ., இமாம் உல் ஹக் 83, சர்பராஸ் அஹ்மத் 78, அஜாஸ் பட்டேல் 88 - 3 விக்., இஷ் சோதி 95 - 3 விக்.)

நியூஸிலாந்து 277 - 5 விக். டிக்ளயார்ட் (மைக்கல் ப்றேஸ்வெல் 74 ஆ.இ., டொம் பளண்டெல் 74, டொம் லெதம் 62)

பாகிஸ்தான் 2ஆவது இன்: ஒரு ஓட்டமும் பெறாமல் 2 விக்கெட்களை இழந்துள்ளது.

https://www.virakesari.lk/article/145110

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணிக்கு இலகு வெற்றி

By DIGITAL DESK 5

10 JAN, 2023 | 01:34 PM
image

(எம்.எம்.எஸ்)

நசீம் ஷாவின் துல்லியமான பந்துவீச்சு, மொஹமடர் ரிஸ்வான், பாபர் அசாம், பக்கார் ஸமான் மூவரின் அரைச்சதத்தின் உதவியுடன், நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி  6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டு அணிகளும் பங்கேற்று வருகின்றன். இந்நிலையில், நேற்றைய தினம் (9) பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில்  பகலிரவு போட்டியாக  நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து அணி  9 விக்கெட்டுக்களை இழந்த 255 ஓட்டங்களை குவித்தது.

352282.webp

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பாக ஒருவர்கூட அரைச்சதம் அடிக்கவில்லை. மைக்கல் பிரேஸ்வெல் (43), டொம் லெதம் (42) 40 ஓட்டங்களைக் கடந்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷா 5 விக்கெட்டுககைளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர உஸாமா மிர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

352272.webp

சுமாரான ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்  48.1 ஓவர்களில்  4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 258 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 66 ஓட்டங்களையும், பக்கார் ஸமான் 56 ஓட்டங்களையும் விளாசினர்.

352293.webp

பந்துவீச்சில் மைக்கல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுக்களையும், டிம் செளத்தி,கிளென் பிலிப்ஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

352283.webp

352285.webp

இந்த  வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3  போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டவாது போட்டி  நாளை நடைபெறும்.

https://www.virakesari.lk/article/145413

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டாவ‌து தோல்விக்கு பாக்கிஸ்தான் தோட‌க்க‌ வீர‌ர்க‌ளும் மிடில் வீர‌ர்க‌ளும் தான் கார‌ண‌ம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.